காதல் – Unforgettable OSTs

by Karundhel Rajesh October 27, 2012   English films

ஒரு பார்ட்டி. அந்த பார்ட்டியின் காரணம், ஒரு பெண்ணின் பிறந்தநாள். ஆனால் அங்கு குழுமியிருக்கும் மக்களிடையே சிரித்துப் பேசியபடி அவர்கள் கொண்டுவந்திருக்கும் பரிசுகளை வாங்க, அந்தப்பெண் அங்கே இல்லை. வீட்டின் வெளியே யாருமற்ற ஒரு இடத்தில் நின்றுகொண்டு வெற்றுப்பார்வை பார்த்துக்கொண்டிருக்கிறாள். அவளது காதலன் ஏற்பாடு செய்திருக்கும் பார்ட்டி. இந்தப் பெண்ணின் மனதில் நிம்மதி இல்லை. ஒரு வித வெறுமையில் அவளது வாழ்வு நிரம்பியிருக்கிறது. அப்போது ‘ஹாய்’ என்று ஒரு குரல். ஒரு இளைஞன். அவனுக்கு அவளைப் பற்றி மிக நன்றாகத் தெரியும். அவனது வாழ்க்கையின் தேவதை அவள். ஒவ்வொரு தினமும் அவனது மனதில் தோன்றிக்கொண்டே இருப்பது அவளது முகம். அவளை இதற்குமுன்னர் ஒரே ஒரு முறை – மிகச்சில நிமிடங்களுக்கு மட்டுமே- நேரில் பார்த்திருக்கிறான். இப்போது அவனது கனவு இளவரசியின் முன்னர் தனிமையில் இரவில் நிற்கும் இந்தத் தருணத்தை அவனால் வாழ்வில் மறக்கவே முடியாது. அவளிடம் தயங்கியபடியே பேச ஆரம்பிக்கிறான் இளைஞன். பின்னணியில் பார்ட்டி நடக்கும் இடத்திலிருந்து மிக அழகான பாடல் ஒன்று ஒலிக்கிறது.

I’m very sure, this never happened to me before
I met you and now I’m sure
This never happened before

Now I see, this is the way it’s supposed to be
I met you and now I see
This is the way it should be

This is the way it should be, for lovers
They shouldn’t go it alone
It’s not so good when your on your own

So come to me, now we can be what we want to be
I love you and now I see
This is the way it should be
This is the way it should be

இந்தப் பாடல், அந்த இளைஞனின் மனதில் எழும் உணர்ச்சிகளை எழுத்தில் வடிப்பதாக இருக்கிறது. அவனால் எடுத்த எடுப்பில் அந்தப் பெண்ணிடம் பேசிவிட முடிவதில்லை. அவனது மனம்கவர்ந்த பெண். அவளிடம் பேச வார்த்தைகள் சிக்குவதில்லை. தயங்குகிறான். அப்போது பாடல் வரிகள் ஒலிக்க, ‘நீ பாடுவாயா?’ என்று அபத்தமான கேள்வி ஒன்றைக் கேட்கிறான். அவள் இவனிடம் பேச ஆரம்பிக்கிறாள். ‘பாடமாட்டேன்..நான் பாடினால் நீ ஓடவேண்டி இருக்கும். . ‘. . இதன்பின் இருவருமே வார்த்தைகளற்ற ஒரு தயக்கத்தில் சில நொடிகள் மௌனத்தில் கழிக்கிறார்கள். திடீரென, ‘ஆனால் நான் ஆடுவேனே’ என்கிறாள் அவள். இரண்டு கைகளையும் விரித்துக்கொண்டு. மெல்ல அக்கைகளைப் பற்றியபடி மிகுந்த சந்தோஷத்தில் ஆவலுடன் ஆட ஆரம்பிக்கிறான் இளைஞன். யோசித்துப் பாருங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த பெண். அவளைப் பார்த்தாலே விண்ணில் இருந்து இறங்கிய தேவதையைப் பார்ப்பது போன்ற ஒரு மரியாதை, பரவசம் ஆகியவை உங்கள் மனதில் எழும். அப்படி ஒரு பெண், உங்கள் முன்னர் நின்றுகொண்டு,  ‘என்னுடன் ஆடுகிறாயா’ என்று கேட்டால்?

