என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம் – 2

by Karundhel Rajesh August 17, 2012   Social issues

வணக்கங்க்ணா  . . .. நானு பெங்களூர்ல வாழுற ஒரு கோயமுத்தூர்க்காரன்.   சாதா ஆள். எனக்கு சினிமா பத்தி பகிரணும்னு தோனுற அதே அளவு வேற சில விஷயங்களையும் ஷேர் பண்ணும்னு தோணும். ஆனா அதையெல்லாம் எழுதி படிக்கிறவங்களை டார்ச்சர் பண்ண கூடாதுன்னு நினைச்சதுனால விட்டுருவேன்…கூடவே, இந்த மாதிரி போஸ்ட் போடுறதால எந்த யூஸும் கிடையாதுன்னும் எனக்கு தெரியும். ஒரு போஸ்டு போடுறது – அதுல வந்து அதை படிக்கிறவங்க பொங்குறது – அவங்களை இன்னொரு நாலு பேடு திட்டுறது – இது போய்க்கிட்டே இருக்கும். உருப்படியா இதுனால ஒண்ணும் நடக்காது. அதுனாலதான் இந்த சமூகம், அரசியல், பிரச்னைகள் பத்தியெல்லாம் எழுதறதில்லைன்னு வெச்சிருக்கேன். ஆனா அப்பப்ப செம்ம கடுப்பா எதுனா நடக்கும். அங்க போயி அவனுங்களை ரெண்டு இழுப்பு இழுக்கணும்னு கோபம் வரும்.. அப்பலாம், ‘டேய் மவனே… நீ வாழுறது அமெரிக்கா இல்ல.. நாசமா போன இந்தியா… இங்க என்ன அயோக்கியத்தனம் நடந்தாலும் ஒரு பய கண்டுக்க மாட்டான்…பம்பிக்கினு போய்க்கினே இருப்பான்.. அதைப் போயி கேள்வி கேட்டா நம்மளை காலி பண்ணிருவாங்க…..அதே மாதிரி, இங்க நடக்குற அயோக்கியத்தனங்கள் எல்லாமே Top-Down அப்ரோச்ல, ஸ்ட்ரெய்ட்டா அதிகார உச்சத்துல ஆரம்பிச்சி கடைநிலைல இருக்குற குடிமகன் வரை வருது… இந்த ஹைரார்க்கில ஒரு பய விதிவிலக்கில்லை. எல்லாருமே அயோக்கியனுங்கதான்.. அதுனால, நாம மட்டும் நேர்மை நியாயம்னு பேசுனா அதை விட வேற அசிங்கம் ஒண்ணுமில்லை’ ன்னு நெனைச்சிக்கிட்டு என்னை நானே தேத்திக்கிட்டு என் வேலையைப் பார்க்க போயிடுவேன். ஆனா கொஞ்ச நாளா கேள்விப்படுற சில செய்திகள் ரொம்பவே டார்ச்சரா இருக்கு. அதுனால அதை இங்க பொலம்பி வெக்கலாம்னுதான் இந்த கட்டுரை. இனி எனக்கு எரிச்சல் வரும்போதெல்லாம் இந்த டாபிகல பொலம்புவேன். பொலம்பல் வேணாம்னு நினைக்கிற நண்பர்கள் எஸ்கேப் ஆயிறலாம். அப்பால அவங்களுக்கு மனசு வருத்தம்லாம் வரக்கூடாது.

என்ன மாதிரியான தேசத்தில் வாழ்கிறோம் – 1


ரைட். மேட்டர் இதுதான் –நீச்சல் பயிற்சியில் மாணவன் பலி

கடந்த சில நாட்களில் நடந்திருக்கும் மூன்றாவது கொடுமை இது. முதல் நிகழ்ச்சி – பேருந்தில் இருந்து ஓட்டை வழியாக விழுந்து இறந்த ஸ்ருதி என்ற சிறுமி. அடுத்தது – ஜேப்பியாரின் கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்ததனால் பலியான பத்து பேர். அதன்பின் இந்த சம்பவம்.

ஆனால், உண்மை என்னவென்றால் இந்த சம்பவங்களுக்கு முன்னர் வந்திருக்கும் சம்பவங்களும் பல. இப்படி வரிசையான ஒரு சங்கிலியின் ஓரிரு வட்டங்களை மட்டுமே நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த சங்கிலி மிகப்பெரியது. இப்படிப்பட்ட சம்பவங்கள் இப்போது மட்டுமே நடைபெற ஆரம்பிக்கவில்லை. எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து பள்ளிகளில் மாணவ மாணவியர் சாவது, இப்படிப்பட்ட பயங்கர விபத்துகளில் பலபேர் கொத்தோடு இறப்பது போன்றவைகள் இந்தியாவில் சர்வ சாதாரணமாக நடந்துகொண்டேதான் இருக்கின்றன. மேலே சொன்ன மூன்று சம்பவங்களுக்கு இடையேகூட வேறு ஏதாவது துர்மரண சம்பவம் நடந்திருக்கலாம். செய்தித்தாள்களில் நான் படித்த சம்பவங்கள் இவை என்பதாலேயே இவற்றை இங்கே கொடுத்திருக்கிறேன்.

