மனித எரிமலை
ஆண்டு – 1975. தொலைக்காட்சியில், முகம்மது அலியும் சக் வெப்னரும் மோதும் மல்யுத்தப் போட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முகம்மது அலி, அந்த சமயத்தில், நடப்பு ஹெவிவெய்ட் சேம்பியன். சக் வெப்னரோ, வளர்ந்து வரும் ஒரு வீரர். அதுவரையில் வெப்னர் பெற்றிருந்த வெற்றிகள், அவரைப் பிரபலப்படுத்தியிருந்தன.
அந்தப் போட்டி, மல்யுத்த வரலாற்றிலேயே மிகப்பிரபலமான போட்டிகளில் ஒன்று. இரண்டு காட்டெருமைகள் போல் இருவரும் பொருதிக் கொண்டதை உலகமே ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது.
இளைஞன் ஸில்வெஸ்டர் கார்டென்ஸியோ ஸ்டாலோனும் அவர்களில் ஒருவன்.
பந்தயத்தின் ஒன்பதாவது சுற்றில், வெப்னர் விட்ட குத்து, முகம்மது அலியை நாக் அவுட் செய்கிறது. எகிறி விழுகிறார் அலி.
அதன் பின் சமாளித்து எழுந்த அலி, வெப்னரின் முகத்தில் சரமாரியாக விட்ட குத்துகளில், வெப்னரின் மூக்கு உடைகிறது. முகம் முழுக்க ரத்தத்தோடு நின்ற வெப்னர், ஆவேசமாகப் போராடியும், ஆட்டத்தின் பதினைந்தாவது சுற்றில், முகம்மது அலி வெல்கிறார்.
இப்பந்தயத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த இளைஞன் கார்டென்ஸியோ, ஒரு முடிவோடு எழுந்தான். ஒரு பென்ஸிலை எடுத்துக்கொண்டு மும்முரமாக எழுதத் துவங்குகிறான். மூன்று நாட்களுக்குப் பின் அவன் எழுதிமுடித்த அந்தத் திரைக்கதை, அவனைப் புகழின் உச்சத்துக்கு எடுத்துச் சென்றது. அதன்பின் அவன் திரும்பிப் பார்க்கவே இல்லை.
அந்த இளைஞன் தான், உலகின் ஆக்ஷன் ஹீரோக்களில் முதலிடம் பெற்றவரும், இன்றும் (என்னைப்போல்) பல லட்சக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவருமான ஸில்வெஸ்டர் ஸ்டாலோன்.
இரு நாட்களுக்கு முன்னர் நான் பார்த்த ஸ்டாலோனின் புதிய படமான ‘எக்ஸ்பெண்டபிள்ஸ்’ ட்ரைலரே இந்தப் பதிவின் காரணம். இதுவரை இல்லாத ஒரு மெகா ஸ்டார்காஸ்டோடு, நாம் தொண்ணூறுகளில் பார்த்து ரசித்த அதிரடி ஆக்ஷன் படங்களின் வழியில், இன்னும் இரண்டு மாதங்களில் வெளியாகிறது இந்தப் படம். எழுதி இயக்குபவர் ஸ்டாலோனே தான். இப்படத்தில் ஸ்டாலோனோடு அர்நால்ட் ஷ்வார்ட்ஸெனிக்கர், ப்ரூஸ் வில்லிஸ், ஜேஸன் ஸ்டதாம், ஜெட் லி, டால்ஃப் லண்ட்க்ரென், மிக்கி ரூர்க், ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
இளைஞன் ஸ்டாலோன் எழுதி நடித்த ராக்கி, ஸ்டாலோனைப் பகழ் மழையில் குளிக்க வைத்தது. அதன் பின், ராக்கியின் ஸீக்வெல்களில் அந்தப் புகழ் தொடர்ந்தது. ராக்கி படத்துக்காக ஆஸ்கர் வரலாற்றில், மூன்றாவது முறையாக, ஒரே வருடத்தில், எழுத்துக்கும் நடிப்புக்கும் நாமினேட் செய்யப்பட்ட நபர் என்ற பெருமை ஸ்டாலோனுக்குக் கிடைத்தது (மற்ற இருவர்: சாப்ளின் மற்றும் ஆர்ஸன் வெல்ஸ்).
ராக்கியின் வெற்றிக்குப் பின், ஸ்டாலோனின் கவனம், அதுவரை புத்தகமாக எழுதப்பட்டு, பெருவெற்றியடைந்த ராம்போவின் மேல் திரும்பியது. வெளியானது ‘ஃபர்ஸ்ட் ப்ளட்’ .
