சினிமா ரசனை 2.0 – புதிய புத்தகம்
இந்து தமிழ் திசை பத்திரிக்கையில் சென்ற வருடம் பல வாரங்கள் தொடராக வந்து, இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது இந்த ‘சினிமா ரசனை 2.0’.
இதற்குச் சில வருடங்கள் முன்னர் தமிழ் இந்து பத்திரிக்கையில் ‘சினிமா ரசனை’ என்ற தொடரை விரிவாக எழுதினேன். அதில் சினிமா ரசனை என்றால் என்ன, உலகின் பல சிறப்பான இயக்குநர்கள், திரை ஆளுமைகள், காமிக்ஸ் எழுத்தாளர்கள், சினிமாவின் வகைகள் என்று ஏராளமான தகவல்கள் இடம்பெற்றன. மிகச்சிறப்பான வரவேற்பும் அந்தத் தொடருக்கும், தொடர்ந்து அது புத்தகமாக வெளியானபின்னரும் சினிமா ரசனைக்கு வந்தன.
இப்போது அதே இந்து தமிழ் திசையில் சினிமா ரசனை 2.0.
சினிமா ரசனை 2.0வில், இப்போது OTT தளங்களில் வெளியாகியிருக்கும் மிகச்சிறந்த வெப் சீரீஸ்கள் பற்றி ஒவ்வொரு வாரமும் தொடராக எழுதினேன். எல்லோருக்கும் தெரிந்த வெப் சீரீஸ்கள் இதில் இடம்பெறவில்லை. மாறாக, உலகின் மிகச்சிறந்த – ஆனால் பலருக்கும் தெரியாத அட்டகாசமான வெப் சீரீஸ்கள், அவற்றின் இயக்குநர்கள், அந்த சீரீஸ்களின் பின்னணி, அவற்றின் முக்கியத்துவம் ஆகியவை பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். அவசியம் படிப்பவர்களுக்குப் பிடிக்கும். இதுவும் தொடராக வந்தபோது நல்ல வரவேற்பு பெற்றது.
இது எனது ஆறாவது புத்தகம். இந்தப் புத்தகத்தை மிகச்சிறப்பாக வெளியிட்ட ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
புத்தகத்தை இந்த இணைப்பில் வாங்கலாம் –> சினிமா ரசனை 2.0 புத்தகம் .
o7iczb
iw8305