ஜிகர்தண்டா (2014) – Analysis
முன்குறிப்பு – இந்தக் கட்டுரையில் படத்தின் எந்த ஸ்பாய்லர்களும் உடைக்கப்படவில்லை. எனவே ஜாலியாகப் படிக்கலாம். கட்டுரையில் ஆங்காங்கே பழைய விமர்சனங்களின் லிங்க்ஸும் உள்ளன. படித்துப் பாருங்கள்.
என்னியோ மாரிகோனியின் இசைக்குறிப்புகள் மிகவும் புகழ் வாய்ந்தவை. உலகெங்கும் உள்ள பல இயக்குநர்களுக்கும் இசையமைப்பாளர்களுக்கும் ஆதர்சமாக இன்னும் விளங்குபவர் மாரிகோனி. இன்றும் க்வெண்டின் டாரண்டினோ அவரது இசைக்குறிப்புகளை சர்வசாதாரணமாக எடுத்துப் பயன்படுத்துவதைக் காணலாம். Kill Bill படங்களில் அவரது பல குறிப்புகள் இருக்கும். இதைப்பற்றிச் சென்ற வருடம் ஒரு கடுமையான அறிக்கையில் டாரண்டினோவைத் தாக்கியிருந்தார் மாரிகோனி. அவரது அறிக்கையில், பாடல்களை இஷ்டத்துக்கு – ஒரு பொருத்தமே இல்லாமல் – டாரண்டினோ உபயோகிப்பதாகவும், தனது ஒரிஜினல் பாடலான Ancora Qui பாடலை இப்படித்தான் கண்டபடி டாரண்டினோ உபயோகித்திருக்கிறார் என்றும், Django Unchained படத்தில் ஒரே ரத்தக்களறியாக இருக்கிறது என்றும், இனிமேல் டாரண்டினோ தனது இசையை உபயோகிக்கக்கூடாது என்றும் கடுமையாகப் பேசியிருந்தார். அதன்பின் சில நாட்களிலேயே தனது கருத்தை வாபஸ் வாங்கிவிட்டு, டாரண்டினோவின் படங்களில் வேலை செய்வதில் மகிழ்ச்சி என்றும் பல்டி அடித்திருந்தார். சொல்லவந்த விஷயம், டாரண்டினோவுக்கே என்னியோ மாரிகோனியின் இசை மீது கடுமையான ஈர்ப்பு உண்டு. அவரது இசை மட்டும் இல்லாமல் உலகெங்கும் தனது சிறுவயது நினைவுகளைக் கிளறிய பல இசைக்கோர்ப்புகளை டாரண்டினோ இன்றும் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறார்.
டாரண்டினோவுக்கே மிகப்பிடித்த மாரிகோனியை நம்மூரிலும் பலருக்கும் பிடிக்கும். இதன் விளைவுதான் ‘ஜிகர்தண்டா’வின் இசைக்கோர்ப்பு. முதன்முறையாக ஜிகர்தண்டாவின் இசையைக் கேட்டபோதே பளிச்சென்று டாரண்டினோவும் மாரிகோனியும்தான் நினைவில் வந்தனர். சந்தோஷ் நாராயணனின் இப்படிப்பட்ட அட்டகாசமான இசை அவசியம் ஜிகர்தண்டாவை ஒரு படி மேலேதான் எடுத்துச்சென்றிருக்கிறது. அதில் சந்தேகமே இல்லை. அதுதான் ஜிகர்தண்டாவைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தை முதலில் என் மனதில் ஏற்படுத்தியது. எனக்கு மிகப்பிடித்த தமிழ் ஆல்பங்களில் ஒன்றாகவும் ஜிகர்தண்டா ஆகிவிட்டது.
ஒரு சிறிய உதாரணமாக, இப்போது இரண்டு என்னியோ மாரிகோனியின் இசைக்கோர்ப்புகளைக் கேட்கலாம். விசில் சத்தத்தை உலக அளவில் பிரபலம் ஆக்கியவர் மாரிகோனி என்பதால் இரண்டுமே விசில் கோர்ப்புகள்.
இனி ஜிகர்தண்டாவின் ‘Hoo Haa’ இசைக்கோர்ப்பைக் கேட்கலாம்.
இதுதான் டாரண்டினோ பாணி. தான் இன்ஸ்பையர் ஆன(கவரப்பட்ட) விஷயங்களை உபயோகப்படுத்தி, ஒரிஜினல்களுக்கு ஒரு tribute செலுத்துவது அவரது பாணிதான். என்னியோ மாரிகோனிக்கு சந்தோஷ் நாராயணன் & கார்த்திக் சுப்புராஜின் tributeதான் இந்த இசை. நன்றாகக் கவனிக்கவும் – இந்த இசை காப்பி அல்ல. ஒரிஜினல்தான். ’இன்ஸ்பையர்’ என்றதும் காப்பி என்று முடிவு செய்துவிடாதீர்கள்.
