யுத்தம் செய் (2011) – விமர்சனம்
யுத்தம் செய் படத்தை, நீண்ட நாட்கள் கழித்து நேற்றுதான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. படத்தைப் பற்றிப் பார்க்குமுன், இதைப்போன்ற கரு கொண்ட பல வேற்றுமொழிப்படங்கள் இதற்குமுன் பார்த்திருக்கிறேன் என்பதைச் சொல்ல விரும்புகிறேன். ஆனாலும், யுத்தம் செய் அலுக்கவில்லை. சுவாரஸ்யமாகவே சென்றது.
Voyeurism என்பதைப்பற்றிப் படித்திருப்பீர்கள். பிற மனிதர்கள், தனித்தோ அல்லது அவர்களுடைய இணையுடனோ இருக்கையில், அவர்களின் தனிப்பட்ட செய்கைகளை மறைந்திருந்து பார்த்து சந்தோஷம் அடையும் நிலையே வாயுவரிஸம் என்று விளக்கப்படுகிறது. செக்ஸைப் பற்றி இன்னமும் பல பூடகமான மாயைகளைத் தனது மக்களின் மனதில் விதைத்து வைத்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளில், வாயுரிஸம் சற்று அதிகமாகவே நடந்தும் வருகிறது. நாமுமே, கள்ளத்தொடர்பில் ஈடுபட்டுக் கம்பி எண்ணும் பல மனிதர்களைப் பற்றிச் செய்திகளில் தொடர்ந்து படித்து வருகிறோம். சாமியார்களில் இருந்து, பாதிரியார்கள், கோவில் குருக்கள்கள், கட்சித் தலைவர்கள், துணைவேந்தர்கள் போன்ற பெரும் பொறுப்பில் இருக்கக்கூடிய மனிதர்களும், இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். அதிலும், சென்ற வருடம், காஞ்சி தேவநாதன், மேட்டர் செய்துவிட்டு, அதை செல்ஃபோனில் படமும் எடுத்துவைத்துக் கொண்டதை மறக்க இயலுமா? இதுவும் ஒருவகை வாயுரிஸமே.
இந்த வாயுரிஸத்தைக் கருவாகக் கொண்ட சில முக்கியமான படங்கள் உண்டு. ஒரு சிறந்த உதாரணமாக, 8mm (க்ளிக்கிப் படிக்கவும்) படத்தைச் சொல்லலாம். Snuff படங்கள் எடுக்கும் ஒரு கும்பலையும், அந்தக் கும்பலை வளைத்துப் பிடிக்கும் ஒரு போலீஸ் அதிகாரியையும் பற்றிய படமான இதில், அந்த அதிகாரிக்கு ஒரு ஸ்னஃப் படத்தைக் கொடுத்துத் துப்பறியச் சொல்வதே, ஒரு இறந்துபோன செல்வந்தரின் வயதான மனைவி. அவரது அலமாரியில் இந்த ஸ்னஃப் படம் அகப்படுகிறது (ஸ்னஃப் படங்களைப் பற்றி ஒரு குறிப்பு – ஸ்னஃப் படங்களில், சம்மந்தப்பட்ட பெண்களைப் படத்தின் இறுதியில் சித்ரவதை செய்து கொல்லும் காட்சிகளும் இருக்கும்). ஜோயல் ஷூமேக்கரின் இயக்கத்தில், நிகலஸ் கேஜ் நடித்த இப்படம், பார்ப்பவர்களின் மனதை விட்டு அகலாது. இதன் தாக்கம் அப்படிப்பட்டது.
அதேபோல், Sex. lies and videotape (1989) படத்தையும் சொல்லமுடியும். ஸ்டீவன் ஸாடர்பர்க்கின் அறிமுகப்படமான இதில், பெண்களுடன் பேசி, அவர்களின் செக்ஷுவல் அனுபவங்களையும் ஆசைகளையும் வீடியோவில் பதிவு செய்யும் ஒரு நபரையும், தனது கணவன் மீது உள்ள வெறுப்பினால் (கணவன், இந்தப் பெண்ணின் தங்கையுடன் உறவு கொண்டிருக்கிறான்), அவனுடன் படுத்து, தானும் தன் மனதில் உள்ள எண்ணங்களைப் பதிவு செய்யும் ஒரு பெண்ணையும் பற்றிய படம் இது (எனக்கு மிகப்பிடித்த படங்களில் ஒன்று).
இன்னமும் பல படங்கள் இருந்தாலும் (Peeping Tom இன்னொரு உதாரணம்), எனக்குப் பிடித்த இரண்டு ஆங்கிலப் படங்கள் இவை.
இப்போது, யுத்தம் செய் சொல்லவரும் விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
சென்னையின் முக்கிய இடங்களில், மனிதக் கைகள், வெட்டப்பட்டு வைக்கப்படுகின்றன. இந்தக் கேஸ், வேலையை விட்டுவிட்டு, காணாமல் போன தனது தங்கையைத் தேட முனையும் ஜேகே (ஜே.கிருஷ்ணமூர்த்தி)விடம் ஒப்படைக்கப்படுகிறது. ஒவ்வொரு தடயமாகக் கண்டுபிடிக்கும் ஜேகேவின் முன், ஒரு பெரும் திருப்பமாக, இந்தக் கேஸின் முக்கிய விபரங்கள் விரிகின்றன. முடிவில் என்ன ஆகிறது என்பதே கதை.
