Interstellar (2014) – English: Analysis – part 2

by Karundhel Rajesh November 12, 2014   English films

இரண்டு நாட்களுக்கு முன்னர் இண்டர்ஸ்டெல்லார் படத்தின் சில முக்கியமான ஸ்பாய்லர்களைப் பார்த்தோம். அந்த ஸ்பாய்லர்களிலேயே, இன்னும் சில விஷயங்களைப் பற்றி ஆடியன்ஸுக்குக் குழப்பம் இருக்கிறது என்பது ஃபேஸ்புக் கமெண்ட்களில் தெரிந்தது. அவற்றையும் முதலில் பார்க்கலாம். பின்னர் படத்தைப் பற்றிக் கவனிப்போம்.

இங்கு ஸ்பாய்லர்கள் தொடங்குகின்றன. கட்டுரையின் இறுதிவரை ஸ்பாய்லர்கள்தான்.

1. கருந்துளைக்குள் விழும் கூப்பர் திடீரென்று டெஸராக்டுக்குள் இருக்கிறான். அவனை அங்கு வரவைத்தது, விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் அப்போதைய மனிதர்களைவிடவும் பலமடங்கு முன்னேறிய, ஐந்து பரிமாணங்களில் வாழக்கூடிய எதிர்கால மனிதர்கள் என்று கூப்பரே சொல்கிறான். அப்படியென்றால், அந்த எதிர்கால மனிதர்களும் ஒரு காலத்தில் படம் நடக்கும் சூழலில்தான் இருந்திருப்பார்கள். அப்போது அவர்கள் எப்படி அழிவிலிருந்து தப்பினார்கள்?

இது ஒரு infinite loop என்று சென்ற கட்டுரையில் பார்த்தோம். அப்படித்தான் நான் புரிந்துகொண்டேன். அவர்களுக்கும் இப்படித்தான் அவர்களுக்குப் பிறகு வருபவர்களிடம் இருந்து உதவி கிடைத்திருக்கும். இப்படியே அந்த லூப் போய்க்கொண்டு இருக்கும். இதற்கு ஆதி காரணம் என்ன என்பது நோலனால் விளக்கப்படவில்லை. நாமே எதைவேண்டுமானாலும் புரிந்துகொள்ளலாம். எல்லாவற்றுக்கும் முதன்முறையாக இந்த சம்பவம் நடந்திருக்கும்போது எதுவோ ஒரு சம்பவம் எதேச்சையாக நடந்து, அதன்மூலம் அவர்கள் ஈர்ப்புசக்தியைப் பற்றிய உண்மையைப் புரிந்துகொண்டிருக்கலாம்.

2. கருந்துளைக்குள் விழுந்த கூப்பர் ஏன் அழியவில்லை?

ஏனென்றால், அவன் அழியக்கூடாது என்பது வருங்கால மனிதர்களின் விருப்பம். அப்போதுதான் அவனுக்குக் கிடைத்த கருந்துளைக்குள்ளிருக்கும் தகவல்களை அவனது மகள் மர்ஃபிக்கு அவன் தெரிவிக்க முடியும். அதனால்தான் பூமியில் இருந்து மனிதர்கள் பிற கிரகங்களுக்குச் சென்று வாழமுடியும். எனவே அவன் விண்கலத்தில் இருந்து எஜக்ட் ஆகி வெளியேறியதும் டெஸராக்டுக்குள் கூப்பர் வைக்கப்படுகிறான். அங்கே அவனது கடிகாரத்துக்குள் தகவல்கள் அவனால் வைக்கப்பட்டு அதை மர்ஃபி புரிந்துகொண்டதும் அந்த டெஸராக்டுக்குள் கூப்பர் வைக்கப்பட்ட வேலை முடிந்துவிட்டதால் அது மெல்ல அழிகிறது. உடனேயே கூப்பர் அங்கிருந்து சனி கிரகத்தின் அருகே இருக்கும் வார்ம்ஹோலின் அருகில் விடப்படுகிறான். பூமியில் இருந்து வருபவர்களால் காக்கப்படுகிறான்.

இவைதான் படத்தின் இரண்டு மிகப்பெரிய சந்தேகங்கள் என்று புரிந்தது. இப்போது படத்தைப் பற்றிப் பார்ப்போம்.

இண்டர்ஸ்டெல்லார் போன்ற, விஞ்ஞானபூர்வமான கருத்துகளை வைத்து எடுக்கப்பட்ட படங்கள் இதற்குமுன்னர் ஹாலிவுட்டில் ஏராளமாக வெளிவந்திருக்கின்றன. ஸ்டான்லி க்யுப்ரிக் எடுத்த 2001: A Space Odyssey படத்தைவிடவும் ஒரு அட்டகாசமான உதாரணம் வேண்டாம். இன்னும் ஃபாண்டஸிகளான Back to the Future Trilogy, Independence Day, Men in Black Trilogy, Star Wars series, Star Trek, Cowboys & Aliens, Abyss, Alien Series, Predator, Prometheus போன்ற எக்கச்சக்கமான படங்கள் உள்ளன. ஆனால், இவையெல்லாமே கற்பனைகள் அதிகமாக நுழைக்கப்பட்டு, நிஜமான விஷயங்கள் எதுவும் (பெரும்பாலும்) இல்லாத படங்கள். பெரும்பாலும் துல்லியமான, நிஜமான விஞ்ஞானமும் நல்ல திரைக்கதையும் இணையும் படங்கள் கொஞ்சம் குறைவுதான்.  பிற வழக்கமான மசாலா படங்களில் எல்லாம் படத்தில் வருபவர்கள் கண்டபடி துள்ளி விளையாடுவார்கள் (அது சுவாரஸ்யமாகத்தான் இருக்கும் என்றாலும் விஞ்ஞானத்தைப் பற்றிய ஒரு துளி அறிவு கூட இல்லாமல் வேண்டுமென்றே மசாலா காட்சிகள் அவற்றில் இடம்பெறும்).

