Tomb Raider: UnderWorld

by Karundhel Rajesh February 3, 2010   Game Reviews

கடந்த ஒரு வாரமா எந்தப் பதிவும் போடாததுக்குக் காரணம், கண்டிப்பா வேலை இல்ல. அதுக்குக் காரணம் வேற ஒண்ணு. அதப் பத்தித் தான் இந்தப் பதிவு.

கணிணியில் கேம்கள் விளையாடுவது உங்களுக்குப் பிடிக்குமா? அப்படியென்றால், இந்தப் பதிவு உங்களுக்காகத் தான். கேம்கள் பிடிக்காதவர்களும் இதைப் படிக்கலாம். ஒரு சாகாவரம் பெற்ற கதாபாத்திரத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

கணினி உலகில் பல வகையைச் சேர்ந்த கேம்கள் உள்ளன. விளையாட்டு, அட்வென்ச்சர், மூளையைக் கசக்கிப் பிழியும் Strategy Games, பிரபலத் திரைப்படங்களிலிருந்து உருவாக்கப்பட்ட விளையாட்டுக்கள் என. . இவற்றில், பல பிரபலமான கேம்கள். இந்த கேம்களில் ஒரு மறக்க முடியாத கதாபாத்திரம் தான் லாரா க்ராஃப்ட்.

லாரா க்ராஃப்ட் என்றால் யார்? இங்கிலாந்தில் வாழ்ந்த லார்ட் ரிச்சர்ட் க்ராஃப்ட் என்ற ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளரின் மகள் தான் லாரா க்ராஃப்ட். தந்தையைப் போலவே ஒரு துடிப்பான பெண். அவளது தந்தை உயிருடன் இல்லை. தந்தையின் பணியான தொல்பொருள் ஆராய்ச்சியை லாராவும் தொடர்கிறாள். பல அரிய விஷயங்களைத் தங்கள் மாளிகையில் தந்தையும் மகளும் சேகரித்து வைத்துள்ளனர். லாராவிற்குத் துணை புரிவது, Zip மற்றும் Alister. இந்த இருவரும் லாராவின் மாளிகையிலேயே இருப்பவர்கள். லாராவுக்குத் தேவையான அத்தனை தகவல்களையும் ஃபோனிலோ அல்லது அவளது P.D.A விலோ அனுப்புவது இவர்கள் வேலை. இவர்களுடன் சேர்ந்து, லாராவின் வீட்டில் இருக்கும் பணியாளரான (பட்லர்) வின்ஸ்டன் ஸ்மித் (அடிக்கடி டர்ர்ர்ரென்ற சத்தத்துடன் ‘காற்றைப்’ பிரிப்பது, திடீரென்று ஓலமிடுவது என்று இவரது சேஷ்டைகள் ஏராளம்). இவர்கள் தான் லாராவின் டீம்.

இந்த லாரா க்ராஃப்டை வைத்து உருவாக்கப்பட்ட ஒரு கம்ப்யூட்டர் கேம் தான் ‘டூம்ப் ரைடர்’. உலகெங்கும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு கேம். இதன் லேட்டஸ்ட் வெளியீடான ‘டூம்ப் ரைடர்: அண்டர்வேர்ல்ட்’ என்ற கேமைத் தான் ஒரு வாரமாக விளையாடிக்கொண்டிருக்கிறேன். எந்தப் பதிவும் எழுதாமல், பின்னூட்டங்கள் மட்டும் போட்டுக்கொண்டிருப்பதற்கு இதுதான் காரணம் . இந்த வாரத்தில் முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்.

