என்னை அறிந்தால் (2015)

by Karundhel Rajesh February 9, 2015   Tamil cinema

முன்குறிப்பு – ஸ்பாய்லர்கள் இல்லாமல் இந்தப் படத்தைப் பற்றி எழுத முடியாது. எனவே படம் பார்க்காத நண்பர்கள் இக்கட்டுரையைப் படிப்பதைப் பற்றி ஒருமுறை யோசித்துக்கொள்வது நல்லது (ஸ்பாய்லர்கள் பற்றிப் படித்தாலும் படத்தில் அப்படி ஒன்றும் பிரச்னை இருக்காது என்பது வேறு விஷயம்).


 

கௌதமுக்கென்று இருக்கும் அத்தனை விஷயங்களையும் தவறாமல் உபயோகித்து அவர் எடுத்திருக்கும் படம்தான் ‘என்னை அறிந்தால்’. இது அவரது போலீஸ் ட்ரையாலஜியில் கடைசிப்படம் என்று அவர் சொல்லியிருக்கிறார். இது அஜீத்துக்கென்றே எழுதப்பட்ட படம் என்றும், சிம்புவை வைத்துப் படம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே திடீரென இந்தப் படத்தை எடுக்க முடியுமா என்று கேட்கப்பட்டதாகவும், உடனடியாக அமர்ந்து தயார் செய்த படம்தான் இது என்றும், அவரது திரைவாழ்க்கையிலேயே இதுதான் மிகவும் சீக்கிரமாக எடுக்கப்பட்ட படம் என்றும் சொல்லியிருக்கிறார்.

முதலில் படத்தின் நெகட்டிவ் பாயிண்ட்கள்.

எந்த இயக்குநரும் இப்படிச் சில கட்டுப்பாடுகளுக்குள்ளாகப் படம் செய்யும்போது என்னவெல்லாம் ஆகுமோ அத்தனையுமே என்னை அறிந்தால் படத்திலும் உள்ளது. காக்க காக்க மற்றும் வேட்டையாடு விளையாடு படங்களை நினைவுபடுத்தும் பல காட்சிகள் இதில் உள்ளன. இதற்கெல்லாம் மேலாக, படம் முழுதுமே வாய்ஸ் ஓவரில்தான் பயணிக்கிறது. கதாநாயகன் சத்யதேவுக்கு ஆடியன்ஸிடம் சொல்லப் பல விஷயங்கள் உள்ளன. படம் முழுதும் அவன் அவற்றை வரிசையாக சொல்லிக்கொண்டே செல்கிறான். வாய்ஸ் ஓவரில் படம் செல்லும்போது என்ன சொல்லப்படுகிறது என்பது மிகவும் முக்கியம். ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் தயவில் சத்யதேவ் அடித்தொண்டையில் பேசும் பல வசனங்கள் இசையால் விழுங்கப்பட்டு விடுகின்றன.