இறந்த இந்த சிறுவன், நமது குடும்பத்தை சேர்ந்தவனாகவோ அல்லது நமது குழந்தையாகவேயோ இருந்திருந்தால்?எப்படி இருந்திருக்கும் அந்த இழப்பு? இத்தகைய கோரத்துக்கு, நம்பி நாம் சேர்த்த பள்ளிதான் காரணம் என்பது இன்னமும் கொடுமையல்லவா?

உண்மையில் அந்தப் பள்ளியில் மாணவர்கள் நீச்சல் கற்றுக்கொள்வது கட்டாயம் என்றே தெரிகிறது. இரண்டாம் வகுப்பிலிருந்து பனிரண்டாம் வகுப்பு வரை நீச்சல் கற்றுக்கொண்டே ஆகவேண்டும்; அதற்காக கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிகிறோம். நீரில் மூழ்காமல் இருக்க பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் இல்லை. இதற்காக நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர்கள் மொத்தமே இரண்டு பேர்தான். இப்போது இந்த செய்தி வெளிவந்து பரபரப்புக்குள்ளாயிருப்பதால் விரைவில் ஒருசில பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்பட்டு, நீச்சல் குள ஓரமாக கொஞ்ச நாள் வைக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படி செய்யப்படும் எல்லாமே அவசரமான mitigation திட்டங்கள் மட்டுமே. இதனால் ஒரு பயனும் கிடையாது.

இப்படிப்பட்ட விபத்துகளைத் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை நான் விவாதிக்கப்போவதில்லை. ஏனெனில், அவையெல்லாம் பள்ளி கட்டப்பபடும்போதே முடிவு செய்யப்படவேண்டிய அடிப்படை விஷயங்கள்.

வெளிப்படையாக இதைப்போன்ற விபத்துகளில் தெரிவது – பணம் சம்பாதிக்கும் வெறி. அது மட்டுமே. மற்றபடி, மாணவ மாணவியர்களின் உயிர், ஒரு பொருட்டே அல்ல என்பது தெரிகிறது. நான் முதல் பத்தியில் சொன்னது போல, இப்படிப்பட்ட அலட்சியப் போக்கும் பண வெறியும் அதிகாரத்தின் மிக உச்சத்தில் இருந்து படிப்படியாக ஒவ்வொரு அடுக்காக வெளிப்பட்டு  மக்களின் தலையில் திணிக்கப்படுகிறது. அதனால் மக்களும் இதெல்லாம் சாதாரணம் என்ற மனநிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டனர். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ‘நல்லாட்சி, நாணயம்’ போன்றவையெல்லாம் அரசியல்வாதிகள் பணம் சம்பாதிக்க உபயோகப்படுத்தும் வார்த்தைகள் என்பது இந்தியாவின் அத்தனை குடிமக்களுக்கும் தெரிந்த விஷயமாகவே இருக்கிறது. அதேசமயம், அந்தக் குடிமகனுமே அரசியலிலோ அல்லது சமுதாயத்திலோ உயர்ந்தால், இப்படிப்பட்ட சுரண்டலை ஆரம்பித்துவிடுகிறான்.

பள்ளிகளைப் பற்றிய எனது தனிப்பட்ட கருத்து – நான் படித்த பள்ளி உட்பட – இதுவரை மாணவ மாணவியருக்கு practical knowledge கற்றுக்கொடுத்து, அவர்களை வாழ்க்கையை வாழ தயார்ப்படுத்தும் பள்ளிகள் மிக மிக சொற்பம். ‘எங்கள் பள்ளியில் சேருங்கள் – உங்கள் குழந்தைக்கு சிறிய வயதிலிருந்தே குதிரையேற்றம் பழக்குகிறோம்’ என்று ஒரு பள்ளி அறிவித்தால், மற்றொரு பள்ளி, ‘குதிரையேற்றம் என்ன பிசாத்து விஷயம்..நாங்கள் யானையேற்றமே பழக்கிவிடுவோம். இதற்கு குதிரையேற்றத்திற்கான கட்டணமே போதுமானது’ என்று அறிவிக்கிறது. இப்படி தேவையே இல்லாத விஷயங்கள் தான் நிறைய. இதில், மக்களாகிய நமது பங்கு? பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் நண்பர்களிடமும் பீற்றிக்கொள்ள நமது குழந்தை ஒரு product என்பதால், அவர்கள் தினமும் செய்யும் அடிமை வேலையை பெருமையாக எல்லோரிடமும் அளப்பதே. ‘என் பையன் கராத்தே கிளாஸ் போறான். அதுல இருந்து வந்ததும் பரத நாட்டியம். அப்புறம் ஹார்ஸ் ரைடிங். அடுத்த நாள் கம்ப்யூட்டர் கிளாஸ். இந்த வயசுலயே அவனுக்கு இதெல்லாம் தெரியும்’ என்று உளறுவது.

