Interstellar (2014) – English: Analysis – part 1

by Karundhel Rajesh November 9, 2014   English films

இண்டர்ஸ்டெல்லார் திரைப்படத்தின் திரைக்கதை சென்ற வருடம் இணையத்தில் லீக் செய்யப்பட்டது. உடனேயே அதனை நான் படித்தேன். படித்ததும் இண்டர்ஸ்டெல்லார் பற்றிய இரண்டு விபரமான கட்டுரைகளை எழுதினேன்.  முதல் கட்டுரையில் காலப்பயணத்தைப் பற்றியும், இரண்டாவது கட்டுரையில் கருந்துளைகளைப் பற்றியும் முடிந்தவரை தகவல்களைக் கொடுத்திருந்தேன். இந்தக் கட்டுரையை மேற்கொண்டு தொடருமுன் அந்த இரண்டு கட்டுரைகளைப் படித்துவிட்டால், படம் இன்னும் தெளிவாகப் புரிய வாய்ப்பு உள்ளது.

1. Interstellar and Time Travel

2. Interstellar and Black Holes

ஒருவேளை எந்த விபரமும் தெரியாமல் இந்தப் படத்துக்குப் போகிறோம் என்று வைத்துக்கொண்டாலும், அதில் சொல்லப்படும் விஷயங்கள் அத்தனை கடினமானவை அல்ல. அவை வரும்போதே அவற்றுக்கான விளக்கமும் தெளிவாகப் படத்தில் வருகிறது. இருந்தாலும் இந்தக் கட்டுரையில் படத்தைப் பற்றி நன்றாகக் கவனிக்கப்போவதால் படத்தில் வரும் அனைத்து விஷயங்களையும் எளிமையாகப் பார்த்துவிடுவோம்.

முதலில், சென்ற வருடம் லீக் செய்யப்பட்ட திரைக்கதை எழுதப்பட்டது 2008ல். எழுதியிருந்தவர் ஜொனாதன் நோலன். உதவியவர்கள் விஞ்ஞானி கிப் தார்ன் மற்றும் பிரபல தயாரிப்பாளர் லிண்டா ஆப்ஸ்ட். அந்தத் திரைக்கதை லீக் செய்யப்பட்டதுமே இரண்டு நோலன்களும் அமர்ந்து அதனை மாற்றிவிட்டனர். ஆனால் முழுதாக மாற்றவில்லை. ஒருசில முக்கியமான பகுதிகளை மட்டுமே மாற்றியிருந்தனர். காரணம், எழுதப்படும்போது அத்தனை முக்கியமான சம்பவங்களையும் வைத்து விரிவாக உருவாக்கப்படும் ஒரு திரைக்கதையை அப்படியே மாற்றுதல் மிகவும் கடினம். இப்போது இண்டர்ஸ்டெல்லார் படத்தைப் பார்த்தபின் யோசித்துப் பார்த்தால், லீக் செய்யப்பட்ட திரைக்கதைதான் இரண்டிலும் சிறந்ததாகப் படுகிறது. அதில் சில விஷயங்கள் மிகத்தெளிவாக விளக்கப்பட்டிருந்தன. ஆனால் இணையத்தில் கசிந்ததால் வேறு வழியின்றி அதனை நோலன்கள் மாற்றியதில் அந்த சம்பவங்களின் முக்கியத்துவம் குறைந்து, திரைக்கதையும் ஒரு டிபிகல் ஹாலிவுட் மசாலா திரைக்கதையாக மாறிவிட்டது.

ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இது ஒரு நோலன் படம் என்று சொல்லக்கூடிய பகுதிகள் படத்தின் மிகக்கடைசியில்தான் வருகின்றன. அந்தப் பகுதிகளையுமே இப்போதைய காலகட்டத்தில் யார் வேண்டுமானாலும் எழுதிவிடலாம். ஒருவகையில் பார்த்தால் நான் ஏற்கெனவே டார்க் நைட் ரைஸஸ் தொடர் கட்டுரைகளில் சொல்லியதுபோல் நோலனின் திறமை முற்றிலும் மங்கி, அவரை ஹாலிவுட் ஒரு டிபிகல் இயக்குநராக மாற்றியது இந்தப் படத்தில் நன்றாகத் தெரிகிறது. இனி டூடில் பக், மொமெண்டோ, ப்ரஸ்டீஜ் போன்ற படங்களை இயக்கிய நோலனை நாம் பார்ப்பது மிகவும் கடினம். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், நோலனின் பின்னணி தெரியாமல், டார்க் நைட் ட்ரையாலஜியை மட்டும் பார்த்துவிட்டு (இன்ஸெப்ஷனையும் சேர்த்துக்கொள்ளலாம்) நோலனின் வெறியர்கள் கும்பல் ஒன்று இணையத்தில் உலவிக்கொண்டிருக்கிறது. இவர்களுக்கு நோலனின் பின்னணி எதுவும் தெரியாது. இலக்கியத்துக்கும் நோலனுக்கும் உள்ள தொடர்பு, இன்ஸெப்ஷனுக்கு உந்துதலாக இருந்த ஹோர்ஹே லூயிஸ் போர்ஹேஸ் பற்றிய அறிவு, நோலனின் படமெடுக்கும் முறை போன்ற எதுவும் தெரியாது. அவற்றை அறியும் நோக்கமும் இல்லை. ’தல நோலன் பின்றார்ரா’ என்ற கருத்தை அடிக்கடி ஃபேஸ்புக்கில் பார்க்கிறேன். ஆனால் உண்மையில் இதுதான் டார்க் நைட் ரைஸஸ் படத்துக்குப் பின் நோலனின் மிகமிகச் சாதாரணமான படம்.

