திரைக்கதை எழுதுவது ‘இப்படி’ – 20

by Karundhel Rajesh June 11, 2012   series

Chapter 10 – The Scene (contd)….

ஒரு ஸீனை எழுத நமக்குத் தேவையான விஷயம் – அந்த ஸீனின் context – சூழ்நிலையைத் தயார் செய்வதே. சூழ்நிலை தயாரானவுடன், content – உள்ளடக்கமும் தானாகவே தயாராகிவிடும் என்கிறார் ஸிட் ஃபீல்ட். சூழ்நிலையை ரெடி செய்வது என்றவுடன், ஏதோ ஒரு இடத்தை ரெடி செய்து, அங்கே நடப்பதாக ஒரு ஸீனை எழுதிவிடக்கூடாது. அந்த இடத்துக்கு அந்தக் கதாபாத்திரங்கள் எப்படி வந்தன? ஏன் வந்தன? அந்த ஸீனின் முக்கியத்துவம் என்ன? அந்த ஸீனுக்கு முந்தைய ஸீனின் output என்ன? இந்த ஸீன் முடிந்ததும், அடுத்து என்ன நடக்கப்போகிறது? இந்த ஸீனில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் மனதில் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் என்னென்ன? அல்லது, ஜாலியாக, கூலாக இந்த ஸீன் நடக்கப்போகிறதா? ஆகிய அத்தனை கேள்விகளுக்கும் நம்மிடம் பதில் தயாராக இருக்கவேண்டும். அதைத்தான் context என்ற வார்த்தை உணர்த்துகிறது. முதலிலேயே பலமுறை நாம் இந்தத் தொடரில் பார்த்ததுபோல், எதுவும் தெரியாமல் திரைக்கதை எழுத அமரக்கூடாது. கதையைத் தெரிந்துவைத்துக்கொண்டால் மட்டுமே திரைக்கதை நன்றாக அமையும். திரைக்கதை எழுதும் நமக்கே அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாவிட்டால், வேறு யாருக்கு அது தெரியப்போகிறது?

ஹாலிவுட் படங்களைப் பொறுத்தவரையில், ஒரு குறிப்பிட்ட ஸீனை ஒரு நடிகர் எப்படி அணுகுவார்? அந்த ஸீனில் அவரது குறிக்கோள் என்ன? இந்த ஸீனுக்கு முன்னால் அந்தக் கதாபாத்திரம், கதையின் எப்பகுதியில் இருந்தது? இந்த ஸீன் முடிந்ததும் அதே கதாபாத்திரம் என்ன செய்யப்போகிறது? இந்தக் கதாபாத்திரம், இந்தக் குறிப்பிட்ட ஸீனில் செய்யவேண்டியது, இனி நடக்கப்போகும் கதையைப் பற்றிய தகவல்கள் கொடுப்பதா அல்லது அந்தக் கதாபாத்திரத்தைப் பற்றிய செய்திகள் மட்டுமே கொடுப்பதா? – இதுபோன்ற பல விஷயங்களை அந்த நடிகர் அல்லது நடிகை ஒவ்வொரு ஸீனின்போதும் நன்றாகப் புரிந்துகொண்டே அந்தக் காட்சியில் நடிப்பார். ஒருவேளை இயக்குநர் சொல்வதற்கும் அந்த நடிகரின் புரிதலுக்கும் எதாவது முரண்பாடுகள் இருந்தால், அது தெளிந்தால் மட்டுமே அந்த நடிகர் மேற்கொண்டு அந்த ஸீனில் நடிப்பார். இதனாலேயே எந்தப் படமாக இருந்தாலும், அப்படத்தில் நடிக்கும் நடிக நடிகையரின் நடிப்பில் எந்தக் குறையும் கண்டுபிடிக்க முடியாதவாறு இருக்கும்.

இது நடிக நடிகையரின் பொறுப்பு. ஒரு திரைக்கதையாளனாக, எழுதும் நமது பொறுப்பு என்னவாக இருக்கவேண்டும்?

