XIII – 4 – அதிரடிப்படை
XIII – பாகம் ஒன்று – கறுப்புச் சூரியனின் தினம்
XIII – பாகம் இரண்டு – செவ்விந்தியன் செல்லுமிடத்தில்
XIII – பாகம் மூன்று – நரகத்தின் கண்ணீர்த்துளிகள்
நமது XIIIயைக் கவனித்து இரண்டு மாதங்கள் ஆகின்றன. கனவில் மேஜர் ஜோன்ஸ் வந்ததால், இதோ அடுத்த பகுதி.
ப்ளைன் ராக் அஸைலத்திலிருந்து XIII மேஜர் ஜோன்ஸின் உதவியோடு தப்பித்ததோடு பாகம் மூன்று முடிகிறது. அதன்பின்……
அமெரிக்க அதிபர் தேர்தல். கொலை செய்யப்பட்ட ஷெரிடனின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோஸஃப் கால்ப்ரெய்ன் ஒரு பக்கம். ஷெரிடனின் தம்பியான வால்டர் ஷெரிடன் இன்னொரு பக்கம். கடுமையான போட்டி நிலவுகிறது.
கர்னல் அமோஸ், XIII என்பவன், ராஸ் டேன்னர் என்ற மனிதன் என்று நம்புவதால், அவனது உறவினன் ஒருவனது வீட்டுக்கு வந்து, அங்குள்ள பழைய உடைமைகளை நோண்டத் தொடங்குகிறார். ஒரு மாதம் முன்பு, ராஸ் டேன்னர் கோஸ்டா ரிகாவிலிருந்து ஒரு கடிதம் எழுதினான் என்று கூறி, அதனை எடுத்து வருவதாகச் சொல்லி அந்த ஆசாமி நழுவ, தனித்து விடப்படும் அமோஸும் அவருடன் வந்திருக்கும் நெல்சன் என்ற பாதுகாப்பாளரும், அந்த அறையில் உள்ள தஸ்தாவேஜுகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில், அங்கிருக்கும் ராஸ் டேன்னரின் புகைப்படத்தைப் பார்க்கும் அமோஸின் மூளையில் அபாய மணி அடிக்கிறது.
வெளியே கதவும் பூட்டப்பட்ட நிலையில், இருவரும் ஜன்னலிலிருந்து குதிக்க, அடுத்த கணம்…
பூம் !
வெடித்துச் சிதறுகிறது அந்த இடம்.
அங்கே.. பிறிதோரிடத்தில்…கடும் மழையினிடையில், ராணுவ அணிவகுப்பு நடந்துகொண்டிருக்கிறது. ஒரு காயப்பட்ட மனிதனையும் தங்களுடன் சுமந்துகொண்டு நடந்துகொண்டிருக்கும் அந்த அணியின் தலைவனான லெஃப்டினண்டின் பெயர், க்வின்.
காயமுற்று இருக்கும் சேம்பர்ஸ் என்னும் அந்த மனிதனை அங்கேயே விட்டுவிட்டுச் செல்லலாம் என்ற க்வின்னின் யோசனையை, அந்த அணியில் இருக்கும் ஒரு மனிதன் மறுக்கிறான். அவனது பெயர் – ராஸ் டேன்னர். ஆம். நமது நாயகன் XIII அறிமுகம்.
இருவருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதத்தில், கடைசியில் வெல்லும் XIII யைப் பார்த்துக் கறுவிக்கொண்டே செல்கிறான் க்வின்.
பெண்டகன்.
ஜெனரல் காரிங்டனைப் பார்க்க வருகிறார் கர்னல் அமோஸ்.
வெடித்துச் சிதறிய அந்த இடத்திலிருந்து தான் தப்பியது எப்படி என்று தனிமையில் விளக்குகிறார் அமோஸ். ராஸ் டேன்னரின் உறவினன் என்ற பெயரில் அங்கு இருந்தது…. மங்கூஸ் என்று சொல்கிறார். ராஸ் டேன்னரின் ஃபோட்டோவைப் பார்த்துக் கொண்டிருக்கையில், சரேலென்று உறைத்த அந்த உண்மையினாலேயே தன்னால் அங்கிருந்து தப்பிக்க முடிந்தது என்று சொல்லி முடிக்கிறார்.
