ஜேம்ஸ் கேமரோனும் ஸிட் ஃபீல்டும்

by Karundhel Rajesh July 30, 2012   English films

ஜேம்ஸ் கேமேரோனை எனக்குப் பிடிக்கும். காரணம் என்னவென்று இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்வீர்கள். சென்ற வாரம் கோவை சென்றிருந்தபோது நண்பன் பாலுவுடன் ஒரு மாலை நேரத்தில் மிக நீண்ட விவாதம் ஒன்று கேமேரோனைப் பற்றி ஓடியது. கேமேரோன் மட்டுமல்ல.  அந்தக் கட்டுரையில் கேமேரோன் டெர்மினேட்டர் 2 படத்திற்குப் பின் வந்த மூன்றாம் பாகத்தை நிராகரித்தது பற்றி நான் எழுதியிருந்தேன் அல்லவா? அது பற்றியும், நோலன் தனக்குத்தானே வெட்டிக்கொண்ட குழியாகிய The Dark Knight Rises பற்றியும். ஜேம்ஸ் கேமரோனை நினைக்கும்போதெல்லாம் நோலனின் எண்ணமும் தவறாமல் எனக்குத் தோன்றுகிறது. இருவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.அதேபோல் குறிப்பிடத்தகுந்த பல வேற்றுமைகளும் உண்டு. கேமிரோன் படங்களை எடுக்கும் விதம் பற்றி நண்பர்களுடன் விவாதிக்கலாம் என்று நினைத்தேன். அதனால்தான் இந்தக் கட்டுரை. இதில் சொல்லப்படப்போகும் பாயிண்ட்கள் பற்றி நண்பர்களும் பின்னூட்டங்கள் இடலாம். இது ஒரு சுவாரஸ்யமான விவாதமாக நகர்ந்தால் அட்டகாசமாக இருக்கும்.

முதலில் ஜேம்ஸ் கேமரோனின் திரைக்கதை முறைகளைப் பற்றிப் பார்க்கலாம்.

ஜேம்ஸ் கேமரோனின் அத்தனை படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். இன்னும் பல நண்பர்களும் பார்த்திருக்கலாம். இந்த அத்தனை படங்களிலும் பொதுவான ஒரு அம்சம் உண்டு. அந்த அம்சம்தான் அவரது படங்களை அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகெங்கும் மெகா ஹிட்களாக ஆக்கியிருக்கிறது என்பது என் கருத்து. அந்த அம்சம்தான் அவரது படங்களைப் பிற இயக்குநர்களது படங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, கேமரோனின் படங்களில் இடம்பெறும் அதே விதமான action காட்சிகள் – ஏன் – அவற்றுக்கும் மேலான அதிரடி action காட்சிகள், மைக்கேல் பே, ஜார்ஜ் காஸ்மடாஸ் (Tombstone ,Rambo part  2), ஜான் மெக்டியர்னன் (Die Hard), ரோலான்ட் எமரிக் (2012, Godzilla, Independence Day) போன்ற இயக்குநர்களின் படங்களில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அவற்றைவிட ஒரு Aliens, ஒரு Terminator, ஒரு True Lies எப்படி நமது நினைவுகளில் பசுமையாகத் தங்கியிருக்கிறது?

ஜேம்ஸ் கேமரோன் ஒரு self made இயக்குநர். நம்மூர் மணிரத்னம், ராம்கோபால் வர்மா போல. ஒரு ட்ரக் டிரைவராக தனது வாழ்க்கையைத் துவங்கிய கேமரோன், எப்படி நம்மால் மறக்க இயலாத ஒரு இயக்குநராக மாறினார்? அவரது அயரா உழைப்பு,  முனைப்பு, அது இது என்று டெம்ப்ளேட் காரணங்கள் பலவற்றை நாம் சொல்லக்கூடும். அவையும் உண்டுதான். ஆனால் அவற்றைவிடவும் ஜேம்ஸ் கேமிரோனின் வெற்றிக்குக் காரணம் இன்னொன்று என்று எனக்குத் தோன்றுகிறது. அவரது படங்களில் நான் கவனித்த அந்த ஒரு விஷயமே என்னைப்பொறுத்தவரை கேமரோனை ஒரு டாப் டக்கர் இயக்குநராக உயர்த்தியிருக்கிறது.

ஒரு உதாரணம். ஜேம்ஸ் கேமரோனின் Aliens படத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்தப் படத்தின் கதாநாயகியின் பெயர் எல்லன் ரிப்ளி (ஸிகோர்னி வீவர்). இதற்கு முந்தைய பாகமான Alien(ரிட்லி ஸ்காட்) படத்தில், இந்த ரிப்ளி, இவளது கண்முன்னர் இவளது விண்கப்பலில் இருந்த அத்தனை பேரும் ஒரு ஏலியன் ஜந்துவினால் கொல்லப்பட்டதைப் பார்த்திருக்கிறாள். அந்த ஜந்துவைக் கொன்றுவிட்டு பூமிக்கு அவள் திரும்புவதோடு அப்படம் முடிகிறது. அதிலிருந்து துவங்கும் இந்த இரண்டாம் பாகத்தின் கதையும் கிட்டத்தட்ட அதேதான். இம்முறை அந்தப் பழைய கிரகத்துக்குச் செல்லும் குழுவினரோடு பயணிக்கும் ரிப்ளி, ஏலியன்களின் தாக்குதலுக்கு மறுபடியும் ஆளாகிறாள். அவளுடன் இருக்கும் குழுவினரில் பலரும் கொல்லப்படுகின்றனர். ஆனால், வழக்கப்படி இறுதியில் ரிப்ளி வெல்கிறாள்.

இவ்வளவு டெம்ப்ளேட்டான இந்தக் கதையுடன் கூடிய இப்படம், முந்தைய பாகத்தைப் போலவே பெருவெற்றி அடைந்தது. ஆனால் என்னைப்பொறுத்தவரை, முதல் பாகத்தை விட இந்தப் பாகத்தில் விறுவிறுப்பு மிக அதிகம். கூடவே, கேமரோனின் மந்திர ஃபார்முலா. அந்தப் ஃபார்முலாதான் இந்தப் படம் வெல்வதற்கே காரணம் என்பது என் கருத்து.