ஃபர்ஸ்ட் ப்ளட் பார்த்தவர்கள் கவனித்திருக்கலாம். ஆரம்பம் முதல் கடைசிவரை, படு விறுவிறுப்பாகச் செல்லும் படம் அது. அப்படத்தில் ராம்போவின் கோபம் மிக நியாயமானது. யாராக இருப்பினும், அப்படியொரு கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டால், இப்படித்த்தான் நடந்து கொள்வார்கள், அல்லவா? இந்த உணர்ச்சியே, படத்தின் பெரு வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.
அதன் பின், ராம்போ படத்தின் மற்ற இரு பாகங்களும் வெளிவந்தன.
நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தச் சமயத்தில், தமிழ்நாடெங்கும், உடல் முழுவதும் துப்பாக்கிக் குண்டுகளைச் சுற்றிக்கொண்டு, கையில் ஒரு பெரிய இயந்திரத் துப்பாக்கியை வைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலோனின் மெகா கட் அவுட்டுகள் வைக்கப்பட்டன. நம்மூர் ஹீரோக்களை விட அவர் புகழடைந்திருந்த காலம் அது !
பெர்சனலாகவும், எனது வாழ்வில் நான் முதன்முதலில் ஒரு திரையரங்கில் பார்த்த திரைப்படம், ராம்போ இரண்டாம் பாகமே.
அதன் பின்னர், பல படங்கள். பல வேடங்கள். க்ளிஃப்ஹேங்கரையும் தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்க இயலாது. அதே போல், ஸ்பெஷலிஸ்ட் படத்தையும்.
என்னைப் பொறுத்தவரையில், ஸ்டாலோன் நடித்து எனக்கு மிகவும் பிடித்த படம், கெட் கார்ட்டர். உலக அளவில் ஒரு ஃப்ளாப்பாக அமைந்த படம். ஆனால், இதில் ஸ்டாலோனின் கெத்து, பட்டையைக் கிளப்பும். குறிப்பாக, அதில் வரும் லிஃப்ட் காட்சி. சோர்ந்து கிடக்கும் மனதில் புத்துணர்ச்சியை ஊட்டக்கூடிய ஒரு காட்சி அது.
இதோ வருகிறது எக்ஸ்பெண்டபிள்ஸ். ப்ரேஸ் யுவர்செல்ஃப் !!!
பி.கு – லயனில் வந்த இரும்புக்கை நார்மனின் கதையின் பெயர் இது. இப்பெயர், ஸ்டாலோனுக்கு மிகவும் பொருந்தும் என்பதை ஸ்டாலோன் ரசிகர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
me the first
க்ளிஃப்ஹேங்கர் தான் எனது முதல் ஸ்டாலோன் படம்.அதற்க்கு பிறகு அனைத்தையும் பார்த்து விட்டாகிவிட்டது.
வாங்க லக்கி . . க்ளிஃப்ஹேங்கர் யாரால மறக்க முடியும்? அந்த டைம்ல ஸ்டாலோன் ரொம்ப மேன்லியாவும் அழகாவும் இருப்பாரு . . ஹும்ம்ம்… அது ஒரு காலம்.. நானு ஸ்கூல் படிச்ச டைம் . .:-)
romba sari….
கருந்தேள்,
காதலரின் சென்ற பதிவில் பின்னூடங்களை படிக்கும்போதே நான் நீங்கள் இந்த மாதிரி ஒரு பதிவை வெளியிடுவீர்கள் என்று நண்பரிடம் கூறி இருந்தேன். வழக்கம் போல என்னுடைய எண்ணம் சரியாகவே அமைந்துள்ளது.
ரேம்போ கதை வேறு திகில் காமிக்ஸில் வந்துள்ளது.
//பி.கு – லயனில் வந்த இரும்புக்கை நார்மனின் கதையின் பெயர் இது. இப்பெயர், ஸ்டாலோனுக்கு மிகவும் பொருந்தும் என்பதை ஸ்டாலோன் ரசிகர்கள் ஒப்புக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்//
கண்டிப்பாக. இதனை நான் வழிமொழிகிறேன்.
@ அண்ணாமலையான் – அது !!
@ விஸ்வா – ஹா ஹா . . நமக்குக் கொஞ்சம் உணர்ச்சிகள் அதிகமாச்சா . . அதான், காதலரின் பதிவில் பின்னூட்டம் இட்ட கையோடு, இதிலும் ஒரு பதிவு போட்டுவிடலாம் அன்று நினைத்தேன் . .வழக்கப்படி, நீங்கள் சரியாகப் பிடித்துவிட்டீர்கள் . . 🙂
ராம்போ திகிலில்… ஆமாம் . . அதேபோல், ராம்போ கொஞ்ச காலத்துக்கு முன், லயனிலும் ஒரு மிகச்சிறு கதையாக வெளிவந்ததாக நினைவ்ய்.. சரியா?