அதேபோல், ராஸ் டேன்னரின் அத்தனை ஃபைல்களையும் பரிசோதித்தாயிற்று என்று சொல்லும் அமோஸ், ராஸ் டேன்னர் என்ற விஷயமே போலி என்றும், அவர்களைத் திசைதிருப்ப உருவாக்கப்பட்ட நாடகமே அது என்றும் சொல்கிறார்.
அங்கேயே, XIII தப்பிக்க அத்தனை உதவிகளையும் செய்த காரிங்டனைக் குற்றம் சாட்டுவதுபோல் அமோஸ் பேச, கோபத்தில் தனது சட்டையைக் கழற்றும் காரிங்டன், தனது தோளில் எந்த முத்திரையும் இல்லை என்று கத்துகிறார்.
போலி டாக்குமெண்ட்டுகளைப் பற்றி வேறு யாரிடமாவது காரிங்டன் சொல்ல நேர்ந்ததா என்று வினவும் அமோஸ், லெஃப்டினண்ட் ஜோன்ஸைப் பற்றிக் கேட்கிறார். ஜோன்ஸின் நேர்மையைச் சந்தேகிக்கவே முடியாது என்று கத்தி, அவர்களை வெளியேற்றி விடுகிறார் காரிங்டன். இவர்களது பேச்சை, மைக்ரஃபோன் மூலம் ஒட்டுக்கேட்டுக் கொண்டிருந்த ஜோன்ஸ், வருத்தத்தில் அங்கிருந்து வெளியேறி விடுகிறாள்.
அங்கிருந்து செல்லும் ஜோன்ஸ், நேராக XIII இருக்கும் ராணுவ முகாமுக்கு வருகிறாள்.
முகாமில், சார்ஜெண்ட் பெட்டி என்ற பெண்ணோடு பேசிக்கொண்டிருக்கும் XIII யிடம், அவனுடைய முகம், இறந்துபோன ஸ்டீவ் ராலாண்டை நினைவுபடுத்துகிறது என்று பெட்டி சொல்கிறாள். ஸ்டீவ் ராலாண்ட், ஹெலிகாஃப்டர் விபத்தில் இறக்கவில்லை என்பதற்கு வாய்ப்புகள் உண்டு என்று பெட்டி சொல்லிக்கொண்டிருக்கையில், கர்னல் மாக்கால் அழைப்பதாக ஒருவன் வந்து XIII யை அழைத்துச் செல்கிறான். அன்றிரவு தனது இருப்பிடத்துக்கு வந்தால், இன்னமும் நிறைய விஷயங்களைச் சொல்வதாக பெட்டி சொல்கிறாள்.
அங்கிருந்து XIII ட்ரான்ஸ்ஃபர் செய்யப்படுவதாக மாக்கால் சொல்கிறார். நேராக க்வின்னைப் பார்க்கச் செல்லும் XIII , க்வின்னை அடி பின்னியெடுத்து விடுகிறான். அங்கே மேஜர் ஜோன்ஸைப் பார்க்கும் XIII , அன்றிரவு தனக்குச் சில விபரங்கள் தெரியப்போவதாகச் சொல்லிச் செல்கிறான்.
அங்கே… வேறோரிடத்தில்… ஒரு சுடுகாட்டில், ஜட்ஜ் ஆலன்பியைச் சந்திக்கிறார் கர்னல் அமோஸ். அவரிடம், XIII என்று தோளில் பச்சை குத்தப்பட்டு ஹெலிகாஃப்டர் விபத்தில் இறந்துபோன ஸ்டீவ் ராலாண்டைத் தான் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்கிறார் அமோஸ். அதே நேரத்தில், அவருக்குப் பின்னால், கறுப்பு உடையணிந்த அழகி ஒருவள் நடந்து செல்கிறாள்.
சுடுகாட்டில் இருக்கும் ‘ஜேஸன் ஃப்ளை’ என்று எழுதப்பட்டிருக்கும் சமாதி ஒன்றைக் காண்பித்து, அதுதான் ஸ்டீவ் ராலாண்ட் புதைக்கப்பட்டிருக்கும் இடம் என்று சொல்கிறார் அமோஸ்.
