Talaash (2012) – Hindi

by Karundhel Rajesh December 3, 2012   Hindi Reviews

நண்பர்களிடம் ஒரு கேள்வி. நீங்கள் அமீர் கானின் ரசிகரா? தலாஷை பார்த்தே தீருவேன் என்று கங்கணம் (கங்னம் அல்ல) கட்டிக்கொண்டு நிற்பவரா? ஆம் எனில் உங்களுக்கு இந்த விமர்சனம் பிடிக்காமல் போகக்கூடும்.

ரைட். அமீர் கான் படங்களைப் பற்றி நான் இதுவரை எழுதியதில்லை. பெரிதான காரணம் எதுவுமில்லை. அவரது படங்கள் மசாலாக்கள் என்பதில் சந்தேகம் இல்லாததால்தான். அமீர் கான், ஹிந்தியின் கமல்ஹாஸன். அவரைப்பற்றி இங்கே கமலைப் பற்றி என்னென்ன பிம்பங்கள் இருக்கின்றனவோ அதைப்போலவே ஹிந்தியில் உண்டு. பல ஹிந்தி நண்பர்கள் அமீரைப் பற்றி பல mythகளை சொல்வதைக் கேட்டிருக்கிறேன். Mann படம் வரை அமீரையும் ஷா ருக் கானையும் ஒரே தட்டில் வைத்திருந்த ரசிகர்கள், அடுத்ததாக லகான் வந்தபோது அமீரைக் கொண்டாட ஆரம்பித்தனர். அமீருமே அவ்வப்போது 1947: Earth போன்ற படங்களில் நடித்து, தான் ஒரு நல்ல நடிகன் என்ற இமேஜை maintain செய்துவந்ததும் ஒரு காரணம். திரைவாழ்க்கையைத் துவங்கியபோது Darr படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை நல்கிய ஷா ருக், அதன்பின் இன்றுவரை ஒரே போன்ற ஸ்டீரியோடைப் கதாபாத்திரங்களையே நடித்துவருகிறார். ஆனால் அவரைப் போலவே ரொமாண்டிக் கதாநாயகனாக இருந்துவந்த அமீர், லகான் படத்திலிருந்தே தன்னை ஒரு நடிகன் என்றே காண்பித்து வந்திருக்கிறார். ஷா ருக் அவ்வப்போது பேட்டிகளில், ‘நான் ஒரு ஸ்டார்; ஆனால் அமீர் ஒரு நடிகர்’ என்றெல்லாம் சொல்லி அந்த இமேஜை வளர்த்தும் விட்டிருக்கிறார். அமீருமே அதனை நம்ப ஆரம்பித்துவிட்டார் என்பது அவரது சமீபத்திய படங்களைப் பார்த்தாலேயே புரியும். என் அறிவுக்கு எட்டி, 1947: Earth படத்தில் மட்டும்தான் அமீர்கான் நல்ல நடிப்பை நல்கியிருக்கிறார். கூடவே, தரமான படம் என்று பார்த்தாலும் அது மட்டுமே தேறும். வேண்டுமென்றால் தாரே ஸமீன் பர் படத்தை சேர்த்துக்கொள்ளலாம்.

இதன்பின் வந்த Fanaa, Mangal Pandey ஆகியவை முற்றிலும் அலுப்பு தரக்கூடிய படங்கள். Dil Chahta Hai – சுவாரஸ்யமான படம். ஆனால் அது அமீரின் நடிப்புக்கு உதாரணம் அல்ல. ஃபர்ஹான் அஹ்க்தரின் ஜாலியான படைப்பு அது. Thare Zameen par படத்தில் அமீரின் நடிப்பு நன்றாக இருக்கும் என்று ஒப்புக்கொள்கிறேன். 3 Idiots – எனக்குப் பிடிக்கவில்லை. Gajini – தமிழிலேயே எனக்குப் பிடிக்காதபோது, ஹிந்தியில் கேட்கவே தேவையில்லை.

இதுதான் அமீரைப் பற்றிய என் கணிப்பு.

ஆகவே, இப்போது Talaash படம் வெளிவந்திருக்கும் நேரத்தில், அதன் இயக்குநர் யார் என்று சென்ற வாரம் நோண்டினேன். Reema Kagti. Honeymoon Travels Pvt Ltd என்ற ஒரே படத்தை மட்டுமே இதற்கு முன்னர் இவர் இயக்கியிருக்கிறார் என்று தெரிந்தது. அந்தப் படம் வழக்கமான கும்பலோடு கோயிந்தா ஹிந்திப் படங்களில் ஒன்று. இவரோடு சேர்ந்து திரைக்கதை எழுதியிருக்கும் ஸோயா அஹ்க்தர் (கவனிக்க: திரைக்கதை மட்டுமே. வசனங்கள் எழுதியது, ஸோயாவின் சகோதரர் ஃபர்ஹான் அஹ்க்தர் மற்றும் அனுராக் காஷ்யப்), மற்றுமொரு சராசரி இயக்குநர்.

இதனால், இந்தப் படம் பார்க்கவே தேவையில்லை என்று நினைத்தேன்.

ஆனால், இன்று காலையில், ‘முன்முடிவுகள் உனக்கு எதற்கு? ஒருவேளை இது நன்றாக இருந்து, அதனை நீ மிஸ் செய்துவிட்டால்?’ என்று ஒரு எண்ணம் தோன்றியது. சில வருடங்கள் முன்புவரை எனக்கு ஒரு ஈகோ இருந்தது. ஊரே சென்று பார்க்கும் படங்களை வேண்டுமென்றே ஜாலியாக மிஸ் செய்வதாக காட்டிக்கொள்வது. லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களை அப்படி வேண்டுமென்றே விட்டுவிட்டு, பல வருடங்கள் பார்க்காமல் இருந்திருக்கிறேன். ஆனால் அதன்பின் அறிவு சரியாகி, அந்த ஈகோவைக் கடாசியாயிற்று. எனவே மனம் எழுப்பிய குரலுக்கு செவிசாய்த்தேன்.

இரண்டரை மணி நேரம் சித்ரவதை அனுபவித்தேன்.

இருந்தாலும், படம் பார்க்கப்போகும் நண்பர்களுக்காக, படத்தின் ’சஸ்பென்ஸை’ உடைக்கப்போவதில்லை. எனவே தயங்காமல் படிக்கலாம்.

’தலாஷ்’ என்ற ஹிந்தி வார்த்தைக்கு – தேடல் அல்லது வேட்டை என்பது பொதுவான பொருள். இந்தப் படத்தில் அமீர் கான் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். ஒரு மரணத்தைத் துப்பறிய வருகிறார். ஒவ்வொரு க்ளூவாக அவர் தேடிக் கண்டுபிடிப்பதே தலாஷ். படத்தின் கதைப்படி அமீரும் ராணி முகர்ஜியும் தம்பதிகள். இவர்களது மகன் கரண் தற்போது உயிரோடில்லை. மகனின் சாவுக்குக் காரணம் தான்தான் என்பது அமீரின் கதாபாத்திரமான ஸுர்ஜன் ஸிங் ஷெகாவத்தின் உறுதியான எண்ணம். இதனால் மனைவியிடம் இயல்பாகப் பேசமுடியாமல் துயரத்தை மனதில் வைத்துக்கொண்டே சுற்றும் கதாபாத்திரம். இதைப்போலவே மகனின் மரணத்தால் பாதிக்கப்பட்டு ஸைக்யாட்ரிஸ்ட்டை கன்ஸல்ட் செய்யும் மனைவி ரோஷ்ணியாக ராணி முகர்ஜி (அட. இந்த மேட்டர் எல்லாம் ஆல்ரெடி சென்ற மாதமே எல்லாருக்கும் தெரியும். ஆகவே நான் கதையை லீக் செய்யவில்லை என்று அறிக).

இந்த நேரத்தில்தான் ஒரு மரணம் சம்பவிக்கிறது. அப்போது அதனை விசாரிக்க வரும் ஸுர்ஜன், அங்கிருந்து நூல்பிடித்துக்கொண்டே ஒவ்வொரு க்ளூவாக கண்டுபிடிக்கத் துவங்குகிறார். அவருக்கு அவ்வப்போது உதவி செய்வது ஒரு செக்ஸ் ஒர்க்கர். பெயர் – ரோஸி. கரீனா கபூர்.

இதுதான் கதை.