இந்த டூம்ப் ரைடர் சீரீஸில் இதுவரை வேளியான கேம்கள் எட்டு. அண்டர்வேர்ல்ட் தான் எட்டாவது. இந்த எட்டு கேம்களை ஒரு சேர விளையாடுவது எனது லட்சியமாகவே இருந்தது. கடந்த சில வருடங்களாக, ஒவ்வொரு கேமாக விளையாடி முடித்து, இப்போது அதன் கடைசி கேமை விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

இந்த அண்டர்வேர்ல்ட் கேம், இதுவரை வெளிவந்த அத்தனை டூம்ப் ரைடர் கேம்களையும் தூக்கிச் சாப்பிடும் அளவு க்ராஃபிக்ஸ் கொண்டது. இதன் காரணமாகவே, இது விளையாடப்படும் கணினி, உச்சபட்ச கான்ஃபிக்ரேஷன் கொண்டதாக இருந்தால்தான் இந்த கேமை விளையாட முடியும். ஏற்கெனவே வீட்டில் இருக்கும் கணினியில் இந்தக் கேமை இன்ஸ்டால் செய்து விட்டு, கணினி படுத்து விட்டதால் விளையாட முடியாத கடுப்பில் இருந்த நான், தற்போது எனது லாப் டாப்பில் இந்த அண்டர்வேர்ல்ட் வேலை செய்வதால், பயங்கர சந்தோஷத்துடன் இதில் குதித்து விட்டேன். இன்னும் இதை முடிக்க ஐந்து லெவல்களே உள்ளன. சீக்கிரம் முடிப்பேன் என்று நினைக்கிறேன்.

சரி. ஏம்பா . . இதுக்கு எதுக்கு ஒரு பதிவு? என்று மனதில் ஒரு கேள்வி எழலாம். ஏன் இந்தப் பதிவு என்றால், இந்தக் கேம் ஒரு மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. இதில் இறங்கிவிட்டால், சோறு தண்ணியில்லாமல் விளையாடிக் கொண்டிருக்கலாம். இதை விளையாடியிருப்பவர்கள் உணர்ந்திருப்பீர்கள். விளையாடவில்லை என்றால், நீங்கள் தாராளமாக இதில் இறங்கலாம்.

எந்த கேமாக இருந்தாலும், ஒரு ‘கான்செப்ட்’ இருக்கும். ஒரு கரு. இந்தக் கருவைச் சுற்றித்தான் அந்த கேம் பின்னப்பட்டிருக்கும். ஏதோ ஒன்றை அடைவது தான் கேமின் ஹீரோ / ஹீரோயினின் லட்சியமாக இருக்கும். கேமின் ஒவ்வொரு லெவலிலும் அந்த லட்சியத்தை நோக்கி ஒரு படி முன்னேறும். கடைசியில், அடுத்த பகுதிக்கு ஒரு டிரைலர் அமைத்துவிட்டு, கேம் முடிந்துவிடும். இதைப்போல், இந்த அண்டர்வேர்ல்டிலும் ஒரு கரு உண்டு.

அண்டர்வேர்ல்ட், இதற்கு முன்னர் வெளிவந்த ‘டூம்ப் ரைடர்: லெஜண்ட்’ என்ற கேமின் தொடர்ச்சி. லெஜண்ட், ‘டூம்ப் ரைடர்: ஆனிவர்சரி’ என்ற கேமின் தொடர்ச்சி. ஆக, அண்டர்வேர்ல்ட், ஒரு ட்ரையாலஜியின் கடைசிப்பகுதி என்று சொல்லலாம் (அடுத்த பகுதி வெளிவரும் வரை). இதன் கதை? லாராவின் தாய், அவளது சிறுவயதில் திடீரென ஒரு இடத்தில் மறைந்து விடுகிறார். தனது தாயைத் தேடி லாரா மேற்கொள்ளும் பயணத்தின் (கிட்டத்தட்ட) இறுதிக்கட்டமே அண்டர்வேர்ல்ட்.

கிங் ஆர்தரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கிலாந்தின் புகழ்பெற்ற மாயாஜால மன்னன் (நம்ம விக்ரமாதித்தன் மாதிரி). அந்தக் கிங் ஆர்தரின் புகழ்பெற்ற வாள் தான் ‘எக்ஸ்காலிபர்’. இந்த வாள், மிகப்பெரும் சக்தியுடையது. இந்த வாள் உருவாக்கப்பட்ட இடம் தான் ‘அவலான்’ என்ற இடம். இந்த அவலான், கிங் ஆர்தர், ஒரு போர்க்களத்தின்போது, தோல்வியடைந்து, இளைப்பாறப் பயன்பட்டது என்றும் ஒரு ‘மித்’ உண்டு. அந்த இடத்துக்கே பல சக்திகள் உண்டு என்றும் நம்பப்படுகிறது. இந்த அவலானில் தான் லாராவின் தாய் வைக்கப்பட்டிருக்கிறாள் என்ற தகவல் லாராவுக்குக் கிடைக்கிறது. எனவே அந்த இடத்தை நோக்கி லாரா செல்லும் பயணத்தின் ஒரு பகுதியே இந்த ‘அண்டர்வேர்ல்ட்’.

