இளையராஜா, கமல்ஹாசன் மற்றும் உன்மத்தம்
எனக்கு ஒரு எண்ணம், கடந்த பல வருடங்களாக இருந்து கொண்டே இருந்தது. அதனை இப்போது முற்றிலுமாக confirm செய்து, உணர்ந்துகொண்டே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன். நான் எண்பதுகளின் திரைப்படங்களுக்கு – குறிப்பாக, சத்யராஜ், ரஜினி & கமல் நடித்தவை – ரசிகன் என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். அதேபோல், அப்படங்களின் பாடல்களுக்கும் நான் ரசிகன். இதற்கு முதன்மையான காரணம், ’85லிருந்து, கிட்டத்தட்ட 2000 வரை, எனது தாய்மாமாவின் இசைத்தட்டு நூலகத்தில் 24 மணி நேரமும் நான் குடியிருந்ததே. ஆகவே, இயற்கையாகவே, இளையராஜாவின் அப்போதைய பல பாடல்களுக்கும் ரசிகன். தொண்ணூறுகளில் இளையராஜா ரிடையர் ஆக ஆரம்பித்தபின், மிகச்சில பாடல்களையே அந்தக் காலகட்டத்தில் நான் ரசித்திருக்கிறேன். காரணம், ரஹ்மானின் எழுச்சி. அதன்பின் ரஹ்மானின் ரசிகன் ஆனேன். ஆனால், 80களில் இளையராஜா இசையமைத்த பல பாடல்களை எப்போதும் மறக்க முடியாது.
இந்தக் கட்டுரையை நான் எழுதக் காரணம், கடந்த சில நாட்களில், 2000க்குப் பிறகு இளையராஜா இசையமைத்த பாடல்கள் பலவற்றை மறுபடி கேட்டதுதான். அதிலிருந்து, எனது பழைய எண்ணம் உறுதிப்பட்டது. அது என்ன எண்ணம்? அதற்கு முன், இளையராஜாவை அவரது capacity தெரிந்து, மிகத்துல்லியமாக, கனகச்சிதமாக உபயோகப்படுத்திக்கொண்ட இன்னொருவரைப் பற்றியும் பார்க்கவேண்டும்.
அவரது பெயர் கமல்ஹாசன்.
இதுவரை கமல்ஹாசன் தயாரித்துள்ள படங்களை எடுத்துக்கொண்டால், அவற்றில் ஐந்து படங்கள் நீங்கலாக (கடமை கண்ணியம் கட்டுப்பாடு – இளையராஜா இசையமைத்திருந்தாலும், பாடல்கள் இல்லை, பாசவலை – மரகதமணி, Chachi 420 – விஷால் பரத்வாஜ், நள தமயந்தி – ரமேஷ் விநாயகம், உன்னைப்போல் ஒருவன் – ஷ்ருதி ஹாசன்), மற்ற அத்தனை படங்களுக்கும் இளையராஜாதான் இசையமைத்திருக்கிறார். இவற்றில், 80கள் மற்றும் தொண்ணூறுகளில் வந்துள்ள படங்களை நாம் இப்போது கணக்கில் எடுத்துக்கொள்ளப்போவதில்லை. மாறாக, 2000த்தில் வந்த ஒரு படத்தையும், 2004ல் வந்த மற்றொரு படத்தையும் எடுத்துக்கொண்டு, அவற்றில் இருந்து சில பாடல்களைப் பார்த்து, அதன்மூலம் நான் சொல்லவந்த விஷயத்தை எழுதுவதே நோக்கம்.
தமிழ்த்திரையுலகைப் பொறுத்தவரை, பாடல்களின் முக்கியத்துவத்தை சொல்லவே வேண்டியதில்லை. குறிப்பிட்ட காட்சியின் அழுத்தத்தையும், உணர்வு சார்ந்த தாக்கத்தையும், படம் பார்க்கும் ஆடியன்ஸின் மனதில் புகுத்த, பாடல்கள் பெரிதும் பயன்படுகின்றன. உதாரணத்துக்கு, நாயகன் படத்தின் ‘தென்பாண்டிச் சீமையிலே’ பாடலை எடுத்துக்கொள்ளலாம். படத்தில், மூன்று விதமான இப்பாடலின் வடிவங்கள் உபயோகப்படுத்தப்படுவதைப் பார்க்கலாம். இளையராஜா பாடியுள்ள வடிவம், கமல்ஹாசன் பாடியுள்ள இசையில்லாத வடிவம், இசையுடன் கூடிய கமல்ஹாசனின் இறுதி வடிவம் ஆகியவை இவை. இந்த மூன்று பாடல்களுமே, மணிரத்னத்தால் கச்சிதமாகப் படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆடியன்ஸின் மனதை நெகிழவைக்கும் முக்கியமான தருணங்களிலெல்லாம் இப்பாடல்கள் ஒலிப்பதை மறக்கமுடியாது. அதேபோல், அபூர்வ சகோதரர்கள் படத்தின் புல்லாங்குழல் தீம் இசை. இதைப்போல் பல உதாரணங்கள் சொல்லமுடியும்.
அப்படி, கச்சிதமான பாடல்கள், முக்கியமான காட்சிகளின் பின்னணியில் உபயோகப்படுத்தப்பட்டால், காட்சிகளின் அழுத்தமும் தாக்கமும் மிக அதிகமாகவே கூடி, படம் பார்க்கும் ஆடியன்ஸை உன்மத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் என்பதைத் துல்லியமாக அறிந்துவைத்திருப்பவராக, நான் அறிந்தவரையில், கமல்ஹாசன் மட்டுமே இருந்துவருகிறார் (உன்மத்த நிலை என்பதை மனதில் வையுங்கள்). வேறு பலரும் இப்படிக் காட்சிகளை வைக்கும்போதிலும், கமல் வடிவமைக்கும் காட்சிகள், நான் இனிமேல் கூறப்போகும் உதாரணங்களில் தனித்துத் தெரிவதை நண்பர்கள் உணரமுடியும் என்று நம்புகிறேன்.