இருந்தாலும்,  நோலன் படம் என்ற tag இல்லாமல் பார்த்தால் இந்தப் படம் சுவாரஸ்யமானதுதான். இதுவரை ஹாலிவுட் படங்களில் மோம்போக்காகச் சொல்லப்பட்ட, ஜிகினா வேலைகள் செய்து பிரம்மாண்டமாகக் காட்டப்பட்ட இரண்டு விஷயங்கள் இந்தப் படத்தில் மிக மிக உண்மையாகவும் நிஜமான கணக்குகள் மற்றும் equations மூலமாக முடிந்தவரை உண்மைக்கு மிக அருகில் காட்டப்பட்டிருக்கின்றன. அவற்றை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் என்னால் இந்தப் படத்தை எந்தப் பிரச்னையும் இல்லாமல் பார்க்க முடிந்தது.

அவற்றில் முதல் அம்சம் – Wormhole. இது என்ன என்பதை மேலே நான் கொடுத்திருக்கும் முதல் கட்டுரையில் விபரமாகப் படிக்கலாம். இருந்தாலும், இந்தப் படத்தில் வார்ம்ஹோல் ஒன்று முக்கியமான பங்கை வகிப்பதாலும், படத்தில் அருமையாகக் காட்டப்பட்டிருக்கும் ஒரு விஷயம் என்பதாலும், இனி நமது அனாலிஸிஸை ஆரம்பிக்கலாம்.

இங்கே இருந்து படத்தின் ஸ்பாய்லர்கள் விவாதிக்கப்படுகின்றன. படம் பார்த்தவர்களுக்கு இந்தப் பகுதிகள் சுவாரஸ்யமாக இருக்கலாம். படம் பார்க்காதவர்களில், இவற்றைப் படித்தால் உதவும் என்று நினைப்பவர்கள் மட்டும் படிக்கலாம். எந்தத் தகவலும் தெரியாமல்தான் பார்ப்பேன் என்று நினைப்பவர்கள், ஸ்பாய்லர்களின் முடிவுக்குப் போய்விடலாம்.

The Spoilers begin here- இங்கே ஸ்பாய்லர்கள் துவக்கம்.

Wormholes and Interstellar

வார்ம்ஹோல் என்பது, விண்வெளியின் இரண்டு இடங்களை ஒன்றுசேர்க்கும் ஒருவித டன்னல். இந்த இரண்டு இடங்களுக்கு இடையே எத்தனை தூரம் இருக்கிறதோ அதுதான் அந்த வார்ம்ஹோலின் நீளம். இந்த வார்ம்ஹோலின் ஒரு ஓட்டைக்குள் நுழைந்து உடனடியாக இன்னொரு பக்கம் வந்துவிடமுடியாது. உண்மையில் இது ஒரு ஓட்டையே கிடையாது. ஒரு நீளமான குழாய் (Sphere shaped) என்றுவேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். குழாயின் இரண்டு பக்கங்களிலும் ஓட்டைகள். குழாயின் நீளம் என்பது அந்த ஓட்டைகளுக்கு இடையே இருக்கும் தூரம். ஓட்டைகள் = விண்வெளியின் இரண்டு தனிப்பட்ட இடங்கள். இரண்டுக்கும் இடையே எத்தனை தூரமோ அத்தனை நீளத்தையும் கடந்தால்தான் மறுபக்கம் போய்ச்சேர முடியும். இந்த வார்ம்ஹோல் இயற்கையாக உருவாகவே முடியாது. புவியீர்ப்பு விசையை இஷ்டத்துக்குக் கட்டுப்படுத்த முடிந்த, அறிவிலும் விஞ்ஞானத்திலும் பலமடங்கு முன்னேறிய உயிரினங்கள்தான் இப்படி ஒரு வார்ம்ஹோலை உருவாக்கமுடியும்.  வார்ம்ஹோலின் ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால், மறுபக்கத்தில் இருக்கும் உலகங்கள் சற்றே குழம்பிய நிலையில் தெரியும். குழப்ப நிலைக்குக் காரணம் ஈர்ப்புவிசை. கீழே உள்ள படம் இண்டர்ஸ்டெல்லாரில் வரும் வார்ம்ஹோலைக் காட்டுகிறது. அதில் தெரியும் சிறு உருண்டைதான் விண்கலம்.

பூமியில் இப்போதைய காலகட்டத்தில் இருந்து ஐம்பது ஆண்டுகள் கழித்து, பயிர்களுக்கிடையே பரவும் ஒருவிதக் கிருமிகளால் பல உணவுப்பயிர்களும் சில வருடங்களுக்கு ஒருமுறை அழிந்து வருகின்றன. சோளம் மட்டுமே இன்னும் அழியாமல் உள்ளது. கூடவே புழுதிப் புயல்களும் அடிக்கடி உலகம் முழுக்க சேதங்களை விளைவிக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில், இன்னும் சில வருடங்களில் உலகில் உள்ள மனித இனம் அழியப்போகிறது என்ற நேரத்தில் – ஒரு வார்ம்ஹோல் திடீரென்று சனி கிரகத்தின் அருகே ஒருநாள் தோன்றுகிறது. யார் இதனை உருவாக்கினார்கள் என்பது யாருக்கும் தெரியாது. உடனடியாக உஷாராகும் நாஸா, அதனுள் சில ஆளில்லாத விண்கலங்களை அனுப்புகிறது. அவற்றில் இருந்து கிடைத்த தகவல்களால் தைரியமடைந்து, இந்தக் கதை நிகழ்வதற்குப் பத்து வருடங்கள் முன்னர் சில கைதேர்ந்த விஞ்ஞானிகளைத் தேர்வு செய்து, அவர்களை இந்த வார்ம்ஹோலுக்குள் அனுப்புகிறது நாஸா. அவர்களில் மொத்தம் மூவரிடம் இருந்து இன்னும் சிக்னல்கள் வந்துகொண்டிருக்கின்றன. அந்த மூவரும்தான் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள்/அவர்களின் விண்கலங்கள் பழுதடையவில்லை என்பது இதன்மூலம் விளங்குகிறது. அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்றால், உயிர்வாழத் தகுதியான ஒரு இடத்தில்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