சென்ற பாகத்தில், ஜெனரல் காரிங்டன் கொடுத்த ராணுவ வீரர்கள் பட்டியலில் இருந்த ஒரு பெயர் தான் ஜேஸன் ஃப்ளை என்றும், ராலாண்டின் வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புகளைச் சோதித்துப் பார்த்தபோது இந்த உண்மை தெரிந்தது என்று சொல்லும் அமோஸ், ஹெலிகாஃப்டர் விபத்தில் ராலாண்ட் இறக்கவில்லை என்றும், ஒரு வருடம் முன்பு, இரண்டு துப்பாக்கிக் குண்டுகளால் தான் ராலாண்ட் இறந்தார் என்றும் ஜட்ஜ் ஆலன்பியிடம் விவரிக்கிறார். அதுவும், ஜனாதிபதி ஷெரிடன் கொலை செய்யப்பட்ட சில நாட்களிலேயே ராலாண்ட் இறந்திருக்கக்கூடும் என்றும் சொல்கிறார்.
பக்கத்து சமாதியில் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறாள் அந்த கறுப்பு உடையணிந்த மாது.
ஆகவே, ராலாண்ட், ஜனாதிபதியைக் கொலைசெய்தவர்களில் ஒருவனாக இருந்திருக்கக்கூடும் என்பது தனது ஊகம் என்று குண்டைத் தூக்கிப் போடுகிறார் அமோஸ்.
ஹெலிகாஃப்டர் விபத்தில் ஸ்டீவ் ராலாண்ட் இறந்ததாகவும், அவரது பிணம் அடையாளம் காணப்பட்டதாகவும் இருக்கும் பொய்யான ரிப்போர்ட் ஒன்றை, ராணுவத் தகவல் கிடங்கிலிருந்து தான் பெற்றுவிட்டதாகவும், அதில் கையெழுத்து இட்ட கயவனின் முகமூடியைக் கிழித்துவிட்டதாகவும் சொல்லி, டக்கென்று திரும்பி, அதற்குள் துப்பாக்கியை எடுத்துவிட்ட ஆலன்பியின் கையில் தனது கைத்தடியால் ஒரே போடு போடுகிறார் கர்னல் அமோஸ்.
ஜட்ஜ் ஆலன்பியின் சட்டையை விலக்கிப் பார்க்கும் அமோஸுக்கு, அங்கு பச்சை குத்தப்பட்டிருக்கும் IV என்ற ரோமன் எண் தெரிகிறது. அந்தக் கும்பலின் தலைவனான நம்பர் I யார் என்று ஆலன்பியைக் கேட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில்..
டுமீல் !
ஆலன்பி இறந்து விழுகிறார். அவரைச் சுட்ட கொலைகாரன், அதற்குள் ஒரு சமாதியின் பின்னால் பதுங்கிவிட்ட அமோஸைப் பார்த்து சரமாரியாகச் சுடுகிறான். அமோஸைத் துப்பாக்கி முனையில் அவன் கொல்லப்போகும் தருணத்தில், அவனை யாரோ சுடுவதால், இறந்து விழுகிறான்.
அந்தக் கறுப்பு விதவை !
அங்கே.. ராணுவ முகாமில்.. இரவு, பெட்டியின் அறைக்கு வருகிறான் XIII. நிர்ப்பந்தத்தால் ராணுவத்தில் சேர்ந்ததாகச் சொல்லும் பெட்டி, XIII யை முத்தமிடுகிறாள். இதனை, வெளியே இருந்து அசூயையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறாள் மேஜர் ஜோன்ஸ்.
ஒருநாள், தனது சகோதரியுடன் இருந்த சமயம், ஒரு இடத்தில், ஸ்டீவ் ராலாண்ட், மஃப்டியில் இருந்த ஒரு ராணுவ அதிகாரியுடன் பேசிக்கொண்டிருந்ததை விவரிக்கும் பெட்டி, அந்த நபர், கர்னல் மாக்கால் என்று சொல்லிக்கொண்டிருக்கையில், துப்பாக்கியுடன் உள்ளே வருகிறான் மாக்கால்.