ஒரு குறிப்பிட்ட ஸீனில், எந்தெந்த கதாபாத்திரங்கள் இடம்பெறவேண்டும்? அந்த ஸீனின் குறிக்கோள் என்ன? அந்தக் கதாபாத்திரங்களின் வசனங்கள், செயல்பாடுகள் ஆகியவை எந்த வகையில் கதைக்குப் பொருத்தமாக இருக்கின்றன? போன்ற கேள்விகள் மட்டுமல்லாது, இரண்டு ஸீன்களுக்கு இடையில் அந்தக் கதாபாத்திரங்களுக்கு என்ன நடக்கிறது என்பதும் நமக்குத் தெரியவேண்டும். அதாவது, ஸீன் ஒன்றில் புதன்கிழமை வந்தால், ஸீன் இரண்டில் சனிக்கிழமை காண்பிக்கப்படும்போது, இடையில் என்ன நடந்தது என்பது நமக்குத் தெரிந்தே ஆகவேண்டும்.

ஆக, மேலே பார்த்த விஷயங்கள்தான் ஒரு ஸீனின் context – சூழ்நிலையையும் முக்கியத்துவத்தையும் தயார் செய்கின்றன. இத்தகைய context முடிவானபின்னர், ஸீனின் உள்ளடக்கம் – content – தயாராகிறது.

சரி. இப்போது ஒரு ஸீனின் சூழ்நிலையாகிய contextடை உருவாக்குவது பற்றிய ஒரு சிறிய உதாரணத்தை கவனிப்போம்.

ஸீன் இதுதான்.

ஒரு ஊரில், தோண்டும்போது கிடைத்த ஒரு பெரும் தங்கப்புதையலில், பிரம்மாண்டமான வைரம் ஒன்று அகப்படுகிறது. அந்த வைரம், அரசாங்கத்தின் பொறுப்பில், ம்யூஸியம் ஒன்றில் பலத்த பாதுகாப்புக்கிடையில் வைக்கப்படுகிறது. உள்ளூர் கில்லாடிகள் மூவர் அந்த வைரத்தைக் கடத்த நினைக்கின்றனர். எப்படிக் கடத்துவது? இதோ. இந்த ஸீனில்தான் அந்தத் திட்டமிடுதல் நடக்கப்போகிறது.
இந்த இடத்தில், ஸிட் ஃபீல்ட் சொல்லும் ‘எதிர்மறை அணுகுமுறை’ (‘out of the grain’ approach) என்பதைப் பற்றி சுருக்கமாக பார்த்துவிடலாம். எந்த ஸீனையும், எதிர்மறையான அப்ரோச்சில் அணுகுவதே இம்முறை. அதாவது, ஒரு சோகமான ஸீனை, அக்கதாபாத்திரங்கள் வேறுவழியே இல்லாமல் சிரித்துக்கொண்டே நடிக்கவேண்டி வந்தால்? அவர்களின் சிரிப்புகளுக்கிடையில், உள்ளூற அவர்களின் மனதில் துயரம் பொங்கிவழிந்துகொண்டே இருக்கிறது. ஆனால் அவர்களால் வெளிப்படையாக அழ முடியாது. இப்படி. இன்னும் தெளிவாக சொல்லப்போனால், ஒரு ஸீன் எங்கே நடக்கவேண்டும் என்று ஆடியன்ஸ் எதிர்பார்க்கிறார்களோ, அதற்கு நேர் எதிரான ஒரு இடத்தில், நேர் எதிரான ஒரு சூழலில் அந்த ஸீன் நடப்பது.

இம்முறையில், ஆடியன்ஸை திடுக்கிட வைக்கமுடியும். அல்லது ஆச்சரியங்களை வாரி வழங்கலாம்.

ஒரு முக்கியமான ஸீனை எழுதும்போது, எதிர்மறையாக அந்த ஸீனை அணுகுவது, கட்டாயம் அக்கதையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்கிறார் ஸிட் ஃபீல்ட்.

நமது ஸீனுக்கு வருவோம். வைரக்கல்லைக் கடத்தும் திட்டம் உருவாகும் ஸீன்.

பொதுவாக, இந்த ஸீனை எழுதும்போது, மூன்று திருடர்களில் எதாவது ஒரு திருடனின் வீட்டில் நடப்பதாக எழுதுவதே திரைக்கதை மரபு. மூவரும் அந்த வீட்டில் கூடுவது; ப்ளான் போடுவது என்று இந்த ஸீன் நகரும். அல்லது பாரில் நடக்கும். ஆனால் இதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? மாறாக, நமது எதிர்மறை அணுகுமுறையை இந்த ஸீனில் நுழைத்தால்?