இதனால், தனது வீட்டுப் புத்தக அலமாரி திடீரென்று அதிர்வதால் (இது ஏதோ பேயின் வேலை என்பது பத்து வயது மகள் மர்ஃபியின் கருத்து) உருவாகும் சில Co-ordinatesகளை வைத்துக்கொண்டு கதாநாயகன் கூப்பர் ஒரு ரகசியமான இடத்துக்குச் செல்கிறான். அது, நாஸாவின் மிச்சமிருக்கும் சில விஞ்ஞானிகள் அடங்கிய இடம். வார்ம்ஹோலுக்குள் சென்றவர்களின் சிக்னல்களை வைத்துக்கொண்டு அவர்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று மனித இனம் உயிர்வாழத் தகுதியான கிரகங்களைக் கண்டுகொள்வதே இவர்கள் வேலை. அப்படிப்பட்ட ஒரு mission, அங்கே கூப்பர் வந்துவிட்டதால் அவனுக்கும் தரப்படுகிறது. உயிரையே வைத்திருக்கும் மகள் மர்ஃபியையும் மகன் டாமையும் இறந்த மனைவியின் தந்தை டொனால்டையும் விட்டுவிட்டு இந்தப் பயணத்தில் பங்கேற்கிறான்.

பயணத்தில், இந்த வார்ம்ஹோலை இரண்டு வருடங்கள் கழித்து இந்தக் குழு அடைகிறது. கிட்டத்தட்ட 1.25 மைல்கள் சுற்றளவையும், பத்து பில்லியன் ஒளி வருடங்கள் நீளத்தையும் கொண்டிருக்கிறது இந்த வார்ம்ஹோல். அதாவது, வார்ம்ஹோலின் இந்தப் பக்கத்துக்கும் மறுபக்கத்துக்கும் இடையேயான தூரம் பத்து பில்லியன் ஒளி வருடங்கள் (ஆறு ட்ரில்லியன் மைல்கள் அல்லது பத்து ட்ரில்லியன் கிலோமீட்டர்கள்). மனித இடம் நினைத்தே பார்க்கமுடியாத தூரம். இந்த வார்ம்ஹோல் இருப்பதால் மட்டுமே அந்தத் தூரத்தை நொடியில் கடந்து விண்வெளியின் இன்னொரு பக்கத்துக்குப் போவது சாத்தியப்பட்டிருக்கிறது.

உள்ளே நுழைந்து மறுபக்கம் வருகிறார்கள் கூப்பர் குழுவினர். மறுபக்கத்தில் இவர்களை மிகப்பிரம்மாண்டமான ஒரு கருந்துளை வரவேற்கிறது. பொதுவாகக் கருந்துளை என்பது, இருப்பதே தெரியாமல் இருண்டுபோய் இருக்கும் ஒரு விஷயம். நிறையில் அளவுகடந்துபோய்விடும் நட்சத்திரம் ஒன்று திடீரென்று கற்பனைக்கெட்டாதவாறு சுருங்கிக் கருந்துளையாக மாறுகிறது. இதன் நடுவே ஆழத்தில் அந்த நட்சத்திரத்தின் கணக்கிடமுடியாத நிறை இன்னும் இருப்பதால், அந்த ஈர்ப்பு விசையால் அருகே இருக்கும் அனைத்தையும் இந்தக் கருந்துளை உறிஞ்சிக்கொள்கிறது. ஒளிகூட இதிலிருந்து தப்பமுடியாது. படத்தில் வரும் இந்தக் கருந்துளையின் பெயர் கார்கான்ச்சுவா (Gargantua). இதன் நிறை, சூரியனின் நிறையைவிட நூறு மில்லியன் நிறைகள் அதிகம். இது கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் 99.8 சதவிகித வேகத்தில் சுழன்றுகொண்டிருக்கிறது.

இந்தக் கருந்துளையின் Orbitடில்தான் இவர்கள் செல்லவேண்டிய முதல் கிரகம் உள்ளது. ஆனால் இந்தக் கருந்துளையின் அருகே இருப்பதால், இதன் ஈர்ப்புவிசையால் பாதிக்கப்பட்டு மிகப்பெரிய ராட்சத அலைகள் இந்தக் கிரகத்தில் அடிக்கடி உருவாகிக்கொண்டிருக்கின்றன. அதேசமயம் கருந்துளை என்பதன் ஈர்ப்புவிசையால் நடக்கக்கூடிய ஒரு முக்கியமான மாறூதலும் இந்தக் கிரகத்துக்குள் நடக்கிறது.

