True Detective (2013) – Season 1

by Karundhel Rajesh March 17, 2014   TV

This place is like somebody’s memory of a town. And, the memory’s fading – Detective Rustin ‘Rust’ Cohle

அமெரிக்காவில் ஹாலிவுட் படங்களின் அளவுக்குப் பிரபலமானவை தொலைக்காட்சித் தொடர்கள். கிட்டத்தட்ட 50-60 வருடங்களாக அங்கு இப்படித் தொடராக வரும் சீரீஸ்கள் எக்கச்சக்கம். நமது தளத்தில் இதுவரை Sherlock (England), Game of Thrones, Firefly போன்ற சில தொடர்களைக் கவனித்திருக்கிறோம். ஆனால் இவற்றில் இருந்து மிகவும் மாறுபட்ட ஒரு தொடர் தான் ட்ரூ டிடெக்டிவ். எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை. இந்தக் கதை ஹாலிவுட்டிலேயே பலமுறை படமாக்கப்பட்டிருக்கிறது. கதை இதுதான் – ‘கொலைகாரனைக் கண்டுபிடிக்கும் இரண்டு போலீஸ் அதிகாரிகள்’. இந்தக் கதையை வைத்துக்கொண்டு, பார்ப்பவர்களின் மனதைக் கவ்வக்கூடிய வகையில் சுவாரஸ்யமாக வெளிவந்திருக்கும் தொலைக்காட்சித் தொடர் இது.

2012. மார்ட்டின் ஹார்ட் என்ற முன்னாள் போலீஸ் அதிகாரியிடம் விசாரணை நடக்கிறது. லூயிஸியானா போலீஸ் தரப்பில் இரண்டு அதிகாரிகளான தாமஸ் பபானியா மற்றும் மேய்நார்ட் கில்போ ஆகியவர்கள்தான் ஹார்ட்டை விசாரணை செய்கிறார்கள். விசாரணையின் காரணம் முதலில் நமக்குப் புரிவதில்லை. என்றாலும், பதினேழு வருடங்களுக்கு முன்னர் நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவத்தைப் பற்றித்தான் விசாரிக்கிறார்கள் என்பது புரிகிறது.

மார்ட்டின் ஹார்ட், தனது பார்ட்னராக இருந்த ரஸ்டின் கோல் என்ற நபரைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார். ஃப்ளாஷ்பேக் துவங்குகிறது (இனிமேல் கோல் என்று அபத்தமாகக் குறிப்பிடாமல், Cohle என்றே குறிப்பிடுவோம்).

அமெரிக்காவின் தென்புறத்தில் அமைந்துள்ள லூயிஸியானா மாநிலத்தில், வெர்மிலியன் என்ற சிறிய ஊரில், 1995ல் ஒரு கொலை நடக்கிறது. மிகப்பெரிய ஒரு வயல்வெளியில், கைகள் கட்டப்பட்டு வணங்குவது போன்ற நிலையில் இருக்க, கண்கள் துணியால் மறைக்கப்பட்டு, தலையில் மான்கொம்புக் க்ரீடம் அணிந்த நிலையில் ஆடைகள் இல்லாமல் ஒரு இளம்பெண்ணின் சடலம், அமர்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்படுகிறது. இந்தக் கொலையைத் துப்பறியும் பொறுப்பு, லூயிஸியானா மாநில CIDக்களான மார்ட்டின் ஹார்ட் (Martin Hart) மற்றும் ரஸ்டின் கோல் (Rustin ‘Rust’ Cohle) என்ற இருவரிடம் வழங்கப்படுகிறது. இருவரும் கொலை நடந்த இடத்துக்கு வருகிறார்கள். பிணத்தைப் பார்வையிடுகிறார்கள். காட்சிகள் ஓடும்போதே வாய்ஸ் ஓவரில் 2012ன் மார்ட்டின் ஹார்ட் பேசுவது கேட்கிறது. அந்தப் பிணத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கும் Rustin Cohle பற்றிப் பேசுகிறார். இடையிடையே 2012ல் அந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளும், Cohleஇடமும் அதே கொலையைப் பற்றி விசாரிப்பதையும் பார்க்கிறோம்.

detective101a

மார்ட்டின் ஹார்ட், பேசுவதில் விருப்பம் உள்ளவர் என்று தெரிகிறது. ஆனால் Rustin Cohle எளிதாகப் பேசும் இயல்புடையவர் அல்ல. அவர் ஒரு Pessimist. Introvert. விசாரணை நடக்கும் இடத்திலேயே சிகரெட்களைப் புகைக்க ஆரம்பித்து, ஒவ்வொரு வார்த்தையாகப் பேசி, மிகவும் அலட்சியமாக பதில்களைச் சொல்கிறார். அவர் தற்போது ஒரு மதுபான விடுதியில் Bartendeராகப்(இதற்குத் தமிழில் என்ன?) பணிபுரிகிறார் என்பதை அறிகிறோம்.