Soooper Rajesh…. Apdiye Rocky pathina oru post eludhuringa…
I still wonder why u didn’t write a post abt the Rocky series…
Apram, last year vandha “John Rambo” padathaye 8 time namma Senthil Kumaran theater la poi kanda padi paathomama.. Expendables ah mattum vittu vaipoma enna…
Pattaya kelapungal….
//ராம்போ திகிலில்… ஆமாம் . . அதேபோல், ராம்போ கொஞ்ச காலத்துக்கு முன், லயனிலும் ஒரு மிகச்சிறு கதையாக வெளிவந்ததாக நினைவ்ய்.. சரியா?//
Yessu.
Lion Comics No 96 வேங்கை வேட்டை Feb-94
BTW, 1st still semaya irukku…
RAMBO தான் நான் பார்த்த முதல் படம்.
நண்பரே,
எக்ஸ்பெண்டபிள்ஸ் கவுண்ட் டவுன் ஆரம்பம். பழைய ஹீரோக்களையெல்லாம் போய் பார்த்து அவர்கள் அடிக்கும் ஆக்ஷன்களை, விசில் அடிக்காமல் பார்த்து மகிழக் காத்திருக்கிறேன். காமிக்ஸ்கள் குறித்து விஸ்வாவும், நீங்களும் கூறுவதெல்லாம் எனக்குப் புதிது. நல்லதொரு பகிர்வு நண்பரே.
கருத்துகூற பெரிசா ஒன்றுமில்லை ஆனா ஸில்வெஸ்டர் ஸ்டாலோனை பற்றி நல்லாத்தான் குறிப்பிட்டுள்ளீர்
Stallone is one of my favorite action heroes too…..
I liked Rambo 1 and Rocky 3 the best……
நண்பா,
கண்டிப்பா பாக்குறேன்.
ஸ்டாலோன் பாடிலாஙுவேஜ்,ஆக்ஷன் சான்சே இல்லை,நான் ராக்கி படத்தின் அத்தனை சீக்வெல்லும் பார்த்திருக்கிறேண்,இவர் ராம்போ 4இல் ஒரு பரிமியனை கத்தியை வைத்து கிழித்து வகுந்தெடுப்பார்,நம்பும் படி இருக்கும்,அது தான் இவரின் ஸ்பெஷல்,செம நடிகர்.
==============
triumph of the spirit என்னும் படம் நேரம் இருந்தால் அவசியம் பார்க்கவும்,மிஸ் பண்ண கூடாத படம்.வில்லியம் டஃபோ எப்படியெல்லாம் படம் செய்திருக்கிறார்?,அவரை ஸ்பைடர் மேனில் கேலிகூத்தாக்கி வைத்துள்ளனர்.இந்த படத்தில் பாக்ஸிங் காட்சிகள் மிக அருமை.ஷிண்ட்லெர்லிச்டுக்கெல்லாம் முன்னோடி,ஆஷ்விட்ஸிலேயே படமாக்கப்பட்டது.:)
ஃபர்ஸ்டு ப்ளட் 1985 மதுரை மாப்பிள்ளை விநாயகரில் பார்த்தேன்,இன்னும் நினைவிருக்கு.ஃபார்மாலிட்டீஸ் டன்.
ராபின் ஹூட், பிரின்ஸ் ஆப் பெர்சியா வரிசைடில், 2010 இல் நான் மிகவும் எதிர்பார்க்கும் படங்களில் இதுவும் ஒன்று. ‘காஸ்டிங்’ ஒன்றே போதும் படம் எப்படி இருக்கும் என்று சொல்ல… ஆகஸ்ட் மாதத்திற்கு வெய்டிங்.
Karundhel Anna,
I guess in early days of his career, he acted in some soft porno sort of movies..
Even i did see one of that movies, but couldn’t say affirmatively that who i saw was our favorite Sly..
You have any info about that..
அருமையா இருக்கு.சில்வஸ்டோர் ஸ்டோலன் சிங்கம் மாதிரியான ஆள். நானு ராம்போ படம் பாத்துட்டு பக்கத்து சீட் காரரையெல்லாம் உதைத்து, குத்தி அலும்பு பண்ணியிருக்கேன் சிறுபிள்ளையில்..