சரி. இப்போது, உதாரணங்களைப் பார்ப்போம்.
இரண்டே உதாரணங்கள் தான் பார்க்கப்போகிறோம். அதாவது, இரண்டு படங்கள். அவற்றில் முதல் படம், 2000ல் வெளிவந்த ஹே ராம்.
ஹேராம் திரைப்படம் சொல்லவரும் கருத்து என்ன, அதில் கமல்ஹாசன் நமக்குப் புரியவைக்கும் விஷயம் என்ன என்பதெல்லாம் மறப்போம். ஒரே ஒரு சிச்சுவேஷனை மட்டும் நோக்குவோம்.
படத்தின் கதாநாயகன், தனது மனைவியுடன், தீபாவளி அன்று, ‘பாங்’ குடித்துவிட்டு, நேரம் செலவழிக்கிறான். அப்போது, பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்கிறது.
மதுவோ, கஞ்ஜாவோ அடித்துவிட்டு, trance music கேட்டிருக்கிறீர்களா? குறிப்பாக, கஞ்ஜாவை அடித்துவிட்டு இந்த இசையைக் கேட்டால், பைத்தியம் பிடிக்கும். இதில் சிறிது கூட அதிசயோக்தியாக சொல்லப்படவில்லை. பெங்களூரில், Purple Hayze என்ற pub, மிகப்பிரபலம். அங்கே பெரும்பாலும் trance music தான் பின்னணியில் போடப்படும். அங்கு சென்றிருக்கும் நண்பர்கள் கவனித்திருக்கலாம்.
இதை ஏன் சொன்னேன் என்றால், படத்தில் கதாநாயகன், பாங் அடித்துவிட்டு என்னென்ன மனப்பிறழ்வுகளை அனுபவிக்கிறானோ, அவற்றை, அந்தப் பாடலைக் கேட்பதன் மூலம், நாமும் அனுபவிக்கமுடியும். அதுதான் அப்பாடலின் விசேஷம். இளையராஜா இசையமைத்ததில், நாடி நரம்புகளை ஒரு ஆட்டு ஆட்டி, கேட்பவர்களை உன்மத்தம் கொள்ளவைக்கும் (வெகுசில) பாடல்களில், இப்பாடலும் ஒன்று.
இப்படியொரு பாடலை, தானாகவே இளையராஜா கொடுத்திருக்க மாட்டார். ஏனெனில், திரைப்பட ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். ஹேராம் படத்துக்கு ஆரம்பத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டவர் எல். சுப்ரமண்யம். அத்தனை பாடல்களையும் இசையமைத்துக்கொடுத்துவிட்டு, பாடல்கள் படமாகவும் ஆக்கப்பட்டபின், கமலுக்கும் சுப்ரமண்யத்துக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு (அந்தக் காரணம் இப்போது வேண்டாம்) சுப்ரமணியத்தை நீக்கினார் கமல். அதன்பின் கமல் வந்தது, நேராக இளையராஜாவிடம். இசையமைக்கச் சம்மதித்த இளையராஜாவிடம், படத்தின் பாடல்கள் ஏற்கெனவே படமாக்கப்பட்ட விபரம் தெரிவிக்கப்பட்டது. அதன்பின், அந்தக் காட்சிகளைப் பார்த்த இளையராஜா, அவற்றுக்குத் தக்கவாறு கச்சிதமாக (ஸீன் சீக்வென்ஸுக்கு எந்தக் குந்தகமும் ஏற்படாதவாறு) இசையமைத்துக்கொடுத்த பாடல்கள்தாம் ஹேராமின் இறுதியான பாடல்களாக வெளியிடப்பட்டன.
ஆக, கமலின் இன்புட்கள் இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு பாடல் வெளிவர சாத்தியமில்லை. எந்த இசையமைப்பாளராக இருந்தாலும், அவர்களின் படைப்பாற்றலின் அடியாழம் வரை அவர்களை விரட்டி, அவர்களின் அற்புதமான இசைத்திறமையை முழுதாக வெளிக்கொணர, அந்த ஆற்றல் உள்ள இயக்குனர்கள் தேவை. அந்தத் திறமை, கமலுக்கு வெகுவாகவே இருக்கிறது என்பதும் எனக்கு மிக நன்றாகவே தெரியும்.
அந்தப் பாடல்தான், அஜய் சக்ரவர்த்தியால் அற்புதமாகப் பாடப்பட்ட ‘இசையில் தொடங்குதம்மா’ என்ற அற்புதம். ஒருமுறை கேட்டாலே, கேட்பவர்கள் அத்தனைபேரையும் சந்நதம் கொண்டு ஆட வைக்கும் பாடல் இது.
அந்தப் பாடலை இங்கே காணலாம்.
காட்சிகளின் பின்னணியில் தான் இந்தப் பாடல் தொடங்குகிறது. ஆனால், போகப்போக, கதாநாயகன் பாங் அடித்த பின், பாடல் மெதுவாக முன்னணிக்கு வருகிறது. அப்போது ஒலிக்கும் பாடலின் இசையை கவனித்துப் பாருங்கள்.