இந்த Hoo Haa போல இன்னும் சில இசைக்குறிப்புகள் ஜிகர்தண்டாவில் உள்ளன. ஹாலிவுட் படங்களில் எந்தப் படமாக இருந்தாலும் ஒரு முழுமையான Soundtrack இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த இசைக்குறிப்புகள்தான் படம் நெடுகிலும் பின்னணியில் வரும். அதைப்போலவேதான் ஜிகர்தண்டாவின் இசைக்குறிப்புகள். அந்த வகையில், இதற்கு முன்னமேயே இப்படிப்பட்ட சில முயற்சிகள் இருந்திருந்தாலும் (ஓரளவு ஹே ராம் & விருமாண்டியைச் சொல்லலாம்), தமிழில் மிக வித்தியாசமான இசை இது என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. அந்த வகையில், தமிழ் இசையை பல படிகள் மேலே கொண்டுபோய், இசையில் நல்ல qualityயைக் கொடுத்திருக்கும் ’இசை அரக்கன்’ சந்தோஷ் நாராயணனுக்கு வாழ்த்துகள் (’இசை அரக்கன்’ பட்டம் உபயம் – நலன்). ‘குக்கூ’ போன்ற இசையை அவரிடம் இருந்து வாங்காமல், இந்தத் தனி பாணியை உருவாக்கியிருக்கும் கார்த்திக் சுப்புராஜுக்கும் வாழ்த்துகள். ஆல்பத்தில் உள்ள சில பாடல்களைப் பாடியிருக்கும் ஆண்ட்டனி தாசன், ரிடா போன்றவர்களின் குரல்கள் எப்படி விளையாடியிருக்கின்றன என்றும் கவனியுங்கள்.
டாரண்டினோவைப் பற்றிப் பேசுகையில் அவரது படங்களின் வகையைப் பற்றிப் பேசாமல் இருக்கமுடியாது. குறிப்பிட்ட ஒரு Genreஐ எடுத்துக்கொண்டு, அதனைச் சுற்றியும் வேறு சில subgenreகளைத் தூவினால் அதுதான் ஒரு டாரண்டினோ படமாக உருவெடுக்கும். உதாரணமாக, அவரது ‘Django Unchained’ ஒரு வெஸ்டர்ன். அதன் முக்கியமான அம்சம் – பழிவாங்குதல். கில் பில்லும் அப்படியே. Pulp Fiction பற்றி டாரண்டினோவே ஒரு ராக் அண்ட் ரோல் வெஸ்டர்ன் என்று சொல்லியிருக்கிறார். Reservoir Dogs ஒரு கேங்ஸ்டர் படம். ஆனால் அது ஒரு Heist வகையைச் சேர்ந்த படமும் கூட. இதுதான் குறிப்பிட்ட ஒரு Genreஐ எடுத்துக்கொண்டு அதில் ஒரு Subgenreஐ வைப்பது. அதில் டாரண்டினோ கில்லாடி. இதுதான் டாரண்டினோவின் தனிப்பட்ட genre.
இந்த டாரண்டினோ Genreஐ அவரிடமிருந்து எடுத்துக்கொண்டு படங்கள் எடுத்தவர்களில் கை ரிட்சி முக்கியமானவர். அவரது Snatch அப்படிப்பட்ட மிகவும் முக்கியமான படம். அதைப்போலவே Rock n Rolla, Revolver, Lock Stock and Two Smoking Barrels ஆகியவையும். ஆனால் கை ரிட்சியின் இயல்பு அது அல்ல. அவர் டாரண்டினோவிடம் இருந்து எடுத்துக்கொண்ட கதைசொல்லல் முறை அது. டாரண்டினோவே இந்த வகையில் ஒரிஜினல். ஒரு Genre, ஒரு Subgenre, மனதைச் சுண்டி இழுக்கும் வெறித்தனமான இசை என்பது அவரது ஃபார்முலா. அது அவருக்கு இயல்பிலேயே அமைந்த அம்சம். அவரது குணமே அப்படித்தான். அவரது படங்கள் அப்படித்தான் இருக்கும். டாரண்டினோவால் ஒரு காதல் கதை எடுக்கமுடியாது. அது அவரது இயல்புக்கே நேர் எதிர். தனது இயல்பை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பதால்தான் அவர் இன்னும் டாரண்டினோவாகவே இருக்கிறார். இல்லையேல் ஒரு ஸ்கார்ஸேஸியாகவோ ஒரு Carbucciயாகவோ ஒரு குரஸவாவாகவோ மாறிப்போயிருப்பார். கை ரிட்சி டாரண்டினோவின் நகலாக அவரை அறியாமலேயே ஆனதைப்போல்.
இந்த டாரண்டினோவின் Genre தமிழில் இதுவரை வந்ததில்லை. அந்த வகையில் ஜிகர்தண்டாவே தமிழில் இந்த வகையில் முதல் படம்.