Black Hole and Interstellar

என்னவெனில், எங்கெல்லாம் ஈர்ப்புசக்தி மிக அதிகமோ, அங்கெல்லாம் காலம் சற்றே குறையும். இதுதான் ஐன்ஸ்டைனின் ரிலேட்டிவிடி தியரி. இதனால், கருந்துளையைச் சுற்றிவரும் கிரகம் ஒன்றில் கருந்துளையின் ஈர்ப்புசக்தி மிக அதிகமாக இருப்பதால் அந்தக் கிரகத்துக்குள் சென்றால், அங்கு ஒரு மணி நேரத்தில் பூமியில் 7 வருடங்கள் ஓடியிருக்கும். காரணம் கருந்துளையின் ஈர்ப்புசக்தி, பூமியின் ஈர்ப்புசக்தியை விடப் பலமடங்கு அதிகம் (படத்தின் இந்தத் தகவல் விஞ்ஞானபூர்வமாகத் தவறு என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. காரணம் ஒரு மணி நேரம் = 7 வருடம் என்பது உண்மையாக இருக்கவேண்டும் என்றால் அந்தக் கிரகம் கருந்துளையின் வெளிவிளிம்பின் மிக மிக அருகே இருக்கவேண்டும். அத்தனை அருகே இருந்தால் கருந்துளையின் ஈர்ப்பால் உறிஞ்சப்பட்டு ஒரே நொடியில் உள்ளே சென்று அழிந்துவிடும். எனவே இது சுவாரஸ்யத்துக்காக நோலன் குழுவினர் நுழைத்த கப்ஸா). இப்படி வேகமாகக் காலம் ஓடும் என்பதால் நாயகன் கூப்பர் தயங்குகிறான். காரணம் அங்கு சென்று சில மணி நேரங்கள் இருந்துவிட்டு வந்தால் பூமியில் அவனது பத்து வயது மகள் மர்ஃபி கிட்டத்தட்டக் கிழவியாகிவிடக்கூடும். இருந்தாலும் அந்தக் கிரகத்தில் இருந்து வந்த சிக்னலின் காரணமாகவும், அதுதான் இவர்களுக்கு மிக அருகே இருப்பதாலும் வேறு வழியில்லாததால் அங்கு செல்கிறார்கள்.

சென்றபின்னர்தான் ராட்சத அலைகளைப் பற்றி இவர்களுக்குப் புரிகிறது. அதில் இவர்களும் மாட்டிக்கொள்கிறார்கள். அந்தக் கிரகத்துக்கும் பூமிக்கும் இருக்கும் கால வித்தியாசத்தால், பூமியில் பத்து வருடங்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட மில்லர், இந்தக் கிரகத்துக்கு ஒரே ஒரு மணி நேரம் முன்னர்தான் வந்திருக்கிறார் என்பது தெரிகிறது. ஒருசில நிமிடங்கள் முன்னர் அடித்த ராட்சத அலையால்தான் அவர் இறந்திருக்கிறார் என்று உணர்கிறார்கள். சில நிமிடங்கள் முன்னர் வந்திருந்தால் மில்லரைக் காப்பாற்றியிருக்கலாம். அங்கிருந்து தப்பிக்கிறார்கள். அப்போது எடுத்துக்கொள்ளப்படும் கால அவகாசத்தால் பூமியில் 23 வருடங்கள் ஓடிவிடுகின்றன. எனவே இப்போது கூப்பரின் மகள் மர்ஃபிக்கு 33 வயது. இது தெரிந்து கூப்பர் மனம் உடைகிறான்.

இருந்தாலும், இப்போது இருக்கும் எரிபொருளை வைத்து பாக்கியிருக்கும் இரண்டு இடங்களில் ஏதாவது ஒன்றுக்குத்தான் செல்லமுடியும் என்ற சூழல். ஒன்றில் பத்து வருடங்கள் முன்னர் கிளம்பிய பயணங்களுக்குத் தலைமைதாங்கிய Dr. Mann இருக்கிறார். இன்னொன்றில் கூப்பருடன் வந்திருக்கும் அமேலியாவின் காதலன் எட்வர்ட் இருக்கிறான். இறுதியாக, Dr.Mann இருக்கும் இடத்துக்கே செல்லலாம் என்று முடிவாகிறது. அங்கே செல்கிறார்கள். அப்போதுதான்,  உயிர்வாழத் தகுதியில்லாத அந்தக் கிரகத்தில் பல ஆண்டுகாலத் தனிமையினால் பாதிக்கப்பட்ட Dr. Mann, போலியான சிக்னல்களைக் கொடுத்திருப்பது தெரிகிறது. அப்போதுதானே பூமியில் இருந்து அங்கே வந்து அவரைக் காப்பாற்றுவார்கள்? இதன்பின் அவர் கூப்பரைக் கொன்று, அவனது விண்கலத்தை எடுத்துக்கொண்டு பாக்கியிருக்கும் எட்மண்டின் கிரகத்துக்குச் சென்று, இவர்கள் கொண்டுவந்திருக்கும் மனித இனம் தழைப்பதற்கான முட்டைகளை வைத்து ஒரு colonyயை உருவாக்க நினைக்கிறார். கூப்பர், மகளைப் பிரிய இனிமேலும் மனமில்லாமல் பூமிக்குச் செல்ல முடிவெடுத்திருப்பதுதான் காரணம்.அப்போது நிகழும் சண்டையில் Dr. Mann இறக்க, இவர்கள் அந்தக் கிரகத்தில் இருந்து  தப்பிக்கிறார்கள்.

