
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம் ?
அரசியல் கட்டுரைகள், எப்பொழுதும், படிக்கத்தான் எனக்குப் பிடிக்கும். ஆனால், இம்முறை எழுதிவிடலாம் என்று தோன்றியதற்குக் காரணம், பல நண்பர்களும், என்னிடம், ‘என்னங்க.. ஒட்டு போட ஊருக்குப் போகலையா?’ என்று கேட்டதுதான். ஏனைய பல தமிழ்நாட்டு ஜனங்களையும் போல, ஓட்டுரிமை என்பது எனக்கு வந்தவுடன், ஒட்டு போட நான் பயங்கரத் துடிப்போடு காத்துக்கொண்டிருந்த நாட்களும் உண்டு. ஆனால், வாக்காளர் அடையாள அட்டையை எனது கையில் வாங்கிப் பார்ப்பதற்குள், நாக்கு பிதுங்கியே விட்டது என்பது வேறு ஒரு கதை. கிட்டத்தட்ட ஒரு வருடம், கோவையின் நகராட்சி அலுவலகத்துக்குப் பல முறை நடையாக நடந்து, அதன்பின், புதிய வருடத்தில், புதிய அடையாள அட்டைக்கு மறுபடி விண்ணப்பித்து, புகைப்படம் எடுத்துக்கொண்டு, அதன்பின் பல நாட்கள் மறுபடி நடந்து, ஒரு வழியாக, திருட்டு முழி முழிக்கும் எனது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைப் பெற்றேன். அடையாள அட்டை எனது கைக்கு வந்த மறுநிமிடம், ஏதோ தமிழ்நாட்டின் தலைவிதியையே மாற்றக்கூடிய நிலையில் நான் இருப்பதுபோலவும், எனது ஓட்டைப் போட்ட மறுகணமே, ஆட்சியை நான் நிர்ணயித்துவிட்டதுபோலவும் எண்ணத் துவங்கியிருந்தேன்.
அதன்பின் வந்த அத்தனை தேர்தல்களிலும், மறக்காமல் ஓட்டுப் போட்டேன். அத்தனை தேர்தல்களிலும் நான் ஓட்டுப்போட்டது ஒரே கட்சிக்குத்தான். தவறாமல் அந்தக் கட்சி தோற்றும் வந்தது. அப்போதெல்லாம், இப்பொழுது இருக்கும் அறிவு இல்லை. எனவே, கண்மூடித்தனமாக ஓட்டுப்போடும் நிலையில்தான் இருந்தேன். ஆனால், இப்போது?
நடுநிலையாக நின்று யோசித்துப் பார்க்கையில், நான் ஏன் ஓட்டுப்போடவேண்டும் என்ற எண்ணமே, இப்போது மேலோங்கி நிற்கிறது. பெரிதான காரணம் வேறொன்றுமில்லை. யாருக்கு ஓட்டுப்போடுவது? தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் என்னால் ஓட்டுப்போட முடியாது. காங்கிரசுக்கு, கனவில் கூட மாட்டேன். இவற்றைவிட்டுவிட்டால், வேறு யாராவது மூன்றாவது அணியில் இருக்கிறார்களா? இல்லை. பின், யாருக்கு ஓட்டுப்போடுவது? ஒருவேளை யாராவது மூன்றாவது அணியை உருவாக்கினாலும், அவர்களும் ஊழலில் திளைத்தவர்களாக, அல்லது மதவாதக் கட்சிகளாக, அல்லது சினிமாக் கவர்ச்சியில் இருந்து வந்தவர்களாக அல்லவா இருக்கிறார்கள்?
இதுதான் எனது தற்போதைய நிலைமை.
இப்போது பரவலாகப் பேசப்படும் விஷயம் – தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை. இதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அது அ.தி.மு.க வா என்று கேட்டால், இல்லை என்பதே என் பதில். தி.மு.க வுக்கு மாற்று, அ.தி.மு.க இல்லவே இல்லை. தி.மு.க வின் தற்போதைய சுரண்டல் ஆட்சிக்கு மாற்றாக, யாரேனும் ஒரு நேர்மையான மனிதனின் கட்சியாகவே இருக்க முடியும். ஆனால், அப்படிப்பட்ட மனிதன் எங்கே? கண்ணுக்கெட்டிய தூரம் வரை, அப்படி யாரையும் காணவில்லை. தி.மு.கவுக்கு எதிராக, அ.தி.மு.க அல்லவா நிற்கிறது? புதைகுழியிலிருந்து தப்பித்து, மலையுச்சியிலிருந்து விழமுடியுமா?