கேங்ஸ்டர் படங்கள் ஆரம்பத்திலிருந்தே தமிழில் வந்தே இருக்கின்றன. நம்பியாரும் பி.எஸ்.வீரப்பாவும் தங்களது அடியாட்களை வைத்துக்கொண்டு அராஜகம் செய்த ஆரம்பகாலப் படங்கள் கேங்ஸ்டர் படங்கள்தான். ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ அந்த வகையைச் சேர்ந்த ஒரு கேங்ஸ்டர் படம்தான். அப்படியே பரிணாம வளர்ச்சி அடைந்த தமிழ்ப்படங்கள், ஜெய்சங்கர் நடித்த சில கேங்ஸ்டர் படங்கள் மூலம் எழுபதுகளில் பிரவேசித்தன. பின்னர் தாய் மீது சத்தியம், நான் போட்ட சவால், கங்கா என்று கௌபாய்ப் படங்களாக வந்து நாயகன் மூலமாக உச்சத்தை அடைந்தன. பின்னர் தளபதி வந்தது. அதன்பின் புதுப்பேட்டை, ஆரண்ய காண்டம் போன்ற பக்கா கேங்ஸ்டர் படங்கள்.
இருந்தாலும் இன்றுவரை கேங்ஸ்டர் படங்களில் மாஸ்டர்பீஸ்களாகக் கருதப்படும் The Untouchables, Goodfellas, Scarface (பில்லா 2 இதன் காப்பி என்றாலும் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது), Donnie Brasco, Bugsy, The Godfather போன்ற அனுபவத்தை அளிக்கக்கூடிய படம் இன்னும் தமிழில் வரவில்லை. ‘நாயகன்’ இல்லையா என்று நீங்கள் கேட்கக்கூடும். ஆனால் நாயகனுக்கும் காட்ஃபாதருக்கும் என்ன வித்தியாசம்? நான் சொல்வது, அப்படிப்பட்ட படங்களைப் பார்த்தபின்னர் (காட்சிகள், இசை ஆகியவற்றால்) மனதில் எழும் அனுபவம். அப்படி புதுப்பேட்டை அந்த முயற்சியின் ஆரம்பகட்டம் என்று எடுத்துக்கொண்டால் ஆரண்ய காண்டம் அந்த முயற்சியின் நடுப்பாகம். இப்போது வந்திருக்கும் ‘ஜிகர்தண்டா’ அந்தப் பயணத்தில் ஒரு முக்கியமான முயற்சி. (ஆனால் ஆரண்ய காண்டத்தின் பிரச்னை – காப்பியடிக்கப்பட்ட அதன் பின்னணி இசை. A Bittersweet Life போன்ற படங்களில் இருந்து சரமாரியாக உருவியிருந்தார் யுவன். படம் வந்தபோது அது எனக்குத் தெரியவில்லை. பின்னர்தான் தெரிந்துகொண்டேன்).
இசையை அடுத்து ஜிகர்தண்டாவில் என்னைக் கவர்ந்தது, சேதுவாக நடித்திருக்கும் சிம்ஹாவின் நடிப்பு. Untouchables, Goodfellas, 3000 Miles to Graceland, The Dark Knight போன்ற படங்களில் ஹீரோவாகக் காட்டப்படும் கதாபாத்திரங்களைவிடவும் வில்லனுக்கே மதிப்பு ஜாஸ்தி. அண்டச்சபிள்ஸில் அல் கபோனாக ராபர்ட் டி நீரோ பிய்த்து உதறியிருப்பார். குட்ஃபெல்லாஸில் ஜோ பெஸ்சியும் அப்படியே. 3000னிலும் டார்க் நைட்டிலும் முறையே கெவின் காஸ்ட்னர் மற்றும் ஹீத் லெட்ஜர். அதேதான் ஜிகர்தண்டாவில் சிம்ஹா. இதற்கு மேல் அவரது கதாபாத்திரத்தை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை. அவருடன் அடியாட்களாக நடித்திருக்கும் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் ஒரு குறிப்பிட்ட குணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சேதுவின் கதாபாத்திரத்தில் எனக்கு ஒரே ஒரு குறை. அவரது பாத்திரம் ஒரு முழுமையான வில்லனாக இல்லை என்று தோன்றியது. வில்லன் என்றால் அவன் வில்லனாகத்தான் இருக்கவேண்டும். வில்லனில் நல்ல வில்லன் – கெட்ட வில்லன் என்பதெல்லாம் இல்லை. வில்லன் என்றால் அவன் வில்லன். அந்தக் குணம் சேதுவிடம் கொஞ்சம் குறைவாக இருப்பதைப்போல் தோன்றியது.