அதுதான் இந்தப் பாடல். This never happened before. The Lake House என்ற அழகான படத்தில் வருவது.

எனக்கு மிகவும் பிடித்த ஆங்கில Soundtrackகளுடன் நண்பர்களை இந்தப் புதிய வடிவமைப்பில் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி. இந்தத் தளத்தை இந்த அளவு மாற்றியமைத்திருப்பது – ஹாலிவுட் பாலா & தமிழினியன். இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று சொன்னால் உதைப்பார்களோ? ஆனால் அவர்கள் இல்லாமல் இந்தத் தளம் இல்லை. குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களில் இரவும் பகலும் கஷ்டப்பட்டு இந்த வடிவமைப்பை முடித்தவர் ஹாலிவுட் பாலா. இதுவரை ப்ளாக்கரில் இயங்கிக்கொண்டிருந்த இந்தத் தளம், இப்போதிலிருந்து சொந்தமாக ஹோஸ்டிங் செய்யப்படுகிறது. WordPress உதவியுடன். இது ஒரு பீட்டா வெர்ஷன் என்று வைத்துக்கொள்ளலாம். இன்னும் சில சிறிய வேலைகள் பாக்கி இருக்கின்றன. ஒவ்வொன்றாக அவ்வப்போது முடிக்கப்படும். அதேபோல், பாலாவின் நண்பர் சுபாஷையும் மறக்க முடியாது. கடந்துபோன சில நாட்களில் பல உதவிகள் இந்தத் தளத்துக்கு செய்திருக்கிறார். மிக்க நன்றி சுபாஷ்.

காதல், ஒரு மிக அருமையான உணர்வு. அப்படிப்பட்ட உணர்வை அதன் அழகு கெடாமல் திரையில் காட்டியுள்ல படங்கள் பல இருக்கின்றன. அந்தப் படங்களில் சில பாடல்கள், அப்படங்களை என்றுமே அழியாத படங்களாக மாற்றியிருக்கின்றன. அப்படிப்பட்ட Original SoundTrack – OST எனப்படும் சில பாடல்களையே இங்கே பார்க்கப்போகிறோம்.

அடுத்த பாடல் – புகழின் உச்சியில் இருக்கும் நடிகை ஒருத்திக்கும், சாதாரண புத்தகக்கடை வைத்திருக்கும் introvert ஒருவனுக்கும் இடையே மலரும் காதலைப் பற்றியது. ஒருநாள் இவனது கடைக்கு வரும் நடிகை, இவனுடன் சகஜமாக பேச்சுக்கொடுக்க, அதன்பின் அந்த நடிகையைப் பார்க்கப்போகும் அவனது மனதில் காதல் துளிர்க்கிறது. இவனது குடும்பத்தை சந்திக்க அந்த நடிகையை அவன் அழைக்க, திடீரென இவனது வீட்டுக்கு வருகிறாள். குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இவளைப் பிடித்துப்போகிறது. அழகாகக் கழிகின்றன நிமிடங்கள். இறுதியில், இரவில், அந்த நடிகையை அவள் தங்கியிருக்கும் இடத்தில் விடுவதற்காக அவளுடன் நடக்கிறான் அவன். யாருமற்ற தெருக்கள். பனி. மிக இயல்பாக இருக்கும் அந்த நேரத்தில் காதல் இருவரையும் போர்த்துகிறது. அங்குள்ள ஒரு பூங்கா பூட்டப்பட்டிருக்க, அதன் கதவை ஏறிக்குதித்து உள்ளே புகும் நடிகை இவனையும் அழைக்க, மிகுந்த கஷ்டப்பட்டு உள்ளே நுழைகிறான்.

அந்தப் பூங்காவில் ஒரு பெஞ்ச். அதில், For June, who loved this garden – From Joseph – Who always sat beside her என்ற அழகான வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. இருவரும் அதில் அமர்கிறார்கள். அப்போது ஆரம்பிக்கிறது நெஞ்சை வருடும் அந்தப் பாடல்.