இதை எழுதும்போதே, இன்னொரு விஷயமும் தோன்றியது. ‘இப்படியெல்லாம் எழுதினால் பற்றாது; ஏன்? நீ என்ன செய்யப்போகிறாய்? கட்டுரை எழுதினால் போதுமா? ஒவ்வொருவரும் ஏதாவது செய்தால்தான் மாற்றம் நேரும். எனவே, நீ என்ன செய்யப்போகிறாய் என்று சொல்’ என்று எப்படியும் வரப்போகும் கருத்துதான் அது. இதற்கு எனது பதில் என்னவென்றால், எனக்கு அரசியலில் புகும் எண்ணம் அறவே இல்லை. ஆனால், நேர்மையான மனிதர் யாராவது வந்தால், ஆதரிக்கத் தயாராக இருக்கிறேன் என்பதாகத்தான் இருக்கும்.
கண்ணுக்கு எட்டிய வரை, எனக்குத் தோன்றும் ஒரே வழி, 49 ஒ மட்டுமே. இதைப்படிப்பவர்களில், யாராவது நடுநிலையாளர்கள் இருந்தால், அதைச் செய்யுங்கள்.
அதேபோல், விகிதாச்சார முறை என்று ஒரு வழியும், ஒவ்வொரு தேர்தலின்போதும் விவாதிக்கப்பட்டு, தேர்தல் முடிந்ததும் கிடப்பில் போடப்பட்டுவிடும். இந்த விகிதாச்சார முறை என்ன சொல்கிறது என்றால், எந்தத் தொகுதியிலும், கட்சிகள் பெரும் ஓட்டுகளின் விகிதாச்சார அடிப்படையில், அந்தக் கட்சியின் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதே. உதாரணத்துக்கு, ஒரு கட்சி, தமிழகத்தில், முப்பத்தைந்து சதவிகித ஓட்டுகள் பெற்றிருந்தால், அந்தக் கட்சிக்கு முப்பத்தைந்து சதவிகித சட்டமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கப்படுவார்கள். இந்த முறையைப் பின்பற்றினால், எந்த ஒட்டுமே வீணாகப் போய்விடாது. தற்போதுள்ள முறையில், ஒரு தொகுதியில், தோல்வியுற்ற வேட்பாளர் பெறும் ஓட்டுக்கள் வீண்போய் விடுகின்றன அல்லவா ?
இந்த விகிதாச்சார முறை அமல்படுத்தப்பட்டால், அதற்குத்தான் என் வோட்டு.
சரி. தி.மு.க ஆட்சியில், தமிழகம் ஒளிரவில்லையா? என்று யாராவது கேட்டால், தமிழகத்தில் சில வளர்ச்சிப்பணிகள் நடந்துள்ளன என்று நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், அதைவிட அதிகமாக, தி.மு.க வின் சுரண்டலும் அதிகரித்துத் தான் இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஒன்றே போதுமே. மட்டுமல்லாமல், தினமும் நாம் படிக்கும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள், பல கதைகளை நமக்குச் சொல்கின்றன. கருணாநிதியின் குடும்பம் சேர்த்துள்ள சொத்துக்கள் தான் எத்தனை? எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், கருணாநிதியின் குடும்பத்தினர்களே அங்கு மேலோங்கி நிற்பதையும் பார்த்து வருகிறோம். சில நாட்களுக்கு முன்னர் கூட, கருணாநிதி, ‘குடும்ப உறுப்பினர்கள் திரைத்துறையில் வருவது தவறில்லை; ஏவிஎம்மைப் பாரீர்; அதைப் பாரீர்; இதைப் பாரீர்’ என்றெல்லாம் குறிப்பிட்டுச் சொல்லியுள்ள அறிக்கை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. எதுவாக இருந்தாலும், அடுத்தவர்களைக் காட்டியே அவருக்குப் பழக்கமாகிவிட்டது. அதனால், இதில் இருக்கும் உள்குத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். ஏவீஎம்முக்கும் இவரது குடும்பத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் உள்ள வேற்றுமையை, ஒண்ணாங்கிளாஸ் படிக்கும் பொடியன் கூட சொல்லிவிடுவான். ஏவிஎம் என்ன அடுத்த தயாரிப்பாளர்களின் வயிற்றில் அடித்து, தனக்கு மட்டுமே லாபம் என்றா செயல்படுகிறது?
