The Orphanage (2007) – Spanish

by Karundhel Rajesh August 20, 2012   world cinema

ஹாரர் படங்கள் என்பது ஒரு தனி வகை. இவற்றில் எடுத்தவுடன் கைகால்களை வெட்டுவது, கைமா செய்வது போன்ற படங்கள் மிக அதிகம். அதேபோல், அவற்றுக்கு நேர் எதிராக, அழகான, கலைநயமிக்க ஹாரர் படங்களும் உள என்று அறிக. அத்தகைய ஒரு அழகிய ஹாரர் (???!!) படத்தைத்தான் இப்போது பார்க்கப்போகிறோம்.ஹாரர் படங்களின் ஒரு வகையான பேய்ப்படங்களின் தேவையில்லாத பயமுறுத்தும் ஷாட்கள் இல்லாமல் (கதாபாத்திரத்தின் பின்னாலிருந்து திடீரென்று கோரமான முகம் ஒன்று எட்டிப்பார்ப்பது, கதாபாத்திரம் ஸ்க்ரீனிலிருந்து நகர்ந்தபின் அதன் பின்னால் தலைவிரிகோலமாக ஒரு பெண் வெள்ளை உடையில் நின்றுகொண்டு சாய்வாக முறைப்பது இத்யாதி) சுவாரஸ்யமாகக் கதையைக் கொண்டுசெல்லும் அதே சமயத்தில் அவ்வப்போது நம்மை பயமுறுத்தும் படமாகவும் இது இருக்கிறது.

படத்தின் நாயகியின் பெயர் லாரா. ஒரு அனாதை. தனது ஐந்து நண்பர்களுடன் சிறுவயதில் ஸ்பெய்னின் ஒரு விடுதியில் வளர்பவள். அச்சமயத்தில் அவளை ஒரு தம்பதியினர் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பிக்கின்றனர்.

இதன்பின் பல வருடங்கள் ஓடுகின்றன. தற்சமயம் கிட்டத்தட்ட நாற்பது வயது லாரா, அதே விடுதிக்கு வருகிறாள். அவளது மகனின் பெயர் சிமோன். தனது பழைய வேர்களை மறவாத லாரா, சிமோனை தத்தெடுத்திருக்கிறாள். அவனுக்கு ஏழு வயது. இவர்களுடன் லாராவின் கணவன் கார்லோஸ். தான் சிறுவயதில் இருந்த விடுதியை வாங்கி, புதுப்பித்து, மறுபடியும் ஒரு காப்பகம் நடத்துவது அவளது விருப்பம். அதற்கேற்றவாறு அந்த விடுதி புதுப்பொலிவு பெறுகிறது. மிக விரைவில் சில குழந்தைகள் வர இருக்கின்றன. எல்லாமே சந்தோஷமாக நடக்கிறது.

ஆனால். . . சிமோன் அவ்வப்போது அவனது நண்பர்கள் பற்றி லாராவிடமும் கார்லோஸிடமும் சொல்வது லாராவுக்கு மனக்கிலேசத்தை ஏற்படுத்துகிறது. என்ன காரணம் என்றால், சிமோனின் சிறுவயது நண்பர்கள், லாராவுக்கோ கார்லோஸுக்கோ தெரிவதில்லை. அவன் வேண்டுமென்றே தனது தனிமையை மறைக்க இப்படிக் கதை சொல்கிறான் என்பது இவர்களின் முடிவு. ஆனால் சிமோன் இவர்களிடம் நிஜமாகவே இரண்டு சிறுவர்கள் இவனிடம் அவ்வப்போது வந்து விளையாடுவதாக சொல்லிக்கொண்டே இருக்கிறான்.

ஒரு நாள். லாராவின் கதவு தட்டப்படுகிறது. வெளியே ஒரு எழுபது வயது பாட்டி. அவளது கையில் ஒரு ஃபைல். அதில் சிமோனுக்கு இருப்பது HIV+ என்ற விபரங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. இந்த விஷயத்தை இதுவரை ஜாக்கிரதையாக யாருக்கும் தெரியாமல் பாதுகாத்து வந்த லாரா குழப்பம் அடைகிறாள். சிமோனுக்கு இது தெரியாது என்றும், இந்த விஷயத்தை தானே பார்த்துக்கொள்வதாகவும் சொல்லிவிட்டு அந்தப் பாட்டியை வெளியே அனுப்பி, அந்த ஃபைலை ஒரு இடத்தில் வைத்துப் பூட்டிவிடுகிறாள் லாரா.