’என்னை அறிந்தால்’ முற்றிலுமாக ஒரே பாணியில் பயணிக்கும் ஒரு கௌதம் படம். இந்தப் படத்தைப் பார்க்கையில், இன்னும் எத்தனைமுறைதான் கௌதமின் இதே பாணி படங்களைப் பார்ப்பது என்று தோன்றியது. பனிரண்டு வருடங்கள் முன்னர் 2003ல் காக்க காக்க வெளியானபோது அது பெற்ற வரவேற்பு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அதேபோன்ற வரவேற்புதான் ‘வேட்டையாடு விளையாடு’ படத்துக்கும் கிடைத்தது. இரண்டுமே வெவ்வேறு களங்களில் அமைந்த போலீஸ் படங்கள். ஆனால் என்னை அறிந்தால், இந்த இரண்டு படங்களின் க்ராஸ் ஓவர் என்பது நன்றாகத் தெரிகிறது. காக்க காக்க meets வேட்டையாடு விளையாடு. இதிலும் கடமை தவறாத கம்பீரமான போலீஸ் அதிகாரி. இதிலும் அவர் பெண்களின்மீது மரியாதை கொண்டவர். இதிலும் போலீஸ் வேலையின்மீது காதல், காமம் ஆகிய எல்லாவற்றையும் உடையவர். இதிலும் அந்தப் போலீஸ் அதிகாரி ஒரு ‘அழகான’ பெண்ணிடம் காதல் வயப்படுகிறார். இதிலும் அந்தப் பெண் கா.கா மற்றும் வே.வி மோஸ்தரிலேயே புடவை கட்டியிருக்கிறார். இதிலும் அந்தப் பெண்ணுக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இதிலும் அந்தப் பெண்ணின் கணவன் அவளை விட்டுவிட்டுச் சென்று விடுகிறான். இதிலும் அந்தக் கணவன் ஒரு இடியட். இதிலும் அதே மலையாளத் திருமண ஏற்பாடுகள். இதிலும் அந்தப் பெண்ணுக்கு சிக்கல்கள் விளைகின்றன. இதிலும் அந்தப் பெண் பாண்டியாவைப் போன்ற – ஆனால் காட்டுத்தனமாக முடி வைக்காமல் சற்றே கட்டிங் செய்த வில்லனால் (கதாபாத்திர மாற்றம் போலும்) சாகிறாள். இதிலும் கொன்றவனைத் தேடுகிறான் போலீஸ் ஹீரோ. இதிலும் அப்படிப்பட்ட பெண் இறந்தபின் இன்னொரு பெண் வருகிறாள். இதிலும் அந்தப் பெண்ணின் மீது ஹீரோவுக்கு அன்பு சுரக்கிறது (ஆரம்பத்திலேயே சத்யதேவ் அந்தப் பெண்ணிடம் பேசும் வசனங்களிலேயே இது obviouஸாகத் தெரிகிறது). இதிலும் ஹீரோவும் ஹீரோயின்களும் காஃபி ஷாப்களின்மீது வெறிகொண்டு திரிகிறார்கள். இதிலும் வில்லன் ஹீரோவை ஃபோனில் கண்டபடி திட்டுகிறான். ஆனால் இங்கே ஒரு ட்விஸ்ட் என்ன என்றால் வில்லனை விடவும் போலீஸ் அதிகாரிதான் பா*, தே*** **னே என்றெல்லாம் கடுமையான காட்டுக் கெட்ட வார்த்தைகள் உபயோகித்து வில்லனின் காதில் ரத்தம் வர வைக்கிறார். இறுதியில் ஹீரோ வில்லன் மோதல். சுபம். இவையெல்லாவற்றுக்கும் மேலாக, ‘வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே’ பாடல் அப்படியே இம்மி பிசகாமல் வரிக்கு வரி இந்தப் படத்தில் எடுத்து உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. பாடலின் பெயர் மட்டும்தான் வேறு – ’மழை வரப் போகுதே’ என்று இருக்கிறது. ஹேரிஸ் வாழ்க. இதேபோல டிட்டோ ‘கற்க கற்க’ பாடலை நகலெடுத்தது போன்ற மாண்டேஜ்கள்.

எத்தனையோ படங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரே கதையை மீண்டும் மீண்டும் எடுக்கும் கௌதம் போன்ற இன்னொரு இயக்குநரைப் பார்த்ததில்லை. ஓரளவு ஹரியைச் சொல்லலாம். ஆனால் கௌதம் ஹரிக்கும் மேல் என்று தோன்றியது இப்படத்தில்தான்.