அதேசமயம், ஜிகர்தண்டா A Dirty Carnival படத்தின் காப்பி என்று ஒரு வதந்தி முன்னர் கிளம்பியது நினைவிருக்கலாம். டர்ட்டி கார்னிவல் மற்றும் ஜிகர்தண்டா ஆகிய படங்களின் ஒன்லைன் ஒரே போன்று இருந்ததே காரணம். ஆனால் இரண்டுக்கும் சம்மந்தம் இல்லை என்பதே உண்மை. Rough Cut (2008) படத்துக்கும் ஜிகர்தண்டாவுக்கும்தான் கதையில் ஒற்றுமைகள் அதிகம். குறிப்பாக ரஃப் கட்டின் இரண்டாவது பாதியின் சில காட்சிகள் (பல காட்சிகள் அல்ல. சில மட்டுமே). இதனை எதேச்சையான ஒற்றுமை என்று கருதத் தோன்றவில்லை. அவசியம் ரஃப் கட்டில் இருந்துதான் இந்தக் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது இரண்டையும் பார்த்தாலே தெரிந்துவிடுகிறது. இது ஏன் என்று புரியவில்லை. அரிமா நம்பிக்கு நேர்ந்த அதே பிரச்னை. நன்றாக இருக்கும் படத்தில் இப்படிப்பட்ட காட்சிகள் வரும்போது டக்கென்று ஒரு அசூயை தோன்றுவது தவிர்க்கமுடியாதது. இது ஏன்? அந்தக் காட்சிகள் அப்படியே எடுத்து வைக்கப்படவேண்டும் என்று அவசியமே இல்லையே? எளிதாக இந்தக் கதையை அப்படிப்பட்ட காட்சிகள் இல்லாமலேயே காட்டியிருக்கலாம். நல்ல படங்களைப் பார்த்துக்கொண்டு வருகையில் இப்படி திடீரென இன்னொரு படத்தில் இருந்து எடுக்கப்பட்ட/பாதிக்கப்பட்ட காட்சிகள் வரும்போது தடாலென்று அந்தப் படத்தின் மீது மரியாதை குறைகிறது.
ஜிகர்தண்டாவின் நீளம் இன்னொரு குறை. படம் 171 நிமிடங்கள். முதல் பாதி 1:15 மணி நேரம். இரண்டாம் பாதி ஒண்ணரை மணி நேரத்துக்கும் மேல். இரண்டு பாதிகளிலும் சில காட்சிகளைக் குறைத்து, படத்தை இரண்டரை மணி நேரமாக ஆக்கியிருந்தால் இன்னும் வேகமாக இருந்திருக்கும். எந்தெந்தக் காட்சிகளைக் குறைத்திருக்கலாம் என்றும் கவனித்தேன். ஆனால் இங்கே எழுத விருப்பம் இல்லை.
இரண்டாம் பாதியின் நடுவே திடீரென படம் அதுவரை சரியாகக் கொண்டுவந்துகொண்டிருந்த விறுவிறுப்பை விட்டுவிட்டு வேறு பக்கம் பாயும்போது கொஞ்சம் நெருடலாக இருந்தாலும், அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகிவிட்டது.
படத்தில் சில சுவாரஸ்யமான cameoக்கள் உள்ளன. அதில் நடித்திருப்பவர்களும் ஜாலியாக நடித்திருக்கின்றனர். சங்கிலி முருகனின் கதாபாத்திரம் என்னைக் கவர்ந்தது.
எனது பீட்ஸா விமர்சனத்தில் கார்த்திக் சுப்புராஜ் பற்றி இப்படி எழுதியிருந்தேன் (நமது தளத்தை 2012 அக்டோபரில் புதுப்பித்தது நினைவிருக்கும். அப்போது எழுதிய விமர்சனம் அது. அதன்பின் இப்போது மறுபடியும் தளம் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் அதே கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்துக்கு விமர்சனம் வருவது ஒரு சுவாரஸ்யமான co-incidence தான். மிக விரைவில் புதுப்பிக்கப்பட்ட தளத்தின் ரிலீஸ்).
’சமீபத்திய தமிழ்ப்பட எரிச்சல்களுக்கு இடையில், இது கட்டாயம் ஒரு நல்ல முயற்சிதான். கார்த்திக் சுப்புராஜ் – ஆங்கிலப் படங்களின் சுவாரஸ்யமான ஃப்ளேவரில் இப்படத்தைத் தர முயன்றிருக்கிறார். He is still learning – which is good. அவரது முதல் முயற்சியைவிட, இரண்டாம் – மூன்றாம் முயற்சிகள் அவசியம் அட்டகாசமாக இருக்கும் என்று நம்ப ஆரம்பித்து விட்டேன். அந்த நம்பிக்கையைப் பொய்க்கவைத்து விடாதீர்கள் கார்த்திக்’.
தனது இரண்டாவது படத்தை முதல் படத்தைவிடவும் அருமையாக எடுத்திருக்கிறார் கார்த்திக் என்பதுதான் உண்மை. தமிழில் ஜிகர்தண்டாவைப்போல் ஒரு படத்தை யோசித்து இயக்குவது கடினம்தான். அதில் சந்தேகம் இல்லை. தமிழுக்கு இந்த வகையான படம் ஒரு புதிய முயற்சி. அதிலும் சந்தேகம் இல்லை. இப்படிப்பட்ட படத்துக்கு அட்டகாசமான soundtrack தந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன் என்பதில் துளிக்கூட சந்தேகமே இல்லை. சிம்ஹா, நீண்ட நாட்களுக்குப் பின் தமிழில் ஒரு பிரமாதமான வில்லனாக வந்திருக்கிறார் என்பது சந்தேகமே படக்கூடாத விஷயம். ஆனால், அப்படிப்பட்ட ஒரு படத்தில் இன்னொரு படத்தின் சில காட்சிகள் இருக்கின்றன என்பதுதான் ஒட்டுமொத்த சுவாரஸ்யத்தையும் ஒரே நொடியில் சுட்டுப் பொசுக்கி விடுகிறது. அதுதான் பிரச்னை. இதை நான் எதிர்பார்க்கவில்லை.