பள்ளிகளின் infrastructure உலக தரத்தில் இருந்து பிரயோஜனமில்லை. அதனால் வேண்டுமானால் பிற பள்ளிகளின் முன் பீற்றிக்கொள்ள அது உபயோகப்படலாம். ஆனால், பள்ளிகளின் மற்ற சகல விஷயங்களும் பக்கா இந்தியத்தனமாகவே (பிற உயிர்களின் மீது கவலையில்லாத தடித்தனம் என்று பொருள் கொள்க) இருக்கின்றன. பள்ளிகள் மட்டுமல்ல. இந்தியாவின் அத்தனை வியாபார ஸ்தலங்களும் அப்படியே. வெளிப்பார்வைக்கு ஒரு ஐரோப்பிய நிறுவனம் போல இருக்கும். ஆனால் உள்ளே பார்த்தால் அடிப்படை வசதி ஒன்றுகூட இருக்காது. அவசர காலத்தில் அடித்துக்கொண்டு சாக வேண்டியதுதான்.

இந்த பலவிதமான தேவையே இல்லாத மேட்டர்களால் அந்தப் பையனுக்கோ நமக்கோ ஒரு பயனும் கிடையாது. ஜாலியாக, ப்ராக்டிகலாக, என்ன தேவையோ அவற்றை மட்டும் படித்து, இளம் வயதை விளையாட்டு மற்றும் படிப்பு என்று சமவிகிதத்தில் கலந்து படித்தாலே போதும். படித்துமுடித்தபின் எது வேண்டுமோ அதனைக் கற்றுக்கொள்ள அந்தப் பையனுக்கோ பெண்ணுக்கோ தெரியும். அதை நாம் முடிவு செய்யத் தேவையில்லை.

என்னைப்பொறுத்தவரை, எங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை இப்போது கஷ்டப்படும் குழந்தைகளைப் போல் அடிமாடாக இருக்காது. ஒரு நிமிடம் கூட நேரம் இல்லாமல் அந்த கிளாஸ் இந்த கிளாஸ் என்றெல்லாம் ஓடிக்கொண்டிருக்காது. குழந்தைகளை ஆட்டு மந்தைகளைப் போல் நடத்தும் பள்ளிகளில் அது சேராது. அதில் நாங்கள் மிகத்தெளிவாக இருக்கிறோம்.

இப்போது நடந்துகொண்டிருக்கும் விபத்துகளைத் தவிர்ப்பது நம் கையில்தான் இருக்கிறது. அடுத்தவன் செய்கிறான் என்பதற்காக யோசிக்காமல் நமது குழந்தைகளை இப்படிப்பட்ட வியாபார ஸ்தலங்களில் சேர்த்துக்கொண்டே இருந்தால், இப்படித்தான் நடக்கும் என்று தோன்றுகிறது. சரி. இப்போது என்ன செய்ய வேண்டும் என்று என்னைக் கேட்டால், முதல் வேலையாக – நீச்சல் பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி, பள்ளியில் அடுக்குவதற்குப் பதில் – பத்மா சேஷாத்ரி பள்ளியின் தாளாளர் திருமதி ஒய்.ஜி. பார்த்தசாரதி மற்றும் நிர்வாகிகள் அத்தனை பேரையும் கைது செய்து கடுமையாக தண்டித்துவிட்டு, இந்தப் பள்ளிக்கே ஒரு பெரிய பூட்டைத் தொங்கவிடவேண்டும் என்று சொல்வேன். இது ஒரு பாடமாக இருக்கவேண்டும். இனிமேல் இப்படிப்பட்ட அலட்சிய மரணங்கள் நேர்ந்தால் சம்மந்தப்பட்டவர்கள் தப்பிக்கவே முடியாது என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கவேண்டும். இந்தப் பள்ளி மட்டுமல்ல. எங்கெல்லாம் இதுபோன்ற அநியாய மரணங்கள் நிகழ்கின்றனவோ அவையெல்லாமே.

அப்போது அதில் படிக்கும் குழந்தைகளின் கதி? அரசு இதற்கு நல்ல முடிவைத் தரமுடியும்.

வாராவாரம் சில குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் செத்துக்கொண்டே இருக்கிறார்கள். நமது குடும்பத்தில் யாரும் இதுவரை அப்படி சாகவில்லை என்பதால் நாமும் ஜாலியாக இந்த செய்திகளைப் படித்துக்கொண்டே லஞ்ச் டைமில் நண்பர்களிடம் பரிதாபப்பட்டுவிட்டு வேலையைப் பார்க்கப்போகிறோம்.

குழந்தைக்குத் தேவை இயல்பான, ஆரோக்கியமான படிப்பும் விளையாட்டும். நமது குழந்தைகள் பள்ளியை முடித்த உடனே சூப்பர்மேனாக ஆகிவிடப்போவதில்லை. ஆகவே, நம்மால் இயன்ற விஷயமாக, இப்படிப்பட்ட பள்ளிகளில் கட்டாயமாக நமது குழந்தைகளின் மீது திணிக்கப்படும் போதிய பாதுகாப்பு வசதியில்லாத விஷயங்களை எதிர்ப்போம். நேராக பள்ளியின் தாளாரையே சந்தித்து இவற்றைப் பற்றி விவாதிப்போம். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்.

எதையாவது – ஒரு சின்ன விஷயத்தையாவது இந்த ரீதியில் ஆரம்பித்து வைப்போம்.

