மரம்மத் முகத்தர் கி கர்தோ மோலா . . .

by Karundhel Rajesh February 9, 2010   Song Reviews

அமெடியுஸ் பட விமர்சனத்தின் இரண்டாம் பகுதியை எழுதுவதற்கு முன்னர், இன்னொரு விஷயத்தை எழுதலாம் என்று நினைத்தேன். இதுவும் இசை சம்மந்தப்பட்ட ஒரு பதிவு தான். மோஸார்ட்டைப் பற்றி எழுதுகையில், நமது ‘மோஸார்ட் ஆஃப் மெட்ராஸ்’ பற்றிய சில எண்ணங்கள் எழும்பின. அவரது ஒரு அருமையான பாடலைக் குறித்து, எனது நண்பர்களுக்கு, அந்தப் பாடல் வெளிவந்த தருணத்தில், அதன் மொழிபெயர்ப்பை அனுப்பி வைத்தேன் (ஆங்கிலத்தில்). அதே பாடலைப் பற்றி, இப்பொழுது தமிழில் எழுதினால் என்ன என்று தோன்றியது. எனவே, இங்கு அப்பாடலைப் பற்றியும், அதன் தமிழ் மொழிபெயர்ப்பையும் கொடுத்திருக்கிறேன். இப்பாடல் நமது நண்பர்கள் அனைவரும் கேட்டிருப்பீர்கள். ஒருவேளை கேட்காமல் இருந்தால், ஹிந்திப்பாடல் என்று ஒதுக்கி விடாமல், ஒரு முறை கேட்டுப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மனித வாழ்க்கை, துயரங்களால் நிரம்பியது. நமது வாழ்வில் எத்தனையோ துயரங்களைச் சந்தித்திருக்கிறோம். ஒவ்வொரு துயரமும், நம்மை மேலும் மேலும் செம்மைப் படுத்துகிறது. கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு, கொடுந்துயரம் அவர்களை வாட்டுகையில், கடவுள் ஒருவரே வடிகால். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, அவர்களது தன்னம்பிக்கையே வடிகால். கொடிய துயரத்தில் சிக்கி அழுது கொண்டிருக்கும் வேளையில், கடவுளின் அருள் வேண்டி இசைக்கப்பட்ட ஒரு நெஞ்சைத் தொடும் பாடலே இது. கடவுள் நம்பிக்கை இல்லாத நண்பர்களும் இதைக் கேட்கலாம்; படிக்கலாம். ரஹ்மானின் மேதமையும் அடக்கமும் பணிவும் வெளிப்படும் ஒரு உருக்கமான பாடல் இது.

இந்தப் பாடல் இடம்பெற்ற படம், டெல்லி – 6. பாடலின் பெயர், ‘அர்ஸியா(ன்)’ .இந்தப் பாடலை, இதோ இந்தச் சுட்டியில் தரவிறக்கிக் கொள்ளலாம் (டவுன்லோட்).

இப்பாடலைக் கேட்கும் நண்பர்கள், எந்தவித இடையூறும் இல்லாமல், தனிமையில், ஹெட்ஃபோன்களின் உதவியோடு கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதோ பாடலின் தமிழ் மொழிபெயர்ப்பு.

‘என்னுடைய எல்லாக் கோரிக்கைகளையும் எனது முகத்தில் எழுதிக்கொண்டு வந்திருக்கிறேன் . . .
உன்னிடம் எதைக் கேட்பேன் நான். . நீயாகவே எல்லாவற்றையும் புரிந்துகொள் எனது இறைவனே . . .

என்னுடைய இறைவனே . . .கடவுளே. .

நெற்றி முழுவதும் கவலைக் கோடுகள் இறைவா . . .
எனது விதியைச் சரி செய் இறைவா . . .
எனது கொடுந்துயரத்தை மராமத்து செய் கடவுளே . .

உனது வாயிலில் நான் வணங்குகிறேன் . .விழுகிறேன் . .விழுந்து எழுகிறேன் . .
எனது விதியைச் சரி செய் இறைவா . . .

எவரெல்லாம் உனது வாயிலுக்கு வருகிறார்களோ . . எந்தத் தலைகள் அங்கு வந்து வணங்குகின்றனவோ. .
அவர்கள் ஆனந்தத்தில் ஆடிக்கொண்டு அனைவரின் முன்னரும் தோன்றுகின்றனர் . .