கூட்டம் பிதுங்கிவழியும் ஒரு ரெஸ்டாரெண்ட்டில் இந்த ஸீன் நடந்தால்? அல்லது எதாவது ஒரு மல்ட்டிப்ளெக்ஸின் திரையரங்கில் இந்த ஸீன் நடந்தால்? இத்தகைய ஒரு இடத்தில் இந்தத் திட்டமிடுதலை வைப்பதில் பல நன்மைகள் இருக்கின்றன. திடீரென்று ஒரு போலீஸ் அதிகாரி அந்தப்பக்கம் வருவதைக் காட்டி, ஸீனின் சஸ்பென்ஸைக் கூட்டமுடியும். அல்லது, மக்களில் யாராவது ஒருவர் இவர்களைக் கவனிப்பதுபோல அமைத்து, இந்தக் கதாபாத்திரங்களை பயப்பட வைக்கமுடியும். இதனால் கதையிலும் ஒரு திருப்பம் நிகழக்கூடிய வாய்ப்பை நுழைக்கலாம். எப்படி இந்த ஸீனை ஆரம்பிப்பது? இடைவேளையில் மூவரும் தம்மடிப்பதை ஒரு ஷாட்டில் காட்டிவிட்டு, ப்ளான் போடுவதை ஓரிரு ஸீன்களில் காட்டிவிடலாம்.

இதுதான் ஸிட் ஃபீல்ட் சொலும் ஃபார்முலா. எந்த ஸீனையும் எழுதுமுன்னர், அந்த ஸீனின் சூழ்நிலையாகிய context முதலில் தயாராக இருக்கவேண்டும். இதுதான் அந்த ஸீனின் நோக்கமும் கூட. purpose. இதன்பின்னர், அந்த ஸீனின் பொருளடக்கம் – யார்யாரெல்லாம் அதில் இடம்பெறுகிறார்கள்? எந்த இடம்? இத்யாதி. இதன்பின்னர், கடைசியாக, content. அதாவது, அந்த ஸீனில் என்ன நடக்கிறது என்பது.
மேலே உள்ள உதாரணத்தை இப்படியாகப் பிரித்தால்?

context – சூழ்நிலை – = வைரக்கடத்தலுக்கான திட்டமிடுதல். இந்தத் திட்டத்தை ஒட்டியே படம் செல்லப்போகிறது. ஆக, இது ஒரு முக்கியமான ஸீன்.

content – பொருளடக்கம் = மூன்று திருடர்கள். மல்ட்டிப்ளெக்ஸ். அதில் உள்ள மக்கள்.

இங்கே, மக்களில் ஒரு போலீஸ்காரர், அவரது குடும்பத்தோடு படத்துக்கு வந்து, இவர்களில் தலைவனின் பக்கத்திலேயே அமர்வது போல ஸீன் அமைக்கலாம். அல்லது இந்த மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது யாராவது ஒரு ஆள் வந்து வத்திப்பெட்டி கேட்பதுபோல் அமைத்து, அந்த ஆள் இவர்களையே பார்ப்பதுபோலவும் அமைக்கலாம். அல்லது, இந்த மூவரில் ஒருவன், படம் ஆரம்பிக்கும்போது, திட்டத்தை கவனிக்காமல் படத்தைப் பார்ப்பதுபோல் அமைத்து, அந்த ஸீனின் நகைச்சுவையைக் கூட்டலாம். அல்லது இந்த மூவரில் ஒருவனது காதலி அங்கே எதிர்பாராமல் வருவதுபோல காட்டலாம். அல்லது அந்த தியேட்டரே எவனோ வைத்த குண்டில் வெடித்துச்சிதறுவது போல் காட்சி அமைத்து, அனைவரையும் பைத்தியமாக்கலாம்.

ஆக, எந்த ஸீனிலும், எக்கச்சக்கமான சாத்தியக்கூறுகள் உள்ளன. இவைகளை, அந்த சூழ்நிலையோடும், அந்த ஸீனின் பொருளடக்கத்தோடும் சாமர்த்தியமாக உபயோகித்தால் அந்த ஸீன் அபார வெற்றியடையும்.

ரியல் டைம் உதாரணமாக, முதல்வனில் அர்ஜுன், மக்களின் குறைகேட்கும் காட்சி, ஸிட் ஃபீல்ட் சொல்லும் இந்த ‘எதிர்மறை அணுகுமுறை’   (‘out of the grain’ approach) வழிப்படியேதான் அமைக்கப்பட்டிருக்கிறது. முதல்வரின் ஆஃபீஸில் அமர்ந்து குறை கேட்காமல், நடுத்தெருவில் வந்து அமர்ந்துகொண்டு முதல்வர் குறை கேட்டால், அந்த ஸீனின் முக்கியத்துவம் எகிறுகிறதல்லவா? (திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகத்தில் சுஜாதா இதே உதாரணத்தைக் கொடுப்பதைக் காணலாம். ஆனால் பாவம் ஸிட் ஃபீல்டின் பெயர்தான் அங்கே இருக்காது).

