என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம் ?
நான் செய்திகள் படிப்பதோ பர்ப்பதோ இல்லை. இண்டர்நெட்டிலும் கூட, நான் கவனமாகத் தவிர்க்கும் ஒரு விஷயம் அது. சோம்பேறித்தனம் காரணமில்லை. பல காலமாக இங்கு நடக்கும் விஷயங்களைப் பார்த்துப் பார்த்து சோர்ந்துபோய், அறவே செய்திகளின் மேல் உள்ள ஆர்வம் போய்விட்டது. இந்த மாதிரியான விஷயங்களைப் பற்றிப் பதிவே எழுதக் கூடாது என்ற எண்ணம் கொண்டிருந்தேன். ஆனால், நான் படித்த இரண்டு பதிவுகள் – நண்பர் கார்த்திகேயன் மற்றும் திருமதி ஸப்னா – எனது மனத்தை மாற்றி விட்டன.
என்ன மாதிரியான தேசத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நேற்று யூனியன் கார்பைட் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், சம்பவம் நடந்த காலத்தில் இந்திய நிறுவனத்தின் மேலாளராக இருந்த கேஷுப் மஹிந்த்ராவுக்கும், இன்னுமோடு ஏழு பேருக்கும், இரண்டு ஆண்டுகள் மட்டுமே தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. போபால் சம்பவத்தை, எந்த ஒரு இந்தியனும் மறந்திருக்க முடியாது. விபத்து நடந்த 1984, இவ்வளவு கொடிய, இத்தனை பேரைப் பாதித்த ஒரு பேரழிவை, மக்களால் கற்பனை செய்து கூடப் பார்த்திருக்க முடியாத ஒரு காலம். திடும் என நமது வீடும் பெற்றோர்களும், நமது உறவினர்களும், நண்பர்களும், நம்மைச் சுற்றியுள்ள மக்களும் செத்தழிந்து போனால் நமக்கு எப்படி இருக்கும்? இத்தகைய ஒரு மனநிலையில் நாம் யோசித்தால் தான் இந்தச் சம்பவத்தின் அழுத்தத்தை உணர முடியும். அத்தகைய ஒரு கொடும் துன்பியல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களை, இதைவிடக் கேவலமான முறையில் அவமதித்திருக்கவே முடியாது.
இத்தகைய ஒரு கொடும் சம்பவம் அரங்கேறிய போது, அந்தச் சம்பவத்துக்கு, அந்த நிறுவனம் – யூனியன் கார்பைட் – மட்டுமே பொறுப்பேற்க முடியும்.. பொறுப்பேற்க வேண்டும். ஆனால், நடந்தது என்ன? தாய் நிறுவனமான யூனியன் கார்பைட், அதன் இந்தியக் கிளையான யூனியன் கார்பைட் இந்தியா லிமிடட் என்ற நிறுவனத்தைக் கை காட்டிவிட்டுத் தப்பித்தது. நேற்றுக்கூட, தீர்ப்பு வழங்கப்பட்டபின் யூனியன் கார்பைட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலும் இதையே சொல்லியுள்ளனர். இந்தத் தீர்ப்பு வெளிவர எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் – 26 ஆண்டுகள் !! இதற்குப் பெயர், அயோக்கியத்தனமா இல்லையா ?
இது எப்படி இருக்கிறது என்றால், நித்தியானந்தா பல பெண்களை ரேப் செய்துவிட்டு, ‘அது ரேப் இல்லை; தாந்திரிக் செக்ஸ்’ என்று உளறினானே – அதையும் கூடப் பல முட்டாள்கள் இன்னமும் நம்பிக் கொண்டிருக்கின்றனரே – இதைப் போலவே உள்ளது. இன்னமும் சொல்லப்போனால், ஹிட்லர் அரங்கேற்றிய மாஸ் மர்டர்களுக்கு ஈடானது இந்த விபத்து. கிட்டத்தட்ட பதினையாயிரம் பேர் இறந்தனர் என்றால், அந்தச் சம்பவத்தின் தாக்கம் நமக்குப் புரியும்.
சரி. இப்படி ஒரு தீர்ப்பு வந்துவிட்டது. நாம் என்ன செய்வோம்? இதுவும் இன்னொரு தீர்ப்பு. நமக்கு இருக்கவே இருக்கிறது மானாட மயிலாட. அதனைப் பார்த்து ரசிப்போம். உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், என் மீதே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. இத்தகைய ஒரு கேடுகெட்ட, இழிந்த தேசத்தில் இன்னமும் வாழ்கிறோமே என்று. இன்னமும் எனக்குள் நடந்துகொண்டிருக்கும் ஒரு விஷயம் – பதற்றம், கோபம், எரிச்சல், ஆற்றாமை, கண்ணீர் – இப்படிப் பல விஷயங்களின் கலவை அது. இருந்தும், ஒன்றுமே செய்யமுடியவில்லை என்னால். கருமம் !