எவரெல்லாம் தாகத்தோடு உன்னிடம் வருகின்றனரோ,
அவர்கள் ஒரு நதியையே திரும்பக் கொண்டு செல்கின்றனர் . .
உன் அருளின் ஒளியில் அவர்கள் நீந்திக் கரையேறுகின்றனர் . .

கடவுளே . .என் இறைவா . .

ஒரு நறுமணம் எங்கிருந்தோ கமழ்ந்தது . .
அதன் தேடலில் நான் அலைந்தேன் . .தொலைந்தேன் . .
அது ஒரு மிருதுவான மாயை . .நான் அதிர்ந்தேன் . .பயந்தும் போனேன் . .
எப்பொழுது உனது இடத்துக்கு வந்தேனோ . .
அப்பொழுதுதான் நான் உண்மையை அறிந்து கொண்டேன் . .
அந்த நறுமணம் என்னுள் இருந்தே வந்தது . .
நீயே தான் எனக்கு இதைப் புரிய வைத்தாய் . .

இறைவனே . . எனது கடவுளே . .

நெற்றி முழுவதும் கவலைக் கோடுகள் இறைவா . . .
எனது கொடுந்துயரத்தை மராமத்து செய் கடவுளே . .

துண்டுதுண்டாகச் சிதறிப்போவது எனக்கு நன்றாகத் தெரியும் . . எத்தனையோ முறை அவ்வாறு சிதறியிருக்கிறேன் . .
இல்லையெனில், உனது பிரார்த்தனையில் என்னையே இழக்கவும் தெரியும் . .
உனது நினைவிலேயே என்னை எப்பொழுதும் இருக்க விடு . . இதைத்தாண்டி நான் எங்கும் செல்லவே மாட்டேன் . .
நீயுமே என்னைக் கைவிட்டு விட்டால், நான் முற்றிலுமாகச் சிதறுண்டு விடுவேன் . .
என்னால் மீண்டு எழவே இயலாது . .

கடவுளே . . இறைவனே . .

தலை நிமிர்ந்து கர்வத்துடன் எத்தனையோ ஆசைப்பட்டிருக்கிறேன் . .
எத்தனைக் கனவுகள் இதுவரை கண்டிருக்கிறேன் . .
எத்தனை முறை முயன்றிருப்பேன் . .
ஆனால் . .
நீ எப்பொழுது முழுமையாக என்முன் வந்தாயோ. .
அப்பொழுது உன்னைக் கண்கொண்டு என்னால் பார்க்க இயலவில்லை . .
அந்தப் பொழுதில், உன் முன் தலைவணங்கிய அந்த நொடியில், என்னால் அடைய முடியாதது என்ன?

கடவுளே . .எனது இறைவா . .

எனது இறைவன் வீடு வந்து விட்டான் . . .

இறைவா . . .இறைவா . . . ‘

அற்புதமான சூஃபி இசையின் வெளிப்பாடே இந்தப் பாடல். ஒருமுறை கேட்டாலே போதும்; நம்மை மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் ஒரு அற்புதமான பாடல் இது. இதன் வரிகளை எழுதியவர், ப்ரசூன் ஜோஷி.

கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்; ஒரு இரவு வேளை. அனைத்து இசைக் கருவிகளும் தயாராக இருக்கின்றன. அங்கு ரஹ்மான் தோன்றுகிறார். இசை மெல்லப் பரவத் துவங்குகிறது. இந்தப் பாடல் மெல்ல மெல்ல உருவாகிறது. . இப்படிப்பட்ட ஒரு நொடியில், இந்த வரிகளை முழுவதும் புரிந்து கொண்ட ரஹ்மானின் மனம் எந்த நிலையில் இருந்திருக்கும்?

‘அன்பைத் தேர்ந்தெடுத்ததால் தான் நான் இன்று இந்த நிலையில் இருக்கிறேன் . .எல்லாப் புகழும் இறைவனுக்கே’ – என்று, மிகவும் பக்குவப்பட்ட ஒரு மனம் தான் சொல்ல முடியும். அந்த மனதிற்குள் இருக்கும் இசை மேதமையின் உச்சபட்ச வெளிப்பாடே இந்தப் பாடல் என்று தயங்காமல் சொல்வேன்.

