Hugo (2011) – English

by Karundhel Rajesh March 31, 2012   English films

ஜோர்ஜ் மெலியெஸ் (Georges Méliès). முப்பதுகளில் ஃப்ரான்ஸில் இறந்துபோன ஒரு மனிதர். ஃப்ரான்ஸின் மோம்பர்நாஸ் (Montparnasse) ரயில்நிலையத்தில், சாதாரணமான ஒரு பொம்மைக்கடையை வைத்திருந்தவர்.புகழின் உச்சத்தில் இருந்துவிட்டு, அதன்பின் ஒரேயடியாக வாழ்வின் சரிவைச் சந்தித்தவர் இவர். Visionary என்றே சொல்லும் அளவு,  ஃப்ரெஞ்ச் படங்களின் தலையாய இயக்குநர்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து, இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப சில வருடங்கள் வரை புகழேணியின் உச்சத்தில் விளங்கியவர். அதன்பின், முதல் உலகப்போர் தொடங்கியதன் விளைவாக, திரைப்படங்கள் எடுப்பதை நிறுத்தியவர். சிறுகச்சிறுக மக்களால் மறக்கப்பட்டு (இத்தனைக்கும் இவரது படங்கள் பெரிதும் புகழ்பெற்றே இருந்தன), இறந்தவர்.

அந்த மனிதரின் கதையைச் சொல்லும் படமே ‘Hugo’.

ப்ரயன் செல்ஸ்நிக் (Brian Selznick) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். புகழ்பெற்ற குழந்தை எழுத்தாளர். பல புத்தகங்களுக்கு ஓவியங்களும் வரைந்திருக்கிறார். இவர் எழுதிய புத்தகம் ‘The Invention of Hugo Cabret’. 2007 ஜனவரியில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படமே Hugo.


Hugo என்பவன், மோம்பர்நாஸ் ரயில்நிலையத்தில் வசிக்கும் சிறுவன். அவனது தந்தை, கடிகாரங்கள் செய்பவர். ஒரு தீவிபத்தில் அவர் இறக்க நேரிட்டதால், அவனது மாமா அவனை எடுத்துவந்து, ரயில்நிலையத்தில் கடிகாரங்களை இயக்கும் தனது பணியில், அஸிஸ்டெண்ட்டாக சேர்த்துக்கொள்கிறார். அந்த ரயில்நிலையத்தில் இருக்கும் எண்ணற்ற கடிகாரங்களை நின்றுவிடாமல் பார்த்துக்கொள்வதே ஹ்யூகோவின் வேலை. ரயில்நிலையம் என்பது எண்ணற்ற மனிதர்களாலும் அவர்களது தினசரி நடைமுறை வாழ்க்கைக்கான விஷயங்களாலும் ஆனது என்பதால், ஹ்யூகோவின் பொழுது சுவாரஸ்யமாகவே கழிகிறது. அவ்வப்போது உணவுப்பொருட்களை அங்கிருக்கும் கடைகளில் திருடுவது, ரயில்நிலையத்தில் பொம்மைக் கடை வைத்திருக்கும் ஒரு தாத்தாவின் கடையில், சிறுசிறு சாதனங்களைத் திருடுவது என்று அவனது வாழ்க்கை கழிகிறது.

ரயில்நிலையத்தில் ஹ்யூகோ வசிக்கும் இடத்தில் ஒரு இரும்புப் பொம்மை இருக்கிறது. தற்கால இயந்திர மனிதர்களை ஒத்திருக்கும் அந்தப் பொம்மையைத்தான் சரி செய்துகொண்டிருக்கிறான் ஹ்யூகோ. இறந்துபோன தனது தந்தை, தனக்கென்று எதுவோ ஒரு செய்தியை அந்தப் பொம்மையில் ஒளித்திருக்கிறார் என்பது அவனது நம்பிக்கை. ஆனால், எத்தனை முயற்சித்தும், அந்தப் பொம்மைக்குத் தேவையான ஆட்டின் வடிவ சாவி கிடைப்பதில்லை. அந்த சாவியைத் திருப்பினால் மட்டுமே அந்தப் பொம்மை இயங்கும்.ஹ்யூகோவின் தந்தையால்,ஒரு ம்யூஸியத்தில் கண்டெடுக்கப்பட்டது இந்தப் பொம்மை.