எத்தனை சம்பவங்கள் இதுபோல் ! கண்ணெதிரே நடக்கின்றன. சர்வசாதாரணமாக, அரசே மக்களைக் கொன்று குவிக்கிறது – விமான விபத்து, ரயில் விபத்து போன்றவற்றால். வீட்டை விட்டு வெளியே வந்தால், இந்தியாவில் ஒரு மனிதன் பாதுகாப்பாக மாலை வீடு போய்ச் சேர முடியுமா? இது கொஞ்சம் அதிசயோக்தியாக சில பேருக்குத் தோன்றலாம். ஆனால், இதுதான் உண்மை. நீங்கள் நடந்து சென்றுகொண்டிருக்கையில், ஏதாவது ஒரு அரசியல் கட்சியின் பிரம்மாண்டமான பேனர் அல்லது கட் அவுட் உங்களின் தலையில் விழுந்து, நீங்கள் கூண்டோடு எமலோகம் போக நேரிடலாம்; அல்லது, மழையில் அறுந்து விழுந்த மின்கம்பி, உங்களைக் கொல்லலாம்; இல்லையா ; இருக்கவே இருக்கிறது சாலையில் உள்ள குழிகள். ப்ளாக் ஹோல்களுக்குச் சமமானவை அவை. இது எதுவும் இல்லையெனில், அரசாங்கமே மன உளைச்சலைப் பல விதங்களில் தந்து, நம்மைக் கொன்றுவிடும்.
எந்த விதத்திலும் சுரணை உணர்வே இல்லாத, பணக்காரர்களை மட்டுமே போஷிக்கக்கூடிய, கேடுகெட்ட அரசின் விளைவே இப்படிப்பட்ட விஷயங்கள்.
எனது மனம் சொல்லும் தீர்ப்பு என்னவெனில் – கேஷுப் மஹிந்த்ரா, கஸாப் போன்றவர்களை, அம்மணமாக்கி, நாற்சந்தியில் நிற்கவைத்து, மக்களிடத்தில் கற்களைக் கொடுத்து, இவர்கள் சின்னாபின்னமாகும் வரையில் கல்லாலேயே அடித்துக் கொல்ல வேண்டும் எனபதே. மனித உரிமை, மயிரு மட்டை என்பதைப் பேசுபவர்கள் இந்தப் பக்கத்தைப் படிக்க வேண்டாம். ‘அதர்’ (Other) – அதாவது, பதிக்கப்பட்ட இடத்தில் நாம் இருந்தால் எப்படி இருக்கும்? என்பதைக் கொஞ்சம் யோசித்தால், இதுபோன்ற மனித உரிமைக் கருத்துக்களை நாம் பேசவே மாட்டோம். இவர்களைப் போன்ற கயவர்களுக்கு அது தேவையுமில்லை.
இதுபோன்ற ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக இந்தியாவில் நடக்கின்றன. மனித உயிர் மிகக் கேவலமாக மதிக்கப்படும் ஒரு நாடு இது. இனிமேல், இந்தியப் பாரம்பரியம், சரித்திரம், காந்தி, அஹிம்ஸை, கடவுள், விதி, கர்மா, மயிரு என்று யாராவது என் காதுபடப் பேசினால், ஓங்கி ஒரு அறை விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். பர்ப்போம்.
பி.கு – தலைப்புக்கு நன்றி – மனுஷ்யபுத்திரன். அவரது ‘என்ன மாதிரியான காலத்தில் வாழ்கிறோம்?’ என்ற புத்தகத்தின் தலைப்பிலிருந்து எடுக்கப்பட்டதே இந்தக் கட்டுரையின் தலைப்பு. அந்தப் புத்தகத்தையும், ‘அஸாதி அஸாதி அஸாதி’, ‘அதிகாரம், அமைதி, சுதந்திரம்’ என்ற சாருவின் புத்தகங்களையும் படிக்குமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
— தொடரும் . .
நண்பா முழுதும் படித்தேன்,மிக்க நன்றி,வேலை பளுவிலும் பதிவிட்டமைக்கு,மிக அவசியமான இடுகை.
நூற்றிபதினேழு கோடி பேர் வாழும் நாட்டில் எத்தனை கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன?வெள்ளைக்காரன் காலத்தில் வழங்கியது போல ஏன் நீதிபதிகளுக்கு 2மாதம் சொகுசு விடுமுறை?
ஸ்விட்சர்லாந்துக்கு விடுமுறை போய்விட்டு வந்தால் இப்படி தான் தீர்ப்பு எழுத தோன்றும் நண்பா,ஆழந்த டிப்ரெஷன் இன்று.
///////இதுபோன்ற ஆயிரமாயிரம் நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக இந்தியாவில் நடக்கின்றன. மனித உயிர் மிகக் கேவலமாக மதிக்கப்படும் ஒரு நாடு இது. இனிமேல், இந்தியப் பாரம்பரியம், சரித்திரம், காந்தி, அஹிம்ஸை, கடவுள், விதி, கர்மா, மயிரு என்று யாராவது என் காதுபடப் பேசினால், ஓங்கி ஒரு அறை விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். பர்ப்போம்.///////
இன்னும் அறியாமையில் எத்தனை மக்களோ !