உண்மையில் இந்தப் படத்துக்கு, இன்ஸ்பெக்டரின் துயரப் பின்னணி தேவையே இல்லை. அது ஒரு அனாவசிய விஷயமாக, படம் முழுக்க வந்து ஆடியன்ஸை அழுத்துகிறது. மகனின் மரணம் – அதனால் பெற்றோர்கள் துயறுருதல் – என்பது இந்தப் படத்தில் சொல்லப்படும் விஷயங்களுக்கு அவசியம் இல்லாமல் இருப்பதால் அது படு செயற்கையாக இருக்கிறது. படத்தை முழுதும் பார்த்தவர்கள், இந்தத் துயரம் படத்தின் க்ளைமேக்ஸுக்காக அவசியம் தேவை என்று வாதிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அப்படிப் பார்த்தாலும், க்ளைமேக்ஸுக்காக வலியத் திணிக்கப்பட்ட பின்னணி என்பது மிக மிக எளிதாக விளங்கிவிடுவதால், இந்த ஒட்டுமொத்த செண்டிமெண்ட்டும் பணால் ஆகிவிடுகிறது.

அடிப்படையே படு வீக். அப்படியென்றால், இந்த அடிப்படையின்மீது கட்டப்பட்ட கதை? உடைந்து சிதறிவிடுகிறது.

படத்தின் பிரதான கதாபாத்திரங்கள் அமீர் – ஸுர்ஜன்; ராணி முகர்ஜி – ரோஷ்ணி; கரீனா கபூர் – ரோஸி; நவாஸுதீன் ஸித்திக்கி – தைமூர். இவர்களைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கும் இந்தக் கதைக்கு கொஞ்சமேனும் சுவாரஸ்யம் தருபவர்- Gangs of Wasseypur படத்தில் ரவுண்டு கட்டி அடித்த நவாஸுதீன். இவரது கதாபாத்திரத்தின் பெயர் – தைமூர் என்பதே அட்டகாசம். காரணம், தைமூர் நடக்கையில் நொண்டி நொண்டி நடந்ததை வந்தார்கள் வென்றார்களில் படித்துத் தெளிவடைக. இக்கதாபாத்திரமும் அப்படியே. ஆனால் லைட்டாக வில்லத்தனமும் செய்யும் பாத்திரம் இது. படத்தின் சிறந்த நடிப்பு – நவாஸுதீனே.

கரீனா கபூர் கதாபாத்திரம் ஒரு செக்ஸ் ஒர்க்கர். அதுவுமே, அமீர் & ராணியின் ’துலாபார’ பின்னணியைப் போலவே வலிந்து தரதரவென்று இழுத்துக்கொண்டுவந்து சொருகப்பட்டிருக்கும் விஷயம். சற்றும் ஒட்டாத கதாபாத்திரம். செக்ஸ் ஒர்க்கர் என்பதால் க்ளிவேஜைக் காட்டிக்கொண்டு போதையாகப் பேசி வளைந்து நெளிந்து நடந்து இன்னும் என்னென்னமோ செய்கிறார் கரீனா. ஆனால் படம் பார்க்கும் நமக்கோ கொட்டாவி வருவதே மிச்சம். ஆனால், ஒரு இடத்தில் – ஒரே ஒரு இடத்தில் ஸ்கோர் செய்கிறார் கரீனா. இடைவேளைக்குப் பிறகு ஸுர்ஜனுடன் இரவில் கடற்கரையில் ரோஸி பேசும் நீளமான காட்சி ஒன்று உண்டு. அந்தக் காட்சியின் வசனங்கள் எனக்குப் பிடித்தன.

அடுத்த பலியாடு ராணி முகர்ஜி. மகன் இறந்த துயரத்தில் வாடி வதங்கி கத்திரிக்காயாக மாறும் தாய். ஆனால் எப்போது பார்த்தாலும் லோஹிப் புடவை அல்லது இடுப்பு மடிப்பு அல்லது ஸீத்ரூ புடவை அல்லது இவை மூன்றும் சேர்ந்த உடையலங்காரம். பேசாமல் இவரை செக்ஸ் ஒர்க்கர் என்று சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது. இவரது இடுப்புக்கென்றே வைக்கப்பட்டிருக்கும் ஷாட்களை மிக எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஒருவேளை எனக்கு மட்டும்தான் இப்படியெல்லாம் தோன்றுகிறதோ என்று எண்ணிக்கொண்டிருக்கையில், பக்கத்து ஸீட் பெண் இதையே சத்தமாக சொல்ல, தெளிவு பிறந்தது.

அமீர் கான் – ஸுர்ஜன். இந்த த்ராபை கதைக்கு ஏற்றவாறு நடித்திருந்தாலும், இவரது அறிமுக காட்சியிலேயே பணால். காரணம், இவர் ஜீப்பில் வந்து இறங்கியதும், ‘முத்து’ படத்தில் ரஜினி வண்டியில் வரும்போது பாவமான அந்த கிராமத்து அய்யா சல்யூட் வைப்பாரே அப்படி ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ஓடிவந்து, ‘ஸார்.. உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன்.. உங்களுடன் பணிபுரிய மிகவும் ஆசை’ என்று அதேபோல் ஒரு ஜால்ரா தட்டுகிறார். நடிப்பது மசாலா. அப்படியிருக்கும்போது வெளிப்படையாக மசாலாக் காட்சிகளை வைக்கலாமே? மிகவும் இயல்பான படம் என்று ஒரு மாயையை உருவாக்கிவிட்டு, நைஸாக இந்த இடைச்சொருகல்கள் எதற்கு?

இந்தப் படத்துக்கு அடிஷனல் வசனங்கள் எழுதியிருப்பவர் அனுராக் காஷ்யப். ஏதோ கமிட்மெண்ட் விஷயம் என்பதால் அவசரமாக எழுதிக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார் போலும். இந்தக் கதையை நினைத்து மனதுக்குள் ஜெமினி வில்லன் தேஜாவைப் போல் கமுக்கமாக சிரித்திருப்பார் என்பது நிச்சயம்.

இதற்குமேல் இந்தப் படத்தில் எதுவுமே இல்லை. குறிப்பாக, இதன் க்ளைமேக்ஸ் ஒரு சப்பை. இந்தக் க்ளைமேக்ஸைப் பார்த்தீர்கள் என்றால் புரியும்.

சஸ்பென்ஸ் படங்களை எப்படி எடுக்கவேண்டும்? படம் பார்க்கும் ஆடியன்ஸின் மனதில் எழும் அவநம்பிக்கைகளை உடைத்துத் தகர்த்து அவர்களை வாயைப் பிளக்கவைக்கவேண்டும். Suspension of Disbelief என்று இதற்குப் பெயர். Mulholland Drive திரைப்படம் இதற்கு ஒரு உதாரணம். கிட்டத்தட்ட அதே கான்ஸெப்டில் வெளிவந்திருக்கும் தமிழ் ‘பீட்ஸா’ படம் இறுதிவரை அலுத்தாலும், அதன் க்ளைமேக்ஸ் என் மண்டையில் ஓங்கி ஒரு அடி வைத்தது என்று ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அதுதான் சஸ்பென்ஷன் ஆஃப் டிஸ்பிலீஃப். ஆடியன்ஸின் மனதில் ‘அடடே.. இதாண்டா க்ளைமேக்ஸ்’ என்ற எண்ணத்தை வரவழைப்பது. அதில் ஒரு லாஜிக்கும் இருந்தது. எந்த லாஜிக்கும் அடிபடாமல் நமக்கு ஒரு திருப்தியும் எழுந்தது. ஆனால் தலாஷின் க்ளைமேக்ஸ் ஒரு பெரிய letdown. லாஜிக் என்ற மேட்டரையே மறந்து, ஆடியன்ஸ் அனைவரும் முட்டாள்கள் என்று நினைத்து எடுக்கப்பட்ட க்ளைமேக்ஸ் இது.

தலாஷ் படம் மக்களை வெளிப்படையாக ஏமாற்ற நினைக்கிறது. தரமான படம் என்ற போர்வையில். ஆனால் அது மக்களிடம் எடுபடாது என்று தோன்றுகிறது. இந்த ஏமாற்று வேலைக்கு, Jab Tak Hai Jaan போன்ற படங்கள் எவ்வளவோ தேவலாம். அவை வெளிப்படையாக இருக்கின்றன. தலாஷைப்போல் மக்களை cheat செய்வதில்லை.

மிக மிக சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், தலாஷ் – 1980ல் வந்திருக்கவேண்டிய ஹிந்திப்படம். தப்பித்தவறி இப்போது வந்து தொலைத்துவிட்டது. தமிழில் எண்பதுகளிலேயே இதனைவிட நல்ல படங்கள் வந்தாயிற்று.