இந்தப் படத்தின் க்ளைமேக்ஸ் நினைவிருக்கிறதா? பிஷப் என்ற ரோபோவை வில்லனான ஏலியன் (உண்மையில் இது ஒரு பெண் ஏலியன்) பிய்த்து வீசிவிடுகிறது. அப்போது கொஞ்ச நேரம் ரிப்ளியைக் காணவில்லை. திடீரென்று, பிரம்மாண்டமான ஒரு மெஷினின் மீது ஏறிக்கொண்டு, ஆக்ரோஷமாக ரிப்ளி கத்திக்கொண்டே இந்த ஏலியனைத் தாக்குவாள். அதுதான் படத்தின் க்ளைமேக்ஸின் ஹைலைட். திடும் திடும்மென அந்த மிஷினை ரிப்ளி இயக்கிக்கொண்டு அந்த ஏலியனின் மீது பாய்கையில் திரையரங்கில் கட்டாயம் விசில் தூள் பறந்திருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை.
ரிப்ளி என்ற அந்தப் பெண் கதாபாத்திரத்தின் மீதே இப்படம் முழுக்க நமது கவனம் குவிந்திருக்கும். முதல் பாகத்தின் நிகழ்வுகளால், இந்த ரிப்ளி ஏலியன்களைக் கண்டு பயந்தே இருப்பாள். அப்படிப்பட்ட ரிப்ளி ஆவேசமாக இந்த ஏலியனைத் தாக்கி துவம்சம் செய்ய என்ன காரணம்?


“எனது படங்களின் ஆடியன்ஸை ஏமாற்றுவது எனக்குப் பிடிக்கும். படம் முடிந்தது என்று ஆடியன்ஸ் நினைக்கும்போது, சடாரென்று அவர்களின் கழுத்தைப் பிடித்துத் திருப்பி, அவர்கள் நினைத்தே பார்க்காத ஒரு புதிய கோணத்தை அவர்களின் கண்கள் முன்னே விரியவிடுவதே என் பாணி. என் கூடவே அவர்களை அழைத்துச் சென்று, அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவர்களின் பின்புறத்தில் ஓங்கி ஒரு உதை விடுவேன். இதுவரை வந்திருக்காத ஒரு புதிய இடத்துக்கு அந்த உதை அவர்களைக் கொண்டுசெல்லும். அப்போது அந்த அனுபவம் அவர்களால் மறக்கவியலாத உணர்வுபூர்வமானதொரு அனுபவமாக மாறிவிடுகிறது”
– ஜேம்ஸ் கேமரோன்.

உணர்வுபூர்வமான ஒரு அனுபவத்தை ஆடியன்ஸுக்குக் கொடுப்பதே ஜேம்ஸ் காமேரோனின் மந்திர ஃபார்முலா. அப்போது சாதாரண action என்பது உணர்வு கலந்த ஒரு நிலைக்கு ஏற்றம் பெற்றுவிடுகிறது. நமது ஸிட் ஃபீல்ட் அடிக்கடி refer செய்யும் Collateral திரைப்படம் இப்படிப்பட்டதுதான்.

ஒரு ஹீரோ – ஒரு வில்லன். இருவருக்கும் இடையே சண்டை என்பது ஒரு நிலை. அதுவே, ‘இந்த ஹீரோ நமது மனதைத் தொட்டவன் ஆயிற்றே? அவன் அடிவாங்கும்போது நமக்குக் கண்ணீர் வருகிறதே? அவன் இறந்துவிடக்கூடாதே?’ என்று ஆடியன்ஸ் பதைபதைத்துக்கொண்டே அந்தச் சண்டையைப் பார்ப்பது வேறொரு நிலை.

இந்தப் பதைபதைப்பை ஆடியன்ஸின் மனதில் எந்த இயக்குநர் உருவாக்குகிறாரோ, அவரது படங்கள் பெருவெற்றி அடைகின்றன.பதைபதைப்பு என்பது வெறுமனே அந்த நிமிடத்தில் தோன்றி அடுத்த நிமிடத்தில் மறைந்துவிடும் வகையானது அல்ல. படம் முடிந்தபிறகும் அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்தை நம்மை நினைத்துக்கொண்டே இருக்க வைக்கிறதே – அந்த வகையைச் சேர்ந்தது. இந்த உணர்ச்சிமயமான மனநிலையை ஆடியன்ஸிடம் உருவாக்குவதில் கைதேர்ந்தவர் ஜேம்ஸ் கேமரோன். அவரது ஒவ்வொரு படத்திலும் இது பளிச்சிடும். அதற்கான உதாரணங்களை இனி பார்ப்போம்.

அதற்கு முன்பாக, நமது ஸிட் ஃபீல்ட் எழுதியிருக்கும் இன்னொரு அட்டகாசமான புத்தகத்தின் பெயர் – Four Screenplays. இதில், Silence of the Lambs, Terminator 2: Judgement Day, Thelma & Louise, Dances with Wolves ஆகிய நான்கு படங்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு படத்தின் திரைக்கதையையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்திருக்கிறார் ஸிட்.  அவரது Screenplay புத்தகத்தை விடவும் மிகச் சுவாரஸ்யமான புத்தகம் அது. அதில், ஜேம்ஸ் கேமரோனின் பேட்டி ஒன்று உள்ளது. பிரத்யேகமாக ஸிட் ஃபீல்டுக்கு ஒரு பெரிய பேட்டி கொடுத்திருக்கிறார் கேமரோன். அந்தப் பேட்டியை மட்டும் படித்தாலே கேமரோனின் படமாக்கும் திறனைப் புரிந்துகொள்ளலாம்.

அந்தப் பேட்டியிலிருந்தே ஒருசில விஷயங்களைப் பார்க்கலாம்.

Terminator 2: Judgement Day படத்தை எடுத்துக்கொள்ளலாம்.

