Man of Steel (2013) – 3D – English

by Karundhel Rajesh June 15, 2013   English films

There’s the superhero and there’s the alter ego. Batman is actually Bruce Wayne, Spider-Man is actually Peter Parker. When that character wakes up in the morning, he’s Peter Parker. He has to put on a costume to become Spider-Man. And it is in that characteristic Superman stands alone. Superman didn’t become Superman. Superman was born Superman. When Superman wakes up in the morning, he’s Superman. His alter ego is Clark Kent. His outfit with the big red “S”, that’s the blanket he was wrapped in as a baby when the Kents found him. Those are his clothes. What Kent wears – the glasses, the business suit – that’s the costume. That’s the costume Superman wears to blend in with us. Clark Kent is how Superman views us. And what are the characteristics of Clark Kent. He’s weak… he’s unsure of himself… he’s a coward. Clark Kent is Superman’s critique on the whole human raceBill (Kill Bill).

மேலே இருப்பது க்வெண்டின் டாரண்டினோ எழுதிய வசனம். அவரது கில் பில் இரண்டாவது வால்யூமில் வரும். இதுதான் சூப்பர்மேனைப் பற்றிய உண்மை. சூப்பர்மேன் என்ற கதாபாத்திரம், பிற காமிக்ஸ் சூப்பர்ஹீரோக்களில் இருந்து மாறுபட்டது. பேட்மேன், ஸ்பைடர்மேன், Ironman எல்லாருமே உண்மையில் மனிதர்கள். அவர்களது சூப்பர்ஹீரோ அவதாரங்களே இந்தப் பெயர்கள். மனிதர்களாக இருப்பவர்கள், ஏதேனும் நிகழ்வின் காரணமாக சூப்பர்ஹீரோ ஆகிறார்கள். மாறாக, சூப்பர்மேன் என்பவன் உண்மையில் ஒரு ஏலியன். அவன் பிறக்கும்போதே சூப்பர்மேன்தான். இயல்பிலேயே அவன் ஒரு சூப்பர்ஹீரோ. அந்த இயல்பை மறைக்கவே க்ளார்க் கெண்ட் என்ற பெயரில் ரிப்போர்ட்டராக வேலை செய்கிறான்.

நம்மூரில் சூப்பர்மேன் என்ற கதாபாத்திரத்தை நினைத்தாலே சிரிப்பு வரக்கூடிய அளவு அதனை எஸ்.வி. சேகர் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் காமெடி செய்திருக்கின்றனர். அந்த கதாபாத்திரமே அப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும், அமெரிக்காவில் இது நம்பர் ஒன் காமிக்ஸ் சூப்பர்ஹீரோ கதாபாத்திரம். (அமெரிக்காவின் இரண்டாவது சூப்பர்ஹிட் ஹீரோ – பேட்மேன். மூன்றாவது – ஸ்பைடர்மேன். நான்காவது இடம் யாருக்குத் தெரியுமா? அத்தனை பிரபலமாகாத Wolverine. நம்மூரில் தற்போது பிரபலமாக இருக்கும் Ironman, பனிரண்டாவது இடத்தில் இருக்கிறார். ஹல்க்குக்கு ஒன்பதாவது இடம். இந்த லிஸ்ட்டை முழுதாகப் பார்க்க இங்கே க்ளிக்கலாம்).

ஆனால், ஹாலிவுட்டின் மிகப்பிரபல காமிக்ஸ் சூப்பர்ஹீரோவாக இருந்தாலும், சூப்பர்மேனை திரையில் காண்பிப்பதில் ஒரு பிரச்னை இருந்தது. எந்தவித வெளிப்புற சக்திகளும் இல்லாமல், இயல்பிலேயே ஒரு மனிதன் பறக்கிறான் என்றால் அதனை திரைப்படங்களில் நம்பும்படி எடுப்பது கடினம். கூடவே, சூப்பர்மேனின் நகைச்சுவையான உடை. நீலக்கலர் உடையில் சிவப்பு ஜட்டியை போட்டுக்கொண்டு அங்குமிங்கும் ஒரு கதாபாத்திரம் குதித்துக்கொண்டிருந்தால் சிரிப்பு வந்துவிடும் இல்லையா? அதுதான் காரணம். குறிப்பாக தமிழ்நாட்டில் இது எடுபடும் வாய்ப்புகள் மிகவும் கம்மி (நல்லவேளையாக ஏற்கெனவே மிஷ்கின் தமிழில் முகமூடியை எடுத்துவிட்டதால், அத்தனை சிரிப்பும் அந்தப் படத்துக்கே சென்றுவிட்டது).

