Dances with Wolves (1990) – English

by Karundhel Rajesh August 12, 2010   English films

டிஸ்கி – இது ஒரு மீள்பதிவு. பதிவு எழுதத் துவங்கிய காலத்தில் நான் எழுதிய ஒரு பதிவு இது. எனக்கு மிகமிகப் பிடித்த ஒரு படம். இதைப் பார்ப்பதே ஒரு படு வித்தியாசமான அனுபவம். அருமையான ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் இப்படத்தைத் தயங்காமல் பார்க்கலாம். ஒருவேளை ஏற்கெனவே இதை நண்பர்கள் படித்திருந்தால், இதைப் படிக்க வேண்டாம். சீக்கிரமே ஒரு புதுப் பதிவுடன் சந்திக்கிறேன். நன்றி.

டிஸ்கி 2 – இப்படத்தைப் பற்றி ஆங்கிலத்திலும் நான் எழுதிய இப்பதிவில் பின்னூட்டமிட்ட விஸ்வாவை மறக்க இயலாது :-). ஆங்கிலப் பதிவுகள் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில், பல பதிவுகளில் அவரும் நம்ம பாலாவும் பின்னூட்டமிடுவர். அதில் விஸ்வாவின் டேஸ்ட், அச்சு அசல் எனதைப் போலவே இருந்ததைக் கண்டு வியந்திருக்கிறேன் ?

இம்முறை, சற்றே சீரியஸான ஒரு படத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். இந்தப்படம், நம்ம ஊர் ‘மகாநதி’ போல் ஒரு பாதிப்பை அளிக்கக்கூடியது. எனவே, இந்த விமரிசனமும், கொஞ்சம் சீரியஸாகவே போகும் வாய்ப்புகள் நிறைய உண்டு. சீரியஸ் படம் பிடிக்காத நண்பர்கள், பொறுத்தருள வேண்டுகிறேன்.

அமெரிக்காவின் முதல் குடிமக்களான செவ்விந்தியர்களை, நமக்கு டெக்ஸ் வில்லர் மற்றும் கேப்டன் டைகர் காமிக்ஸின் மூலமாகத்தான் பழக்கம். அதுவும், பெரும்பாலும் அவர்கள் காட்டுமிராண்டிகள் என்றும், அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில், அவர்கள் அமைதி விரும்பிகள். வாழ்வை ஒரு கொண்டாட்டமாகக் கருதுபவர்கள். அமெரிக்காவை ஆக்கிரமித்த வெள்ளையர்கள் மூலமாக, இந்த இனம் அருகிக்கொண்டே வந்து, இப்பொழுது மியூசியத்தில் வைக்கப்பட வேண்டியவர்களாக மாறி விட்டனர். வெள்ளையர்கள் ஆக்கிரமிப்பு செய்யத் தொடங்கிய சமயத்தில், மெதுவாக செவ்விந்தியர்கள் அழிக்கப்படத் துவங்கிய காலகட்டத்தில், அவர்களை மையமாக வைத்து நடக்கும் ஒரு கதை தான் ‘டான்ஸெஸ் வித் வுல்ஃப்ஸ்’.

இந்தப்படம், சில காரணங்களால், சற்று விசேஷமான ஒன்று. கெவின் காஸ்ட்னர் முதன்முதலில் இயக்கிய ஒரு படம். அதே போல், காஸ்ட்னர், வருடக்கணக்கில் இப்படத்தைத் தயாரிக்க முயன்று, கிட்டத்தட்ட அம்முயற்சியில் தோல்வியுறும் அயனான நிமிடத்தில், உதவி வந்து சேர்ந்து, எடுக்கப்பட்ட ஒரு படமும் ஆகும் இது. நாவலாசிரியர் மைக்கேல் பிளேக், பல காலம் உழைத்து, இந்நாவலை எழுதி முடித்தார். அவர் சோர்வுறும்போதெல்லாம் அவருக்கு நம்பிக்கையூட்டியவர், காஸ்ட்னரே தான்! பொறுமையாகக் காத்திருந்து, இப்படத்தை எடுத்தார். இதே பிளேக்கின் ‘Stacy’s Knights’ என்ற நாவல்தான் வெகு காலம் முன்னர், படமாக எடுக்கப்பட்டது. அப்போது, இதே காஸ்ட்னர் அப்படத்தில், தனது திரையுலக வாழ்க்கையின் ஆரம்பகாலத்தைத் தொடங்கினார்.