முதல் பாகமான The Terminator 1984ல் வந்தபோது அப்படத்தின் வில்லன் அர்னால்ட் ஷ்வார்ட்ஸெநிக்கர் மக்களால் மறக்க முடியாத ஒரு வில்லனாக மாறியிருந்தார். அதன்பின் கேமரோனுக்கு பல வாய்ப்புகள் அதே போன்று ஒரு படத்தை அர்னால்டை வைத்து இயக்கச்சொல்லி வந்ததாக அறிகிறோம். ஆனால் அத்தனையையும் அறவே மறுத்த கேமரோன், இப்படத்துக்கு ஒரு இரண்டாம் பாகம் எடுக்கத் தீர்மானித்தார்.

முதல் பாகத்தில் வரும் அதே வில்லன், இரண்டாம் பாகத்தில் ஹீரோ. ஆனால், இந்த ரோபோ செய்யும் காரியங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட இரண்டு பாகங்களிலும் ஒன்றுதான். அது – அழிப்பது. ஆக, எப்படி இந்த வில்லன் – ஹீரோ வேறுபாட்டைக் காட்டுவது? முதல் பாகத்தில் இஷ்டத்துக்கு எல்லாரையும் கொல்லும் இந்த ரோபோ, இரண்டாம் பாகத்தில் எப்படி நல்லவனாக ஆகிறது? அதற்குத்தான் இதயமோ மனமோ உணர்வுகளோ கிடையாதே? அப்படியிருக்க, எப்படி அந்த ரோபோவை மறக்கவியலாத ஒரு கதாபாத்திரமாக ஆக்குவது?

படத்தில் சிறுவன் ஜான் கான்னர் ரோபோவிடம் பேசும் ஒரு வசனம் உண்டு:

ஜான் கான்னர் – “நீ சும்மா இஷ்டத்துக்கு எல்லாரையும் கொன்றுகொண்டே இருக்க முடியாது”

ரோபோ – “ஏன் முடியாது?”

ஜான் கான்னர்: “அது வந்து…..முடியாது என்றால் முடியாதுதான்”

இதுதான் கேமரோனின் மனதில் உதித்த விடை. அதாவது, உணர்வுகளே இல்லாத ஒரு ரோபோ, அதன் வாழ்வில் முதன்முறையாக குழப்பத்துக்கு உள்ளாகிறது. அதன் அடிப்படை செயலான கொலை செய்தலை அதனால் செய்ய முயாமல் போகிறது. ஆனால், ஏன் என்ற காரணமோ அதற்கும் அதன் எஜமானனுக்குமே தெரிவதில்லை. இந்தக் கேள்வியின் விடை அந்த ரோபோவை படத்தின் இறுதி நிமிடத்தில் வந்தடைகிறது. இரும்பு மனிதனுக்குள் ஒரு இதயம் முளைக்கிறது.

இதுதான் கேமரோன் கூறிய உணர்ச்சிபூர்வமான கதை சொல்லல். இறுதியில் அந்த ரோபோ இரும்புக் குழம்பில் மூழ்குவது அட்லீஸ்ட் கொஞ்சமாவது நமது மனதை அப்படம் பார்க்கையில் அசைத்ததல்லவா? படத்தை எழுதும்போதே கேமரோன் தனக்குள் ஒரு கேள்வியை திரும்பத் திரும்ப அசைபோட்டுக்கொண்டே இருந்திருக்கிறார். ‘இந்தப் படத்தால் நாம் சொல்ல வருவது என்ன? அதிரடி action காட்சிகளால் ஆடியன்ஸை மெய்மறக்க வைக்கலாமா அல்லது அவர்களின் மனதின் அடியில் உள்ள உணர்ச்சிகளை எழுப்பலாமா?” என்பதே அது. இறுதியில், ஒரு வெறும் ரோபோவுக்காக ஆடியன்ஸை உணர்ச்சிவசப்படவைக்க கேமரோனால் முடிந்தது.

பேட்டியின் இந்த இடத்தில்தான் மேலே சொன்ன மேற்கோள் வருகிறது.

Terminator 2: Judgement Day படம் மட்டுமல்ல. அதன்பின் வந்த True Lies, அதற்குப்பின் வந்த Titanic, அதன்பின்னர் கடைசியாக கேமரோன் இயக்கிய Avatar ஆகிய அத்தனை படங்களிலும் இந்த ஆடியன்ஸின் மனத்தைக் கிளறும் ஃபார்முலா இருக்கும். குறிப்பாக டைட்டானிக்கில். அது ஒரு ரொமான்ஸ் சப்ஜெக்டாக இருந்ததால், ஆடியன்ஸை அழவைக்க அவரால் முடிந்தது. அந்த அழுகை, ஒரு மெலோட்ராமாவில் வரும் அழுகை அல்ல. அருமையான ஒரு காதல், நமது கண்முன்னர் உடைந்து சிதறுவதைப் பார்ப்பதால் வரும் உணர்ச்சிபூர்வமான கண்ணீர்.

ஆடியன்ஸின் மனதில் உள்ள உணர்வுகளை எழுப்புவது ஒரு அரதப்பழைய ஃபார்முலாதான். ஆனால் இதை மிகச்சரியாக உபயோகித்து வருவதால் இன்றும் கேமரோன் ஹாலிவுட்டின் நம்பர் ஒன் கமர்ஷியல் இயக்குநராக இருந்துவருகிறார்.


