There is Something about Mary (1998) – English
இவ்வளவு நாள், படு சீரியஸான படங்களையே பார்த்து வந்தோம். ஒரு மாறுதலுக்கு, மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு (நேக்கட் கன் சீரீஸ் பதிவுக்குப் பிறகு), ஒரு நகைச்சுவைப் படம்.
எனது கல்லூரி நாட்களில் பார்த்த படம் (ஸ்டார் மூவீஸ் என்று நினைக்கிறேன்). அந்தச் சமயத்திலேயே என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்த படம் இது. காமெடி கிங் பென் ஸ்டில்லர் மற்றும் மேட் டில்லன் கூட்டணி, நமது வயிற்றைக் கன்னாபின்னாவென்று பதம் பார்க்கிறது. காமெடி மட்டுமல்லாமல், சற்றே நெளியவைக்கும் ’Gross’ ரகக் காட்சிகளும் படத்தில் தாராளம். இம்மாதிரி காமெடிப் படங்களுக்குப் பெயர் போன ஃபேரலி ப்ரதர்ஸ் ஜோடி(Dumb and Dumber, Me Myself and Irene, Shallow Hal, Struck on you, The Heart Break Kid) தான் இயக்கம்.
நம்மில் எத்தனை பேருக்குப் பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும்போது, காதல் வந்தது? கண்டிப்பாக நாம் எல்லோருக்கும் அது பொருந்தும். பள்ளிக் காதலைத் துரத்தும் ஒரு அப்பாவியின் கதையே இப்படம்.
டெட் என்பவன், பள்ளியில் படித்துவரும் ஒரு மாங்கு (மாங்கு = தத்தி = அம்மாஞ்சி = Nerd = Total Loser என்று அறிக). வாய் முழுவதும் க்ளிப் போட்டு, பெரிய பற்களுடன், கலைந்த தலையோடு வலம் வருபவன். இவனுடன், இவனையொத்த ஒரு தத்தி கும்பல். அவர்கள் வகுப்பில் படிக்கும் ஒரு பேரழகியின் பெயர், மேரி. மேரியின் மீது பள்ளியில் இருக்கும் அனைவருக்கும் கண்டபடி காதல். ஆனால், மேரிக்கு ஒரு பாய்ஃப்ரண்ட் உண்டு. அவனது பெயர், வூகி. மேரிக்கு ஒரு மெண்டலி டிஸேபிள்ட் அண்ணன். பெயர் வாரன்.
ஒருநாள், வாரனை சில பேர் கிண்டல் செய்ய, இயற்கையிலேயே இரக்கம் நிரம்பிய டெட், அவர்களைத் தட்டிக் கேட்கிறான். அவர்கள், டெட்டை, அடி பின்னியெடுத்து விடுகிறார்கள். அப்போது அங்கு வரும் மேரி, கண்டபடி கத்தி அவர்களை விரட்டி விடுகிறாள். மேரிக்கும் டெட்டுக்கும் நட்பு பூக்கிறது.
பள்ளி முடியும் நேரம். ப்ராம் நைட்டுக்கு (பள்ளி முடியும் சமயம் நிகழும் மெகா பார்ட்டி.. ஹூம்ம்.. நம்மூரிலும் நடக்கிறதே.. ஃபேர்வெல் பார்ட்டிகள்.. க்ர்ர்ர்ர்ர்), தன்னுடன் ஜோடியாக வந்து ஆடுமாறு டெட்டை அழைக்கிறாள் மேரி. அவளது பாய்ஃப்ரண்ட் வூகி அவளைத் துன்புறுத்தியதால், அவனை விட்டு விலகிவிடுகிறாள். எனவே, டெட்டின் மனது முழுவதும் ஆசைக்கனவுகள் நிரம்பி வழிய, மேரியின் வீட்டுக்குச் செல்கிறான் டெட்.