கதாபாத்திரங்களை எடுத்துக்கொண்டால், அன்புச்செல்வன் மற்றும் ராகவன் ஆகிய இருவரிடம் இருந்து சத்யதேவ் கதாபாத்திரம் எப்படி வித்தியாசப்படுகிறது? எல்லாமே ஒரே டெம்ப்ளேட்தானே? அன்புச்செல்வனுக்கும் ராகவனுக்கும் அவசியம் வித்தியாசங்கள் இருந்தன. அன்புச்செல்வன் இளைஞன். வேகமானவன். அந்த வேகத்தாலேயே சில தவறுகள் செய்யக்கூடியவன். ராகவன் நடுத்தர வயது நபர். மூளையை அதிகமாக உபயோகிப்பவர். ராகவனுக்கென்று ஒரு திமிர் இருந்தது. சத்யதேவ் எப்படி? இது எல்லாமே இருக்கும் ஒரு நபர் என்று காட்டப்படுகிறார். ஆனாலும் அவருக்கென்று ஒரு பர்ஸனாலிடி இல்லை என்றே தோன்றியது. அவரது தனிப்பட்ட பெர்ஸனாலிடி எப்போது வெளிப்பட்டது என்றால், தனது மகளோடு அவர் இந்தியாவைச் சுற்றும்போதுதான். ஆனால் அது படத்தின் இரண்டாம் பாதியில் அல்லவா வருகிறது? அதுவரை சத்யதேவ் அன்புச்செல்வன் & ராகவனின் க்ளோன் போலத்தானே செயல்படுகிறார்? அஜீத் என்ற நடிகரை மனதில் வைத்துக்கொண்டு பார்த்தால், அலட்டல் இல்லாத பாத்திரமாக அவர் நடித்திருப்பது நன்றாக இருந்தாலும், அந்தப் பாத்திரத்துக்கான விசேடம் என்ன? ஆளுமை என்ன? எப்படி அது கௌதமின் பிற போலீஸ் பாத்திரங்களிலிருந்து வித்தியாசப்படுகிறது? It just looks the same. கூடவே சத்யதேவ் அஜீத்தைப்போலவே சமைக்கிறார். அஜீத்தைப்போலவே காரை வேகமாகக் கையாள்கிறார் (’காரோட்டுறதுல கில்லாடி’ என்று வசனங்களும் வருகின்றன).

இதிலும் அதே அப்பா செண்ட்டிமெண்ட். அப்பா செண்ட்டிமெண்ட்டைத் தமிழில் பிழியப் பிழியத் தருவதற்கு இதுவரை சேரன் மட்டுமே இருந்தார். ஆனால் இனிமேல் கௌதம் சேரனின் இடத்தைப் பிடித்துவிட்டார் என்பது இப்படத்தில் நிரூபணம் ஆகிறது. ‘தவமாய் தவமிருந்து’ படத்தைப் பார்த்துக் கதறி அழுததாக கௌதம் சில நாட்கள் முன்னர் ஹிந்துவில் கொடுத்த பேட்டியில் சொல்லியிருக்கிறார் (லிங்க் மேலே கொடுக்கப்பட்டிருக்கிறது). இந்தப் பேட்டியைப் படித்ததும்தான் தங்க மீன்களை கௌதம் தயாரித்த காரணம் புரிந்தது. அவருக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். நம் எல்லோருக்கும் எத்தனையோ விஷயங்களில் செண்ட்டிமெண்ட்கள் இருக்கும். தவறே இல்லை. கௌதமும் அப்பா செண்ட்டிமெண்ட்டை ஏற்கெனவே நன்றாகவே காட்டியிருக்கிறார். ஆனால் திரும்பத்திரும்ப ’ஹீரோவின் அப்பா உலகத்திலேயே நல்லவர்; அவர் தியாக சிகரம்; நேர்மைச் செம்மல்; அப்பா தி க்ரேட்’ என்று ஒரே போன்ற காட்சிகளைக் காட்டிக்கொண்டிருந்தால் கொலைவெறிதான் வருகிறது. கௌதமுக்கு அவரது அப்பாமீது பரிவும் பாசமும் செண்ட்டிமெண்ட்களும் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தத் தமிழகத்துக்கும் அதை படத்துக்குப் படம் பறைசாற்ற வேண்டிய அவசியம் என்ன? ஒருவேளை தனது படங்களைத் தனியாகப் பார்த்துக் கதறி அழுவாரோ என்றெல்லாம் தோன்றுகிறது.

அடுத்து பாஸிடிவ் பாயிண்ட்ஸ்.

இத்தனை நெகட்டிவ்கள் இருந்தாலும், படத்தில் வரும் அருண் விஜய்யின் பாத்திரம் அவசியம் படத்துக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட்தான். கிட்டத்தட்ட உருவ அமைப்பில் பாண்டியாவைப் போலவே இருந்தாலும், இதில் பாண்டியாவை விடவும் இவருக்கு ஸ்கோப் அதிகம். இரண்டாம் பாதியின் இறுதிப் பல நிமிடங்கள் ஹீரோவை டென்ஷன் அடைய வைக்கும் காட்சிகளில் அவசியம் நன்றாக நடித்திருக்கிறார் அருண் விஜய். இவருக்கு இதுபோன்ற பாத்திரங்கள் அவசியம் பொருந்தும் என்று தோன்றுகிறது. சில வருடங்கள் முன்னர் வரை கெட்டியான கர்லிங் ஹேர்ஸ்டைல் வைத்துக்கொண்டு நடித்துக்கொண்டிருந்த அருண்குமார் வேறு – இப்போதைய அருண் விஜய் வேறு என்பது தெளிவாகப் புரிகிறது. அவருக்கு இன்னும் பல நல்ல வேடங்கள் காத்துக்கொண்டிருக்கலாம் (அல்லது) எழுதப்பட்டுக்கொண்டிருக்கலாம். அவசியம் அவைகளை அவர் உபயோகப்படுத்திக்கொள்வார் என்று நம்புகிறேன். படத்தில் அவருக்கான சம பங்கை அளித்த கௌதம் பாராட்டப்படவேண்டியவர்.