படத்தின் பலங்களைப் பற்றிப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் இன்னமும் நடந்துகொண்டிருக்கும் ஒரு விஷயத்தைத் திரையில் காட்டியிருப்பது ஒரு பலம். போலீஸ் துறையில், சிபிசிஐடியில் இருக்கும் ஜேகே என்ற சராசரி மனிதனின் மூலமாக, திரையில் நடக்கும் விஷயங்களை நாம் பார்ப்பது, மிகவும் இயற்கையான முறையில் படமாக்கப்பட்டிருப்பது இன்னொரு பலம். ஜேகே, ஆறுச்சாமி போலவோ, அன்புச்செல்வனைப் போலவோ, அல்லது பல விஜயகாந்த்தின் கதாபாத்திரங்களைப் போலவோ, வலிந்து திணிக்கப்படும் ஒரு சூப்பர் ஹீரோ அல்ல. அவன், உங்களைப் போலவும், என்னைப்போலவும், நமது பக்கத்துவீட்டு ராமசாமியைப் போலவும் ஒரு சராசரி மனிதன். அவனுக்கும் பல மனக்குறைகள் உண்டு. அந்த மனக்குறைகளுக்குத் தீர்வு காண முயலும் அதே சமயத்தில், தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட வேலையையும் முடிக்க முயலும் நம்மைப்போன்ற அதே மனிதன் தான் அவன். இது, படத்தின் பெரிய பலமாக அமைந்துவிடுகிறது. அதேபோல், ஜேகே செய்யும் காரியங்களும் ஹீரோத்தனமாக இல்லை. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு டீ வாங்கிக் கொடுக்கும் வேலையைக் கூட அவன் செய்கிறான். அதேபோல், தனக்குத் தேவையான தகவலைக் கொடுக்க மறுத்து, அவனைச் சரமாரியாகத் திட்டும் பெண்மணியைக் கூட அவனால் எதிர்த்துப் பேச முடிவதில்லை. உடன்வரும் கான்ஸ்டபிள், முன்வந்து திட்டும்வரை, அவன் தலைகுனிந்தே நின்றிருக்கிறான் (’அடி செருப்பால’ என்று அந்தக் கான்ஸ்டபிள் திட்டத் தொடங்கும் காட்சி, படத்தில் எனக்குப் பிடித்த காட்சிகளில் ஒன்று).
படத்தின் இன்னொரு பலம், திரைக்கதை. முதல் காட்சியில் இருந்து, கிட்டத்தட்ட படத்தின் முக்கால்வாசிக்கு, திரைக்கதை படுவேகமாகச் செல்கிறது (முக்கால்வாசி என்றால், அதன்பின் படம் சரியில்லையா? இந்தக் கேள்விக்குப் பின்னால் வருகிறேன்). வசனங்களும் அளவாக இருக்கின்றன.
படத்தின் மிகப்பெரிய பலம், சேரன். ஜேகேயின் கதாபாத்திரத்துக்கு நச்சென்று பொருந்தும் நடிகர். ஒருமுறை கூட சேரன் இப்படத்தில் சிரித்து நான் பார்க்கவில்லை. மனவருத்தத்தில் உழன்றுகொண்டே, கடமையைச் செய்யவேண்டிய வேடத்தை நன்றாக உணர்ந்து நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.
படத்தின் பலவீனங்கள்: முதல் பலவீனம், இசை. இசையமைப்பாளர் ‘கே’வைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது அவரது அறிமுகப்படம் என்று நினைக்கிறேன். ஒரு திரைப்படத்தில், அதுவும் த்ரில்லரில், மௌனம் என்பது பெரும்பங்கை வகிக்கிறது. படத்தில் முக்கிய விஷயங்கள் நடைபெறும்போதுகூட, பின்னணியில், இசையில்லாத மௌனம் என்பது பலநேரங்களில் இதயத்துடிப்பை எகிற வைக்கும் தன்மையுடையது. ஆனால், அந்த மௌனம், இப்படத்தில் இல்லவே இல்லை. ஓரிரண்டு காட்சிகள் அப்படி இருந்திருக்கலாம். இருப்பினும், படம் நெடுகிலும், jarring என்றே சொல்லக்கூடிய அளவில், பின்னணி இசை, நமது காதைக் கிழிக்கிறது. சேரன் எப்பொழுதும் மெதுவாகவே பேசுவதால், சில இடங்களில், வசனமும் புரிவதில்லை – இந்த இசையால்.
படத்தின் அடுத்த பலவீனம் – இதன் இரண்டாம் பகுதி. ‘கன்னித்தீவு பெண்ணா’ பாடல் வரை நன்றாகச் சென்றுகொண்டிருந்த திரைக்கதை, அப்பாடலையடுத்து, தொய்ந்துவிடுகிறது. அப்பாடலேகூட, ஜெய்ஹிந்த் படத்தின் ’ஊத்தட்டுமா’ (சாருஹாஸன், வில்லன்களோடு சரக்கடிக்கும் பாடல்) மற்றும் சத்யாவின் ‘வருதுவருது’ பாடல்களை நினைவுபடுத்தியது. தேவையே இல்லாமல், படத்தின் வேகத்தை திடுமென்று குறைப்பதில் இப்பாடல் பெரும்பங்கு வகிக்கிறது. அதனாலேயே, இப்பாடலையடுத்து வரும் காட்சிகள், நமது கவனத்தைக் கவர மறுக்கின்றன. குறிப்பாக, இதன் க்ளைமேக்ஸ், ஒரு let down என்றே உணர்கிறேன். ஆரம்பத்தில் இருந்து கட்டப்பட்டு வரும் விறுவிறுப்பு மாளிகை, க்ளைமேக்ஸில் மொத்தமாகச் சரிந்துவிழுந்து சிதைந்துபோய்விடுகிறது.