Gangs of Wasseypur போன்ற படங்கள் இந்தியத் திரையுலகை அட்டகாசமாக வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்கின்றன. ஆனால் தலாஷைப் போன்ற திராபைகள் அந்தப் புகழை மழுங்கடிக்கவென்றே வந்திருக்கின்றன என்பதே உண்மை.

பி.கு – இது ஒரு ஸ்பாய்லர். ஆகவே இதைப் படிக்காமல் படத்தைப் பார்த்துவிடுங்கள். ஸ்பாய்லரைப் படித்துவிட்டு என்னைத் திட்டாதீர்கள்.

தலாஷ் படத்தைவிட மைடியர் லிஸா படம் எனக்குப் பிடித்தது. காரணம் சிம்பிள். அது நம்மை ஏமாற்றவில்லை.  மைடியர் லிஸாவின் படுமோசமான வடிவமே தலாஷ்.

  Comments

61 Comments

  1. ganesana anbu

    தலவரே… அப்படியே ஜப் தக் ஹே ஜான் படத்துக்கும் விமர்சனம் எழுதிடுங்களேன்?

    Reply
    • Rajesh Da Scorp

      ஏன் இந்த கொலவெறி?

      Reply
  2. M Balaji

    Same feeling rajesh..this is not a thriller.. this is a drama

    Reply
  3. Sankara Narayanan T

    Hi

    Is “Cloud Atlas”not released yet in India? Waiting for your review!

    Sankara N. Thiagarajan
    The Netherlands

    Reply
    • Rajesh Da Scorp

      It was released and taken back Sankara Narayanan. Let me see if it still runs in any theatre in Bangalore .

      Reply
      • Sankara Narayanan T

        Rajesh,

        Is it? Such a wonderful movie, not recognised at all? Have you wwatched that? Please do not miss that.

        Reply
        • Still runs in chennai, 6.30 pm show pvr, nice movie

          Reply
  4. Praveen babu

    Gud review…. i have never felt that aaamir is a great actor. i don’t know y there is this much hype around him.

    Reply
    • Rajesh Da Scorp

      That’s the cleverness of his image building process Praveen 🙂

      Reply
  5. ராஜசுந்தரராஜன்

    படம் பார்க்கப் போவதில்லை. அதனால் இங்கு அதுபற்றிப் பேசுவதும் கூடாதுதான். இது உங்கள் எழுத்தைப் பற்றி. அமீர்கான் இதில் ஒரு நடிகர் மட்டும்தானே, இயக்குநர் இல்லையே? கமல்ஹாஸன் பற்றிச் சொல்லப்படுவது போலவே தலையீடு இருந்திருக்கலாம். ஆனால் இயக்குநர் பெயர் ‘ரீமா கக்தீ’ என்றுதானே எழுத்தில் இருக்கிறது? இருக்க, அமீர்கானுக்கு என்னத்துக்கு இவ்வளவு கிரெடிட்?

    //Gajini – தமிழிலேயே எனக்குப் பிடிக்காதபோது, ஹிந்தியில் கேட்கவே தேவையில்லை// இங்கே என்னமாய்க் குழப்பி இருக்கிறீர்கள் பாருங்கள்!

    படத்தை பற்றியா நடிகரைப் பற்றியா இந்த உங்கள் எழுத்து என்பதே குழப்பம். //Suspension of Disbelief என்று இதற்குப் பெயர். Mulholland Drive திரைப்படம் இதற்கு ஒரு உதாரணம்.// என்றும் எழுதி இருப்பதால், இது ‘தலாஸ்’ படத்தைப் பற்றியது என்றே எடுத்துக் கொள்கிறேன்.

    //இந்தப் படத்துக்கு அடிஷனல் வசனங்கள் எழுதியிருப்பவர் அனுராக் காஷ்யப். ஏதோ கமிட்மெண்ட் விஷயம் என்பதால் அவசரமாக எழுதிக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார் போலும். இந்தக் கதையை நினைத்து மனதுக்குள் ஜெமினி வில்லன் தேஜாவைப் போல் கமுக்கமாக சிரித்திருப்பார்.// இதுவும் நியாயமில்லை. இந்தப் படத்தில் பங்கெடுத்தமைக்காக அனுராக் விமர்சிக்கப் பட வேண்டும் அல்லது அவரை வீண்டித்துவிட்டார்கள் என்கிற அளவில்தான் பேசி இருக்க வேண்டும். இது என் கருத்து.

    படத்தைப் போட்டுத் தாக்கினாலே அமீர்கான் அடிபட்டுப் போய்விட மாட்டாரோ?

    Reply
    • Rajesh Da Scorp

      மனிதர்களை அடித்ததன் காரணம் எளிது. அமீர் கான் என்பவர், தற்சமயம் இந்தியாவின் சிறந்த நடிகராக மீடியாவினாலும் அவராலும் முன்னிறுத்தப்படுகிறார். பனிரண்டு வருடங்கள் முன்புவரை (Mann) சாதாரண நடிகராக இருந்து, லகானின் வெற்றிக்குப் பின்னர் அவரே அவரை அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார். அதுதான் அவரைப் பற்றி அப்படி எழுத வைத்தது. அமீரின் இந்த அரசியலைப் பற்றி எழுதாமல் இப்படத்தை விவாதிக்க இயலாது. அதேபோல்தான் அனுராக் காஷ்யப் என்கிற இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரை அடிஷனல் வசனம் எழுத வைத்து அவரது பெயரையும் இந்த டப்பா படத்தோடு சம்மந்தப்படுத்தியதால் அவரைப் பற்றி எழுத நேர்ந்தது. இதுபோன்ற உட்டாலக்கடிகளை ஷாருக் படம் வரும்போது காண முடியாது. அவர் படங்கள் தெளிவாக மசாலா என்ற வரையறைக்குள் இருக்கின்றன. ஆனால் அமீரோ ஊரை ஏமாற்றி ஆடியன்ஸையும் ஏமாற்றுகிறார் – இது தரமான படம் என்ற பிம்பத்தை நிலைநிறுத்துவதன் மூலம். இதற்கு இயக்குனர் மட்டுமே காரணம் என்று நான் சொல்ல மாட்டேன். அமீர் இதன் தயாரிப்பாளர்களில் ஒருவர். ஸ்க்ரிப்டை ஒகே செய்தவர். தானே நடிக்கிறேன் என்று முன்வந்தவர். ஆகையால் எல்லாவற்றையும் அடி பிரித்ஹெடுக்க வேண்டியிருக்கிறது 🙂

      Reply
  6. Ivlo pesura neenga Oru Film pannunga…………..Apo Yaravathu Kevalama Vimarsanam Pannuna , Apo therium Antha vali…………..

    Reply
    • 1st Unga Ego’va Vidunga………..Then Film’a pathi vimarsanam pannunga……….

      Reply
      • Rajesh Da Scorp

        Anbu Arasu – Boss. My job is to review. You asking a reviewer to take a film is like saying ‘you should know driving a bus when you travel in it’. I am ready to take a film. But please arrange a producer and then let me consider it.

        Reply
        • ha ha ha… arrange him a producer anbu arasu

          Reply
    • Mariraja

      This review is his opinion about this film….your opinion will be different…So better avoid to put unwanted comments… Naan oru hotelkku poren…Dosa order pannuren…dosa nalla illa…Enakku Dosa suda thericha dhan naan dosa nalla illanu sollanuma ????….

      Reply
      • Rajesh Da Scorp

        Absolutely Mariraja. You have said whatever I wanted to say. Thanks.

        Reply
  7. Rafeek

    Andava..”vimarsanam panra nee oru padam eduda.. naanga allu vatchu (sonthama panna mudiyathula )vimarsanam pani kilikirom” appdingura kootam oyeve oyatha.. 🙂

    Reply
    • Rajesh Da Scorp

      🙂 ஓயாது போலதான் தெரியுது ரஃபீக்

      Reply
  8. Sriram

    Rajesh,

    This movie Budget is 40 crore (US$7.28 million) & made Box office 50 crore (US$9.1 million) in 4 days domestic nett) as per wikipedia, The amount of time you spent write about this movie is really waste Instead if you could write about some new upcoming film maker it makes more worthy of your time. I told you the same when you made survey before you upgrade your website. Stop write about starts because its waste of time, rather start write about some upcoming film makers like how you did about Karthic Subraj, Etc..

    Reply
    • Rajesh Da Scorp

      Yes Sriram. I would have done that. But something in my mind said ‘what if you are missing a good film?’ and that’s why I saw it. Will take your suggestion seriously though. THanks.