Again comes the Black Hole – the Pre-climax

இப்போது இருக்கும் ஒரே ஆப்ஷன் – எட்மண்டின் கிரகத்துக்குச் செல்வது. ஆனால் எரிபொருள் கிட்டத்தட்ட காலி. இதனால் கூப்பர் ஒரு யோசனையைச் சொல்கிறான். பிரம்மாண்டமான கருந்துளையின் அருகே சென்றால், அது ஒளியின் வேகத்தில் சுழல்வதால் இவர்களின் கலத்தையும் ஈர்த்துச் சுழலவைக்கும். மெல்ல உள்ளேயும் இழுக்கும். அப்போது அந்தச் சுழற்சியில் நன்றாக வேகமெடுத்ததும் இவர்களின் கலத்தைக் கிளப்பினால், அது அந்தச் சுழலின் வேகத்திலேயே கருந்துளையின் orbitடில் இருந்து வெளியேறி வீசப்படும். இதனால் எளிதில் அந்தக் கிரகத்துக்குச் சென்றுவிடலாம். இந்த யோசனை செயல்படுத்தப்படும்போது, கூப்பர் இருக்கும் கலம் திடீரென்று கருந்துளையை நோக்கி விழுகிறது. அப்போதுதான், அதிகமான எடையை விடுவித்தால்தான் கலம் இலக்கை நோக்கிச் செல்லும் என்பதால் கூப்பர் தன்னைத்தானே தியாகம் செய்துகொண்டது அமேலியாவுக்குப் புரிகிறது.

கருந்துளையின் நடுவே விழுந்த கூப்பர் என்ன ஆனான்? இதில்தான் ஒட்டுமொத்த பூமியின் எதிர்காலமும் உள்ளது. காரணம், புவியீர்ப்பு விசையை மீறி அத்தனை மக்களையும் எப்படிப் பிற கிரகங்களுக்குக் கொண்டுசெல்வது என்பதுதான் இதுவரை மிகப்பெரிய கேள்விக்குறி. இதற்காகத்தான் பல ஆண்டுகள் அமேலியாவின் தந்தை ப்ராண்ட் பாடுபட்டுக்கொண்டிருக்கிறார் (அல்லது அப்படி நடித்தார்). இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமென்றால், கற்பனைக்கெட்டாத அளவு அதிகமான ஈர்ப்புவிசைகொண்ட கருந்துளையின் உள்ளே இழுக்கப்படும் பொருட்கள் என்ன ஆகின்றன என்பது தெரிந்தால் போதும். அதைவைத்துப் பூமியில் இருந்து புவியீர்ப்பு விசையை மீறி அத்தனை மக்களும் வெளியேறும் விதத்தைக் கண்டுபிடித்துவிடலாம்.

Cooper and the Tesseract

கருந்துளையின் உள்ளே படுவேகமாக உறிஞ்சப்படும் கூப்பர், திடீரென்று ஏதோ ஒரு உலகில் இறங்கியிருப்பதை உணர்கிறான். அது, அவனது வீட்டின் நூலகம். அதன் ஒரு புறத்தில் இவன் இருக்கிறான். இன்னொரு புறத்தில் பத்து வயது மர்ஃபி. அப்போதுதான், படத்தின் ஆரம்பத்தில் நூலகத்தில் இருந்து தானாகவே புத்தகங்கள் விழுந்தது கூப்பருக்கு நினைவு வருகிறது. அது இவனது செயல்தான். காரணம், அப்போதுதான் இவன் அங்கே அடைபட்டிருக்கிறான் என்பது மர்ஃபிக்குப் புரியும் என்பதால் இவனாகவே அந்தப் புத்தகங்களை வீழ்த்தியிருக்கிறான். அப்போது, பயணம் கிளம்பும்போது இவன் மர்ஃபிக்குக் கொடுத்த கடிகாரத்தின் நினைவு அவனுக்கு வருகிறது. கருந்துளைக்கு உள்ளே இருந்து ரோபோ டார்ஸ் கொடுத்த விபரங்களை மோர்ஸ் கோடில் அந்தக் கடிகாரத்தின் வினாடி முள்ளில் பதிகிறான்.

படத்தில் நாற்பது வயதாகும் மர்ஃபி, ஒரு முக்கியமான கட்டத்தில் அந்த நூலகம் வருகிறாள். அப்போது அதுவரை நடந்த நிகழ்வுகளை வைத்து யோசித்துப்பார்க்கிறாள். அப்போதுதான், முப்பது வருடங்கள் முன்னர் கிளம்பிய கூப்பர்தான் தன்னுடன் இப்படித் தொடர்புகொண்டிருக்கிறான் என்பது அவளுக்குப் புரிகிறது. இது தெரிந்ததும் அந்தக் கடிகாரத்தையும் எடுத்துப் பார்க்கிறாள். அதிலிருக்கும் செய்தியை வைத்து உடனடியாகப் பல ஆண்டுகள் பதிலில்லாமல் இருந்த கேள்விக்குப் பதில் கிடைக்கிறது. இதனால் மனிதர்கள் மொத்தமாக இந்த வர்ம்ஹோலை வைத்து வேறு கிரகங்களுக்குச் சென்று வாழ முடிகிறது. மனித இடம் தழைக்கிறது.

வேலை முடிந்ததும் கூப்பர் இருக்கும் இடம் மறைகிறது. அது என்ன இடம் என்றால், அது ஒரு Tesseract. கருந்துளைக்குள் சென்ற கூப்பர் எப்படி ஒரு டெஸராக்டினுள் வந்தான்?

முதலில் டெஸராக்ட் என்றால் என்ன?