உடனே, ‘இண்டர்ஸ்டெல்லார்’ படத்தில் அப்படிப்பட்ட மரன மசாலா காட்சிகள் இல்லையா? என்று கேட்டால், அவசியம் இதில் ஏராளமான – பக்கா ஹாலிவுட் கமர்ஷியல் மசாலாக்கள் இருக்கின்றன. அந்தக் காட்சிகளை மட்டும் வைத்துப் பார்த்தால் இண்டிபெண்டன்ஸ் டே படத்துக்கும் இண்டர்ஸ்டெல்லாருக்கும் வித்தியாசங்கள் இல்லை என்றுதான் சொல்வேன். உதாரணமாக, முன்பின் ராக்கெட்டில் பயணித்த அனுபவமே இல்லாத கூப்பர், முதன்முறையாக அந்தப் பயணத்தில் இடம்பெற்று, ராக்கெட்டை ஏதோ ரிமோட் கன்ட்ரோல் விமானம் போல இஷ்டத்துக்குச் செலுத்துகிறான். படத்தில் ஒரு இடத்தில் Dr. Mann இறந்தபின்னர் இவர்களது விண்கலத்தை ஸ்பேஸ் ஸ்டேஷனுடன் மேன்யுவலாகக் கூப்பர் இணைக்கும் காட்சியில் தியேட்டரே கைதட்டலால் அதிர்வதை இப்படத்தைப் பார்த்தவர்கள் கவனித்திருக்கலாம். அதெல்லாம் நிஜத்தில் சாத்தியமே இல்லாத மசாலாக்களே. போலவே திடீர் திடீரென்று பயணத்தைப் பற்றிய முடிவுகளைக் கூப்பர் எடுப்பது, கருந்துளைக்குள் கூப்பரின் கலம் ஈர்க்கப்படும்போது கலத்துக்கு எதுவுமே ஆகாதது (மெதுவாகக் கலம் சூட்டில் பிய்வதைக் காட்டுகிறார்கள். உண்மையில் ஒரே நொடியில் கலம் பிய்க்கப்பட்டு அழிந்துவிடும்) போன்றவையெல்லாம் வேண்டுமென்றே மசாலாக்களாக எழுதப்பட்ட காட்சிகள்தான்.  இப்படிச் சில காட்சிகள் இருந்தால்தான் ஆடியன்ஸைக் கவர முடியும் என்பது நோலனின் கருத்து. இப்படிப்பட்ட காட்சிகள் எதுவும் 2001:A Space odysseyல் இருக்காது. நமக்கெல்லாம் மசாலாக் காட்சிகள் இருந்தால்தான் படம் வேகமாக ஓடும் என்று தோன்றுவதால், பலருக்கும் அப்படம் மிகவும் மெதுவாகத்தான் செல்லும். இருந்தாலும், இந்த இரண்டு படங்களையும் ஒப்பிடவே முடியாது என்பதால் இதை எழுதினேன். அவசியம் க்யுப்ரிக்கின் படம்தான் (இப்போதும்) சிறந்தது. அதை மிஞ்சும் படம் இன்னும் வரவில்லை.

‘எங்கெல்லாம் என் படத்தில் ஆடியன்ஸை ஏமாற்றினேன் என்பது எனக்கே நன்றாகத் தெரியும். படம் முழுக்க என்னுடன் இருந்த கிப் தார்னிடமும் (விஞ்ஞான ஆலோசகர்) அவைகளைப் பற்றிச் சொல்லியிருக்கிறேன்.. ஆனால் இப்போது இணையத்தில் அது தவறு இது தவறு என்றெல்லாம் எழுதுகிறார்களே.. அவையெல்லாம் இல்லை. அவை என்ன என்று தெரிய நீங்கள் கிப் தார்னின் புத்தகத்தை ஒருமுறையாவது படிக்கவேண்டும்’ என்பது நோலனின் பதில். இந்த பதில் ஏன் என்றால், படத்தில் வரும் தண்ணீர் சூழ்ந்த கிரகத்தில் ஒரு மணி நேரம் ஆகிறது என்பது பூமியில் ஏழு வருடங்கள் என்ற கருத்தைத் தவறு என்று இணையத்தில் விமர்சிக்கும் சில பதிவுகள் தவறு என்ற நோலனின் கருத்தைச் சொல்வதற்கே. அது துல்லியமாகக் கணிக்கப்பட்டு உருவாக்கப்பட்டது என்கிறார் நோலன்.