      Reply
  9. நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறீர்கள்…உங்களக்கு கீழே வேலை செய்பவர்களுக்கு உங்களைப் பற்றி ஒரு நல்ல எண்ணம் இருக்கிறது…அதை மற்றவர்களிடம் அவர்கள் பகிர்ந்து கொண்டதால்,,,அதே அலுவலகத்தில் இன்னொரு மானேஜரிடம் வேலை பார்ப்பவர் உங்களிடம் வந்து ‘நான் உங்கள் டீமில் சேர வேண்டும்’ என்று வேண்டுதல் வைக்கிறார். இதே நிகழ்வு அமீர்கானுக்கு நடந்தால் அது ‘ஹீரோயிசம்’….!!!?

    சரி…அத விடுங்க…!!!!

    மனிதன் நிம்மதியை தேடிக் கொண்டே இருக்கிறான். நிம்மதியை பற்றி ‘தேடல்’ எதைப் பற்றி இருக்க வேண்டும்? அந்த தேடல் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்? எதை நோக்கி இருக்க வேண்டும்? என்ற கேள்விகளுக்கு அமீர்கான் கொடுக்கும் பதிலாக இந்த படத்தை….கருத்தில் கொள்ளலாம். இதை நீங்கள் ஒத்துக் கொள்ளலாம் அல்லது மறுதலிக்கலாம்.

    அதை விடுத்து…அய்யோ…அம்மா என்ற தங்களது விமர்சனத்தை படிக்கும் பொது ‘கண்ணா நீ பச்சா…’ என்ற ரஜினிகாந்த் பஞ்ச் தான் ஞாபகம் வருகிறது.

    ஓவ்வொருவரும் தங்களது ‘மனசாட்சியிடம்(alter Ego)’ வாழ்நாள் முழுதும் போட்டுக் கொண்டு இருக்கும் சண்டை…அந்த சண்டையில் தோற்பதால் ஏற்படும் ‘குற்ற உணர்வு(Guilt Feel) ஒரு மனிதனின் வாழ்வை எப்படி புரட்டி போடுகிறது என்பதெல்லாம்…அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.

    என்றாவது….நாம் வாங்கிக் கொடுத்த உடையை அணிந்துக் கொண்டிருக்கும் ஒருவர்(நமக்கு மிகவும் வேண்டப்பட்டவர்)…அதே உடையில் அவருக்கு ‘ஈமக்கிரியை’ செய்யப் படுவதை கண்கொண்டு பார்த்து…நாம் இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருந்தால் அவரை காப்பாற்றி இருக்கலாமே என்ற ‘குற்ற உணர்வு’….ஒரு மனிதனை என்னவெல்லாம் செய்யக்கூடும் என்பதை பற்றி இந்த படத்தில் மிக நேர்த்தியாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது. அதை புரிந்து கொள்ள ‘Emotional Quotient(EQ)’ அவசியப்படுகிறது…ஆனால் நமக்கு எப்போதும் ‘Intelligence Quotient(IQ) மட்டுமே இருந்தால் போதும் என்ற உணர்வில் அல்லவா வாழ்கிறோம்.

    அதென்ன ‘Emotional Quotient(EQ)’ என்கிறீர்களா..உங்களுக்கு புரிய வைக்க… ரமேஷ் பிரேதனின் ‘காந்தியை கொன்றது தவறுதான்’ என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு சாம்பிள்…!

    முகம்
    ———
    கடைசி ஆசை
    என்னவென்று கேட்டார்கள்
    ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி
    வேண்டும் என்றேன்
    கொடுத்தார்கள்
    பார்த்தேன்
    அதில் என் முகம் இல்லை

    தூக்கிலிடும்போது
    என் மூடப்பட்ட முகத்தில்
    தெரிந்தது
    உன் கொல்லப்பட்ட முகம்

    இந்த கவிதையும் புரியலைன்னா…ஒன்னு பண்ணுங்க. Pune Film Institute-ல ‘Film Appreciation Course’ ஆப்படீன்னு ஒரு வருஷ படிப்பு இருக்கு. மொதல்ல…அங்க போங்கப்பா…போய்…படிச்சுட்டு சினிமா விமர்சனம் பண்ணுங்க.

    Reply
    • Rajesh Da Scorp

      என்னோட அடிப்படை கருத்தே – அமீரின் சோக பின்னணி, படத்துக்கு தேவையே இல்லை என்பதே நண்பரே. அது வலிந்து வைக்கப்பட்டதால் அதன் எஃபக்ட் போய்விடுகிறது. ஆகவே, அந்தக் காட்சிகளின் தீவிரம், விழலுக்கு இறைத்த நீர். இதுதான் என் கருத்து. அதைத்தான் எழுதியிருக்கிறேன்.

      //‘குற்ற உணர்வு(Guilt Feel) ஒரு மனிதனின் வாழ்வை எப்படி புரட்டி போடுகிறது என்பதெல்லாம்…அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.//

      நான் அதை அனுபவித்திருக்க மாட்டேன் என்று எப்படி நீங்களாக முடிவு எடுக்கலாம்? EQ & IQ பற்றியெல்லாமும் அதே போல முன்முடிவுகள் நீங்கள் எடுப்பதற்கு முன்னர், நான் சொல்ல வந்ததை கொஞ்சம் புரிந்துகொள்ள முயலலாமே? நீங்க சாம்பிள் கொடுத்த மாதிரி இல்லாம நான் விரிவாவே இந்தப் படத்துல எதெல்லாம் தேவையில்லாம இருக்குன்னு எழுதிருக்கேன்.

      எனக்கு ஒன்றே ஒன்றுதான் புரியவில்லை. உங்களுக்குப் பிடித்ததுபோல் விமர்சனம் எழுதவேண்டும் என்றால் அதை நீங்களே எழுதிக்கொள்ளலாம் அல்லவா? இது எனது கருத்து. இந்த தளத்தில் என் நோக்கில் நான் பார்க்கும் படங்களைப் பற்றி எழுதுகிறேன். அது உங்கள் இஷ்டப்படிதான் இருக்கும் என்பதை நீங்கள் எப்படி முடிவு செய்யலாம் சொல்லுங்கள். உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அக்காட்சிகள் படத்தில் மிக செயற்கையாகப் புகுத்தப்பட்டிருக்கின்றன என்கிறேன். காரணம், அமீர் & ராணியின் பின்னணி இந்தப் படத்துக்கு செய்யும் ஒரே நல்லது என்னவெனில், ஆடியன்சுக்கு பேயைப் பற்றி ஒரு க்ளூ கொடுப்பதே. அதைத்தவிர அக்காட்சிகளால் உபயோகம் நஹி. நான் இப்படிச் சொல்லவருவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் என்னை ‘Film Appreciation Course’ படிக்கச் சொல்லி, உங்கள் இஷ்டத்துக்குத்தான் நான் எழுத வேண்டும் என்று நீங்கள் சொல்வது நகைச்சுவையாக உள்ளது.

      Reply
  10. நரேந்திரன்

    ஏம்ப்பா ராஜேஷு… Looper’னு ஒரு படம் வந்துச்சே அத பத்தியெல்லாம் எழுதாம ஏன் தான் இப்பிடி படுத்துறியோ…..

    Reply
  11. Ashraf

    அசரப் அலி

    ஆமீர்கானை பிடிக்காத ஓரே காரணத்துக்காக எழுதப்பட்டட விமர்சனமாக தெரிகிறது.மேல் நாட்டு படங்களின் மேலுள்ள மோகத்தின் பிரதிபலிப்பும் இது.சாரு இந்த படத்தை புரிந்துக் கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும்.எதற்கும் அவரை இன்னொரு முறை படத்தை பார்க்க வைப்பது நல்லது. எனொன்றால்,நல்ல விமர்சகர்கள் சில சமயம் குழம்பிப் போவதுண்டு. .எனறாலும் அவருடைய தெளிவடைதலில் மாத்திரமே இந்த படம் நிற்கும் என்று நினைக்கலாகாது.

    சாரு,இனிமேல் உங்களுக்கு பிக்காதவர்களின் படத்தைப் பார்காமல் இருப்பதே நலம்… அது எவ்வளவு நல்ல படமாக இருந்தாலும்

    Reply
    • Rajesh Da Scorp

      இது சாருவின் விமர்சனம் அல்ல நண்பரே. எனக்கு அமீரைப் பிடிக்காது என்பது உண்மையல்ல ஆனால் அமீரைப் பிடிக்கவும் செய்யாது. இது மிக மோசமாக எடுக்கப்பட்ட ஒரு படம் என்பது என் கருத்து. அதற்கு எந்த மேல்நாட்டு மோகமும் காரணம் அல்ல.