ரஹ்மானின் இசையில், மேலும் இரண்டு சூஃபி பாடல்கள் உள்ளன. அவர் முதன்முதலில் இசையமைத்த சூஃபி பாடலான ‘பியா ஹாஜி அலி’ என்ற பாடலும் (படம்: ஃபிஸா), ஜோதா அக்பரில் வரும் ‘க்வாஜா மேரி க்வாஜா’ (கரீப் நவாஸ்) என்ற பாடலுமே அவை. இந்த மூன்று பாடல்களையும், தனிமையான ஒரு வேளையில், ஹெட் / இயர்ஃபோன்களின் உதவியோடு கேட்டுப் பார்க்குமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அந்த இரண்டு பாடல்களையும் மொழிபெயர்க்கிறேன். பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

  Comments

62 Comments

  1. நண்பரே,

    இந்த இரவின் சில துளிகளை ஆனந்தமாக மாற்றியதற்கு நன்றிகள். அற்புதமான மொழிபெயர்ப்பு. இரவின் மெல்லிய காற்று எடுத்து வரும் ஒரு முகமறியா மலரின் நறுமணம் போல் தாக்கியது உங்கள் பதிவு.

    //ஒரு நறுமணம் எங்கிருந்தோ கமழ்ந்தது . .
    அதன் தேடலில் நான் அலைந்தேன் . .தொலைந்தேன் . .
    அது ஒரு மிருதுவான மாயை . .நான் அதிர்ந்தேன்// அருமை, அருமை..

    மற்றைய பாடல்களையும் நீங்கள் மொழி பெயர்த்தால் என்னால் அவற்றை புரிந்து ரசிக்க முடியும். இதைப் போன்ற நல்ல பாடல்களை தயங்காது மொழி பெயர்த்து எங்களை இன்பக் கடலில் மூழ்கடிக்க வேண்டுகிறேன்.

    சிறப்பான பதிவு.

    Reply
  2. @ காதலரே – உங்கள் இரவு இந்தப் பதிவால் ஒரு கணம் இனிமையாக மாற்றப்பட்டதை எண்ணி மகிழ்ச்சி. கட்டாயம் மற்ற அருமையான பாடல்களையும் மொழிபெயர்க்கிறேன். . உங்கள் அன்புக்கு எனது நன்றி . .

    @ சூர்யா – :–) . . தாங்கீஸ் . . 🙂

    @ தமிழினியன் – என்னால் முடிந்தவரை இதைப் போன்ற நல்ல பாடல்களை இங்கு வெளியிடுகிறேன் . .மிக்க நன்றி நண்பா . .

    Reply
  3. நல்ல மொழிபெயர்ப்பு.நல்ல பாடல். பலமுறை கேட்டிருக்கிறேன்.ஆனால் இப்போது அதை உணர முடிகிறது.நன்றிகள் பல.

    Reply
  4. சூப்பர் தல, நானும் சூஃபி இசை ஒரு அறிமுகம் என்றூ எனக்கு தெரிந்தவறை எழுதியுள்ளேன். மிக அற்புதமான பாடலகள் இவை. தொடர்ந்து எழுதுங்கள், இசை பற்றி.

    Reply
  5. @ அண்ணாமலையான் – ரைட்டு ரைட்டு . . 🙂

    @ மயில் – இதைப்போலவே மற்ற இரு பாடல்களும் மிகவும் அருமையானவை. . .அதையும் சீக்கிரம் எழுதுகிறேன் . .

    @ முரளிகுமார் – ஓ நீங்களும் எழுதியிருக்கீங்களா . .சூப்பர் . .இதோ படிச்சிர்றேன் . .:-)

    Reply
  6. அன்புள்ள ராஜேஷ்… நல்ல பதிவு. உருக்கமாக இருக்கிறது. நன்றி.

    Reply
  7. பாடல் மிக அருமை.
    போட்டுட்டோம்ல… ஓட்டு ஓட்டு ..போட்டுட்டோம்ல 😉

    Reply
  8. @ ஷ்ரீ – ஆஹா . .நீங்க மொத்த இண்டர்நெட்லயும் முதன்முதல்ல தமிழ்ல எழுதினது நம்ம சைட்டுல தான் . .வாரே வாஹ் . .பின்னிட்டீங்க போங்க . .

    @ ரகுநாதன் – அது !! அங்க நிக்குறீங்க . .:-)

    Reply
  9. தொடர்ந்து வந்துட்டு தான் இருந்தேன் பின்னோட்டம் தான் போடல…,

    சாரு ஆன்லைன்ல உங்க லின்க் கொடுத்து இருக்கார் பாத்திங்களா…,

    Reply
  10. Anonymous

    I fell the same from when i hear this song very first time. Thank u very much for your sharings. Excellent article.