லூயிஸியானாவில் கதை நடக்கும் வெர்மிலியன் என்ற இடம், ஒரு சிறிய பகுதி. கிட்டத்தட்ட 60,000 பேரே வாழும் இடம். இதனால் அவர்களுக்குள் தொடர்புகள் அதிகம். அந்த இடத்தில் அரசியல், போலீஸ் ஆகியவையெல்லாம் ஒன்றுக்கொன்று வெகுவாகத் தொடர்புடையவை. இப்படிப்பட்ட இடத்தில் நிகழும் இந்தக் கொலை, பெரும்பாலானவர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கிறது. கூடவே, பிணத்தின் முதுகில் வரையப்பட்டுள்ள ஒரு குறியீடு, அந்த இடத்தில் கண்டுபிடிக்கப்படும் சில பொருட்கள், பிணத்தின் தலையில் இருக்கும் மான்கொம்பு, பிணம் இருக்கும் நிலை ஆகியவை, இது சாதாரணக் கொலையாக இருக்கமுடியாது என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன. கொலையின் பின்னணியில் ஒரு சைக்கோ இருக்கலாம். அல்லது தீவிரமான மதவாதிகள் அடங்கிய ஒரு குழு இருக்கலாம். இப்படிப்பட்ட நிலையில், இந்தக் கொலையின் காரணத்தை விரைவிலேயே கண்டுபிடிக்கவேண்டும் என்ற பொறுப்பு, ஹார்ட் மற்றும் Cohleன் தலையில் விழுகிறது.

ஹார்ட், அந்த ஊரின் போலீஸ் துறையில் வெகுகாலமாக இருப்பவர். ஆனால் Cohle, அப்போதுதான் அங்கே வந்திருப்பவர். இதற்குமுன்னர் அவர் எங்கிருந்தார் – என்ன செய்துகொண்டிருந்தார் என்பதெல்லாம் போலீஸ் துறையில் ரகசியமாகவே இருக்கின்றன. கூடவே Cohle ஒரு introvert என்பதால், அங்கே பணிபுரியும் பலருக்கும் அவர்மீது நல்ல அபிப்பிராயம் இல்லை. ஹார்ட்டுக்கே கூட Cohle பற்றி எதுவும் தெரியாது. அந்தக் கேஸில்தான் ஹார்ட்டுடன் Cohle முதன்முறையாகச் சேர்கிறார். இதனால் தன்னுடன் பணிபுரியும் Cohle பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது ஹார்ட்டின் இயல்பான எண்ணம். சிறுகச்சிறுக Cohle பற்றி ஹார்ட் தெரிந்துகொள்கிறார். உலகத்தைப் பற்றிய Cohleன் எண்ணங்களை அவனுடன் பேசும்போது ஹார்ட் அவ்வப்போது கேட்க நேர்கிறது. Cohle பேசுவதை வைத்துப் பார்த்தால், எதன் மீதும் நம்பிக்கையற்ற ஒரு Cynic என்பது ஹார்ட்டுக்குப் புரிகிறது. இதனால் Cohலுடன் ஹார்ட்டால் முதலில் ஒன்ற முடிவதில்லை.

தன்னைச்சுற்றி நடக்கும் எந்த விஷயத்திலும் ஒரு கருத்தை வைத்திருப்பவன் Cohle. ஆனால் ஹார்ட் அப்படி அல்ல. பகல் பொழுது முழுக்கப் போலீஸ் வேலையில் இருந்துவிட்டு, மாலையில் தனது குடும்பத்திடம் சென்று ஐக்கியமாக ஹார்ட்டால் முடியும். ஆனால் Cohleக்கு எந்தக் குடும்பமும் இல்லை. அவனுக்கு நடந்த சில பழைய நிகழ்வுகளால் அவனது மனம் இறுகிவிட்டிருக்கிறது. எனவே இருபத்து நான்கு மணி நேரங்களிலும் அந்தக் கேஸிலேயே இருந்துகொண்டு, அதனையே சிந்தித்துக்கொண்டிருக்கிறான் Cohle.

மெல்ல மெல்ல இந்தக் கேஸினுள் நுழையும் ஹார்ட்டும் Cohleம், இன்னும் சில கொலைகளைக் கண்டுபிடிக்கிறார்கள். இவையெல்லாம் முன்னரே நிகழ்ந்துவிட்ட கொலைகள். இதுவரை கண்டுபிடிக்கப்படாதவை. இவைகளை ஆராயும் Cohle, இந்தக் கொலைகளில் இருக்கும் போர்த்துவான சில அம்சங்களைக் கண்டுபிடிக்கிறான். அவைகளை ஹார்ட்டிடமும் சொல்கிறான். இருவரும் சேர்ந்து இந்த மர்மமான உலகில் பிரவேசிக்கிறார்கள். அப்போதுதான், இதுவரை நடந்ததெல்லாமே ஒரு மிகப்பெரிய மர்மத்தின் சிறிய துணுக்குகள் என்பது புரிய வருகிறது.

இப்படித்தான் ஆரம்பிக்கிறது ட்ரூ டிடெக்டிவின் முதல் எபிஸோட்.

மேற்கொண்டு பார்க்குமுன்னர், இதோ ஒன்றரை நிமிடங்கள் ஓடும் ட்ரூ டிடெக்டிவின் டைட்டில் பாடல். மறக்காமல் இதைப் பாருங்கள். The Handsome Family என்ற குழுவினரின் Far from any road என்ற பாடல். இப்படிப்பட்ட பாடல்கள் எப்படித் தேர்வு செய்யப்பட்டன என்பதைக்குறித்து, கீழே விபரமாக வருகிறது.

பாடலைப் பார்த்தவர்களுக்கு, டைட்டில்கள் எப்படி உருவாக்கப்பட்டன என்பதைப் பற்றிய மிகவும் சுவாரஸ்யமான கட்டுரை இங்கே.