டெஸராக்ட் என்றால், நான்கு பரிமாணங்கள் உள்ள ஒரு வஸ்து. க்யூப் என்பது முப்பரிமாணம் உடையது என்று எல்லோருக்கும் தெரியும். அதைவிட ஒரு பரிமாணம் அதிகமுள்ளது டெஸராக்ட். மூன்று பரிமாணங்கள் என்பது Length (நீளம்), Breadth (அகலம்), Height (உயரம்), Depth (ஆழம்) மற்றும் Width (அகலம்) ஆகியவற்றில் ஏதேனும் மூன்று பரிமாணங்கள் சேர்ந்து காட்டப்படுவது. உலகில் எந்தப் பொருளாக இருந்தாலும் உயரம், நீளம், அகலம் ஆகியவை இருக்கும். அதுதான் முப்பரிமாணம். இத்துடன் காலம் என்பதையும் சேர்த்தால் அது நான்கு பரிமாணம். இந்த நான்காவது பரிமாணம் உள்ள வஸ்துதான் டெஸராக்ட். இதனுள் இருந்தால், காலம் என்பதை வைத்துக்கொண்டு இதற்குள் முன்னும் பின்னும் காலத்தில் பயணிக்கலாம்.

கருந்துளைக்குள் விழுந்த கூப்பர், அத்தகைய ஒரு டெஸராக்டில் கண்விழிக்கிறான். அவனாக அதில் விழவில்லை. காரணம், கருந்துளைக்குள் விழுந்தால், அதீதமான ஈர்ப்பால்  கைகால்கள் இழுக்கப்பட்டு உடலே பிய்ந்துவிடும். அப்படி ஒரு சம்பவம் நடப்பதற்குள் அவன் டெஸராக்டில் இருப்பதற்குக் காரணம் யாரென்றால், திடீரென்று படத்தின் ஆரம்பத்தில் வார்ம்ஹோலை உருவாக்கி சனி கிரகத்தின் அருகே நிறுத்தினார்களே அவர்கள்தான். ஆனால் அது யார்? இதற்கான பதில் படத்தில் உள்ளதா?

இருக்கிறது. டெர்மினேட்டர் 2 படம் பார்த்திருக்கிறீர்கள்தானே? அதில், வருங்காலத்தில் இருந்து ஒரு வில்லன் ரோபோ தற்காலத்துக்கு வரும். காரணம், தற்காலத்தில் சிறுவனாக இருக்கும் மனித இனத்தின் வருங்காலத் தலைவனை இப்போதே கொன்றுவிட்டால் வருங்காலத்தில் அவன் இருக்கமாட்டான் என்பதால்தான். அதேபோல, வருங்காலத்தில் விஞ்ஞானத்தில் அதிகபட்ச வளர்ச்சி அடைந்த மனிதர்கள்தான், பூமி அழியாமல் காப்பாற்ற அப்படிப்பட்ட வார்ம்ஹோலை உருவாக்கி, முன்னொருகாலத்தில் தாங்கள் எப்படித் தப்பித்தார்களோ அப்படி அந்தக் காலகட்டத்தில் இருக்கும் தற்போதைய பூமிவாசிகள் தப்பிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அந்த ஏற்பாட்டின்படி, கருந்துளைக்குள் விழுந்த கூப்பரை அவர்கள்தான் டெஸராக்டில் வைத்து, கருந்துளைக்குள் இருந்து கிடைத்த தகவல்களை அவனது மகளுக்குத் தெரியப்படுத்தி, அதன்மூலம் மக்கள் அனைவரும் வேறு கிரகங்களில் குடியேற வாய்ப்புச் செய்து கொடுத்திருக்கின்றனர்.

இப்போது ஒரு கேள்வி எழலாம். வருங்காலத்தினர் இப்படிச் செய்திருந்தால், அவர்கள் சாதாரண மனிதர்களாக இருந்தபோது அவர்கள் எப்படிப் பிழைத்தார்கள்? அவர்களுக்கும் அவர்களின் பிற்காலச் சந்ததியினர் இப்படி வார்ம்ஹோலைக் காட்டியிருக்கலாம். இது ஒரு infinite loop.

இந்த infinite loopதான் நோலனின் முத்திரை. இன்ஸெப்ஷனில் வரும் சில காட்சிகளை இது ஒத்திருக்கிறது. அதில் முடிவே இல்லாமல் வளையும் பரப்பு, வயதான கதாபாத்திரங்கள் இளமையான அவர்களுடனே பேசுவது போன்றதெல்லாம் நோலன் போர்ஹேஸிடம் இருந்து எடுத்த இன்ஸ்பிரேஷன்கள். நோலன் ஆங்கில இலக்கியம் படித்தவர் என்பதால் இது சாத்தியம்.