அடுத்ததாக, படத்தில் ஆரம்பம் முதல் கொடுக்கப்படும் க்ளூக்கள் (மர்ஃபியின் நூலகம் அதிர்வது, Stay என்ற மோர்ஸ் கோட் உருவாவது, புத்தகங்கள் விழுவது) சற்றே செயற்கையாக இருந்தன. எப்படியும் பின்னால் இவை விளக்கப்படப்போகின்றன என்பது ஆரம்பத்திலேயே புரிந்துவிட்டாலும், இவை நீண்டுகொண்டே சென்றது கொஞ்சம் அலுப்பையே ஏற்படுத்தியது. போலவே பயிர்கள் அழிகின்றன; ஒவ்வொரு பயிராக ஒவ்வொரு வருடமும் அழிகிறது; புழுதிப்புயல் போன்றவையெல்லாம் நம்பும்படி இல்லை. அவை மிகவும் அவசரமாகக் காட்டப்பட்டு, கூப்பர் விண்வெளிக்குப் பறக்கும் காட்சியை நோக்கியே நம்மைக் கொண்டுசெல்வதால், திரையில் எதுவோ ஓடிக்கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தையே ஏற்படுத்தின. அடுத்ததாக இந்திய விமானம் ஒன்றைக் கூப்பர் கட்டுப்படுத்துவது கதைக்குத் தேவையே இல்லாத காட்சி. முதலில் லீக் ஆன திரைக்கதையில் இது ஒரு முக்கியமான காட்சி. காரணம், அவன் இதற்கு அடுத்து ஒரு தீவுக்கு இதைப்போன்ற கைவிடப்பட்ட இயந்திரங்களைத் தேடிச் செல்வான். அதேபோல், அந்த வெர்ஷனில் இது ஒரு சைனீஸ் விமானம். அதற்கும் படத்தின் பின்னால் வரும் காட்சிகளுக்கும் நேரடித் தொடர்பு இருந்ததால் அந்தக் கட்சி தேவையானதாக இருந்தது. ஆனால் இந்தத் திருத்தப்பட்ட திரைக்கதையில் இந்தக் காட்சிக்கு எந்தத் தேவையும் இல்லை. எனவே இவையெல்லாம் அலுப்பையே ஏற்படுத்தின.

படத்தின் ஆரம்பம் முழுக்கவே கூப்பர் விண்வெளிக்குப் பறக்கும் காட்சியை நோக்கியே இருக்கிறது. முடிந்தவரை வேகமாக அந்தக் காட்சி வந்துவிடவேண்டும் என்று நோலன்கள் நினைத்திருக்கலாம். இதனால், கதாபாத்திரங்களின் தனிப்பட்ட குணாதிசயங்கள் எதுவுமே தெரிவதில்லை. கூப்பர் எப்படிப்பட்டவன்? அவனுக்கும் அவனது மகன் டாமுக்கும் இடையேயான உறவு எப்படிப்பட்டது? அவனுக்கு விவசாயம் மட்டுமேதான் முழுநேர வேலையா? இயந்திரங்களையும் கூப்பர் உருவாக்குகிறான். இருந்தாலும், திடீரென்று அவன் ஒரு ராக்கெட்டில் ஏறி விண்வெளிக்குச் செல்வது துளிக்கூட நம்பும்படி இல்லை. அட்லீஸ்ட் அவன் ஒரு பைலட் என்பதையாவது இன்னும் தெளிவாக, பின்னால் அவன் ராக்கெட்டில் போகப்போகும் காட்சியை ஜஸ்டிஃபை செய்யவாவது காட்டியிருக்கலாம் என்று தோன்றியது. மேத்யூ மெக்கானஹி நல்ல நடிகர்தான். ஆனால் அவருக்கு நடிக்க எந்த வாய்ப்புமே தரப்படவில்லையே? நோலனின் பிரம்மாண்டமான theme, கதையின் பிற அம்சங்கள் ஆகியவைதான் மெக்கானஹியை முந்திக்கொண்டு தெரிகின்றன. அதுதான் நோலனின் பிரச்னையும் கூட. இன்ஸெப்ஷனில் லியனார்டோ டி கேப்ரியோவுக்கு நடிக்க எங்கே வாய்ப்புத் தரப்பட்டது? நோலனின் puppet போன்றுதான் படம் முழுக்க அவர் வந்தார். அதுவேதான் க்ரிஸ்டியன் பேலுக்கும் – Dark Knight Seriesன் முதல் படத்தைத் தவிர, பாக்கியிருக்கும் இரண்டு படங்களிலும் அவர் நடித்தே நான் பார்க்கவில்லை. மொமெண்டோ, இன்ஸோம்னியா, ப்ரஸ்டீஜ் (ஏன்? டூடில்பக்கில் கூட) கதாநாயகர்கள் நன்றாகவே நடித்திருப்பார்கள். ப்ரஸ்டீஜ்ஜோடு (பேட்மேன் பிகின்ஸையும் சேர்த்துக்கொள்ளலாம்) கதாநாயகனின் personal குணாதிசயங்களை நாம் காண்பது போயே போய்விட்டது.

அடுத்ததாக, படத்தின் வசனங்கள். பல இடங்களில் செயற்கையான வசனங்கள் உள்ளன. இவை எழுதப்பட்ட காரணம், படத்தின் Themeஆக Fourth Dimension என்ற விஷயம் இருக்கிறது. அது பின்னால் வரப்போகிறது என்று ஆடியன்ஸுக்குக் கட்டியம் கூறுவதற்காகவே. இதனாலேயே அவை வழவழா கொழகொழா என்று ஆகிவிடுகின்றன. விண்கப்பல் கிளம்பியதும் கூப்பரும் அமேலியாவும் பேசிக்கொள்ளும் எல்லாக் காட்சிகளிலுமே இப்படிப்பட்ட – கேட்பதற்கு எதுவோ அர்த்தம் பொதிந்ததாக இருந்தாலும்- அவற்றில் எந்த அர்த்தமும் இல்லாமல், 4th dimension மட்டுமே இலக்காகக் கொண்ட வசனங்கள் – இருக்கின்றன. உதாரணமாக ஒரு வசனம் இங்கே.