[divider]

தொலைக்காட்சியோ அல்லது சினிமாவோ – படம் பார்க்கும் ஆடியன்ஸைப் பங்குபெற வைக்கும் நிகழ்ச்சிகள், எப்போதுமே சூப்பர்ஹிட் ஆகின்றன. குறிப்பாக ‘மர்மம்’ என்ற genre. தமிழில் ஒளிபரப்பான ‘விடாது கருப்பு’ நினைவிருக்கிறதா? எனது பள்ளி இறுதியாண்டு & கல்லூரி முதலாமாண்டில் வெளிவந்த தொடர். இதன் ஒவ்வொரு பாகமும் அதைப் பார்ப்பவர்களை எப்படியெல்லாம் அலைக்கழித்தது என்பதை நன்றாகவே கவனித்திருக்கிறேன். ‘டவின்சி கோட்’ நாவல் அப்படிப்பட்டதுதான். அந்தப் படமும் வெகுவாகப் பேசப்பட்டது. காரணம், நமது கண்முன்னர் வரும் கதாபாத்திரங்களும் கதையும் ‘மர்மம்’ என்ற விஷயத்தின் உள்ளே நுழைந்துவிட்டால், அதைப் பார்க்கும் நமக்கும் அதில் ஒரு ஈடுபாடு வந்துவிடுகிறது. உடனடியாக நாமுமே அதைக் கற்பனை செய்ய ஆரம்பித்துவிடுகிறோம். நமது மனதில், அந்தக் கதை எப்படி இருக்கவேண்டும் என்ற ஒரு கற்பனை உருவாகிவிடுகிறது. அந்தக் கதையும் அப்படித்தான் செல்லவேண்டும் என்று நாம் எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுகிறோம். ஆனால் அதேசமயம் இறுதியில் நாம் எதிர்பார்த்தபடி அந்தக் கதை முடியாவிட்டால் நமது மனதில் ஒருவித ஏமாற்றம் உருவாகிறது. இந்த ஏமாற்றம் நாமாக உருவாக்கிக்கொண்டதுதான் என்பதையும் மறந்துவிடக்கூடாது.

ட்ரூ டிடெக்டிவ், உலகெங்கும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்குக் காரணங்கள் பல உண்டு. அவற்றில் ஒரு காரணம், இந்த மர்ம ஜானர். மற்றொன்று, கதாபாத்திரங்கள் எழுதப்பட்டிருக்கும் விதம். Cohleம் ஹார்ட்டும் பேசிக்கொள்ளவே தேவையில்லை – அவர்களின் கதாபாத்திரங்கள் நடந்துகொள்வதைக் கவனித்தாலே அவர்களைப் பற்றி நமக்கு எளிதாகப் புரிந்துவிடும். அதுதான் திரைக்கதையின் வெற்றி. மற்றொரு காரணம், பதினேழு வருடங்கள் முன்னும் பின்னும் இந்தக் கதை ஒரே சமயத்தில் பயணிப்பது. கூடவே, இந்த இரண்டு கதாபாத்திரங்கள், சுற்றியிருக்கும் உலகையும் சமுதாயத்தையும் தங்கள் பிரத்யேகப் பார்வையில் கவனித்து, அதனை இருவருமே தங்களிடம் பகிர்வது. இந்த வசனங்கள் எல்லாமே அருமையாக எழுதப்பட்டிருக்கின்றன.
இந்தத் தொடர் முழுதுமே, கதையில் வரும் கதாபாத்திரங்களைத் தாண்டி, லூயிஸியானாவின் வெர்மிலியன் பகுதி ஒரு மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. அந்தப் பகுதியிலேயே இருக்கும் வீடுகள், இடிந்துபோன சர்ச்கள், சகதி நிரம்பிய படுகைகள், சாலைகள், வயல்கள் என்று ஒவ்வொரு எபிஸோடிலும் முழுக்க முழுக்க அந்தப் பகுதி அட்டகாசமாகக் காட்டப்பட்டிருக்கிறது. வெறுமனே அல்ல. அந்த ஒவ்வொரு காட்சியுமே கதையுடன் மிகுந்த தொடர்புடையவைதான். இந்த வகையில், இப்படிப்பட்ட இடங்களில் ஹார்ட்டும் Cohleம் தங்கள் விசாரணைகளைத் தொடரும்போது கதைக்கு ஒரு ஏற்றம் கிடைக்கிறது.

மிக முக்கியமாக, ட்ரூ டிடெக்டிவ், அடுத்த சீஸன் வரை செல்வதில்லை. இந்த முதல் சீஸனின் முதல் எபிஸோடில் ஆரம்பிக்கும் கதை, இறுதி எபிஸோடில் முடிந்துவிடுகிறது. அமெரிக்க தொலைக்காட்சி சீரீஸ்களில் இது கொஞ்சம் அபூர்வம். 99% தொடர்களில், முதல் சீசனில் ஆரம்பிக்கும் கதை, இரண்டு, மூன்று, நான்கு என்று ஜவ்வாக இழுக்கப்பட்டு, இறுதி சீசன் வரை தொடரும். அதிலும் அந்த இறுதி சீசனே இரண்டு பாகங்களாக வளர்க்கப்பட்டு, ஆடியன்ஸின் பொறுமையை வெகுவாக சோதித்து, அதன்பின்னர் தான் முடியும். இந்த வகையில், ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஆரம்பிக்கும் ஒரு சீரீஸின் முடிவைத் தெரிந்துகொள்ளக் குறைந்தபட்சம் 5-6 வருடங்கள் காத்திருக்க நேரிடும். அதற்குள் பொறுமை போய்விடும், அல்லது அந்தத் தொடர் மொக்கை திராபையாக மாறிவிடும். Breaking Bad, Dexter போன்றவை இந்த வகைகளே. அதிலும் ப்ரேக்கிங் பேட் – நான் பார்த்த சீரீஸ்களிலேயே உச்சபட்ச திராபை இதுதான். கதாபாத்திரங்களில் எந்தவித ஆழமும் இல்லாமல், கதையிலும் எந்தவிதமான சுவாரஸ்யமும் இல்லாமல், தேமே என்ற ஒரு கதை. முதல் சீசன் தாண்டுவதற்குள்ளேயே உயிர் போய்விட்டது. அந்த வகையில் Dexter பரவாயில்லை. சுவாரஸ்யமாக ஆரம்பித்து, மூன்று சீசன்கள் பரவாயில்லாமல் சென்றது. அதன்பின்னர் மொக்கையைப் போட்டது. Sherlock  (Click and read the review) அட்டகாசமாக இருந்ததன் காரணமும் இதுதான். ஒவ்வொரு சீசனிலும் அந்தந்தக் கதைகள் முடிந்துவிடுகின்றன (ஆனால் மூன்றாவது சீசனில் கொடூர மொக்கையைப் போட ஆரம்பித்துவிட்டது ஷெர்லக். இத்தோடு முடிந்துவிட்டால் தேவலாம்). சிலசமயங்களில் ஆரம்பித்த சீரீஸ், அடுத்த வருடத்தில் அனுமதி கிடைக்காமல் அந்தரத்திலேயே தொங்குவதும் உண்டு. எனவே அதன் இறுதி யாருக்குமே தெரியாது. Firefly  (Click and read) ஒரு உதாரணம். Game of Thrones, அட்டகாசமாகத் துவங்கியது. இரண்டாம் சீஸன் பரவாயில்லை. மூன்றாம் சீஸன் தாங்கவே முடியாத அறுவை. (கேம் ஆஃப் த்ரோன்ஸுக்கும் நான் விமர்சனம் எழுதியிருக்கிறேன் (??!!). முதல் இரண்டு சீஸன்களுக்கு. இங்கே)