ஒருநாள், வழக்கமாகத் திருடும் பொம்மைக்கடையில், தாத்தாவிடம் மாட்டிக்கொள்கிறான் ஹ்யூகோ. அவனது பாக்கெட்களை பரிசோதிக்கும் தாத்தாவிடம், ஒரு புத்தகம் மாட்டிக்கொள்கிறது. அந்தப் புத்தகத்தில், ஹ்யூகோவிடம் இருக்கும் பொம்மையை இயங்கவைக்கும் வழிமுறைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அந்தப் புத்தகத்தைப் பார்த்ததும், தாத்தா உணர்ச்சிவசப்படுகிறார். புத்தகத்தை எரிக்கப்போவதாகச் சொல்லி, அவனைத் துரத்திவிடுகிறார். தந்தையின் நினைவாகத் தன்னிடம் இருக்கும் ஒரே விஷயமும், அந்தப் புத்தகம் இல்லாமல் நாசமாகிவிடும் என்பதால், தாத்தாவின் பின்னாலேயே செல்கிறான் ஹ்யூகோ. பலனில்லை.

அன்று இரவு. தாத்தாவின் வீடு. வெளியே நின்றுகொண்டிருக்கும் ஹ்யூகோ, மாடியில் இருக்கும் தாத்தாவின் பேத்தி இஸபெல்லைப் பார்க்கிறான். அவளை வெளியே வரச்சொல்லி, தனது புத்தகத்தைப் பற்றிக் கூறுகிறான். இஸபெல் அவனுக்குத் தைரியம் சொல்கிறாள். மறுநாள், தாத்தா, புத்தகத்தை எரித்துவிட்டதாக ஹ்யூகோவிடம் சொல்லி, அதன் சாம்பலையும் தருகிறார். மனமுடைந்துபோகும் ஹ்யூகோவை, அங்கே வரும் இஸபெல் தேற்றுகிறாள். புத்தகம் இன்னும் தாத்தாவிடம் தான் இருக்கிறது என்றும், இரவில் தாத்தா புத்தகத்தைப் பார்த்துக்கொண்டே கண்ணீர் விட்டார் என்றும் சொல்கிறாள் இஸபெல்.

சிறுகச்சிறுக இருவரும் நண்பர்களாகின்றனர். இஸபெல்லின் தாத்தா, எக்காரணம் கொண்டும் அவளைத் திரைப்படங்களுக்கு அழைத்துச் சென்றதேயில்லை. இது தெரிந்த ஹ்யூகோ, திருட்டுத்தனமாக அவளை ஒரு திரைப்படத்துக்கு அழைத்துச் செல்கிறான். திரைப்படங்கள் இஸபெல்லுக்குப் பிடித்துப் போகிறது.ஹ்யூகோவின் தந்தை,அடிக்கடி அவனைத் திரைப்படங்களுக்கு அழைத்துச்செல்வார் என்று நினைவுகூர்கிறான் ஹ்யூகோ. குறிப்பாக, ராக்கெட் ஒன்று, சந்திரனின் கண்ணில் மோதும் படம் ஒன்று அவனுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் சொல்கிறான்.

ஒருநாள், திடீரென, இஸபெல்லின் கழுத்தில் இருக்கும் ஆட்டின் வடிவ சாவியைப் பார்க்கிறான் ஹ்யூகோ. பரபரப்பு தொற்றிக்கொள்ள, அவனது இடத்துக்குச் சென்று, அந்த சாவியின் மூலம் இயந்திரப் பொம்மையை இயக்குகிறான். அது, இவனுக்குப் பிடித்த, நிலாவின் கண்ணில் ராக்கெட் இறங்கும் படத்தை வரைகிறது. அந்தப் படத்தை வைத்து, சிறிதுசிறிதாக தகவல் சேகரிக்கும் இவ்விருவருக்கும், அந்தத் திரைப்படத்தை எடுத்தவரின் பெயர் ஜோர்ஜ் மெலியெஸ் என்று தெரிகிறது. அந்த மெலியெஸ் தான் ரயில்நிலையத்தில் கடை வைத்திருக்கும் தாத்தா என்றும் அறிந்துகொள்கிறான் ஹ்யூகோ. அவரது திரைப்படம் ஒன்றைப் பொக்கிஷம் போல வைத்திருக்கும் ’டபார்ட்’ என்ற மனிதனை நூலகத்தில் சந்திக்கிறார்கள் இருவரும். உண்மையைத் தெரிந்துகொள்ளும் டபார்டுக்கு, இறந்துவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கும் தனது குருவான இயக்குநர் மெலியெஸை சந்திக்கப்போவதில் சந்தோஷம்.மூவரும் மெலியெஸின் வீட்டுக்குச் செல்கின்றனர். அங்கிருக்கும் இஸபெல்லின் பாட்டி, ஒரு பழையகால நடிகை என்று டபார்ட் அறிந்துகொள்கிறார். மெலியெஸ் அங்கு வருகிறார்.