படத்தின் இன்னொரு பலவீனம்: படத்தின் இயக்குநர் மிஷ்கின், படத்தின் இடையிடையே தலைகாட்டுவதுதான். இதை இன்னமும் சற்று விளக்கமாகச் சொல்கிறேன் – ஒரு உதாரணத்தோடு. ‘மன்மதன் அம்பு’ படத்தில், கமல், தன்னைத்தானே புகழ்ந்து எழுதிக்கொண்ட வசனங்கள் நினைவு இருக்கிறதல்லவா? (த்ரிஷா, கமலின் ஃப்ரென்ச்சைப் பற்றிச் சொல்லும் படுமுட்டாள்தனமான வசனம் ஒரு உதாரணம்). அதே ரிதியில், மிஷ்கினும், தனது உலக சினிமா அறிவையும், தனது ஆங்கிலப் புத்தக அறிவையும் இப்படத்தில் திணிக்கிறார். அந்த வசனங்களும் தேவையே இல்லாதவை (படத்தில், சேரனின் கதாபாத்திரம், ரஷோமான் திரைப்படத்தை refer செய்து பேசும் வசனத்தையும், இறுதியில், ஆங்கிலப் புத்தகம் ஒன்றின் க்ளோஸப்போடு தொடங்கும் காட்சியையும் பற்றித்தான் சொல்கிறேன்). மிகவும் செயற்கையாக, படத்தின் flowவிலிருந்து தனித்துத் துருத்திக்கொண்டு இந்த வசனங்கள் தெரிகின்றன. மிஷ்கின், கமலைப்போல் ஒரு narcissist ஆகிவிடுவாரோ என்ற கவலையையும் இவ்வசனங்கள் அளிக்கின்றன.
அதேபோல், அஞ்சாதே படத்தை நினைவுபடுத்திய ஒரு காட்சி, இப்படத்தில் உண்டு. பாலத்தின் மேல், சேரன் அடியாட்களுடன் இடும் சண்டைக்காட்சி. அஞ்சாதே படத்தில், மருத்துவமனையில், நரேனிடம் ஒவ்வொருவராக வந்து, சரமாரியாக அடிவாங்கிக்கொண்டு, பின்னர் மீண்டும் போய், வரிசையில் நின்றுகொள்ளும் இளிச்சவாய் முகமூடி ஆட்களை நினைவிருக்கிறதா? அதேபோல், இதிலும் வரிசைகட்டி வந்து சேரனிடம் குத்து வாங்கும் அடியாட்கள் உண்டு (ஒருவேளை, அவர்கள்தானோ இவர்கள்?). அந்தக் காட்சி, வேறுமாதிரி எடுக்கப்பட்டிருந்தால், இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.
படத்தின் கதையில், இறுதியில், படத்தின் கதாபாத்திரங்கள் செய்வது சரிதான் என்பதற்கு, டைட் க்ளோஸப்பில் ஒரு justification காட்சியும் இருக்கிறது. “உங்க பொண்ணுக்கோ இல்லேன்னா தங்கச்சிக்கோ இப்புடி நடந்தா நீங்களும் மிருகமாத்தானே மாறுவீங்க?” என்று படத்தின் ஒரு கதாபாத்திரம், படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு, ரஜினி படங்களிலும், இப்போது விஜய் படங்களிலும் வருவதுபோல், நேரடியாக, திரையைப்பார்த்து ஒரு கேள்வியை முன்வைக்கிறது. இந்தக் காட்சியும், எங்கே படம் பார்க்கும் மக்கள், மிஷ்கின் சொல்லும் தீர்வை ஒப்புக்கொள்ளமுடியாமல் போய்விடுவார்களோ என்ற சந்தேகத்தில், மிஷ்கினே முன்வந்து வைத்த அவசரக் காட்சி என்பது நன்றாகப் புரிகிறது. பல வருடங்கள் முன், ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திலும் இதே போன்ற ஒரு காட்சி உண்டு. படத்தின் இறுதியில், மாறுவேடத்தில் ஜட்ஜ் வீட்டுக்குச் செல்லும் பாக்யராஜ், ஜட்ஜின் பெண்ணைத் துப்பாக்கி முனையில் ரேப் செய்ய முயல, ஜட்ஜ், காலித்துப்பாக்கியை எடுத்து வெறித்தனமாக பாக்யராஜைச் சுட முயலும் காட்சி. அந்தக் காட்சியில் இருந்த புத்திசாலித்தனம், இதில் மிஸ்ஸிங். மிகச் செயற்கையான காட்சி இது.
படத்தில் ஓரிரு நிமிடங்களே வரக்கூடிய இந்தக் காட்சிகளை ஏன் படத்தின் பலவீனங்கள் என்று சொல்கிறேன் என்றால், ஒரு சுவாரஸ்யமான படத்தை, சட்டென்று அலுப்பாக்கிவிடுவதற்கு (’ஆரம்பிச்சிட்டாங்கய்யா க்ளிஷேவ…’), இதுபோன்ற காட்சிகள் போதுமானவை. எனக்கு அப்படித்தான் தோன்றியது.
படத்தின் க்ளைமேக்ஸை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படத்தின் கடைசி 25 நிமிடங்களையும், நான் மேலே சொல்லிய சில காட்சிகளையும் தவிர்த்துப் பார்த்தால், யுத்தம் செய், ஒரு நல்ல முயற்சி.
மீ த ஃபர்ஸ்ட்டு!
கிங் விஸ்வா
தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் – வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு – புலி வளர்த்த பிள்ளை
நண்பரே,
உச்சக் கட்டக் காட்சியை தவிர்த்து யுத்தம் செய் தமிழில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய திரில்லர்களில் ஒன்று நான் கருதுகிறேன். இயக்குனர் முத்திரை என்பதால் புத்தகம், சினிமா வந்திருக்கலாம் :))கமலின் பிரெஞ்சையா குறை சொல்கிறீர்கள், அற்புதமான உச்சரிப்புடன் எம்மையே நாணிக் குனிய வைத்த பேச்சல்லவா அது. அதன் பின் சராமாரியாக ஆங்கிலம் பேசுவது அதற்கு ஒரு சான்று :)ஆனால் படத்தில் வரும் குத்து டான்ஸில் ஹார்மோனியப் பெட்டியுடன் ஒருவர் பின்னி எடுத்திருப்பாரே! அவரைப் பற்றி ஏன் எழுதவில்லை :))
நண்பா
நாள் கழித்து வந்த விமர்சனம் என்றாலும் வித்தியாசமான ஒன்று.யாரும் இது போல கண்ணோட்டத்தில் எழுதவில்லை. இசையை பற்றி சொன்ன கருத்தும் உண்மை.