கூடவே, இந்த அற்புதத்தை compliment செய்யும் காட்சிகளும் முக்கியமில்லையா? அவையும் கச்சிதமாக கமல்ஹாசனால் வடிவமைக்கப்பட்டிருக்கும் (பாங் அடித்தபின், க்ளோஸப்பில் காண்பிக்கப்படும் ஷெனாய், பிரம்மாண்டமான பொம்மை வீழ்த்தப்படுவது, மனைவியின் அருகாமை இத்யாதி).
ஆக, என் தனிப்பட்ட கருத்தின்படி, பாடலும் சரி, இசையும் சரி, காட்சிகளும் சரி – கச்சிதமாகக் கலந்து, திரையில் காண்பிக்கப்பட்ட உன்மத்தம் கொள்ளவைக்கும் பாடல்களில், இது முதலிடம் பெறுகிறது.
இந்தப் பாடலை வைத்திருக்கும் நண்பர்கள், ஹெட்ஃபோன் அல்லது இயர்ஃபோன் அல்லது கார் ஸ்டீரியோ மூலமாக, அட்லீஸ்ட் ஒரு முறை, தனிமையில் நல்ல வால்யூமோடு கேட்டுப்பாருங்கள். மெய்மறப்பீர்கள் என்பது ஒரு understatement.
(பாடலின் ஆரம்ப கணம். தடால் தடாலென்று ஒலிக்கும் பேரிகை. அதன் பின்னணியில் தட்டப்படும் மற்றொரு சிறிய பேரிகை (என் பாஷையில் டமாரம்). முதல் செகண்டின் இறுதியில் இருந்து மூன்றாம் செகண்டின் பாதிவரை, ஐந்து முறை ‘தட் தட் தட் தட் தட்’ என்று பின்னணியில் தட்டப்படும் அந்த சிறிய டமார ஒலி, அதன்பின் பாடலின் எந்த கணத்திலும் அதே போன்ற தாளலயத்துடன் வரவே வராது. பாடலின் ஆரம்பத்தை ஒரு தூக்கு தூக்கும் அந்த ஒலி, அட்டகாசம்! பொதுவாக, இதைப்போன்ற சிறிய ஒலிகள், ரஹ்மானின் இசையில் பளிச்சிடும் (அவற்றைப் பற்றியும் ஸ்டடி செய்து வைத்திருக்கிறேன். முடிந்தால் விரைவில் எழுதுகிறேன்). சொல்லவந்த விஷயம், இளையராஜாவின் இசையில் அப்படிப்பட்ட டக்கரான பின்னணி ஒலிகள் கொஞ்சம் குறைவுதான். ஆனால், அந்த ஏக்கத்தை இப்பாடல் தீர்த்துவைத்துவிட்டது. அதேபோல், பாடலின் முதல் சரணத்துக்கு முன் வாசிக்கப்படும் அந்த ஷெனாய் – Genius!! அந்த ஒலியில் வழிந்து ஓடும் தாபமும் ஏக்கமும், எழுத்தினால் சொல்ல முடியாதது. அதேபோல், இரண்டாவது சரணத்தில் வரும் வரிசையான, ஒரே சீரான டமார ஒலிகள். அதனைத் தொடர்ந்த ஸாரங்கி இசை. ‘பூந்து விளையாடுறது’ என்பது இதுதான்!)
இது முதல் உதாரணம். அடுத்த உதாரணமாக, 2004ல் வெளிவந்த மற்றொரு படம். அதன்பெயர் – விருமாண்டி.
படத்தில் ஒரு குறிப்பிட்ட சிச்சுவேஷன். கதாநாயகன், அவனது கிராமத்துச் சாமியான விருமாண்டியை, அவனது நண்பர்களுடன், விருமாண்டி கிணற்றில் நுழைந்து மூடப்பட்ட நாளில் வழிபடுகிறான். இந்த இடத்தில், பின்னணியில் ஒலிக்கிறது ஒரு பாடல்.
கர்ணகடூரமான குரலில், தடதடவென்ற இசையமைப்புடன், இப்பாடலைப் பாடியவர் இளையராஜாவேதான் என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும்.
‘விருவிருமாண்டி விருமாண்டி’ என்ற இப்பாடல்தான் அந்தப் படத்திலேயே எனக்குப் பிடித்தமான இரண்டு பாடல்களில் ஒன்று (மற்றொரு பாடல் – கருமாத்தூர் காட்டுக்குள்ளே). இந்தப் பாடலையும், காட்சிக்குத் தேவையான வேகத்துடன் படமாக்கியிருப்பார் கமல்ஹாசன். ஆனால், இந்தப் பாடலின் முழு உபயோகமும், படத்தின் இரண்டாம் பாதியின் கடைசியில் – க்ளைமேக்ஸில் தான் வருகிறது. அதைப்பற்றித்தான் பார்க்கப்போகிறோம்.
க்ளைமேக்ஸ். கதாநாயகன் விருமாண்டி, சூப்ரின்டென்ட்டின் போலீஸ் உடையை அணிந்துகொண்டு வெளியேறுகிறான். காரணம்? கொத்தாளத் தேவனைத் தடுப்பதே. இந்த நேரத்தில், வெளியே கொலைவெறி பிடித்த பிற கைதிகள் தப்பித்து ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர். விருமாண்டி வெளியேறுவதை படம் பார்க்கும் ஆடியன்ஸின் மனதில் பதியவைக்க என்ன செய்ய வேண்டும்?
இங்கேதான் ‘விருவிருமாண்டி விருமாண்டி’ பாடலின் ஹைஸ்பீட் வெர்ஷன் உதவுகிறது.