Love is the one thing that transcends time and space (Thanks – IMDB)

இது அமேலியா கூப்பரிடம் சொல்வது. கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் இது எப்படி சாத்தியம்? காலம் மற்றும் வெளி ஆகிய இரண்டையும் தாண்டி அன்பு அல்லது காதல் இருக்க முடியுமா? இந்த வசனத்தைக் கவனித்தால், பின்னால் அமேலியா வேறு ஒரு கிரகம் செல்லப்போகிறாள்; அவளைத் தேடிக் கூப்பரும் கிளம்பப்போகிறான்; அதற்கு ஒரு justification வேண்டும்; எனவே முதலிலேயே இப்படி ஒரு வசனத்தை வைத்துவிடுவோம் என்று யோசித்தே வைத்ததுபோல இருக்கிறது (நோலன்களைக் கேட்டால், கூப்பர் தனது மகள் மர்ஃபிமேல் பல வருடங்களாக அன்பைத் தேக்கி வைத்திருக்கிறான் அல்லவா? அது காலத்தையும் வெளியையும் தாண்டிய அன்புதானே? என்று வாதிடக்கூடும். ஆனால் அப்படிப்பட்ட contextடில் இந்த வசனம் வரவில்லை. ’காதல்’ என்ற கண்டக்ஸ்டில்தான் படத்தில் வருகிறது).

ஆனால், இவையெல்லாம் தாண்டி எனக்குப் பிடித்தவை இரண்டு விஷயங்கள் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தேன். வார்ம்ஹோலும் கருந்துளையுமே அவை. இவ்வளவு realisticஆக நான் இதுவரை எங்குமே இவற்றைப் பார்த்ததில்லை. வார்ம்ஹோல் என்பது செயற்கை வஸ்து. இயல்பில் அவை உருவாவதில்லை. எனவே அவற்றையாவது இஷ்டத்துக்குக் கற்பனை செய்யலாம். ஆனால் கருந்துளை என்பது நிஜத்தில் இருந்துகொண்டிருப்பது. நமது பால்வீதியின் மத்தியிலேயே ஒரு மிகப்பெரிய கருந்துளை உண்டு என்பது ஆராய்ச்சியாளர்களின் முடிவு. மட்டுமில்லாமல் இன்னும் பலப்பல கேலக்ஸிகளின் நடுவேயும் கருந்துளைகள் உண்டு என்றே சொல்கிறார்கள். எனவே நிஜத்தில் இருக்கும் ஒரு வஸ்து திரையில் எப்படிக் காண்பிக்கப்படுகிறது என்பதில் ஆர்வம் இருந்தது. படத்தில் வரும் வண்ணமயமான கருந்துளை, நிஜமாகவே கிட்டத்தட்ட ஒரு வருட உழைப்பில் உருவானது. கிப் தார்ன் பல்வேறு equationsகளைப் பற்றி விளக்கியும் ஆராய்ந்தும் தனது முடிவுகளை ஸிஜி டீமிடம் தந்திருக்கிறார். அவற்றை வைத்துக்கொண்டு அவர்கள் உருவாக்கியதுதான் இந்தக் கருந்துளை. இதனை ஸிஜியில் சிமுலேட் செய்யும்போது, கிப் தார்ன் எதிர்பாராத வகையில் கருந்துளையின் மேலே, கீழே மற்றும் அதைச் சுற்றியும் இருக்கும் ஸ்பேஸ் என்பது உள்ளிழுக்கப்படும்போது வண்ணச் சிதறல்கள் தானாகவே ஒளிவட்டம் போலத் தோன்றின. படத்தில் கவனித்தால், கருந்துளையைச் சுற்றியிருக்கும் இந்த ஸ்பேஸ், வேகமாக உள்ளிழுக்கப்படுவது தெரியும். இவற்றை வைத்துக்கொண்டு குறைந்தபட்சம் இரண்டு விரிவான பேப்பர்களை ப்ரஸண்ட் செய்யப்போவதாகவும் கிப் தார்ன் சொல்லியிருக்கிறார்.

இதற்கு முன்னர் இப்படிப்பட்ட வார்ம்ஹோல்களைக் கொஞ்சமாவது உண்மையாகக் காட்டிய படம், Event Horizon. ஆனால் அதில் வார்ம்ஹோல் மற்றும் கருந்துளை ஆகியவை நன்றாகக் காட்டப்பட்டிருக்காது. (X Men: Days of the Future Past, Harry Potter and the Prisoners of Azkaban போன்ற படங்களில் காட்டப்படுவதெல்லாம் வார்ம்ஹோல்தான் என்றாலும், விண்வெளி, வார்ம்ஹோலிலுள் பயணித்தல் ஆகிய விஷயங்களை அவை காட்டவில்லை. அவை வெறும் ஃபாண்டஸிகளே).