அப்போதுதான் சிமோனுக்கு ஒரு புதிய சிறுவன் நண்பனாகக் கிடைக்கிறான். அவன் எப்போது பார்த்தாலும் ஒரு விசித்திரமான முகமூடி போட்டிருப்பதை சிமோன் லாராவிடம் சொல்கிறான். வழக்கப்படி அது பொய் என்று நினைத்து லாரா விட்டுவிடுகிறாள். அப்போது அவளிடம் வரும் சிமோன், ஒரு புதிய விளையாட்டை அவனது நண்பர்கள் அவனுக்குக் கற்றுக்கொடுத்திருப்பதைச் சொல்லி, லாராவையும் விளையாட அழைக்கிறான். அது – புதையல் வேட்டை. ஒவ்வொரு க்ளூவும் அடுத்த க்ளூவுக்கு இட்டுச்செல்லும். கடைசியில் தேவைப்பட்ட பொருள் கிடைக்கும். இந்த ரீதியில் ஒவ்வொரு க்ளூவாக கண்டுபிடித்துக்கொண்டே செல்லும் லாரா, இறுதியில் HIV+ ஃபைல் இருக்கும் இடத்துக்கு வர, அந்த ஃபைலுக்குக் கீழே இருக்கும் சில நாணயங்களே தாங்கள் தேடவேண்டிய பொருள் என்று சிமோன் சொல்லி ஆர்ப்பரிக்கிறான். ஆனால் அந்த ஃபைல் வெளியே வந்துவிட்டதால் அவனைத் திட்டி அனுப்பிவிடுகிறாள் லாரா.

புதிய சிறுவர்கள் விடுதிக்கு வரும் நாள். அங்கே, முகமூடி அணிந்த தனது நண்பனின் இடத்துக்கு வரச்சொல்லி லாராவிடம் அடம்பிடிக்கிறான் சிமோன். அந்த இடத்தைக் காட்டுவதாக அழும் அவனை அடிக்கிறாள் லாரா. சிமோன் எங்கோ சென்று மறைந்துகொள்கிறான். அவனைத் தேட ஆரம்பிக்கிறாள் லாரா. அப்போது அந்தப் பார்ட்டியில் வந்திருக்கும் குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் வித்தியாசமாக இருப்பதை உணர்கிறாள். அந்தக் குழந்தையை நெருங்கும் லாராவுக்கு பேரதிர்ச்சி காத்திருக்கிறது..

லாராவால் சிமோனை கண்டுபிடிக்க முடிந்ததா? அந்தக் குழந்தையின் பின்னிருக்கும் பேரதிர்ச்சி என்ன?

இதுவரை நான் சொன்ன கதை, படத்தின் ஆரம்ப அரை மணி நேரம் மட்டுமே. படத்தின் கதையே அதன்பின்னர்தான் இருக்கிறது.

இந்தப் படத்தை ஹோம் தியேட்டரில் நல்ல எஃபக்டில் இருளில் இரவு 1 மணிக்குப் பார்க்க ஆரம்பித்தேன். என்னைப்பொறுத்தவரை சில இடங்களில் என்னை பயமுறுத்திய படம் இது. திரைக்கதை வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர் – கில்லர்மோ டெல் டோரோ.

எனக்கு டெம்ப்ளேட் வகையைச் சேர்ந்த பேய்ப்படங்கள் பிடிக்காது. ஒரு பேய்ப்படத்தில் எடுத்த எடுப்பில் பேயைக் காண்பிப்பது, அதன்பின் ஒவ்வொரு பதினைந்தாவது நிமிடத்திலும் அந்தப் பேய் அங்கங்கே வருவது, ஜன்னல்கள் அடித்துக்கொள்வது, விளக்குகள் அணைவது, நாய் ஊளையிடுவது போன்ற காட்சிகள் வந்தவுடன் டிவியை அணைத்துவிடுவேன். ஆனால் அப்படிப்பட்ட காட்சிகள் எதுவும் இப்படத்தில் இல்லை. திரைக்கதையே ஆங்காங்கே நம்மைப் பயமுறுத்தும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. படத்தில் அழுத்தமான ஒரு கதையும் உண்டு.