‘கர்ப்பக்கெரகம் விட்டு சாமி வெளியேறுது… இது நியாயத் தீர்ப்பு கூறும் நாளுடா.. தர்மம் பூட்டுப்போட்டா உள்ள அடங்காதுடா.. அத்த தடுக்குறவன் இப்ப ஆருடா’ என்று தொடங்கும் இப்பாடல், படத்தின் சிச்சுவேஷனோடு சேர்த்து, பார்ப்பவர்களை உடனடியாக வெறிகொள்ளவைப்பதில் பெருவெற்றி அடைகிறது. யோசித்துப் பாருங்கள். எங்கு பார்த்தாலும் கைதிகளின் வெறியாட்டம். திடீரென்று, பெரிய கம்பிக்கதவை தலைக்குமேல் தூக்கிக்கொண்டு*விருமாண்டியும் பிற கைதிகளும் ஓடிவருகின்றனர். எல்லோருக்கும் முன்னால், அலறிக்கொண்டு ஓடிவருகிறான் விருமாண்டி. அவன் தோற்றமே பழைய விருமாண்டி சாமி போலவே இருக்கிறது. மிகச்சரியாக அந்த சூழ்நிலையை ஒரே கணத்தில் மனதில் பதியவைக்கக்கூடிய பாடலாக இது இருக்கிறது.
இதோ இந்த வீடியோவில், 2:16லிருந்து துவங்குகிறது அப்பாடல்.
(இதே படத்தில், கமலின் அறிமுகக்காட்சியில், ஆடியன்ஸின் கரகோஷமா அல்லது பாடலில் வரும் கரகோஷமா என்றே பிரித்தறிய முடியாதவாறு, கமல் வந்து குதிக்கும் ‘கொம்புல பூவச்சுத்தி’ பாடலையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்துக்கொள்ளலாம்).
கமல்ஹாசன், பாடல்களின் முக்கியத்துவத்தையும், காட்சிகளின் பின்னணியில் அவை மக்களின் மனதில் விளைவிக்கும் மாற்றங்களையும் பற்றி நன்றாகத் தெரிந்தவராகவே இருக்கிறார் என்பதற்கு இவை சில உதாரணங்கள். திரைக்கதை அமைக்கும்போது, இப்படிப்பட்ட பாடல் – காட்சி ஒத்திசைவு, வெகுமுக்கியம்.
பி.கு
- * – ஸ்பார்டகஸிலிருந்து உருவப்பட்ட காட்சி.
- இந்த வீடியோக்கள், காப்புரிமையின் கீழ் அகற்றப்படவேண்டும் என்று யாரேனும் கருதினால், தெரிவியுங்கள். அவை அகற்றப்படும்
- இந்தக் கட்டுரையால், கமல்ஹாசன் மீதுள்ள எனது பார்வை மாறிவிடவில்லை.
- கமலின் collaboration இல்லாமல் இளையராஜா இசையமைத்த ‘சந்நத’ பாடல்களில், தேவதை படத்தில் வரும் ‘வாரானே வாரானே வாட்டமுள்ள அரக்கன்‘ பாடலும் ஒன்று. கிளிக்கிக் கேட்கலாம். இப்பாடலை மறந்தேவிட்ட சூழ்நிலையில், நினைவுபடுத்திய நண்பர் பிரன்னா கண்ணனுக்கு நன்றி.
//3. இந்தக் கட்டுரையால், கமல்ஹாசன் மீதுள்ள எனது பார்வை மாறிவிடவில்லை.//
இதுதானே முதலாவதாக வந்திருக்க வேண்டும்?
பொதுவாக எனக்கு கமல் பாடும் பாடல்கள் பிடிக்காது (பேசுறது போல இருக்கும்) அதையும் தாண்டி விருமாண்டியில் வரும் “உன்ன விட” பாட்டு ரொம்ப பிடிக்கும்..
மது , ஜெகன் மோகினி , அழகர் மலை போன்ற படங்களின் இசை குறித்து தங்கள் கருத்து :P..,
ஹேராம் வரும் போது 5-வது படிச்சிட்டு இருந்தேன் கமலுக்கும் என்.சுப்ரமணியத்துக்கும் என்ன பிரச்சனைன்னு உங்கள மாதிரி மூத்த பதிவர்கள் சொன்ன தன்யனாவேன் :)..,
நல்லாருக்கே..எவ்வளவு ரசித்திருந்தால் இப்படி ஒரு லாவகமான சிறப்பான பதிவை எழுத முடியும் ? படிக்கவே அதை உணர முடிந்தது.
ஹேராம் படத்தையும் பாடல்களையும் ரசித்த என்னால் அக்காட்சிகளுக்கு திரும்ப முடிந்தது.அதுவும் நீண்ட நாட்களுக்கு பிறகு..ஞாபகபடுத்திய உங்களுக்கு என் நன்றிகள்.
இளையராஜா சார் ராஜாதான்..எத்தனை பத்தாண்டுகள் சென்றாலும் சரி..அவர் இசையை கேட்டுவிட்டு மறந்தவன் இசை ரசிகனாக இருக்க முடியாது.தொடருங்கள்.நினைவுகள் இனிமையையளிக்கின்றன.
This comment has been removed by the author.
மணிரத்னம் + பாலு மகேந்திரா + பாரதிராஜா + மகேந்திரன், எனக்கு தெரிஞ்சு ராஜாவின் பாடல்களை கெடுக்காம மேற்கொண்டு மெருகேத்தி படமாக்கிய இயக்குனர்கள் (பெரிய கண்டுபிடிப்பு பாரு)………நடிகர்களில் அத கச்சிதமா செஞ்சவரு கமல் ஒருத்தர்தான். ஆரம்ப காலம் முதலே.
பல இயக்குனர்கள், ஏராளாமான ராஜாவின் பாடல்கள் மிகமிக அபத்தமாக படமாக்ககி பாக்கவே முடியாம செஞ்சுட்டாங்க.