கூடவே, ட்ரூ டிடெக்டிவுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. பொதுவாக எல்லாத் தொடர்களிலும் ஒவ்வொரு எபிஸோடையும் ஒவ்வொருவர் எழுதி, ஒவ்வொருவர் இயக்குவர். ஆனால் இதில் எல்லா எபிஸோட்களையும் எழுதியவர் ஒரே நபர்தான். நிக் பிஸ்ஸலாட்டோ (Nick Pizzolatto). அதேபோல், எல்லா எபிஸோட்களையும் இயக்கியவரும் ஒருவர்தான். கேரி ஜோஜி ஃபுகுனாகா (Cary Joji Fukunaka). இதுவுமே அமெரிக்க தொலைக்காட்சித் தொடர்களில் மிகவும் அரிது. இதற்கு முன்னர் இப்படி வந்தவைகளில் John Adams  முக்கியமானது.
[divider]
இதையெல்லாம் தாண்டி இந்தத் தொடர் சூப்பர்ஹிட் ஆனதன் காரணம், இதன் கனமான-ஆழமான வசனங்கள். Cohle பேசும் பல வசனங்கள் இப்படித்தான். ‘தத்துவங்கள் நிரம்பிய இந்த வசனங்கள், யாரோ ஒரு asshole மப்பின் உச்சத்தில் உளறுபவை அல்ல. மாறாக, தற்காலத்தின் விஞ்ஞானமும் தத்துவமும் சந்திக்கும் இடங்களில் எழக்கூடிய observationகளே’ என்பது திரைக்கதை எழுதிய நிக் பிஸ்ஸலாட்டோவின் கருத்து.

இதோ ஒருசில Rustin ‘Rust’ Cohle வசனங்கள்.

‘If the only thing keeping a person decent is the expectation of Divine reward then, Brother, that person is a piece of shit. And I’d like to get as many of them out in the open as possible’

‘People … I have Seen the Finale of thousands of Lives, man. Young, old, each one so sure of their realness. You know that their sensory experience constituted a unique individual with purpose and meaning. So certain that they were more than biological puppet. The truth wills out, and everybody sees. Once the strings are cut, all fall down’.

‘This … This is what I’m Talking about. This is what I mean when I’m talkin ‘about time, and death, and futility. all right there are broader ideas at work, mainly what is owed between us as a society for our mutual illusions. 14 straight hours of staring at DataBases, these are the things ya think of. You ever done that? You look in their eyes, even in a picture, doesn’t matter if they’re dead or alive, you can still read ’em. You know what you see? They welcomed their deaths … not at first, but … right there in the last instant. It’s an unmistakable relief. See, cause they were afraid, and now they saw for the very first time how easy it was to just … let go. Yeah They saw, in that last nanosecond, they saw … what they were. You, yourself, this whole big drama, it was never more than a jerry rig of presumption and dumb will, and you could just let go. To finally know that you didn’t have to hold on so tight. To realize that all your life, all your love, all your hate, all your memories, all your pain, it was all the same thing. It was all the same dream, a dream that you had inside a locked room, a dream about being a person. And like a lot of dreams, there’s a monster at the end of it’.

‘I Think Human consciousness is a tragic misstep in evolution. We became too self-aware, nature created an aspect of nature separate from itself, we are creatures that should not exist by natural law. We are things that labor under the illusion of having a self; an accretion of sensory, experience and feeling, programmed with total assurance that we are each somebody, when in fact everybody is nobody. Maybe the honorable thing for our species to do is deny our programming, stop reproducing, walk hand in hand into extinction, one last midnight, brothers and sisters opting out of a raw deal’.

‘Life’s barely long enough to get good at one thing. So be careful what you get good at.’

‘This place is like somebody’s memory of a town, and the memory is fading. It’s like there was never anything here but jungle’.

‘People out here, it’s like they do not EVEN know the outside world exists. Might as well be living on the f**king Moon’.