இதுவரை வந்திருக்கும் நோலன் படங்களில் செண்ட்டிமெண்ட் குறைவு. மெமெண்டோவில் கொஞ்சமும், இன்ஸெப்ஷன், பேட்மேன் சீரீஸில் கொஞ்சமுமே இருக்கும். செண்ட்டிமெண்ட்டை விட, திரைக்கதையை நம்புபவர் நோலன். ஆனால் இதில் செண்ட்டிமெண்ட் அதிகம். கூப்பருக்கும் மர்ஃபிக்கும் இடையேயான பல காட்சிகளில் செண்டிமெண்ட் ஆறாக ஓடுகிறது. ஆனால் அது செயற்கையாக இல்லை. கூப்பர் விண்வெளியில் மாட்டிக்கொண்டபின்னர் அவனது மகன் டாம் அனுப்பிய வீடியோக்களைப் பார்க்கையில், ஆடியன்ஸின் மனம் கொஞ்சமாவது அசையாமல் இருக்காது. தனிமை – இனி எப்போதும் அவர்களைப் பார்க்க இயலாது – டாம் வளர்ந்து பெரியவனாகிவிடுதல் போன்ற பல உணர்வுகள் அதில் உள்ளன. அதைப்போலவேதான் மர்ஃபி முதன்முறையாகக் கூப்பருடன் பேசுவதும்.

இதைத்தவிர, படத்தில் தேவையில்லாத காட்சிகள் பல உள்ளன. Dr. Mann வரும் அத்தனை காட்சிகளும் அப்படிப்பட்டவையே. இப்படித்தான் நடக்கப்போகிறது என்பது அவர் பேசும் வசனங்களிலேயே புரிந்துவிடுகிறது. காரணம் அவருக்கும் நோலன்கள் கூப்பரும் அமேலியாவும் பேசுவதைப் போலவே அழகான – ஆனால் அர்த்தமே இல்லாத வசனங்களைக் கொடுத்திருக்கிறார்கள்.

டார்க் நைட் ரைஸஸ் படத்தில் க்ளைமேக்ஸில் டாலியாவை யாரென்று ஆடியன்ஸ் தெரிந்துகொள்ளும்போது அது ஒரு பயங்கரமான ட்விஸ்ட்டாக இருக்கும் என்று நோலன்கள் நினைத்துத்தான் அப்படி வைத்தனர். ஆனால் பேட்மேன் ரசிகர்களுக்குக் கடைசிவரை ட்விஸ்டே படத்தில் சிக்கவில்லை. அவர்களுக்கு டாலியா யாரென்று ஏற்கெனவே தெரியுமே? அதைப்போல்தான் இதிலும் வசனங்கள் மூலமாகப் பின்னால் வரும் காட்சிகளுக்குக் க்ளூ கொடுக்கலாம் என்று நோலன்கள் யோசித்திருக்கிறார்கள் என்பது புரிகிறது. இது ஒரு பழைய திரைக்கதை டெக்னிக். இதை மைக்கேல் பே செய்யலாம். நோலன் செய்யக்கூடாது. இருந்தாலும், நோலன் இப்போது ஒரு டிபிகல் ஹாலிவுட் இயக்குநர் என்பதால் அவரும் இதைச் செய்ய உரிமை இருக்கிறது.

படத்தின் க்ளைமேக்ஸில் கூப்பரின் டெஸராக்ட் அழியும்போது அவன் அமேலியாவுடன் கைகுலுக்குகிறான் (அல்லது அவளது கையைத் தொடுகிறான்). படத்தில் அமேலியாவின் கையை ஒரு அலை போன்ற அமைப்பு தொடுவதை ஆரம்பத்திலேயே பார்க்கிறோம். ‘That, is the first Contact’ என்று அமேலியா அவளுடன் இருக்கும் கூப்பரிடம் சொல்கிறாள். கூப்பர் டெஸராக்டில் இருந்து சனி கிரகத்துக்குப் பக்கத்தில் வருங்கால மனிதர்களால் அனுப்பப்படும்போதுதான் இது நடக்கிறது. இதுவும் மேலே சொன்ன ’க்ளூ’ காட்சிதான்.

எனவே, படத்தில் எக்கச்சக்க ஹாலிவுட் மசாலாக் காட்சிகள் உள்ளன. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் டார்க் நைட் ரைஸஸ் படத்தில்கூட இத்தனை டிபிகல் காட்சிகள் இல்லை என்பது புரிகிறது. இருந்தாலும், கருந்துளையையும் வார்ம்ஹோலையும் தத்ரூபமாகக் காட்டி, அதனால் படம் பார்ப்பவர்களின் ஆவலைத் தூண்டிவிட்டு அவர்களை இயற்பியலின் பக்கம் திருப்பிய நோலனின் திறமையைப் பாராட்டித்தான் ஆகவேண்டும். கிப் தார்ன், ஸ்டீஃபன் ஹாக்கிங் போன்ற பெயர்கள் இப்போது இணையத்தில் மிக அதிகமாக அடிபடுகின்றன. அவர்கள் எழுதிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் படிக்கப்படுகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. நானுமே இண்டர்ஸ்டெல்லார் திரைக்கதையை ஃபிப்ரவரியில் படித்தபின்னர்தான் மறுபடியும் இயற்பியலின் பக்கம் வந்தேன்.

படத்தில் சில பதிலில்லாத கேள்விகளும் உள்ளன.

ஏற்கெனவே பார்த்த கேள்வி. வருங்கால மனிதர்கள்தான் கூப்பருக்கு உதவுகிறார்கள். அப்படியென்றால் அவர்களுக்கு இந்தச் சம்பவங்கள் pastடில் நடந்தபோது யார் உதவியிருப்பார்கள்?