மேலே சொல்லப்பட்ட சில குறைகளைத் தவிர, ஜிகர்தண்டா அவசியம் பார்க்கப்படவேண்டிய படம்தான். தமிழ்ப்படங்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு ஜிகர்தண்டா போன்ற படங்கள் அவசியம் உதவும். இப்படிப்பட்ட வகையைச் சேர்ந்த படங்கள் தமிழில் மிக மிகக் குறைவு. ஜிகர்தண்டா அப்படியான படங்களுக்கு ஒரு ஆரம்பத்தைத் தந்திருக்கிறது. அதை நான் வரவேற்கிறேன். இப்படிப்பட்ட படங்கள்தான் தமிழில் வரவேற்கப்படவேண்டும். எண்பதுகளின் பாதியில் மணி ரத்னம் நாயகன், அக்னி நட்சத்திரம் ஆகிய படங்களின் வாயிலாக தமிழ்ப்படங்களில் தொழில்நுட்பரீதியாகவும் கதைசொல்லல் முறையிலும் ஒரு பாய்ச்சலை உருவாக்கினார் அல்லவா? ஒரு முழுமையான பேக்கேஜாக அவரது அந்தப் படங்கள் இருந்தன. அதுபோல்தான் ஜிகர்தண்டா எனக்குத் தோன்றியது. கார்த்திக் சுப்புராஜ் போன்ற இயக்குநர்களால் அவசியம் பல வருடங்கள் தமிழில் sustain செய்ய முடியும். ஆனால் கார்த்திக்கின் அடுத்தடுத்த படங்களில் இதுபோன்ற பிற படங்களின் காட்சிகள் இருந்துவிடக்கூடாது என்று எதிர்பார்க்கிறேன். கார்த்திக் இன்னும் தனது learning curveல்தான் இருக்கிறார். பீட்ஸாவைவிட இப்போது நிறையக் கற்றுக்கொண்டு இன்னும் மேலே சென்றிருக்கிறார். பொதுவாக இயக்குநர்களின் இரண்டாம் பட விஷப்பரீட்சையில் தேறிவிட்டார். அடுத்த படத்தில் இன்னமும் பெரிய பாய்ச்சலைக் காட்டுவார் என்ற நம்பிக்கை உறுதிப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.(தமிழ்ப்படங்களின் சாபக்கேடு இந்த நகலெடுப்பது. ஆரம்பம் முதலே நகல்களைத் தீவிரமாக எதிர்த்து வந்திருந்தாலும், கடந்த சில வருடங்களில் அந்தப் பரிணாம வளர்ச்சியில் ஒரு மாறுதலை அடைந்திருக்கிறேன். அது என்னவென்றால், கேவலமாக சீன் பை சீன் காப்பியடிப்பது ஒரு வகை. அப்படங்களை ஒருபோதும் ஆதரிக்க முடியாது. ஆனால் அருமையாக எடுக்கப்பட்டிருக்கும் அரிமா நம்பி, ஜிகர்தண்டா போன்ற படங்களில் எதாவது ஒன்றிரண்டு நகல் காட்சிகள் வருவதால் அந்தப் படங்களை வெறுத்து ஒதுக்கிவிடமுடியாது. அப்படி ஒதுக்கினால் ஆடியன்ஸான நமக்குத்தான் நஷ்டம். அதனால்தான் இப்படங்களைப் பற்றி எழுதும்போது அவற்றைக் குறிப்பாகச் சொல்லவில்லை. இதுதான் தற்போது என் நிலைப்பாடு).
ரொம்ப நல்ல பதிவு அண்ணா!! “ஆரண்ய காண்டம்” பின்னணி இசை எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதைப் பற்றிய தகவலை இப்போதுதான் அறிந்துகொண்டேன். தகவலுக்கு நன்றி.
இது ஒரு பிளக் காமடி பிலிம் வகை என்று நினைகேறேன். படம் ஆரம்பிக்கும் காட்சி பிரேமை விடவும் உயரமான பின்னணி செம புதுசா இருந்திச்சு 3 அல்லது 4 இடங்களில் அதே போன்ற காட்சி வந்தது செம படம் முழுவதும் அதே போன்ற காட்சிகளை எதிர் பார்த்தேன். ஆனா எமதிட்டங்க சிம்கா ட கார்த்திக் பாத்திரத்தில் சித்தார்த் என்கிற ஸ்டார் அந்தஸ்துள்ள ஒருவர் இல்லையென்றால் சிம்ஹா தான் ஹீரோ முதல் பகுதியில் 100% .
Nice review pal. But still there are some scenes n characters from dirty carnival. Anyway as Karthik is an immense asset to Tamil now , we should encourage him to do some original play next time. He copied even the interval font from QT. But rough cut inspiration is a new info buddy.as u said he has the potential but he needs to develope the originality n reliability for a long run. Or else he will become one time wonder soon.