இந்த நிலை நிச்சயம் அவனுங்க குடும்பத்தும் வரனும்
இது நான் ஆவலா எதிர்பார்த்த தீர்ப்பு,என் அம்மா தீர்ப்பை எதிர்பார்த்தவர்கள் அது வரும் முன்பே போய் சேர்ந்து விட்டார்கள்,
50களில் இருக்கும் யாருக்கும் இது ஒரு அழியாக் கோலம்,தாமதமாய் வரும் நீதி மறுக்கப்பட்ட நீதி.
26 வயசு ஒருவன் பிறந்து ப்ரொஃபெஷனல் படித்து,வேலையில் செட்டிலாகி திருமணம் செய்யும் வயசு
எத்தனை பிஞ்சுகள் அப்படி சாதிக்காமல் செத்தது?
====
கொடுமை,
இறந்தது 22000-25000பேராம்,இதில் என்ன ஒரு துயரம் என்றால்?மருத்துவமனைகளில் இறப்பு சான்றிதழ் தராததாலும் அரசு அவசர அவசரமாக அனாதை பிணங்களை ஒன்றாக கொட்டி சவ அடக்கம் செய்ததாலும் 10000 பேர்களுக்கும் மேலான இறந்தோர் பெயர்கள் கணக்கிலேயே வரவில்லை என்பது வருத்தமான உண்மை.
இந்த நாலனா தீர்ப்பை வைத்து இதை வைத்து போன உயிரை திரும்பப் பெறமுடியுமா? இழந்த பார்வை கிடைக்குமா? செயழிழந்த உடல் அங்கங்கள் செயல் பெறுமா ? புற்று நோயால் பீடிக்கப்பட்டவர் ,குணமடைவரா? 20 வயதிலும் பூப்பெய்தாமல் போன இளம் பெண்கள் பூப்பெய்துவரா? கருப்பை கோளாறுகளை பிறப்பிலேயே கொண்ட 20 களிலுள்ள பெண்கள் தாய்மை அடைவரா? இழந்த சுகாதாரம், நல்ல சுற்றுச்சுழல் திரும்பவருமா? நிச்சயம் வரவே வராது.
இந்தியனாய் பிறந்ததற்கு வெட்கப்படும் தருணங்களில் இதுவும் ஒன்று.
நீங்க எதுக்கெடுத்தாலும் இந்தியாவை திட்டுறீங்க ராஜேஷ்!
எந்த நாட்டில் பணக்காரங்களுக்கு எதிரா தீர்ப்பு வந்திருக்கு? கார்த்திக்கேயன் கூட அமீரகத்தில் ரெண்டு தீர்ப்பு-ன்னு சொல்லியிருக்கார்.
அதே அமீரகத்தில்.. அந்த நாட்டு ராஜ பரம்பரை அந்த குற்றத்தை செய்திருந்தா என்ன தீர்ப்பு வந்திருக்கும்னு நினைக்கிறோம்?
இல்ல இந்த அமெரிக்கா மட்டும் ஒழுங்கா? மில்லியன் லிட்டர் கணக்கில் பெட்ரோலியத்தை BP கம்பெனி கடல்ல கொட்டி, ஒரு கடலையே நாசமாக்கி, அதை நம்பியிருக்கும், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையையே தொலைச்சிட்டானுங்க.
ஆனா இவனுங்க கவலை என்னன்னா.. ஷேர் ஹோல்டர்ஸோட பணத்தை செலவு பண்ணி.. க்ளீன் பண்ணிகிட்டு இருக்கானுங்களாம்.
இக்கரைக்கு அக்கரை பச்சைங்க. எல்லா இடத்தில் சாவறது நம்மை மாதிரி ஆளுங்கதான்.
2 நாள் பொங்கிட்டு அடங்கிடுவோம். பழகிட்டோம் பாருங்க.
நண்பரே,
இந்த உலகில் இன்னுமா நீதியில் நீங்கள் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறீர்கள்.
நீங்க இன்னைக்கு பிசின்னு எனக்கு தெரியும் கருந்தேள்… அப்படி பிசிலயும் இத எழுதுனதுக்கு நன்றி..
ஆனா, நமக்கெல்லாம் இன்னக்குதான் தெரியுது… 26 வருஷமா இந்த ஜனங்க எவ்வளவு கஷ்டப்பட்டங்களோ… தண்டனை தர்றாங்களோ, சாவடிக்கறாங்களோ, அது ரெண்டாவது விஷயம்.. முதல்ல அந்த ஜனங்களை அரசாங்கமே கண்டுக்கலைன்னு நினைக்கிறேன்.. அரசாங்கத்தால குடுக்க முடியாத நஷ்ட ஈடையா யூனியன் கார்பைட் குடுத்துறபோகுது…
26 வருஷமும் ரொம்ப ரொம்ப அநியாயம்…
இதெக்கே வருத்தப்பட்டா எப்படி? இது லோக்கல் கோர்ட் தீர்ப்பு தான், இன்னும் ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் எல்லாம் போகும்…கொடுமை அதிகபட்சம் ரெண்டு வருஷம் தான் தண்டனை கொடுக்க முடியுமாம், நம்ம கேவலமான சட்டம் அப்படி….