யோசித்துப் பார்த்தால், எந்தப் படமுமே ஆடியன்ஸின் மனதில் நிற்பதற்கு, கதையில் உள்ள அழுத்தமே காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. கதையில் வரும் சம்பவங்களில் ஒன்றிப்போய் நாம் உருகுவதற்கு மிக அழுத்தமான காட்சிகள் தேவை. அதைத்தான் டெர்மினேட்டரில் ஜேம்ஸ் கேமரோன் காண்பித்தார். ஆஃப்டரால் ஒரு ரோபோ. ஆனால் அது நமது மனதில் விளைவித்த மாற்றங்கள் எத்தனை? இதேதான் ஏலியன்ஸுக்கும். இதேதான் டைட்டானிக்குக்கும். ஒரே போன்ற துரத்தல் படமாக இல்லாமல், டெர்மினேட்டரில் வரும் ஸாரா கதாபாத்திரத்தின் மனநிலையை, படத்தின் பாதிக்கு மேல் வரக்கூடிய அந்தப் பாலைவன ஓய்வெடுக்கும் காட்சியில் நாம் காண்கிறோம். அதேபோல் சிறுவன் ஜான் கானர்ஸ், அவனது வயதிலேயே கொலை செய்வது தவறு என்ற மனநிலையோடு இருக்கிறான். அவன் பிற்காலத்தில் மனித குலத்தையே தோள் கொடுத்து, இயந்திரங்களுடனான யுத்தத்தில் தாங்கப்போகும் நபர். ஒரு தலைவன். தலைவனாக இருப்பவன் இப்படிப்பட்ட பாயிண்ட் ஆஃப் வ்யூ எடுப்பது அவனது உறுதியான குணத்தைக் காட்டுகிறது.

இதற்கெல்லாம் மேலேதான் அந்த ரோபோவும் தன்னுடன் இருக்கும் மனிதர்களைப்போல மாற முயல்வது. அதனால்தான் அந்த ரோபோ கடைசியில் தன்னையே தியாகம் செய்துகொள்கிறது.

Well… இன்றைக்கு இது போதும் என்று தோன்றுகிறது.. இதைப்போல எதாவது random போஸ்டில் மீண்டும் சந்திப்போம் friends..

  Comments

46 Comments

  1. சாரி…//ஜேம்ஸ் கேமேரோனை எனக்குப் பிடிக்கும் // இத்த படிச்சவுடன் ஜேம்ஸ் காமிராமேனை புடிக்கும் ஞாபகம் வந்து….என்னமோ ஸ்பூப் பதிவு போலன்னு படிக்க ஆரம்பிச்சிட்டேன்….

    Reply
  2. “உணர்வுபூர்வமான ஒரு அனுபவத்தை ஆடியன்ஸுக்குக் கொடுப்பதே ஜேம்ஸ் காமேரோனின் மந்திர ஃபார்முலா.”
    “The Dark Knight Rises” எனக்கு பிடித்திருந்ததிற்கு இந்த point ஒரு காரணம். கடைசியில் “The Bat ” வெடித்ததும் ஒரு சிறு கண்ணீர் துளி வந்தது. என்னதான் அவர் திரும்பி வருவார் என தெரிந்தும் அந்த காட்சியில் மனதில் ஒரு கனம் உண்டானது. அவரை திருப்பி பார்த்தபின் ஒரு சிறிய புன்னகை வந்ததை மறுக்க முடியாது.

    “The Dark Knight Rises” is nowhere near to the previous versions of the Trilogy but its definitely a better Super Hero movie than the others.

    Reply
  3. //”உணர்வுபூர்வமான ஒரு அனுபவத்தை ஆடியன்ஸுக்குக் கொடுப்பதே ஜேம்ஸ் காமேரோனின் மந்திர ஃபார்முலா.”//

    இது எல்லா சிறந்த இயக்குனருக்கும்/படத்திற்கும் பொருந்தும் நண்பரே.. இது இல்லா ஒரு நல்லப் படத்தை சொல்லுங்கள் பார்ப்போம்?!

    கதாப்பாத்திரத்தோடு ஒன்றச்செய்வதும் அவனை அல்லது அதுவை தன்னைப்போல ஒரு உயிராக பார்வையாளன் உணரச்செய்வதே ஒரு சிறந்த படைப்பின் ஆதாரம். அது திரைப்படம் மட்டுமல்ல..சிறுகதை, நாவல், நாடகம் என எல்லா படைப்புக்கும் பொருந்தும். அப்படி பொருந்தி வந்ததே சிறந்த படைப்பாக இருக்கிறது. ‘Transformers’ போன்ற படங்களின் வெற்றிக்கும் ‘Kingkong’போன்ற படங்களின் வெற்றிக்கும் அதுதான் காரணம். தொடர் காட்சிகளின் மூலம் பார்வையாளனின் மனதில் ஒரு சலனத்தை ஏற்படுத்தி சட்டென்று ஒரு காட்சியில் மிக அழுத்தமானதொரு பாதிப்பை ஏற்படுத்துவதின் மூலம் குறிப்பிட்ட கதாப்பாத்திரத்தை பார்வையாளன் உணர்வு பூர்வமாக அனுகும் தன்மையை உருவாக்குகிறார்கள். அப்படியான ஒரு ’key scene’ எல்லா நல்லப் படங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆகவே இது எல்லா நல்ல இயக்குனருக்கும் பொருந்தும்..கேமரோனின் வெற்றிக்கு வேறு ஏதேனும் தனித்துவமான காரணம் இருக்கும் அல்லது இருக்கா? இருந்தா.. அதைச் சொல்லுங்கள்.

    “The Dark Knight Rises”-ஐப் பொருத்தவரை.. மேலே ஆனந்தம் சொல்லுவதுதான் என் கருத்தும்.

    Reply
  4. ///அதற்கு முன்பாக, நமது ஸிட் ஃபீல்ட் எழுதியிருக்கும் இன்னொரு அட்டகாசமான புத்தகத்தின் பெயர் – Four Screenplays. இதில், Silence of the Lambs, Terminator 2: Judgement Day, Thelma & Louise, Dances with Wolves ஆகிய நான்கு படங்களை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு படத்தின் திரைக்கதையையும் அக்குவேறு ஆணிவேறாக பிரித்து மேய்ந்திருக்கிறார் ஸிட். அவரது Screenplay புத்தகத்தை விடவும் மிகச் சுவாரஸ்யமான புத்தகம் அது. அதில், ஜேம்ஸ் கேமரோனின் பேட்டி ஒன்று உள்ளது. பிரத்யேகமாக ஸிட் ஃபீல்டுக்கு ஒரு பெரிய பேட்டி கொடுத்திருக்கிறார் கேமரோன். அந்தப் பேட்டியை மட்டும் படித்தாலே கேமரோனின் படமாக்கும் திறனைப் புரிந்துகொள்ளலாம்.///

    ராஜேஷ் இந்தப்புத்தகம் இப்போது என் கடையில் உள்ளது.
    சிட் பீல்டை என் பதிவில் குறிப்பிட பயமாயிருக்கிறது.
    கருந்தேளை பாத்து காப்பியடிக்கிறான் என்று எனது எதிரி போல் தோற்றமளிக்கும் நண்பர்கள் மென்று..தின்று துப்பி விடுவார்கள்.