இதுபோன்ற அநியாய சொத்து சேர்த்தல் அவரது குடும்பத்துகே உரிய ஒரு விஷயமாகிவிட்டதால் , தி.மு.கவை ஆதரிப்பதில்லை என்பது எனது கொள்கை. ஆனால், அ.தி.மு.கவை எடுத்துக்கொண்டால், வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலேயே கூட, மன்னார்குடித் தலையீடுகள் இருந்தன என்று மிகத் துல்லியமாகத் தெரிகிறது. இப்போதே இப்படி என்றால், ஆட்சிக்கு வந்தபின் என்ன ஆகுமோ என்பதினால், அ.தி.மு.கவுக்கும் ஒட்டு போடமாட்டேன்.
இவர்கள் இருவருக்கும் ஒட்டு இல்லை என்று நான் முடிவு செய்துவிட்டதனால், வேறு யாருக்குத்தான் போடுவது என்று யோசித்தால், மூன்றாவதாக நிற்பது பி.ஜே.பி. யாருக்கு வேண்டுமானாலும் ஒட்டு போடுவேன்; ஆனால், மதவாத கோஷத்தைத் தனது சந்தர்ப்பவாத கோஷமாக வைத்திருக்கும் பிஜேபிக்கு ஒட்டு போடமாட்டேன்.
ஆகவே, இந்தக் கட்சிகள் எல்லாம் தொலைந்து, யாராவது உருப்படியான வேட்பாளர் வரட்டும். அவருக்கு, எங்கிருந்தாலும் எனது தொகுதிக்குப் போய், கட்டாயம் ஓட்டுப் போடுவேன்.
இதில் கொடுமை என்னவென்றால், இப்போது தேர்தலில் நிற்கும் கட்சிகளின் அட்டூழியங்களைப் படிக்கவே சகிக்கவில்லை. இவர்களெல்லாம் ஆட்சிக்கு வந்து, எவ்வளவு கொள்ளைகளை அரங்கேற்றப்போகிறார்களோ?
49 0-ku pottu unkal ethirpai kattalamae athai vitu nenkal ottu podamal irupathu thavaru ennai porutha vari…
நான் நின்னா எனக்காச்சம் போடுவீங்களா…கறைபடியாத கை தல… :))
எல்லாவனும் ஒருகுட்டையில் ஊறியமட்டைகள்தான். எந்த புண்ணாக்குக்கும் ஓட்டுப்போடாதிங்க 49O தான் ஒரே வழி…
என் ஓட்டை எவன் போட போறானோ தெரியலையே….
எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வு….
நீங்களே தேர்தலில் வேட்பாளாராக் நில்லுங்கள் குறைந்த பட்சம் உங்கள்/எங்கள் ஓட்டாவது கிடைக்கும்…
நண்பரே,
இக்கட்டுரைக்கு கனிவான பதிலொன்றை முரசொலியில் எதிர்பார்க்கலாமா :))
அசத்தல். ஒரு ரியல் நடுநிலைவாதியின் மனப் பிரதிபளிப்பு.
//பேதை நெஞ்சம்//
யாரது..பேதை..பக்கத்துக்கு வீட்டுக்காரவுங்களா…
எனக்கு ஓட்டுப் போடுற வயசு வந்தப்பறம்தான் தொலைநோக்கு சிந்தனையுடன் நா யோசிக்க முடியும்………..
49 – O:
ஓட்டுப் போட்டோம்..ஆனா போடல..மாதிரிதான்..யாருக்குமே போடாம இருப்போமே தவிர கழிசடைகள் வெற்றி பெறுவதை இப்ப உள்ள முறையில் தவிர்க்க முடியாது. ஏன்னா 49 – Oவை கணக்கில் கொள்ளவதில்லை.