மெலியெஸின் மூலமாக, அவரது பழைய கதை நமக்குத் தெரிகிறது. அதன்பின், டபார்டின் முயற்சியால், பல மெலியெஸ் படங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. மெலியெஸ், இஸபெல் மற்றும் ஹ்யூகோ, சந்தோஷமான குடும்பமாக வாழத்துவங்குகின்றனர்.


இந்தக் கதையில், எதுவும் பெரிதாக இல்லை. படத்தின் இரண்டாம் பாதி, ஜோர்ஜ் மெலியெஸைப் பற்றிய ஒரு டாக்குமெண்ட்ரி போலவே செல்கிறது. படத்தின் அலுப்பான பகுதியும் அதுதான். ஆனால், கதையில் கோட்டை விட்டதை, தொழில்நுட்பத்தின் மூலம் சரிக்கட்ட முயன்றிருக்கிறார் ‘தாத்தா’ ஸ்கார்ஸெஸி. அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.

மெலியஸைப் பற்றி இப்படம் வெளிவரும்முன்னரே கேள்விப்பட்டிருக்கிறேன். எப்போதாவது அதனை எழுத வேண்டும் என்றும் நினைத்திருக்கிறேன். இப்போது, இப்படத்தில் அவரைப்பற்றி விபரமாகவே கவர் செய்யப்பட்டிருப்பதால், படத்தைப் பார்த்தாலே போதும்; தனியாக எதுவும் எழுதத் தேவையில்லை. அதனாலேயே, மெலியஸின் புள்ளிவிபரங்களை விகிபீடியாவில் இருந்து எடுத்து எழுதாமல் விடுகிறேன் (தப்பித்தீர்கள்).

படத்தின் துவக்கம் முதலே, ரயில்நிலையத்தில் நாம் வாழ்வதைப்போலவே ஒரு பிரமை. படத்தின் ஒவொரு காட்சியிலும் ரயில்கள் எப்படியாவது இடம்பெற்றுவிடுகின்றன. அதேபோல், ரயில்நிலையத்தின் பல்வேறு கடைகள், மனிதர்கள், அவர்களின் செய்கைகள் என்று, படம் முழுக்கவே சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கின்றன.

குறிப்பாக, இன்ஸ்பெக்டராக வரும் ஸாச்சா பாரோன் கோஹென். நல்ல கதாபாத்திரத் தேர்வு.  நூலகராக வரும் க்ரிஸ்டோஃபர் லீயும். அதேபோல், மெலியஸாக வரும் பென் கிங்ஸ்லீ. கச்சிதமான தேர்வு. அச்சு அசல், மெலியஸைப்போலவே தோற்றமளிக்கிறார்.

படத்தின் கதையும் திரைக்கதையும், கொஞ்சம் மெதுவாகவே செல்கின்றன. ஆனாலும், முதல் பாதி எனக்குப் பிடித்திருந்தது. இரண்டாம் பாதிதான் என்னை சோதித்துவிட்டது.

இப்படி ஒரு படத்தை எடுக்க ஸ்கார்ஸெஸி எதற்கு என்று ரொம்ப நேரம் யோசித்தேன். எப்படியோ புத்தகம் அவருக்குப் பிடித்துவிட்டது போலும். இருந்தாலும், இப்படத்தின் தொழில்நுட்ப நேர்த்திக்காகவும், இன்னும் பயங்கர சுறுசுறுப்பாகப் படம் எடுத்து வரும் ஸ்கார்ஸெஸி என்ற கிழவருக்காகவும் இப்படத்தைத் தாராளமாகப் பார்க்கலாம்.

முதல்பாதியைப் பார்த்தவுடன், என் மனதில் இனம்புரியாத ஒரு சோகம் தோன்றியது. ஆனால், இரண்டாம் பாதியில், அந்த சோகம், எரிச்சலாக மாறவிருந்த நேரத்தில், படம் முடிந்துவிட்டது.