படம், அமெரிக்க சிவில் யுத்தத்தில் துவங்குகிறது. அமெரிக்கா, இரு துருவங்களாகப் பிரிந்து, சண்டையிட்டுக் கொண்டிருந்த காலம். லெஃப்டினண்ட் ஜான் டன்பார், ஒரு மருத்துவமனையில் படுத்துக்கொண்டிருக்கிறார். அவரது கால், வெட்டியெடுக்கப்படவேண்டிய நிலையில் இருக்கிறது. தனக்கு முன், சிலபேரின் உடல் உறுப்புகளை, மருத்துவர்கள் வெட்டியெடுப்பதைப் பார்த்துக்கொண்டே படுத்திருக்கிறார். சட்டென்று எழுந்து, எப்படியோ ஒரு குதிரையைத் திருடி, முகாமிலிருந்து தப்பி விடுகிறார். ஆனால், அவர் நோக்கம், சண்டையிட்டுக் கொண்டிருக்கும் இரு படைகளுக்கும் இடையே சென்று, அவர்களால் சுடப்பட்டு, இறந்து விடவேண்டும் என்பதாக இருக்கிறது. இம்முயற்சியின்போது, எதிரிகளை நோக்கித் தான் இவர் முன்னேறுகிறார் என்று எண்ணி, இவர் சார்ந்துள்ள படை, வீறுகொண்டு எழுந்து, எதிரிகளைத் துரத்திவிடுகிறது. சாக நினைத்த டன்பார், ஒரு ஹீரோ ஆகிவிடுகிறார். இதனால், டன்பாருக்கு அந்தக் குதிரையையே பரிசாக அளிக்கும் யூனியன் ஜெனரல், அவர் விரும்பும் இடத்துக்கே அவரை நியமிப்பதாகக் கூறுகிறார்.

டன்பார், மேற்குப் பிராந்தியத்தில் பணிபுரியவேண்டும் என்ற தனது ஆசையைத் தெரிவிக்கிறார். அதற்குக் காரணம், அந்தப் பகுதிதான் இன்னும் பழைய அமெரிக்காவைப் போல், மண்ணின் மணம் மாறாமல் இருக்கிறது என்பதே. அந்த இடத்தில்தான் இன்னமும் மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அங்கும் அமெரிக்கப்படைகள் தாக்குதல் நடத்த, சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் டன்பார் அங்கு செல்கிறார். அந்த இடத்தின் பெயர், ஃபோர்ட் செட்ஜ்விக் என்பது. அங்குள்ள முகாம் காலியாக இருக்கிறது. ஆனால், டன்பாரிடம் போதிய உணவுப்பொருட்கள் இருக்கின்றன. எனவே, தன்னந்தனியாக, அந்த முகாமைச் சீரமைக்கிறார். அங்கு ஒரு ஓநாயையும் பார்க்கிறார். அது அவரையே சுற்றிச்சுற்றி வருவதால், அதன் வெண்ணிறக் கால்களைப் பார்த்து, அதற்கு ‘டூ ஸாக்ஸ்’ என்ற பெயர் வைக்கிறார். ஒருநாள், அவர் ஒரு செவ்விந்தியனைப் பார்க்க நேரிடுகிறது. பக்கத்தில் உள்ள செவ்விந்தியக் குடியிருப்பு பற்றி அப்போதுதான் டன்பார் அறிந்துகொள்கிறார்.