எப்ப voting machineலயே அந்த optionஐ வெக்க விடுராங்களோ(அதுக்கு பல வருசத்திற்கு முன்னாடியே சட்டம் வந்திருச்சு)..அப்ப தெரியும்..எலெக்சன் கமிசனின் நடவடிக்கை
49 – O போடணும்னு நினைக்கிறவர்கள் கவனத்திற்காக…
1. போலிங் பூத் போங்க…கையில மை வைப்பாங்க..கையெழுத்து வாங்குவாங்க..
2. ரொம்ப முக்கியம்: கையில மை வெச்சு கையெழுத்து வாங்கிய பிறகுதான் 49 – O பத்தியே பேசணும். இல்லாட்டி குழப்பி விட்டுருவாங்க. (இது எங்கப்பா சொன்னது. அவரு போலிங் ஆபிசரா இருக்கும் போது எலெக்சன் கமிஷனே 49:Oவை ரொம்ப விரும்புவது இல்லைன்னு சொல்லியிருக்கார்.)
3. இப்ப… 17 A என்ற பதிவேடு அல்லது register, தனியாக இருக்கும். அதை கேட்டு வாங்கி உங்க பேரை பதிவு செய்து கொள்ளவும். அவ்வளவே.
என்ன ஒண்ணு, 49 – O போட்டா ஊரு உலகத்திற்க்கே நீங்க 49 – O போட்டது தெரியும். எவனாவது கம்மியான ஓட்டு வித்தியாசத்தில தோத்தாங்க…..பாத்து இருந்துக்கோங்க…
பாஸ்….
என்ன வேணும்னாலும் பண்ணுங்க…ஆனா எங்கள் தலைவர் கார்த்திக்கின் நா.ம.கா. விற்கு ஓட்டுப் போட்ருங்க. நாடாளும் மக்கள் கட்சி என்ற பேருக்காவது ஓட்டுப் போடுங்க…எங்காளு ஜெயிச்சா எல்லாருக்கும் இலவசமா கூலிங்கிளாசும், ஒரு பத்து சுவிங்க முட்டாய் பாக்கெட்டும் இலவசமாக தரப்படும்..ஹே…ஏ…யு…ஓய்…
// எனக்கு அரசியலில் புகும் எண்ணம் அறவே இல்லை//
(அது என்ன சந்தா…..எல்லாரும் புகும் எண்ணம இல்லைன்னே சொல்றீங்க…)
அழகிரி படத்த வேற வெச்சிருக்கீங்க..கொஞ்சம் என்னைய ஞாபகம் வெச்சுக்கோங்க..ஒரு கொ.ப.செ இல்ல மகளிர் மேம்பாட்டுக் கழகம் இந்த மாதிரி பதிவினா ஒக்கே.
We always want the best man to win an election…. Unfortunately he never runs !!
Ungal padhivai padithavudan inda vasagam than ninaivirku vandhadhu…
ஜூ.வி.கருத்து கணிப்பு அம்மாவின் மைனாரிட்டி அரசு அமையும் என்று வந்துள்ளது.ஊழல் செய்யும் உரிமையை அம்மாவுக்கு வழங்கி விடுவார்கள் தமிழக மக்கள் .அஞ்சு வருசம் ஐயா.அஞ்சு வருசம் அம்மா.வாழ்க பண நாயகம்.
நடுநிலையாளர்களின் மன ஓட்டத்தை தெளிவா சொல்லிட்டீங்க….!
Any way u save one day leave. like me
நீங்க சினிமா விமர்சனம் நல்லா எழுதுறீங்க..
@ Cute Photos – 49 O போட இப்ப நான் ஊருக்குப் போனா, ரெண்டாயிரம் ருபாய் செலவு தலைவா.. போக வர.. இந்த வாட்டி, என்னோட தொகுதில, யாருக்கும் தி.மு.க பணம் தரல (கோவை).. தந்திருந்தா போயிருக்கலாம் 🙂 .. Juz kidding. 49 O க்கு மனசில்ல. மேலே கொழந்த சொன்னமாதிரி, கழிசடைங்க ஜெயிக்குறதை அதுனால் தடுக்க முடியாதே. . 🙁
நாஞ்சில் – நீங்க நின்னா என் வோட்டு உங்களுக்குத்தான். அட நெசம்மா 🙂 . . சின்னம் என்ன ஆட்டினா?