—————-
// 1. * – ஸ்பார்டகஸிலிருந்து உருவப்பட்ட காட்சி.
3. இந்தக் கட்டுரையால், கமல்ஹாசன் மீதுள்ள எனது பார்வை மாறிவிடவில்ல //
இந்த கட்டுரை, இது இல்லாமையே முழுமையா இருந்த மாதிரி தோணியது. இப்ப, இத வெச்சு – இனி வரும் கமெண்ட்கள் ட்ராக் மாறக்கூடும். பதிவின் சாரம் பின்னாடி தள்ளப்படும்.
அவரை சரியாக பயன்படுத்தியவர்களில் பாலாவும் ஒருவரோ?
சேது – எங்கே செல்லும் இந்த பாதை
பிதாமகன் – இளங்காத்து வீசுதே
நான் கடவுள் – குறிப்பாக சொல்ல தெரியவில்லை, ஆனால் பின்னணி இசையில் ஒரு வீரியத்தை உணர்ந்தேன்!
-கார்த்திக்
Bladepedia
//மதுவோ, கஞ்ஜாவோ அடித்துவிட்டு, trans music கேட்டிருக்கிறீர்களா? குறிப்பாக, கஞ்ஜாவை அடித்துவிட்டு இந்த இசையைக் கேட்டால், பைத்தியம் பிடிக்கும்.//
அடடே!!! தகவலுக்கு நன்றி!!!
=======
படிக்க ஆரம்பிக்கும் போதே… ஹேராமை சொல்லாம விட்டுடுவீங்களோன்னு நினைச்சேன்.
எனக்கு கமலின் ஹைபிட்ச் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும். குறிப்பா ஹேராமில் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’. ஆனா விருமாண்டி பாடல்கள் எனக்கு எதுவும் பிடிக்கலை. லெட்டவுனாதான் ஃபீல் பண்ணினேன்.
//இந்தக் கட்டுரையால், கமல்ஹாசன் மீதுள்ள எனது பார்வை மாறிவிடவில்ல//
ஹும்….. இதை நானெழுத வேண்டிய ஒரு போஸ்டில் சொல்ல வேண்டியது. வெல் பேர் மட்டும்தான் வேற!! 🙂 🙂
//மதுவோ, கஞ்ஜாவோ அடித்துவிட்டு, trans music கேட்டிருக்கிறீர்களா? குறிப்பாக, கஞ்ஜாவை அடித்துவிட்டு இந்த இசையைக் கேட்டால், பைத்தியம் பிடிக்கும்.//
இத்த நான் சொல்லலாம்ன்னு இருந்தேன்…இவர் சொல்லிட்டாரு. சாதாரணமாவே கஞ்சா அடிச்சா பயித்திம் புடிச்ச மாதிரி தான இருக்கும். மொக்க மியூசிக் கேட்டா கூட ஒரு மார்க்கமா தான தோணும்.
Trans மியூசிக், இத சொல்றீங்களா Trance…இதுவா இருந்தா அது முழுக்க முழுக்க எலெக்ட்ரானிக் – சிந்தசைசர் வகையறாவாவாச்சே…….அதுனால தான் அந்த பாருக்கு கூட Purple hayze….Purple என்பதே ட்ரான்ஸ் தான……..(அதவிட இன்னொரு முக்கியாம காரணமா ஹென்ட்ரிக்ஸின் பாடலா கூட இருக்கலாம்.)
நண்பா,
இசைதெயவம் பற்றிய ஒண்டர்ஃபுல்லான ஒரு கட்டுரையை படிக்க கொடுத்தமைக்கு நன்றி,எல்.சுப்ரமணியம் படத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம் சம்பளம் அதிகம் என்பதால் தான்,தவிர படத்தை உலக அரங்கில் தெரியவைக்கவும் அந்த உத்தி, எல்.சுப்ரமணியம் உலக அரங்கில் மிகப்புகழ் பெற்ற வயலினிஸ்ட். அதன் பின்னர் உரிமையுடன் ராஜாவை சமாதானம் செய்து இதில் இசைமைக்க வைத்திருப்பார்.
விருமாண்டி பேட்டியில் இசைகுறித்து பேசுகையில் ராஜாவிடம் இருந்து புலிப்பால் கறந்து வந்து இருக்கிறேன் என்று கமல் குறிப்பிட்டிருப்பார்.அது தான் எத்தனை உண்மை.
விருமாண்டி மிக நல்ல படம்,சென்னை சிறையில் அதுபோல ஒரு கலவரம் நடந்ததுண்டு,அதை அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்.
என்னளவில் ராஜாவின் இசை ஒரு போதை, வேறு எந்த இசையையுமே கேட்க விடாது.
ஹிஹி. . அது trance தான். அவசரத்துல ஸ்பெல்லிங் மாத்தி அடிச்சிட்டேன். டைனோசாருக்கும் அடி சறுக்கும் :). . மத்த கமெண்ட்களுக்கு நாளை பதில் சொல்வேன்
/////ஆக, கமலின் இன்புட்கள் இல்லாமல் இப்படிப்பட்ட ஒரு பாடல் வெளிவர சாத்தியமில்லை. எந்த இசையமைப்பாளராக இருந்தாலும், அவர்களின் படைப்பாற்றலின் அடியாழம் வரை அவர்களை விரட்டி, அவர்களின் அற்புதமான இசைத்திறமையை முழுதாக வெளிக்கொணர, அந்த ஆற்றல் உள்ள இயக்குனர்கள் தேவை. அந்தத் திறமை, கமலுக்கு வெகுவாகவே இருக்கிறது என்பதும் எனக்கு மிக நன்றாகவே தெரியும்.////
என்னைய யாருணா கில்லுங்க… கனவா நனவா ??? நம்ப முடிலே…
///1. * – ஸ்பார்டகஸிலிருந்து உருவப்பட்ட காட்சி.