இப்போது திரைப்படத்துக்கு வரலாம். க்ரிப்டான் கிரகத்தில் இருந்து தந்தை ஜார்-எல்லினால் (Jor-El) பூமிக்கு அனுப்பப்படும் குழந்தை கால்-எல் (Kal-El). கான்ஸாஸில் ஜொனாதன் கெண்ட் மற்றும் மார்த்தா தம்பதியினரால் வளர்க்கப்பட்டு, க்ளார்க் கெண்ட் என்ற பெயரில் வளர்கிறான் கால்-எல். அவனது கிரகமான க்ரிப்டானில் புரட்சி செய்த ராணுவ ஜெனரல் ஸாட் (Zod) மற்றும் அவனது கூட்டாளிகள் சிறை வைக்கப்படுகிறார்கள். தந்தை ஜார் -எல், ஜெனரல் ஸாடினால் கொல்லப்படுகிறார். பூமிக்கு அனுப்பப்பட்ட கால்-எல்லின் உடலில் க்ரிப்டானில் புதிய உயிர்களை படைக்கவல்ல மரபணுக்கள் இருக்கின்றன. ஆகையால், க்ரிப்டான் அழிந்தாலும், கால்-எல்லின் உடலில் இருக்கும் இந்த மரபணுக்களை எடுத்து புதிய க்ரிப்டானை படைக்க இயலும். முப்பத்து மூன்று ஆண்டுகள் கழித்து, கால்-எல்லை தேடி பூமிக்கு வருகிறான் ஸாட். இதன்பின் என்ன நடந்தது? இதுதான் கதை.

திரைப்படத்தில் க்ரிஸ்டோஃபர் நோலனின் பெயர், ‘கதை’ என்ற டைட்டிலில் வருகிறது. ஆனால், மேலே சொன்ன கதையில் எதுவும் புதிய அம்சம் இல்லை. இதற்குமுன்னர் வெளிவந்த சூப்பர்மேன் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு பாகங்களில் பிரதம வில்லன் லெக்ஸ் லூதரை தூக்கிவிட்டால் இந்தப் படத்தின் கதை ரெடி. நோலனின் பேட்டிகளைப் படித்தால், பேட்மேன் கதபாத்திரம் எப்படி நோலனால் உயிர்ப்பிக்கப்பட்டதோ அப்படி சூப்பர்மேனையும் புதிதாகக் காண்பிக்கவேண்டும் என்று நோலன் விருப்பப்பட்டதாகத் தெரிகிறது. கூடவே, திரைக்கதை எழுதியுள்ள டேவிட் கோயர், ஏற்கெனவே பேட்மேன் பிகின்ஸ் படத்துக்கு நோலனுடன் சேர்ந்து திரைக்கதை எழுதியிருப்பவர். ஆனால், என்னதான் தலைகீழாக நின்று திரைக்கதை எழுதினாலும், சூப்பர்மேனைப் பற்றிய படத்தை இப்படித்தான் எடுக்கமுடியும் என்பதில் சந்தேகமில்லை. காரணம் சூப்பர்மேனின் கதை அப்படி. காமிக்ஸில் மட்டுமே எடுபடக்கூடிய கதை அது.

படத்தின் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை படம் முழுக்க வியாபித்திருப்பது – ஸிஜி. படம் 133 நிமிடங்கள் ஓ…..டுகிறது. கிட்டத்தட்ட ஒரு முழுநீள தமிழ்ப்படத்தின் நீளம். இத்தனை நீளமாக இருக்கும் படத்தில் எக்கச்சக்கமான ஸிஜி காட்சிகள் இடம்பெற்றால் எப்படி இருக்கும்? ஸ்டண்ட் காட்சிகள் நீ…..ளமாக இருந்து, நமது பொறுமையை சோதிக்கின்றன. போதாக்குறைக்கு படத்தில் ஆடியன்ஸை ஈர்க்கும் திரைக்கதை இல்லை.