இந்தத் தொடரின் மைய இழை, சைக்கோ கொலைகாரனைக் கண்டுபிடிப்பது இல்லை. இந்தத் தொடரில் ஒரே ஒரு கொலைதான் காண்பிக்கப்படுகிறது என்பதைத் தொடரைப் பார்க்கும்போது உணரலாம். தொடரின் மைய இழை – அந்தக் கொலையைச் செய்யக்கூடிய உணர்வு எங்கிருந்து தொடங்குகிறது என்பதை உணர்வதுதான். இந்த உணர்வு, தொடரில் வரும் இரண்டு போலீஸ்காரர்களின் மனத்திலும் இருக்கிறது. அதே சமயம், தொடரைப் பார்க்கும் நமது மனத்திலும் உள்ளது. இந்த உணர்வுக்கான வேர் எது என்பதைத்தான் இந்தத் தொடர் கவனிக்கிறது என்று இதை எழுதிய நிக் பிஸ்ஸலாட்டோ சொல்லியிருக்கிறார்.
[divider]
ஒரு தொடரோ அல்லது திரைப்படமோ, இசை அதில் முக்கியமான பங்கு வகிக்கிறது. அந்த வகையில் ட்ரூ டிடெக்டிவுக்கு இசையமைத்தவர், பிரபல இசையமைப்பாளரும், பாடகரும், ஆஸ்கர் பரிசு வாங்கியவருமான T Bone Burnett. கோயன் சகோதரர்களின் ஆஸ்தான இசை கன்ஸல்டண்ட். குறிப்பாக Inside llewyn Davis, O Brother, Where Art Thou? The Big Lebowski போன்ற படங்கள். ட்ரூ டிடெக்டிவுக்கு இசையமைத்தது பற்றி அவர் விரிவாகப் பேசியிருக்கிறார்.

பொதுவாக ஒரு திரைப்படத்துக்கோ அல்லது சீரீஸுக்கோ இசையமைக்கும்போது, அதன் genre எப்படிப்பட்டது என்பதில்தான் அந்த இசையின் அடிநாதம் இருக்கும். ஆனால் இதில், கதாபாத்திரங்கள்தான் இசைக்கு அடிப்படையாக இருக்கின்றன. அப்படித்தான் இசையமைத்திருக்கிறார் பர்னெட். ஏனெனில், கதாபாத்திரம் எத்தனை ஆழமாக இருக்கிறதோ, அத்தனைக்கத்தனை அதனைப் பற்றிய இசை விரிவாக இருக்கும் என்பது அவரது கொள்கை. உதாரணமாக, தொடரில் வரும் Rust Cohle ஒரு உறுதியான மனிதன். அவன் தனியே இருக்கும்போது எந்தவகையான பாடல்களைக் கேட்பான்? மைக்கேல் ஜாக்ஸனைக் கேட்டுக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தால் அந்தப் பாத்திரத்தின் அடிப்படையே ஆட்டம் கண்டுவிடும். எப்போதுமே இறந்துபோன மனிதர்களின் உடல்களின் புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டும், சிகரெட் புகைத்துக்கொண்டும் (இது பற்றித் தனியே பின்னால் வரும்) இருக்கும் அவன், Captain Beefheart கேட்டால் கச்சிதமாக இருக்கும். கேப்டன் பீஃப்ஹார்ட்டை Cohle கேட்பதன் காரணம்தான் அவனது தத்துவ சம்மந்தமான வசனங்களோ என்று கூட நம்மை எண்ணவைக்கும் விதமாக துல்லியமாகப் பின்னணியில் பாடல்களை சேர்த்திருப்பது பர்னெட்டின் ஜீனியஸ் (நிஜமாகவேதான்). Country Music மற்றும் psychedelic rock ஆகியவைகளைக் கச்சிதமாக உள்ளே நுழைத்திருக்கிறார் பர்னெட். Country Music ஏனெனில், சீரீஸ் முழுதுமே அந்தக் குறிப்பிட்ட நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்டது.

இதோ இன்னொரு பாடல். இது, Grinderman – Honey Bee (Let’s fly to mars). இது, ஒரு குறிப்பிட்ட அட்டகாசமான காட்சியில் வருகிறது. அது எந்தக் காட்சி என்று ட்ரூ டிடெக்டிவ் பார்த்தவர்கள் சொல்லிவிடுவார்கள். மற்றவர்களுக்காக- இதில் ஒரு ஆறு நிமிட ஒரே ஷாட் காட்சி வருகிறது. அந்தக் காட்சியின் இறுதியில் வருகிறது இது.

இப்படி, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஆராய்ந்து, அதற்கேற்ற இசையை அமைத்தார் பர்னெட். அதனால்தான் ட்ரூ டிடெக்டிவின் பின்னணியில் வரும் பாடல்கள் மிகச்சரியாக அந்தத் தருணத்தின் moodடைப் பிரதிபலிப்பனவாக இருக்கின்றன.