இத நீங்க delete கூட பண்ணிக்கலாம், அதுக்காகத்தான் தனியா போட்டேன்
இந்திய சட்டம் எப்பவோ அம்பேத்கர் எழுதினது, அவர் வாழ்ந்த காலத்துக்கு அது சரியா இருந்திருக்கும்…இன்னும் என் அத மாத்தாம அல்லது அப்டேட் பண்ணாம இருக்காங்க…தண்டனைகள் கடுமையானா தான் தப்புகள் குறையும்.
citizen ல அஜித் சொன்ன தீர்ப்பு காமெடியா இருந்தாலும், அந்த மாதிரி ஒருத்தனப் பண்ணா அடுத்து தப்பு பண்ண மத்தவன் பயப்படுவான்.
நெஞ்சை தொட்டு சொல்லுங்க நாடும் நாமளும் கெட்ட கேட்டுக்கு இது என்ன ஆச்சரியமான ஒன்றா? இதைவிட வேறொரு தீர்ப்பை எதிர்பார்க்க முடியுமா? நேர்மையான அரசியல் தலமைகளை தெரிவுசெய்ய வக்கில்லாத மக்கள் கூட்டம் ஒரு நாள் தன்னை தானே அழித்துக்கொள்ளும். இன்று பணக்காரங்கள் பாக்கட்டில் நீதிமன்றம். நாளை குடிதண்ணீர் கூட பணக்காரங்களுக்கே சாத்தியப்படும் என்னும் நிலையை நோக்கியே நாடு செல்கின்றது. இன்றொருநாள் இந்த ஜெனரேசன் அழுகின்றது நாளைய ஜெனரேசன் வாழ்நாள் முழுக்க நிச்சயம் அழும். பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்!
உண்மைதான். நானும் இடையில் சில் காலம் இப்படித்தான் எந்த செய்தித்தாள்களையும், அரசியல் விடயங்களையும் முற்று முழுதாகக் கவனிக்காமல் இருந்தேன். அது உண்மையில்தவறு. எம்மைச் சுற்றி என்ன நிகழ்கின்றது என்கிற குறைந்த பட்ச அறிவுகூட இல்லாமல் எம்மால் ஒருபோதும் சமூகப் பொறுப்புடன் இயங்கமுடியாது.
ஆஸாதி ஆஸாதி ஆஸாதி சாரு எழுதிய நல்ல புத்தகங்களில் ஒன்று. அப்படி எல்லாம் சாரு மீண்டும் எழுதுவாரா என்றால்… கஷ்டம்தான்..
ஒரு நல்ல பதிவில் எதற்கு மேலும் சேர்க்க எதுவும் இல்லாததால்,
தொங்கும் இதயங்களுடன்,
விஸ்வா.
வயதில் மூத்த பதிவர்கள் ஹாலிபாலா, காதலர் அவர்களை வழிமொழிந்து கொண்டு வெளியேறுகிறேன்.
@ஹாலி பாலா
//எந்த நாட்டில் பணக்காரங்களுக்கு எதிரா தீர்ப்பு வந்திருக்கு? கார்த்திக்கேயன் கூட அமீரகத்தில் ரெண்டு தீர்ப்பு-ன்னு சொல்லியிருக்கார்.
அதே அமீரகத்தில்.. அந்த நாட்டு ராஜ பரம்பரை அந்த குற்றத்தை செய்திருந்தா என்ன தீர்ப்பு வந்திருக்கும்னு நினைக்கிறோம்?//
========
தல,தல அப்படி ஒரு சம்பவம் அமீரகத்தில் நடந்தால் கண்டிப்பாக உங்களுக்கு பதிலுண்டு.அமீரகத்தில் மன்னராட்சி,குடும்ப ஆட்சி,எதிர்கட்சியே இல்லை.
ஆனால் நமது குடியாட்சி,எத்தனை எதிர்கட்சி,எத்தனை ஆட்சி மாற்றம் 26 வருடத்தில் வந்து போனது,அத்துனை பேரும் இந்த இழிசெயலுக்கு துணை நின்று மவுனமாய் தாமதிக்கவிட்டு வந்துள்ளனர்.சிம்பிளா சொல்லப்போனா எலக்ஷன் செலவுக்கு பணம் எடுக்கு இந்த இண்டெர்நேஷனல் ஏடிஎம் மெஷின்களுக்கு பாதுகாப்பாய் இருந்துள்ளனர்.வெட்கக்கேடு,நான் நாட்டை வெறுக்கவில்லை,அழுக்கு படிந்த சட்டத்தை தான் வெறுக்கிறேன்.
=========
தல நீங்களும் ஓய்வு நேரத்தில் இதுக்கு ஒரு பதிவு போட்டீங்கன்னா அமோக ரீச் கிடைக்கும்.
பொணந்திண்ணி அரசு, பணந்திண்ணி அதிகாரிகள்…… 26 வருடம் நீட்டியதிலேயே தெரிகிறது… பணம் எப்படி விளையாண்டிருக்கிறது என்று… அதில் சம்பபந்தப்பட்டவர் முக்கியமான ஒருவர் செத்தேப்போனாராம்… சத்தியயமாக இவை இந்தியாவில் மட்டுமே நடக்கும்…
இருண்ட கண்டம் ஆப்பிரிக்க நாடுகளில் கூட இந்த கேடுகெட்ட நிலை இருக்காது….