    -G

    Reply
  11. ஹ்மானின் இசையில், மேலும் இரண்டு சூஃபி பாடல்கள் உள்ளன//

    :O நிறைய சுபி பாடல்கள் உள்ளன . இவை கவ்வாலி வகையில் வருபவை ( கொஞ்சம் கவாலி பார்மேட்டை மீறியதாக சொல்லலாம்) என்னுயிரே என் ஆருயிரே கூட சுபி தான் அது போல் இன்னும் பல பாடல்களும். ( உதாரணம் சோனுவின் பேட்டியில் அவர் தான் பாடிய புடித்த சுபி பாடலாக து ஹி துவை சொல்லியிருப்பார் ) எனக்கு மிகவும் பிடித்த சரியான கவ்வாலி முறையில் ஆழமாக இருக்கும் பாடல் பியா ஹாஜி அலி. நல்ல இடுகை . ( பாகிஸ்தானிய இசையை பற்றி எழுத வெகு நாளாக ஆசை , யாரேனும் எனக்கு முன் உருப்பிடியாக எழுதினால் படித்து கொள்ள ஆசை )

    Reply
  12. Anonymous

    excellent writing and feelling, just continue u r job dont look comments.because persons like me will read and enjoy only.

    Reply
  13. இந்த பாடல் அர்த்தம் புரியாமலே பலமுறை ரசித்துள்ளேன்..உருக்கும் பாடல்..படமும் நன்றாக தான் இருக்கும்..

    Reply
  14. Anonymous

    அருமையான பதிவு நண்பரே!!!! மற்ற இரண்டு பாடல்களின் மொழிபெயர்ப்புகளையும் விரைவில் எதிர்பார்கிறேன்

    “கடவுள் நம்பிக்கை இருப்பவர்களுக்கு, கடவுள் ஒருவரே வடிகால். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, அவர்களது தன்னம்பிக்கையே வடிகால்”

    அருமையான/உண்மையான வரிகள். இரண்டையும் இழந்தவன் வாழ்வது மிக கடினம்.

    ஷா

    Reply
  15. தல சூப்பர் பதிவு தல… க்வாஜா க்வாஜா பாட்டை கேட்டுருக்கேன்… சான்ஸே இல்ல… இன்னும் எழுதுங்க பாஸ்

    Reply
  16. எனக்கு பிடித்த பாடல்கள் உங்களுக்கு பிடித்து அதை சிலாகிக்கும்போது, அப்பப்பா ……

    Reply
  17. நண்பா அருமையான தமிழாக்கம்,அமைதியான இரவுப்பொழுதில் படிக்க ஏற்றது.இசைப்புயலுக்கு அருமையான் குரல் வளம் உண்டு,ஜோதா அக்பரில் ராக ஆலாபனை மிக அருமையாயிருக்கும்.தொடர்ந்து மொழி பெயர்த்து எழுதுங்கள்.நண்பா.ஃபார்மாலிட்டி டன்.

    Reply
  18. மோலா மேரே மோலா என்ற பாட்டுக்கூட இந்த வகையில் வரும் என நினைக்கிறேன்… கேட்டுப்பாருங்க தல… ஆர்கே ராத்தாடு குரலில் உயிரைஉலுக்கும் பாடல்… முடிந்தால் இதையும் மொழிபெயருங்கள்

    http://www.youtube.com/watch?v=PsSNR9UQ67I

    Reply
  19. Anonymous

    Hi ,

    Superb post. Please translate the two songs you mentioned here as well as the one i mention here. Please listen “Zikr” from Netaji Subhas Chandra Bose. One more master piece from Mozart of Madras.

    Harris

    Reply
  20. @ பேநா மூடி – ஆமாம் . .தலைவர் சாருவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் . .இதை நான் எதிர்பார்க்கவில்லை . .

    @ G – நன்றி . .இனிமேலும் வருக . .

    @ Prakash – அது வேறொன்றுமில்லை . .இந்த மூன்று பாட்டுகளைப் பற்றி எழுத வேண்டுமென்பதற்காக இந்தப் பதிவை ஆரம்பித்தேன். . அதனால்தான், இந்த வரிசையில் மேலும் இரண்டு பாடல்கள் உள்ளன என்று சொல்லுவதற்காக அப்படிச் சொன்னேன் . .தல ரஹ்மான் கவ்வாலி மற்றும் சுபி பாடல்களில் வித்தகராயிற்றே . .:-) நன்றி . .