எனக்கு இதுவரை புரியாத ஒரே விஷயம் என்னவெனில் – இப்படிப்பட்ட அநியாய மரணங்கள் நடைபெறும்போதெல்லாம் அதனை எதிர்த்து ஒரு சிறிய குரல் கூட கேட்காததன் மர்மம் என்ன? சம்மந்தப்பட்டவர்களேகூட அமைதியாகி விடுவதன் மர்மம் என்ன? எனக்குத் தெரிந்து குழந்தைகளின் மீதான பாலியல் வன்முறை மிக மிக அதிகம். குழந்தைகளை சூப்பர்மேனாக வளர்க்க விரும்பும் பெற்றோர்கள் இதையெல்லாம் சிந்தித்திருக்கிறார்களா? குழந்தைகளுக்கு பிறரது தொடுகைகளை இனம்கண்டுகொள்ள சொல்லிக்கொடுத்திருக்கிறார்களா? குழந்தைகளை அடுத்தவர்களிடத்தில் exhibit செய்வதை நிறுத்தி, அந்தக் குழந்தைக்கு தேவையான விளையாட்டையும் அடிப்படைப் படிப்பையும் வழங்க முயற்சி எடுத்திருக்கிறார்களா?

புலம்பல் தொடரும் . . .

  Comments

29 Comments

  1. Damn u kolantha… Look what u did. He supposed to write Expendables

    Reply
  2. I will post Expendables 2 either tonight or tomo night

    Reply
  3. எங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை இப்போது கஷ்டப்படும் குழந்தைகளைப் போல் அடிமாடாக இருக்காது. ஒரு நிமிடம் கூட நேரம் இல்லாமல் அந்த கிளாஸ் இந்த கிளாஸ் என்றெல்லாம் ஓடிக்கொண்டிருக்காது. குழந்தைகளை ஆட்டு மந்தைகளைப் போல் நடத்தும் பள்ளிகளில் அது சேராது. அதில் நாங்கள் மிகத்தெளிவாக இருக்கிறோம். – சரியான முடிவு ராஜேஷ்….,

    முற்ப்பது நாற்ப்பது வருசமா இருக்குற அம்மா அப்பாவாள செய்ய முடியாத கத்துக்க முடியாத விஷயத்த சின்ன குழந்தைங்கள கத்துக்க கட்டாயபடுத்துற பெற்றோர்களதான் தூக்கி உள்ளார போடணும் ராஜேஷ்….,

    முதல பசங்கள விளையாட கூட அனுமதிக்காம நாமக்கல் சைடு இருக்குற எல்லா தனியார் பள்ளிகளையும் தூக்கணும்…,

    Reply
  4. “என்னைப்பொறுத்தவரை, எங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை இப்போது கஷ்டப்படும் குழந்தைகளைப் போல் அடிமாடாக இருக்காது. ஒரு நிமிடம் கூட நேரம் இல்லாமல் அந்த கிளாஸ் இந்த கிளாஸ் என்றெல்லாம் ஓடிக்கொண்டிருக்காது. குழந்தைகளை ஆட்டு மந்தைகளைப் போல் நடத்தும் பள்ளிகளில் அது சேராது. அதில் நாங்கள் மிகத்தெளிவாக இருக்கிறோம்.”
    இதை நீங்கள் உண்மையிலேயே நடைமுறைபடுத்துவீர்களானால் உங்கள் பிள்ளைகள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்.

    Reply
  5. //பக்கத்து வீட்டுக்காரர்களிடமும் நண்பர்களிடமும் பீற்றிக்கொள்ள நமது குழந்தை ஒரு product என்பதால், அவர்கள் தினமும் செய்யும் அடிமை வேலையை பெருமையாக எல்லோரிடமும் அளப்பதே. ‘என் பையன் கராத்தே கிளாஸ் போறான். அதுல இருந்து வந்ததும் பரத நாட்டியம். அப்புறம் ஹார்ஸ் ரைடிங். அடுத்த நாள் கம்ப்யூட்டர் கிளாஸ். இந்த வயசுலயே அவனுக்கு இதெல்லாம் தெரியும்’ என்று உளறுவது.

    //

    செருப்படி

    Reply
  6. தல இந்த ஊர்ல இந்த பிரச்சனையெல்லாம் இல்லீன்னாலும், இங்கயிருக்கும் நம்மூர் பொதுஜனங்கள் அந்த கல்ச்சரை இங்கயும் பின்பற்றுவாங்க.

    நான் அஞ்சலிக்கு சொல்லிக்கொடுத்ததெல்லாம் நெட்ஃப்ளிக்ஸுக்கு எப்படி போகனும்னுதான். அதுல எதுனா பிரச்சனையா தல?

    Reply
  7. எனக்கு லிட்டில் மாஸ்டர்ஸ் ஷோ பாக்கணும் நான் போய்ட்டு வாரேன். ஆங்… வேணும்னா சொல்வதெல்லாம் உண்மை பரிமளாவிடம் சொல்லுங்கோ… அவுங்க தங்களோட டி.ஆர்.பி ரேட்டிங்கை ஏத்திக்கட்டும்!

    Reply
  8. I am damn sure she will not be arrested. Leave alone arrest-she will never even be questioned about this incident. Itz all because of the closeness she has with the ruling kings and queens. Even media in print and air will not give much importance to particularly this incident because it happened in “their” people’s establishment. The same group who shouted vehemently against the management of Zion matric school management two weeks ago have not come forward to rise the same slogan against this management. Because everyone knows why. Honest citizen will sure rise his/hand against these prroblems.