நீதி என்னும் சொல் காலப்போக்கில் வழக்கொழிந்து போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
இந்தத் தீர்ப்பை வழங்க எடுத்துக்கொண்ட காலம் 26 ஆண்டுகள் என்பது மகா அயோக்கியத்தனம்.
@ கார்த்திகேயன் – மிக்க நன்றி நண்பா.. உங்க பதிவுக்கும், உங்க கருத்துகளுக்கும்.. உங்கள அப்படியே நான் வழிமொழியறேன் . .
@ பனித்துளி சங்கர்,கனவுகளின் காதலர், ஜெய், பேண்டம் மோகன், அனானி, அருண்மொழிவர்மன், கிங் விஸ்வா, னாஞ்சில் பிரதாப், செ. சரவணக்குமார்.. உங்க அத்தனை பேருக்கும் நன்றி.. உங்களோட கருத்துகளுக்கு..
@ பாலா – நீங்க சொல்லிருக்குற விஷயங்களுக்கு என்னோட பதில் இதோ . .
//நீங்க எதுக்கெடுத்தாலும் இந்தியாவை திட்டுறீங்க ராஜேஷ்!//
கண்டிப்பா பாலா.. அப்படித்தான் திட்டுவேன்.. இந்தத் தீர்ப்பு இந்தியாவுல தானே வந்திருக்கு? அண்டார்ட்டிகாவுல வரலையே.. ஆனா அதே சமயம், ஒரு விஷயத்தை தெளிவுபடுத்திர்ரேன். . நான் இந்தியாவின் அரசியல் என்னும் கோமாளிக்கூத்தையும், அதன் மூலம் மக்களைச் சுரண்டும் மனிதர்களையும் தான் எதிர்க்கிறேன்.. இந்தியாவின் அரசியல் சூழல் சரியாகிவிடும் என்ற எதிர்பார்ப்பை நான் இழந்து பல நாட்கள் ஆகிறது . . ஆகவே இப்படிப்பட்ட விஷயங்கள் நிகழும்போது, என்னால் என் மனக்குமுறலைக் காட்டாமல் இருக்க இயலவில்லை…
//எந்த நாட்டில் பணக்காரங்களுக்கு எதிரா தீர்ப்பு வந்திருக்கு? கார்த்திக்கேயன் கூட அமீரகத்தில் ரெண்டு தீர்ப்பு-ன்னு சொல்லியிருக்கார்.
அதே அமீரகத்தில்.. அந்த நாட்டு ராஜ பரம்பரை அந்த குற்றத்தை செய்திருந்தா என்ன தீர்ப்பு வந்திருக்கும்னு நினைக்கிறோம்?//
வெல்.. இதுக்கு நண்பர் கார்த்திகேயன் பதில் சொல்லிருக்காரு.. அதே தான் என்னோட கருத்தும்.. இந்தியாவுல ஜனநாயகம்னு ஒரு விஷயத்த அமல் படுத்தி, அத கொண்டாட வேற செய்யுறோம் இல்லையா.. மன்னராட்சின்றது வேற ..அவன் வெளிப்படையா மன்னராட்சியை அமல்படுத்தித் தான் ஆள்றான். ஆனா, அதே மன்னராட்சி நடக்குற ஊர்ல தான் குற்றங்களுக்குக் கடுமையான தீர்ப்பும் இருக்கு.. ஜனநாயகத்துல அது டோட்டலா மிஸ்ஸீங்.. இது தான் ஐரனி..
அதே போல, அமெரிக்கா செஞ்சதும் மகா கொடுமை.. அது ஒரு கொலைகார தேசம்ன்னு நமக்கெல்லாம் நல்லாவே தெரியுமே.. மொதல்ல நானு வாழ்ந்துக்கினு இருக்குற ஊரப் பத்தி சொல்றேன்.. அப்பறம் மத்த ஊருக்கு வரேன் ..
ஆனால், நீங்க சொன்ன மாதிரி, எல்லா இடத்துலயும் சாகுறது நம்மள மாதிரி ஆளுங்களே தான் !
சிறந்த பதிவு…
பதிவு எழுதுவதோடு நம் பணி முடிந்துவிட்டதா? இந்த நாட்டில் அமைந்துள்ள அரசு உங்களால், என்னால், நம்மால் உருவாக்கப்பட்ட தேந்தெடுக்கப்பட்ட அரசு. ஒரு குடிமகனாக ஆக்கப்பபூர்வமாக இதற்காக தாங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்.
நாட்டிற்காக உழைத்த-வாழ்ந்த தலைவர்கள்-தொண்டர்கள், போராளிகள்-வீரர்கள் போன்றவர்கள் யாரும் வானத்திலிருந்து வந்து இறங்கபோவதில்லை. நம்மை இரட்சிக்க எந்த தேவதூதனும் வரமாட்டான். நிச்சயமாக எந்த கடவுளை நம்மை காப்பாற்றாது.