@ வேல் – ராம்போ நீங்க செந்தில் குமரன்ல பார்த்தது எனக்கு நல்லாவே தெரியுமே . . 🙂 சீக்கிரமே ராக்கி பத்தி எழுதிருவோம் . . டீட்டெயிலா . .
@ விஸ்வா – இதுக்கு தான் உங்க உதவி வேணுங்குறது . . ஆயிரம் காமிக்ஸ் கண்ட அபூர்வ சிகாமணியே . . உங்களுக்கு எனது வணக்கங்கள் . .:-)
@ ஜீவன் பென்னி – சேம் பின்ச் !! 🙂
@ காதலரே – கண்டிப்பாக !! எக்ஸ்பெண்டபிள்ஸ் வரட்டும் .. பின்னி விடுவோம் . . !! உங்களுக்குப் பதில் நான் விசில் அடித்துவிடுகிறேன் . . 🙂
@ உதயன் – ஆமாங்ண்ணா . . ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நாளு கழிச்சி வந்துருக்கீரு . . வாங்க வாங்க . .
@ இல்ல்யூமினாட்டி – அங்க நிக்குறீரு போங்கோ !!
@ கார்த்திகேயன் – அதே தான் ! ஸ்டாலோன் அன்ன செய்தாலும் நம்பலாம் . . அதுதான் அவரது கெத்து !!
—–
ட்ரையம்ஃப் படத்த பத்தி படிச்சி பார்த்தேன் . . சூப்பரா எழுதிருக்காங்க . . கண்டிப்பா பார்த்துர்ரேன் நண்பா . . ஃபர்ஸ்ட் ப்ளட் பத்தி மலரும் நினைவு அருமை . .:-)
@ பேபி ஆனந்தன் – அதே தான் என்னோட வரிசையும்.. என்ன, இங்க எக்ஸ்பெண்டபிள்ஸ் தான் முதலிடம். . அப்புறம் பிரின்ஸ். . கடைசில ராபின்ஹூட் . . 🙂
@ பிரசன்னா – முதல் சாஃப்ட் கோர் படம், ‘த பார்ட்டி அட் கிட்டி அண்ட் ஸ்டட்’ஸ் (the party at kitty and stud’s) . . ஆண்டு 1970. நடுத்தெருவில் நிக்குறபோது, இதுல நடிக்குறது தப்பாவே தெரியலன்னு அண்ணாத்த ஸ்டாலோன் சொல்லிக்கீறாரு . .அப்பால ஒரு எரோடிக் நாடகத்துல (ஸ்கோர்) நடிச்சாரு . . இதான் இன்ஃபோ . . (ஸ்பெஷலிஸ்ட் படத்தோட கில்மா சீன் ஒண்ணு போதும் . . !! ஹீ ஹீ)
@ மயில் – அப்புடிப் போடுங்க !! உங்களுக்குள்ளேயும் ஒரு ராம்போ இருக்குறான்னு தெரியுது . . அவன தட்டி எளுப்பிராதீங்க !! 🙂
//ஆண்டு – 1975. தொலைக்காட்சியில், முகம்மது அலியும் சக் வெப்னரும் மோதும் மல்யுத்தப் போட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.//
MOHAMMED ALI IS A BOXER AND NOT A WRESTLER!!!!
அடப்பாவி யுவராஜ் . . அத அப்புடி எடுத்துக்க வேண்டியதுதானே . . 🙂 நக்கீரர் மாதிரி ஒத்தக்கால்ல நிக்குறீரு . . இதுல நாலு ஆச்சரியக்குறி . . . ஃபுல் கேப்ஸ்ல வேற அடிச்சிருக்கீரு . . செம காண்டுல அடிச்சீரோ . . 🙂
அய்யா கருந்தேள் கண்ணாயிரம் அவர்களே,
உங்களையெல்லாம் என் மானஷீக குருவா நெனச்சு யாரு கிட்டயும் சொல்லாம கொள்ளாம ஒரு வலைப்பதிவ ஆரம்பிச்சிருக்கேன்..என் அழைப்பை ஏற்று மறுக்காம நீங்க வந்து நான் பிரபல பதிவராக ஐடியா கொடுக்கணும்
என் முகவரி http://cute-paruppu.blogspot.com/
அழைப்பிதழை புறக்கணிப்போர் மீது சட்டப்படி ஒன்னும் பண்ண முடியாது…அதனால வந்துரங்களேன்
என்றும் என்றென்றும் அன்புடன்
சிஷ்யன் பருப்பு
கத்தார்
good post…this reminds me, first blood was the first English movie i saw in theater. john rambo is considered as one of the iconic characters in the films, one day write about Dirty Harry. people in india are not that familiar with harry.