அங்கு, மேரியீன் அண்ணன் வாரனோடு ஏற்பட்ட ஒரு சிறிய பிரச்னையால் மேரியின் உடை பாழாகிவிட, உடைமாற்றிக்கொள்ளத் தனது அறைக்குச் சென்றுவிடுகிறாள். அப்போது, நம்ம அப்பாவி டெட், டாய்லெட் செல்ல, ஜன்னலில் வந்து அமரும் இரண்டு வெள்ளைப்புறாக்களைப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டே ’நம்பர் ஒன்’ போகிறான். திடீரென அவை பறந்துவிட, அங்கு தெரிகிறது மேரியின் அறை ஜன்னல். அங்கு, உடைமாற்றிக்கொண்டிருக்கும் மேரி, இவன் இளித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருப்பது கண்டு, அலறுகிறாள். அவசரத்தில் ஜிப்பை இழுக்கும் டெட், அபாயகரமான விபத்தில் (!!!??) சிக்கிக்கொள்கிறான்.
பாத்ரூமில் அலறிக்கொண்டிருக்கும் டெட்டை (கரெக்டாகச் சொல்லப்போனால், டெட்டின் ‘மேற்படி’யை) , மேரியின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் வந்து பார்க்கின்றனர். இது போதாதென்று, ஒரு போலீஸ்காரரும் வந்துவிடுகிறார். அதன் பின், தீயணைப்பு வண்டி வேறு !! அத்தோடு டெட்டுக்கும் மேரிக்கும் உள்ள தொடர்பு அறுந்து போகிறது.
நிகழ்காலம். பதிமூன்று வருடங்களுக்குப் பின். டெட் ஒரு மனநல மருத்துவரின் அறையில், இந்த ஃப்ளாஷ்பேக் முழுவதும் சொல்லிக்கொண்டிருக்கிறான். அவனால் மேரியை மறக்கவே முடிவதில்லை. அங்கிருந்து தனது நண்பன் டாமைத் தேடிச் செல்லும் டெட், அவனிடமும் அத்தனையும் சொல்கிறான். இதைக்கேட்கும் டாம், ஒரு துப்பறிவாளனை ஏற்பாடு செய்து, மேரியைப் பற்றிச் சகல தகவல்களும் அறிந்துகொள்ளச் சொல்லி அட்வைஸ் செய்கிறான்.
பேட் என்பவன் ஒரு துப்பறிவாளன். இவனிடம் வந்து, இந்தக் கேஸைத் துப்பறிந்து தரச்சொல்கிறான் டெட். ஒப்புக்கொள்ளும் பேட், மேரியைக் கண்டுபிடிக்கிறான். அவளது அழகில் வியந்து போய், மேரி பயங்கர குண்டாகி, சக்கர நாற்காலியில் அவளது வாழ்க்கையைக் கழிக்கிறாள் என்றும், அவளுக்கு இரண்டு குழந்தைகள் என்றும், இனிமேல் தான் கல்யாணமே ஆக வேண்டும் என்றும், அவள் ஒரு செக்ஸ் வொர்க்கர் வேறு என்றும் அண்டப்புளுகு புளுகி, தனது வேலையையே விட்டுவிட்டு, மியாமியில் இருக்கும் மேரியின் பின்னால் சென்றுவிடுகிறான்.
மனமுடைந்து போகும் டெட், என்ன ஆனாலும் சரி என்று முடிவு செய்து, மேரியைத் தேடும் சமயம், அவனது இன்னொரு நண்பனின் மூலம் அவள் மியாமியில் இருப்பதையும் , பேட்டின் பொய்களையும் அறிந்து, மியாமி கிளம்புகிறான். கூடவே, அவனது நண்பன் டாம்.
அங்கே, மியாமியில், ஒரு மைக்ரோஃபோன் மூலம் மேரியின் அறையில் நடக்கும் அத்தனையும் ஒட்டுக்கேட்டுத் தெரிந்துகொள்ளும் பேட், அவளது அத்தனை விருப்பங்களுக்கும் ஏற்றவாறு அவளைடம் பொய் சொல்லி., அவளுக்கு நெருக்கமாகிறான். சரியாக இதே சமயத்தில், பல இன்னல்களை அனுபவித்து, மியாமி வந்து சேரும் டெட், இதனைக் கண்டு அதிர்ந்து, மேரியைச் சந்தித்துப் பேசி, அவளுக்கு நெருக்கமாகிறான்.