அந்த நாடு யோக்கியமா? இந்த நாடு யோக்கியமா? பக்கத்து நாடு யோக்கியமா? என்ற கேள்வியே அயோக்கியத்தனமானது. நான் வாழும் நாடு, என் உறவுகள் வாழும் நாடு, என் சமுதாயம் வாழும் நாடு, என்னைப்போல் சக மனிதர்கள் வாழும் நாடு, என்னால் உருவாக்கப்பட்ட நாடு வல்லரசு என்பதைவிட நல்லரசாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு குடிமகனும் நினைக்கவேண்டும். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனிமீதும் யுனியன் கார்பைடு போன்ற பல நச்சுக்கத்திகள் தொங்கிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.
My friend,this is not democracy. This is demo crazy.
//அத்தகைய ஒரு கொடும் துன்பியல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களை, இதைவிடக் கேவலமான முறையில் அவமதித்திருக்கவே முடியாது.// கரெக்ட்டுங்க.
செத்துப்போன நீதி. வேதனையான தீர்ப்புகள் இது. வெட்கமாகத்தான் இருக்கிறது.
மிக கொடுமையான விஷயம் இதுதான்
காலையில் 2 வருட தண்டனை மாலையில் பெயிலில்
இதில் அமெரிக்காவின் தலையீடு மீண்டும் மறு விசாரணை செய்யக் கூடாது என்று
இந்த ……… இன்னும் என்ன பாக்கி இருக்கிறதோ
கண்ணாயிரும் பாலா வைக்கூட பொங்க வைத்த பொங்கல் போன ஆக்கியதற்கு வன்மையாக வெளி நடப்பு செய்கின்றேன். அவர் சொன்னது முற்றிலும் உண்மை.
nenjai thotta pathivu
@ சீ. பிரபாகரன் – //நாட்டிற்காக உழைத்த-வாழ்ந்த தலைவர்கள்-தொண்டர்கள், போராளிகள்-வீரர்கள் போன்றவர்கள் யாரும் வானத்திலிருந்து வந்து இறங்கபோவதில்லை. நம்மை இரட்சிக்க எந்த தேவதூதனும் வரமாட்டான். நிச்சயமாக எந்த கடவுளை நம்மை காப்பாற்றாது//
சத்தியமான வார்த்தைகள்.. அனைத்துக் குடிமகன்களும் இந்த நாடு நல்லரசாக வேண்டும் என்று நினைத்தால் நன்றாக இருக்கும் தான்.. ஆனால் நடக்குமா? நடந்தால் சந்தோஷம். நன்றி.
@ இல்யூமினாட்டி – உண்மைதான் . . 😉
@ உமா – நன்றி. அடிக்கடி வரவும்.
@ ரோஸ்விக் – உண்மைதான் . . என்ன செய்வது? இதுபோன்ற சம்பவங்களைக் கண்டு கண்டு பழகிவிட்டோம். . ;’-(
@ சிபி – என்ன கொடுமை இது? இவனுங்களைத் தான் கல்லடி கொடுக்கவேண்டும் என்று சொல்கிறேன். கருமம்!
@ ஜோதிஜி – ஹ்ம்ம்ம்… அவுரு சொன்னதைத்தான் நானும் ஒத்துக்கிட்டேனே . . 😉
@ அனானி – அடிக்கடி வாருங்கள். கோபத்தின் வெளிப்பாடே இப்பதிவு..
//உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், என் மீதே எனக்கு வெறுப்பாக இருக்கிறது//
நான் சொல்ல நினைத்தது…
உங்கள் கோபம் நியாயமானது.
இன்றைய செய்தி படித்தீர்களா? இந்த விபத்தின் தீர்ப்பிற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியுள்ளதால், விசாரணைக் கமிட்டியை மாற்றி அமைக்கப் போகிறார்களாம். எதற்கு? மேலும் ஒரு 26 வருடம் இழுத்தடிக்க…தூ…
நமக்கு உள்ள கெட்ட பழக்கம் நம்மை நேரடியாக எந்த பிரச்சனையும் பாதிக்காத வரை அதைப் பற்றி பேசுவதுகூட கிடையாது. மிகக்கேவலமாக இருக்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம்,கத்திரிக்காய் சட்டத்தையெல்லாம் நினைத்து. கடந்து போகும் போகும்னு சொல்லிகிட்டே இருக்கிறத தவிர வேறென்ன செய்துவிட முடியும் நம்மால்? உள்ளுக்குள்ளயே புழுங்கிச் சாக வேண்டியதுதான். 2,3 தடவை போபால் பற்றி எழுதி பூரா கெட்ட வார்த்தையா இருந்ததால பதிவ போடாமயே டெலிட் பண்ணிட்டேன். சமயத்துல நெஞ்சுல அடிச்சிக்கிட்டு அழலாம்னுதான் தோணுது. தப்பா ஏதும் இருந்தா மன்னிக்கவும்.
http://thatstamil.oneindia.in/news/2003/12/04/kalpakkam.html
கல்பாக்கத்தில் அதிகரிக்கும் புற்று நோய் சாவுகள்: அணு உலை கதிரியக்கத்தால் பரவுகிறது ஆபத்து
நண்பா கல்பாக்கம் போயிருக்கிறீர்களா?