    @ அனானி – கவலையே வேண்டாம் . . கமேன்ட்டுகளுக்காக அல்ல . .நல்ல இடுகைகள் மேலும் எழுதுவேன் . . நன்றி ..

    @ D.R Ashok – வாருங்கள் . .தல சாருவுக்கு நன்றிகள் பல. . 🙂

    @ வினோத் கெளதம் – ஆமாம் . . படமும் ஒரு நல்ல படம் . .பாடல்களும் தான் . .சூப்பர் !! நன்றி . .

    @ ஷா – விரைவிலேயே மற்ற பாடல்களையும் எழுதுவேன் . .சீக்கிரமே எதிர்பாருங்கள் . .:-)

    @ நாஞ்சில் பிரதாப் – அந்த மோலா பாட்டு எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டுகள்ள ஒண்ணு . . கவலையே படாதீங்க சீக்கிரமே எழுதிருவோம் . . 🙂

    @ வேலூர் ராஜா – நன்றி . . அடிக்கடி வாருங்கள் . . கருத்துகளை இடுங்கள் . .

    @ கார்த்திகேயன் – நன்றி நண்பா . .ஆமாம்.. இரவுகளில் இந்தப் பாடல்களைக் கேட்டால், பின்னிவிடும் . .அந்த ஆலாபனையில் மனிதர் பட்டையைக் கிளப்பியிருப்பார் . . 🙂

    @ Harris – அந்த நேதாஜி பாடலைக் கண்டிப்பாகக் கேட்கிறேன் . .சீக்கிரமே மற்ற இரண்டு பாடல்களையும் இங்கு நீங்கள் பார்க்கலாம் . . நன்றி . .

    Reply
  21. Anonymous

    இறைவனின் பிரசன்னத்தை உணர்த்தியது இப்பாடல் வரிகள்… கண்களில் நீர்ததும்பும் நன்றிகள்!

    Reply
  22. நண்பரே . . எனது நன்றிகள் உங்களுக்கு . . மிகவும் சரி . .இறைவனின் பிரசன்னம் இப்பாடலில் எந்த வரியிலும் பிரதிபலிக்கும் . . உங்களது கண்ணீர்த்துளிகள் அவனது வருகையை உணர்த்துகின்றன . . உங்கள் உணர்ச்ஹ்சி எனக்கு நன்றாகப் புரிகிறது . . நன்றி ..

    Reply
  23. Anonymous

    Thanks Friemd

    Reply
  24. Anonymous

    Dear Friend,
    Could you please give the link to the English Translation of the song ?

    Thanks

    Reply
  25. அருமையான மொழி பெயர்ப்பு.
    மிக்க நன்றி. மற்ற இரு பாடல்களின் மொழி பெயர்ப்பை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்..

    Reply
  26. மொழிபெயர்ப்புக்கு நன்றி!

    Reply
  27. Anonymous

    சாரு உங்களின் பதிவிற்கு லின்க் கொடுப்பதிற்கு நீங்கள் போன பிறவியில் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.கத்துக்குட்டிகளாகிய வலைப்பதிவர்களை தட்டிக்கொடுக்கும் சாருவின் பரந்த மனதை நினைத்து எனக்கு கண்கள் குளமாகிறது.—கடப்பாரை கந்தன்

    Reply
  28. நல்ல பகிர்வு, அறிமுகம் செய்த சாருவிற்கு நன்றி.

    – பொன்.வாசுதேவன்

    Reply
  29. @ ஸ்ரீநிவாசன் – சீக்கிரமே மற்ற பாடல்களும் போஸ்ட் செய்யப்படும். . மிக்க நன்றி . .:)

    @ பாபு – கருத்துக்கு நன்றி பாஸு . .

    @ கடப்பாரை கந்தன் – சாரு ஒரு நல்ல நண்பர் . . ஆனாலும் அவர் லிங்க் கொடுத்தது ஒரு ஆச்சரியம். . 🙂 நீங்கள் சொன்னது சரி தான் . .