இப்பொழுது, ‘தோர்’ என்ற கடவுள். பழைய ஜெர்மானியர்களுக்கும், அதன்பின் வைக்கிங்குகளுக்கும் (வைக்கிங் தீவு மர்மம் – லயன் காமிக்ஸ் – நினைவிருக்கிறதா?) கடவுள். இந்தத் தோர், ஒரு பிரம்மாண்டமான ஆகிருதி உடையவர். ‘மயோல்நிர்’ என்ற ஒரு மெகா சைஸ் சுத்தியல் தான் இவரது ஆயுதம். அது, மலைகளைப் பிளக்கும் சக்தியுடையது. இந்தத் தோரின் சுத்தியலையும், அவரது பெல்ட்டையும் லாரா இந்தக் கேமில் கண்டுபிடிக்கிறாள். அவைகளை வைத்து, பாதாள உலகமான ‘ஹெல்ஹீம்’ என்ற ஒரு உலகத்தைத் திறக்க வேண்டும். இந்த ஹெல்ஹீமும் அவலானும் ஒன்று தான் என்ற உண்மையும் அவளுக்குத் தெரிகிறது.

லாரா ஹெல்ஹீமைத் திறந்தாளா? அவளது தாயைக் கண்டுபிடித்தாளா? இதோ, கேமை முடித்துவிட்டுச் சொல்கிறேன்.

அண்டர்வேர்ல்டின் கிராஃபிக்ஸ் ஒரு அற்புதம் என்று சொல்லலாம். பாதாள உலகமும், அதன் விசித்திரமான ஜந்துகளும் நம் கண்முன் விரிகின்றன. அட்டகாசமான இயற்கைக் காட்சிகளையும், தத்ரூபமான பின்னணிகளையும் கொண்டதாக இந்த கேம் விளங்குகிறது. முக்கால்வாசி இருட்டிலேயே நடப்பதால், இரவில் விளையாடும்போது ஒரு ‘த்ரில்’ கிடைக்கும். அதுவும், திடீரென்று பின்னால் ஒரு உறுமல் கேட்டுத் திரும்பினால்… தனிமையிலேயே பிரம்மாண்டமான குகைகளிலும் விசித்திரமான இடங்களிலும் லாரா உலவும்போது, இனம்புரியாத ஒரு பயமும், விறுவிறுப்பும் நம்மைத் தொற்றிக் கொள்கின்றன.

இதன் கண்ட்ரோல்கள் மிகவும் சுலபம். சில புதிய இயக்கங்களும் இருக்கின்றன. ஸ்லோ மோஷனில் லாரா தனது எதிரிகளைச் சுடும் ஒரு சூப்பரான கண்ட்ரோல் இந்த அண்டர்வேர்ல்டின் ஹைலைட்.

ஆக, அண்டர்வேர்ல்ட் ஒரு அற்புதமான அனுபவம். விளையாடிப் பாருங்கள்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்தால், அவ்வப்போது மேலும் பல நல்ல கேம்களைப் பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். உங்கள் கருத்துகளைத் தட்டி விடுங்கள்.

இதோ அண்டர்வேர்ல்டின் டீசர் ட்ரைலர். இதன் கிராஃபிக்ஸ் உங்களை அலற வைக்கும் . . இங்கே கிளிக்குங்கள்.