அந்தச் செவ்விந்தியர்களுக்கு, ‘சியோக்ஸ்’ என்று பெயர். அவர்களின் எதிரிகள், ‘பாநீ (pawnee)’ என்ற இன்னொரு பிரிவினர். சியோக்ஸ் பிரிவின் தலைவர், கிக்கிங் பேர்ட். அவருக்கு ஒரு வளர்ப்பு மகள் – ஒரு அமெரிக்கப் பெண் – பெயர், ‘ஸ்டாண்ட்ஸ் வித் எ ஃபிஸ்ட் (stands with a fist)’. மெதுவாக அந்த சியோக்ஸ் பிரிவினரிடம் நண்பராக மாறுகிறார் டன்பார். அவர்களுக்கு, ஒரு பிரம்மாண்டமான காட்டெருமை மந்தையைப் பற்றித் தகவல் சொல்லி, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக ஆகிறார்.

இந்த இடத்தில் வரும் காட்டெருமை வேட்டை, இப்படத்தின் ஒரு முக்கியமான அம்சம். நூற்றுக்கணக்கில் காட்டெருமைகள். அவற்றை வேட்டையாடும் செவ்விந்தியர்கள். கூடவே தனது துப்பாக்கியுடன் டன்பார். மிகவும் கலைநேர்த்தியுடன் படமாக்கப்பட்டிருக்கும் இந்த காட்டெருமை வேட்டை, ஒரு பிரசித்திபெற்ற விஷயமாகும். இப்படம் ஒளிப்பதிவிற்காக ஆஸ்கார் வாங்கியற்கு, இந்தக் காட்சிகளைப் பார்த்தாலே போதும்.

டன்பாருக்கும், கிக்கிங் பேர்டின் மகளுக்கும் காதல் மலர்கிறது. முதலில் தயங்கும் கிக்கிங் பேர்ட், பின்னர் சம்மதிக்கிறார்.

இந்த நேரத்தில்தான், கிக்கிங் பேர்ட் தன்னிடம் பல நாட்களாகக் கேட்டு வந்த கேள்விக்கு, டன்பார் உண்மையான பதிலைச் சொல்கிறார். வெள்ளையர்கள் தங்களைத் தாக்க வருவார்களா என்ற அவரது கேள்விக்கு, அவர்கள் சீக்கிரமே வருவார்கள் என்று பதிலிறுக்கிறார் டன்பார். இதனால், தங்கள் முகாமை, வேறு இடத்துக்கு மாற்றுகிறார் கிக்கிங் பேர்ட். தனது டைரியை எடுப்பதற்கு ஃபோர்ட் செட்ஜ்விக் வரும் டன்பாரை, அதற்குள் அங்கு வந்திருக்கும் அமெரிக்கப்படையினர் பிடித்துவிடுகிறார்கள்.

திரும்பிச் செல்ல விரும்பும் டன்பாரை, துரோகி என்ற முத்திரை குத்தி, தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள். அப்போது, அவரை கிக்கிங் பேர்டின் படையினர் தப்புவிக்கின்றனர். மறுபடி முகாம் செல்லும் டன்பார், கிக்கிங் பேர்டிடம், தான் அவர்களுடன் உள்ள வரை, வெள்ளையர்களின் தொந்தரவு இருந்துகொண்டே தான் இருக்கும் என்று சொல்லி, அவர்களிடம் இருந்து தனது மனைவியோடு பிரிகிறார்.

பின்னணியில் ஒலிக்கும் குரல் மூலம், அதற்குச் சில வருடங்கள் கழித்து, அங்கு வெள்ளையர்கள் வந்தனர் என்றும், அந்தச் செவ்விந்தியர்கள் பூண்டோடு அழிக்கப்பட்டனர் என்றும் நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் படம் முடிகிறது.

ஒரு சில படங்கள், அவற்றைப் பார்த்தபின்னரும், பல நாட்கள் நம் மனதை விட்டு நீங்குவதில்லை. அவற்றைப் பற்றிய சிந்தனை உள்ளே ஓடிக்கொண்டுதான் இருக்கும். இப்படம் அந்த வகையைச் சேர்ந்தது. கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் ஓடும் இந்தப்படம், ஒரு நிமிடம் கூட சலிக்கவே இல்லை. ஒரு கவிதை போன்ற இப்படம், வாழ்வின் உறவுகளைப் பற்றி, மனதைத்தொடும் முறையில் சொல்கிறது. இறக்க விரும்பிய ஒரு மனிதன் – வாழ்வில் எந்தப் பற்றுதலும் இல்லாத ஒரு மனிதன், தனக்கு முற்றிலும் வேறான ஒரு சூழ்நிலையில், வாழ்க்கையைக் கண்டுகொண்டான் என்ற கருத்தை, அவன் வாயிலாகவே நமக்குச் சொல்கிறது.

