
திரை புத்தகம் – புதிய தொடர்
Zero Degree பதிப்பகத்தில் இருந்து புதிதாக வெளிவந்திருக்கும் சினிமா பற்றிய இணைய இதழ் – The Talkie – https://thetalkie.in/ . இந்த இணைய இதழின் பதிப்பாசியர்களாக Ramjee & Gayathri மற்றும் பொறுப்பாசிரியராக Deepa Janakiraman ஆகியவர்கள் இருக்க, பல கட்டுரைகள் இந்த முதல் இதழில் வெளிவந்திருக்கின்றன. இந்த முதல் இதழில் இருந்து இனி நமது புதிய தொடராக, ‘திரை புத்தகம்’ ஒவ்வொரு இதழிலும் வெளியாகும்.
அது என்ன திரை புத்தகம்? அது ஏன் திரைப்புத்தகம் என்று வரவில்லை என்று கேட்டால், திரையில் இருந்து புத்தகம் என்பதைக் குறிக்கும் வகையில் ஒரு தலைப்பு என்பதால் திரை – புத்தகம். இந்தத் தொடரில், மிக முக்கியமான, மிகச்சிறந்த, சினிமாவுக்குத் தேவையான புத்தகங்கள் பற்றிய விரிவான கட்டுரைகளை எழுதுகிறேன்.
முதல் கட்டுரையாக, Quentin Tarantino எழுதியிருக்கும் புத்தகமான ‘Cinema Speculation’ பற்றிய கட்டுரை இடம்பெற்றிருக்கிறது. படித்துப் பாருங்கள். இதழின் மற்ற கட்டுரைகளையும் மறக்காமல் படித்துப் பாருங்கள். அவசியம் சினிமா ஆர்வலர்களுக்குத் தேவையான எல்லாமே இதில் இடம்பெறும். Cheers.
கட்டுரையின் இணைப்பு – திரை புத்தகம்
பி.கு – இதழுக்கு வருட சந்தா, 499/-