 

It’s amazing How you can speak
Right to my heart
Without saying a word,
You can light up the dark
Try as I may I could never explain
What I hear when
You don’t say a thing

The smile on your face
Lets me know That you need me
There’s a truth In your eyes
Saying you’ll never leave me
The touch of your hand says
You’ll catch me Whenever I fall
You say it best
When you say Nothing at all

எவ்வளவு அட்டகாசமான வரிகள் அல்லவா?

இதுபோன்று ஆங்கிலப் படங்களில் காதல் தருணங்கள் மிக அழகாகக் காட்டப்பட்டிருக்கும் படங்கள் பல உண்டு. அவற்றில் இன்னொரு நல்ல படம் – Love Actually. இந்தப் படத்தில் ஒரு காட்சி – மறக்கவே முடியாதது.

படத்தில் வரும் ஒரு பெண், கறுப்பின ஆண் ஒருவனை காதலித்து மணந்துகொள்கிறாள். ஆனால் அவனது நண்பன் ஒருவனுக்கும் இந்தப் பெண்ணை மிகவும் பிடிக்கும். அது அவளுக்குத் தெரியாது. நண்பனின் திருமணத்துக்கு அத்தனை உதவிகளையும் செய்கிறான் இவன். திருமணம் முடிந்து, சில நாட்கள் கழிந்தபின்னரும் அந்தப் பெண்ணை இவனால் மறக்கமுடிவதில்லை. இத்தனை நாட்கள் சொல்லாமல் இருந்த காதலை ஒருமுறை வெளிப்படையாக சொல்லிவிடலாம்; சொல்லிவிட்டு அங்கிருந்தே அகன்றுவிடலாம் என்ற எண்ணத்துடன் அந்தப் பெண்ணைப் பார்க்க தனது நண்பனின் வீட்டுக்குச் செல்கிறான்.

இதன் பின் என்ன நடந்தது? இதோ நெஞ்சை நெகிழச்செய்யும் அந்த proposal காட்சி.

இதே படத்தில் நெஞ்சை அறுக்கும் பாடல் ஒன்று இருக்கிறது. இந்தப் பாடல், மிகச்சில நாட்களுக்கு முன்னர்தான் ஃபேஸ்புக்கில் நண்பர் பல்லவி மூலமாகத் தெரியவந்தது. அதன்பின் பலமுறை அப்பாடலைக் கேட்டுவிட்டேன். Jony Mitchell எழுதிப் பாடிய அந்தப் பாடலின் பெயர் – Both Sides Now. அதன் ஒருசில வரிகள் இங்கே:

 

I’ve looked at love from both sides now
From give and take, and still somehow
It’s love’s illusions I recall
I really don’t know love at all

Tears and fears and feeling proud
To say “I love you” right out loud
Dreams and schemes and circus crowds
I’ve looked at life that way

 

அந்தப் பாடலை இங்கே முழுமையாகக் கேட்கலாம். ஜானி மிட்செலின் அமானுஷ்யமான குரலில் உங்கள் மனம் பறிபோகும்.

அடுத்து, இன்னும் சில அருமையான பாடல்கள் இங்கே வரிசையாக உள்ளன. ஒரு அழகான இரவில், தனிமையில் இந்தப் பாடல்களை ஒவ்வொன்றாகக் கேட்டுப் பார்த்தால், காதல் மறுபடி மனதில் எழும். அந்தத் தருணத்தில், பழைய காதல்களின் நினைவு அவசியம் வரும். அந்த நினைவுகளின் மகிழ்ச்சி இங்கே சொல்லமுடியாதது.

I don’t want to miss a thing – Aerosmith – Armageddon

I will always Love you – Whitney Houston – The Bodyguard

Everything I do I do it for you – Bryan Adams – Robinhood:Prince of Thieves

இந்தப் பாடலின் முக்கியத்துவம் – நான் பள்ளியை முடித்து கல்லூரி சேர்ந்த காலகட்டத்தில், கோவையில் இப்போதிருப்பதைப் போன்ற காஃபி ஷாப்களெல்லாம் இல்லை. ஏதோ ஒன்றிரண்டு கடைகள் ஆங்காங்கே இருந்தால் பெரிது. ஆனால் அந்தக் கடைகளில் தவறாமல் ஒலித்த பாடல் இது. மட்டுமல்லாமல் 2000ன் ஆரம்ப கால வருடங்களில் நான் எங்கு சென்றாலும் என்னைப் பின்தொடர்ந்த பாடல் இது. இதன் பாடல் வரிகள் – உச்சபட்ச காதலின் வெளிப்பாடு. ஒரு காதலன் தனது காதலிக்கு என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று விரும்புவான்? அத்தனையும் இதில் உண்டு.