கர்னல் அமோஸைக் காப்பாற்றிய அந்த அழகி வேறு யாருமல்ல. இறந்துபோன ஸ்டீவ் ராலாண்டின் மனைவியான கிம் ராலாண்டே அவள். ஒரு வீட்டில் அமோஸை விட்டுவிட்டு மறைந்துவிடுகிறாள் கிம். அந்த வீடு, கொலை செய்யப்பட்ட ஜனாதிபதி ஷெரிடனின் வீடாக இருக்கிறது. அங்கு, அமோஸை வரவேற்கிறார் ஜெனரல் காரிங்டன்.
அங்கு, நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையாக இருக்கும் வயதான மனிதர் ஹென்றி ஷெரிடன் (இறந்த ஜனாதிபதியின் தந்தை), அமோஸுக்கு இதுவரை நடந்தவைகளை விளக்குகிறார்.
கிம், தங்களிடம் இருந்த ஒரு அருமையான ஏஜண்ட் என்று சொல்லி, அவள், மாணவர்களிடையே ஊடுரூவியிருந்த சில நாசவேலை சக்திகளைக் கண்டுபிடிப்பதற்காக அனுப்பப்பட்டதாகவும், அப்போது மாணவனாக இருந்த ஸ்டீவ் ராலாண்ட் என்பவனிடம் அவள் பழகியதாகவும், அவனுடன் காதலில் விழுந்ததாகவும் தெரிவிக்கிறார் ஹென்றி.
சிறிது காலத்தில் இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும், அதன்பின் ஸ்டீவ், ராணுவத்தில் சேர்ந்து, குறுகிய காலத்திலேயே புகழடைந்ததாகவும் , அதன்பின் திடீரென ராலாண்ட் இறந்த செய்தி வந்ததாகவும், ஆனால், அதன்பின் ஒருநாள், கிம்முக்கு ஒரு ஃபோன்கால் வந்தது என்றும், அதில் பேசிய ஸ்டீவ் ராலாண்ட் ஒரு இடத்துக்கு அவளை வரச்சொன்னதாகவும் சொல்லும் ஹென்றி, அந்த இடத்தில் இருந்த ஸ்டீவ், ஹெலிகாஃப்டர் விபத்தில் இருந்து தான் தப்புவிக்கவைக்கப்பட்டதாகவும், ஒரு குறிப்பிட்ட காரியத்தை செய்துமுடிக்கவே இந்தத் தப்புவித்தல் நடந்தது என்றும் கிம்மிடம் விளக்கியதைச் சொல்கிறார்.
இந்தத் தகவல் தெரிந்ததும், கிம்மின் உள்ளே இருந்த கண்ணியமிக்க உளவாளி விழித்துக் கொண்டதாகவும், அவள் காரிங்டனைத் தொடர்புகொண்டு அத்தனையையும் விளக்கியதாகவும் ஹென்றி சொல்லிக்கொண்டு போகிறார். அப்போது குறுக்கிடும் அமோஸ், காரிங்டன் ஏன் இந்த விஷயத்தில் மூக்கை நுழைத்தார் என்று வினவ, அவருக்கு ஒரு திடுக்கிடும் உண்மை பதிலாகக் கிடைக்கிறது.
கிம், ஜெனரல் காரிங்டனின் மகள்!
அங்கே, துப்பாக்கி முனையில் XIII மற்றும் பெட்டியை அழைத்துச் செல்லும் மாக்காலின் பின் மண்டையில் மடேலென்று ஒரு அடி விழ, அவன் மயங்கி விழுகிறான். அடித்தது, மேஜர் ஜோன்ஸ். அங்கிருந்து தப்பிக்கும் அவர்கள், மேஜர் ஜோன்ஸின் ஹெலிகாஃப்டருக்கு வந்து, உள்ளே நுழைகையில், ஜோன்ஸின் தலையில் பதிகிறது துப்பாக்கி முனை ஒன்று.
ஹென்றி ஷெரிடன் விட்ட கதையை, காரிங்டன் தொடர்கிறார்.