    கேமரூனின் மாஸ்டர்பீஸ் டைட்டானிக்தான்.
    எனது ஹாலிவுட் டிவிடி ஷாப்பின் லோகோவே அதுதான்.
    சில வாடிக்கையாலர்கள் டைட்டானிக் ஷாப் என்றே குறிப்பிடுவார்கள்.
    என்னை கொலைகாரனாக்க எளிய வழி ஒன்று உள்ளது .
    எனது எதிரில் வந்து டைட்டானிக் குப்பை படம் என்று சொன்னால் போதும்.
    உடனடி பரலோகம்உறுதி.பேச்சே கிடையாது.

    டைட்டானிக்கை ஆய்வு செய்து 200 பதிவுகள் எழுத ஆசை.
    உள்ளத்தில் இருக்கும் வலு உடலில் இல்லை.
    இருந்தாலும் எழுதுவேன்.

    கி.பி.இரண்டாயிரத்து ஐந்தில்… டென்ஸல் வாஷிங்டன் நடித்த மேன் ஆன் பயர் படத்தை காப்பியடித்து திரைக்கதை வசனம் வசனம் ரெடி பண்ணி விட்டேன்.
    நண்பர்கள் அனைவரிடமும் கதை சொல்லி அனைவரும் சூப்பர்டா மச்சி எனச்சொல்லி ஏத்தி விட்டார்கள்.
    அந்தப்படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.சில காலம் கழித்து தயாரிப்பாளர் கிடைத்து…எனது கதாநாயகன் பிரகாஷ்ராஜ் கால்ஷீட்டிற்கான முஸ்தீபுகளில் இறங்கியிருந்த நேரம்.
    கோவையிலிருந்து எனது மனைவி போன்…
    “நீங்கள் சொன்ன கதை படமாக சன் டிவியில் ஒடிக்கொண்டிருக்கிறது” என்றாள்.

    அந்தப்படம் நான் எடுத்து முதலில் வெளியிட்டிருந்தால் இப்பின்னூட்டம் எழுதிக்கொண்டிருக்க மாட்டேன்.
    உங்கள் பிரதான எதிரி இயக்குனர்களில் ஒருவராக ஆகியிருப்பேன்.
    அந்தப்படத்தின் இயக்குனராக எனது பெயர் கேமரூன்தாஸ் என உங்களிடம் அறிமுகம் ஆகியிருக்கும்.

    Reply
  5. “”இயக்குனராக எனது பெயர் கேமரூன்தாஸ் என உங்களிடம் அறிமுகம் ஆகியிருக்கும்.””

    :-))))))))))))))))) it’s too much

    and nice article thanks Dear Rajesh !

    Reply
  6. @ கொயந்த – அந்தப் பதிவுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்பதை உலகறியும். குறிப்பா ‘அவரு’ அறிவாரு. அது போதும்

    @ விஜய் – ரைட். நான் சொல்றது என்னன்னா, மத்த படங்களிலும் இந்த உணர்வுபூர்வம் உண்டுதான். அது இல்லாவிட்டால் எந்தப் படம் வெற்றிபெறும் சொல்லுங்கள்? ஆனால், எந்த வகையில் கதாபாத்திரங்களை சித்தரித்து அந்த சித்தரிப்பின் மூலம் இந்த உணர்வுகளை ஆடியன்ஸின் மனதில் புகுத்தலாம் என்பதில் கேமரோன் கில்லாடி. அதில் அவரை அடித்துக்கொள்ள ஆள் இல்லை. அதனால்தான் தொடர்ந்து இரண்டு படங்கள் அவரால் உலக வசூல் சரித்திரத்தில் முதலிரண்டு இடங்களில் இடம்பெறவைக்க முடிந்திருக்கிறது. Transformers மற்றும் kingkong படங்களை விட, கேமரோனின் Aliens படமே நூறு மடங்கு பெட்டர் என்று நான் சொல்லுவேன். அதனால்தான் பிற மசாலா இயக்குனர்களின் பெயர்களையும் அவர்களது படங்களையும் எனது கட்டுரையில் தந்திருக்கிறேன். இப்படங்களைவிட அருமையாக உணர்ச்சிகளை ஆடியன்ஸின் மனதில் கேமரோன் புகுத்திவிடுகிறார்.

    மற்ற படங்களுக்கும் கேமரோனின் படங்களுக்கும் ஆனா வேறுபாடு என்னவெனில், பிற படங்களில் ஒன்றோ இரண்டோ மட்டுமே இந்த key சீன்கள் இருக்கும். அதன்பிறகு action காட்சிகளே முக்கியத்துவம் பெறும். ஆனால் கேமரோனின் படங்களில், கிட்டத்தட்ட படம் முழுவதிலுமே இந்த உணர்வுகள் வியாபித்திருக்கும். அதற்கு மத்தியில்தான் action நடைபெறும். அதுதான் நான் சொல்லவருவது.

    எனவே, இதுதான் கேமரோனின் வெற்றிக்குக் காரணம் என்று சொல்கிறேன். இது அவரே சொன்னதுதான்.

    @ உலக சினிமா ரசிகரே – உங்களின் டைட்டானிக் வெறியை நான் நன்கு அறிவேன். முதன்முதலில் உங்கள் கடைக்கு வந்தபோது லோகோவுடன் கூடிய அந்த போஸ்டரை பார்த்திருக்கிறேன். டைட்டானிக் எனக்கும் மிகப்பிடித்தமான படம். காதலுக்கு மொழி இனம் மதம் போன்ற எந்தப் பேதங்களும் கிடையாது என்று உலகுக்கு நிரூபித்த படம்.