      Reply
  12. waiting for Life of Pi Review

    Reply
  13. சினி ரசிகன்

    . 3 Idiots – எனக்குப் பிடிக்கவில்லை. Gajini – தமிழிலேயே எனக்குப் பிடிக்காதபோது, ஹிந்தியில் கேட்கவே தேவையில்லை.////// இவ்வளத்தோட இந்த பதிவை பார்ப்பதை நிறுத்திவிட்டேன்…… பேசாம ஆங்கில படத்துக்கு மட்டும் விமர்சனத்தை எழுதுங்க… இந்திய படங்களுக்கு எழுதி கடுப்பை கிளப்பாதீங்க….

    Reply
  14. karthickds

    Many people try to gain limelight by talking ill of others who try to portray the difference.. .i am not a big fan of aamir khan, but he is definitely different from the crop, the author tries to portray that he is brilliant and different by ripping guys like aamir khan and kamalhassan, do not think he has given up his ego yet… groow up pls..

    Reply
  15. ராஜசுந்தரராஜன்

    ஓ, இதன் தயாரிப்பாளர் அமீரா? என்றால் அவரைப் படத்துக்கும் பொறுப்பாக்கலாம்தான். ஆனால், அனுராக் ஒன்றும் அறியாத பாப்பா என்று ஏற்பதற்கில்லை. வணிக உலகில் இப்படிக் கூட்டுகள் எல்லாம் நிகழும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. படத்தைப் பற்றி உங்கள் எழுத்தில் இருந்து ஓரளவு புரிந்துகொண்டேன். நன்றி!

    ஆனால், ‘நிம்மதியைத் தேடி ஒரு பயணம்’ என்றொரு நண்பர் இங்கே எழுதி இருக்கிறார். படத்தை ஒருமுறை பார்க்கலாமோ? உங்களுக்கு நேர்ந்த மாதிரி உள்ள நிம்மதியும் போய்விட்டால்? (ராணி கட்டும் சேலைக் கவர்ச்சிகள்!?!?!)

    Reply
  16. தோழரே ஒரு வேண்டுகோல் 21:12:2012 உலகம் அழிவு ஏற்பட போகிறதாம் உங்களின் மறைமுக ரசிகனுக்காக அதனப்பற்றி ஒரு பதிப்பை போடுங்கள்…

    Reply
  17. Madhav

    Hobbit got ready to release. Where are the special posts ??

    Reply
  18. உங்கள் அடிப்படை கருத்து(அமீரின் சோக பின்னணி, படத்துக்கு தேவையே இல்லை) என்பது தான் பிரச்சனையே…இந்த படத்தின் அடிநாதம் முக்கிய பாத்திரங்களின் ‘குற்ற உணர்வு’. அவர்கள் எல்லோருக்குள் இருக்கும் ‘குற்ற உணர்வு’ தான் இந்த கதையை செலுத்துகிறது.

    அது மட்டுமின்றி, இந்த படத்தின் ஒரே கதை…அமீரின் சோக பின்னணி மட்டுமே. குற்ற உணர்வில் உழன்று கொண்டிருக்கும் ஒரு மனிதன்…வேலை செய்யும் இடத்திலும் அவனுடைய குற்ற உணர்வு எப்படி வழிநடத்துகிறது…அதிலிருந்து அவனும் அவன் மனைவியும் எப்படி மீண்டார்கள் என்பது தான் ‘Plot’. இதில் ஒரு கொலை நடப்பது, அதை அமீர் கான் விசாரணை செய்வது எல்லாமே…பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதர்க்காக கையாளப்பட்ட கதைக் களம். Just a secondary…one!!!

    அமீர்கானின் குடும்ப பிரச்சனையை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தால் அது ஒரு ‘விசு படமாக’ இருக்கும். கொலையை விசாரித்து கொன்றவர்களை தண்டனைக்கு ஊட்படுத்தியிருந்தால் அது ஒரு வேறு வகை. ஆனால் இதை இரண்டும் சேர்த்து கொடுத்திருப்பது தான் இந்த படத்தின் வித்தியாசம்.

    Beautiful Mind, 6th Sense, Fight Club போன்ற படங்களை பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
    – 6th sense-ல் கடைசியில் தான் கதாநாயகன் முதல் காட்சியில் இறந்து விட்டான் என்று தெரியும். அதே போல…
    – Beautiful Mind, Fight Club போன்ற படங்களில் கதாநாயகனோடு கூடவே இருந்தவர்கள் ஒரு ‘illusion’ என்று படத்தின் முடிவில் தான் தெரியும்

    அதே கதை அமைப்பு தான் இங்கேயும்(அமீர் ஒரு பிணத்தை தோண்டி எடுப்பதும் அதன் விரலில் இருந்த மோதிரம் காட்சி மட்டும் இல்லாதிருந்தால்..நிச்சயம் பல தளத்தில் பேசப் பட்டிருக்க வேண்டிய படம்).

    உலக சினிமாவை பிரித்து மேயும் உங்களைப் போன்றவர்களுக்கு இந்த சாதாரண விசயம் ஏன் புரியவில்லை? EQ மற்றும் IQ இரண்டுமே இல்லையென்றால் என்ன செய்வது? ஒரே வழி…’Get back to basics’.

    நீங்கள் என் இஷ்டத்துக்கு சினிமா விமர்சனம் எழுத வேண்டாம் கருந்தேள் அவர்களே…சினிமா மொழியை புரிந்து கொண்டு விமர்சனம் செய்தாலே போதும் என்பது தான் எனது தாழ்மையான வேண்டுகோள்.

    அதை விடுத்து…இந்த மாதிரி சினிமாவை தவறாக கணித்து நீங்கள் எழுதிக் கொண்டிருத்தால்…’நுணலும் தன் வாயால் கெடும்’ என்ற பழமொழி தான் எனக்கு ஞாபகம் வருகிறது.

    Reply
    • Jaaffer Sadiq

      Well Said Mr. Rajaram

      Reply
      • மறுபடியும் உங்களது பின்னூட்டத்தில் ‘நான் சொல்வதுதான் சரி’ என்ற தொனியைக் காண்கிறேன். நீங்கள் சொல்லும் அமீரின் சோக பின்னணி, எப்படி இந்தக் கதையில் புகுத்தப்பட்டுள்ளது என்பதை இனி விளக்குகிறேன். படத்தின் க்ளைமேக்ஸ் என்ன? மரணங்களைத் தூண்டிவிட்டது பேய் என்பதே. திரைப்படத்தில் அதுதான் இறுதி ட்விஸ்ட். இறுதிவரை இந்தப் படத்தைக் காணும் ஆடியன்ஸு க்குக் கிடைக்கும் செய்தி அதுதான். இந்த கிளைமேக்சை நோக்கி ஆடியன்சை நகர்த்தும் முயற்சிதான் ராணி தன மகனின் ஆவியுடன் பேச முயலும் காட்சிகள். ஏன்? அது ஆடியன்சுக்குத் தரப்படும் ஒரு செய்தி. ‘இறுதியில் தடாலென்று ஆவியை நாங்கள் காட்டப்போகிறோம் – ஆகவே இது இல்லாஜிகலாக இருக்கிறதே என்று எங்களைத் திட்டாதீர்கள் – இதோ ஆரம்பத்திலேயே ஆவிகளைப் பற்றிய சில காட்சிகளை இணைத்திருக்கிறோம் – ஆகவே அதைப் புரிந்துகொள்ளுங்கள்’ என்பதே இப்படத்தின் சீக்வென்ஸ்.

        அப்படி க்ளைமேக்சின் ஆவியைப் பற்றி ஆடியன்சுக்குக் கொடுக்கும் செய்தியில் மற்றொரு ஆவி – அவைகளைப் பற்றிய மெசேஜ் – வருவதால், கதாநாயகனின் குடும்பத்துக்கு இருண்ட பின்னணி ஒன்றை வடிவமைக்கும் டெக்னிக் இது. ஹாலிவுட்டின் பல படங்களில் இது பின்பற்றப்பட்டுவிட்டது. ஆனால் அப்படங்களில் இந்தக் கதைக்கும் கிளைமாக்சுக்கும் மிகுந்த சம்மந்தம் இருக்கும். இந்தப்படத்தில் அது எள்ளளவும் இல்லை.