Unchained Melody – Righteous Brothers – Ghost

When you Love Someone – Bryan Adams – The Notebook

இந்த OSTக்களுடன் இக்கட்டுரையை முடிக்கிறேன். அத்தனை பாடல்களும் இதைப் படிக்கும் நண்பர்களுக்குத் தெரிந்தே இருக்கலாம். இருந்தாலும், அத்தனையையும் ஒரே சமயத்தில் கேட்டுப்பாருங்கள். ஒன்றின்பின் ஒன்றாக. ஏதோ ஒன்று உங்கள் மனதைப் பிசைவதை உணர்வீர்கள்.

 பி.கு

1. பாடல்கள் தொடரும்

2. உங்கள் தளங்களை மேம்படுத்த, மேலே தமிழினியனின் பெயரை க்ளிக் செய்து தாராளமாக தொடர்பு கொள்ளலாம். கச்சிதமான சர்வீஸ் உத்தரவாதம்.

  Comments

33 Comments

  1. கோஸ்ட் பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று

    Reply
      • சீ மை டைம்…. //n October 27, 2012 at 12:55 am//

        மீ ஒன்லி செகண்ட்.

        Reply
        • Rajesh Da Scorp

          ஆனா உங்களையெல்லாம் கேபிள் முந்திட்டாரே

          Reply
    • Rajesh Da Scorp

      வெரி நைஸ் கேபிள். இப்போ கூட – மிட்நைட் ஒண்ணேமுக்கால் – இதையெல்லாம் ரிபீட்டினேன். ஆஹா சொர்க்கம்

      Reply
  2. செக்கிங் பார் மாடரேஷன்

    Reply
  3. கலக்கல் அன்பரே! ரொமாண்ட்டிக் பதிவுகளில் என் தரிசனம் எப்பொழுதும் இருக்கும்.

    தமிழினியனுக்கு ஒரு ஸ்பெசல் வாழ்த்து 🙂

    Reply
    • Rajesh Da Scorp

      மிக்க நன்றி திருவாளர்/திருமதி/மிஸ்/மிஸ்டர் கஜக்கோல் அவர்களே

      Reply
  4. இது எல்லாமே நீங்க பேஸ்புக் ல ஷேர் பண்ணும்போதே கேட்டு பாத்தேன் செமையா இருந்துச்சு… இருந்தாலும் ப்ளாக் ல நல்ல டைமிங்கோடவும் ரைமிங்கோடவும் சொல்லிருக்கிங்க…

    Reply
    • Rajesh Da Scorp

      இதே மாதிரி இன்னும் எழுத எக்கச்சக்கமா ரொமாண்டிக் ஸாங்ஸ் கீது முரளி. அதையெல்லாம் ஒருக்கா கேட்டோம் – அப்பால பைத்தியம் பிடிக்கும் :-).. போடுறேன் சீக்கிரமே

      Reply
  5. Karter

    Enna thidirunu romance la Kalama irangitinga – anything special

    Reply
    • Rajesh Da Scorp

      Nothing special boss. இதெல்லாம் என்னோட ரொம்ப ஃபேவரைட் பாடல்கள்ள சில. அதான் புது லாஞ்ச் பண்ணும்போது இந்தப் பாடல்களோட ஆரம்பிக்கலாமேன்னு

      Reply
  6. நண்பா நலம் தானே?,
    கருந்தேள் தளம் புதியவடிவமைப்பு நன்றாயிருக்கிறது,வெல்டன் சுப.தமிழினியன்.