முகமூடி அணிந்த ஒரு சபைக்குக் கிம்மை அழைத்துச் சென்ற ஸ்டீவ் ராலாண்ட், அவளது தோளிலும் ஒரு ரோமன் எண்ணைப் பதித்ததாகக் காரிங்டன் சொல்கிறார். திடீரென்று ஒருநாள், பயணம் செல்லவிருப்பதாகச் சொல்லி, கிம்மிடம் ஒரு வங்கியின் லாக்கர் சாவியைக் கொடுத்துவிட்டு, ஸ்டீவ் ராலாண்ட் செல்ல, உடனடியாகக் கிம் கொடுக்கும் தகவல்களிலிருந்து, அவனுக்கு ஒதுக்கப்பட்ட வேலை வந்துவிட்டது என்று உளவுத்துறை தெரிந்து கொள்கிறது. இருந்தாலும், உளவுத்துறையின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு, ஸ்டீவ் ராலாண்ட் மாயமாக மறந்து விடுகிறார்.
அதற்குப் பின்னர் தான், ஜனாதிபதி ஷெரிடன் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தேறுகிறது.
அதற்குப் பின், இரண்டு புல்லட்களோடு கிம்மைத் தேடி வரும் ராலாண்ட், அங்கேயே இறந்துவிடுகிறார்.
இறக்குமுன், ‘ஏமாற்றப்பட்டுவிட்டோம்’, ‘மங்கூஸ்’, ‘ஓடிவிடு’ என்று தட்டுத்தடுமாறிச் சொல்லிவிட்டு இறக்கிறார்.
அதன்பின், ஸ்டீவ் ராலாண்ட் இறந்தது, இந்தச் சதியின் மேல் மட்டத் தலைவர்களுக்குத் தெரிந்தால், இந்த விஷயம் இழுத்து மூடப்பட்டுவிடும் என்ற காரணத்தால், ஸ்டீவ் ராலாண்ட் போலவே இருந்த ‘ஜேஸன் ஃப்ளை’ என்ற ராணுவ வீரன் தேர்ந்தடுக்கப்பட்டு, அவனுக்கு ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டு, அவன் ஸ்டீவ் ராலாண்டைப் போலவே உருமாறி, கிம்முடன் சேர்ந்து சில காலம் ஒளிந்து வாழ்ந்ததாகவும், சரியாக அதே நேரத்தில், திடீரென்று இந்த ஜேஸ்ன் ஃப்ளை மாயமாக மறைந்துபோனதாகவும் சொல்லும் காரிங்டன், முதல் பாகம் ஆரம்பித்த இடத்துக்கு வந்து நிறுத்துகிறார். அதாவது, குண்டடிபட்ட ஜேஸன் ஃப்ளையை, இரண்டு வயதானவர்கள் காப்பாற்றும் இடம்.
அங்கே, ஹெலிகாஃப்டரில், மேஜர் ஜோன்ஸின் மேல் பதிந்த துப்பாக்கி, க்வின்னுடையது. XIII மேல் இருந்த வெறுப்பினால், ஹெலிகாஃப்டரின் உள்ளே வந்து, இவர்களை மிரட்டிக்கொண்டிருக்கிறான் க்வின். XIII செய்யும் சாகச வேலைகளால், க்வின் கொல்லப்பட்டு, XIII , ஜோன்ஸ் மற்றும் பெர்ரி, பாதுகாப்பாகத் தரையிறங்குகின்றனர்.
அமோஸிடம் இவ்வளவு நாள் நடந்த நிகழ்ச்சிகளைச் சொல்லிக்கொண்டிருக்கும் காரிங்டன், வரும் மாதம் நடக்கவிருக்கும் ராணுவ அணிவகுப்பில், அரசைக் கவிழ்க்கும் பெரிய சதி இடம்பெறப்போவதாகத் தனக்கு ஒரு தகவல் கிடைத்திருப்பதைச் சொல்கிறார்.
XIII , இந்த இரண்டு பெண்களோடும் ஒரு தீவில் தனித்து சிக்கிக்கொள்கிறான்.
அரசுக்கு வந்த ஆபத்து தகர்க்கப்பட்டதா?
XIII யின் நினைவு திரும்பியதா?
ஜனாதிபதியைக் கொன்ற சதிகாரர்கள் யார்?
இதைப்போன்ற இன்னும் மிகச் சுவாரஸ்யமான விடைகளைத் தெரிந்துகொள்ள, இந்தத் தொடரின் அடுத்த பாகமான ’அபாய எச்சரிக்கை’ படியுங்கள்.
மீண்டும் சந்திப்போம்
என்ன நண்பா தூங்கலயா?!!நாளைக்கு லீவா?