    Reply
  9. “என்னைப்பொறுத்தவரை, எங்களுக்குப் பிறக்கப்போகும் குழந்தை இப்போது கஷ்டப்படும் குழந்தைகளைப் போல் அடிமாடாக இருக்காது. ஒரு நிமிடம் கூட நேரம் இல்லாமல் அந்த கிளாஸ் இந்த கிளாஸ் என்றெல்லாம் ஓடிக்கொண்டிருக்காது. குழந்தைகளை ஆட்டு மந்தைகளைப் போல் நடத்தும் பள்ளிகளில் அது சேராது. அதில் நாங்கள் மிகத்தெளிவாக இருக்கிறோம்.”

    முற்று முழுதாக இதே மன நிலை தான் எங்களுடையதும். ஆனால் உண்மை என்னவெனில் நாங்கள் இப்பொழுது வசிக்கும் திருப்பூரில் இப்படிப்பட்ட, குழந்தைகளை குழந்தைகளாக வாழ விடும் பள்ளிகள் கிடையாது. அதைப்போலவே எங்கும் கிடையாது என்பது என் எண்ணம். எனக்குத்தெரிந்து ஊட்டி மேட்டுப்பாளையத்தில் உள்ள சச்சிதானந்தா பள்ளியில் மட்டுமே எட்டாம் வகுப்புவரை 90% விளையாடுவது மட்டுமே படிப்பு, மீதி விளையாட்டினூடே கற்றுக்கொள்வது மட்டுமே என்ற வகையில் செயல்படுவதாக கேள்விப்பட்டுள்ளேன் (உண்மை நிலவரம் தெரியாது).

    நான் ஒரே ஒரு பள்ளிக்கு சென்று பேசி என் குழந்தையை அந்தப்பள்ளியில் சேர்த்தேன். அந்த பள்ளியின் தாளாளர், வெளிநாட்டில் விரிவுரையாளராக வேலை செய்தவர். அவரின் மனைவி சைக்காலஜியில் முதுகலைப்பட்டம் பெற்றவர். அவர்கள் பேசின பேச்சு, இதுதான் நமது ஆதர்ச பள்ளி என்று மகிழ வைத்தது. குசந்தையை பள்ளியில் சேர்த்தவுடன் சிலநாட்களில் “பள்ளிக்கு வரும் பெற்றோரை நன்றாக பேசி கவுத்துவது எப்படி?” என்ற படிப்பில் அவர்கள் பட்டம் பெற்றுள்ளது தெரியவந்தது. ஆனாலும் அந்த பள்ளியைத்தவிர வேறு பள்ளிகளில் நிலைமை இதைவிட மோசம். வேறு பிரபல பள்ளிகளில் எல் கே ஜிக்கு ஒன்னே முக்கால் லட்சம் கட்டணம் (நன்கொடைகள் இல்லாமல்).

    மனோதத்துவத்தில் விருப்பம் உள்ள எனது டாக்டர் நண்பர் ஒருவர் (கோவையில் வசிக்கின்றார்), அவரின் குழந்தைக்கு ஒரு நூறு பள்ளிக்கூடம் சென்று பார்த்திருப்பார், எந்தப்பள்ளிக்கூடமும் நீங்கள் சொன்ன விதத்தில், நாம் விரும்பும் விதத்தில் இல்லை. இறுதியில் அவர் அந்த குழந்தையை அவரின் வீட்டின் அருகில் உள்ள ஒரு மிகச்சிறிய தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிட்டுள்ளார் – அவரின் குழந்தையை படிக்க சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன். அவர் அந்த குழந்தைக்கு தானே நேரம் கிடைக்கும்பொழுது அனைத்தும் சொல்லிக்கொடுக்கின்றார். பொதுவாக அந்த குழந்தையை இயல்பாக, மிகச்சுதந்திரமாக இருக்க விட்டுள்ளார்.

    அந்த குழந்தை தனது எட்டாவது வயதில், ஊட்டி மேட்டுப்பாளையம் முதல் கோவை வரை ரோட்டோரத்தில் உள்ள மரங்கள் எத்தனை, அவற்றின் இனம், வயது, அவற்றால் கிடைக்கும் நன்மைகள், அவற்றை வெட்டுவதால் வரப்போகும் இழப்புகள் பற்றி ஆராய்ச்சிக்கட்டுரையை தயாரித்துள்ளார். அதற்கு டாக்டர் உதவினார்.

    ஆக இந்தக்கால குழந்தைகள் மனோரீதியாக, நாம் குழந்தைகளாக இருந்ததைவிட அதிக ஆற்றலுடன் உள்ளனர். அவர்களை நாம் வாழ்ந்த இளமைக்கால மகிழ்ச்சியில் வாழ விட்டாலே அவர்கள் பெரும் அதிசயங்கள் செய்வார்கள்.