இங்கே ஸ்பாய்லர்கள் முடிகின்றன – The Spoilers end here

இத்தகைய கருந்துளைகள், வார்ம்ஹோல்கள் ஆகியவையெல்லாம் இந்தப் படம் முழுதும் நோலனுடன் இருந்த விஞ்ஞானி கிப் தார்னால்தான் சாத்தியமானது. கருந்துளைகளைப் பற்றிய அவரது பல ஃபார்முலாக்கள், கிட்டத்தட்ட ஒண்ணரை வருடங்கள் ஆராயப்பட்டு முப்பது பேர் அடங்கிய குழு ஒன்றால் உருவாக்கப்பட்டது. அப்படி உருவாக்கப்பட்ட ஸிஜி கருந்துளை, இயல்பாகவே தன்னைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் உள்ளே இழுக்கத் துவங்கி, சுற்றிலும் இருக்கும் வெளியை வளைக்கவும் துவங்கியது. அப்போதுதான் தன்னுடைய ஃபார்முலாக்கள் எத்தனை துல்லியமானவை என்று கிப் தார்ன் கண்டுகொண்டார். அவரது கூற்றுப்படி, இதுவரை இத்தனை துல்லியமான கருந்துளை எந்தப் படத்திலும் காட்டப்படவில்லை. இந்தப் படத்தின் கருந்துளையும் அப்படியே சுற்றியிருக்கும் வெளியை வளைப்பதைப் பார்க்கலாம். கூடவே, அவற்றின் ஒளியையும் உள்வாங்கி, இதனாலேயே மேலே, கீழே மற்றும் அதனைச் சுற்றிலும் வீங்கிய தோற்றத்தை அது பெற்றிருப்பதையும் கவனிக்கலாம்.

இதெல்லாம் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இப்படியெல்லாம் அட்டகாசமான conceptகளைப் படங்களில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. கடைசியாக அப்படிப் பார்த்து ரசித்தது Event Horizon.


சரி. இவற்றையெல்லாம் எடுத்துவிட்டுப் பார்த்தால், ஒரு படமாக இண்டர்ஸ்டெல்லார் எப்படி? அதைப்பற்றி நாளை வெளிவரும் இரண்டாவது பகுதியில் கவனிக்கலாம். இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே திரைக்கதை அலுப்பாக உள்ளது என்று சொல்லியிருக்கிறேன். ஆனாலும் படத்தைப் பற்றிச் சொல்ல இன்னும் பல விஷயங்கள் உள்ளன (உதா: டாரண்டினோ இந்தப் படத்தை டர்க்காவ்ஸ்கி படம் போல உள்ளது என்று சொன்னது சரியா? ஸ்டான்லி க்யுப்ரிக்கின் 2001: ஸ்பேஸ் ஆடிஸ்ஸி படத்தை நோலன் மிஞ்சிவிட்டார் என்று இணையத்தில் படித்தோமே? அதெல்லாம் உண்மையா?) இதிலேயே அதையும் எழுதியிருந்தால் கட்டுரை கொட்டாவி வரவழைக்கும் விதமாக மாறியிருக்கும் (ஆல்ரெடி அப்படித்தானோ?).

தொடரலாம்.

  Comments

29 Comments

  1. nice review mate …

    there are many things in this movie which are unnoticed and unanswered by both the audience and the makers ,,,
    the original script was gripping and powerful …

    this movie was written from a genius point of view who got distracted by his or their previous success …

    what is left is a residue of laziness (screenplay) and blind fan following (you know what i mean scorp …:)

    Reply
    • Rajesh Da Scorp

      //the original script was gripping and powerful // – absolutely agreed :-)..

      //this movie was written from a genius point of view who got distracted by his or their previous success // – again, absolutely agreed 🙂

      //blind fan following// – oh yea u bet 🙂

      Reply
  2. Kannan Krish

    படம் பார்த்து விட்டு வெளியே வரும் போது எல்லாரும் பேய் அறைஞ்ச மாதிரி இருந்தத பாக்க முடிந்தது… நல்ல வேளை நான் டைம் டிராவல், பிளாக் ஹோல் பத்தின ரெண்டு போஸ்டையும் படிச்சி இருந்தேன்… படம் பார்த்துட்டு அவுங்க இதை படிச்சா மொத்த படமும் விளங்கிடும்… இல்லைனா வேப்பிலை அடிச்சாலும் புரியாது…

    Thanks a lot for sharing.. cheers…

    Reply
    • Rajesh Da Scorp

      Cheers boss 🙂 ..Good to know those posts were useful

      Reply
  3. Rifthy

    Anna I need the other part now

    Reply
    • Beautiful card, love how yo3&9u#;ve used two images, the swirls and flourishes are fab.Thank you for joining us at Emerald Faeries Garden this time.Hugs and Happy New Year.Suzi x

      Reply
  4. Rifthy

    I really really enjoyed this article Anna .semma .

    Reply
    • Rajesh Da Scorp

      Next part has been posted boss 🙂

      Reply
  5. இந்த மேரி படத்துக்கெல்லாம், நீங்க கோனார் நோட்ஸ் போட்ட பிறகு தான் தியேட்டர் பக்கமே தலை வக்கனும்ன்னு கங்கணம் கட்டி வச்சிருக்கேன். தேங்க்ஸ் தல. இனிமே தெகியிரமா. இன்டர்ஸ்டெல்லாருக்குள் நுழைஞ்சிடலாம்.

    Reply
    • Rajesh Da Scorp

      ரைட்டு பாஸ் :​) .. பார்த்துட்டு சொல்லுங்க

      Reply
  6. Arun

    simply superb Rajesh…

    Reply
    • Rajesh Da Scorp

      Cheers Arun. All credit goes to all those scientists who wrote all these concepts 🙂

      Reply
  7. chellam@selvamanikam

    வணக்ககம் உங்களின் கட்டுரை என்னை
    போன்றவருக்கு சிறப்பான ஓன்று ஏன்எனில்
    ஆங்கில படம் ஸ்டோரி ஈனக்கு புரியாது
    பொம்மை பர்குரமாத்ரி தன பர்பெர்ன்
    உங்களின் கட்டுரை படித்த பின்பு பார்த்தால்
    ஒரு திருப்தியான படம் பார்த்த மனதிருப்தி
    நன்றி ……thanks lot

    Reply
    • Rajesh Da Scorp

      உங்களுக்கு உபயோகமாக இருந்ததைக் குறித்து சந்தோஷம் . Cheers

      Reply
  8. Sarav

    Rajesh, Tessaract ? Ithu Namma Avengers Padathila varra Tessract ? appadi nna ithu eppadi inga vanthichu ?