படத்தில் எனக்கு நெருடிய அம்சங்களைப்பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

முதலில், சூப்பர்மேனின் கதாபாத்திரம். பொதுவாக ஆடியன்ஸின் மனநிலை என்னவென்றால், சாதாரண மனிதனாக இருக்கும் ஒருவனுக்கு ஏதேனும் நேர்ந்து அதனால் அவன் சூப்பர்ஹீரோ ஆகிவிட்டான் என்று சித்தரித்தால் ஏற்றுக்கொள்ளலாம் என்று தோன்றும். ஆனால், பிறப்பிலேயே ஒருவன் அதிபயங்கர சக்திகளுடன் இருக்கிறான் என்றால்? ஆனால் சூப்பர்மேனைப் போன்ற இன்னொரு கதாபாத்திரமான ‘தோர்’ (Thor) என்பவனை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது. காரணம் அவன் பூமியில் வசிப்பதில்லை. வேற்றுக்கிரகத்திலேயே இருப்பவன். கடவுள். கூடவே, சூப்பர்மேனின் கதாபாத்திரத்தின் இயல்புகள் – அவன் யாரையும் துன்புறுத்துவதில்லை, மிகவும் நல்லவன் – போன்றவை தோரிடம் இல்லை. தோர் ஒரு கோபமான கடவுள். எனவே தோர் ஒப்புக்கொள்ளப்பட்டான். ஆனால் சூப்பர்மேன் கிட்டத்தட்ட ஏசுவைப் போன்றவன். படத்திலேயே ஏசுவுடன் சூப்பர்மேனை ஒப்பிடும் காட்சிகள் இருக்கின்றன. இருவருமே தங்களைப் புரிந்துகொள்லாத மனிதர்களுக்காக தியாகம் செய்தவர்கள் என்ற கருத்து ஆடியன்ஸின் மேல் திணிக்கப்படுகிறது.

ஒரு உதாரணத்துக்கு, இன்னொரு சூப்பர்ஹீரோ படமான The Dark Knight படத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்தப் படத்தில் இருந்த சுவாரஸ்யமான திரைக்கதை, Man of Steeலில் மிஸ்ஸிங். காரணம் மிக எளிதாகவே தெரிந்துவிடுகிறது. பேட்மேனின் கதாபாத்திரம், சூப்பர்மேனை விட இயல்பானது. அது ஒரு சாதாரண மனிதன். அந்த மனிதனுக்கு சிறுவயதில் நேர்ந்துள்ள கொடுமையை ஆடியன்ஸால் புரிந்துகொள்ளமுடியும். ஆனால், சூப்பர்மேன் அப்படியல்ல. அவன் வேறு கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்தவன். அவ்வளவே. அவனிடம் மக்கள் இரக்கம் கொள்ள எதுவுமே இல்லை. அவனைப் பார்த்து பயந்து ஓடத்தான் செய்வார்கள். அதுதான் இயல்பு. அவனைப் புரிந்துகொள்ளாத மக்களைக் காப்பாற்றவேண்டும் என்று அல்லும் பகலும் சூப்பர்மேன் துடிக்கும் காரணத்தை எத்தனை முக்கினாலும் ஜஸ்டிஃபை செய்யமுடியாது (என்னதான் ஏசுவுடன் ஒப்பிட்டாலும்கூட).

அடுத்த காரணம் – மக்களைக் காப்பாற்றுவேன் என்று சொல்லிக்கொண்டே, படத்தின் ஸ்டண்ட் காட்சிகளில் வில்லன்களை விடவும் அதிக சேதத்தை சூப்பர்மேன்தான் ஏற்படுத்துகிறான். பல கட்டிடங்களை ஓட்டையிடுகிறான்; பெட்ரோல் பங்க் இவனால் வெடிக்கிறது; கார்கள் தூக்கியெறியப்படுகின்றன; இன்னும் பல சேதங்கள் இருக்கின்றன. இது என்ன லாஜிக்? இதுதான் ஹீரோவை கனிவானவனாக படைப்பதில் இருக்கும் அபாயம். இதையே ஹல்க்கோ தோரோ செய்தால் கேள்விகள் எழாது. ஆனால் சூப்பர்மேன் இப்படி செய்வதுதான் சிக்கல். அதேபோல் சூப்பர்மேன் யாரையும் கொல்வதில்லை. காரணம் அவனது இரக்க குணம். ஆனால் இதில் அதுவும் பொய்க்கப்படுகிறது. சூப்பர்மேன் கொல்கிறான். அதை மக்களால் கட்டாயம் ஏற்றுக்கொள்ள முடியாது.

அடுத்தது – சூப்பர்மேன் தான் காமிக்ஸ் உலகின் முதல் சூப்பர் ஹீரோவாக இருந்தாலும், அதன்பின் ஆயிரத்தெட்டு சூப்பர்ஹீரோ படங்கள் வந்துவிட்டன. ஆகவே, கிட்டத்தட்ட Avengers படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் போல வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தின் காட்சிகள் எடுபடாமல் போய்விடுகின்றன.