இந்தக் குழப்பங்கள் போதாதென்று, எப்போதும் மேரியின் கூடவே இருந்து, அவளது அத்தனை பாய்ஃப்ரெண்ட்களையும் அவளிடம் இருந்து பிரிக்கும் வேலையைச் செவ்வனே செய்துகொண்டிருக்கும் டக்கர் (டாக்டர் டக்கர் அல்ல) என்ற ஒரு ஃப்ராடுப்பயல் வேறு.
கடைசியில் என்ன ஆனது? டெட்டின் காதல் வென்றதா? விழுந்து புரண்டு சிரிக்கவைக்கும் இப்படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
பென் ஸ்டில்லர் தான் டெட். படு அப்பாவித்தனமான நடிப்பு. ஆரம்பம் முதல் இறுதிவரை, இவருக்கு நேரும் சோதனைகள் ஏராளம். இவரின் முகத்தைப் பார்த்தாலே நமக்குச் ‘சிப்பு’ வந்துவிடுகிறது.
ஃப்ராடு டிடக்டிவ் பேட்டாக, மாட் டில்லன். மேரியைக் கவிழ்க்க இவர் போடும் ஒவ்வொரு ப்ளானும், டக்கரினால் தவிடு பொடி ஆவது செம காமெடி ?
படத்தின் அல்டிமேட் காமெடி, மேரியின் நாயும், மேரியின் கூடவே வசிக்கும் கிழவியும் தான் ? இவர்கள் இருவரும் வரும் காட்சிகளை கவனித்துப் பாருங்கள்.
மொத்தத்தில், விலா நோகவைக்கும் காமெடி இது. ஆனால், அதிலேயே ஒரு நல்ல காதலும் உண்டு.
பி.கு 1: இப்படத்தின் டிவிடியில், மேரியின் தோழிக் கிழவிக்கு எப்படி மேக்கப் போடுகிறார்கள் என்பதைக் காண்பிக்கிறார்கள். அலட்டலே இல்லாமல், ஒரு நடிகை, பலமணி நேரம் பொறுமையாக அமர்ந்து, மேக்கப் போட்டுக்கொள்கிறார். ஆனால் அவர் வருவது மிகச்சில சீன்களில்தான். அவர்களது கேஷுவலான பேட்டியையும், ஜாலியான அப்ரோச்சையும் பார்க்கும்போது, நம்மூரில், மேக்கப் போட்டுக்கொள்கிறேன் பேர்வழி என்று, லயன் காமிக்ஸில் வரும் கறுப்புக்கிழவி ரேஞ்சில் மேக்கப் போட்டு, நம்மைப் பயமுறுத்தும் சில ‘ஒலக நடிகர்களின்’ அலட்டல் நினைவு வந்து தொலைத்தது ?
பி.கு 2: தமிழில், இப்படம், ‘பவளக்கொடி’ என்ற பெயரில் வெளிவந்தது, நண்பர்கள் சிலருக்கு நினைவிருக்கலாம்.
பி.கு 3: இப்படம் வெளிவந்த சமயம், குமுதத்தில், இப்படத்தைப் பற்றிய ஒரு சிறப்பு விமர்சனம் இடம்பெற்றிருந்தது. அதில், மேரியின் முடி, ஒரு காட்சியில் குத்திட்டு நிற்பதன் காரணத்தைக் குறிப்பிட இயலாது என்றும், படத்தைப் பார்த்துத்த்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் எழுதியிருந்தனர். அந்த சமயத்தில் அது புதிது.. ஆனால் இப்போது அது ஒரு சாதாரண விஷயமாக ஆகிவிட்டது ?
There is Something about Mary படத்தின் ட்ரைலர் இங்கே
நல்ல விமர்சனம், படம் பார்க்க தூண்டுகிறது
வடை எனக்கே எனக்கா –????
அடச்சே… ஜஸ்ட் மிஸ்யா…. ஒரு தடவையாக வடை வாங்கு வுட்றாய்ஙகளா-????
படத்துல கில்மா இருக்கா இல்லயா??? அதைச்சொல்லு தல… அப்பத்தான் பார்ப்பேன்…
pathuduvom !!!
