2011ன் சிறந்த பாடல்
2011 வருடத்தின் சிறந்த பாடல் எது?
இந்த வலைப்பூ (ஒக்க சந்தேகமண்டி… அதென்ன வலைப்பூ? ஏன் வலைப்பழம், வலைக்காய்ன்னு பேர் வெச்சா என்ன கொறைஞ்சா போயிருவ?) படித்துவரும் நாற்பத்திரெண்டு லட்சத்து முப்பத்து ரெண்டு பேர், கடந்த 2011 ஜனவரி ஒன்றிலிருந்து நேற்று வரை அனுப்பிய எண்பத்தி நாலு லட்சத்து அறுபத்தி ரெண்டு மின்னஞ்சல்களை ஒன்று விடாமல் எண்ணி, படித்து, ஸ்பேம் க்ளிக்கிய அனுபவத்தில், மேலே சொன்ன கேள்வியைக் கடந்த நாலு நாள்களாக ஒரு கணம் விடாமல் யோசித்து வருகின்றேன். காரணம், இத்தனை லட்சம் வாசகர்கள் (எப்போது வாசகன் என்று ஒருவன் எழுத ஆரம்பிக்கிறானோ, அப்போதே அவன் நாசமாய்ப் போய் விடுகிறான் என்றார் பழைய சந்நியாஸி அலைஸ் ஓல்ட் மாங்க்) என்னை வினவிய அன்பின் பிரதிபலிப்பே. இதன் காரணமாக, கடந்த பதினோரு மாதங்களாக, இந்த ஆண்டு டிசம்பர் வரை வெளிவந்த நூற்றி சொச்சம் தமிழ்ப்படங்கள் (இதில் ஆங்கில சினிமாக்களை அட்டைக்காப்பி அடித்து வெளிவந்த ‘தெய்வத்திருமகள்’ இத்யாதி படங்களும் சேர்க்கப்படுகின்றன) அத்தனையும் ஒன்றுவிடாமல் பார்த்து, அனலைஸ் செய்து, பிரித்து மேய்ந்து, கிழித்துத் தோரணம் கட்டி, கோலம் போட்டு, மாவிளக்கு வைத்து, இருப்பதிலேயே பெஸ்ட் என்று முடிவு கட்டிய பாடல்களின் வரிசை இதோ. இந்த லிஸ்டை ஆஸ்கருக்கும் அனுப்பி வைத்திருக்கிறேன். இதன் காரணமாக, சிறந்த ஆஸ்கர் பரிசான நோபல் ப்ரைஸ் என்னைத் தேடி வரும் என்று எதிர்பார்க்கின்றேன். இதற்குக் காரணமான, சரக்கும் பிரியாணியும் வாங்கிக்கொடுத்து என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் வாசகர்கள் அத்தனை பேரையும் நன்றியுடன் நினைத்துப்பார்க்கின்றேன்.
பின்குறிப்பு – 2011 ஜனவரியிலேயே நான் பார்த்த படங்களில், நரிதாஸ், பானை பிடிக்காதவள் துர்ப்பாக்கியசாலி, ஆயிரம் கதை வாங்கிய அபூர்வ குந்தாணி ஆகிய 2013ல் வந்த படங்களும் அடக்கம். இதற்குக் காரணம், திருட்டு டீவீடீக்களை எனக்கு அள்ளி வழங்கிய சுண்டல் கடை சுந்தரமே.
பாடல் நிர் ஒன்று – அடிடா அவள: மயக்கம் என்ன
பாடல் நிர் இரண்டு – ஓட ஓட ஓட : மயக்கம் என்ன
பாடல் நிர் மூன்று – கன்னித்தீவு பொண்ணா : யுத்தம் செய்
பாடல் நிர் நான்கு – ஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா : சிறுத்தை
பாடல் நிர் ஐந்து- பெத்தவங்க பார்த்துவெச்ச பொண்ணை எனக்கு புடிக்கல – வேங்கை
பாடல் நிர் ஆறு – இச்சு இச்சு இச்சு இச்சு கொடு – வெடி
பாடல் நிர் ஏழு – கலாஸலா கலஸலா – ஒஸ்தி
இது தவிர, க்ரிடிக்ஸ் சாய்ஸாக, கீழ் வரும் பாடல்கள்.