அடுத்ததாக, அஜீத் இத்தனை அடக்கி வாசித்து நான் கடைசியாகப் பார்த்தது ’முகவரி’ ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற படங்களில் மட்டுமே. வழக்கமாக அஜீத் படம் என்றாலே நாக்கைத் துருத்திக்கொண்டு ‘ஏய்ய்ய்’ என்று அடித்தொண்டையில் உறுமும் காட்சி மட்டுமே கண்களில் தோன்றும். சென்ற ஆண்டு பார்த்திருந்த ‘வீரம்’ அதை இன்னும் உறுதிப்படுத்தியது. எனக்குக் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் காலத்திய கேஷுவலான, ரிலாக்ஸ்டான அஜீத்தைத்தான் பிடிக்கும். அந்த அஜீத்தைப் பல வருடங்கள் கழித்து இந்தப் படத்தில் பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது (இருந்தாலும் ஓரிரு காட்சிகளில் அந்த நாக்கைத் துருத்துவதற்கு மிக அருகில் வந்தார். ஆனால் அதை செய்யவில்லை. அதற்குப் பதில் ஆள்காட்டி விரலை ஆட்டி மிரட்டினார்).

அடுத்து, இந்தப் படத்தில் சொல்லப்படும் கதை போல சமீபத்தில் எக்கச்சக்கக் கதையை நான் எந்தப் படத்திலும் பார்த்திருக்கவில்லை. கதை கதையாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். வாரணம் ஆயிரம் போலச் சிறுவயதில் துவங்கும் கதை ஹீரோவின் தற்போதைய வயது வரை செல்கிறது. ஆனாலும் அத்தனை கதை சொல்லப்பட்டாலும் அந்தக் கதைக்கான வேகம் இருக்கிறது. முதல் பாதியில் சில இடங்களில் கதை மெதுவாக நகர்ந்தாலும், அப்படி நகர்வதற்கான காரணங்களும் கதையிலேயே இருக்கின்றன (கிட்டத்தட்ட முதல் அரை மணி நேரத்தில் ஒரே ஒரு ஆக்‌ஷன் காட்சி. மற்றபடி முழுக்க முழுக்க வசனங்கள்தான். ஏனெனில் அதுதான் கதையின் ஆரம்பம். ஹீரோ ஹீரோயினுடன் விமானத்தில் பயணித்தல் மற்றும் அதன்பின்னர் அவளுடன் பேசுதல்). இங்கு ஆரம்பிக்கும் ஃப்ளாஷ்பேக் அப்படியே ப்ரூஸ் வேய்னின் கதைதானே? ப்ரூஸ் வேய்ன் பேட்மேனாக மாறுவதுபோலத்தான் சத்யா, சத்யதேவ் ஐ.பி.எஸ்ஸாக மாறுகிறான். அதற்கு அவன் தந்தையின் கொலையே காரணம். சத்யதேவ் விக்டர் மனோஹரை சந்திக்கும் காட்சியில் இருந்து படம் வேகம் பிடிக்கிறது. ஆனால் (’என்னை அறிந்தால்’ முற்றிலுமாக ஒரே பாணியில் பயணிக்கும் ஒரு கௌதம் படம் என்று துவங்கும் ஐந்தாம் பேராவைப் படித்துக்கொள்ளவும்).