அங்கே டவுன்ஷிப்புக்குள் மாம்பழங்கள் பழுத்து கனிந்து கீழே விழுந்தாலும் யாரும் உண்பதில்லை,காரணம் நோய்தொற்று.நிறைய பக்கவிளைவுகள் ஆர்ம்பித்தாயிற்று. இது இன்னொரு அதிகம் கண்டுக்கொள்ளப்படாத,மூடிமறைக்கப்பட்ட விடயம்.
=======
நினைத்து பார்க்கவே பயமாயிருக்கு.
நண்பா,மரியா ஃபுல் ஆஃப் க்ரேஸ் பார்த்தேன்,
கொலம்பிய நாட்டு அவலங்களை கண்முன்னே நிறுத்துகிறது.
நல்ல நடிப்பு,கோராமையான காட்சிகளை டீடெய்லாய் விளக்காமல்
நடிகர்களின் பார்வையாலேயே வெளிப்படுத்தியுள்ளனர்.ரொம்ப நல்ல படம் நண்பா.
ஜாக்கி அண்ணன் பதிவில் சொன்னதையே இங்கும் சொல்கிறேன்!
நம்மை போன்ற சாமானிய மக்களின் உயிர்கள் பற்றி இந்த அரசியல்வாதிகளுக்கு எந்த அக்கறையும் இல்லை. ஹிட்லருக்கும் இவர்களுக்கும் ஒன்றும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை. போபால் விபத்தைவிட பல நூறு மடங்கு ஆபத்தை விளைவிக்கும் அனு உலைகள் விடயத்தில் இவர்கள் கொண்டுவந்துள்ள மசோதாவே இதற்குச்சான்று.
சமிபத்தில் மன்மோகன் சிங் அரசுஅணுசக்தி குடிமைக் கடப்பாடு மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதுவும் எந்த விவாதமும் இன்றி புறக்கடை வழியாக. காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே இது பற்றி தெரியுமா என்று தெரியவில்லை.(தெரிந்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை எனபது வேறு)இந்த மசோதாவில், இந்தியாவில் அமையவுள்ள அணுமின் கூடங்களில் விபத்து ஏதேனும் நேரிட்டால், அது தொடர்பான நிவாரணம், இழப்பீடு அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டிய கடப்பாடு, மத்திய அரசின் அணுமின் துறையின் கீழ் இயங்கும், இந்திய அணுமின் வாரியத்துக்கு மட்டுமே என்று விதிக்கப்படும். அணு உலைகளையோ, இதர சாதனங்களையோ, அணுஎரிபொருளையோ, அதுதொடர்பான தொழில் நுணுக்கச் சேவைகளையோ, விற்பனை செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு எந்தவிதக் கடப்பாடும் இருக்காது என்பதுதான் இதன் சாராம்சம். அணு உலைகளின் உற்பத்திக் கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டாலும், அவற்றை விற்பனை செய்த வெளிநாட்டு நிறுவனத்துக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது.அதைவிடக் கொடுமை அவ்வாறு ஒரு விபத்து நேரிட்டால் வழங்கப்படும் இழப்பீடுக்கு உச்ச வரம்பு வெறும் 2300 கோடி மட்டுமே. போபால் விழ வாயு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களே முப்பதாயிரத்திற்கும் மேல். விழ வாயுக்கே இப்படி என்றால் ஒரு அனு உலை வெடித்தால் எத்தனை பேர் பாதிக்கப்ப்டுவார்கள் என்று நினைத்துப்பாருங்கள். இதன் மூலம் ஒரு உயிரிழப்புக்கு ஒரு லட்சம் கூட கிடைக்காத நிலையே ஏற்படும்.
ஆனால் வளர்ந்த நாடுகளில் இத்தகைய விபத்துகளுக்கான் இழப்பீட்டுக்கு உச்சவரம்பே கிடையாது அல்லது நமது நாட்டில் நிச்சயிக்கப்பட்டிருக்கும் தொகையை விட பல நூறு மடங்கு அதிகம்.
இதுபற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?
நடந்து முடிந்த சோகத்துக்கே நீதி கிடைக்கவில்லை. வரப்போகும் ஆபத்துக்கு என்ன செய்வது??!!!
@கருந்தேள்+தமிழ்நாடன்
ஆபத்து ஆரம்பித்தேவிட்டது,அணுசக்தி ஒப்பந்தம் என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்துவிட்டோம்,அது நம்மை எங்கே கொண்டுபோய் விடப்போகிறதோ?
இந்த இரு கட்டுரைகளையும் அவசியம் படிக்கவும்.
சென்னை அருகே பெரும் ஆபத்து!
http://shockan.blogspot.com/2009/11/blog-post_8776.html
இது திரு.சொக்கன் அவர்களால் கல்பாக்கம் அணுக்கதிர்வீசினைப் பற்றி எழுதப்பட்ட சமூக விழிப்புணர்வு இடுகை.ஆபத்து வெகு தொலைவில் இல்லை என காட்டும்.
கொல்பாக்கம் – கதிர்வீச்சு பயங்கரம்
http://www.suriyakathir.com/issues/2009/dec16-31/pg16.php
இது மரக்காணம் பாலா அவர்களால் உள்ளக்குமுறலுடன் எழுதப்பட்டது, கைகா அணுமின் நிலையத்தில் வெளிச்சத்துக்கு வந்த சீர்கேடுகள், கல்பாக்கத்தில் இன்னும் நடந்து கொண்டிருப்பதை புடம் போட்டு காட்டியிருக்கிறார்.