    Reply
  10. ///நான் செய்திகள் படிப்பதோ பர்ப்பதோ இல்லை. இண்டர்நெட்டிலும் கூட, நான் கவனமாகத் தவிர்க்கும் ஒரு விஷயம் அது. சோம்பேறித்தனம் காரணமில்லை. பல காலமாக இங்கு நடக்கும் விஷயங்களைப் பார்த்துப் பார்த்து சோர்ந்துபோய், அறவே செய்திகளின் மேல் உள்ள ஆர்வம் போய்விட்டது. ////

    இது ஒரு எழவெடுத்த தேசம்… கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீயா நானா ல ஒரு பயித்திய கார கும்பல் நாமக்கல இருந்து வந்து பேசுச்சுங்க… கைல மாட்டுனா செம மாத்து மாத்தணும் போல இருக்கும் அவனுங்க பேச்ச கேட்டா… எப்ப டா விசா எளவு கிடைச்சு இந்த ஊர விட்டு போவோம் ன்னு இருக்கு…

    Reply
  11. இந்த மயித்துல, Zion ஸ்கூல் காரன் வேற ஜாதி காரன் அதான் அரஸ்ட் பண்ணாங்க, பத்மா சேஷாத்ரி ஸ்கூல் காரன் பிராமணங்க அதான் இன்னும் ஆக்ஷன் இல்லன்னு ஒன்னு ஓடுது……. கருமம் ….

    Reply
  12. ///ஆனால், பள்ளிகளின் மற்ற சகல விஷயங்களும் பக்கா இந்தியத்தனமாகவே ////

    இன்னும் கொஞ்ச நேரத்து இது நம்ம தேசம் நாம தான் இறங்கி வேல செய்யணும், புடுங்கனும், ஜெய் ஹிந்து, பாரத் மாதா கி ஜெய் ன்னு ஒரு கோஷ்டி வந்து ஓரண்ட இழுக்க போறானுங்க….. எல்லாம் செத்திங்க…….

    Reply
  13. கருந்தேள்,

    சமூகத்தின் (குறிப்பாக தமிழகத்தின்) மீதான உங்கள் ஆதங்கம் மிக நன்றாக எனக்கு புரிகிறது. நமது இந்த நிலைமைக்கு
    காரணம் (மக்களாகிய) நாம் தான். கால ஓட்டத்தில் சற்று பின்னோக்கி செல்லுங்கள்.

    1960களில் திராவிடக் கட்சி, மேல் வர்க்கத்தின் ஆதிக்கத்தை குறைத்து அனைத்து இதர மக்களுக்கு சம உரிமையை
    பெற்றுத்தந்தது வரை ஒரு சரியான சமூக மாற்றப் பாதையில் தமிழகம் செல்ல ஆரம்பித்தது. பெரியார் மற்றும் அண்ணா
    அவர்களின் பெரும்பங்காற்றினர். ஆனால் அவர்களுக்குப் பின் வந்த கருணாநிதியின் சுயநலத்தின் விளைவே இன்றுவரை
    நாம் பார்க்கும் அவலத்திற்கு மிக மிக முக்கியமான காரணம்.

    எம்.ஜி.ஆர் பின்னர் ஜெ.ஜெ இவர்களை ஆட்சிக்கு கொண்டு வந்ததை எந்தக் காரணங்களாலும் ஏற்றுக்கொள்ளவே
    முடியாது. எரியும் கொள்ளியில் எண்ணை ஊற்றியது தான் இவர்களது சாதனை.

    சுமாராக 50 ஆண்டுக்காலம் ஒரு அரசியல்வாதியை (கருணாநிதி) அதுவும் முதல் முறையே ஊழலில் திளைத்த ஒருவரை
    இதுவரை “ராஜ தந்திரி” என்றும், “சாணக்கியர்” என்றும் புகழ்ந்து விட்டு வைத்துக்கொண்டிருக்கும் சமூகத்திற்கு இதுதான் கிடைக்கும்.
    நேரு/இந்திரா/ராஜிவ்/சோனியா/ராகுல்/பிரியங்கா என் ஒரு முடியாட்சியின் தொடர் தான் மத்திய அரசாங்கம். மந்திரிகள் எல்லாம்
    (அதிகம் படித்த) அல்லக்கைகள் தான். பின் பொது மக்களுக்கு வேறு என்ன கிடைக்கும்.

    1960களின் ஜான் எஃப் கென்னெடிக்கு பின் எத்தனை ஜனாதிபதிகள் அமெரிக்காவில்? ஒவ்வொருத்தருக்கும் ஒரு பார்வை நாட்டின் முன்னேற்றத்தின் மேல். என்னதான்
    அமெரிக்காவை உலகத்தின் கயவன் என்று திட்டினாலும் ஒரு அமெரிக்க பொது குடி மகனுக்கு இந்த அளவு மன உளைச்சல் நிச்சயமாக இருக்காது. நமது ஆட்களே
    இவ்வளவு சுகமாக அங்கு வாழ முடிகிறது என்பதே அதற்கு அத்தாட்சி.

    எந்த ஒரு ஊழல் அரசியல்வாதியும் இதுவரை சட்டத்தின் முன் தண்டிக்கப்படவே இல்லை எனும்போது நமக்கு மட்டும் எப்படி நியாயம் கிடைக்கும்?
    ஆக, பொது மக்களாகிய நமது தவறே (இந்த மாதிரியான அரசியல்வாதிகளுக்கு கும்பிடு போடும்) இப்போது நம்மீது தாக்குகின்றது. என்றைக்கு நாம்
    திரைப்பட நடிகர்களை (ரஜினி காந்த்/விஜய்/அஜித்/) நமது “தலைவனாக” பார்க்க ஆரம்பித்தோமோ, அன்றே நமது சமூகம் வீழ்ச்சி அடைய ஆரம்பித்து விட்டது.