நான்காவதாக, இந்தப் படத்தில் சொல்லப்படும் தந்தை – மகள் உறவு. சத்யதேவ் தனது மகளை அழைத்துக்கொண்டு நான்கு வருடங்கள் இந்தியாவைச் சுற்றும் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்தன. அந்தக் காட்சிகள் அவசியம் புதிதுதான். அக்காட்சிகளில் வரும் பாடலும் அழகு. மனதுக்கு இனிமையாக இருந்தது. அந்தக் காட்சிகளில் வரும் அஜீத்தான் இந்தப் படத்திலேயே மிகவும் இயல்பான அஜீத்.

அடுத்ததாக, படத்தின் இரண்டாம் பாதி. அதிலும் சத்யதேவ் சென்னை திரும்பி, நண்பனின் மகளைத் தேட முடிவு செய்வதில் இருந்து இறுதிவரை பட்டாசு போல வேகமாகச் சென்றது. தியாகராஜன் குமாரராஜாவின் பங்கேற்பு அவசியம் இக்காட்சிகளில் உதவியிருக்கலாம். ‘வொய் திஸ் கொலவெறி டி’ பாத்திரம், நிழலான வீதிகள் போன்றவையெல்லாம் எனக்குப் பிடித்தன.

படத்தின் நாயகிகள் பேசும் வசனங்கள் நன்றாக உள்ளன. ஒரு பெண்ணின் பாயிண்ட் ஆஃப் வ்யூவில் அவர்களின் மனதைப் பேசும் வசனங்கள் அவை. அது கௌதம் ஸ்பெஷல். ஆனால் அதில் ஒரு பிரச்னை என்னவென்றால், அவர்கள் சத்யதேவ் பாத்திரத்தைப் பார்த்துப் பேசும் பல வசனங்கள் எனக்குக் ரஜினிகாந்த்தையும் கமல்ஹாஸனையுமே நினைவுபடுத்தின. படையப்பாவில் what a man  வசனம் மற்றும் ரஜினிக்கு வயதானாலும் அவர் இன்னும் இளமையாகவே இருப்பது போன்ற வசனங்கள். போலவே ‘மன்மதன் அம்பு’ படத்தில் ஒரு காட்சியில் கமல் ஃப்ரெஞ்ச் பேசுவார். உடனடியாக த்ரிஷாவும் சங்கீதாவும் புளகாங்கிதம் அடைந்து கமலைப் பாராட்டித் தள்ளுவார்கள். இப்படித்தான் அனுஷ்கா பேசும் பல வசனங்கள் அஜீத்தைப் பாராட்டித் தள்ளுகின்றன (’அழகா… யாருடா நீ?’ etc…).. இயல்பான வசனங்கள் அவர்களுக்கு எழுதப்பட்டிருந்தாலும் படம் முழுக்கவே இப்படி அஜீத் என்ற நடிகரைப் பாராட்டும் பல வசனங்களும் உள்ளன. பிற பாத்திரங்களும் ‘சால்ட் & பெப்பர்’ அது இது என்று அஜீத்தைப் பாராட்டிக்கொண்டே இருக்கின்றனர். விவேக் உட்பட.

பாடல்கள் – இதுதான் கௌதம் & ஹாரிஸ் காம்போவில் சற்றே மந்தமான படம். ’இதயத்தை ஏதோ ஒன்று’, ’அதாரு அதாரு’, ’உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடல்கள் மட்டுமே நன்றாக உள்ளன. அதிலும் என் சாய்ஸ் ’இதயத்தை ஏதோ ஒன்று’ பாடலுக்கே. சின்மயியின் குரல் பிரமாதம். பாடல்கள் எதுவுமே முழுதாக வராமல் அப்படியே கட் செய்யப்பட்டுப் படத்துக்குள் சென்றுவிடுவது அவசியம் வரவேற்கத்தக்க விஷயமே.