ட்ரூ டிடெக்டிவின் முழு Soundtrackகும் கேட்க, இங்கே க்ளிக் செய்யலாம். எல்லாப் பாடல்களையும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள். அந்த உணர்வே ட்ரூ டிடெக்டிவுக்கு உங்களைத் தயார் செய்யும்.
[divider]
Rustin ‘Rust’ Cohle என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மேத்யூ மெக்கானஹி (Matthew McConaughey). இந்தத் தொடரைப் பார்க்க ஆரம்பித்த நேரத்தில் அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் என் மனதில் இல்லை. இதனாலேயே இன்டர்ஸ்டெல்லார் படத்தில் அவர் நடிப்பது பற்றி எனக்குச் சில கேள்விகள் இருந்தன. ஆனால் முதல் எபிஸோடைப் பார்த்து முடித்தபின்னர் அவர் மேல் நான் வைத்திருந்த கருத்து முற்றிலும் மாறியது (இதற்குப் பின்னர்தான் Dallas Buyers Club பார்த்தேன்). இந்தக் கதாபாத்திரம் 17 ஆண்டுகளுக்கு முன்னும் பின்னும் வருவதால், அந்தப் பதினேழு ஆண்டுகளுமே அந்தக் கதாபாத்திரம் என்ன செய்துகொண்டிருந்தது என்பதற்கான ஒரு பெரிய அட்டவணை தயாரித்து வைத்திருந்தாராம் மெக்கானஹி. அதில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதமும் அந்தப் பாத்திரம் எங்கு வாழ்ந்தது, அதன் குணாதிசயங்கள் எப்படி இருந்தன போன்ற எல்லா விபரங்களும் அடக்கம். இதனால் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ மெக்கானஹியால் முடிந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரை, டல்லாஸ் பையர்ஸ் க்ளப்பையும் தாண்டி, இதுதான் மெக்கானஹியின் சிறந்த நடிப்பு. கடந்த சில வருடங்களாகவே மெக்கானஹி அட்டகாசமான படங்களில் நடித்து வருவதை ‘The Mcconaissance’ என்று விமர்சகர்கள் வர்ணிப்பது தெரிந்திருக்கும். மெக்கானஹியின் எழுச்சியை விளக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தை அது. வரும் வருடத்தில் Emmy விருதை ட்ரூ டிடெக்டிவுக்காக மெக்கானஹி அவசியம் வெல்வார் என்பது என் கணிப்பு.

குறிப்பாக, Cohle பாத்திரம் அறிமுகமாகும் முதல் காட்சியைக் கவனியுங்கள். 2012ல், போலீஸ் அறையில் அமர்ந்திருக்கும் Cohle, எப்படிப் பேசுகிறான் என்பதையும் கவனியுங்கள். அவனது உடல்மொழி எப்படி இருக்கிறது என்று பார்த்துவிட்டு, அப்படியே ஃப்ளாஷ்பேக்கில் 1995ல் அவன் எப்படி இருக்கிறான் என்பதையும் கவனித்து ஒப்பிட்டால் மெக்கானஹி செய்துள்ள கேரக்டர் ஸ்டடி புரியும். கூடவே, இந்த சீரீஸ் முழுதுமே எப்போது பார்த்தாலும் சிகரெட் பிடித்துக்கொண்டே இருக்கும் கதாபாத்திரம் இந்த Cohle. அதிலும் சாதாரணமாக அல்ல. ஒரே இழுப்பில் அந்த சிகரெட்டே காலியாகிவிடுவதைப் போன்ற இழுப்பு. அப்படி இழுத்துவிட்டு அவர் பேசுவதையும் கவனியுங்கள். இதுபோன்ற சின்னச்சின்ன வெளிப்பாடுகளால் Cohle பாத்திரம் ஒரு மறக்கமுடியாத பாத்திரமாக ஆகிவிடுகிறது.

இந்தக் கதாபாத்திரத்துக்கு இணையாக, Cohlலிடம் இல்லாத சில குணாதிசயங்களுடன் இருப்பதுதான் மார்ட்டின் ஹார்ட். வூடி ஹாரல்ஸன் நடித்திருக்கும் பாத்திரம். இந்த இரண்டு பாத்திரங்களுமே, ஒருவரிடம் இல்லாத சில குணாதிசயங்களை அடுத்தவர் பெற்றிருப்பதுபோல எழுதப்பட்டிருக்கும். இதனால், ஒரே மனதின் இரண்டு பாகங்களாக இந்த இருவரையும் நினைத்துப் பார்க்க முடியும். அப்படி ஒவ்வொருவரிடமும் இல்லாத சில விஷயங்களை அடுத்தவர் புரிந்துகொண்டு, அந்த விஷயத்துக்காக ஏங்கும் மனதைக் கட்டுப்படுத்திக்கொள்வது மிகவும் நுட்பமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் ஹார்ட்டின் மனைவி Maggie. இது ஏன் என்பது தொடர் செல்லச்செல்ல விளங்கும்.

Cohle மற்றும் ஹார்ட் ஆகிய இருவரும் பேசும் விதங்களைக் கவனித்தால், அவர்களின் குணாதிசயம் புரியும்.

இந்தத் திரைக்கதையை எழுதிய நிக் பிஸ்ஸலாட்டோ, தனது ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, இனிமேல் தொலைக்காட்சியில்தான் தனது எதிர்காலம் என்று முடிவுசெய்து, தளராமல் அமர்ந்து எழுதிய ஆறு எபிஸோட்களில் ஒன்றுதான் ட்ரூ டிடெக்டிவ். பல கைகள் மாறி, பின்னர் மேத்யூ மெக்கானஹியின் கைகளுக்குச் சென்று, அதை அவர் படித்ததுமே உற்சாகமாக இதில் நடிப்பதாக ஒப்புக்கொள்ள, ட்ரூ டிடெக்டிவின் சகாப்தம் துவங்கியது. அதிலும் மெக்கானஹி நடிப்பதாக இருந்தது வூடி ஹாரல்ஸன் நடித்திருந்த மார்ட்டின் ஹார்ட் பாத்திரம்தான். ஆனால் Cohle கதாபாத்திரத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட மெக்கானஹி, அதில் தானே நடிப்பதாகச் சொல்லிவிட்டார்.

எனது தனிப்பட்ட கருத்து – இதுவரை தொலைக்காட்சியில் நான் பார்த்த சீரீஸ்களில் இதுதான் நம்பர் 1. சந்தேகமே இல்லை. Rustin ‘Rust’ Cohle கதாபாத்திரத்தை இனிமேல் மறக்கவே முடியாது என்று தோன்றுகிறது.