3. இந்தக் கட்டுரையால், கமல்ஹாசன் மீதுள்ள எனது பார்வை மாறிவிடவில்லை. ///
ஹப்பா டா… இப்ப தான் பேக் டூ தி ப்யுச்சர்….
////மணிரத்னம் + பாலு மகேந்திரா + பாரதிராஜா + மகேந்திரன், எனக்கு தெரிஞ்சு ராஜாவின் பாடல்களை கெடுக்காம மேற்கொண்டு மெருகேத்தி படமாக்கிய இயக்குனர்க////
எஸ் பி முத்துராமன் & பி வாசு மிஸ்ஸிங் கொழந்த… ) 🙂 🙂 🙂
There are some rare posts from karundhel.comwhich immeditadley changes my mood for a long time..and as of now this one goes above all..superb man!!..u crazy son ofa gun!!.its a mind blowing one!!
நண்பரே!
கமல்+இளையராஜா கூட்டணியின் சிறப்பு பற்றி…சிறப்பாக எழுதி உள்ளீர்கள்.
அருமையான் புரிதல் மற்றும் உணர்வு வெளிப்பாடு!
ஒரு பாட்டுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கிறது நெறைய பேருக்கு தெரியறதில்ல. உங்க பதிவு அத வெளியே கொண்டுவர கண்டிப்பா உதவுதுன்னுதான் நான் சொல்லுவேன். உங்க பதிவ படிச்சிட்டு அந்த பாட்டை கேட்கும்போது ஒரு ஸ்பெஷல் அனுபவம் இருக்கறத மறுக்கமுடியாது. இன்னும் நெறைய இந்த மாதிரி பாட்ட எப்படி கேக்கறதுன்னு சொல்லுங்க!
http://senthilgauthaman.blogspot.com/
தல, சரக்கடிகும்போது கேட்க வேண்டிய பாடல்கள்…
கவுண்டமணி பூ மிதி ஸ்டார்ட் மியூசிக் BG …சூரியன் (1st ரவுண்டு)
ஒரு நாள் அந்த ஒரு நாள்..தேவதை (2nd ரவுண்டு)
எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்…நினைத்தாலே இனிக்கும் (3rd ரவுண்டு )
ராத்திரி நேரத்து பூஜையில்…ஊமை விழிகள் (4th ரவுண்டு)
Pink floyd ( 5th ரவுண்ட்லேந்து)
யாரு எந்திரிச்சி போய் பாட்டு மாத்தறதுன்னு சண்டை போடறது தனி track …
– shri
hi
I hope u may remember me.. i spoke with u in mail once..i’m reading ur essays on english movies in my google reader… ur narrating way is goot to me…if possible create subscribing icons as like in this blog for subscribing…
http://marudhang.blogspot.in/
many people dont know about google reader…tats y i’m telling this
இசையை நம்மளுக்கு கேட்டு ரசிக்கத்தான் முடியும். அதிலுள்ள பகுதிகளை வார்த்தையால் சுட்டுவது மிகக் கடினம்.. நீங்க செஞ்சு அசத்தியிருக்கீங்க..
பதிவின் தரம்.. சொல்ல வார்த்தைகளே இல்லை சார்!
நீங்க கமலை unbiased ஆகவே பார்க்குறீங்கன்னு நல்லாவே நிரூபித்திருக்கீங்க. நன்றி
\கர்ணகடூரமான குரலில், தடதடவென்ற இசையமைப்புடன், இப்பாடலைப் பாடியவர் இளையராஜாவேதான் என்பது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். \
சரியாக தெரியவில்லை.. ராஜா குழுவில் ஒருவராக பாடியிருப்பார். பாடலைப் பாடியது அந்த பாடலில் நடித்தவர்தான். பெயர் பெரிய கருப்பு தேவர்
இசையில் தொடங்குதம்மா… எனக்கு உன்மத்ததை கொடுக்கும் பாடல்… இரண்டு கைகளும் தறி நெய்பவனைபோல என் கைகள் மாறிவிடும்.. அப்படியே கண்மூடி ஒரு dance போட்ருவேன்… பெரும்பாலும் சரக்கு அடிக்கும்போது நான் கேட்கும் பாடலது.. சரக்கடிப்பது என் daily தியானம்… எப்பவும் தனிஆவர்த்தனம் தான்… no company பெரும்பாலும் இந்த மனிதர்களை பிடிப்பதில்லை… 🙂
கருமாத்தூர் காட்டுக்குள்ள பாடல்தான் சண்டியர்ல பிடித்த பாடல்.. (அத இளையராஜாவா பாடினார்?)
… சங்கு சத்தம் .. ஏழு நாளா .. ச்சைவ்வ வாடை அது கொஞ்சம் பொறுக்கவில்ல தாக்கி முக சுளிக்க வைக்குது..அங்கன் படபடக்க செங்கண் சிவ சிவக்க வந்தானே .. பேய்காமனே….(இந்த பாடல் அபிராமி பட்டரோட ஒரு பாட்டு ஞாபக 😉 படுத்து/படுத்தியது)இது என்னை எழுந்து ஆட வைக்கும் பாடல் .. உன்மத்தமான சாங்கு தான் 🙂
கமல் ஒரு நல்ல கலைஞர் + ..காம், இளையராஜா ஒரு நல்ல இசைஅமைப்பாளர் அவ்வளவே… இளையராஜா சரக்கு போட மாட்டார்… கமல் தியானம் பண்ணமாட்டார்… அதனால அவங்கள விட்டுறுவோம்..