இன்னும் வரும் , முடிந்தால் இதை உங்க பதிவிலும் சேர்த்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.நன்றி
நம்மளவில் நம்மால் என்ன செய்ய முடியும்?
இந்த union carbide தயாரிப்பு தான் Eveready battery. இந்த நிறுவனம் பல உரு மாற்றங்களுக்கு பிறகு இப்போது energizer battery தயாரிக்கிறது. நாம் இந்த battery வாங்காமல் புறக்கணிப்போம்! மக்களின் வாங்கும் சக்தி தான் இவர்களுக்கு எதிரான மிகப்பெரிய பலம்!
‘அதர்’ (Other) – அதாவது, பதிக்கப்பட்ட இடத்தில் நாம் இருந்தால் எப்படி இருக்கும்? என்பதைக் கொஞ்சம் யோசித்தால், இதுபோன்ற மனித உரிமைக் கருத்துக்களை நாம் பேசவே மாட்டோம். இவர்களைப் போன்ற கயவர்களுக்கு அது தேவையுமில்லை.
கண்ணாயிரம் ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க…
இது கொஞ்சம் மக்கள் மன நிலை தொடர்புள்ள விடயம் என்றே கருதுகிறேன்.பொதுவாக இந்திய மக்கள் மன நிலையானது மிக மோசமான தன்னலமிக்க கவனக் குறைவான மன நிலை.ஒரு பியூன் அவர் அளவுக்கு லஞ்சம் வாங்குகிறார்.ஒரு பிரதமர் அவர் அளவுக்கு.
உண்மையில் இங்கு அரசியலோ அரசியல் வாதிகளோ எதுவும் பிரச்சினை இல்லை.பிரச்சினை மக்களிடம் தான் இருக்கிறது.மக்கள் மோசமானவர்களாக இருக்கிறார்கள் அதனால் மக்களிடம் இருந்து உருவாகும் அரசியல் வாதிகளும் அவ்வாறு தான் இருப்பார்கள்.இதற்கு கேயாஸ் தியரி மாதிரி நாம் வேர்களைத் தேடி தான் பயணிக்க வேண்டும். நீங்கள் சாருவை அதிகம் புகழ்கிறீர்கள்.இதற்கு என்றாவது வருத்தப் படலாம்
Two years back some thing happened in a place called Madhurai.. Two youngsters were burnt alive in a newspaper office…..
அட நீங்க வேற.இதை மட்டும்(சமூக நிகழ்வுகளில்)நீங்கள் போருக்க இயலாமல் எழுதியதாக கூறினீர்கள்.
ஆனால் நான் எனது வலைப்பூவில் (http://www.writerviki.blogspot.com .மன்னிக்கவும்.இது எனது விளம்பரம் அல்ல.நான் எழுத்தாளனும் அல்ல.!!!வெறும் பெயரளிவில் மட்டுமே! சமூகத்தின் மீதான கோபத்தை வெளியிடுபதற்கு இந்த வலைப்பூ ஒரு வடிகால் அவ்வளவே!) இந்த விஷயத்தை மட்டும் எழுதவில்லை.காரணம். உச்சபட்ச வெறுப்பு கோபம் இந்த அமெரிக்க கைக்கூலிகளின் மேல்.இதை விட ஒரு கொடுமை அடுத்து Nuclear liabilities bill என்றொரு மசோதாவை அடுத்து கொண்டுவரப்போகின்றனர்(முன்பு குறிப்பிட்டது போல் அதே அமெரிக்க அடிவருடிதனம்தான் ),இதன் படி இங்கு அணு சக்தி உற்பத்தி நிலையத்தில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அந்த நிறுவனம் வெறும் 500 கோடியை கொடுத்துவிட்டு தப்பி ஓடி விடலாம்.அடடா என்னே ஒரு சனநாயகம்?என்னே ஒரு அடுவருடிதனம்?புல்லரிக்குது.
மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட சாரு எழுதிய புத்தகங்களில் இதைவிட நாராசமாக இந்த கையாலாகாத சனநாயகத்தை கிழித்திருப்பார் .
வாழ்க சனநாயகம்!!!!!!
நண்பரே,
செய்திதாள் படிப்பதை நிறுத்த வேண்டாம். அப்படி படிக்கப்பட்ட நியாய, அந்நியாயங்கள் உங்களை போன்ற பதிவர்களால் எழுத படும் போது நிச்சயம் படிப்பவர் மனசாட்சியை உறுத்தும்! அதுவே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம். தெரியுமா? திருப்பதி கஜானாவின் கையிருப்பு பல ஆயிரம் கோடிகளும், கிலோ கணக்கில் தங்க,வைரமாகவும் உள்ளதாம்?! இவை எல்லாவற்றையும் ஏழைகளுக்கு குடுத்தால் என்னவாம்? செய்ய மாட்டார்களே! கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன் ….
Arasiyal maarina ithellam maarum’nu naan nenaikran. Itha sattathin muyalaamai’nu than sollanum….:(
Enna vaazhka da idhu..!