நிறைய கிளிசேக்கள் இருக்கிறது. ரோஷோமான் போன்ற திணிப்புகள் நகைச்சுவைக்காக சேர்த்தது.நீண்ட காட்சிகள் வைக்கட்டும் சுவாரஸ்யமாக வைக்கட்டும்,இமைக்காமல் பார்த்து கண் கூசுகிறது.கேமரா,இசை இரண்டுமே சுமார் ரகமே.வில்லனாக வந்த செல்வா எல்லாம் வீணன்.படு மொக்கை.ஒய்.ஜிக்கு தன் வாழ்க்கையிலேயே சொல்லிக்கொள்ள ஒரே படம்.வழக்கம்போலவே
ஜெயப்ப்ரகாஷ் நம்பிக்கையளிக்கும் குணச்சித்திர நடிகர்.
===
ஹாலிபாலி சொன்ன படம் பார்த்துவிட்டீர்களா?பார்க்காவிட்டால் உடனே பார்க்கவும்.
செவன் டேஸ் என்னும் 2010 ல் வந்த ஒரு படமும் தன் மகளை வன்புணர்ந்து கொன்ற கொலையாளியை நீதிமன்றவிசாரனையின் போது கடத்தி கூட்டிப்போய் ஒரு வாரம் வைத்திருந்து விதவிதாமான ஆபரேஷன் செய்து,கொன்று கடைசியாக சரணடைகின்றனர்.
//ஆனால் படத்தில் வரும் குத்து டான்ஸில் ஹார்மோனியப் பெட்டியுடன் ஒருவர் பின்னி எடுத்திருப்பாரே! அவரைப் பற்றி ஏன் எழுதவில்லை :))
//
சாருவின் ரசிகரல்லவா இவர் :))
\படத்தின் க்ளைமேக்ஸை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படத்தின் கடைசி 25 நிமிடங்களையும், நான் மேலே சொல்லிய சில காட்சிகளையும் தவிர்த்துப் பார்த்தால், யுத்தம் செய், ஒரு நல்ல முயற்சி.\
ஒரு மாதிரி இராஜெஷ்குமார்தனம் இருந்த்ததோ…
நல்ல பார்வை.
Super anna
Romba naalaiku appuram oru nalla tamil film Review Boss
நீங்கள் அதே குறையை நானும் உணர்ந்தேன்… அதுவும் துப்பாக்கி குண்டுகளை வாங்கி கொண்டே முன்னால் வருவதும், ‘சுஜா’ என்று அலறுவதெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை… இயல்பாக அருமையான சென்ற படத்தில் ஏன் அவ்வளவு நாடகதன்மை என தெரியவில்லை…
‘ராஷோமன்’ பற்றி குறிப்பிட்டு இருக்க வேண்டியதில்லை… அந்த கான்ஸ்டபிள் மட்டும் அல்ல..பலருக்கும் அந்த படத்தை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை… அப்படி பயன்படுத்த வேண்டுமெனில் அனைவருக்கும் தெரிந்த ‘விருமண்டி’-யை சொல்லி இருக்கலாம்.. 🙂
அருமையான விமர்சனக் கட்டுரை ராஜேஷ். படத்தின் பலம், பலவீனங்களை சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். ‘யுத்தம் செய்’ தமிழின் முக்கியமான த்ரில்லர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனினும் இன்னும் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் காலத்திற்கும் மறக்கமுடியாத கிளாசிக்காக இருந்திருக்கும்.
அடடா….கிளம்பிட்டாருய்யா….:)
அந்த குத்துப்பாட்டு வரைக்கும் படம் கலக்கல்….க்ளைமாக்ஸ் எனக்கு சுத்தமா பிடிக்கலை….அதுவும் ஓய்.ஜியும் அவர்மனைவியும் ஏதோ நம்ம தளபதிகள் ரேன்சுக்கு…துப்பாக்கி குண்டுகள் பட்டும் ஓடிப்போய் குறுக்கே விழுந்து சுஜாவை காப்பாத்துறது அக்மார்க் நம்ம தமிழ்படம்…
ஜெயப்பிரகாஷ், சேரன் நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலம்…
இசை சில இடங்களில் நல்லா இருந்துச்சு தல…குறிப்பா சேரனை கொல்றதுக்கு ஸ்கெட்ச் போடுவானுங்களே…சேரன் shoe கட்டும்போது அந்தப்பக்கம் சிகரட் லைட்டர் எரியும்…அந்த காட்சில பின்னணி இசை நல்லா இருக்கும் தல…
அஞ்சாதேவை அஞ்சு தடவை பார்த்திருக்கேன்.
வெய்ட்டிங் ஃபார் திருட்டு டிவிடி..
@தல நான் அஞ்சாதேவை எத்தனை தபா பார்த்தேன்னே தெரியாது.
கிளிசேவை தவிற்த்து கிளைமாக்சிலும் கவனம் செலுத்தியிருந்தால் மிகச்சிறந்த திரில்லர் கிடைத்திருக்கும்.பயணம்&தூங்காநகரமும் நல்ல கமர்சியல் படங்கள்.
Good review Karundhel. I liked the one about music. Piece of crap. Whenever we wanted to hear the dialogues, the music breaks the head with a hammer.
போங்க தல இசை சில இடங்களைத் தவிர சிறப்பாகவே இருந்துச்சு.அதுவும் படத்தோட தலைப்பு போடும் போது பிண்ணணி இசை சூப்பர்.தவிர ஒளிப்பதிவ பத்தி சொல்ல மறந்துட்டீங்கலே.
//அப்படி பயன்படுத்த வேண்டுமெனில் அனைவருக்கும் தெரிந்த ‘விருமண்டி’-யை சொல்லி இருக்கலாம்.. :)//
கமலஹாசநோட மேதாவித்தனம் புடிக்கும் மிஷ்கினோட மேதாவித்தனம் புடிக்காதோ.