பிகு

  • இப்படத்தின் ஆரம்பக் காட்சி, இதுவரை நான் பார்த்திருக்கும் அத்தனை படங்களிலும், எனக்கு மிகப்பிடித்த ஆரம்பக் காட்சிகளில் ஒன்று (Inciting Incident). ஹ்யூகோவைப் பற்றியும், அவனது செய்கைகள் பற்றியும் ஒரே நிமிடத்தில் நமக்கு அறிமுகப்படுத்திவிடுகிறார் ஸ்கார்ஸெஸி.தாத்தாவைப் பாராட்டுவதைத்தவிர வேறு வழியில்லை.
  • இப்படம், இந்த வருட ஆஸ்கரில் பதினோரு பிரிவுகளில் நாமிநேட் செய்யப்பட்டதையும், அதில் ஐந்து பிரிவுகளில் ஆஸ்கர்கள் வாங்கியிருப்பதையும் நண்பர்கள் மறந்திருக்கமுடியாது.இப்போது யோசிக்கும்போது, Artist படத்துக்கு அளிக்கப்பட்ட சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் விருதுகள், ஹ்யூகோவுக்கே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது (ஆஸ்கர்களுக்கு முன்னால், Descendants படத்தைப் பற்றி அப்படி நினைத்தேன். ஆனால், இப்போது ஹ்யூகோ ஒரு நல்ல சாய்ஸ் என்று தோன்றுகிறது. எப்படியும், Artist ஒரு டண்டணக்கா என்ற என் எண்ணத்தில் மாற்றமில்லை).
  • இந்த வயதிலும், விதவிதமான களங்களில் இயங்கும் ஸ்கார்ஸெஸியை நினைத்தபோது, அதே வயதுடைய வேறு சில ’இந்திய’ இயக்குநர்கள் நினைவு வந்தனர். இருந்தாலும், இது அவர்களைப் பற்றிய கட்டுரை இல்லை என்பதால், இத்தோடு இது போதும்.
  • மெலியெஸின் ஜீனியஸைப் பற்றி, என்று கூகிளில் தேடிப்பிடித்துப் படிக்கலாம் (அல்லது அவரது படங்களைப் பார்க்கலாம்). கிட்டத்தட்ட ஐந்நூறுக்கும் மேற்பட்ட படங்களை எடுத்திருக்கிறார் மெலியஸ். ஆனால், அக்காலத்தில், பல படங்கள், வெகு சில நிமிடங்களே ஓடியதையும் மறந்துவிடக்கூடாது.
  • Hugo படத்தின் ட்ரெய்லர் இங்கே.
    http://www.youtube.com/watch?v=hR-kP-olcpM
  Comments

18 Comments

  1. i was wondering why hugo was not reviewed.. DONE
    i cannot chose between decedents and hugo 🙂

    Reply
  2. //தேவையான ஆட்டின் வடிவ சாவி கிடைப்பதில்லை.//
    இதய வடிவ சாவிதானே சார்.. ஆடுன்னா நம்ம goatஐத்தான் நெனச்சுக்குவோம்..

    //இப்போது ஹ்யூகோ ஒரு நல்ல சாய்ஸ் என்று தோன்றுகிறது.//
    நிஜமாக?? Hugoவை விட Descendants படம் பெட்டருனு எனக்கு தோணிச்சு!

    Reply
  3. ^^^^ எல்லாம் அறிந்து எழுதி வைத்த அந்த மஹானுக்கு இந்த சிஷ்யனின் வாழ்த்துக்கள். இன்னும் நிறைய தீர்க்க தரிசனங்கள் சொல்லாமே?

    விமர்சனத்திற்கு நன்றி பாஸ். ஏற்கனவே படம் பார்த்தாச்சு. ஆனா The Help, Descendants அளவிற்கு படம் என்னை இம்ப்ரஸ் பண்ணல. ஆனா விஷுவல் எஃபெக்ட் விருது கண்டிப்பா கிடைக்க வேண்டியது தான். அதற்காகவும் பார்க்கலாம்.

    Reply
  4. ச்சே. அந்த ‘ஏற்கனவே’ங்கற வார்த்தை இண்டென்ஷன்ல் இல்லை. அதற்க்காக மன்னிக்கனும்.

    ஹா.ர : அவரு சன்யாசம் வாங்கினு போய்ட்டாராம். அப்பப்ப ‘நான் யார் தெரியுமா’-ன்னு உதார் விட்டுகிட்டு வாய்ல லிங்கம் எடுத்துகினு கருந்தேள் உயிரை வாங்கிட்டு இருக்காராம்.

    பாவம் அவரை ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்.

    Reply
  5. //பாவம் அவரை ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்.//

    சரி சரி … அந்த மஹான் அவரால முடிஞ்சளவு சேவையை செய்து விட்டு டயர்டாகி போயிட்டாரு. அவரு ரெஸ்ட் எடுக்கட்டும். மறுபிறவி எடுத்தால் சந்தோஷம் தான்.

    Reply
  6. Tarkovksy – herzog – scorsese, இந்த மூணு பேரு தான் எனக்கு ரொம்ப ரொம்ப புடித்த இயக்குனர்கள். இந்த வயசுல, இந்த படத்த எடுக்கும் போது 70 வயசு. ஆனா, பழைய மாவையே அரைக்காம புதுசா ஒரு டெக்னிக்க உபயோகப்படுத்திபாக்கவே ஒரு தனி கட்ஸ் வேணும். of course, ஸ்டுடியோகளின் பேக் அப் பெரிய தலைகளுக்கு எப்பவும் உண்டுதான் என்றாலும்……..