மணி+ இ, பாரதிராஜா+இ, மகேந்திரன்+இ, பாலும+இ அப்படின்னு சில combination & permutationஸ சொல்லிட்டே போகலாம்…
gud music born only a director and m.director c & p 😉 and ஒரு ரசிகனின் ஆழந்துணர்வால் – என எண்ணி என் பெரிய பின்னூட்ட பதிவை முடிக்கிறேன் 🙂
எனக்கு ஒரு எண்ணம், கடந்த பல வருடங்களாக இருந்து கொண்டே இருந்தது. அதனை இப்போது முற்றிலுமாக confirm செய்து, உணர்ந்துகொண்டே இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.இந்தக் கட்டுரையை நான் எழுதக் காரணம், கடந்த சில நாட்களில், 2000க்குப் பிறகு இளையராஜா இசையமைத்த பாடல்கள் பலவற்றை மறுபடி கேட்டதுதான். அதிலிருந்து, எனது பழைய எண்ணம் உறுதிப்பட்டது. அது என்ன எண்ணம்? Nangalum athai than ketkirom !!!
இசை தெய்வம் + கலைஞானி பற்றி மிக சில கலக்கல் தொகுப்புகளில் இதுவும் ஒன்று தல 😉 மனமார்ந்த பாராட்டுக்கள் ! 😉
இசையில் தொடங்குதம்மா பாடலில் வரும் ஷெனாய் இசையை வாசித்த திரு. பண்டிட் பாலேஷுடன் நடந்த சந்திப்பை பற்றி சொல்வனம் பகுதியில் சுகா அவர்களின் பகிர்வை நேரம் கிடைக்கும் போது படியுங்கள்.
இந்த பாடலை பற்றி மேலும் சில விஷயங்கள் கிடைக்கும் !
இசையில் தொடங்குதம்மா, ஓம் நமஹா, விக்ரமில் வரும் மீண்டும் மீண்டும் வா ஆகிய மூன்று பாடல்களும் ஒரே தாளக்கட்டில் தான் வரும். ஆனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். முக்கியமாய்.. இசையில் தொடங்குதம்மா.. ஹிந்துஸ்தானியிலும், ஓம் நமஹா. கொஞ்சம் வெஸ்டர்னிலும், மீண்டும் மீண்டும் வா நம்ம சவுத் க்ளாஸிக்கலிலும் இருக்கும்.
Good Review unexpected .
கருந்தேள் அவர்களுக்கு ,
முதன் முதலாக உங்களுக்கு இடும் ஒரு பின்னூட்டம். நிறைய விஷயங்களை புதிதாக அறிமுகப்படுத்திக்கொண்டே வருகிறீர்கள். உங்களின் மிகுந்த ஈடுபாடும் சலிப்பில்லாத எழுதும் ஆர்வமும் என்னை மிகவும் ஆச்சரியப் படுத்துகின்ற விஷயங்கள். நிறைய பதிவுகளில் சற்றே கர்வத்தை தொட்டுவிடும் மொழி நடை காணப்பட்டாலும் (இது என் எண்ணமே, தவறாகவும் இருக்கலாம்) உங்கள் பதிவுகளை வாசித்து வருகின்றேன், நானும் ஒரு 80’ஸ் மனிதன்தான்.குறிப்பாக இளையராஜா பாடல்கள். அவரது சமீப கால இசை பற்றிய என் பதிவு ஒன்று உங்கள் கவனத்திற்கு
http://anglethree.blogspot.com/2011/02/blog-post.html
மென்மேலும் புதிய விஷயங்களை எதிபார்க்கிறேன்.
நன்றி
ராஜேஷ் குமார்
நல்லா அனுபவிச்சு, சிலாகிச்சு எழுதி இருக்கீங்க….
ராமராஜன், மோகன் மாதிரி நடிகர்களுக்கும் இசைஞானி இசைமழை பொழிஞ்சாரே, அதையும் கொஞ்சம் அலசுங்கண்ணே……
செம்ம பதிவு நண்பா. இன்னும் விரிவா பேசலாம்.
நண்பர்களே… உங்களது விபரமான கமெண்ட்களுக்கு மனமார்ந்த நன்றிகள். அத்தனை பேருமே இப்பாடல்களை ரசித்திருப்பது, மிக்க சந்தோஷத்தைக் கொடுக்கிறது. தொடர்ந்து இதைப்போன்ற நல்ல பாடல்களை அவ்வப்போது பார்ப்போம்.
நம் இருவரின் ஆழ் மனமும் ஒன்றுதான் என்பதற்கு ”இசையில் தொடங்குதம்மா ”பாடல் சிறந்த உதாரணம் ராஜேஷ். நம்பினாலும் பரவாயில்லை நம்பாவிட்டாலும் பரவாயில்லை. இசையில் தொடங்குதம்மா பாடலை படம் வந்த பொழுது ஆயிரம் முறை கேட்டிருப்பேன். அந்த பாடலுக்கும் ”பொல்லாத மதன பானம் பாஞ்சிருச்சு” பாடலுக்கவும் அந்த படத்தை தியேட்டரில் சென்று இருபது முறை பார்த்திருப்பேன். ஏனென்றால் அந்த படம் வந்த நாட்களில் நான் மன நல பிரச்சனைகளுக்காக மருந்து எடுத்துக்கொண்டிருந்தேன். அம்மருந்து என்னை எப்பொழுதும் உன்மத்த நிலையிலேயே வைத்திருக்கும். மேற்சொன்ன இரண்டு ஹே ராம் பாடலும் என் மனதிற்கு மிகவும் அந்தரங்கமாக நெருக்கமான பாடல் மட்டுமல்லாமல் காட்ச்சிப்படுத்தலும் கூட.