இறுதி 20 நிமிட காட்சிகள் ஓவர் தான், ஆனால் சேரனின் இயல்பான நடிப்புக்கு ஒரு சல்யூட் வைக்கலாம்.
ஜேகே, ஆறுச்சாமி போலவோ, அன்புச்செல்வனைப் போலவோ, அல்லது பல விஜயகாந்த்தின் கதாபாத்திரங்களைப் போலவோ, வலிந்து திணிக்கப்படும் ஒரு சூப்பர் ஹீரோ அல்ல.//
.
.
இது நிச்சயம் பாராட்டபடவேண்டியது.ஏனெனில் தமிழ் சினிமாவில் ஹீரோ போலீசாக இருந்தால் அவன்தான் மேதாவிபோலவும் அவன் கூட வேலை பார்ப்பவர்கள் எல்லோரும் அறிவிலி போலவும் காட்டுவார்கள்.(உம., சிங்கம் படத்துல விவேக் போன்ற உடன் வேலை பார்ப்பவர்கள் முட்டாளாக இருப்பார்.ஆனா சூர்யா மட்டும் மேதாவியாம்.என்னாங்கடா இது?)
அது தவிர போலீஸ் ஹீரோ என்றால் பிச்சைகாரன் பால்காரன் என எவனையும் விடாமல் “டேய்ய்ய்…போடா….அடின்க்…நா போலீஸ்டா…” என குலைக்கும் வழக்கம் Stereotype ஆகிவிட்டது.(உம., காக்க காக்க படத்தில் ஆடோகாரனிடம் “டேய்.. யூ டர்ன் எட்றா” என நரம்பு புடைக்க கத்தும் சூர்யா.ஏன் அதை மொள்ளமா சொன்னா கேக்க மாட்டானா?அதே படம் முழுவதும் தோள்களை ஹேங்கரில் மாட்டி விட்டதுபோல சூர்யா நிற்பது சிரிப்பை வரவழைக்கிறது.ஒரு வேலை சட்டைக்கு போன்ற கஞ்சிய உள்ள உட்டுகினார் போல..என்னவோ..ஆனால் அஞ்சாதே படத்தில் போலீசாக வேலைக்கு சேரும் நரேனை அவனின் மேலதிகாரிகள் கீழே உள்ளவர்கள் என எல்லோரும் ஏளனமாக நடத்துவர்.அதான் நிஜம்.
*****
ஜெய்ஹிந்த் படத்தின் ’ஊத்தட்டுமா’ (சாருஹாஸன், வில்லன்களோடு சரக்கடிக்கும் பாடல்) மற்றும் சத்யாவின் ‘வருதுவருது’ பாடல்களை நினைவுபடுத்தியது////
.
.
என்னது சாருஹாசன் சரக்கு உட்ற பாட்டா!!!அந்த படத்தை ரெண்டு மூணு தபா பார்த்திருக்கேன்.ஆனா அந்த பாட்டு தெரியல.பார்க்க முயற்சிக்கிறேன்.LOLZ…அந்த காமெடிய பாக்கனும்போல இருக்கு..படத்தோட கிளைமாக்சுல “சமாதான புறா”ன்னு சாருஹாசன காட்டுவானகளே.புறாக்கள் சரக்கு உடுமான்னு தெரியல!ஹீ ஹீ..
******
மன்மதன் அம்பு’ படத்தில், கமல், தன்னைத்தானே புகழ்ந்து எழுதிக்கொண்ட வசனங்கள் நினைவு இருக்கிறதல்லவா? (த்ரிஷா, கமலின் ஃப்ரென்ச்சைப் பற்றிச் சொல்லும் படுமுட்டாள்தனமான வசனம் ஒரு உதாரணம்)///
.
.
அட கமலின் Narcissism ஊரரிஞ்சது !! சுஜாதாவின் ஐடியாக்களான Butterfly effect , chaos theory இரண்டையும் தசாவதாரம் படத்துல சொருகுன கமல் சுஜாதாவின் பெயரை கூட தலைப்பில் போடாதது கடுப்பை கிளப்பியது.
கமலின் பேட்டியிலேயே Narcissism தெரியும்..”ஆகாசம்பட்டு சேஷாசலம் சொன்னததான் தஸ்தாஎவ்ச்கியும் சொன்னார்”…அப்படி இப்படின்னு கமல் அளப்பது “டே..எனக்கு எல்லாம் தெரியும் பாத்துக்க” என காட்டுவது போலதான் இருக்கிறது.
மன்மதன் அம்பு பாக்கல .தைரியம் வரல்.அதுவும் திரிசா சொந்த கொரல்ல பேசியிருக்காளாமே..அந்த பயம் வேற,,புருவத்த மாட்டும் எத்தி எறக்கி ஆட்டுறது நடிப்பாம் திரிசாவுக்கு.ஆமா இவ என்ன Katherine Hepburn ஆ என்ன?சரி உடுங்க!!!
******
தமிழ் படம் பார்க்க தைரியம் வரமாட்டேங்குது.சரி இந்த படத்த பார்க்க முயற்சி பண்ணுறேன்.நன்றி.(சாருஹாசன் தண்ணியடிக்கிற குஜால் பாட்ட பாக்கணும்) 😉 ..ஹீ.ஹ்ஹி.. நன்றி
நான் இன்னும் படம் பார்க்கலை மக்கா…
This review is different…Liked it…!!!
ஜெயப்ரகாஷ் ஸ்க்ரீன் பார்த்து சொன்ன வசனம் மட்டுமே படத்துடன் ஒட்டாமல் நின்றது. எனக்கென்னவோ கடைசி காட்சியில் பெண்ணை இழந்த பெற்றோர் வாழும் பிணமாக இருப்பதை நன்றாக காட்டியதை போல் தோன்றியது. (எனக்கு வயசாயிடுச்சோ?) . பின்னணி இசை நன்றாக இருந்தது.