இப்படி, ஒரு ஸீனின் contentடாக இருக்கக்கூடிய பிற கதாபாத்திரங்கள், context என்று சொல்லக்கூடிய நோக்கத்தில் குறுக்கிடுவதால், திரைக்கதை எழுதுபவராக, நம்மால் நமது கதையை கண்ட்ரோலில் வைத்துக்கொள்ள முடியும் என்று சொல்கிறார் ஸிட் ஃபீல்ட்.

இப்போது, ஒரு அட்டகாசமான திரைக்கதையின் சில பக்கங்கள் தருகிறார் ஸிட் ஃபீல்ட். இது வெறும் ஸீன் அல்ல. திரைக்கதையின் இரண்டாம் ப்ளாட் பாயிண்டை விளக்கும் ஸீன். அதாவது, திரைக்கதை க்ளைமாக்ஸை நோக்கித் திரும்பும் பிரதானமான ஸீன். படம் – Collateral.

இதோ இங்கே இருக்கும் திரைக்கதையின் சில பக்கங்களை தவறாமல் படித்துப் பாருங்கள். இதன் முடிவில் இந்தப் பக்கங்களைப் பற்றிய அனாலிஸிஸ் செய்கிறார் ஸிட் ஃபீல்ட். ஆகவே இதைப் படித்தால்தான் அவர் சொல்லும் முக்கியமான பாயிண்ட்கள் புரியும். மிக எளிதாகத்தான் இது எழுதவும் பட்டிருக்கிறது.

85    EXT. AERIAL SHOT:    LOS ANGELES CITYSCAPE - NIGHT              85

      STRAIGHT DOWN from above. Acid-mint streetlight in pools on
      Olympic Blvd. The yellow cab is the only vehicle heading east.
      Everything else streams west. Emergency vehicles. Flashers.

86    INT. MAX'S CAB - MAX                                             86

      in shock. Back in purgatory...eternally in his cab's front
      seat. As the lone yellow cab drives east...

      SINGLE:   VINCENT

                            VINCENT
                  What a clusterfuck. Only thing didn't
                  show up was the Polish cavalry.

      Max's life, controlled by Vincent, is a nightmare, perpetual and
      eternal...

                            VINCENT (CONT'D)
                  You don't wanna talk, tell me to fuck
                  off...

                            MAX
                      (inaudible)
                  ...fuck off.

      Vincent's attention is out the window at the streams of
      emergency vehicles...at the earpiece, filled with LAPD and news
      helicopters.

86A   EXT. STREET - FRONTAL:   THE ANONYMOUS YELLOW CAB               86A

      heads east.   All other traffic races to the debacle left
      behind...

                            VINCENT (O.S.)
                  ...blood, bodily fluid and death get
                  to you? Try deep breathing. Or
                  remember, we all die anyway...

                            MAX (O.S.)
                  You had to kill Fanning?!

                                                            (CONTINUED)

86A   CONTINUED:                                                     86A

                             VINCENT (O.S.)
                       (blasé)
                   Who's Fanning?

86B   INT. CAB                                                       86B

                             MAX
                   That cop!
                       (beat)
                   Why'd you have to do that? You
                   couldn't wound him? The guy had a
                   family, maybe parents, kids who gotta
                   grow up without a dad, he was a good
                   guy, and he believed me...

                             VINCENT
                   I shoulda saved him 'cause he believed
                   you...?

                             MAX
                   No, not just that.

                             VINCENT
                   Yeah, that...

                             MAX
                   Yeah, so, what's wrong with that?

                             VINCENT
                   It's what I do for a living...

                             MAX
                   Some living.

                             VINCENT
                   Head downtown...

                             MAX
                   What's downtown?

                             VINCENT
                   How are you at math? I was hired for
                   five hits. I did four.

                             MAX
                       (grim)
                   One more.

                             VINCENT
                   There you go...!

                             MAX
                   Whyn't you kill me and find another
                   cab.

                                                            (CONTINUED)

86B   CONTINUED:                                                       86B

                             VINCENT
                   'Cause you're good.
                       (shrugs)
                   We're in this together. You
                   know...fates intertwined. Cosmic
                   coincidence. All that crap...

                             MAX
                   You're full of shit.