அமேலியா, படத்தின் இரண்டாம் பாதியில் கூப்பர் டஸராக்டில் கடிகாரத்தில் கருந்துளையின் உள்ளிருந்து கிடைத்த தகவல்களைப் பதியும்போது, தனது பழைய நூலகத்திற்கு வந்தால்தான் தனக்கு ஏற்ற பதில் கிடைக்கும் என்பது மர்ஃபிக்கு எப்படித் தோன்றுகிறது? படத்தில் மிகத் தற்செயலாகவே அவளுக்குத் தோன்றுவதாக இருக்கும். படத்தின் மிக முக்கியமான சங்கதி இப்படித் தற்செயலாகச் சொல்லப்படுவது நெருடல்தானே?

வருங்கால, fifth dimension மனிதர்கள்தான் தனக்கு உதவுகிறார்கள் என்பதும் ஒரு ஃப்ளாஷ் போல கூப்பரின் மூளையில் தோன்றுவதுதான். அது எப்படி? படத்தின் ஆரம்பத்தில் இருந்தே கூப்பர் இப்படிப்பட்ட முக்கியமான விஷயங்களை அன்றாட வாழ்க்கையில் கடைக்குச் சென்று டீ சாப்பிடுவது போலவே பேசிக்கொண்டே இருக்கிறான். வாழ்க்கை முழுதும் ஆஸ்ட்ரனாட்களாக இருக்கும் அமேலியா போன்றவர்களையே அதிரடியான யோசனைகளை வானில் சொல்லி ஆச்சரியப்பட வைக்கிறான். இதெல்லாம் எப்படி சாத்தியம்?

இறுதியில் அமேலியா, அவர்கள் செல்ல இருந்த மூன்றாவது கிரகத்திலோ அல்லது அதன் அருகிலோ இருக்கிறாள். அங்கே யாருமில்லை. அப்படியென்றால் கூப்பருக்குப் பிறகு யாரும் அங்கே செல்லவில்லையா? கூப்பரே சனி கிரகத்துக்கு அருகே இருக்கும் கூப்பர்’ஸ் ஸ்டேஷனில்தானே இருக்கிறான்? அது ஏன்? கூப்பரேதான் மறுபடியும் அவளைத் தேடிச்செல்லவேண்டும் என்பதாலா?

பல கேள்விகள். நோலனுக்குத்தான் பதில் தெரியும்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இது சராசரி மசாலாவாக ஆகியிருக்கவேண்டிய படம். ’க்ரிஸ்டோஃபர் நோலன்’ என்ற tag ஒட்டிக்கொண்டிருப்பதால் மட்டுமேதான் இப்போது பேசப்படும் படமாக ஆகியிருக்கிறது. அதில் சந்தேகமே இல்லை. அப்படி இல்லை என்று மறுப்பவர்கள் Contact படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? அது ஏன் பேசப்படவில்லை? அதுவும் கிட்டத்தட்ட இதே conceptதான். கூடவே, இதே படத்தை மைக்கேல் பே எடுத்திருந்தால் – திரைக்கதையின் ஒவ்வொரு வரியுமே மாறாமல் அச்சு அசலாக அதேபோல் இருந்திருந்தாலும் கூட- நாம் பார்த்திருப்போமா? பார்த்திருந்தாலும் இப்படியெல்லாம் பேசியிருப்போமா?

இது நோலனுக்கு நன்றாகத் தெரியும். தனது பெயரை எப்படி மார்க்கெட்டிங் செய்யவேண்டும் என்பது நோலனுக்கு அத்துபடி. எனவே, அடுத்த நோலன் படத்தையும் இப்படித்தான் நாம் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் படத்தின் திரைக்கதையிலும் எக்கச்சக்க டிபிகல் காட்சிகள் அவசியம் இருக்கும். இருந்தாலும், இண்டர்ஸ்டெல்லாரில் வந்த கருந்துளை & வார்ம்ஹோல் போல வேறு எதையாவது நோலன் வைத்திருப்பார். இன்ஸெப்ஷனின் nested dream loop போல. ப்ரஸ்டீஜ்ஜின் இரட்டையர்கள் போல. எனவே அந்தப் படமும் இப்படியே பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆரம்பத்தில் நாம் கவனித்த ஸைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்களுக்கும் இண்டர்ஸ்டெல்லாருக்கும் அதுதான் வித்தியாசம். உதா: ப்ராமிதியஸ் படத்தையும் இண்டர்ஸ்டெல்லாரையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அதிலும் மனித குலத்தின் துவக்கம் என்ற விஷயம் கையாளப்படுகிறது. அது யோசித்துப் பார்க்கச் சுவாரஸ்யமானதுதான். இருந்தாலும் அந்தப் படத்தில் பிற ஏலியன் படங்களில் இருக்கவேண்டிய அனைத்து டெம்ப்ளேட் காட்சிகளும் இருந்தன. படமும் மிகவும் அலுப்பானதாக இருந்தது.  அங்கேதான் நோலன் கொஞ்சம் வித்தியாசப்படுகிறார்.

இண்டர்ஸ்டெல்லார் படத்தைப் பார்த்ததும் இன்னும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல் அனைவருக்கும் எழுவது இயல்பு. முதலில் இந்த டாக்குமெண்ட்ரியைப் பாருங்கள். பின்னர் கீழே உள்ள இணைப்புகளைப் பார்க்கவும்.