யுத்தம் செய் படம் memories of murder என்ற கொரியப் படத்தின் ரீமேக் என்று கூட சொல்ல முடியாது. memories of murderஐ டப்பிங் செய்த படம் யுத்தம் செய்.
என்று நான் சொல்லவில்லை சாரு சொன்னது
பின்னூட்டங்களுக்குப் பதில், நாளை எழுதுகிறேன். இப்போது ஒரு படத்துக்கு ஓடிக்கொண்டிருக்கிறேன். அதன் விமர்சனமும் நாளை வரும்…
யோவ் போலீஸ் வேலைக்கு சேரவே உயரம் 5’10” இருக்க வேண்டும்.ஆனா இந்த (குள்ளன்)சூர்யா அந்த ஒயரம் கூட இல்ல .இவன் போலீசாம்.,அட்ரா அட்ரா..
“யோவ் போலீஸ் வேலைக்கு சேரவே உயரம் 5’10” இருக்க வேண்டும்.ஆனா இந்த (குள்ளன்)சூர்யா அந்த ஒயரம் கூட இல்ல .இவன் போலீசாம்.,அட்ரா அட்ரா””
முட்டாள்தனமான கருத்து கூறிய முட்டாள் ராமசாமி,
சிங்கம் படத்தில் சூர்யாவை குள்ளனாக காட்டவில்லை. 6 அடிஉயர அனுஷ்கா விற்கு ஜோடியாக சம உயரமான ஒருவராக காட்டியுள்ளார்கள். படத்தை நன்றாக பார்க்கவும். அவர் நடித்த எந்த திரைப்படத்திலும் அவரை குள்ளனாக காட்டவில்லை(காக்க காக்க உள்பட)
60 வயது கிழட்டு ரஜனி கூட 30 வயது மனிதனாக நடித்துள்ளார். அப்ப அது என்ன கணக்கு. அட்ரா அட்ரா அட்ரா அட்ரா சக்கை
சூர்யாவை குள்ளனாக காட்டி அவர் போலீஸ் ல் இருந்தால் அது தவறு.
IPS Officer களுக்கான உயரம் 5’5″ (165cm ) Not (5’10”)
SC OR ST (IPS )Officer 5’3″ (160cm )
நான் இந்தியன் அல்ல என்றாலும் எனக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் ராமசாமி !!!!!!!!!@#
Surya Sivakumar height 5 ft 6 in / 167.6 cms
http://celebrity.psyphil.com/height-how-tall-tamil-actor-list-of-all-tamil-actors-height/
http://www.sylendrababu.com/forum/viewtopic.php?t=198
படத்தை நன்றாக பார்க்கவும். அவர் நடித்த எந்த திரைப்படத்திலும் அவரை குள்ளனாக காட்டவில்லை(காக்க காக்க உள்பட)
60 வயது கிழட்டு ரஜனி கூட 30 வயது மனிதனாக நடித்துள்ளார். அப்ப அது என்ன கணக்கு. அட்ரா அட்ரா அட்ரா அட்ரா சக்கை//
.
.
என்னது படம் பாக்கணுமா?நான் நல்லா இருக்கிறது ஒனக்கு பிடிக்கலையா?அவன் படமெல்லாம் எவன்டா பாப்பான்?
அப்புறம் நான் ரஜினி ரசிகன்னு சொன்னனா?இதாண்டா நம்ம தமிழனோட குணம்.ஒருத்தன பத்தி பேசுனா ..அவன் அப்படியில்லையா இவன் இப்படியில்லான்னு..வாதாட ஆரம்பிச்சிடுவான்.பாண்டியராஜனையே போலீசாக காட்டிய முட்டாள் தமிழ் சினிமா குள்ள சூர்யாவ மட்டும் உட்டு வைக்குமா என்ன?
********
நான் இந்தியன் அல்ல என்றாலும் எனக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் ராமசாமி !!!!!!!!!@#///
.
.
அண்ணா நான் இந்தியன்னு எப்பங்க்னா சொன்னேன்?கண்ணு தெரியலியா?நான் தமிழன்.அம்புட்டுதேன்.ஒங்க சூர்யா தமிழனா இருக்க கூட தகுதி இல்லாதவன்.இலங்கை இனபடுகொலையை “Dead issue” ன்னு சொன்ன மேதாவி சூர்யா.அவன் படத்த தமிழனுக்கு பொறந்த எவனும் பாக்க கூடாது.ஆனா நீங்க?வக்காலத்து வாங்குறீங்க!அட்ரா அட்ரா
****
Surya Sivakumar height 5 ft 6 in / 167.6 cms
http://celebrity.psyphil.com/height-how-tall-tamil-actor-list-of-all-tamil-actors-height/
http://www.sylendrababu.com/forum/viewtopic.php?t=198
.
.
யாரு அந்த என்கவுண்டர் சாமி சைலேந்திரா பாபுவா?அவனெல்லாம் ஒரு ஆசாமி அவன் பேச்ச கேக்கணுமா?சரி உடு நீ சூர்யா பக்கத்துல நின்னு இஞ்சு டேப்பு வச்சிதான் எடுத்த ஒத்துகிறேன்.போறவன் வரவேனைஎல்லாம் என்கவுண்டர் பண்ணவன் அவன்.அதுக்கு வக்காலத்து வாங்குன மொக்க படம் காக்க காக்க.அதெல்லாம் ஒரு படமா?
அப்புறம் எதுக்கு மெதட் ஆக்டர்னு சீனு போடுறான் சூர்யா.ரஜினி மாதிரி மூடிகிட்டு போ சொல்லு.
**************
அப்புறம் போலீஸ் வேடம்னாலே அக்குள்ள கட்டி வந்தா மாதிரிதான் நிக்கனுமா?அந்த சூர்யா ஏன் அப்படி நிக்குறான்?கஞ்சிய உள்ள உட்டுகிட்டானா ?என்னவோ..நரம்பு புடைக்க கத்துவான்..இவன் பெரிய நடிகனாம்.என்ன கொடுமையடா சாமி.