    Reply
    • Rajesh Da Scorp

      நண்பா…. பரம நலம். தமிழோடு சேர்ந்த பாலாவும் – இருவரும் அசுரத்தனமாக உழைத்திருக்கிறார்கள். கூடவே சுபாஷ். விரைவில் ஹாங்கவுட்டுவோம்

      Reply
  7. கருந்தேள்….. தீபாவளி முடிந்ததும் அதன் மகிழ்ச்சியை முழுக்க அனுபவித்துவிட்டு விடுமுறை முடிந்த மறுநாளிலிருந்து அடுத்த தீபாவளிக்காக மீண்டும் எதிர்நோக்கி காத்திருப்போமே கிட்டத்தட்ட அதே போன்ற உணர்ச்சியோடு இந்தபாலக் ரீ ஓபன் செய்யும் நாளுக்காக காத்திருந்தேன். வடிவமைப்பு அருமை. அதைவிட மிகப் பொருத்தமாக காதல் பாடல்களை அறிமுகம் செய்திருந்தது அதை விட அருமை……..பழைய தொடர்களை தூசி தட்டுங்கள். தும்மல் சத்தங்கள் காதை நிரப்பட்டும். ஆனால் தும்மினால் கெட்ட சகுனம் என்று நினைக்காதீர்கள். அது அன்பு தும்மல். உங்கள் பதிவுகளை எதிர்நோக்கி அதன் நினைவாகவே இருந்த பலரின் காரணமாக உங்களுக்கு எழுந்த விக்களும் இதில் அடக்கம். இன்னும் இருமல், பொருமல் எல்லாமும் உண்டு.

    கலக்கு தலைவா…..இது

    Reply
    • Rajesh Da Scorp

      கட்டாயம் பழைய தொடர்கள் தூசி தட்டப்படும் பாஸ். முடிக்காம விடுறதில்லை 🙂 . மிக்க நன்றி

      Reply
  8. Ramanathan

    I thought of asking you about the collection of such songs/movies and you have done it even before I approached.I am planning to act as a distributor for your blog.

    Reply
  9. Ramanathan

    Listened to first 4 songs and I felt your narration is better than them.Hope you carry the nostalgia which I dont want to. Appreciate your team effort in launching this blog and expect you to give us more information and entertainment in coming days.Awesome job guys.

    Reply
    • Rajesh Da Scorp

      //I am planning to act as a distributor for your blog.// – ha ha .. Thanks for these words Ram. I will definitely write more about the songs in the coming days. Thanks a lot for your wishes too for our team.

      Reply
  10. Such a wonderful/lovely post and a gr8 comeback thalaivare… Facebookல ஷேர் பண்ணப்பவே மொத்தமா டவுன்லோட் பண்ணிட்டேன்.செம்ம ரொமான்டிக் 🙂 😉 :), இந்த போஸ்ட் தொடரும்னு சொன்னதும் ரொம்ப மகிழ்ச்சி. :):) கன்டின்யூ…

    Reply
    • Rajesh Da Scorp

      Thank you Sudharsan 🙂

      Reply
  11. டிசைன் அபாரம்! மொபைல்லயும் முன்னவிட சீக்கிரமா ஓப்பன் ஆகுது.

    Reply
    • Rajesh Da Scorp

      நன்றி வருண். ஓ மொபைல்லையும் வேகமா வருதா? பரவாயில்லையே

      Reply
  12. Mahadevan

    Rajesh , please add the song from “Before sunset ” movie “A waltz for a night”. The link for the song “www.youtube.com/watch?v=ey-uYckLEWY” and for lyrics “www.stlyrics.com/b/beforesunset.htm – United States”.

    Reply
    • Rajesh Da Scorp

      Dear Mahadevan… I will add this song in the next post about my favorite songs. Actually there are a truckload of songs on which I want to write further, and will add this one there in the second part of this post. Thanks for the suggestion boss

      Reply
  13. gaja

    டிசைன் அபாரம்!
    good post to start with,
    nice work .
    தமிழினியனுக்கு ஒரு ஸ்பெசல் வாழ்த்து!!!

    Reply
    • Rajesh Da Scorp

      Thanks for the wishes Gaja 🙂

      Reply
  14. அருமை

    Reply
  15. Sagai

    அருமை அருமையான பதிவு
    நீர் சொல்லும் விதம் அருமை நன்றி

    Reply

Join the conversation