நாஞ்சில் மனோ – அதே டவுட்டுதான் எனக்கும் 🙂
மொக்கராசா – ஹாஹா . . 🙂 கொஞ்ச நாள்ல, யாரும் நல்லவங்க வரலன்னா, நாமளே ஆரம்பிச்சிரலாம் கட்சிய. . சின்னம் – பெரிய கருந்தேள்., என்ன ஒகே தானே 🙂
காதலரே – விரசொலியில் இதற்குப் பதில் வந்தால், என் வீட்டுக்கும் ஆட்டோ வருமே . . என்னா வில்லத்தனம்
கொழந்த – பேதைன்னா, என்னை மாதிரி அப்பாவிகளைக் குறிக்கும். எனக்குமே ஓட்டுரிமை போன வருஷம் தான் வந்துச்சி. . அப்பாலிக்கா, உங்க விளக்கவுரை பிரமாதம். பலருக்கும் உதவிருக்கும்.
நா. ம. க கட்சிதான் இந்த முறை தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்னு எல்லாருமே அடிச்சி சொல்றாங்க. கட்டாயம் கார்த்திக் தான் தமிழக ஜனாதிபதி 🙂 .. அவரு வந்து ஸ்டைலா பேசுறதை மட்டுமே நாள் பூரா பார்க்கலாமே 🙂
அரசியல் பத்தி – அது சந்து தான். ஆனா எந்த சந்துன்னு சொல்ல மாட்டனே 🙂 . . கொ.ப.சே எல்லாம் யாராவது நடிகைக்கு மட்டுமே கருந்தேள் முன்னேற்றக் கழகத்தில் வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதிலும், மோனிகா பெலூச்சி ஆல்ரெடி விண்ணப்பித்துள்ளார் என்பதையும் நினைவு கொள்க.
அருண் – என்ன பண்றது? சீக்கிரமே ஒரு நல்லவர் வருவார்ன்னு தோணுது. தீமைகள் அதிகமாகும்போது, அதுக்கு ஒரு எதிர்வெட்டா, நல்லது நடக்கும். கட்டாயம்.
உலக சினிமா ரசிகரே – நானும் சர்வேக்களைப் படிச்சேன். இந்த முறை அம்மா வந்தா என்ன அய்யா வந்தா என்ன ? கொல்லைபோகப்போறது நம்ம பணந்தானே ? என்ன கொடும சார் இது 🙁
பன்னிக்குட்டி ராம்சாமி & VJR – என்ன பண்றது? இதானே இப்ப நம்ம நிலைமை? ஹும்ம் 🙁
Selva blog – 🙂 ஹாஹ்ஹா .. 🙂
கிறுக்கன் – நீங்க பின்னூட்டம் நல்லாப் போடுறீங்க 🙂
இவங்களுக்கு ஓட்டு போடலாமே. இவங்களைப் பார்க்கும் போது கொஞ்சம் நம்பிக்கையா இருக்கு. கொஞ்சம் பார்த்துட்டு பிடித்திருந்தால் பகிருங்களேன்.
மக்கள் சக்தி கட்சி
http://www.makkalsakthi.net
It’s Mine… Visit it…
http://nasthenka.blogspot.com/2011/04/blog-post.html
மன்னிக்கவும்.இது விளம்பரமல்ல.தயவு செய்து தமிழர்கள் நாம் செயல்பட வேண்டும்.இதை படியுங்கள்.
****************************
ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்
http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html
//இந்த விகிதாச்சார முறை அமல்படுத்தப்பட்டால், அதற்குத்தான் என் வோட்டு.
மிக சரி. எனது ஓட்டும் அதற்க்கு தான்.
one of best statement and reflects our mindset,
what to do?
nothing doing …………………
//தி.மு.க வுக்கு மாற்று, அ.தி.மு.க இல்லவே இல்லை//—- idhu yaarukku puriyudhu?
hi thalaivaaa,… antha pakkam evalo koduthangalam…
மோசமான உலக அரசியல் பயமுறுத்தல்
http://sg.news.yahoo.com/aljunied-voters-will-regret-choosing-wp–mm-lee.html
http://sg.news.yahoo.com/blogs/singaporescene/pap-loses-aljunied-voters-5-years-repent-mm-155825423.html