    நமது பேரப்பிள்ளை காலத்திலாவது இதற்கு ஒரு மாற்றம் வந்தால் சரி.

    சற்றே இலகுவான மன நிலைக்கு…. இன்று Expendables 2 பார்த்தேன். சரியான பொழுது போக்கு திரைப்படம். ஆரம்ப காட்சிகளின் தொகுப்பு
    பிரமிக்க வைக்கும். 80களின் திரை நாயகர்களை ஒரே திரையில் சரியான அளவில் பயன்படுத்தி இருக்கிறார்கள். Expendables 3 வந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
    The Tomb (Sylvester & Arnold) ற்காக 2013 வரை காத்திருக்க வேண்டும்.

    பின்னர் உரையாடுவோம்.

    சங்கர நா. தியாகராஜன்
    ஆம்ஸ்டர்டாம்/கோயம்பத்தூர்,

    Reply
  14. ராஜேஷ் – மெட்டீரியல் வாழ்க்கை அதாவது நுகர்வுக் கலாச்சாரத்தின் கோரங்கள் தான் மக்களின் இது போன்ற ஆசைக்கும், அழிவுகளுக்கும் காரணம்.

    கிராமங்களில் முருங்கைக்கீரை ரசம் அத்துடன் வாழைப்பூ பொறியல் வைத்து, ஒரு தட்டுச் சோறு சாப்பிட்டு விட்டு, தரையில் விரிப்பொன்றினை விரித்து அடித்து போட்டால் போல தூங்கும் வாழ்க்கைக்கும், இன்றைய நாகரீக மக்களின் வாழ்க்கைக்கும் இருக்கும் வித்தியாசம் தான் எல்லாவற்றுக்குமான விடை.

    Reply
  15. கீதப்பிரியன் பதிவுக்கு வந்து விட்டோமோ…என நினைக்க வைத்த பதிவு.
    ‘பொங்குவதை’ ஜாக்கிரதையாக தொடருங்கள் ராஜேஷ்.
    கலைஞர் ஆட்சியிலிருக்கும்போது…நான் ‘போனில் சொன்னது’ இந்த ஆட்சிக்கும் பொருந்தும்.

    ஆனால் இப்பதிவு நான் எழுத நினைத்து ‘பயந்த பதிவு’.

    என் கோபத்தை ‘கருந்தேளிடம்’ மட்டும் காட்ட முடியும்.
    ஹேராம்….

    Reply
  16. இயம்பிய விதம் நன்று நண்பா…

    அனைத்தக் கொடுமைகளையும் தாண்டிச் செல்ல நம்மவர்கள் கற்றுக்கொண்டு விட்டார்கள்…

    வேறென்ன சொல்ல… 🙁

    Reply
  17. Your war of the rings was simply superb

    Reply
  18. வாழ்த்துக்கள். உங்களுடைய எழுத்து வாசிக்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது. பிரச்சினைகளை பொதுவில் வைத்து விவாதித்தால் தான் அதன் முழு பரிமானமும் தெரியும். எனவே, இயன்ற வரை எழுதுங்கள்.

    Reply
  19. // இந்த மயித்துல, Zion ஸ்கூல் காரன் வேற ஜாதி காரன் அதான் அரஸ்ட் பண்ணாங்க, பத்மா சேஷாத்ரி ஸ்கூல் காரன் பிராமணங்க அதான் இன்னும் ஆக்ஷன் இல்லன்னு ஒன்னு ஓடுது……. கருமம் ….//

    அவாள் மேல கை வைப்பது எளிதான காரியமல்ல.

    Reply
  20. ஒவ்வொரு கலைஞனுக்கும் சமுதாயம் சார்ந்த சிந்தனைகள் அவசியம் என நான் நினைக்கிறேன் … முண்டாசுக் கவிஞன் – மிகச் சிறந்த உதாரணம் … தன் கலையைக் கொண்டு அவன் சில விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியும் …

    தாங்கள் ஒரு மிகச் சிறந்த ஒரு கலா ரசிகர் …
    உங்களுக்கு சமுதாயத்தின் பால் அக்கறையும் அதன் பொருட்டு விளையும் ஆதங்கமும் வெகு இயல்பானதே …
    இது இல்லாமல் இருந்தால்தான் அதில் தவறு …

    சினிமா விசயங்களுக்காக உங்கள் வலைப்பூவிற்கு வருபவர்களின் மேல் இதை திணிக்க விரும்பாவிடில், பேட்மேனைப் போல், வேறொரு பெயரில் வேறொரு வலைப்பூவை கூட ஆரம்பிக்கலாம் … தங்களுக்குத் தெரியாதது இல்லை …