இசையில் தொடங்குதம்மா படலை எழுதியவரும் இசைஞானிதான்.
மேலும் இதுவரை தமிழ் சினிமாவில் காட்ச்ச்யின் ;கதையின் உணர்வு நிலைக்கு மிகவும் சரியாக அமைந்த பாடல் குணா படத்தில் வரும் ”கண்மணி அன்போடு காதலன்” பாடல் தான். இது என் தனிப்பட்ட கருத்து. ஏனென்றால் குணா படபாடலின் சிச்சுவேசன் என் வாழ்க்கையில் நடந்தது.
நீங்கள் உலக சினிமாவை பற்றிய பதிவுகளையே அதிகம் போட்டுக்கொண்டுல்லீர்கள். இம்மாதிரி நம்
மண் சார்ந்த படங்களை பற்றிய பதிவுகளையும் அதிகமாக போட்டால் என்போன்ற வாசகர்களுக்கு நன்றாக இருக்கும். அதற்காக உலக சினிமாக்களை பற்றி எழுத வேண்டாம் என்று சொல்லவில்லை. அதையும் எழுதுங்கள்; இதையும் எழுதுங்கள்.
நேரம் கிடைக்கும் பொழுது மீண்டும் எழுதுகிறேன் நண்பா
நன்றி பெருமாள். கட்டாயம் அவ்வப்போது நம்மூர் படங்களையும் பாடல்களையும் பற்றி எழுதும் frequency யை இனி அதிகரிக்கிறேன். உங்கள் விரிவான பின்னூட்டத்தின் பின்னுள்ள விஷயங்கள் புரிந்து கொண்டேன். மீண்டும் சந்திப்போம்
Does selling my house, leaving my secure job and the town Iᯘve lived in forever, to plant a church in another state count as vacation? Looking forward to it more than any summer break I ever have had!!Last month went to the outer banks of NC (Emerald Isle)to enjoy down time before the move!! Great place!
@ d – THanks a lot for the suggestion friend. I very well remember u. I have indeed follwed your suggestion and have created a subscription option. You can check it out at the top right widget… do tell me your feedback…Have a great day.
ok i will do it NANPAA..
it is better if u have just 3 icons for rss, email n google reader…dont keep box type option for email subscription..
2 reason:
1.the box type email subscription occupies more space of sidebar
2. it reduces blog’s look too
just keep 3 icons as like in d blog url i gave previously…else see http://www.haranprasanna.in/
in tis blog too only icons r present..there is no big box for email subscription…
if u dont like my suggestion u can have d box..i dont bother about it…
u can get google icon here http://www.iconfinder.com/search/?q=google
instead of default google button place google icon for the page link to subscribe in google reader too(place it after email icon)
கமல் பாணியில் சொல்லவேண்டும் என்றால்…… உங்கள் விரிவான விமர்சனத்துக்கு மிக்க நன்றிகள். வணக்கம்.
காய்த்த மரம் தானே கல்லடி படும் என்பது போல கமல் மீது எப்போதும் உங்களுக்கு ஒரு “கொடுக்கு” இருப்பதை உணரமுடிகிறது.
நிறைய முறை கேட்ட இந்த இரண்டு பாடல்களும் இப்போது தனி ருசியுடன் உணர்கிறேன். தேங்க்ஸ் கருந்தேள்.
இதே போல பல நல்ல பாடல்களை என்னைப் போல இசை அறிவு / ஞானம் இல்லாதவர்களுக்கு புரியும் படி எழுதினால் மிக அருமையாக இருக்கும்.
இது போல இன்னும் நிறைய பாடல்கள், அதில் பொதிந்துள்ள பல நல்ல தகவல்கள் இனி உங்கள் தளத்தில் கிடைக்கும் என்ற ஆசையுடன் கார்த்திருக்கும் வாசகன்…. இந்த கண்ணன் !
உங்களால் யூடுபில் மறுபடி விருமாண்டி பார்த்தேன். கிளாசிக்.
Hi Rajash – Regarding the Hey Ram song you mentioned in your write up — I have to say, your assumption on how the song was born isn’t right. Raaja mentioned about the background of how that song was created in his book ‘Paal Nila Pathai’. In summary, that song was never there when Kamal showed the movie with songs from LS. Raaja realized that situation in the screenplay is a good candidate for a song and suggested to Kamal which he agreed. I also read an interview from Ajay C. how he got called in for that song and the production didn’t have enough $$ to pay for him and he agreed to sing for free just so that he can meet Raaja and his daughter can get blessings from Raaja. You got to read that book for some interesting background which we usually aren’t previewed too.
Oh. That’s interesting. Coz, the account I have mentioned here was narrated by Kamal in his vikadan interview. Now I know Kamal has introduced li’l bit of his screenplay tactics in the interview 🙂 … thanx for the update Siva. This will help the readers when they go thru the comments.
Right. Raaja also made a sarcastic comment about that too in the book — when he proposed the idea of that song in that particular scene, Kamal immediately jumped up excited and said to him, the screenplay is so good that you were able to insert that song. Raaja said, I quitely agreed to let him take ‘it’ and continued with my business. But, again, when two creators colloborate and share the happenings thru media, they share it from their prespective and we are let make our own judgements and translations. You see that a lot here in US too.
Good work. Keet it up.
For your Information:
Aalavandhan music by Shankar- Ehsaan- Loy…
Your Reviews are catchy….nice observation in each and every scene of a movie…
Super