    @ அகநாழிகை – நாம் சந்தித்திருக்கிறோம் . திருவண்ணாமலையில் பாவாவின் வீட்டுக்குச் சாரு வந்தபோது அவருடன் வந்தவன் தான் நான் . .நினைவிருக்கிறதா? 🙂 உங்களை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது . . 🙂

    @ துளசி கோபால் – இது அலறலா இல்ல ஆச்சரியமா. . கறுப்புப் பூனை வேற . .பயமா இருக்குங்க . . 🙂

    Reply
  30. Hi,

    I have really enjoyed the song which you introduced with translation.
    From my heart, thanks to you and charu.
    -senthil.

    Reply
  31. செந்தில் – உங்கள் நன்றிக்கு மிக்க நன்றி . .சாருவுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் . . நன்றி சாரு . .

    Reply
  32. Anonymous

    Hi,

    In my opinion
    “Maula Mere Maula” from Anwar is better than ARR’s.
    There are other songs from Anwar like, “Javeda Zindagi” and “Jo Maine Aas Lagayi” which gives the same experience.

    Thanks for the post.

    -Hidha

    Reply
  33. ஹாய் ஹிதா,

    மௌலா மேரே மௌலா – அன்வர் – ஒரு மிக நல்ல பாடல். நீங்கள சொல்வது சரியே .. . இன்னமும் நிறைய பாடல்கள் உள்ளன. ஆனால், நான் ரஹ்மானின் இந்த மூன்று பாடல்களைப் பற்றி மட்டும் முதலில் எழுதலாம் என்றே ஆரம்பித்தேன் . . சீக்கிரமே, முடிந்தால் மற்ற பாடல்களைப் பற்றியும் பார்ப்போம் . . உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி . .

    Reply
  34. Anonymous

    Can you please translate some tamil songs to suffi….s

    Reply
  35. சதிஷ்

    சூபி இசை மற்றும் அலறும மேற்கத்திய இசையோடு மட்டும் தன்னை பூட்டி கொள்ளாமல் நாட்டுப்புற இசையிலும் (பருத்தி வீரன் போன்று சுப்ரமணியபுரம் போன்று)அவர் ஈடுபட வேண்டும் என்பது என் விருப்பம்

    Reply
  36. Anonymous

    azhagu.. vanila

    Reply
  37. @ குரு – பியா ஹாஜி அலி எழுதியாயிற்று . .க்வாஜா இன்று பப்ளிஷ் செய்யப்படும். . அந்த லிங்க் பார்த்தேன் . .மிக்க நன்றி . .

    @ அப்துல் கயூம் – அதுதான் ரஹ்மானின் அற்புதம். அவரது எல்லாப் பாடல்களிலும் அவர் தனது ஜீவனைக் கரைப்பதால் இது நிகழ்கிறது . . நன்றி . .

    @ அனானி – தமிழ்ப்பாடல்களை உர்தூவிலோ அல்லது சூபி வாழ்வுமுறைக்கு ஏற்ப மொழிபெர்ப்பதற்கோ எனக்கு அறிவு பற்றாது. அது ஒரு கடல். நான் ஒரு அற்ப புழு. உர்தூ எனக்கு எழுதப் படிக்கத் தெரியாது. மன்னிக்கவும்.

    @ சதீஷ் ௦- நீங்கள் சொல்வது சரியே . அவர் சீக்கிரமே ஒரு மாறுதலுக்காக பக்கா கிராமத்துப் படங்களுக்கு இசையமைப்பார் என்றே நினைக்கிறேன் . . அது நடந்தால் ல்னன்றாக இருக்கும். நன்றி. .

    @ வானிலா (அல்லது வெண்ணிலா?) – மிக்க நன்றி . .

    Reply
  38. Anonymous

    super pathivu…. konjam late than padithen…

    intha pathivayum unga left hand la than ezhuthinangala…!

    nandri….

    –jeba

    Reply
  39. மிக்க நன்றி ஜெபா . .ஆமாம் . . என்னோட லெப்ட் ஹான்ட்ல தான் எழுதினேன் . .:–) லெப்ட் தான் எனக்கு ரைட் . .:–) . . அடிக்கடி வாங்க . . .

    Reply
  40. Thank you so much friend, this is the only song which i hear every single day

    Reply
  41. magesh

    neenga ivlo anayse pandrathala. inta paatum keatu parunga bhangari marori from water. kandipa 100 vati mela keapinga theal!!!!

    Reply
  42. Beautiful translation Rajesh 🙂 Fitting tribute to a gem.

    Reply
    • Rajesh Da Scorp

      Thank you Umesh :-). All credits go to Rahman

      Reply

Join the conversation