        நீங்கள் சொல்லும் //குற்ற உணர்வில் உழன்று கொண்டிருக்கும் ஒரு மனிதன்…வேலை செய்யும் இடத்திலும் அவனுடைய குற்ற உணர்வு எப்படி வழிநடத்துகிறது…அதிலிருந்து அவனும் அவன் மனைவியும் எப்படி மீண்டார்கள் என்பது தான் ‘Plot’.// மேட்டர் தான் இப்படத்தின் பிளாட் என்றால், அதை மிக அருமையாக சித்தரிக்க பல வழிகள் உள்ளன. இந்த பிளாட்டை மட்டுமே வைத்து அட்டகாசமான உணர்வுபூர்வமான படம் ஒன்றைக் கொடுத்திருக்க முடியும். விசு படமாகவெல்லாம் அது இருந்திருக்காது. ஆனால், அது இப்படத்தின் பிளாட் அல்ல. மேலே நான் சொல்லியிருக்கும் சீக்வென்ஸ்தான் இப்படத்தின் அடிநாதம். க்ளைமேக்ஸ் ஆவிக்காகவே புகுத்தப்பட்ட மகனின் ஆவி – அதன்பின் குற்றவுணர்வு – என்றுதான் இப்படம் நீள்கிறது.

        இன்னொன்றும் சொல்கிறேன். Beautiful Mind, 6th Sense, Fight Club ஆகிய உதாரணங்களே தவறு. இப்படத்தோடு அவற்றை சம்மந்தப்படுத்தினால் அது காமெடி. காரணம் இந்தப் படங்களிலெல்லாம் காண்பிக்கப்படும் தளமே வேறு. அவை நேரடியாக கதாநாயகனின் பிரச்னையைப் பற்றியும் அதிலிருந்து அவன் மீள்வது பற்றியும் பேசுகின்றன இவற்றிலெல்லாம் இந்தப் படத்தைப் போல முதலில் இல்லாஜிகல் க்ளைமேக்ஸ் – அதன்பின் அதனை சப்பைக்கட்டு கட்ட கதாநாயகனுக்கு ஒரு கதை – என்பது இல்லை. அதுதான் இந்தப் படத்தின் பிரச்னை.

        சினிமா மொழியைப் புரிந்துகொண்டு தான் இதனை எழுதுகிறேன். கவலை வேண்டாம். உங்களது தீர்ப்புகளை வலிந்து என் மேல் திணிப்பதற்குப் பதில், நீங்கள் கொடுத்துள்ள இந்தப் படங்களை மீண்டும் ஒருமுறை பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கே நான் சொல்ல வருவது புரியும். அதன்பின் EQ IQ பற்றியெல்லாம் பக்கம்பக்கமாக விவாதிக்கலாம். இனிமேலும் இந்த விவாதத்தைத் தொடர நான் ரெடி. நன்றி.

        Reply
  19. தூங்குவோரை எழுப்பலாம்…தூங்குவது போல நடிப்பவரை எழுப்பவே முடியாது.

    சினிமாவை பற்றி எழுத…என்னை தகுதி படுத்திக் கொள்ளமுயற்சி எடுக்க மாட்டேன். என் இஷ்டத்துக்கு எழுதுவேன் என்னும் தங்களைப் போன்றவர்களை என்ன செய்வது?

    காலம் உங்களை நல்வழிப்படுத்தும்…!!!

    Reply
    • நண்பரே..இது ஒரு விவாதம். உங்கள் கருத்தை நீங்கள் சொன்னபின்பு அவற்றுக்கு என் பதிலைக் கொடுத்திருக்கிறேன். பதிலுக்கு நீங்கள் நான் தூங்குபவன் போல் நடிக்கிறேன் என்று ஒரே தாக்காக தாக்குகிறீர்கள். நல்லது. என்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளாமல் ஒரு வரி கூட நான் இங்கு எழுத ஆரம்பிக்கவில்லை. என்னை நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் கருத்துக்கு ஒப்புக்கொண்டுதான் நான் எழுதவேண்டும் என்று நினைக்காமல், நான் இங்கு சொல்லியுள்ளவற்றையும் ஒருமுறை கவனத்தில் கொண்டு யோசியுங்கள். அவ்வளவே. என்னை நல்வழிப்படுத்தும் காலம் உங்களையும் நல்வழிப்படுத்தட்டும் . நன்றி.

      Reply
      • sakthi

        good

        Reply
  20. அமீர்கான் கமல்ஹாசன் போன்றவர்…ஷாருக்கான் போல அல்ல…மக்களை ஏமாற்றுகிறார்கள். இது உங்களின் கருத்து…இதற்கும் ‘தலாஷ்’ என்ற இந்தி படத்துக்கும் என்ன சம்பந்தம்? இந்த கருத்து பட விமர்சனத்தில் எப்படி வரலாம்?

    ஐயா….உங்களின் சினிமா விமர்சனங்களில்…அந்த கதாநாயகன்(அமீர் கான்) என்ற நபரின் பர்சனல் விஷயங்களில் உங்களுக்கு இருக்கும் ‘அறசீற்றம்’ தான் வெளிப்படுகிறது. ‘Moral Policing Attitude’ சினிமா விமர்சகனுக்கு தேவையில்லாத ஒன்று. இதைத் தான் உங்களுக்கு புரியவைக்க முயலுகிறேன்.

    ஆனால் அமீர்கானின் படம் பார்க்கும் போது…அமீர்கான் என்ற நடிகர் நடித்த படமாக பார்க்காமல் அந்த நபரின் மேல் உங்களுக்கு இருக்கும், prejudiced opinion’ஐ எப்படியாவது உலக மக்களுக்கு புரிய வைக்க அல்லது நிரூபிக்க நீங்கள் எடுத்துக் கொள்ளும் முயற்சியாகத் தான் எனக்கு படுகிறது…இதற்கு பெயர் சினிமா விமர்சனம் அல்ல…நண்பரே.

    இதே போல…இயக்குனர் மிஷ்கினின் படத்தின் விமர்சன துவக்கத்திலேயே அந்த இயக்குனர் பற்றிய உங்களின் ‘prejudiced opinion’ஐ சொல்லி விட்டீர்கள். அதற்க்கு பின் பக்கம் பக்கமாக விமர்சனம் என்று எழுதி என்ன பிரயோசனம்.(அதே படத்தில் கையாளப் பட்ட சண்டயை காட்சிகள் மற்றும் அதன் நுணுக்கங்கள் பற்றி சிலாகித்து உயிர்மையில் பக்கம் பக்கமாக எழுதி இருந்தார்கள்…அது வேறு விஷயம்)

    கமலஹாசன் காப்பி அடிக்கிறார்…இந்த படத்தில் இருந்து ‘லவுட்டி இருக்கிறார்’ என்பதை (என்னைப் போன்ற)பாமர மக்களுக்கு தெரிய வைப்பது ஒரு சினிமா விம்ர்சனின் கடமை, அதை நீங்கள் இத்தனை வருடங்களாக நன்றாகவே செய்து வருகிறீர்கள். ஆனால் அதற்காக கமல்ஹாசன், அமீர்கான், மிஷ்கின் போன்றவர்கள் என்ன செய்தாலும் தப்பு…என்று கூறுவது…ஒரு ‘Character Assassination’. அதுமட்டுமின்றி, ஒரு மனிதனின் மேல் உங்களுக்கு இருக்கும் ‘Opinion’ஐ சொல்வதற்கு…’ஒரு சினிமா விமர்சிகன்’ என்று ‘முகமூடியை’ ஏன் அணிய வேண்டும்.

    நீங்கள் விமர்சன வரைமுறைகளை சரிவர பின்பற்றவில்லை…எங்கேயோ தவறு நடக்கிறது…உங்களின் ‘prejudiced opinion’ஐ சினிமா விமர்சனமாக கருத முடியாது. சினிமா எனற ஒரு கலையை விமர்சனம் செய்வதற்கு அடிப்படை தேவைகள் என்ன? ஒரு சினிமாவை எப்படி பார்க்க வேண்டும்? எப்படி எழுத் வேண்டும் ? என்ற வரைமுறைகளை தெரிந்து….புரிந்து அவைகளை உங்கள் விமர்சனத்தில் சரியாக கையாளுகிறீர்களா? இல்லையா? இது தான் நான் உங்களிடம் வைக்கும் ஒரே கேள்வி.

    மீண்டும் சொல்கிறேன்… Pune Film Institute-ல ‘Film Appreciation Course’ …படிச்சுட்டு சினிமா விமர்சனம் பண்ணுங்க. Your perspective on cinema will change…!!!

    விவாதத்திற்கு நன்றி.

    Reply
    • Nirvana

      Well said Mr. Rajaram , I agree with you 100% , I couldn’t see a movie review here but only a personal attack on Aamir. I am also very disappointed Karunthel disclosed the climax of the movie in the arguments between you two. The problem with these people is their “know everything “ attitude.