@ Riyaz – நன்றி பாஸ்.. பயங்கர ஜாலியான படம் இது..;-)
@ நாஞ்சில் – படத்துல கில்மா உண்டு உண்டு உண்டு.. ஆனா நீங்க நினைக்குற மாதிரி இல்ல 😉 பாருங்க .. புரியும் 😉
@ Psycho – ரைட்டு !! 😉
நண்பா,
அருமையான விமர்சனம்,
படம் இன்னும் பாக்கலை,
ஓட்டு போட்டாச்சிப்பா!!!!!
🙂
முன்பே பார்த்திருக்கிறேன். இந்தப் படத்துடன் ஒப்பிடும்பொழுது பவளக்கொடி செம்ம மொக்கையாய் இருக்கும். அதிலும் அந்த நாயை படாத பாடு படுத்தும் காட்சியில் நம்மை பாடுபடுத்தி இருப்பார்.
(பென் ஸ்டில்லரின் ரசிகரா நீங்கள்.. எனக்கு அந்த முகத்தைப் பார்த்தாலே எரிச்சல் மாத்திரமே மிஞ்சுகிறது இப்போது :-))))
முன்பொரு முறை பென் ஸ்டில்லரைப் பற்றி ஹாலி பாலி கமெண்ட் அடித்தது நினைவிற்கு வருகிறது.
@ கார்த்திகேயன் – நன்றி நண்பா… 😉
@ சென்ஷி – ஆஹா.. நானு பழைய பென் ஸ்டில்லரோட ரசிகன்.. இப்போ இருக்குற ஸ்டில்லர் படங்களைப் பார்த்தால், எனக்குமே எரிச்சல் தான் 😉
பாலா அடித்த கமெண்ட் பற்றி சிறுகுறிப்பு வரைக 😉
pakkanum, pathuduvom,….
இது தான் அந்த ரெண்டு வெள்ளைப் புறாவும் ஜொய்ங்குனு பறந்த கதையா..
ஹேய் நான் ஏழாவது பாஸ்..நீங்க எஸ்.எஸ்.எல்.சி பெயிலா.பாஸ் பெருசா பெயில் பெருசா
http://www.hollywoodbala.com/2009/06/night-at-museum-2.html
பென் ஸ்டில்லர் மட்டுமே படமுழுக்க. என்னத்தை சொல்ல…..?! ஆடம் சாண்ட்லருக்கும், பென் ஸ்டில்லருக்கும், நம்ம ஊரு விஜய்க்கும் சில பொருத்தங்கள் உண்டு.
மூவரும்.. தன் நடிப்பு ஸ்டைலை மாற்ற மாட்டார்கள்!!! மேக்கப் ச்சேஞ்ச்? ஊஊஊக்கும்.. (அம்மா கோவிச்சிக்குவாங்களோ)!!! ஒரே மாதிரியான வசன உச்சரிப்புகள்!!! ஒரே வித்தியாசம்… இவர்கள் இருவரும் நடிப்பில் காமெடியை கொண்டு வர அட் லீஸ்ட் முயற்சியாவது செய்யும் போது, அவர் மட்டும்.. நடிப்பையே காமெடி ஆக்குபவர்.
//எனது கல்லூரி நாட்களில் பார்த்த படம் (ஸ்டார் மூவீஸ் என்று நினைக்கிறேன்).//
அதே, அதே, சபாபதே. நாங்களும் அங்கதான் பார்த்தோம். ரொம்ப பில்ட் அப் கொடுத்து திரையிட்டார்கள், இன்னமும் நினைவிருக்கிறது.
//இப்படம் வெளிவந்த சமயம், குமுதத்தில், இப்படத்தைப் பற்றிய ஒரு சிறப்பு விமர்சனம் இடம்பெற்றிருந்தது. அதில், மேரியின் முடி, ஒரு காட்சியில் குத்திட்டு நிற்பதன் காரணத்தைக் குறிப்பிட இயலாது என்றும், படத்தைப் பார்த்துத்த்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் எழுதியிருந்தனர். அந்த சமயத்தில் அது புதிது.. ஆனால் இப்போது அது ஒரு சாதாரண விஷயமாக ஆகிவிட்டது ;//
இந்த மேட்டரை வெண்ணிற ஆடை மூர்த்தி வேறொரு படத்தில் யூஸ் பண்ணிவிட்டார்.