சிங்கத்த மானடிச்சி பாத்துருப்ப வரிக்குதிர அடிச்சி பாத்துருப்ப !!! சிங்கம் கழிஞ்சி பாத்துரிக்கியா?பேதி வந்தா ஒன்ரை டன்னு சாணிடா..ஹீ ஹீ யப்பா அவன் படம் பார்த்தாலே தல சுத்துது..காதை அடைசிகிது..காட்டு கத்தல் கத்துராண்டா சாமி..காக்க காக்க படம் Untouchables படத்தோட அசிங்கமான காப்பி.கெவின் காச்த்னரின் நடிப்பில் பத்து விழுக்காடு கூட இவனால குடுக்க முடியல.இவனெல்லாம் நடிகனா?
எனக்கு ஆச்சர்யமாக இருக்கு , நான் கவனித அணைத்து விசயங்களையும் நீங்களும் கவனிச்சு சொல்லி இருக்கீங்க , கன்னி பொண்ணு தீவா பாட்டுக்கு பிறகு இயக்குனர் அவரே அமைத்த கொட்பாடுகுள் இருந்து படம் தட்டு தடுமாறி கண்ட மேனிக்கு செல்வது மனதில் ஓட்ட மாட்டிங்கிது , அஞ்சாதே படம் இதை விட சுவரசியமாக இருந்தது , ஆனால் இது போன்ற thriller படங்களை ஒருமுறைக்கு மேல் பார்க்க முடியாது என்பது போன்ற எண்ணம் எனக்கு தோன்றுகிறது , உங்களுக்கு மீண்டும் மீண்டும் பார்த்த த்ரில்ளீர் படங்கள் ஏதேனும் நியாபகம் இருக்கா ,
நண்பா,
இந்த படம் ஒரு மொக்கை. ஆக்ரோஷ் என்னும் ஹிந்திப்படம் ப்ரியதர்ஷன் இயக்கியதை தயவு செய்து பாருங்க,இருட்டுல புடிக்கிறது,தலைல ஓட்டைபோட்ட கோணி மாட்டிக்கிட்டு வர்ரது,காலை மட்டும் காட்டுறது,அக்குளை தூக்கி காட்டுறது.வானத்தை காட்டுறது,கண்ணுகூசுறாப்போல சூரியன சுடுறது எல்லாமில்ல,செம படம்.அஜய்தேவகன் சிபிஐயாக பாருங்க,என்ன ப்யூட்டின்னா காரைக்குடில தான் அநேகமான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.ரசிப்பீங்க.அக்ஷய்கண்ணாவும் தூள்.பார்துட்டு எழுதுங்க.
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். சென்றவாரம் முழுமையும் நோ இண்டர்நெட். பல வேலைகள். அதனால்தான் இப்போது இவ்வளவு தாமதமாக எழுத நேர்கிறேன்.
@ கீதப்ரியன் – நண்பா.. இது மொக்கைன்னா சொல்றீங்க? எனக்கு முக்கால்வாசி படம் புடிச்சது. எனிவே, நீங்க சொன்ன ஆக்ரோஷ் இன்னும் பார்க்கல. அதை சீக்கிரம் பார்த்துடுறேன். கட்டாயம்.
நண்பா
தவறாக எண்ணவேண்டாம்.இது ஒரு முறை பார்க்கலாம்.மொக்கை என்று சொன்னது அந்த டிப்பிகல் கேமராக்கோனம்,பாத்திரக்கடை பிண்ணணி சப்தம்.ஓட்டைக் கோனிமாட்டி வர்ரது,நீண்ட கழுத்து சுளுக்கும் படியான ஷாட்டுகளை தான்.நண்பா கண்ணு கூசுது கணிமைக்காம ஒரு காட்சியை அதுவும் நத்தை போல நகரும் ஆப்ஜகடை பார்க்க.இன்னொரு படத்துல இது கண்டினியூ ஆச்சுனா மனுசப்பயலுக கொலைவெறிஆயிடுவானுங்க.அப்புறம் கண்சிவந்தால் மண் சிவக்கும்லயே மிஷ்கினின் யுத்திகளை பயன்படுத்தியிருக்காங்க நண்பா.
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். சென்றவாரம் முழுமையும் நோ இண்டர்நெட். பல வேலைகள். அதனால்தான் இப்போது இவ்வளவு தாமதமாக எழுத நேர்கிறேன். ///
.
.
ஆமா நீ வரலைன்னு யார் அழுதா?
எவண்டா அது சொறியார் அது இதுன்னு லூசுதனமா காமெடி பண்ணிகினு 🙂 போய் வேலைய பாருடா பன்னாடை 🙂
அன்பு கருந்தேள்,
தமிழ் படங்களில் கதையோடு ஒட்டி படம் பார்க்கும் பாணி இனி வராதா என்று நினைத்து கொண்டிருக்கும் வேளையில், யுத்தம் செய் ஒரு நல்ல படம் என்பது என் கருத்தும் கூட.
போலீஸ் ஆபிஸர் என்றாலே, உடனே நடிகர்கள் கம்பீரமாக தன்னாலும் லெப்ட் ரைட் போட முடியும் என்று காட்ட துடிக்கும் வேளையில், தன் மேல் பல கேள்விகள், மட்டும் மன அழுத்தம் என்று சரிவர வேலையை கவனிக்க இஷ்டம் இல்லாமை என்று யாரும் வெறுக்க துடிக்கும் கதாபாத்திர குணாதிசியங்களில், சேரன் கச்சிதமாக பொருந்தி உள்ளார் என்பதில் ஐயமில்லை.