                             VINCENT
                   I'm full of shit?
                       (beat)
                   You're a monument of it. You even
                   bullshitted yourself, all I am is
                   taking out the garbage. Bad guys
                   killing bad guys...

                             MAX
                   'Cause that's what you said...

                             VINCENT
                   And you believe me...?

                             MAX
                   What'd they do?

                             VINCENT
                   How do I know?
                       (beat)
                   But, they all got that "witness for
                   the prosecution" look to me. It's
                   probably some major federal indictment
                   against somebody who majorly does not
                   want to get indicted... I dunno.

                             MAX
                   That's the reason?

                             VINCENT
                   That's the "why." There is no reason.
                       (beat)
                   No good reason; no bad reason. To
                   live or to die.

                             MAX
                   Then what are you?

                             VINCENT
                       (looks up)
                   ...indifferent.

      Vincent hesitates, then back out the window...

                                                             (CONTINUED)

86B   CONTINUED: (2)                                                86B

                           VINCENT (CONT'D)
                 Get with it. Get over it.
                 ...millions of galaxies of hundreds of
                 millions of stars and a speck on one
                 in a blink...that's us. Lost in
                 space. The universe don't care (about
                 you).
                     (beat)
                 The cop, you, me? Who notices?

                           MAX
                 What's with you...?

                             VINCENT
                 As in...?

                           MAX
                 Man, if someone had a gun to your head
                 and said: "You gotta tell me what's
                 goin' on with that person across the
                 street, there, what they think, who
                 they are, how they feel, or I will
                 kill you"...they'd have to kill
                 you...wouldn't they...?
                     (beat)
                 'Cause you don't have a
                 clue...about...anyone.
                     (struggling for the words)
                 ...I don't think you, you have a clue,
                 period. Did anyone "do" for you in
                 your life...? Ever? When you draw
                 breath in the morning? Open your eyes
                 in the a.m.? You
                 anticipate...anything? Want anything?
                 Expect anything? I don't think so...
                     (beat)
                 'Cause you are low, my brother, way
                 low... and some standard parts that are
                 supposed to be there?...with you,
                 aren't. So what happened to you, man?
                 What happened to you?

                           VINCENT
                 ...all the cabbies in LA, I get Max,
                 Sigmund Freud meets Dr. Ruth...

                           MAX
                 Answer the question.

                           VINCENT
                 Look in the mirror.
                     (on the attack)
                           (MORE)

                                                           (CONTINUED)

86B   CONTINUED: (3)                                               86B

                           VINCENT (CONT'D)
                 ...with your paper towels...a bottle
                 of 409...a limo company someday. How
                 much you got saved?

                           MAX
                 None of your business.

                           VINCENT
                 Your business "plan?" Someday?
                 "Someday my dream'll come..."?
                     (beat)
                 And one night you'll wake up and
                 discover it all flipped on you.
                 Suddenly you're old. And it didn't
                 happen. And it never will. 'Cause
                 you were never going to do it, anyway.
                 The dream on the horizon became
                 yesterday and got lost. Then you'll
                 bullshit yourself, it could never have
                 been, anyway. And you'll recede it
                 into memory...and zone out in a
                 Barcalounger with daytime TV on for
                 the rest of your life...
                     (beat)
                 Don't talk to me about killing.
                 You're do-in' yourself. In this
                 yellow-and-orange prison. Bit by bit.
                 Every day.

      EXTREMELY CLOSE:   Max is soaking up every word.

                           VINCENT (CONT'D)
                 All it ever took was a down payment on
                 a Lincoln Town Car. What the hell are
                 you still doing in a cab?

      The needle on the speedometer is creeping past forty...

                           MAX
                 'Cause I never straightened-up and
                 looked at it, you know...?

                           VINCENT
                 Slow down.

                           MAX
                     (ignoring him)
                 ...myself, I should have. My brothers
                 did...
                     (beat)
                 Tried to gamble my way out from under.
                 (That was) Another born-to-lose deal!
                 Then, "it's gotta be perfect to go!"
                 You know? Risk all torqued-down.

      Needle pushing sixty...

                                                          (CONTINUED)

86B   CONTINUED: (4)                                                86B

                           MAX (CONT'D)
                 But you know what? It doesn't matter.
                 What's it matter, anyway? 'Cause we
                 are...insignificant out here in this
                 big-ass nowhere. Twilight Zone shit.
                 Says the badass sociopath in my
                 backseat. So that's one thing I got
                 to thank you for, bro... Until now, I
                 never saw it that way...