    கேமரூன்தாஸ் – செம்ம பேரு. காப்பி அடிச்சி படம் உட்டுருந்தீங்கன்னா, இப்போ உங்களையும் இங்க காய்ச்சி எடுத்துகிட்டு இருந்திருப்போம். நீங்க அதையெல்லாம் கவனிக்காம ஜாலியா அடுத்த படம் ஏதாவது தீவுல ஒக்காந்து ரெடி பண்ணிக்கிட்டு இருந்திருப்பீங்க. ஆனா விரைவில் உங்க படம் வரும்னு எனக்கு உள்ளுணர்வு சொல்லுது. கட்டாயம் வரும்.

    @புதுவை சிவா – நன்றி பாஸ் 🙂

    Reply
  7. மிக சிறப்பாக அலசறீங்க! வாழ்த்துக்கள் நண்பா!!!

    Reply
  8. நல்ல விமர்சனம்

    நன்றி,
    http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    Reply
  9. அருமையான Post

    ஜான் கான்னர் – “நீ சும்மா இஷ்டத்துக்கு எல்லாரையும் கொன்றுகொண்டே இருக்க முடியாது”

    ரோபோ – “ஏன் முடியாது?”

    ஜான் கான்னர்: “அது வந்து…..முடியாது என்றால் முடியாதுதான்”

    நல்ல விமர்சனங்கள்,கலக்குங்க தலைவா

    Reply
  10. அமெரிக்க படம் வசூல் சாதனை புரிவதை வைத்தெல்லாம் ஒரு படத்தின் தரத்தையோ, இயக்குனரையோ கணக்கிட முடியாது. ஏனன்றால் அங்கு படம் வெற்றிபெருவதற்கு காரணம் Marketing. Pure Marketing. அதுவும் கமேரோன் ஆகா ஓகோ இயக்குனரும் இல்லை. ஏனென்றால் TITANIC படமே ஒரு ரீமேக் தான். அவதார் ஒரு சாப்ட்வேர் படம். T-2 second half bore. இன்று வரை TOP 10 Filmakers லிஸ்டில் James Cameronக்கு எந்த இடமும் இல்லை. Sydfield is a great screenplay analyst. But we cant expect from him to rate Filmakers and best films. தி. எ. இப்படி Case studyக்கு Collateral படம்தான் கிடைத்ததா? God father, Seven Samurai போன்ற படங்களை consider பண்ணி இருக்கலாம். ஆகையால் அவரிடம் Best Films and Best Filmakersயை எதிர் பார்க்க முடியாது.

    அனால் என்ன இருந்தாலும் உங்கள் எழுத்து எங்களை வசீரகரித்து கொண்டுதான் இருக்கிறது. But this time you disappointed us by overrating Cameron.

    Reply
  11. உங்கள் பதிவுக்கு வருவது இதுவே முதல் முறை. ஜேம்ஸ் கேமரூன் ஒரு அதிரடி இயக்குனர்.ஹாலிவுட்டின் பெரிய வர்த்தக இயக்குனர் என்பதோடு அவரின் சிறப்பு முடிந்துவிடுகிறது. அவரின் படங்களில்இருப்பது பிரமாண்டம் மட்டுமே. மனதை தொடும் கதை காட்சி அமைப்போ அல்லது நிமிர்ந்து உட்கார வைக்கக்கூடிய கதை சொல்லும் நேர்த்தியோ அவரிடம் இல்லை.அவருடன் கிறிஸ்டபர் நோலனை ஒப்பிடுவது பொருத்தமானதல்ல.நோலனின் திரைக்கதை அமைப்பு மற்றும் காட்சிகளை வெட்டி பின் முன் என்று சொல்லும் சர் ரியலிஸ்டிக் பாணி ஹாலிவுடுக்கே புதியது. இன்றைய தேதிக்கு நோலனை போன்று ஹாலிவுடில் புத்திசாலி இயக்குனர் கிடையாது. நோலன் என்றதும் பொதுவாக எல்லோரும் இன்செப்ஷன், டார்க் நைட் சீரிசை குறிப்பிடுவது வழக்கம். மிமேண்டோ, இன்சோம்னியா, தி ப்ரிச்டீஜ் போன்ற படங்களை பார்த்தால் நோலன் இருக்கும் தளமே வேறு என்பதும் அவர் சிந்திக்கும் விதமே முழுவதும் வேறு வகையை சார்ந்தது என்பதும் தெரியவரும்.

    Reply
  12. உங்கள் பதிவுக்கு வருவது இதுவே முதல் முறை. ஜேம்ஸ் கேமரூன் ஒரு அதிரடி இயக்குனர்.ஹாலிவுட்டின் பெரிய வர்த்தக இயக்குனர் என்பதோடு அவரின் சிறப்பு முடிந்துவிடுகிறது. அவரின் படங்களில்இருப்பது பிரமாண்டம் மட்டுமே. மனதை தொடும் கதை காட்சி அமைப்போ அல்லது நிமிர்ந்து உட்கார வைக்கக்கூடிய கதை சொல்லும் நேர்த்தியோ அவரிடம் இல்லை.அவருடன் கிறிஸ்டபர் நோலனை ஒப்பிடுவது பொருத்தமானதல்ல.நோலனின் திரைக்கதை அமைப்பு மற்றும் காட்சிகளை வெட்டி பின் முன் என்று சொல்லும் சர் ரியலிஸ்டிக் பாணி ஹாலிவுடுக்கே புதியது. இன்றைய தேதிக்கு நோலனை போன்று ஹாலிவுடில் புத்திசாலி இயக்குனர் கிடையாது. நோலன் என்றதும் பொதுவாக எல்லோரும் இன்செப்ஷன், டார்க் நைட் சீரிசை குறிப்பிடுவது வழக்கம். மிமேண்டோ, இன்சோம்னியா, தி ப்ரிச்டீஜ் போன்ற படங்களை பார்த்தால் நோலன் இருக்கும் தளமே வேறு என்பதும் அவர் சிந்திக்கும் விதமே முழுவதும் வேறு வகையை சார்ந்தது என்பதும் தெரியவரும்.