      They are like Hitlers in the blog world , they won’t listen to anyone. You can’t change their attitude ,it will only be futile explaining things to them. Even if they realise it is wrong their ego won’t allow them to accept it.

      Reply
      • ரு நடிகர் மீது எனக்கு இருக்கும் எண்ணம் அவரது படங்களைப் பார்க்கையில் என் கருத்தை பாதிக்காது. ரங் தே பஸந்தி, இதுவரை எனக்கு மிகப்பிடித்த ஹிந்திப் படங்களில் ஒன்று. இதுதான் கமலுக்கும். நீங்கள் உபயோகித்திருக்கும் Prejudice என்ற வார்த்தை தவறு. அப்படியென்றால் என் கருத்து பையாஸ்ட் என்று நீங்கள் நினைப்பதாக அர்த்தமாகிறது. அங்குதான் பிரச்னை.   ஒரு நடிகர் எனக்குப் பிடிக்காதவராக இருந்தாலும் அவரது படம் பார்க்கும்போது அது என்னைப் பாதித்ததில்லை. ஆனால் ஒரு மொண்ணைப் படத்தைத் தயாரித்து நடித்து, அமீர் நடித்திருப்பதாலேயே அது தரமான படம் என்ற மாயையை உருவாக்கியிருக்கிறாரல்லவா? அது டுபாக்கூர். அதனால்தான் ஷா ருக் இதை செய்வதில்லை என்றேன். தலாஷ் ஒரு சாதாரண மசாலாதான் என்பதே என் கருத்து. மொண்ணை க்ளைமேக்ஸை ஈடுசெய்ய ஒரு மொக்கை ப்ளாட். இதை விளக்கியும் இருக்கிறேன்.   எனவே, என்னை முதலில் புரிந்துகொள்ளுங்கள். இடுப்புக்குக் கீழ் தாக்க முயலுவதற்குமுன். உங்களுக்கு இப்படம் பிடித்திருக்கலாம் ஆனால் அதற்காக படம் பிடிக்கவில்லை என்று எழுதுபவர்களை அவர்களின் பாயிண்ட் தவறு என்று நிரூபித்து எதிர்கொள்வதற்குப் பதில் திடீரென்று இதுவரை சொல்லாத இதுபோன்ற வாதங்களை உருவாக்கி தாக்கத் தேவையில்லை. நான் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டீர்களா?   கமலுக்கும் இதேதான். அவரது படங்களைப் பார்க்க, அவர் ஒரு போலி என்ற என் கருத்து குறுக்கே வராது. ஆனால் மொக்கைப் படத்தை அவர் எடுத்து வைத்தால் அவரது ஜிங்சக்குகளைப் போல் ஜால்ரா மட்டும் அடிக்க மாட்டேன். உள்ளதை எழுதுவேன். மிஷ்கின் கட்டுரையில் ஆரம்பத்தில் நான் கொடுத்தது மிஷ்கினே சொன்னது. என் இடைச்செருகல் அதில் ஏதுமில்லை. அந்தப்படத்தை உயிர்மையில் பாராட்டினால் என்ன? இது உயிர்மை அல்ல. இங்கு அனாவசிய அடிசருடுதல் எதுவும் இல்லை. முகமூடி ஒரு ஜோக் . ஆகவே அதை அப்படியே எழுதினேன்.இ நாளை ஒருவேளை விஸ்வரூபம் நன்றாக இருந்தால் அதை நன்றாக இருக்கிறது என்று எழுத எனக்குத் தடையில்லை. மறுபடியும் என்னை கோர்ஸ் படிக்கச் சொல்வதற்குப் பதில் நான்  ்சொல்லியிருப்பதை ஒருமுறை யோசிக்கலாமே? நன்றி.   @நிர்வாணா -முடிந்தால் படத்தைப்பற்றிப் பேசுங்கள். அதைவிட்டுவிட்டு பதட்டத்தில் உளறாதீர்கள் :). ராஜாராம் அவரது கருத்தைத் தெளிவாக எழுதியிருக்கிறார். ஆனால் நீங்கள் வாந்தியெடுத்து வைத்திருக்கிறீர்கள்.

        Reply
        • Nirvana

          @ karundhel: It is you who has vomited or in your case you must have swallowed it back and still trying to defend yourself.
          Infact I have’nt watched the movie yet and I am not a fan of Aamir either. I am dissapointed you revealed the climax. You have reviewed Aamir more than the movie , ask your friends to read the first few paragraphs. Has Aamir ever told you personally he will be doing art films only? No one is stopping your opinions but please stop thinking for everyone .

          Reply
          • The climax was revealed as a part of the discussion here in the comment section. Not in the post. I have clearly written in the post about my views of aamir. In my own blog I have every right to post my views dude. And aamir is building up an intellectual image all over the film fraternity whereas the truth is that he is not. I write about that.

            Since you started blabbering nonsense which is absolutely out of context – writing gibberish comparing me to Hitler- I still say you have puked here through your mouse and your arse :). No body is asking you to read my blog. So with all due respect- just get the heck out from my blog 🙂

    • Sarahvathy

      திரு. திருவிற்கும் நம்ம கருந்தேளுக்கும் நடந்த விவாதத்தை படித்தேன். its interesting! ஒஸ்தி படத்துல ஒரு dialog வரும்.

      ” நீ நினைக்கிற மாதிரி நானும் இல்ல

      நான் நினைக்கிற மாதிரி நீயும் இல்ல.

      அது தான் மனுஷங்க பண்ற தப்பே.”

      கருந்தேளின் கடைசி விவாதத்தில் ,

      //நண்பரே..இது ஒரு விவாதம். உங்கள் கருத்தை நீங்கள் சொன்னபின்பு அவற்றுக்கு என் பதிலைக் கொடுத்திருக்கிறேன். பதிலுக்கு நீங்கள் நான் தூங்குபவன் போல் நடிக்கிறேன் என்று ஒரே தாக்காக தாக்குகிறீர்கள். நல்லது. என்னைத் தகுதிப்படுத்திக்கொள்ளாமல் ஒரு வரி கூட நான் இங்கு எழுத ஆரம்பிக்கவில்லை. என்னை நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். உங்கள் கருத்துக்கு ஒப்புக்கொண்டுதான் நான் எழுதவேண்டும் என்று நினைக்காமல், நான் இங்கு சொல்லியுள்ளவற்றையும் ஒருமுறை கவனத்தில் கொண்டு யோசியுங்கள். அவ்வளவே. என்னை நல்வழிப்படுத்தும் காலம் உங்களையும் நல்வழிப்படுத்தட்டும் . நன்றி. //

      என்பது அவர் கூற்று.

      அப்பா கூட அவர விடாம,

      //Pune Film Institute-ல ‘Film Appreciation Course’ …படிச்சுட்டு சினிமா விமர்சனம் பண்ணுங்க. Your perspective on cinema will change…!!! //

      இது திரு. திரு அவர்களின் கூற்று.

      என்ன கொடும கருந்தேள் இது!

      இதற்கெனவே “தி அப்படக்கர் திரை கலைங்ஞர்களின் மனநிலை” பற்றி பதிவு எழுதலாம் என்று நினைக்கிறன்.

      Reply
  21. Nirvana

    Well you just proved yourself again, you indeed behave like a dictator cos it is your own blog. With due respect I am bowing out sir . Before I leave a humble request .Why don’t you just make your website private so it will be free from people like me who puke in it and write gibberish ,also we won’t be able to see these nonsense write-ups . Mouse /arse what a rhyming sense you got.

    Reply
    • Again – let me reiterate my stance. If the comments are open and frank in my blog – I will post my reply. Else if d comments are like what you initially posted – my reply too would be accordingly. If you have any problem in my post, you can mention it but if you start passing your judgements like what you did in your initial comment – I would never care to listen. Hope I have made my stance clear here. It was you who started bashing me with your biased judgements saying i will not listen and all blah blah. Hope at least now u hv understood what it means.

      Reply
  22. ஐயா….நான் முதலில் இருந்தே கேட்கும் கேள்வி இது தான்.

    //சினிமா எனற ஒரு கலையை விமர்சனம் செய்வதற்கு அடிப்படை தேவைகள் என்ன? ஒரு சினிமாவை எப்படி பார்க்க வேண்டும்? எப்படி எழுத் வேண்டும் ? என்ற வரைமுறைகளை தெரிந்து….புரிந்து அவைகளை உங்கள் விமர்சனத்தில் சரியாக கையாளுகிறீர்களா? இல்லையா? //

    இதற்கு நீங்கள் ‘yes or No’ என்று ஒரே வரியில் சொல்லி விட்டு போகாமல்….வள..வளன்னு ‘சமுத்திரகனி’ படத்தில வர மாதிரி எதுக்கு இவ்வளவு ‘வியாக்கியானம்’. இதிலிருந்தே உங்களுக்கு உங்களைப் பற்றி தெரியவில்லையா..நண்பரே?