ராஜேஷ், உங்களின் விமர்சனத்திற்கு, ஆய்விற்கு பேஸ்லைனாக பிற நாட்டு படங்களை, கலைஞர்களை வைத்திருக்கிறீர்கள். அப்படி இருக்கும் போது, அவ்வாறே பார்த்து, யோசித்து எடுத்திருக்கும் இப்படத்தை & இயக்குனரைப் பாராட்டியிருப்பது ஆச்சரியமல்ல. ஆனால், அதேப்போல் உருவாக்கப்பட்ட சில பல படங்களை, இயக்குனர்களை இதற்கு முன்பு போட்டு தாக்கியிருக்கிறீர்கள். காப்பி, இன்ஸ்ப்ரேஷன், tribute – வித்தியாசம் தான் புரிபடவில்லை. அதற்கு ஏதேனும் டம்மீஸ் சீரிஸ் இருக்கிறதா?
இன்னொன்று நீங்கள் குறிப்பிடுவீர்கள். திரைக்கதையின் சுவாரஸ்யம் பற்றி. எந்தவித தியரிக்குள்ளும் போகாமல் சொல்கிறேன். படத்தின் இறுதி கால்வாசி ஏமாற்றம் & போர். மேல்நாட்டு மேதைகளைப் போல் எடுத்திருப்பதால், அதற்கு சலுகை கொடுத்துவிடலாமா? முழுமையான படமாக ரசிக்கும்படி இருப்பது முக்கியமல்லவா?
Well said..
காப்பி – இன்ஸ்பிரேஷன் – Tribute.. உங்க கேள்வி புரியுது. இதாங்க வித்தியாசம். அதை தெளிவா சொல்லிட்டதா இல்ல நான் நினைச்சிக்கினு இருந்துட்டேன்.. இதோ:
காப்பி – இது ரொம்பத் தெளிவான மேட்டர். இதுல உங்களுக்கு சந்தேகம் இருக்காதுன்னு நம்புறேன். அப்படியே கட் பண்ணி பேஸ்ட் பண்ணுறது. Tsotsi ஒரு உதாரணம் (யோகி). தெய்வத்திருமகள் இன்னொரு உதாரணம் (I am sam). கமலின் பல படங்கள்.
இன்ஸ்பிரேஷன் – நமக்குப் புடிச்ச ஒரு படைப்பைப் பார்த்து பாதிக்கப்பட்டு அதுல இருந்து எடுக்கும் காட்சிகளை மாத்தி லோக்கல் ஃப்ளேவர்ல கொடுக்குறது. அப்படி கொடுக்கும்போது சில சமயங்கள் இன்ஸ்பையர் செய்யப்பட்ட படைப்பு ஒரிஜினலை விடவும் அட்டகாசமாக இருப்பது உண்டு. உதாரணமா, ஷேக்ஸ்பியரிலிருந்து குரஸவா இன்ஸ்பையர் ஆகித்தான் அவரது சில படங்களை எடுத்தார். அவை ஒரிஜினலை விடவும் நன்றாக இருக்கும். நாயகன் அப்படித்தான் இன்ஸ்பையர் செய்யப்பட்டது. ஆனால் ஒரிஜினலே பெட்டர்.
Tribute – இதுல சந்தோஷ் நாராயணன் செய்திருப்பது. நமக்குப் பிடித்த கலைஞனுக்கோ அல்லது படத்துக்கோ அஞ்சலி. இது காப்பி அல்ல. ஒரு வகையான இன்ஸ்பிரேஷன். மூலத்தைப் போலவே இருப்பது. ஆனால் அதிலிருந்து எடுக்கப்பட்டது அல்ல. ஒரிஜினலாக உருவாக்கப்பட்டு, மூலத்தைப் போல் இருப்பதாகக் கற்பிக்கப்படுவது. அஞ்சலியும் இன்ஸ்பிரேஷனும் தூரத்து சொந்தங்கள்.
டவுட் க்ளியர் ஆயிடுச்சா?
அப்புறம், நான் வெளினாட்டுப் படங்க்களை பேஸ்லைனாக வைக்கவில்லை. இப்போதைக்கு அவை நன்றாக டிஃபைன் செய்யப்பட்டுவிட்டதால் அப்படித் தோன்றுகிறது. நாளை இந்தியாவில் நன்றாக டிபைன் செய்யப்பட்ட படம் ஒன்று தமிழில் வந்தால் அதை பேஸ்லைனாக வைப்பேன். அவ்வளவே.
நல்ல விமர்சனம் 🙂 இன்னும் கொஞ்சம் டீடைல்ட் எதிர்பார்த்தேன் 🙂
கதையை சொல்லாம எழுதணும்னு நினைச்சேன் பாஸ். அதான் இப்புடி. கொஞ்ச நாட்கள் கழிச்சி விபரமா அனலைஸ் பண்னலாம் 🙂
நீங்கள் குறிப்பிடுவதுபோல் இதை அனலைஸ் ஆகத்தான் பார்க்கிறேன்.விமர்சனமாக பார்க்கவில்லை.உங்களிடமிருந்து எதிர்பார்ப்பதும் விமர்சனைத்தையே.
okay done. after some time, we will review the screenplay and story.