பி.கு

ட்ரூ டிடெக்டிவ் பற்றிய இன்னும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ள, இதோ இந்த லிங்க்களைப் படிக்கலாம். கூடவே, இந்தக் கட்டுரையிலேயே ஆங்காங்கே பல லிங்க்கள் உள்ளன. அவை அத்தனையையும் படித்தீர்கள் என்றால், உங்களாலும் ட்ரூ டிடெக்டிவை மறக்க இயலாது.

Director Cary Joji Fukunaka’s Interview

Writer Nick Pizzolatto’s Interview

  Comments

15 Comments

  1. Amazing Review Karundhel!!!!!!

    I’m not a big Fan of Crime mystery genre. But have watched 1st season of ‘CASTLE’ earlier(stopped watching later) and have been watching ‘SHERLOCK'(as it also have nice humor in it). Is there any dose of humor in ‘True Detective’ ? – If so, then I’ll try to watch.

    I loved Sherlock season 3. Yes, it had no great plot but I believe they tried to incorporate many Sherlock(Book) attributes and even mocking it – Smoking, Socializing, Dating. And it had so much humor.

    I felt the same for Breaking Bad, after watching for the rave reviews & ratings. It looked Good in overall plot & Finale, but it was so DULL. A Series full of Fillers.

    Yes, I too didn’t liked GOT Season 3. And Yes, I’d watched ‘Firefly'(still wondering why they canceled it).

    Try to watch Marvel’s agents of S.H.I.E.L.D(from Joss Whedon), You may like it. It’s been a really nice Action Adventure Series so far. Its a followup to the Movie ‘AVENGERS’.

    Reply
    • Rajesh Da Scorp

      Nope Kishore. There is no dose of humor in True Detective. It’s a dark, grim series. About Sherlock, that Humor doesn’t go well with hardcore Holmes fans like me, since we considered the first two seasons of Sherlock as brilliant portrayals of Holmes. That’s why we were disappointed to see the third season, which was more like the movie version starring Robert Downey Jr, which again was like a parody of Holmes. BUt – opinions differ, aren’t they?

      And good to know that you felt the same about Breaking Bad and Firefly and GOT.

      About S.H.I.E.L.D, I will surely watch it, as Joss Wheadon is a favorite of mine. Let the two remaining episodes finish, and then I ‘ll grab it like anything :-). Cheers.

      Reply
      • Yes you’re right. Many of my Friends(Avid Sherlock Fans) didn’t liked Season 3 & Sherlock Homes 2 – A Game of Shadows(which I liked).

        Reply
  2. Koushik

    Great Work. I have been a passive follower of your blog for a long time. This time I really want to say something.

    I finished watching True Detective few days back.. I couldn’t accept that it was completed. I was so much into it..
    I have been watching it again and again.

    The problem is I didnt have anyone to share this feeling as all my friends they just started thinking about it.

    Your article was great and I felt like I have shared my thoughts..

    Thanks.

    Reply
    • Rajesh Da Scorp

      Thank you for being a long term passive follower Koushik. Not anymore, since you have decided to comment at last 🙂 .. It’s great to know you too liked True Detective. The feeling is mutual. Cheers.

      Reply
  3. ட்ரூ டிடெக்டிவ் பார்த்த எல்லாருக்குமே ஃபேவரிட் டாப் 3 க்குள் தான் இருக்கிறது!! அட்டகாசமாக எல்லா ஏரியாவையும் கவர் பண்ணி எழுதியிருக்கீங்க 🙂
    Rustin Cohleஇன் “Life’s barely long enough to get good at one thing. So be careful what you get good at.” வசனமும்
    Martin Hartஇன் “You are like the Michael Jordan of being son of a b**ch” வசனமும் என்னுடைய ஃபேவரிட்!

    நான் அவதானிச்சதில் சீரிஸின் இன்னொரு முக்கிய பிளஸ்பாயின்ட் மேக்கப்பும், ட்ரெஸ் செலெக்ஷனும் கூட.. மேத்தியு மெக்கானஹேவுக்கு 1995, 2002, 2010, 2012 கேரக்டர்களுக்கிடையில் வித்தியாசம் காட்டியிருப்பது பிரதானமானது! Ledoux House incidentல் ரெண்டு பேரும் போட்டிருக்கும் ட்ரெஸ்ஸை பார்த்தீர்களா? 1995லேயே மரண கெத்தாக இருக்கும். அதேபோல் கடசி எப்பிசோடில் ரஸ்டின் அணிந்து வரும் பளீச் வெள்ளை சேர்ட்.. ஏனென்றே தெரியவில்லை, கிளைமேக்ஸுக்கு முழுப் பொருத்தமானதாக தோன்றியது!

    Reply
    • Rajesh Da Scorp

      யெஸ். மேக்கப் plays a very important role. நீங்க சொன்னமாதிரி ட்ரஸ்ஸும்தான். கூடவே, இதுல வர்ர கார்கள் எனக்கு ரொம்பப் புடிச்சது.

      அந்த Ledoux incident dress மறக்கவே முடியாது. இவனுங்க எல்லாத்தையும் பர்ஃபெக்ட்டா யோசிச்சிதான் செஞ்சிருக்காங்க 🙂 .. படுபயங்கரமா அப்ஸர்வ் பண்ணிருக்கீங்க 🙂

      Reply
  4. Abarajithan

    கண்டிப்பா பார்க்கறேன். அப்புறம் ஷெர்லாக் Season 3 பத்தி எழுதலயா?

    Reply
  5. anbu

    super article sir.