கலக்குங்கோ!!!!
ஆ…. நண்பா… யூ த ஃபர்ஸ்ட் ?? ரெண்டு நாளா நீங்கதான் அப்ஸ்காண்ட் ஆயிட்டீங்க.. நானு இப்போ தூங்க போறேன்.. நாளை புடிக்குறேன் உங்களை 😉 வீக்கெண்ட் எப்புடி ? ஜாலியா? 😉
நம்மளுக்கும் கார்டுனுக்கும் காத தூரம் தேளு… எஞ்யாய் தீ வீக் எண்டு…
என்னாது கார்டூனா? வெளங்கிடும்.
நீங்க இன்னும் ராபர்ட் லட்லம் பற்றியோ, ஜேசன் பார்ன் சீரிஸ் பற்றியோ, தமிழில் கமல்ஹாசன் மற்றும் பிரசாந்த் நடித்த படங்களை பற்றியோ, அல்லது ஹிந்தியில் சல்மான்கான் நடித்த படங்களையோ பார்க்கவில்லை என்றே தோன்றுகிறது.
நண்பரே, (இந்த கதையை பற்றி அதிகம் அறிமுகம் இல்லாதவர்களுக்கு)
இந்த கதையின் மூலம் பற்றி சற்று தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத கதையாக இது அமையும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லாமல் இதனை சொல்கிறேன்.
வணக்கம்…
நான் ப்ளாக்னு எழுத ஆரம்பிச்ச உடன் எழுதும் முதல் கமெண்ட். என் ப்ளாக்ல உங்க போஸ்ட்க்கு link கொடுத்திருக்கேன்.கொடுக்கலாம்ல? (அதான் கொடுத்தாச்சே அப்புறம் என்ன கேள்வி).
http://saravanaganesh18.blogspot.com/2010/07/1-aguirre-wrath-of-god.html#more
@ இராமசாமி கண்ணன் – ஆஹா…. கார்ட்டூன்னு சொல்லி, இந்தக் கதையையே ஒலக இன்சல்ட் பண்ணிட்டீங்களே பாஸ் 🙁
அட்டகாசமான க்ராஃபிக் நாவல் ஸீரீஸ் இது. நம்ம விஸ்வா சொன்னமாதிரி, பார்ன் ஸீரீஸ் பேஸ் பண்ணின ஒரு Superb கதை. உலகமெல்லாம் சக்கைப்போடு போட்டுக்கினு இருக்கு..
முடிஞ்சா இதோட ஃபர்ஸ்ட் பார்ட்டை டவுன்லோட் பண்ணி, படிச்சிப் பார்க்கணும்னு கேட்டுக்கறேன் 😉
@ விஸ்வா – //இந்த கதையின் மூலம் பற்றி சற்று தெரிந்துகொள்ளுங்கள், நீங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத கதையாக இது அமையும் என்பதில் துளியளவும் சந்தேகமில்லாமல் இதனை சொல்கிறேன்//
100 % உண்மை !! நானும் விஸ்வாவின் கருத்தை வழிமொழிகிறேன் !!
@ கொழந்த – முதல் படமே சிக்ஸர்! அட்டகாசமான ஒரு படம் அது! வாழ்த்துகள். பின்னுங்க !! 😉
XIII கதையில் டெம்போ செட் பண்ணிக் கொண்டே போய் ஒரு அதிரடி பாகம்(5,8,12) கொண்டு வருவார்கள்.அப்படி டெம்போ செட் பண்ண யூஸ் ஆன கதை தான் இது.பட்டாசான ஐந்தாம் பாகத்துக்கு பரபர இன்ட்ரோ இது.எனக்கு பிடித்த பாகங்களில் ஐந்தும் உண்டு.ரொம்பப் பிடித்தது 8. 🙂
நண்பரே,
ஊய்ய்..ஊய்ய்..ஊய்ய்.. இந்த விசிலடி எதற்கு என்று நான் கூறவும் வேண்டுமா :)) அப்படியே மெயிண்டெய்ன் செய்யுங்கள்.
விரிவான கதை சொல்லலுடன் சிறப்பான பதிவு.