ஆனால், அப்படிப்பட்ட ஒரு படத்தில் இன்னொரு படத்தின் சில காட்சிகள் இருக்கின்றன என்பதுதான் ஒட்டுமொத்த சுவாரஸ்யத்தையும் ஒரே நொடியில் சுட்டுப் பொசுக்கி விடுகிறது. அதுதான் பிரச்னை. இதை நான் எதிர்பார்க்கவில்லை
As usual… 1 scene or 50 scenes… It is disappointing…. But I wouldn’t have noticed if I had not read your review.. Hopefully next generation gives us a copy free/inspiration free screenplay
அய்யா சாமி இந்தப்படம் dirty carnival ன் உல்டான்னு சொல்றாங்க இதுபற்றி அறச்சீற்றம் ஏதும் உண்டா?
அட்டகாசம் ராஜேஷ் , படம் பார்த்துக் கொண்டிருந்த போதே (இடைவேளை வரை ) , இது “க்வெண்டின் டொராண்டினோ ” வகையில் எடுக்கப் பட்டிருக்கிறது , இதன் இசையும் அதையே ஒத்திருக்கிறது என்று நண்பர்களிடம் பகிர்ந்தேன்.
இதுல விஷயம் என்னன்னா நான் க்வெண்டினின் எந்தப் படத்தையும் பார்த்தது கெடையாது , நீங்கள் எழுதிய விமரிசனங்களைப் படிச்சு அதை ஊகித்தே சொன்னேன் . இனி அப்படி இல்லாமல் நீங்கள் பரிந்துரைக்கும் படங்களை பார்த்துவிடுவதென உத்தேசம் .
என்னைப் பொறுத்தவரை கார்த்திக் ஆடியன்சை , படம் இப்படித்தான் போகப் போகிறது என்று நம்ப வைத்து யாரும் எதிர் பார்க்காத வேறு திசையில் படத்தை செலுத்துகிறார் .
பீட்சா , ஜிகிர்தண்டா இரண்டிலும் நான் கவனித்த ஒற்றுமை இது தான்.
உங்கள் திரைக்கதை தொடரையும் படித்து வருகிறேன் . ப்ளேக் ஸ்னைடரின் Beat Sheet இல் இந்தப் படத்தை எப்படிப் பொருத்துவது என்று சந்தேகமாக இருக்கிறது. என் சந்தேகங்களை வேறு மின்னஞ்சலில் அனுப்புகிறேன்
hello bro “aaraya kaandam ” film music copiya..?.A Bittersweet Life OST ketrukken..! konjam kooda copy illa..!!! , ipdi apandama kutram solathinga bro..!!!
பாஸ்… நான் அபாண்டமா எப்பவுமே சொல்லமாட்டேன்.
இது bittersweet life பீஸ்… http://www.youtube.com/watch?v=izT-8UbhJZQ
இது ஆரண்ய காண்டம் பீஸ் — http://www.youtube.com/watch?v=5TYZx1Xuxoc
ரெண்டுத்தையும் முழுசா கேளுங்க. அப்புறம் வாங்க.. cheers
ரெண்டு scoreம்மே இன்னொரு இசைய base பண்ணி கம்போஸ் பண்ணது, அது கூட தெரியாம காப்பியாம்.
அதெப்படி பாஸ் …யுவன் செய்தால் அது காபி …சந்தோஷ் செய்தால் அது tribute எ?மற்றபடி யுவனின் அரண்ய காண்டம் ஒரு tribute தான் ….ஷெர்லாக் ஹோலம்ஸ் OST கேளுங்க …
First time reading your review. Excellent. I like the way you finish it, even though there are some clips copied from other movie, it should not be rejected by Tamil audience. Because the loss is for us. So continue support and watch this kind of trend setter movies.
To Director: please avoid copying from other movies. As said by karundel ” can inspire, don’t copy”.
I felt the same about second half rajesh… it was slow and dragging compared to the first half. If karthik would have maintained the pace of first half it would have become the best movie in recent times.