ஆட்டோகாரர்களிடமும், வீட்டு அம்மணியிடமும் அசிங்கபட்டாலும், விஷயங்களை பொறுமையாக கிரகித்து கொள்ள முயலும் அதே கதாபாத்திரம், வம்பு செய்யும் ரவுடியின் தலையில் உடனே வரும் ஆத்திரத்தின் மூலமாக கேரம் போடை உடைக்கும் போது ஒப்புக்கொள்கிறது. ஆனால், இப்படி தன்னிலை இல்லாமல் தவிக்கும் ஒரு நபர், தனியாக 6,7 நபர்களை ஒற்றையாக சமாளிக்கும் விதம் நம்பும்படி இல்லை. அதுவும் மிஷ்கினின் வழக்கமான ஒற்றையாக வா… மொத்தையாக வாங்கிக்கோ” என்ற பாணி மிகவும் அலுத்து போய் விட்டது, இன்னும் அதை தொடர வேண்டுமா…
அதே, சிம்பாலிக் போல படத்திற்கு தேவை இல்லாத ஒரு பாட்டு. முந்தைய காணா பாடல்கள் போலிருந்தாலும் தேவலம், ஆனால் சரியான மொக்கை பாட்டை அவற்றின் வரிசைபடுத்தி வந்த விளம்பரங்கள் ரொம்ப ஓவர்.
வீட்டுக்கார அம்மணி தன் மகளை தினமும் போலீஸ் வந்து தொந்தரவு செய்வதை தான் தன் கோபத்தின் மூலம் வெளிபடுத்துகிறார், ஆனால் அவரை ஏக வசனத்தில் விபச்சாரி போல ஏட்டு திட்டுவது, போலீஸ்காரர்களின் ஏகாதிபத்தியத்தை காட்டுதே தவிர, அவர்கள் ஆளுமையை முந்தைய படங்களில் நிரூபிக்க முயன்ற மிஷ்கினுக்கு, வலுக்கல் தான் என்று தோன்றுகிறது.
கடைசி காட்சிகளில், செய்றகைதனமாக இடைசொறுகல்கள் கதையின் போக்கை மிகவும் சிதைத்து உள்ளன. நீங்கள் கூறியபடி காமிராவை நோக்கி நம்மிடம் கேள்வி கேட்கும் பாணி, சரியான செய்றகை தனம். பாதிக்கபட்டவர்கள் எல்லாரும் கத்தியை கையில் எடுத்தால் தப்பில்லை என்று சொல்வது போல பிரம்மை உருவாக்க பார்த்து தோத்திருக்கிறார்.
சொதப்பல்கள் இருந்தாலும், முழுவதும் திருப்திபடுத்தும் ஒரு படம். சஸ்பென்ஸ் என்ற முறையில் கிளைமாக்ஸ் ஒன்றும் பெரிது இல்லை என்றாலும், அதை உடைக்கும் விதமாக கதையின் கடைசி கதாபாத்திரங்களின் உருவத்தை தினமும் பத்திரிக்கை விளம்பரங்களில் இட்ட விளம்பரதாரர்களின் மொக்கையே போதாதா….
நிறைவான விமர்சனம், தொடருங்கள் உங்கள் பாணியை.
viththiyaasamaana vimarchanam… naal pattaalum inikkirathu..vaalththukkal
நல்ல படம்… படம் முடிவ நெருங்கும் பொது எதோ தொய்வு விழுந்திடுச்சு. இயக்குனரோட உலக சினிமா மற்றும் நாவல் தாக்கம் இது வரை இருந்திருக்கு இனிமேலும் இருக்கும் அத அவர் தவிர்பார்னு எனக்கு தோனல. நீங்க குறிப்பிட்ட படங்கள் எனக்கு பரிச்சியம் இல்ல, SLV ( Sex. lies and videotape) தவிர. ஆனா எனக்கு வேற சில படங்களோட கரு ஞாபகம் வந்தது but not SLV (படங்களோட பெயர் ஞாபகம் இல்ல.
நான் இந்த site க்கு புதுசு. இன்னைக்கு தான் உங்களோட அறிவிப்ப பார்த்தேன்.
//நமது தளத்தில் சில முட்டாள்கள், சொந்தப் பெயரில் வர பயந்து பம்பி, வேண்டுமென்றே போலி பெயரில் வந்து இடும் காமெடியான பின்னூட்டங்களையெல்லாம் சேகரித்து, தமிழ்நாடு சைபர் போலீசில் கொடுத்தாகிவிட்டது. அந்தப் பட்டியலில் உள்ள அடிமுட்டாள்களின் மீது சீக்கிரம் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தப் பட்டியலை அவ்வப்போது அவர்களுக்கு அனுப்பவும் சொல்லியிருக்கிறார்கள். எனவே, சைபர் போலீஸ் பட்டியலில் தங்களது பெயரை சேர்க்க விருப்பமுள்ள பேமானிகள், இங்கு வந்து தாராளமாக வாந்தியெடுக்கலாம்.//
அந்த சில முட்டாள்கள்ல நான் ஒருத்தன் இல்ல. அது என்னங்க பின்னூட்டங்களையெல்லாம் (என்னன்னு புரியலியே)
அது வேறொன்னுமில்லை. நீங்க வருவதற்கு முன், சில பயந்தாங்கொள்ளிகள், போலி பேர்ல வந்து கண்டபடி ஒளரிக்கினு இருந்தானுங்க. அவங்களைப் பத்தி சைபர் போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் கொடுத்திருக்கேன். சைபர் போலீஸ்ல, இவங்களை மானிட்டர் பண்ணிக்கினு இருக்காங்க இப்ப. மறுபடி ஏதாவது கமென்ட் அப்புடி வந்தா, இவங்களுக்கு உண்டு ஆப்பு. அதைத்தான் அறிவிப்பா போட்ருக்கேன் 🙂
பின்னூட்டம்னா என்னனு சொல்லலியே…
உங்க ப்ளாக் படிச்சா சில இடங்கள்ல இந்த வார்த்தை இருந்தது… அனேகமா Reply னு நான் நினைகிறேன்
ஆக்ரோஷ் is atta copy of mississippi burning. Priyadharsan is another copycat.