 

References:

1. இண்டர்ஸ்டெல்லார் பற்றிய இதற்கு முந்தைய அனைத்துக் கட்டுரைகள்
2. http://www.penny4nasa.org/2014/11/07/how-interstellar-black-hole-led-to-an-actual-scientific-discovery/

3. http://arts.nationalpost.com/2014/11/06/the-physics-you-need-to-know-in-order-to-understand-interstellar/

4. http://www.slate.com/articles/health_and_science/space_20/2014/11/interstellar_science_review_the_movie_s_black_holes_wormholes_relativity.2.html

5. http://www.slate.com/blogs/browbeat/2014/11/07/interstellar_explained_the_ending_who_are_they_the_tesseract_the_blight.html

6. http://www.wired.com/2014/10/astrophysics-interstellar-black-hole/

7. http://screenrant.com/interstellar-movie-plot-holes-science-christopher-nolan/

8. http://www.youtube.com/watch?v=6c_CW3Iv6j4

9. http://www.thedailybeast.com/articles/2014/11/10/christopher-nolan-uncut-on-interstellar-ben-affleck-s-batman-and-the-future-of-mankind.html

பி.கு – ஹான்ஸ் ஸிம்மரின் இசை பற்றிச் சொல்ல எதுவுமில்லை. நோலனை மிகவும் நெருக்கமாகப் பின்தொடர்ந்துள்ளார் ஸிம்மர். படத்துக்கு ஏற்ற இசை.  எனக்குப் பிடித்தது.

  Comments

18 Comments

  1. Arvind

    well written review :-). Hats off

    /***அவனுக்கு விவசாயம் மட்டுமேதான் முழுநேர வேலையா? இயந்திரங்களையும் கூப்பர் உருவாக்குகிறான். இருந்தாலும், திடீரென்று அவன் ஒரு ராக்கெட்டில் ஏறி விண்வெளிக்குச் செல்வது துளிக்கூட நம்பும்படி இல்லை. அட்லீஸ்ட் அவன் ஒரு பைலட் என்பதையாவது இன்னும் தெளிவாக, பின்னால் அவன் ராக்கெட்டில் போகப்போகும் காட்சியை ஜஸ்டிஃபை செய்யவாவது காட்டியிருக்கலாம் என்று தோன்றியது.***/

    It was told that the Copper worked as a test pilot in Nasa.

    Reply
    • It was told. accepted. But cooper is flying the rocket like an ace pilot. He also maneuvers it so precisely in that scene I mentioned, which is like a superhero. That’s what I meant.Not logical. Couldn’t believe it.

      Reply
      • Muthu

        No, it was TARS who took most of the control and monitors the docking sequence. I think Cooper was assisting. Given the ability that TARS as a Robot with fully integrated to the Space Ship, the docking sequence is possible ( after all it is a movie :P)

        Reply
  2. அட்டகாசம்…

    //கிரகத்தில் ஒரு மணி நேரம் ஆகிறது என்பது பூமியில் ஏழு மணி நேரம் என்ற கருத்தைத் தவறு //

    ஏழு வருடம் தான? typo என்று நினைக்கிறன்…

    Reply
    • ஹிஹிஹிஹி.. ஆமாம். டைபோதான். பொத்துனாப்புல போயி திருத்திட்டேன் 🙂

      Reply
  3. படத்தின் இரண்டாம் பாதியில் கூப்பர் டஸராக்டில் கடிகாரத்தில் கருந்துளையின் உள்ளிருந்து கிடைத்த தகவல்களைப் பதியும்போது, தனது பழைய நூலகத்திற்கு வந்தால்தான் தனக்கு ஏற்ற பதில் கிடைக்கும் என்பது மர்ஃபிக்கு எப்படித் தோன்றுகிறது? படத்தில் மிகத் தற்செயலாகவே அவளுக்குத் தோன்றுவதாக இருக்கும். படத்தின் மிக முக்கியமான சங்கதி இப்படித் தற்செயலாகச் சொல்லப்படுவது நெருடல்தானே?
    //morphy recall all the incidents happened in the past from his childhood including the coordinates derived by cooper at the time of dust storm., so he decided to go to library., and search for the answers.,,//// it seems like the infinite loop concept also used in this place….

    Reply
  4. Rajkumar

    I feel the movie is entertaining and also one of the best of Chris Nolan. There is no need for this detail analysis

    Reply
  5. ராஜசுந்தரராஜன்

    கூப்பர் திரிசங்கு சொர்க்கத்தில் இருக்கும்போது, TARS குரல் சொல்லுகிறதே, “இதற்கு வெளியே ஐந்து பரிமாண உயிர்கள் உள்ளன; இந்த இடத்தில் மூன்று பரிமாண (படத்தில் அப்படித்தான் சொல்லப்படுகிறது) உணர்வு வருகிறாற்போல நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்,” என்று.

    நோலன் (இன்னும் பல ஹாலிவுட் இயக்குநர்கள்) பைபிள் போதனைகளைத்தான் சரடாக வைத்துக் கதைகோர்க்கிறார்கள். ‘இயேசுவின் இரண்டாவது வருகையின் போது பூமி அழிந்துவிடும்; அவர் மக்களுக்கு விடுதலை தந்து வேறொரு உலகத்தில் சந்திப்பார்’ என்னும் சரடு இங்கே கதையாக்கப் பட்டிருக்கிறது. அப்படி அணுகுவீர்களாயின் கதையில் ஒரு குழப்பமும் வராது. ஹாலிவுட் படங்களை அக்குவேறு ஆணிவேறு ஆக நினைவில் வைத்திருக்கும் ‘கருந்தேள்’ ராஜேஷ் பைபிள் (பழைய +புதிய ஏற்பாடுகள்) வாசித்து உள்வாங்கினால் இன்னும் உதவியாக இருக்கும்.