கெவின் காஸ்ட்னர் ஒரு அருமையான படைப்பாளி என்பதை, இப்படம் நிரூபித்தது. அவர் முதன்முதலில் இயக்கிய இப்படம், ஏழு ஆஸ்கார் விருதுகளை அள்ளியது. இவற்றில், சிறந்த படம், இசை, ஒளிப்பதிவு, திரைக்கதை ஆகியன அடக்கம். காஸ்ட்னருக்கு, சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் கிடைத்தது.

இப்படத்தின் சிறப்பம்சம் என்னவெனில், படம் முழுக்கவே, செவ்விந்தியர்களின் சியோக்ஸ் மொழியை அனைவரும் கற்றுக்கொண்டு, அதிலேயே பேசி நடித்ததுதான். இன்னொரு முக்கியமான அம்சம், டன்பாருக்கும் அந்த ஓநாய்க்கும் உள்ள உறவு. யாருமற்ற அந்தப் பிராந்தியத்தில், இந்த இருவருக்குமே, அவர்கள் மட்டுமே நண்பர்கள். அந்த ஓநாய், கடைசிவரையில் டன்பாரை விட்டுப் பிரிவதே இல்லை. அவரை ராணுவம் கைதுசெய்து இழுத்துக்கொண்டு போகும்போது, அவர் பின்னாலேயே ஓடி வரும் அளவு, அது அவருடன் நெருங்கிப் பழகுகிறது.

இப்படத்தை, பார்த்துப் புரிந்துகொள்வதைவிட, உணர்ந்துதான் புரிந்துகொள்ள வேண்டும் என்று தோன்றுகிறது. ஹாலிவுட்டில் வெளிவந்த படங்களில், இது ஒரு அருமையான ஒன்று.

இப்படத்தின் டிரைலர் இங்கே.

  Comments

33 Comments

  1. இங்க கும்முறதுக்கு இராமசாமி கூப்பிடுறாருங்க. கமெண்டை க்ளோஸ் பண்ணிடுங்க.

    நாங்க 1100-ஐ எட்டப் போறோம். 🙂 🙂

    Reply
  2. பாலா… அந்த அராஜகத்தை நானும் பார்த்தேன் 😉 யோவ்.. அதுல சில கமெண்டைப் படிக்கவே எனக்கு தலை பூரா கிர்ர்ருன்ன்னுச்சி… முடியலை… இதுவே வேலையா எப்புடிய்யா முடியுது ??? கமெண்ட் கொண்டான்னு ப்ரு பட்டத்தை உங்களுக்கு குடுக்கவா? 😉

    Reply
  3. என்னாது காந்தித்தாத்தா செத்துப்போயிட்டாரா?
    என்னாது பிரபுவுக்கும் குஷ்புவுக்கும் லவ்வா?
    என்னாது கருந்தேள் பதிவு போட்டுட்டாறா?

    Reply
  4. ணா.. வேலைப்பளு இருக்கைல நா பாட்டுக்கு ஜாலியா கமென்ட் போட்டுட்டேன். ஒன்னுமில்லயே

    Reply
  5. கருந்தேள் கண்ணாயிரம் said…

    முடியல… 😉 அழுதுருவேன் 😉

    ஏன் இப்படி 🙂 இதுக்கேவா 🙂

    Reply
  6. //ஏன் இப்படி 🙂 இதுக்கேவா ://

    அடப்பாவிகளா… இதுக்கேவான்னா என்னய்யா அர்த்தம்? 😉 அப்ப இதுக்கு மேலயும் வருதா ???? 😉 எதுல முடிக்கலாம்னு இருக்கீங்க? ரெண்டாயிரம்? நாலாயிரம்? ஆறாயிரம்? 😉

    Reply
  7. எங்கள் கும்மியை கெடுக்கும்படியாக மீள்பதிவு போடும் கருந்தேளை வன்மையாக கண்டித்து வெளிநடப்பு செய்கிறேன்.