    இது போன்ற பதிவுகளை நான் வரவேற்கிறேன் …

    Reply
  21. ///நான் செய்திகள் படிப்பதோ பர்ப்பதோ இல்லை. இண்டர்நெட்டிலும் கூட, நான் கவனமாகத் தவிர்க்கும் ஒரு விஷயம் அது. சோம்பேறித்தனம் காரணமில்லை. பல காலமாக இங்கு நடக்கும் விஷயங்களைப் பார்த்துப் பார்த்து சோர்ந்துபோய், அறவே செய்திகளின் மேல் உள்ள ஆர்வம் போய்விட்டது. ////

    இது ஒரு எழவெடுத்த தேசம்… கொஞ்ச நாளைக்கு முன்னாடி நீயா நானா ல ஒரு பயித்திய கார கும்பல் நாமக்கல இருந்து வந்து பேசுச்சுங்க… கைல மாட்டுனா செம மாத்து மாத்தணும் போல இருக்கும் அவனுங்க பேச்ச கேட்டா… எப்ப டா விசா எளவு கிடைச்சு இந்த ஊர விட்டு போவோம் ன்னு இருக்கு…
    /////

    Reply
  22. //இந்த மயித்துல, Zion ஸ்கூல் காரன் வேற ஜாதி காரன் அதான் அரஸ்ட் பண்ணாங்க, பத்மா சேஷாத்ரி ஸ்கூல் காரன் பிராமணங்க அதான் இன்னும் ஆக்ஷன் இல்லன்னு ஒன்னு ஓடுது……. கருமம் ….
    //

    ஜேப்பியார், ஜியோன் முதல்வர் விஜயன் போன்றோர் ஜாமீனில் வரமுடியாத சட்டப் பிரிவுகள் மூலம் உள்ளேயே கிடக்க பத்மா சேஷாத்ரி முதல்வர் ஷீலா ராஜேந்திரன் மட்டும் கைதான உடன் ஜாமீன் கிடைத்த மர்மம் என்ன?

    Reply
  23. // ஆனால் உண்மை என்னவெனில் நாங்கள் இப்பொழுது வசிக்கும் திருப்பூரில் இப்படிப்பட்ட, குழந்தைகளை குழந்தைகளாக வாழ விடும் பள்ளிகள் கிடையாது. அதைப்போலவே எங்கும் கிடையாது என்பது என் எண்ணம். எனக்குத்தெரிந்து ஊட்டி மேட்டுப்பாளையத்தில் உள்ள சச்சிதானந்தா பள்ளியில் மட்டுமே எட்டாம் வகுப்புவரை 90% விளையாடுவது மட்டுமே படிப்பு, மீதி விளையாட்டினூடே கற்றுக்கொள்வது மட்டுமே என்ற வகையில் செயல்படுவதாக கேள்விப்பட்டுள்ளேன் (உண்மை நிலவரம் தெரியாது).
    //

    CBSE, IIT, Anna University, MBBS மோகத்தை விட்டுவிட்டால் மாண்டிசோரி, International Baccalaureate போன்ற மாற்று பாடத் திட்டங்கள் கொண்ட பள்ளிகள் கோவை பகுதியில் வந்துள்ளன. இவை மக்கடித்து தேர்வு எழுதுவதைப் புறந்தள்ளி செயல்முறை அறிவு, குடிமைப் பயிற்சி, அன்றாட வாழ்வியல் அறிவு வழங்கும் கல்விக்கு முன்னுரிமை தருப்பவை. அவ்வகைப் பள்ளிகளை தேடிக் கண்டுபிடித்து, தீர விசாரித்து சேர்க்கலாம்.

    Reply
  24. தலைவரே, எந்த குழந்தையும் வீட்டிலேயே பாடம் கற்றுக்கொள்ளவும், அதன் அடிப்படையில் வேலைக்கு போட்டியிடவும் இங்கிலாந்தில் சட்டம் உள்ளது. Your kid does not have to go to a school and can be home educated legally . அது போன்ற திட்டங்கள் இந்தியாவிலும் இருக்ககூடும். விசாரித்து பாருங்கள்.

    Reply
  25. நண்பர்களே… உங்களது விரிவான பின்னூட்டங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். பல மாண்டிசோரி பள்ளிகள் பற்றியும் இங்கே தகவல்கள் வந்துள்ளன. இந்தக் கட்டுரை எழுதியதன் காரணம் இதுபோன்ற சம்பவங்களை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாததே. இந்தியாவில் வாழ்வதற்கே உண்மையில் பயமாக இருக்கிறது. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாததால்.

    Reply
  26. Civic responsibility & Self responsibility, ரெண்டும் இருந்தாலே பாதி பிரச்சன இல்ல என்பது என் கருத்து. இதுக்கு மேல..ஹி…ஹி…..கமென்ட் போட்டா இந்த லிஸ்ட்ல சுளுவா சேர்ந்திடும் சாத்தியக்கூறுகள் இருப்பதால்..அம்புட்டுதான்…..

    // இந்த மாதிரி போஸ்ட் போடுறதால எந்த யூஸும் கிடையாதுன்னும் எனக்கு தெரியும். ஒரு போஸ்டு போடுறது – அதுல வந்து அதை படிக்கிறவங்க பொங்குறது – அவங்களை இன்னொரு நாலு பேடு திட்டுறது – இது போய்க்கிட்டே இருக்கும் //

    Reply

Join the conversation