நல்ல பதிவு கீதபிரியன் போடுற மாதிரி பெருசா. ஆனா காமிக்ஸ்கும் எனக்கும் சென்னைக்கும் பெங்களூர்க்கும் உள்ள தூரம்.
மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது கடந்த பாகங்களை இன்னும் வாசிக்கவில்லை வாசித்துவிடுகிறேன் . பகிர்வுக்கு நன்றி
கருந்தேளாருக்கு நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் தல
எனக்கு மிகவும் பிடித்த காமிக்ஸ்
ஹ்ம்ம் Awaiting for the Collector’s Special
அப்புடியே எல்லோருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
.
ஹலோ நண்பா சவுண்டே காணுமே?
@ இலுமி – அது ! அதே தான் எனக்கும்.. பட்டாசு பத்தவெச்ச மாதிரி போற XIIIயோட ஆரம்பக் கதைகள் அத்தனையும் என்னோட ஃபேவரைட்ஸ் 😉
@ காதலரே – விசிலுக்கு நன்றி… இனிவரும் கதைகளில், கவர்ச்சிக்கொலைகாரி வரடும்.. அவளது படங்களைப் போட்டு விடுவோம் 😉 ஹீ ஹீ
@ மயிலு – இதானே வாணான்றது… சென்னைல இருந்து பெங்களூரு வர்ரது படா பக்கம்யா… வந்து பாக்குறது 😉
@ பனித்துளி சங்கர் – நன்றி. அவசியம் முந்தைய பாகங்களைப் படியுங்கள். இந்தத் தொடரின் ரரிகனாக மாறிவிடுவீர்கள்
@ பென் – உங்களுக்கும் எனது பிலேடட் வாழ்த்துகள்.. ஃபேஸ்புக் பக்கம் வாருங்களேன் 😉 அங்கே பயங்கரக் கும்மிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன 😉
@ சிபி – நீங்க மட்டும்தானா? இங்க ஒரு கும்பலே வெயிட் பண்ணினுருக்குது 🙂 நண்பர்கள் தினம் படா சோக்கா கழிஞ்சதா? 😉
@ கார்த்திகேயன் – நண்பா.. இப்பத்தான் ஜிடாக்ல மெஸேஜ் போட்டேன்… ஆனா நீங்க ஐடில்ல கீறீங்களே? என்னா கொடும இது !!
பின்னூட்டங்களுக்கு இவ்வளவு தாமதமாக பதில் போடுவதற்குக் காரணம், வேலைப்பளு ;-(.. ஐ வில் பீ பேக் சூன் யா 😉
I see your point !!, Your writting could change the world that you want. Express your thoughts!!. Politics , Business , Entertainment , Sports & Games , Life & Events ,and Health what else?. Meet your like minded here. The top social gathering in one place all the top notches meet here. It is not about win the race, participation is all matters. We proud inviting you to the the internet’s best Social community. http://www.jeejix.com .
oh thanks bro. im a big fan of XIII comics.
கலக்குறிங்க பாஸ்!
உஜிலாதேவியின் ப்லாகில் குறிப்புகளை பகிர்ந்து கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறோம்.
http://ujiladevi.blogspot.com/2010/08/blog-post_10.html
ஸ்வேதா என் செல்லமே… உனக்காக வெய்ட்டிங்டி என் கண்ணே. அங்கே வா.
WHERE CAN I DOWN LOAD THESE
18.The Irish Version (La Version Irlandaise), November 2007, drawn
19.The Last Round, November 2007 (Le Dernier Round). Last one of this cycle
I HAVE DOWNLOADED OTHER PARTS.
PLEASE SOMEONE TELL ME ..
Hi: I got here through a Charu Nivedita wiki entry link, ran through some of your world cinema posts, but not until finding posts on XIII did I want to pause and comment. It brings back memories from schooldays. I left for college when it was still incomplete. Since, I have read mostly DC Vertigo titles and the like but I haven’t forgotten XIII all these years. I have them digitally but its hard to read them in that format as it’s a long series. Cinebook is publishing them (the entire series for the first time in English) so I will be picking those up as and when they become available. When I look back and see what Muthu and Lion Comics did back in those days by introducing European and British comics into our lives, I can only say they did it wonderfully.
bro, I wud like to buy the Tamil Version. and am ion London. do you know any places to order? thank in advance,
aneslin@gmail.com