    Reply
  8. பிம்பில்க்கா பிலாத்தே- சொல்லும்போது முடிச்சிக்கலம்னு இருக்கோம்..

    அது 9999-க்கு அப்புறம் வரும்

    Reply
  9. ஆயிரம், இரண்டாயிரம், மூவாயிரம், நாலயிரம், ஐயாயிரம், ஆறாயிரம், ஏழாயிரம், எட்டாயிரம், ஒம்பதாயிரம், பிம்பிளக்கா பிலப்பி.. மாமா பிஸ்கோத்து 🙂

    Reply
  10. அப்ப சிந்துபாத் மாதிரி அதுல கமெண்டுகள் தொடர்ந்து வரப்போவுதா? ஆஹா… தமிழ் ப்ளாக்குகளுக்கே ஒரு முன்மாதிரியா இருக்கப்போவுதுன்னு தோணுது 😉 பத்தாயிரம் கமெண்டு மட்டும் வந்துச்சு… அவனவன் அதப் படிச்சிகினு பாயைப் பிறாண்டப்போறான்னு மட்டும் தெரியுது 😉

    Reply
  11. அப்டேட்.. இப்பத்தான் 2250 அடிச்சிருக்கோம். பிஸ்கோத்து கேக்கறதுக்கு இன்னும் 7750 இருக்கு.

    Reply
  12. இந்தப்படத்தின் புதிய தழுவலை இப்போதுதான் நாடே பார்த்து கொண்டாடியது.இந்திய கருவூலங்களை கலந்து கலக்கிய அவதார்,வசூலில் சாதனை படைத்தற்க்கு காரணம் கேமரூனின் தொழில்நுட்பம்.

    Reply
  13. கருந்தேள்,

    //பெரும்பாலும் அவர்கள் காட்டுமிராண்டிகள் என்றும், அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், உண்மையில், அவர்கள் அமைதி விரும்பிகள். வாழ்வை ஒரு கொண்டாட்டமாகக் கருதுபவர்கள். அமெரிக்காவை ஆக்கிரமித்த வெள்ளையர்கள் மூலமாக, இந்த இனம் அருகிக்கொண்டே வந்து, இப்பொழுது மியூசியத்தில் வைக்கப்பட வேண்டியவர்களாக மாறி விட்டனர்.//

    உண்மையிலேயே இது போன்ற படங்களை பார்க்கும்போது அமெரிக்கர்கள் செய்த காரியங்கள் கடுப்பை ஏற்றும். சமீபத்தில்தான் போர்ட் அபாச்சே படம் பார்த்தேன் (சமீபத்தில் 1948ல் வந்த ஜான் வெயின் நடித்த ஒரு மாஸ்டர் பீஸ்). அதிலும் ஜெனரல் கஸ்டர் (The last stand) கதையை சார்ந்து தான் கதை அமைக்கப்பட்டு இருக்கும். கிட்டத்தட்ட கதை அமைப்பில் இந்த படத்தின் கதையை சார்ந்தே இருக்கும். முடிந்தால் பாருங்கள். செம படம்.

    Reply
  14. கருந்தேள்,

    //கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் ஓடும் இந்தப்படம், ஒரு நிமிடம் கூட சலிக்கவே இல்லை. //

    நான் சொன்னமாதிரி அந்த டைரக்டர்ஸ் கட் ஸ்பெஷல் டிவிடியை பாருங்கள். இன்னமும் அதிகம் இருக்கும். செம படம் + செம பதிவு. சூப்பர்.

    இங்க கமேட்டுகளில் ஏதோ ஒரு மேட்டரை பத்தி பேசுறீங்கன்னு தெரியுது. அது என்னன்னுதான் புரியல.