பி.கு – டூம்ப் ரைடர், நம்ம ஏஞ்சலீனா ஜோலி நடித்து, இரு பாகங்களாக வெளிவந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இதன் முதல்பாகம், தத்ரூபமாக இதன் பழைய கேம்களே தான். ஒரு ஜாலியான அட்வென்ச்சர். . ஒவ்வொரு கேம் உருவாகும் போதும், ஒரு மாடலை வைத்து டிசைன் செய்வது இந்த கேமின் வழக்கம். இதோ அண்டர்வேர்ல்டின் மாடல் அலிஸன் கேரல். என்ன. . டூம்ப் ரைடர் போலவே இருக்கிறதா? (என்னது.. எதுவா. . . பின்னி விடுவேன்) . .

  Comments

25 Comments

  1. க்க்க்கக்ர்ர்ர்ர்.. -நீங்க தான கருத்து மழையை பொழியச்சொன்னீங்க தல 🙂

    நமக்கு பிடிச்சது எப்பவுமே சூப்பர் மேரியோவும், பிரின்ஸ் இந்த ரெண்டுதான் தல… இப்பவும் விளையாடுறதுண்டு… இதை அடிச்சுக்க எத்தனை 3டி கேம்ஸ் வந்தாலும் முடியாது…

    டெம்ப்ளேட்டெல்லாம் மாத்தி கலக்க்கீட்டீங்க போங்க. இப்பத்தான் சத்யம் காம்ப்பெளக்ஸ் மாதிரி இருக்கு… இதுக்கு முன்னாடி பைலட் தியேட்டர் மாதிரி இருந்துச்சு… 🙂

    Reply
  2. ஆமா…. சில நல்லவலைப்பூக்கள் லிஸ்ட்டுல என்னோடதையும் சேர்த்துட்டீங்க…. நீங்க இவ்வளோ நல்லவரா? அழுவாச்சியா வர்து தல.. 🙂

    Reply
  3. பாஸு . . நம்ம டெம்ப்ளேட்டுக்கு எதிரா ஆரம்பத்துலேயே கலகக் குரல் குடுத்தது நீங்க தானே . . 🙂 . . அதான் மாத்திட்டேன் . .உங்க ப்ரோபைல் படம் சும்மா ஜம்முனு இருக்கு போங்க . . நீங்க மீச வெக்கும்போது எடுத்த படம் தானே . . 🙂

    Reply
  4. என்னோட கலகக்குரல் உருப்படியான ஒருவிசயத்துக்கு உதவுச்சே… பழைய டெம்ப்ளேட்டை வச்சு சின்ன சின்னப்புள்ளைங்களை பயமுறுத்தலாம், சிலசமயம் நானே பயந்ததுண்டு… 🙂
    போட்டோ… ஆமா தல எனக்கு ஒரு 23-24 வயசுல எடுத்தது… சும்மா கமல் மாதிரி இருக்கமுல்ல…:)

    Reply
  5. அட என்னா பாஸு . . நாம எல்லாருமே நல்லவங்க தானே . . அழாதீங்க . . நமக்கு மேல ஒரு நல்லவன் இருக்க முடியுமான்னேன் . . இஃகி இஃகி . . . அட கமழு தான் உங்கள மேரி இருக்காரு . . 🙂

    Reply
  6. //ஹாலிவுட் பாலா said… யப்பா.. இந்த கருப்பு, சிவப்புல இருந்து வெளிய வந்தாச்சா..!! இப்பதான் கண்ணுக்கு நிம்மதியா இருக்கு!! 🙂 :)//

    பாலா. . போன பதிவுல உங்க பின்னூட்டத்துக்கு பதில் போட மறந்துட்டேன் . . இப்போ தான் நினைவு வந்துச்சு . .அதான் இங்க போட்டுட்டேன் . . 🙂 ரொம்ப நாளு தேடி, இத கண்டுபுடுச்சேன் . . 🙂 இனி நோ டார்க் கலர். . ஒன்லி லைட் கலர். . .

    Reply
  7. பாஸ்,
    நான் Tomb Raider படங்கள் தான் இரண்டு பாகங்களும் பார்த்துள்ளேன்.நம்ம Angelina jolie கலக்கீருப்பாங்க.

    நானும் Games விளையாடுவேன் . ஆனால் நமக்கு புடித்தது age of empires,rise of nations, ceaser வகை கேம்கள் தான்.