      The cab goes blasting through an intersection on a red light.       A
      LOS ANGELES TIMES DELIVERY TRUCK SLAM ON ITS BRAKES as Max
      swerves, barely avoiding a collision.

                           VINCENT
                 That was a red light!

      Max glances in the rearview.

                           MAX
                 ...not until now. So what's it all
                 matter? It don't. Fuck it. Fix it.
                 Nothing to lose. Right?

      Vincent's H+K's aimed at Max's head.   Max almost laughs.

                           VINCENT
                 Slow the hell down!

                           MAX
                 Why? What are you gonna do? Pull the
                 trigger? Kill us? Go ahead, man!
                 Shoot...my ass.

                           VINCENT
                 Slow down!

                            MAX
                 Vincent?

      Their eyes meet in the rearview mirror. Vincent is arrested by
      a look in Max that he's not seen before. It's the even,
      confrontational look of a man with nothing to lose.

                           MAX (CONT'D)
                 Go fuck yourself.

      Max slams on the brakes and cranks the steering wheel hard
      right...

87   EXT. STREET - RIGHT WHEEL                                     87

     hits a low divider...rear end comes unstuck, rotating over the
     front right and flipping the cab into a violent roll onto its
     roof, spinning down the street, SMASHING off other cars, pieces
     falling off, spewing glass...

                                                           (CONTINUED)

87    CONTINUED:                                                     87

      ...and then settling upside-down, revolving slowly to a creaking
      stop, antifreeze spilling across the pavement.

      And then everything goes silent, motionless, still.

இந்த ஸீன் எங்கே தொடங்குகிறது? திரைப்படத்தில், ஒரு நைட்க்ளப்பில் நடக்கும் துப்பாக்கிச்சூட்டின் பின்னர், டாக்ஸி ஓட்டுநன் மாக்ஸும், கொலைகாரன் வின்ஸெண்ட்டும் டாக்ஸியில் தப்பிக்கும்போது துவங்குகிறது இந்த ஸீன். வின்ஸெண்ட்டின் மீது மாக்ஸ் குற்றம் சுமத்துகிறான். அந்தக் க்ளப்பில் நடந்த துப்பாக்கிச்சூடே தேவையில்லாத ஒரு விஷயம் என்று. பதிலுக்கு, வின்ஸெண்ட், மாக்ஸின் சாதாரண வாழ்க்கையைக் கிண்டல் செய்கிறான். மாக்ஸின் லட்சியமான டாக்ஸி கம்பெனி ஆரம்பிப்பது நடக்கவே போவதில்லை என்று எள்ளல் செய்கிறான். போகப்போக, மாக்ஸுக்கு அது உண்மை என்று தெரிகிறது. இத்தனை நாள் மாக்ஸ் கட்டிக்காத்துவந்த அவனது கனவு – லட்சியம் – வின்ஸெண்ட்டால் உடைக்கப்படுகிறது. இதனால் மாக்ஸ் தற்போது அந்த நொடியில் நடக்கும் சம்பவங்களை நினைத்துப் பார்க்கிறான். அதாவது, அவனது பின் ஸீட்டில் உட்கார்ந்திருப்பது ஒரு கொலைகாரன். அவனை வேறுவழியேயின்றி அவன் சொல்லும் இடங்களுக்கெல்லாம் கொண்டுசென்று விடுவதே இதுவரை மாக்ஸின் வேலை. ஏனெனில், வருங்காலத்தில் அவனது கம்பெனியை அமைக்க அவன் உயிரோடு இருந்தாகவேண்டும் என்பதால். ஆனால் அந்தக் கனவே இப்போது இல்லை என்றாகிவிட்டபின், இனிமேல் எதற்காக அந்தக் கொலைகாரனுக்கு உதவ வேண்டும்? ஆகவே, காரை வேகமாக செலுத்தி விபத்துக்குள்ளாக்குகிறான் மாக்ஸ். கூடவே, அவனது மனதுக்குப் பிடித்த பெண்ணை வின்ஸெண்ட் கொல்லாமல் தடுக்கும் பொறுப்பும் இப்போது மாக்ஸிடம் தான் இருக்கிறது.

இப்படியொரு சரவெடி சிச்சுவேஷனில்தான் இந்த விபத்து மாக்ஸால் நிகழ்த்தப்படுகிறது. இந்த ஸீனின் அடுத்த ஸீன், க்ளைமாக்ஸின் துவக்கம்.