    இன்னும் படம் பாக்கல.. நல்ல பிரிண்ட் வரலையாம்…..

    Reply
  7. From Wiki

    In 1902, agents of Thomas Edison bribed a theater owner in London for a copy of A Trip to the Moon by Georges Méliès. Edison then made hundreds of copies and showed them in New York City. Méliès received no compensation. He was counting on taking the film to the US and recapture its huge cost by showing it throughout the country when he realized it had already been shown there by Edison. This effectively bankrupted Méliès.

    Reply
  8. பாஸ் தியேட்டர்ல பாத்திங்களா இல்ல.., டி.வி.டிலையா ??
    இது வரைக்கும் நா 3Dல பாத்த எல்லா படங்களுமே மொக்க தான் அதுனால இதை 3Dல பாக்கணும்ன்னு ரொம்ப நாளா வெயிட்டிங்.,இந்தியன் ரிலீஸ் முன்னால மார்ச் 16-ன்னு போட்டு இருந்தாங்க இப்போ TBC ன்னு போட்டுடாங்க..,

    Reply
  9. @ divya.P – Oh yea… Wanted to write about it ASAP, and இதான் என்னோட ‘டக்கு’ 🙂

    @ ஆள்தோட்ட பூபதி – அந்த மகானின் கட்டுரையை அப்போவே படிச்சிட்டோம்ல 🙂 .. சந்நியாசத்தை விட்டுரச்சொல்லி அந்த மகானை திரும்ப திரும்ப கூப்புட்டுக்கினே இருக்காங்க மக்கள் 🙂

    @ JZ – ஹாஹ்ஹா 🙂 .. ஆமாம் தலைவா… உங்க ரீதில யோசிச்சி பார்த்தேன். செம்ம காமெடியா இருந்தது. “ஆட்டின் சாவி”… ஹீ ஹீ …பெர்சனலா, ஹ்யூகோ ஏன் பெட்டர்னா, அதை எடுத்த விதம் என்பது என் கருத்து. But opinions differ… No issues.

    @ ஹாலிவுட் ரசிகன் – ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்கி பாஸ் 🙂 … செகண்ட் ஹாஃப் போர் தான். ஆனா Scorsese + visual effects + Melies. அதான் எனக்கு புடிச்சது.

    @ பின்னோக்கி – அது நான் இல்ல தலைவா….ஆனா கொஞ்சம் கொஞ்சம் resemblence கீது. நல்லவேளை மீசைய வெச்சேன்

    @ கொழந்த – சூப்பர் ப்ளூ ரே டிவிடியே வந்தாச்சு.

    @ Arun Radhakrishnan – It’s a very sad and depressing news. But, I have read about Edison’s such mean ways. அவரு இன்னும் பல பேரை இப்புடி பண்ணிருக்காராம். அந்த காலத்து பில் கேட்ஸ் போல .. Thanx for sharing the information friend…

    @ Anand – படம் பெங்களூர்க்கு வந்துட்டு எப்பவோ போயாச்சு. February 24லயே ரிலீஸ் ஆயிடுச்சு தலைவா…ஆனா நான் பார்த்தது ப்ளூ ரே (rip)

    Reply
  10. அப்புடியா :((.. எனக்கு தெரிஞ்சு சென்னைக்கு வரவே இல்ல..

    Reply
  11. I don’t know about you guys.. I live in paris. To go to my university I have to change my trains in Montparnasse station every day. But the visualization of the station doesn’t look like Montparnasse… It look like Paris Nord station. Particularly, when the camera zoom in to the platform from top angle( starting )… As per the truth,Georges Méliès lived in Montparnasse.. But as per the movie + visual shots, it shows Paris Nord station…

    Reply
  12. @ Manoj – That might be true, as , only a Parisian can tell about the real location. As far as I am concerned, I have read about the Montparnasse station and since Méliès lived there, I assumed it is the case. But, I believe you in this location data Manoj …:-)

    Reply
  13. @ Rajesh, I can understand that. I gave it just for an info. # நானும் Paris லே இருக்கேன்னு காட்டிக்கனும் லே 🙂

    Reply
  14. Alien thodar yenga sir kanom………..

    Reply
  15. Thala…

    Movie last scene with Kingsley…
    copied from the movies Metropolis and Nosferatu…

    Good writing…
    keep on writing….

    Reply

Join the conversation