    Reply
  13. யாருங்க நீங்க நான் க்ரியேட் பண்ண காரிகன் ஐ டி ல வந்து கமெண்ட் போடுறிங்க… கமல் பத்தின என் கருத்துகளை என் நண்பர் உலக சினிமா ரசிகருக்கு புரிய வைக்குரதுக்காக நான் க்ரியேட் பண்ண ஐ டி தான் காரிகன்…. ப்ளீஸ் இந்த மாதிரி அடுத்தவங்க ஐ டி ய யூஸ் பண்ணாதிங்க……..

    Reply
  14. மன்னிக்கனும் கொழந்த. தாங்கள் யாரென்று தெரியாதாகையால் ஏன் என்னை வம்புக்கிழுக்கிறீர்கள் என்பதும் புரியாத புதிராக உள்ளது. தயவு செய்து இது போன்ற கமெண்ட்களை தவிர்க்கவும். உலகப்படங்களின் மீதுள்ள ஆர்வத்திலேயே நான் இங்கு கமெண்டிட்டிடேன். இதில் எந்த தவறையும் நான் செய்யவில்லை.

    Reply
  15. நண்பர் கருந்தேள், காரிகன் இங்கும் வந்துவிட்டாரா? நல்லது.

    நல்லவன் = ரெண்டு கையும் தட்டுவான்
    கெட்டவன் = ரெண்டு காலையும் பரப்பிக்கொள்வான்
    LHS = RHS

    Reply
  16. உலக சினிமா ரசிகருக்கு எத்தனை அடித்தாலும் வலிக்காதது போல நடிக்கும் கலையை கற்றுத்தந்தது யாரோ?

    Reply
  17. @சனிகிரக சினிமா ரசிகன்

    நல்லா கேட்டீங்கன்னே ஒரு கேள்வி. இதற்கு கேபிள்சங்கர் பதில் சொல்வாரா?

    Reply
  18. @குரங்குபெடல்

    உங்களால் யாருடைய கோவணத்தையும் அவிழ்க்க முடியாது.

    Reply
  19. காரிகன் கொழந்த வவ்வால்… என் இனிய நண்பர் உ சி ர வ ஓட்டுரத இப்பவே நிறுத்திக்கொங்க… எங்கள மாதிரி இன்னும் ஏழு கிரக சினிமா ரசிகர்கள் இருக்காங்க… வந்தா தாங்க மாட்டிங்க…….. நாங்க அவேன்ஜெர்ஸ் மாதிரி…

    Reply
  20. இன்னா நடக்குது இங்க? சோ’வோட சரஸ்வதியின் செல்வன் நாடகத்துல சொல்லுற ‘அதோ டாக்டரே வந்துட்டாரே’ டயலாக் மாதிரி சொன்னவுடனே கேரக்டரெல்லாம் எண்ட்ரியாகுதே?

    Reply
  21. என்னது கொழந்த தான் காரிகனா… ??? அதிர்ச்சியாக இருக்கு நண்பர்களே.. கொழந்த வேலூர் ல இருப்பதால் அவருக்கு கால் செய்ய வசதி இல்ல… அவரு எனக்கு அடுத்த தடவ கால் பண்ணா கொஞ்சம் சூடா பேசலாம் ன்னு இருக்கேன்…

    Reply
  22. ஏன்யா என் பேர்ல உ சி ர க்கு கமெண்டை போட்டு என் உசிர வாங்குறீங்க? அவர் கோவிச்சா எனக்குன்னே தனியா ஒரு தொடர் குறியீடு எழுதிடுவாரு.

    Reply
  23. ஜாக்கிண்ணே… ‘சூடா’ன்னு சொல்லி பேசும்போதே சமோசா பஜ்ஜி வட எல்லாத்தையும் ஓசில வாங்கித்தரனும்னு குறியீடா சொல்லிட்டீங்க.

    உங்களுக்கில்லாததா?!

    Reply
  24. @காரிகன் நன்றி நண்பா உங்கள் கருத்துக்கு அப்படியே உடன்படுகிறேன்… உங்கள் கருத்து நல்ல ஷகிலா படம் போல ரசிக்கும்படியா இருந்துச்சு… :):):) இது போல அடிக்கடி நம்ம தளத்துக்கு வருகை தந்து ரசிக்கும்படியா கம்மென்ட் போடுங்க… :):):)

    Reply
  25. என் பேர் ரெண்டு தபா தினகரன் வெள்ளிமலரில் வந்துவிட்டது. நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?

    Reply
  26. என்ன டா சரவண கணேஷ் இப்படி பப்ளிக்கா சொல்லிட்ட… நமக்க்கு எப்பவுமே ஓ சி தான…

    Reply
  27. டிஸ்னி ராஜ்ஜியம்-ன்னு ஒரு புக் எழுதறதா சொன்னேன். அம்புட்டுதான் அத்தன பயபுள்ளைகளும் எஸ்கேப். ஹும்.. நல்லவனுக்கு காலமில்லை. உஜிலாதேவி சாபம் வெப்பன் மாதிரி தாக்குது போல

    Reply
  28. ஜப்பா …என்னலே நடக்குது இங்க? வேற்று கிரகவாசிகள் மற்றும் உள்ளூர் பிராப்ள ப்லோகேர்ஸ் அட்டெண்டன்ஸ் அதிகமா இருக்கிறதால இங்க நடமாடுறது உசிதமில்ல…மீ எஸ்கேப்பு 😛

    Reply
  29. சரவணா கவனச்சியா என்ன பத்தி ஆனந்த விகடன் ல தொடரே வந்துருச்சு … தினகரன் லாம் ஒரு மேட்டரா…

    Reply
  30. ஹாலிவுட் கோலிவுட்-ன்னு இவனுங்களே பட்டப்பேர் வச்சிக்கிறானுங்க.

    Reply
  31. நல்லா சொன்னீங்க விக்கி! யாரிந்த ஹாலிவுட் பாலா? இவனுக்கு எவனிந்த பெயரை கொடுத்தான்?