//தமிழில், இப்படம், ‘பவளக்கொடி’ என்ற பெயரில் வெளிவந்தது, நண்பர்கள் சிலருக்கு நினைவிருக்கலாம்.//
Is that so? இந்த கொடுமை வேறா? எப்போ? யார் நடிச்சா?
அட.. நெசமாவே.. சென்ஷ் மறக்கலை!!! 🙂 🙂
—
//Is that so? இந்த கொடுமை வேறா? எப்போ? யார் நடிச்சா //
சன் டிவில.. பார்த்தசாரதி -ன்னு ஒருத்தர் வருவரே (அதான் பேருன்னு நினைக்கிறேன்). அவுரு நடிச்சது.
அந்தப் படத்தை மொத்தம் 21 நாளில் எடுத்தாங்களாம். க்வாலிடியை பார்த்தீங்கன்னா.. 10 நாள்ல எடுத்த மாதிரி இருக்கும். இத்தனைக்கும் ஆங்கிலத்தில் வந்த அத்தனைக் காட்சிகளையும் எடுக்க முடியாதுன்னு தெரிஞ்சும் கையை சுட்டுகிட்டதுதான் மிச்சம்.
கருந்தேள் குமுதத்தில் அதைப் பத்தி எழுதினது கிருஷ்ணா டாவின்ஸி. அந்த கட்டுரை இப்படி முடிஞ்சிருக்கும்.
“ஆபாசமே இல்லாமல் ஆபாசமாக ஒரு படத்தை எடுப்பது எப்படி”
//சன் டிவில.. பார்த்தசாரதி -ன்னு ஒருத்தர் வருவரே (அதான் பேருன்னு நினைக்கிறேன்). அவுரு நடிச்சது.
அந்தப் படத்தை மொத்தம் 21 நாளில் எடுத்தாங்களாம். க்வாலிடியை பார்த்தீங்கன்னா.. 10 நாள்ல எடுத்த மாதிரி இருக்கும். இத்தனைக்கும் ஆங்கிலத்தில் வந்த அத்தனைக் காட்சிகளையும் எடுக்க முடியாதுன்னு தெரிஞ்சும் கையை சுட்டுகிட்டதுதான் மிச்சம்//
ஆமாங்க, அந்த கொடுமை இப்போ ஞாபகம் வருது. நீங்க சொல்ற அவரு தான் சன்டீவியில் “நீங்கள் கேட்ட பாடல்” நிகழ்ச்சியை வழங்குபவர். பின்னர் அந்த லின்க்கை யூஸ் பண்ணி ஜீ தமிழ் டிவியில் ஒரு தலைமைப்பொறுப்பில் உட்கார்ந்தார். அந்த கொடுமையான படத்தை ஞாபகப்படுத்தி விட்டீங்களே?
//குமுதத்தில் அதைப் பத்தி எழுதினது கிருஷ்ணா டாவின்ஸி. அந்த கட்டுரை இப்படி முடிஞ்சிருக்கும்.
“ஆபாசமே இல்லாமல் ஆபாசமாக ஒரு படத்தை எடுப்பது எப்படி”//
பிலிம் நியூஸ் ஆனந்தனின் அடுத்த அமெரிக்க வாரிசு ஹாலிவுட் பாலா வால்க.
கேமரனின் இந்த படத்தை குமுதத்தில் போட்டுட்டு, என்னன்னு சொல்ல முடியாதுன்னு சொன்னப்ப…
மூளையை கசக்கி(!!!) மேட்டரை சரியா கணிச்சனால… அந்த மேட்டர் மட்டும் மனசுல தங்கிடுச்சி!!
===
பென் ஸ்டில்லரை பிடிக்கும் என்ற கருந்தேள் ஒளிக.