    Reply
  6. ராஜசுந்தரராஜன்

    இந்திய/ சீன விமானத்தைக் கட்டுப்படுத்தி அதன் மூளையைக் கழற்றி எடுத்தல், அவருக்கு கிழக்கத்திய அறிவின் புலமை இருந்தது எனக் காட்டுவதற்காக. ஒரிஜினல் திரைக்கதை போல ஸ்பேஸ் ஸ்டேஷன் சீனர்களுடையதாக இருந்திருந்தால் அது பொருந்தி வந்திருக்கும். ஆனால் வேண்டாத அரசியல் டென்ஷன் வரும். (இப்போதைக்கு கம்யூனிசம் அல்ல இஸ்லாமே அமெரிக்கர்களுக்கு எதிரி).

    Reply
  7. anany

    //வருங்கால, fifth dimension மனிதர்கள்தான் தனக்கு உதவுகிறார்கள் என்பதும் ஒரு ஃப்ளாஷ் போல கூப்பரின் மூளையில் தோன்றுவதுதான். அது எப்படி? படத்தின் ஆரம்பத்தில் இருந்தே கூப்பர் இப்படிப்பட்ட முக்கியமான விஷயங்களை அன்றாட வாழ்க்கையில் கடைக்குச் சென்று டீ சாப்பிடுவது போலவே பேசிக்கொண்டே இருக்கிறான். வாழ்க்கை முழுதும் ஆஸ்ட்ரனாட்களாக இருக்கும் அமேலியா போன்றவர்களையே அதிரடியான யோசனைகளை வானில் சொல்லி ஆச்சரியப்பட வைக்கிறான். இதெல்லாம் எப்படி சாத்தியம்?//

    Cooper father says once to him that he is good at something but didn’t get chance to do that.

    Your previous article was good. Here it looks like you try to become over smart.

    Reply
  8. Accust Here

    கூப்பெரின் வேலை முடிந்ததும் அவன் மீண்டும் wormholeக்குள் இழுக்கபடுகிறான் அப்பொழுது அவன் அங்கு சென்று கொண்டிருக்கும் அவர்களது கலத்தை கடக்கிறான் அப்படியெனில் அவன் மீண்டும் இறந்தகாலத்தில் பயணம் செய்கிறானா, அவன் வெளிவந்ததும் பல வருடங்கள் கடந்து விட்டிருந்தன, அவன் அமிலியாவை தேடி போகும்போது அவளுக்கு மிகவும் வயதாகி இருக்காதா, அந்த கிரகத்தின் கால அளவு இதை பற்றி ஏதும் விளக்கம் உண்டா

    Harry Potter and the Prisoners of Azkaban படத்தில் Wormhole எப்பொழுது வரும் Half Blood Prince படதில்தானே ஒரு அலமாரி wormholeஆக காட்டப்பட்டிருக்கும்.

    Reply
  9. என்ன ஒரு தெளிவான அலசல். வியந்தேன். கிறிஸ்டோபர் நோலனின் திரைக்கதையை இந்த அளவுக்கு கிழி கிழியென கிழிக்கும் ராஜேஷுக்கு உடனே ஒரு யான் படத்தின் டி வி டியை பார்ஸல் அனுப்பவும். அவருடைய ரசனைக்கு ஏற்றதாக இருக்கும். வாழ்க. நோலனைவிட ஒரு அருமையான திரைக்கதை ஆசிரியர் நம்மிடம் இருக்கிறார். வாழ்த்துக்கள்.

    Reply
  10. Vivek

    Boss appo irandam ulagam padathula Arya intha ulagathil irundhu ver ulagathuk wormhole mulama dham ponaru pola irukuka…

    Reply
  11. Bala

    Did you not see that Cooper was an ex-pilot and he has nightmares about his past missions in the beginning of the movie?

    Reply
  12. viswesh

    Current template renders horribly centered content in mobile devices. Please fix it. I used read your site through my mobile.

    Reply
  13. rajkamal

    hey really fantastic bro.u got a lot skill the movie review .thank you very much

    Reply
  14. Say for an instance, Blackhole is a nonliving star, if we orbit, we can travel faster than time..
    if you start orbiting a black hole, due to its enormous gravity, you will keep orbiting Black Hole only. how can you come out of its orbit? you would need more than Black Hole’s Gravitational force “Escape Velocity”

    I really don’t understand Worm hole as a tunnel. There is no such start point and end point. when there is a gravity, everything will be attracted to the center of gravity / core.

    lot of logic miss in this movie.

    moreover Time travel is possible only in dreams 🙂

    Reply
  15. thiru

    1———–coopers family prepared to leave the place….Murph came back to take the watch ! now think about love definition.
    2. ——–can you able match the sequence how cooper controlled the indian drone with how they landed in water?
    3———-Dr .Mann words are very true. listen again please its about other way about survival.
    4.———95% honest ,humor etc properties for resetting Tars
    5.——–i read some where about how the world will end ? Dust Storm is one among that theory.

    Reply

Join the conversation