பாடல் நிர் ஒன்று – மழை வரும் அறிகுறி (female) : வெப்பம் (the best song of 2011 – according to me)
பாடல் நிர் இரண்டு – நோ மணி நோ மணிடா : வானம்
பாடல் நிர் மூன்று – பிறை தேடும் : மயக்கம் என்ன
அம்புட்டுதேன். இந்த 2011ம் வருடத்தில், என்னைக் கவர்ந்த பாடல்களைக் கண்டு களியுங்கள். 2012 பட்டையைக் கிளப்ப, எனது மனமார்ந்த வாழ்த்துகள். Juz njoooooooooooooooooooooooooy n hv fun friends !!!!!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 🙂
happy new year boss! have a wonderful year thats how we can get some exciting,breathtaking reviews from u! have a blasting new year!!
This comment has been removed by the author.
பாடல்களின் தெரிவு அருமை. அனேகமாக எல்லா பாடல்களும் என்னுடைய டாப் லிஸ்டில் உள்ளவை தான்.
//எப்போது வாசகன் என்று ஒருவன் எழுத ஆரம்பிக்கிறானோ, அப்போதே அவன் நாசமாய்ப் போய் விடுகிறான் என்றார் பழைய சந்நியாஸி அலைஸ் ஓல்ட் மாங்க்//
என்ன பாஸ் இப்படி சொல்லீட்டீங்க??? ஐ ஆம் பாவம்.
உங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
nijamathan solringala….2011n sirantha kuthu song list mathiri iruku…
பின்குறிப்பு – 2011 ஜனவரியிலேயே நான் பார்த்த படங்களில், நரிதாஸ், பானை பிடிக்காதவள் துர்ப்பாக்கியசாலி, ஆயிரம் கதை வாங்கிய அபூர்வ குந்தாணி ஆகிய 2013ல் வந்த படங்களும் அடக்கம். இதற்குக் காரணம், திருட்டு டீவீடீக்களை எனக்கு அள்ளி வழங்கிய சுண்டல் கடை சுந்தரமே. //
இது யாரையும் குறிப்பிடவில்லை ….கற்பனை தானே !!!!!
Wish you a happy new year to all!
@ நெல்லை காந்த் – உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் 🙂
@ ganelishan – கண்டிப்பா இந்த வாட்டி போன வருஷத்தை விட நெறைய ரிவ்யூஸ் போடப்போறேன். அல்லாரும் தயாரா இருங்க 🙂
@ ஹாலிவுட் ரசிகன் – அட… நம்ம சார்புல நாமளும் ஏதாவது பன்ச் டயலாக்கு சொல்லவேணாமா பாஸு? அதான் அப்புடி 🙂 .. புத்தாண்டு வாழ்த்துகள்
@ Elamparuthi – இது குத்து சாங்கு லிஸ்டே தான் 🙂 . . எனக்குப் புடிச்ச குத்துகள் 🙂
@ டெனிம் – //இது யாரையும் குறிப்பிடவில்லை ….கற்பனை தானே !!!!!// – பின்னே? இது அக்மார்க் 200 % கற்பனைதான் . அதில் என்ன சந்தேகம்? 😉
@ எஸ். கே – உங்களுக்கும் டாப் டக்கர் புத்தாண்டு வாழ்த்துகள் 🙂
நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்.நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.
நண்பா
நலமா
நேற்று உங்கள்மொபைல் அழைத்தேன் கிடைக்கவில்லை,இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா,குழந்தாய் நலமா?என் மொபைலுக்கு நேரம் கிடைக்கயில் அழைக்கவும்.
ராஜேஷ்……..
ஹா ஹா ஹா ….. தல…. செமய்யா அடிச்சு ஆடி இருக்கீங்க… ஹேப்பி 2012…. தொடர்ந்து கலக்குங்க…
thala, Song 4m movie VEPPAM – MALAI VARUM ARIGURI is copied 4m a english song, i forgot the song, i will ping you once i check my collections – you are concentrating only on movies, not on songs is it, gave numero uno to a copied song this is bad thala
its me again – please find the song details – Red hot chili peppers – californication