“ஆனால், அப்படிப்பட்ட ஒரு படத்தில் இன்னொரு படத்தின் சில காட்சிகள் இருக்கின்றன என்பதுதான் ஒட்டுமொத்த சுவாரஸ்யத்தையும் ஒரே நொடியில் சுட்டுப் பொசுக்கி விடுகிறது. அதுதான் பிரச்னை. இதை நான் எதிர்பார்க்கவில்லை”
ஒரு திரைபடம் பார்க்கும்பொழுது சில காட்சிகள் நம் மனதில் பதிந்து விடுகிறது அதை நாம் உருவாக்கும் ஒரு திரைபடத்தில் தேவைபட்டால் பயன்படுத்துவதில் என்ன தவறு, அது காப்பிதான் என்றாலும் அந்த இடத்தில அந்த காட்சி நன்றாக பயன்பட்டிரிந்தால் அது படத்திற்கு வலு சேர்க்கும் அல்லவா. ஒரு புத்தகத்தில் நாம் படித்த சில வாக்கியங்களை நாம் எழுதும் புத்தகத்தில் பயன்படுத்துவதை போல் இதை நாம் பார்க்கலாமே. நான் இன்னும் படம் பார்க்கவில்லை, எனவே அந்த காட்சி எப்படி இருந்தது என்று எனக்கு தெரியாது, இருப்பினும் சில காட்சிகள் படத்துடன் பொருந்திபோகும்மானால் அதை காபி செய்வதில் தவறில்லைதானே. உங்களுக்கு அதனால் சுவாரசியம் போய்விடுகிறது ஆனால் அதை பற்றி தெரியதவர்களுக்கு அது சுவாரசியத்தை கூட்டலாம், பல மொழி படங்களை பார்க்காதவர்கள்தான் இங்கே அதிகம் எனவே பெரும்பான்மையானவர்களுக்கு சுவாரசியமாகவே இருக்கும்.
This film is a good gangster movie but not the best gangster movie ever made in Tamil…. the film title tag line shows a musical gangster but no its not a complete a musical gangster film….. both the music and gangster combination are good but not best or excellent because i have two question and reasons…
1. Tribute to EM okay,its good but just remember “THE GOOD,THE BAD AND THE UGLY”..the Mexican stand off in grave yard…those music is high jubilant tonic gives goose flesh to any layman like me who doesn’t know the definition of music…does anywhere in jigardhanda u people came across this kind of feel.. no right..??? or even in “KILL BILL” when Santa Esmeralda song tap music is heard u just visualize to a women in yellow track suit mercilessly slashing crazy 88 clans,billard ball split into half and lucy liu feet dripping with blood..here in jigardhanda nothing that sort happens some scene like intro song for sethu by Vinu Chakravarthy and some BGM before the kill plan of black sheep are good but not breath taking…
2. In “AARANYA KAANDAM” the gangster action and music goes very,very well in jigardhanda u have some songs which slows down the speed of screenplay…but in AK also u have songs…(very very cleverly done) all songs are llayaraja’s melodies just with one or two lines from original songs but u visualize the whole complete sequence….its like hallucination. Thiagarajan Kumararaja and Yuvan have done it superbly in movie…. this kind of experience we can get from the whole movie…. in jigardhanda ding dong,hoo haa and ottam are the places i felt it..
so jigardhanda is “a musical gangster film”….but the “COMPLETE A MUSICAL GANGSTER FILM” is off course “JUNGLE CHAPTER”
Guardians of the Galaxy review please
This movie tells the story of raise & fall of Rajinikanth as an actor (not as a star) symbolically by the antagonist character acting like an earlier version of Rajini’s body language & dialogue delivery.
Copy – Done by a unknown director/artists by the film appreciator.
Inspiration – Done by a known director/artists by the film appreciator.
Tribue – Done by a well-known director/artists by the film appreciator.
Applicable everywhere.
My opinion it is nothing but the copy of ‘A Dirty Carnival’ korean film.
Happy to change my opinion if anyone disagrees.
Thanks.
Copy – Done by a unknown director/artists by the film appreciator.
Inspiration – Done by a known director/artists by the film appreciator.
Tribue – Done by a well-known director/artists by the film appreciator.
Applicable everywhere.
My opinion it is nothing but the copy of ‘A Dirty Carnival’ korean film.
Happy to change my opinion if anyone disagrees.
Thanks.
Copy – Done by a unknown director/artists by the film appreciator.
Inspiration – Done by a known director/artists by the film appreciator.
Tribue – Done by a well-known director/artists by the film appreciator.
Applicable everywhere.
My opinion it is nothing but the copy of ‘A Dirty Carnival’ korean film.
Happy to change my opinion if anyone disagrees.
Thanks.
Copy – Done by a unknown director/artists by the film appreciator.
Inspiration – Done by a known director/artists by the film appreciator.
Tribue – Done by a well-known director/artists by the film appreciator.
அப்படின்னா.. ஆரண்யகாண்டம் படத்துல In the mood for Love படத்துல இருந்து சுடலையா.. நான் வேற தப்பா நினைச்சுட்டேனே.. இந்த லிங்க்கையும் கேட்டுப் பாருங்க.. ப்ளீஸ்.. https://www.youtube.com/watch?v=zvVPN0xtgl8
Nayaganukkum , godfatherukkum enna vidyasam, Mr rajesh neenga vara var overa think panni , ulara arambikkiringannu ninaikiren. Kunjam intha foreign pada mogatha control pannunga, intha copy padatha yellam part hu dhaan , unga rasana valarnthu irukku mind it
Nayaganukkum , godfatherukkum enna vidyasam, Mr rajesh neenga vara var overa think panni , ulara arambikkiringannu ninaikiren. Kunjam intha foreign pada mogatha control pannunga, intha copy padatha yellam part hu dhaan , unga rasana valarnthu irukku mind it.