    Reply
  15. ணா..
    கெவின் காஸ்டனர் முகம் என்னமோ எனக்கு “பிக்கியா” இருக்குற மாதிரி தோணும். அதுனால அவர் படங்கள் மேல ஈர்ப்பு இல்லமயே இருந்திச்சி.Untouchables (டி நீரோவிற்காக பார்த்தது), Mr.Brooks கொஞ்சம் மாத்துச்சு. இந்தப் படதப்பத்தி நெறைய கேள்விப்பட்டிருந்தாலும் இன்னும் பார்க்கல. ஆனா நீங்க இப்படி அட்டகாசமா எழுதி இந்த வாரமே எப்படியாவது பார்க்கணும்னு வெறிய ஏத்தி விட்டுடீங்க. (இந்தப்பதிவ எப்ப எழுதினீங்க? நீங்க இப்ப எழுதுவதைவிட ஒரு rawness இதுல இருக்குற மாதிரி தெரியுது. இது எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு)

    Reply
  16. அன்பின் தேளு, மிக அருமையான ஒரு வரலாற்று ஆவணப்படத்திற்குறிய தகவல்கள் கொண்ட பதிவு……வழமைபோல் உங்க நகைச்சுவை கலந்து. நன்றி. உஜிலாவின் ஆசிகள் உமக்கு என்றும் உண்டு 🙂

    Reply
  17. உங்களின் தகவல் நன்றாக உள்ளது.
    கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
    Link:www.secondpen.comtamil/what is jaiku?

    Reply
  18. நண்பரே,

    மனதில் நீங்கா படைப்பு ஒன்றிய பதிவை அழகாக வழங்கியுள்ளீர்கள். இவ்வகையான படங்களை பார்க்கும்போது நான் இழந்து கொண்டிருப்பவை குறித்தே உள்ளே ஒரு வரி ஓடும் :)) காட்டெருமைகள் வேட்டை, தீயை சுற்றி கோஸ்ட்னர் ஆடும் நடனம், இசை என நல்லதொரு படைப்பை சிறப்பாக நினைவூட்டியிருக்கிறீர்கள்.

    Reply
  19. @ உலக சினிமா ரசிகர் (எ) பாஸ்கரன் – ஆமாம். இதன் காப்பிதான் அவதார். அதுவும் கூட ஓடிச்சுன்னா அந்தக் கதையின் அழுத்தம் புரியுது. கேமரூன் தொழில்நுட்பக் கில்லாடிதான். ஆனால், இந்தக் கதையின் வீரியம் எனக்குப் புடிச்சது. உணர்ச்சிகளைக் கிளப்பும் கதை. நன்றி.

    @ பயங்கரவாதி – 😉 ஹீ ஹீ… ஆயிரமா.. அதையெல்லாம் மீறும் போல கீது தலைவரே 😉

    @ விஸ்வா – //உண்மையிலேயே இது போன்ற படங்களை பார்க்கும்போது அமெரிக்கர்கள் செய்த காரியங்கள் கடுப்பை ஏற்றும்//

    எனக்கும்தான்.. டெக்ஸ் வில்லர் கதைகளில் ஆரம்பித்த கடுப்பு அது 😉 .. அதிலும் அமெரிக்கர்களின் அராஜகம் பற்றி சொல்லப்பட்டிருக்கும் இல்லையா?

    ஜான் வெயின் அது இதுன்னு கலக்குறீங்களே விஸ்வா.. இந்தப் படங்களெல்லாம் நோட்டட்.. ஆமா.. என்னாது டோண்டு ஸ்டைல்ல சமீபத்தில்னு ஆரம்பிச்சிட்டீங்க 😉

    நான் டைரக்டர்ஸ் கட் டிவிடி நம்ம ஹாலிவுட் பாஸ்கரன் தயவுல வாங்கிட்டேன் 😉 அது சூப்பர் !!