@ அனானி – ரைட்டு. . பார்த்துருங்க 😉
@ இரும்புத்திரை – ஹாஹ்ஹா… அதே தான்.. இதுதான் அந்த வெள்ளைப்புறா ஜொய்ங்குன்னு பறந்த கதை 😉
கண்டிப்பா பாஸ் தாண்ணே பெரிசு 😉
@ சென்ஷி – புள்ளி விவரப் புலியா மாறிட்டீங்க போங்க 😉
@ பாலா & விஸ்வா – ரைட்டு 😉
//மூளையை கசக்கி(!!!) மேட்டரை சரியா கணிச்சனால… அந்த மேட்டர் மட்டும் மனசுல தங்கிடுச்சி!!//
இதே தான் எனக்கும்.. ஆனா நானு அந்தச் சமயத்துல படத்த வேற பார்த்துத் தொலைச்சிட்டதுனால, நல்லா மனசுல தங்கிருச்சி 😉
//பென் ஸ்டில்லரை பிடிக்கும் என்ற கருந்தேள் ஒளிக//
ஆஹா… சரி.. உண்மைய போட்டு ஒடைச்சிடுறேன்.. உலகத்துல இருக்குற லெஃப்ட் ஹாண்டர்ஸ் எல்லாரையும் எனக்குப் புடிக்கும்.. ஏன்னா, நானும் ஒரு லெஃப்ட் ஹாண்டர்.. 😉 பென் ஸ்டில்லரும் ஒரு சொண்டின்றதுனால , அவர எனக்குப் புடிக்கும்யா.. இன்னும் க்ளிண்டன், ஜாக் த ரிப்பர் இப்ப்டி பலபேரை 😉
நண்பரே,
இப்படத்தை பார்த்துவிட்டு சிரிக்காமல் இருக்க முடியுமா. குறிப்பாக டெட்டின் கல்லூரி பருவக் காட்சிகள். அந்த வயதான மூதாட்டியின் :):) ஹாஹாஹா மறக்க முடியவில்லை. நாய்க்கு நடக்கும் கொடுமைகள் :)) மொத்தத்தில் இளம் சிட்டுக்களுடன் ரசிப்பதற்கு ஏற்ற படம். நல்ல விமர்சனம்.
நல்ல படம்.நல்ல பதிவு.நேற்று உம்மை காணோம் என்றவுடன் நினைத்தேன் ஏதோ பதிவு போடப்போறீரென்று. பழைய பென்(ண்) ஸ்டில்லர் வாழ்க!!
பி.கு 2: அடக்கொடுமையே..
எங்கே இருந்து படங்களை செலக்ட் பண்ணி அடிக்கிறீங்க..இன்னைக்கே இந்தப்படத்தை தேடி அலையணும். அதுவும் அந்த முடி மேட்டருக்காகவே..
ரைட்.இது எம்புட்டு அழகா இருக்குது?அத்த விட்டுட்டு எப்ப பார்த்தாலும் அழுவாச்சி படத்த பத்தியே போட்டுகினு… 🙂
சீரிஸ் தாண்டி ஒரு காமெடி மாறுதல் சரி தான் ..
Surely will watch it bro… neenga ivlo sonnathuku apram paakama irupena??? 🙂
தல,
“நீங்க எந்த ஷாம்பூ யூஸ் பண்றீங்க?” என்றெல்லாம் என்னை பொண்ணுங்கள கேக்க சொல்லி ராக் பண்ணங்க தல. மறக்க முடியாத படம்.
தல,
இந்த போஸ்டரை பார்த்தீங்களா?
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்.
அனுஷ்காவும், ஆபாச போஸ்டரும்
Click here to know who is the Next Big Super Star of our Kollywood…
http://www.youtube.com/watch?v=y8Z2hLInp3c
http://www.youtube.com/watch?v=dDO1dg45oSk&feature=related
http://www.youtube.com/watch?v=HwjszYVHVUA&feature=related
—
—
With Regards,
M. Suresh Kumar
A good romantic comedy film. அப்பறம் அந்த பவளக்கொடி படம். அப்படின்னு ஒரு தமிழ் படமா??? இல்ல இந்த படத்தோட dubbing titleலா??? கேள்வி பட்ட மாதிரி இல்லையே!!!