    Reply
  32. உலக சினிமா ரசிகரே.. நீங்களாவது குறியீடு போட்டு ஹே ராம் பத்தி எழுதுனிங்க… ஆனா நான் அந்த படத்த பார்த்தே தீர வேண்டிய படங்கள் லிஸ்ட்டுல சேர்த்துருக்கேன்… ஏன் தெரிமா… அதுல ரெண்டு லிப் கிஸ் வருது…

    Reply
  33. வேற யாருமில்ல கரடி.. நான் தான் அந்த பெயர தம்பி பாலா க்கு வச்சேன்… அது மட்டுமில்ல அமிதாப் பச்சனுக்கு அமிதாப் ன்னு பெயரு வச்சது நான் தான்..

    Reply
  34. இந்தியாவுலேயே ரெண்டு பேரு தான் சினிமா பத்தி விமர்சனம் தகுதி உடயவுங்க.. ஒன்னு நானு இன்னொன்னு என் நண்பன் ஜாக்கி…

    Reply
  35. கருந்தேள், வேன்டுமெண்றே நம் நட்ப குளைக்கா என் பெயரில் எந்தா அனானியோ கமெண்ட் போட்டிருக்கு. நம்பதே

    Reply
  36. ஆமா ஜாக்கி கரெக்டா சொன்னிங்க.. இந்த மாதிரி தான் ஹே ராம் ல கல்கத்தாவ காட்டுங்க.. அந்த சீன் ல லெப்ட் கார்னர் ல ஒருத்தன் பேண்டுக்கு ஜிப் போடாம இருப்பான்.. இதுல இருந்து உலக நாயகன் சொல்லும் குறியீடு என்னென்னா ஒன்னுக்கு மறக்காம ஜிப் போடணும்.. ஒலக நாயகன் ஒலக நாயகன் தான்.. காரிகன் மாதிரி லூசுங்களுக்கு லாம் இந்த குறியீடு புரியாது.

    Reply
  37. மேலும் பல காட்சிகளில் கமல் ட்ரையாங்கிள், ரெக்டாங்கிள், ஸ்கொயர், பெண்டகன், ஆக்டகன் செய்கிறார். அதை நாம் ஜியோமெண்ட்ரியாக அர்த்தப்படுத்திக்கொள்ள வேண்டும். இது தெரியாதமல் 4 உலகப்படத்தை டவுன்லோட் செய்த பார்த்தவனெல்லாம் உதார் விடுகிறான்.

    நான் யார் தெரியுமா? 1980லேயே என் வேட்டியை திரையாக கட்டி அதில் கோவைக்கே படம் காட்டியவன்.

    Reply
  38. ஸாரி நண்பர்களே. கமெண்ட் பாக்ஸை க்ளோஸ் செய்து மாடரேஷன் வைக்க முடிவு செய்துவிட்டேன்.

    Reply
  39. ஆல்ரைட்………போதும். ஆனா கருந்தேளின் ஜால்ராக்கள்ன்னு சொன்னது டூ மச். அதென்ன கருந்தேளுக்கே ஜால்ரா ? எனக்கு அடுத்து எழுத வந்த பய…நாந்தான் தமிழ்ல எழுத சொல்லிக் குடுத்ததே. அவருக்கு இன்ட்ரோலாம் என் ப்ளாக்ல குடுத்தேன் தெரியுமா

    Reply
  40. இத பத்தி பாதிரியார் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா…….

    தேடிச் சோறு நிதம் தின்று – பல
    சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
    வாடி துன்பம் மிக உழன்று –பிறர்
    வாட பலசெயல்கள் செய்து –நரை
    கூடி கிழப்பருவமெய்தி –கொடுங்
    …கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
    வேடிக்கை மனிதரைப் போல் -நான்
    வீழ்வே னென்று நினைத்தாயோ

    – Father. பாதிரி

    என்னயெல்லாம் ஒண்ணியும் பண்ண முடியாது. எட்டு ஐடி வெச்சிருக்கேன்

    Reply
  41. இன்னொரு பாதிரி கவிதை

    மனதை திருடிவிட்டாய் திரைப்படம் கே டிவி யில் போட்டிருக்கிறார்கள். அதில் வடிவேல் சொன்ன பாதியார் கவிதையை மனதில் ஓட்டிப்பார்த்தேன்….

    கூல் டவுன்
    கூல் டவுன்
    கூல் டவுன்
    money come today go tomorrowயா

    – பாதிரி

    Reply
  42. yo karundhelu unaku velaye illaya eppa pathalum hollywood la mega blockbuster padangala pathi sollikine kira .inga namma directors ku vela illama pannikitiruka .avavan 10-15 dvd vangi vittula pottu parthu macha idhu ennoda kanavu project nu belaa uttukuna thiriyaran.enya vaitherichala kelapreenga.nee patukunu vimarsananga pankite iruupenga ,nangalu adha padipom .adutha masam cinema va tamil varum .nangalum palla ilichikena parkpom.appotha mandaila velicham varum .itha nan engada partjhen .pothumada samy alungala nimmadhiya vazhavidunga

    Reply
  43. gomathiramalingam

    it is very nice

    Reply
  44. //…………….உணர்வுகளே இல்லாத ஒரு ரோபோ, அதன் வாழ்வில் முதன்முறையாக குழப்பத்துக்கு உள்ளாகிறது. அதன் அடிப்படை செயலான கொலை செய்தலை அதனால் செய்ய முயாமல் போகிறது. ஆனால், ஏன் என்ற காரணமோ அதற்கும் அதன் எஜமானனுக்குமே தெரிவதில்லை. இந்தக் கேள்வியின் விடை அந்த ரோபோவை படத்தின் இறுதி நிமிடத்தில் வந்தடைகிறது. இரும்பு மனிதனுக்குள் ஒரு இதயம் முளைக்கிறது …………//
    கேமரூனுக்கு வந்தா ரத்தம், ஷங்கருக்கு வந்தா தக்காளி சட்னியா????? ஹி ஹி ஹி

    Reply

Join the conversation