இதோ The Orphanage படத்தின் ட்ரெய்லர்.

மேலே சொன்ன அத்தனை டெம்ப்ளேட்களுடனும் கூடிய மற்றொரு பேய்ப்படத்தை இரண்டு நாட்களுக்கு முன்னர் பார்த்தேன். The Woman in Black. ஹாரி பாட்டர் டேனியல் ராட்க்ளிஃப் நடித்தது. இந்தப் படத்தையும் இரவு பனிரண்டுக்கு மேல்தான் பார்க்க ஆரம்பித்தேன். இந்தப் பட டிவிடியை லேப்டாப்பில் ஹெட்ஃபோன்களோடு பார்த்ததால், ஒலியமைப்பு சில இடங்களில் பயமுறுத்தியது. கதை வெகு சாதாரணமானதுதான். ஆனால், இந்தப் படத்தை நான் நிறுத்தாமல் பார்த்ததற்குக் காரணம், நிறுத்தவேண்டும் என்று நான் நினைத்தபோது டக்கென்று ஒரு பயமுறுத்தும் காட்சி வந்ததே. ஆனால், ஓவரால், இந்தப் படம் சராசரிதான்.

  Comments

15 Comments

  1. karundhel,vittala nan mattum tha irukira.nallaiku than padikanum.konja tarila iruku.

    Reply
  2. நல்ல விமர்சனம்.சினிமா பார்ப்பது போல இருந்தது

    நன்றி,
    ஜோசப்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    Reply
  3. நல்ல விமர்சனம். படம் சென்னையில் எங்கு கிடைக்கிறது என டிப்ஸ் தந்தால் மகிழ்வேன். நல்ல பேய் படம் பார்த்து, பயந்து பல வருசம் ஆயிடுச்சிடுங்க! 🙂

    Reply
  4. Dear Karundhel

    I am a regular reader & follower of your blog. I am a little dissapointed that many bloggers have chosen to ignore the fact that “Billa 2” is a copy of English movie “Scarface”. I assume you must have watched Scarface and not Billa “.

    Regards

    Nirvana

    Reply
  5. என்னிக்கு இந்த கமெண்ட் பாக்ஸ் எழவை டிஸேபிள் பண்ணுறீங்களோ.. அன்னிக்குத்தான் இனிமே நான் கமெண்ட் போடுவேன்

    Reply
  6. ஆனா இந்த படத்தோட கிளைமாக்ஸ் ரொம்ப பாவாமா இருக்கும், நானும் ஒரு நாள் நைட்தான் பார்த்தேன், கிளைமாக்ஸ்ச ஜீரணிக்கவே முடியல என்னால…,

    Reply
  7. யூ டியூப்பில் தேடி பார்த்தேன். நல்லபடம்.

    Reply
  8. dear karundhel
    very good movie and nice screenplay by the director (orphanage). probably when i first saw the movie( a year back and recently 2nd time) i was shocked at the scene where the rigor mortis of the old lady’s hand holding laura. (accident scene) very good shock to enjoy. hope you would have also enjoyed that.
    the first shot ( 1,2,3 freeze –iceboy style game) itself directly absorbs you (nostalgic) into the film and the first shot itself tells you that this is a hide and seek game like movie. the classiness of the movie starts rightaway from that shot i think and it carries as a different genre horror flick till the end (with flying colours). ithu vaeru vagai ena muthalileye therinthuvidum oru paanai sottrukku oru soru patham. padam neduga niraya kuriyeedugal moolam viewersukku subtle aga padam pattri sollapattirukkum. ithu pondra padangalai vaithu neengal “thiraikkathai ezthuvathu ippadi” series moolam film appreciation patri vasagargalukku solli kodukkalam. unwanted time passing useless commentsai vida ithu pondru rasanaiyai valarkkum padangalai patri detailingudan ezthungal. rasanaigal maarinal kuppaigal kaanamal poi vidum.
    overall a well crafted horror film. instead of a horror feel i got the satsifaction of watching a good movie.
    believe what you are seeing ??— i forgot the theme dialogue which carries the entire message of the film and nicely utilised at the last shot making the viewer to realise what was told. subtle finish. thanks.
    anbudan sundar g rasanai chennai

