‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ – புத்தகம் கிடைக்கும் இடங்கள்

by Karundhel Rajesh September 22, 2014   Announcements

தினகரன் வெள்ளிமலரில் நான் எழுதிய ‘திரைக்கதை எழுதலாம் வாங்க’ புத்தகம் இன்று வெளியாகிவிட்டது. சூரியன் பதிப்பகத்தின் வெளியீடாக இன்று வந்திருக்கும் புத்தகத்தின் விலை 200/-.

புத்தகம் வெளியாகியிருக்கும் இந்நேரத்தில் முதல் நன்றி ஸிட் ஃபீல்டுக்கே. அவர் இல்லாமல் இந்தப் புத்தகம் இல்லை. அடுத்து, புத்தகத்துக்கு அட்டகாசமான ஒரு முன்னுரை எழுதிக்கொடுத்திருக்கும் இயக்குநர் திரு. நலன் குமரசாமிக்கு நன்றி. புத்தகத்தை முதலில் தொடராக எழுதத்தூண்டிய திரு. சிவராமனுக்கும், புத்தகத்தைப் படிக்க எளிதாகவும் நல்ல லே அவுட்டிலும் கொண்டுவந்திருக்கும் சூரியன் பதிப்பகத்துக்கும் நன்றிகள். இறுதியாகவும் முக்கியமாகவும், தொடரை வெற்றிகரமாக ஆக்கிய நண்பர்களுக்கு நன்றி.

இந்தப் புத்தகம் யாரேனும் ஒருவருக்கு ஒரு நல்ல திரைக்கதை எழுத உபயோகப்பட்டாலும் கூடப் புத்தகத்தின் நோக்கம் நிறைவேறிவிட்டது என்பதே பொருள்.

புத்தகம் எல்லா ஊர்களிலும் எந்த எண்ணில் கிடைக்கும் என்ற விபரங்களைக் கீழே கொடுத்திருக்கிறேன். மேலே உள்ள போஸ்டரில் உள்ள எண்களிலும் அதைப் பார்த்துக்கொள்ளலாம்.


 

புத்தகம் எந்தக் கடைகளில் கிடைக்கும்? – உங்கள் ஊரின் எல்லா முக்கியமான புத்தகக் கடைகளிலும் கிடைக்கும்

புத்தகம் எப்போது கிடைக்கும்? – இன்றுதான் வெளியாகியிருப்பதால் விரைவில் கடைகளுக்கு வந்துவிடும். அதற்கு மேக்ஸிமம் ஒரு வாரம் ஆகலாம். இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள்ளேயே எல்லாக் கடைகளிலும் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம்.

தமிழ்நாடு, பெங்களூர், மும்பை மற்றும் தில்லியின் எண்கள்தான் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பிற ஊர்களிலும், இலங்கை போன்ற நாடுகளிலும் புத்தகம் கிடைக்குமா? – அவசியம் கிடைக்கும். அந்தந்த ஊரின் பிரதான புத்தகக் கடைகளில் இன்னும் சில தினங்களில் கிடைக்கும் என்பதே ஏற்பாடு. இருப்பினும், போஸ்டரில் உள்ள எண்ணுக்குத் தொலைபேசி மூலம் நீங்கள் விசாரிக்கலாம் (044 42209191 | Extn: 21125). புத்தகத்தைத் தபாலிலும் பெறலாம். அந்த விபரங்கள் எல்லாமே கீழேயும் போஸ்டரிலும் உள்ளன.


 

புத்தகம் வேண்டுவோர் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி:

சூரியன் பதிப்பகம், 229, கச்சேரி ரோடு, மைலாப்பூர், சென்னை – 4.