    Reply
  6. vincent vinusuthan

    it made all other crime dramas like a ‘child’s play’, your article made me to watch it.. peculiar that they didn’t show any victims outwardly. thanks for the info!!!!

    Reply
  7. இவ்வளவு புகழ்ந்து தள்ளியிருக்காரே, ப்ரேக்கிங் பேட், ஷெர்லக்லயும் நம்ம கருத்துகள் ஒத்துப்போகுதே இதுவும் நிச்சயம் நல்லாதான் இருக்கும்னு அவசர அவசரமா ரெண்டே நாள்ல பார்த்து முடிச்சேன்.

    டெக்னிகலா எந்த சீரியல்லயுமே குறை சொல்ற அளவுக்கு எனக்கு மேட்டர் தெரியாது, அதை விட்டுருவோம். என்னவோ ஒரு புத்திசாலி டிடெக்டிவ் பத்தி பேசப்போறாங்கன்னு தோணவைக்கற கதைல, அந்தாள் 20 வருஷம் முக்கித்தான் கண்டுபிடிக்கறான், அதுவும் முக்கியமான ட்விஸ்ட் கண்டுபிடிப்பை கூடவே வர அரைமுட்டாள் மார்டிதான் கண்டுபிடிக்கிறான்.

    முதல் எபிசோட்ல ஒரு கொலை நடக்குது. ரொட்டீன் இன்வெஸ்டிகேஷன் தவிர வேற எந்த இன்ஸ்பைரிங் விஷயமும் நடந்தாப்பல காட்டவெ இல்லை.அரசியல் தலையீடு, டிபார்ட்மெண்ட் பாலிடிக்ஸ்னு எல்லாத்தையும் சொல்றாங்க ஆனா கடைசில ஒத்தை குண்டு வில்லன் அசால்டா சாவறான்.இவ்ளோ நாளா நியூஸே வெளிய வராம பார்த்துகிட்டிருந்தாங்கன்னு சொல்றாங்க. எப்படி திடுதிப்புன்னு அலவ் பண்ணாங்க? இவன் அனுப்பின ஆதாரம்தான் காரணம்னா, அந்த ஆதாரத்தை போலீஸ்கிட்ட கொடுத்துட்டு இவன்பாட்டுக்குக் குச்சி ஐஸ் சப்பிகிட்டிருந்திருக்கலாமில்ல?

    மார்ட்டியோட குடும்ப வாழ்க்கையை விலாவரியா அவன் பொண்ணோட கேரக்டர் ஏன் இப்படி மாறுதுன்னு ஆரம்பிச்சு மாமனார் மாமியார் வரை காட்டறாங்க. கோல் ஒரு பொண்ணோட குடும்பம் நடத்தினதையே வெறும் ஒத்தை டயலாக்ல க்ராஸ் பண்ணீடறாங்க. ஒருவேளை அந்த ஆட்ரி கேரக்டர் கதைக்கு ரொம்ப முக்கியமான்னு பார்த்தா அதுவும் இல்லை.

    எந்நேரமும் ஊரைக் குறுக்காலயும் நெடுக்காலயும் அளவெடுத்துகிட்டிருக்காங்க, எதாச்சும் நடக்கும்நடக்கும்னு பார்த்தா சீரியலே முடிஞ்சுபோச்சு. ஒரு Morbid ஃபீல்-ஐக் கொடுத்துகிட்டே இருந்தது. – அதுதான் (ஹன்னிபால் மாதிரி) நோக்கம்னா, அதை வெற்றின்னு சொல்லலாம்.

    மத்தபடி, சப்பை கதை, சப்பை திரைக்கதை, அப்பப்ப, மச்சி வாழ்க்கைன்றது-டைப்ல வசனம்,,

    எனக்கு சுத்தமா பிடிக்கலை!

    Reply
    • Rajesh Da Scorp

      சுரேஷ்.. அதெல்லாம் ஃப்ரீயா உடுங்க.. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங் இல்லையா? சியர்ஸ்

      Reply
  8. Accust Here

    இதை பார்க்கலாம்னு நெனச்சப்ப Two and Half men(Hollywood bala பதிவை பார்த்து) பார்க்க ஆரம்பித்தேன், அட்டகாசமாக உள்ளது இரண்டு சீசன் பார்த்தேன் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகி விட்டது(சில காமெடி புரியல) தற்போது மூன்றாவது சீசன் பார்த்துகொண்டிருகிறேன். நீங்கள் பார்த்து விட்டிரா. முடிந்தால் பார்த்துவிட்டு அதற்கும் ஒரு பதிவு போடுங்கள். True Detective is postponed, will reply after seen it.

    Reply
  9. Koveanthan

    @Rajesh, Have you watched the television series “The sopranos”? I have been watching it from last week. It remembered me of the italian american gangster movies like “GoodFellas”,”once upon a time in america”. But it attracted me even to a higher level. Like to know your analysis of “THE SOPRANOS”. Please do watch when you are free.

    P.S: “The sopranos” is the first television series I am watching. While watching it i came to realise that each episode go by the same screenplay structure as for a movie. But concealed with the character layer on the top(atleast incase of sopranos). I will be great if you could write an articles on “the difference between the screenplay structure for a movie and tv series”. Are they both same?

    Reply
  10. True Detective Season 1 மறக்க முடியாத ஒரு சீரிஸ்! ரஸ்டியை மறக்க முடியாமல் ஒரு ஆர்வத்தில் அவனது தத்துவார்த்த வசனங்களைத் தொகுத்து ஒரு கட்டுரையாக மொழிபெயர்த்திருக்கிறேன். https://goo.gl/idosQR

    Reply

Join the conversation