    Reply
    • Rajesh Da Scorp

      அதே டெஸராக்ட்தான் இது. அதேன்னா, அதே மாதிரி. மத்தபடி அதை சக்தியில் மேலா இருக்கும் யரு வேணாலும் உருவாக்கலாம் சரவ்

      Reply
  9. கூப்பர் tesseract விட்டு வெளியே வந்தானா ? எப்படி வெளியே வந்தான் ? இது மட்டும் புரியவே இல்ல அண்ணாத்தே :

    Reply
    • Rajesh Da Scorp

      பாஸ்.. இதைப்பத்தி உங்களுக்கு ஃபேஸ்புக்ல மெஸேஜ் அனுப்பிட்டேன்.. சுருக்கமா, அவன் வரல. அவனை வரவெச்சிட்டாங்க.. அவன் மகளுக்கு தகவல் அனுப்பிய பர்ப்பஸ் முடிஞ்சிது. அதுனாலதான்.

      Reply
  10. Paranthaman

    அற்புதமா சொல்லியிருக்கீங்க ராஜெஷ்…. அடுத்தத எதிர்பார்கிறேன்….!!

    Reply
  11. மிகவும் நன்றி ! தைரியமாக படம் பார்க்க போகிறேன். மிகவும் அருமையாகவும் விளக்கமாகவும் எழுதியுள்ளீர்கள் அருமை .!

    Reply
  12. srini

    Rajesh bro felt bit difficult to grasp your review itself, where can i see the movie and understand, even i read spoilers too, read many more time and see the movie like exam 🙂 ithuthan nolan effect-a?, as vikaten mentioned in previous article nolan will become teacher before the audience.

    Reply
  13. Sema analysis thala, really you have put in a lot of efforts to explain it .. I assumed the wormhole was the garangatua, main concepteye miss paniten, i got cleared about the blackhole after reading ur analysis..

    Reply
  14. Sema analysis thala, really you have put in a lot of efforts to explain it .. I assumed the wormhole was the garangatua…. main concepteye miss paniten, i got cleared about the blackhole after reading ur analysis..

    Reply
  15. Murale

    இந்தப் படம் எனக்கு ஒரு ஆன்மீக அனுபவத்தை கொடுத்தது.
    (சாருவுடன் அப்படியே ஒத்துப் போகிறேன் ) “டெசராக்ட் ” பற்றி புரிந்து கொண்டேன். நீங்கள் அளித்த அனைத்துக் கட்டுரைகளையும் படித்தும் விட்டேன். 10 இல் சயின்ஸ் ல ஜஸ்ட் பாஸ் ஆன எனக்கு அறிவியலை எளிமையா அணுகமுடியும் நு உணரவெச்சவர் “சுஜாதா ” அடுத்து நீங்க தான் பாஸ். மிக்க நன்றி.

    சுஜாதா ” A Brief History Of Time” பற்றி அடிக்கடி குறிப்பிடுவதை பார்த்து படிக்க ஆவல் கொண்டு , பிறகு பார்க்கலாம் என்று வாளாவிருந்து விட்டேன். – 15 வருடங்களாக . கூடிய விரைவில் முயற்சிக்கிறேன்.
    (எந்திரன் படத்தில் ரஜினி , ஐஸ் க்கு அளித்த பரிசுகளில் ஒன்றாக இந்தப் புத்தகமும் அரை நொடி காண்பிக்கப் படும் என்று நினைவு )

    Hats Off..

    Reply
  16. Well done sir! You have created interest in us to read professor emeritus Steephan Hawking’s books like The grand design,a Brief History of Time and others.Nice to read in our mother tongue.ramachandran’s uncle !

    Reply
  17. chandrasekar

    Sujatha uyirodu irundhaal avar explain panni iruppur, “Black hole appadeengaradhu srirangathu sorga vasal madiri appadeenu”. But i miss that man a lot. But i have to give you credit for explaining in ” Tamizh” so clearly, that sujatha illadha kuraiya neenga kalaya try panni irukeenga. ( enna irunthalum original madiri varuma) 🙂 thanks for the post

    Reply
  18. Rajkumar

    ஆரம்பத்துல கூப்பரும், மஃர்பியும் NASA co-ordinates கண்டுபிடிக்கிறாங்க.. அதை யாரு இவங்களுக்கு அனுப்புறா? (வருங்காலத்தில் விஞ்ஞானத்தில் அதிகபட்ச வளர்ச்சி அடைந்த மனிதர்கள்??? )

    // படத்தின் ஆரம்பத்தில் நூலகத்தில் இருந்து தானாகவே புத்தகங்கள் விழுந்தது கூப்பருக்கு நினைவு வருகிறது. அது இவனது செயல்தான். //

    குழப்பமா இருக்கே? கூப்பரே, கூப்பருக்கும், மஃர்பிக்கும் co-ordinates சிக்னல்ஸ் குடுக்குறானா???

    Reply
  19. I do love the way you have presented this specific concern plus it does supply us a lot of fodder for thought. On the other hand, because of what precisely I have personally seen, I simply hope as other commentary stack on that folks stay on issue and in no way get started upon a soap box of the news of the day. Yet, thank you for this extpceional point and whilst I do not necessarily agree with it in totality, I respect your point of view.

    Reply

Join the conversation