    தைரியசாலி…சொல்லுங்க. ‘yes or No’ என்று…அதை விட்டு விட்டு எதுக்கு வீண் பேச்சு?

    I strongly believe in ‘Self Declaration’ . உலகத்தின் எந்த மூலையில் இருக்கும் நாட்டின் எந்த நீதி மன்றத்திலும் ‘Self Declaration’ தான் மரபு.

    நீங்க ‘yes or No’ என்று சொல்லி பாருங்க….அதுக்கு அப்புறம் தெரியும் ‘Alter Ego’ பத்தி. So just simply answer my question…That’s all.

    பிகு : எனக்கு இந்த ‘அப்படக்கர், மொக்கை’….என்ற மாதிரியான் அன்னிய மொழி தெரியாது….தமிழ் மட்டும் தான் தெரியும். அது மட்டுமில்லாமல்…அந்த மாதிரி பேசுபவர்களை கண்டால் ‘அலர்ஜி’ வேறு. அதனால….Sarahvathy மாதிரியான ‘கிரவுட’ எங்கிட்ட அண்டவிடாதீங்க. அப்புறம் கொஞ்சம் ‘ஏடாகூடாம’ ஆயிறும். கொஞ்சம் சொல்லி வையுங்க.

    Reply
    • என்னோட பதில் -யெஸ் என்பதே. எப்படி சினிமாவை அனலைஸ் பண்ணணும்னு தெரியாம, வெறும் ஹிட்ஸுக்காக போஸ்ட் போடும் ஆள் நான் அல்ல. எனக்குப் பிடித்த திரைப்படங்களை அலசுவதற்காக ஆரம்பித்த ப்லாக்தான் இது. இன்றுவரை அதைத்தான் செய்துகொண்டும் இருக்கிறேன். நான் வளவளவென்று பேசுவது ஏன் தெரியுமா? கொஞ்சம் இதுகாறும் நீங்கள் இங்கு அடித்திருக்கும் பின்னூட்டங்களை கவனியும். என் பதில்கள் வளவள என்றால் அப்படி எழுதத்தூண்டிய உங்கள் கேள்விகள்?

      அண்ட். . ரெட்ரோஸ்பெக்டிவ்- நான் செய்துகொள்வதுமுண்டு. ஸோ என்னளவில் நான் தயாராகவே இருக்கிறேன். உங்களுக்குப் புடிக்காத மாதிரி எழுதினா நான் வில்லனா? நீங்க ஏன் உங்களை அனலைஸ் பண்ணக்கூடாது?

      படத்தைப் பற்றிப் பேசுவதை நிறுத்திவிட்டு இப்போது நீங்கள் பெர்சனலாக பேச ஆரம்பித்திருக்கிறீர்கள். இருந்தாலும் இன்னும் பேச நான் தயார். உங்களுக்கு என் மீது இருக்கும் மிஸ்கான்செப்ஷனை அழிக்க.

      Reply
      • இன்னொண்ணு. நீங்க என்னைக் கேள்விகேட்கலாம். ஆனால் உங்களை இன்னொருவர் கேட்கக்கூடாதா? நல்ல லாஜிக்

        Reply
  23. rippo

    அமீர்கான் எப்படி இருந்தாரு, எப்படி மாறிட்டாரு, மக்கள் மனதில் காட்டப்படும் அவருடைய பிம்பம் எத்தகையது என்பதைப் பற்றிய உங்கள் பார்வையையெல்லாம் தனியா அமீர்கான் பத்தி ஏதாவது ஒரு பதிவில் போட்டிருக்கலாமே..
    Talaash விமர்சனத்துல அமீர்கானைப் பத்தி சொல்லத்தொடங்க விமர்சனம் முழுக்க உங்களுக்கு அமீர் மீதான வெறுப்பு இருப்பதாகவே எண்ணத் தோண்றுகிறது!

    Reply
  24. M H Mohideen

    கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளமுடியாத விமர்சனம், ஆரம்பத்திலிருந்தே இந்த படத்தை பற்றி மொக்கையாக எழுத வேண்டும் என்ற தங்களின் எண்ணம் வெளிப்படையாக தெரிகிறது. நிறைய இடங்களில் காட்சியமைப்பும், அருமையான வசனங்களும் கையாளப்பட்டுள்ளன.
    இது ஒரு அருமையான thriller. அனுமாஷ்யங்கள் உள்ளன என்பதை பார்த்தால் தெரியாது, அனுபவ பூர்வமாக உணர்ந்தால் புரியும். அந்த வகையில் எங்கும் logic மீறப்படவில்லை. ரசிகனின் தலையில் பல்பு ஏறிய வைக்கும் இரண்டாவது கார் accident சீன் படத்தின் முதுகெலும்பாக அமைந்துள்ளது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

    Reply
  25. Boo

    Padam parthu bore adichi pathiyilayae yezhundhu vandhirukiraen. Review pathi padichitu paathiyilae niruthiyathu first ippa than. aavv!!! Kottaavi.

    Reply
  26. Boo

    இந்த Review எழுதினவருக்கு சுயவிமர்சனம் செய்து கொல்லும் பழக்கம் இல்லை போலிருகிறது. சொல்ல வந்தததை விட்டு விட்டு வழ வழ என்று . மகா மொக்க விமர்சனம்.

    Reply
  27. Muthu K

    Rightly said, i felt the same and stop reading it. better he can sale old goods

    Reply
  28. துவைத்து காய போட்டுடிங்க பாஸ்…வாழ்துக்கள் 🙂

    Reply
  29. Inian

    நான் அமீரின் மிகப்பெரிய ரசிகன். அதற்காக வெட்கப்படவும் இல்லை. தலாஷ் படத்தை பற்றி விமர்சனம் என்று ஆர்வமாக படித்தேன். ஆனால் எனக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏனெனில் படத்தை பற்றிய விமர்சனத்தை விட அமீரை பற்றிய விமர்சனம் தான் அதிகமாக தெரிகிறது. அமீர் கான் நல்ல நடிகர் மட்டும் அல்ல நல்ல சினிமாவை தர வேண்டும் என்பதில் ஆர்வமாக இருப்பவரும் கூட (அதில் எத்தனை சதவீதம் வெற்றி பெற்றது என்பது வேறு விசயம்) . நல்ல சினிமாவில் இருக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருக்கும். சின்ன பட்ஜெட் பெரிய பட்ஜெட் பெரிய டைரக்டர் என்று பார்ப்பது கிடையாது. உதாரணம் டோபிகாட், பீப்லிலைவ்(தயாரிப்பு). ரங்தேபஸந்தியில் ஹீரோயிஸத்திற்கு முக்கியம் இல்லை என்றாலும் அதில் நடித்திருக்கிறார். 1947எர்த் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்தது இமேஜ் பற்றியும் கவலைப்படாமல் நடித்தவர். தாரே ஜமீன் பர் சமூக அக்கரை உள்ள படம். 3இடியட்ஸ் ஜனரஞ்சகம் என்பதை தாண்டி கல்வி கற்ப்பித்தல் பற்றி எல்லோரையும் மறு ஆய்வு செய்ய தூண்டியது. தலாஷ் படம் என்னைப் பொருத்தவரை ஓகே. பட் இந்த படத்திற்கு அமீர்கான் தேவையில்லை என்பது தான் எனது அபிப்பிராயம். நீங்கள் சொல்வதைப் போலதான் அவர் ஹிந்தி கமலஹாசனாகதான் அவரை பார்க்கின்றேன். ஏனென்றால் நான் அவரை ரொம்ப நாளாக ஃபாலோ பண்ணிக்கொண்டிருக்கிறேன்.

    Reply
  30. Infact I read this “Talassh” review months ago – then i ignored this movie in many occasions.
    Recently ( just last Saturday ) watched this movie.

    In my opinion , this movie is worth watching.

    Reply
    • Rajesh Da Scorp

      That’s okay boss. Although I didn’t like it, a few of the others could like it. It’s all a matter of our individual tastes, isn’t it? Good to see your comment, after reading the post before a long time.

      Reply
      • True !!

        Naturally i did pick-up lot of good stuff from your writing and watched several movies to my taste.
        Whether I liked it or not , your write-ups shows your passionate towards movies & reviews , I respect that.

        Of course – Your review matters to me ! Keep going !

        Reply

Join the conversation