    Reply
  9. படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிற விமர்சனம்…

    Reply
  10. karundhel,nalla vimarsanam.vimarsana padikumpothey charcters ellam gun munnai nizhaladina.enakku konjam nostalgia feel vanthathu.thanks.

    Reply
  11. sekar ranjith- ஹா ஹா .. அப்படி தனியா இருக்கும்போதுதான் இந்தப்படத்தைப் பார்க்கணும் பாஸ் 🙂

    @ Easy – சினிமா பிடித்ததால்தான் அதைப் பார்ப்பது போல இருக்கிறது 🙂

    @ குமரன் – எனக்கு இது சென்னையில் எங்கு கிடைக்கிறது என்று நிஜமாகவே தெரியாது நண்பரே . ஆனால் இது ஒரு நல்ல ஹாரர் படம் என்றுமட்டும் சொல்லமுடியும்

    @ nirvana – பில்லா 2 பற்றி ஆல்ரெடி Facebookகில் பகிர்ந்திருக்கிறேன். அது காப்பி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் Scarface பார்த்தாயிற்று 🙂 .. மிக்க நன்றி

    @ A D Vishnu prasath – விரைவில் நண்பரே. நேரம் கிடைக்கட்டும்.

    @ மியாவ் மியாவ் மியாவ் – உங்களுக்கு FB ல பதில் சொல்லிருக்கேன் 🙂 .. கமென்ட் பாக்சை தூக்கலாம்னு நினைக்கும்போது நம்ம ரசனை சுந்தர் கமென்ட் போட்டு அந்த எண்ணத்தை மறக்கடிச்சிட்டாறு…. 🙂

    @ கியானு – உண்மைதான். க்ளைமாக்ஸ் பாவமாத்தான் இருந்தது. அதை படம்பூரா கரெக்டா கோ ஆர்டினேட் பண்ணி கொண்டுவந்திருக்காங்க. அது எனக்குப் புடிச்சது

    @ ரசனை சுந்தர் – அட்டகாசமான கமெண்டுக்கு நன்றி. ரிகர் மார்ட்டிஸ் – நான் அதிர்ந்த காட்சிகளில் ஒன்று. நீங்க சொன்ன மாதிரி, இது ஹாரர் என்பதைவிட, நல்ல தரமான படம் என்றே இறுதியில் நமது நினைவில் நிற்கும் படம். திரைக்கதை தொடரில் இதுபோன்ற படங்களை கொடுக்கலாம். ஆனால் பல நண்பர்கள் இப்படங்களை பார்த்திருக்கும் வாய்ப்புகள் கம்மி. அதனால் இப்படங்கள் உதாரணங்களாக நினைவில் நிற்காது என்றே நினைக்கிறேன். இருந்தாலும் எப்போதாவது தகுந்த இடங்களில் இந்தப் படங்களை refer செய்ய முயல்கிறேன் நண்பரே.. மிக்க நன்றி

    @ DR – 🙂 டெம்ப்ளேட் டெம்ப்ளேட் 🙂

    Reply
  12. படத்தின் பெயர். El Orfanato ஸ்பானிஷில்! The Orphanage ஆங்கிலத்தில் தமிழில் அநாதை இல்லம் என்று தான் மொழிபெயர்த்திருக்கவேண்டும். படத்தின் இறுதியில் தன் குழந்தை சிமோன் மீதான ஆழமான அன்பில் எடுக்கும் இறுதி முடிவு ‘அநாதை இல்லம்’ என எழுதவிடாமல் தடுத்து, ‘ஆதரவு இல்லம்’ என எழுதவைத்தது.

    Reply
  13. prakash

    sir logic ha oru horror film the way of screenplay awesome in climax (the door is opening lara is welcoming his husband )
    super scene sir

    Reply

Join the conversation