    @ கொழந்த – //கெவின் காஸ்டனர் முகம் என்னமோ எனக்கு “பிக்கியா” இருக்குற மாதிரி தோணும். அதுனால அவர் படங்கள் மேல ஈர்ப்பு இல்லமயே இருந்திச்சி.Untouchables (டி நீரோவிற்காக பார்த்தது)//

    அடப்பாவி. எனக்கு இதுவரை வந்த ஹீரோக்கள்லயே ரொம்பப் புடிச்சது ஸ்டாலோனும் காஸ்ட்னரும் தான் 😉 அண்டச்சபிள்ஸ் நீங்க நீரோக்காகப் பார்த்துருக்கீங்க.. ஆனா நான் ஷான் கானரிக்காகவே பார்த்தேன் 😉

    இது எழுதினது டிஸம்பர்னு நினைக்குறேன் (2009).. 😉

    @ மயிலு – //வழமைபோல் உங்க நகைச்சுவை கலந்து. //

    அடப்படுபாவி. இது படு சீரியஸான பதிவுன்னு மொதல்லயே சொல்லிட்டனேய்யா… இதுல எங்கிருந்துய்யா நகைச்சுவை வந்துச்சி !! பார்சல்ல சரக்கு பாட்டில் வூட்டாண்ட அனுப்பி பிரச்னை பண்ணிருவேன் 😉

    @ காதலரே – மிக்க நன்றி. எனக்கு மிகப்பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

    @ கார்த்திகேயன் – நன்றி நண்பா..இதோ அடுத்தது ரெடி 😉

    Reply
  20. Karunthel, did you get a chance to see ‘A perfect world’? I recently saw that movie and it has both clint eastwood and kevin costner in the lead and liked it very much. would like to know you thoughts on that movie if possible – Sinna Jay

    Reply
  21. Thalaivare unga pathivu as usual stunning. Seekarama intha padathai paarkanum.Neenga HIDALGO padam paartheengala. Arumayaana padam thalaivare. Athai pathi yerkanave eluthi irundha link kodukkavum. Illaina please oru pathivu eluthavum.-Niyaz

    Reply
  22. இந்தப் படம் ஒரு கிளாசிக். பெரும்பாலான cowboy படங்கள்/காமிக்ஸ்களில் காட்டப்படுவது போல செவ்விந்தியர்களைக் காட்டுமிராண்டிகளாகக் காட்டாமல் இயல்பாகக் காட்டி இருப்பது நல்ல விஷயம். அந்த காட்டெருமை மந்தையை வேட்டையாடுவதில் வெள்ளையர்களுக்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள வித்தியாசம் மிகச்சிறப்பாகக் காட்டப்பட்டிருக்கும். வெள்ளையர்கள் ஒரு தாய் மாட்டைக் கொன்றுவிட்டு கன்றுக் குட்டியை விட்டுச் சென்று இருப்பார்கள். பொதுவாக காடுவாழ் மக்கள்/ பரம்பரை வேட்டையாளர்கள் சிறு கன்று, கருவுடன் இருக்கும் தாய் உயிர்கள், இனப் பெருக்கத்தில் இருக்கும் ஆண் உயிர்கள் இவற்றை கொல்வதில்லை. கேளிக்கை வேட்டையிலும் அவர்கள் ஈடுபடுவதில்லை. ஆனால் அமெரிக்க நுகர் கலாச்சாரம் இயற்கையை துடைத்து எடுப்பதையே அன்றிலிருந்து இன்றுவரை செய்கிறது. அன்று காட்டெருமை இன்று பெட்ரோல். அதே வேலையையே இன்று நாமும் செய்கிறோம்.

    படத்தின் பெரிய குறை – நீளம். இன்னும் கொஞ்சம் வெட்டியிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    Reply
  23. நண்பரே,

    அருமையான பதிவு! எனக்கு தெரிந்து நமது காமிக்ஸ் கெவ்பாய் கதாநாயகர்கள் தவிர கதையில் வரும் செவ்விந்தியரே நல்லவர்கள் என்ற எண்ணம் சிறு வயதிலேயே எனக்கு ஏற்பட்டுவிட்டது.அருமையான படம். அவதார் படமும் இவ்வகை சார்ந்ததே, இக்காலத்தில் பொருத்தமாக உள்ளது. அமெரிக்க வெள்ளையரின் குறுகிய மனபான்மை காமிக்ஸ் படித்த நமக்கு தெரிந்த அளவு கூட மத்தியில் ஆள்வோருக்கு தெரிவதில்லையே!? 🙁

    Reply

Join the conversation