’என்னை அறிந்தால்’, நீண்ட வருடங்கள் கழித்து- கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்துக்குப் பின்னர் – வந்திருக்கும் இயல்பான அஜீத் படம். இந்தப் படம் அஜீத்தின் ரசிகர்களுக்கு அவசியம் ஒரு விருந்து என்பதில் சந்தேகமில்லை. கௌதமின் ரசிகர்களுக்கு அவரது பிற படங்களை ஒட்டுமொத்தமாக மீண்டும் பார்த்த உணர்வு கிடைக்கலாம். பொதுவாகத் தமிழ்ப் பட விரும்பிகள் இப்படத்தைப் பார்க்கையில் நீளம் அவர்களுக்கு ஒரு பிரச்னையாக இருக்கும் என்று தோன்றுகிறது (மூன்று மணி நேரம்). என் கருத்து – தனிப்பட்ட முறையில் பல இடங்களில் எனக்கு ஏற்கெனவே பார்த்த காக்க காக்க & வேட்டையாடு விளையாடுவைத் திரும்பப் பார்ப்பதுபோல்தான் இருந்தது. முதல் பாதியின் சில காட்சிகள் மற்றும் வேகமான இரண்டாம் பாதி எனக்குப் பிடித்தன. என்னால் படத்தில் பிரச்னை இல்லாமல் அமர முடிந்தது. ஆனாலும் பழைய கௌதம் படங்களில் இருந்த ஒரு freshness இதில் குறைவு. காரணம் எல்லாவற்றையும் அவர் ஆல்ரெடி பழைய படங்களில் காட்டிவிட்டார். இனிமேல் கௌதம் தயவுசெய்து அவரது ஆட்டோபயாக்ரஃபி மேட்டர்களை படங்களில் வைக்காமல் இருப்பது நல்லது. மீறி வைத்தாலும் அட்லீஸ்ட் கொஞ்சம் புதிய காட்சிகளை யோசிக்கலாம். அது ஒன்றும் கஷ்டமே இல்லை.

இறுதியாக – ’என்னை அறிந்தால்’ அலுப்பில்லாமல் நகரக்கூடிய படமாக இருக்கலாம். ஆனால் கௌதமின் கதை சொல்லும் முறை மிகவும் predictableஆக மாறிப்போய்விட்டது இப்படத்தில் தெரிகிறது. அதனை அவர் மாற்றிக்கொள்ளுதல் அவசியம். இல்லாவிட்டால் – இன்னொரு படம் இதே போன்று இருந்துவிட்டால் சோஷியல் மீடியாவில் அவர் அடுத்த லிங்குசாமியாக மாறும் வாய்ப்பு அதிகம்.

  Comments

17 Comments

  1. GS Pradeep

    Golden Raj varum scene ah pathi sollave ilaa…. athu romba nalla iruthuchi( Ajith transformation )…. athe scene aapadiye Thalaivar padam Moondru Mugathil varum…. atha pathi solluvinganu nenaichen… Apram antha Kutty Ponnoda acting/reaction sooper ah irunthuchi…..:)

    Reply
      • Rajesh Da Scorp

        Ha ha ha … Pradeep – yes. that scene was taken straight away from Moondru mugam. But frankly saying, I liked the scene where Satyadev stands in front of his house, the thugs come and he talks to them asking them to come in if they have the guts. That scene was the top scene to me, more than this alex pandiyan scene. Reason is, I felt Ajith had acted well in this one than the other scene (You would have noticed the typical Ajith body language of raising a finger and shouting in that alex scene).. Cheers.

        Reply
        • GS Pradeep

          That scene was the top scene to me, more than this alex pandiyan scene. ( my mind voice : thalaivar nalla nadigarnu ivaru othuka maataru polaye 🙂 ) #chumma

          Reply
  2. //ஆனாலும் அவருக்கென்று ஒரு பர்ஸனாலிடி இல்லை என்றே தோன்றியது. அவரது தனிப்பட்ட பெர்ஸனாலிடி எப்போது வெளிப்பட்டது என்றால், தனது மகளோடு அவர் இந்தியாவைச் சுற்றும்போதுதான்//

    well said. This the only impressing thing i found in this film,

    Reply
    • Rajesh Da Scorp

      Cool boss

      Reply
  3. முன்குறிப்பு : விகடன் விமர்சனத்தை டெம்ப்ளேட் என்று நீங்கள் விமர்சித்ததை நினைவில் கொள்ளவும்
    உங்கள் விமர்சனங்களை நீங்கள் இன்னொரு முறை படித்துவிடுவது நல்லது … ஒரே மாதிரியான டெம்ப்ளேட்டில் சிக்கிக்கொண்டு விடீர்கள் என்று நினைக்கிறன்…. முதலில் முன்குறிப்பு spoliers alert அப்புறம் படம் எனக்கு பிடித்திருந்தது போன்ற வார்த்தைகள்…. இயக்குனர் டேம்ப்லாடில் சிக்கிக்கொண்டு விட்டார் என்று ஒரு வரி …. கடைசியாக எதிளிருண்டவது கோப்பி செய்திருகிறார்கள் என்று ஒரு வரி … இயக்குனர்களுக்கு அட்வைஸ் என்று சில வரிகள் படத்தை பற்றி சில வரிகள் ……