    நான் வச்சிருக்குற பழைய SDROM 512 MB ,Pentium III கணினிக்கு இந்த கேம் தாங்காது பாஸ். புது template அருமை.

    அன்புடன்,
    லக்கி லிமட்

    Reply
  8. ஹாய் லக்கி . .நானும் Age of Empires கு பயங்கரமான fan . . அதுல உக்காந்தா எந்திரிக்கவே மாட்டேன் . .:-) Rise of Nations அடுத்த வாரம் இன்ஸ்டால் பண்ணப் போறேன் . .:-) சேம் பின்ச் !! 🙂

    Reply
  9. அடடே! புது template சூப்பரா இருக்கே!.
    உங்க பதிவை படிக்கறதுக்குள்ளே இருட்டில கருப்பு பூனையை தேடுற மாதிரி நாக்கு தள்ளிரும்.
    இப்போதான் கண்ணுக்கு குளிர்ச்சியா ( அந்த போட்டோவை சொல்லலை. ஹி…ஹி…)வெப்சைட் அழகா இருக்கு .
    சீக்கிரம் விளையாண்டு முடிச்ச்சுட்டு நல்ல படங்களா எழுதுங்க தல .
    ஆஸ்கார் லிஸ்ட்ல ஏதாவது தேறுமா ?

    Reply
  10. வாங்க கைலாஷ் – டெம்ப்ளேட் மாத்துனப்பறம் தான் தெரிது.. எத்தன பேரு சந்தோஷப்படுறாங்கன்னு . . இதோ எழுதிரலாம் . .ஆஸ்கர் படங்கள ஹாலிவுட் முதல்வர் அண்ணன் ஹாலிவுட் பாலா எழுதிக் குவிச்சிகினு இருக்காரு . .அதுனால, அவார்டு வாங்குன படங்கள எழுதுறேன் . .:-)

    Reply
  11. Tomb raider கேம் நான் 2Dல விளையாண்ட மாதிரி ஒரு நியாபகம்..!!
    இந்த CDயை வாங்கி எனக்கு கொரியர்ல அனுப்புங்க இதையும் விளையாண்டு பார்கிறேன்..:)

    Reply
  12. ”தீராத விளையாட்டு பிள்ளை” … Enjoy dear…

    Reply
  13. அந்த பொண்ணை.. காலை கீழப் போட சொல்லுங்க. வைஃப் இல்லாத நேரத்துல… மனசு கெட்டுட போகுது!!! 🙂

    கேம் பத்தி.. நானும் எழுதனும்னு இருந்தேன். ஆனா PS3. எனக்கு பிஸியில் விளையாடப் பிடிக்கறதில்லை. 42” டிவியில், MTG, Call of Duty, GTA விளையாடப் பிடிக்கும். அதுக்கு கம்மியான மானிட்டர்னா.. அது ப்ரௌசிங்க்கு மட்டும்தான்! 🙂

    டாம்ப் ரைடர் ரொம்ப நாளுக்கு முன்னாடி விளையாண்டிருக்கேன். அப்ப.. லாராவுக்கு… நிறைய ட்ரெஸ் ஸ்கின் கிடைக்கும். ந்யூட் ஸ்கின் அதில் ஒன்னு.

    என்னோட ஃபேவரிட் என்ன ஸ்கின்ன்னு கேட்டீங்கன்னா??

    Reply
  14. @ சூர்யா – வாங்க வாங்க . . மிகப்பல நாட்கள் கழிச்சி இங்க வந்துருக்கீங்க . .. 🙂

    @ பாலா . .சூப்பர் ! எனக்கும் PS3 உயிரு . .ஆனா, இப்போ இல்ல. . சீக்கிரமாவே நானு family man ஆக போறேன். . அப்போ ஒரு பெர்ர்ரிய டி வி வாங்கப்படும் . . 🙂 நீங்க சொன்ன Nude ஸ்கின் இப்பவும் இருக்குன்னு தான் நெனைக்குறேன். . அதுக்கு சில சீட் யூஸ் பண்ணனும் . .அந்த பழைய Nude ஸ்கின் நானு பாத்துருக்கேன் . . உங்க favorite ஸ்கின் எனக்குத் தெரியுமே . . தலைல இருந்து காலு வரைக்கும் பெர்ரிய பர்தா போட்டுகினு வர்ற ஸ்கின் தானே . . . ஹீ ஹீ

    Reply
  15. நண்பா பல புதிய தகவலுக்கு நன்றி
    கேம் ஆடுவதில் சுத்தமாய் ஆர்வம் இல்லை.
    வியந்து பார்ப்பேன் சிறிது நேரம்.
    வினோத்துக்கு சிடி பார்சல் வேணுமா?
    இங்க இருந்து அவரை வாங்கி அனுப்ப சொல்லுங்க.