இந்த ஸீனில், மாக்ஸ் மற்றும் வின்ஸெண்ட்டின் கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள் அட்டகாசமாக வெளிப்படுகின்றன. வின்ஸெண்ட்டைப் பொறுத்தவரை, இந்த உலகில் நமது வேலை, விதிப்படி நடப்பதே. ஆனால் மாக்ஸுக்கு, வருங்காலத்தில் நம்பிக்கை ஜாஸ்தி. அப்படி கனவுகளோடு பேசத்துவங்கும் மாக்ஸுக்கு நிகழ்காலத்தின் நிஜத்தைக் காண்பிக்கிறான் வின்ஸெண்ட். இதனால்தான் மாக்ஸுக்கு இயலாமையின் உச்சத்தில் கோபம் வருகிறது.

இந்த ஸீனில் நமக்குப் புரியும் இன்னொரு விஷயம், இந்த ஸீன் துவங்கும்வரை, வின்ஸெண்ட் என்ற கொலைகாரனுக்குப் பயந்தே மாக்ஸ் பல செயல்களைப் புரிந்துவந்திருக்கிறான். அதாவது, ரியாக்ட் செய்வது. இந்த ஸீனில் இருந்துதான் அந்தக் கொலைகாரனுக்குப் பயந்து நடக்காமல், அவனையே எதிர்க்கத் துணிகிறான். ஆகவே, அந்த வகையில் கதையில் இன்னொரு திருப்பத்தையும் இந்த ஸீன் ஏற்படுத்துகிறது.

இந்த ஸீனில், வெளிப்புறத்தில் படுவேகமாக விரையும் டாக்ஸி. டாக்ஸியின் உள்ளேயோ, அதனைவிட வேகமாகவும் சூடாகவும் நடந்துகொண்டிருக்கும் வாக்குவாதம். ஆக, இந்த இரண்டு அம்சங்களால் இந்த ஸீனில் பொறிபறப்பதை உணரலாம். கூடவே, எதிர்மறை அணுகுமுறையும் இதில் உள்ளது. எங்காவது பாரிலோ அல்லது வேறு இடத்திலோ நடக்கவேண்டிய ஸீன் இது. மாறாக, விரையும் காரினுள் நடக்கிறது.

சீரியஸ் படங்களில் மட்டும்தான் இதுபோன்ற விஷயங்களை ஒரு ஸீனில் நுழைக்கமுடியுமா? இல்லை என்கிறார் ஸிட். காமெடிப்படங்களில் கூட இப்படிப்பட்ட ஸீன்களை எழுதமுடியும் என்பது அவரது கூற்று.


சரி. கடந்த மூன்று கட்டுரைகளில், ஸிட் ஃபீல்டின் அத்தியாயம் 10 – The Scene என்பதைப் பார்த்தோம். அதில் உள்ள முக்கியமான அம்சங்கள் என்னென்ன?

ஒரு ஸீனை எழுதும்போது, அதன் குறிக்கோளையும், இடம் மற்றும் காலத்தையும் முழுதாகப் புரிந்துகொள்ளுங்கள். கூடவே, context எனப்படும் சூழ்நிலை. இதன்பிறகு, அந்த ஸீனின் பொருளடக்கம் – content. கூடவே, அந்த ஸீனின் அம்சங்களால் எதாவது பரபரப்பைக் கிளப்ப முடியுமா என்றும் ஆராயவேண்டும்.

எந்த ஒரு ஸீனுமே, தெளிவான ஆரம்பம், நடுப்பகுதி மற்றும் ஒரு முடிவு ஆகியவை கொண்டதாகவே இருக்கும். எனவே, எந்த ஸீனையும் எழுதத்துவங்கும் முன்னர், இந்த மூன்று அம்சங்களைத் தெரிந்துகொண்டால், இதில் எதாவது ஒரு அம்சத்தை நன்றாக விளக்கி எழுதி, அந்த ஸீனை மறக்கமுடியாத அனுபவமாக மாற்றமுடியும். மேலே நாம் பார்த்த Collateral ஸீனின் ஆரம்பம் – மாக்ஸும் வின்ஸெண்ட்டும் நைட்க்ளப்பில் இருந்து தப்பிப்பது. ஸீனின் நடுப்பகுதி – இருவரும் கோபத்துடன் வாதம் புரிவது. ஸீனின் முடிவு – மாக்ஸ் உருவாக்கும் விபத்து.