    Reply
    • Rajesh Da Scorp

      உங்க ஃபீட்பேக்கை எடுத்துக்கொள்கிறேன். எழுதிட்டே போகும்போது அது செட் ஆயிடுறதுக்குப் பல வாய்ப்புகள் இருக்கு. இனி எழுதும்போது ஒரே போன்ற வாக்கியங்கள், கருத்துகள் வராம எழுத முயற்சி பண்ணுறேன் மனோஜ் :​) .. ஸ்பாய்லர் அலர்ட் எழுதுவது நியாயம்தான்னு நினைக்கிறேன். அதை எழுதாட்டி, படம் பார்க்காதவங்க படிச்சிட்டு ஸ்பாய்லர்ஸ் பார்த்து கடுப்பாக வாய்ப்பிருக்கு. படம் எனக்குப் புடிச்சிருக்கு என்பதை வேறு மாதிரி எழுதப் பார்க்கிறேன். அப்புறம், நிஜமாவே இது கௌதமின் அதே ஃபார்முலாதான்… இதையும் வேரு விதமாக கன்வே செய்ய முயல்கிறேன் …. 🙂

      Reply
  4. Ramesh

    நண்பா நீங்க எழுதி இருக்கிறத படிச்சா வேட்டையாடு விளையாடு படத்தையே இன்னொரு தடவ பார்க்கலாம் போல் இருக்கு…கமலோட் திமிறாண நடிப்பு அதில எனக்கு பிடிக்கும்….படம் பார்க்க ஆர்வமே வரலே …ம்ம்ம் ப்.கீ.மு.ச. கௌதம் படத்துலு பிடிச்சது …அதுவும் அரை மணியில் வெளியே போக முடிவு செய்த என் நண்பனை தடுத்து படம் பார்த்தேன்……ஜோ நல்லா நாடிச்சிருப்பாங்க……இன்னொரு விடயம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் மற்றும் அந்த அஜித் ரெண்டும் எனக்கும் ரொம்ப பிடிக்கும் …பல தடவை பார்த்து விட்டேன்…

    Reply
    • Rajesh Da Scorp

      அவரோட ரெண்டு போலீஸ் படங்க்களில் இருந்து பல காட்சிகளை எடுத்திருக்காரு. ‘அன்புச்செல்வனுக்கு 33 வயசானா எப்படி இருக்கும்? அதான் இது’ன்னு அவரே சொல்லியிருந்தாலும், ரெபடிடிவ் காட்சிகள் ஒத்து வரல.

      Reply
  5. Malar

    இன்னும் கொஞ்சம் சுருக்கமாக எழுதுங்க…..பகிர்வுக்கு மிக்க நன்றி…

    மலர்

    Reply
  6. k.kabilan

    தியாகராஜா குமாரராஜாவ பத்தி சொல்லிட்டிங்க…ஆனா ஸ்ரீதர் ராகவன் பத்தி ஒன்னுமே சொல்லலயே அண்ணா??

    Reply
  7. மாயமான்

    ஆனால் ஹாரிஸ் ஜெயராஜ் தயவில் சத்யதேவ் அடித்தொண்டையில் பேசும் பல வசனங்கள் இசையால் விழுங்கப்பட்டு விடுகின்றன/////…
    .
    .
    என்னோட சிஷ்யன் என்னப்போலத்தான் இருப்பான்..இதுல என்ன அதிசயம்?என்ன தேளுத்தம்பி பழசு மறந்துபோச்சா?

    Reply
  8. srini karthi

    i really exepected this flim.but it’s not fulfill.old movie mix and same acting .big minus ajith’s hair style.it’s very bore.and script.

    Reply
  9. That’s a smart way of thinking about it.

    Reply
  10. It keeps my spirits up and reminds me to continue doing the right thing, which is usually the more difficult, when I here that there are still GOOD PEOPLE in this world. “kudos” and blessings to the wonderful people that helped to locate and find another living creature. “All Things Great and Small…”Thank you for making my day! Sincerely, Robin Lennae

    Reply

Join the conversation