    Reply
  16. மிக்க நன்றி ….
    இப்படிக்கு கேம் பைத்தியம் ….

    Reply
  17. @ கார்த்திகேயன் – 🙂 இதோ வினோத் வர்றாரு . . 🙂 🙂

    @ மகா – உங்க மிக்க நன்றிக்கி என்னோட மிக்க நன்றி – இப்படிக்கி, இன்னொரு கேம் பைத்தியம் . . 🙂

    Reply
  18. Anonymous

    Nice to see your comment about this game…

    My favorite games are Age of empires and Prince of Persia(Dos OLD but Gold version)!!!

    Soon you are going to be master of all “ENTERTAINMENT” subjects(trust me am serious ha ha ha!!!)

    All the best!!!!

    ~Sha

    Reply
  19. நண்பரே,

    பதிவு விறுவிறுப்பாக உள்ளது. எனக்கும் இவ்வகை விளையாட்டுக்களிற்கும் வெகுதூரம். இருப்பினும் உங்கள் மூலம் அவற்றை குறித்து தெரிந்து கொள்ள முடியும். தொடர்ந்து எழுதுங்கள். அம்மிணி இப்படியே காலை தூக்கி வைத்துக் கொண்டு நின்றால் கேம் சூப்பராக களைகட்டும் என்பது உண்மை :))

    உங்கள் தளத்தின் புதிய வடிவம் அழகாகவும், கவர்ச்சியாகவும் உள்ளது பாராட்டுக்கள்.

    Reply
  20. @ Sha – இன்னும் எத்தன பேரு இப்புடி கிளம்பிருக்கீங்க . . என்ன புடிச்சி ஓட்டுறதுக்கு . . அப்பறம் அழுதுருவேன் . .:-) Prince of persia, AOE ரெண்டுமே எனக்கும் புடிக்கும் . . நானு இப்போதான் The two thrones ஆடி முடிச்சேன் . . 🙂

    @ காதலரே – இந்த அம்மணியின் புகைப்பகங்கள் இன்னும் ஏராளம். . ஆனால், அவற்றையெல்லாம் இங்கே கொடுத்தால், இந்தத் தளம் முற்றிலும் வேறு முறையில் புரிந்து கொள்ளப்பட்டு விடும் . . எனவே தான் ஒரு சாம்பிள். . 🙂 உங்கள் வாழ்த்துக்கு நன்றி . .இன்னமும் சில மாற்றங்கள் செய்யப் போகிறேன் . .:-)

    Reply
  21. innum Playstation 3 la varala nu n enaikkaren. indiala play station games late ah thaan varuthu

    ippothaiku call of duty modern warfare mudichuruken, adutha game ku waiting.

    Reply
  22. நல்ல விமர்சனம்.. எனக்கு மட்டுமல்ல, எங்கள் வீட்டில் எல்லோருக்கும் இந்த கேம் பிடிக்கும், அதற்குக் காரணம் அதன் பின்புலம்தான்.. அதிலும் சிவா, காளி என்று இந்திய ஆன்மீக பின்புலங்கள் வருவதால் இன்னும் நெருக்கமாகிவிட்டது!!
    டூம் ரெய்டர் அண்டர்வேர்ல்டில் ஒரே ஒரு இடத்தில்தான் சிக்கிக் கொண்டிருக்கிறேன். (விளையாடி பலநாட்களாகிறது பெயர் ஞாபகமில்லை )

    Reply
  23. Struck in puppet no longer wall jump. 🙁

    Any cheats?

    Reply

Join the conversation