ஸிட் ஃபீல்ட் வலியுறுத்தும் இன்னொரு விஷயம் – எந்த ஸீனிலும் இந்த மூன்றையும் விரிவாகக் காட்டவேண்டிய அவசியம் இல்லை என்பது. நம்மிஷ்டத்துக்கு இவைகளை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அதாவது, ஆரம்பத்தின் கடைசிப்பகுதி, நடுப்பகுதியின் சில அம்சங்கள் மற்றும் முடிவின் சில பகுதிகள் – இப்படி. ஸிட் ஃபீல்ட் வலியுறுத்தும் இன்னொரு விஷயம் – எந்த ஸீனுக்குள்ளும் அதன் இறுதிப்பகுதியிலேயே நுழையுங்கள் என்பதே. வழவழாவென்று ஒரு ஸீனில் நடக்கும் அத்தனையும் காட்டுவதற்குப் பதில், நாம் சொல்லிக்கொண்டிருக்கும் கதை அந்த ஸீனில் எப்படி நகர்கிறது என்ற ஒரு பகுதியை மட்டும் காட்டுங்கள் என்று சொல்கிறார் ஸிட்.

இப்படி, ஒரு ஸீனின் சூழ்நிலையை (context) உருவாக்கிவிட்டு, அதன் நோக்கத்தைத் (purpose) தெளிவுபடுத்திவிட்டு, இடம் மற்றும் காலம் ஆகியவற்றை உருவாக்கிவிட்டு, அந்த ஸீனின் பொருளடக்கத்தை எழுதிவிட்டு (ஸீனில் யாரெல்லாம் வருகிறார்கள் – பிரதான கதாபாத்திரங்களைத் தவிர), இவர்களுக்குள் நிகழும் சம்பவத்தை சுருக்கமாகக் காட்டினால், ஸீன் தயார்.
இப்போது, திரைக்கதையின் தனிப்பட்ட அம்சமான ஸீன் என்பதை எழுத நமக்குக் கற்றுக்கொடுத்துவிட்டார் ஸிட்ஃபீல்ட். இனி – இந்த ஸீன்களை ஒன்றோடு ஒன்று இணைக்கும் கலை – ஸீக்வென்ஸ் என்பதைப்பற்றிப் பார்க்கப்போகிறோம்.

அதற்குமுன், இந்தக் கட்டுரையில் அளிக்கப்பட்டுள்ள ஸீனை ஒருமுறையாவது படித்துவிடுங்கள் நண்பர்களே. See you in the next chapter.. Soon!

Note – Collateral Script courtesy

  Comments

10 Comments

  1. Hi,
    For 6 months I am reading your blog. Its very nice. Screenplay Writting is really fantastic. I had read all the 20 chapters. It simply increased my creativity. Thanks. Also I am eagerly waiting for your review on Case No. 18/9.
    I am really confused by (Positive)Weekly’s review and (Neg)Athisha and CharuOnLine’s comments.

    Reply
  2. Dear Singaravelan,

    Do not worry about the reviews. Go see the film. If you like it, enjoy it. I have so far not seen it, as it’s not running now in Bangalore. நான் அதை எப்படி பார்ப்பது? அதான் பிரச்னை. கவலையே படாமல் நீங்கள் போய் பார்த்துவிட்டு உங்கள் கருத்தை எனக்கு எழுதுங்கள் நண்பரே.

    Reply
  3. Dear Rajesh..the way you explain the nuances of script wirting is truly awsome…thanks and keep writing..hope you remember me (Pichavaram!!!:-))
    Mukesh

    Reply
  4. Oh yes Mukesh. I very well remember you 🙂 .. Thanks for the comment bro.. Hope u r njoyin..

    Reply
  5. thalaiva recently i visited ur site… vantastic tis screenplay series ….nw nly i started i read until part 4 …..amazing….definitely i read fully …i need rest to watch movies to verify things matching as u said…..as i respect nly two persons in present tamil cinema tat is kamal and manirathnam…bt u damaged both…..

    Reply
  6. அடுத்த பகுதி எப்போ வரும்?

    Reply
  7. இதோ அடுத்த கட்டுரை இதுதான்

    Reply
  8. எங்கே நண்பா? 🙂

    Reply
  9. அப்படியே இந்தப்பக்கமும் கொஞ்சம் எட்டி பாருங்க!

    Reply
  10. வந்துட்டேன் வந்துட்டேன்…. அடுத்த ரெண்டு போஸ்ட்ல இதுவும் ஒண்ணு… கட்டாயம்

    Reply

Join the conversation