தொலைபேசி எண்: 044 42209191 | Extn: 21125

மின்னஞ்சல்: kalbooks@dinakaran.com


 

புத்தகம் தமிழகம் மற்றும் பிற ஊர்களில் கிடைக்கும் எண்கள்:

சென்னை: 7299027361 | கோவை: 9840981884 | சேலம்: 9840961944 | மதுரை: 9940102427 | திருச்சி: 9840931490 | நெல்லை: 9840932797 | வேலூர்: 9840932768 | புதுச்சேரி: 9840907422 | நாகர்கோவில்: 9840961978

தமிழகம் தவிர்த்த பகுதிகள்:

பெங்களூரு: 9844252106 | மும்பை: 97773725489 | தில்லி: 9818325902

புத்தகங்களைப் பதிவுத் தபால்/கூரியரில் பெற: புத்தக விலையுடன் ஒரு புத்தகம் என்றால் ரூ.20-ம், கூடுதல் புத்தகங்கள் என்றால் ஒவ்வொன்றுக்கும் ரு.10-ம் சேர்த்து KAL Publications என்ற பெயருக்கு டிமாண்ட் ட்ராஃப்ட் அல்லது மணியார்டர் வாயிலாக மேலாளர், சூரியன் பதிப்பகம், தினகரன், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை – 4 என்ற முகவரிக்கு அனுப்பவும்.


 

தொடருக்கு ஆதரவு கொடுத்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். புத்தகம் உங்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. புத்தகத்தைப் படித்துவிட்டு அவசியம் உங்கள் கருத்தைப் பகிர வேண்டுகிறேன்.


Lets Rock !!

  Comments

9 Comments

  1. வாழ்த்துகள் ராஜேஷ்… 🙂

    Reply
  2. Singaravelan

    வாழ்த்துகள்! உடனே வாங்கி விட வேண்டியதுதான்.

    Reply
  3. raymond

    வாழ்த்துக்கள் தல……..

    Reply
  4. venkey

    வாழ்த்துகள் ராஜேஷ்…

    Reply
  5. Vijay

    Dear Rajesh Ji,
    Congrats for the book release. Thanks for the effort to bring this content as a book this soon. Thanks ji.

    Regards,
    Vijay.

    Reply
  6. கிரிஷி

    நீங்க பிளாக் ஆரம்பிச்ச காலத்தில இருந்து, உங்களோட தீவிர வாசகன், எதுனா படம் புதுசா வந்தா உடனே நான் review பாக்குறது உங்க site-ல தான்!!

    அந்த அளவுக்கு துல்லியமாவும், தனித்துவமாகவும் உங்க விமர்சனம் இருக்கும்.

    எல்லோரும் சும்மா படத்தோட கதை,ம்யூசிக்.,மேக்கிங் இத வச்சே விமர்சனம் பண்ணிட்டு போய்டுவாங்க, ஆனா நீங்க அத பல மேற்கோள் காட்டி அற்புதமா விமர்சனம் பண்ணி இருப்பிங்க.

    ஒரு படத்தோட விமர்சனம் மட்டுமில்லாம பல விசயங்கள நாங்க தெரிஞ்சுகிட்டுது உங்களால தான் 🙂

    உங்க விமர்சனத்த படிச்சிட்டு என் நட்பு வட்டத்துல அத பகிர்ந்துகிட்டா, எப்பூடி மச்சான் இவ்ளோ விஷயம் தெரிஞ்சு வச்சு இருக்குறனு சொல்லுவாங்க!!

    இதுக்கு எல்லாம் முக்கிய காரணம் நீங்க மட்டும் தான்!!

    உங்களோட இந்த தொடர நான் தினகரன் வெள்ளி மலர்ல படிச்சபோ, அவ்ளோ எளிமையா கொடுத்து இருந்தீங்க, சினிமா பத்தி ஒண்ணும் தெரியாதவங்க கூட, இத படிச்சுட்டு நிச்சயம் திரைக்கதை எழுத முடியும்!!

    உங்களோட இந்த வளர்ச்சி ஏதோ நம்ம கூட இருந்த நண்பனோட வளர்ச்சி மாதிரி எனக்கு தோணுது!!

    இது நீங்க பெருமை படுறது விட நான் (நாங்க) தான் அதிகம் பெருமைபடணும் 🙂

    #திரைக்கதை எழுதலாம் வாங்க

    எழுத வந்துட்டோம் சகோ 🙂

    Reply
  7. Sivakumar

    Where to buy in Kanchipuram …. asked some bookstore not avail ..

    Reply
  8. Vijay Krishnan P G

    Just started to read your books to learn from your experience sir

    Reply

Join the conversation