இன்னொன்று- டார்க் நைட்டில் பேட்மேனும் ஜோக்கரும் நேருக்கு நேர் மோதி பார்த்திருக்கிறீர்களா? அதுதான் அந்தப் படத்தின் சக்ஸஸ் பாயிண்ட்களில் ஒன்று. ஆனால் இதில் வில்லன் ஸாரும் சூப்பர்மேனும் கண்டபடி அடித்துக்கொள்கின்றனர். வில் ஸ்மித்தின் ‘Hancock’ படத்தில் இரண்டு சூப்பர்ஹீரோக்களும் அடித்துக்கொள்வதைப்போலவே மிகவும் அலுப்பாக இருந்தன இந்தக் காட்சிகள். டார்க் நைட்டுடன் எந்தப் படத்தையும் ஒப்பிட முடியாது. இருந்தாலும், இந்தப் படத்தைப் பற்றி எழுதும்போது டார்க் நைட்டின் இயல்புத்தன்மையைப் பற்றி எழுதாமலும் இருக்கமுடியாது.

சூப்பர்மேனுக்கும் பிற சூப்பர்ஹீரோக்களுக்கும் இருக்கும் வேற்றுமைகளை இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோம். ஆனால், யோசித்துப் பார்த்தால், சூப்பர்மேனுக்குப் பின்னர் அவனைப்போலவே இருக்கும் கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. கேப்டன் அமெரிக்கா ஒரு உதாரணம். அதேபோல் தோர். இவர்களில் பலரை உருவாக்கியவர் ஸ்டான் லீ (கேப்டன் அமெரிக்காவை உருவாக்கியவர்கள் ஜோ சைமன் & ஜாக் கிர்பி). கில்லாடித்தனமாக ஒரு சூப்பர்ஹீரோ ராணுவத்தையே (அவெஞ்சர்ஸ்) உருவாக்கிவிட்டபின்னர், பழைய ஹீரோ சூப்பர்மேனைப் பற்றிய படம் பார்க்கும்போது அவெஞ்சர்ஸ் படம் பார்ப்பதுபோலவே ஒரு எண்ணம் உருவாவதைத் தடுக்கமுடியாது. அதேபோல், சூப்பர்மேனுக்கும் கேப்டன் அமெரிக்காவுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. கேப்டன் அமெரிக்காவை விரிவாக நாம் திரையில் பார்த்தபின்னர், இப்போது சூப்பர்மேனைப் பார்த்தால் கேப்டன் அமெரிக்காவின் சின்னத்தம்பி போல தோன்றியது. (உண்மையில் கேப்டன் அமெரிக்காவின் பல குணாதிசயங்கள் சூப்பர்மேனிடமிருந்தே இன்ஸ்பையர் செய்யப்பட்டவை).

எனவே, இப்போது இருக்கும் சூப்பர்ஹீரோ படையில் சூப்பர்மேன் தனித்துத் தெரிவதற்கான வாய்ப்புகள் கம்மி. காரணம் சூப்பர்மேனை விட பல விதங்களிலும் சுவாரஸ்யமான பல ஹீரோக்களை கடந்த சில வருடங்களில் நாம் பார்த்தாயிற்று. இவர்களுக்கும் சூப்பர்மேனுக்கும் உள்ள ஒரே பிரதான வேற்றுமை – சூப்பர்மேனின் பாரம்பரியம். அதை மட்டும் வைத்துக்கொண்டு எப்படி வித்தியாசம் காட்ட முடியும்?

Man of Steel படம் என்னை கவரவில்லை. ஒருவேளை நீங்கள் டமால் டுமீல் ஸிஜி ஆக்‌ஷன் ஸீக்வென்ஸ்களின் விசிறியாக இருந்தால், இந்தப் படத்தின் நீ…….ண்ட ஸ்டண்ட் காட்சிகள் உங்களைக் கவர வாய்ப்பிருக்கிறது. ’அதையெல்லாம் ஆல்ரெடி அவெஞ்சர்ஸில் பார்த்தாயிற்று’ என்று நீங்கள் நினைத்தால், இந்தப் படத்தை தவிர்ப்பது நலம். படத்தில் புதிதாக எதுவுமே இல்லை. பழைய மொந்தை. புளித்துப்போன கள்.

பி.கு – சூப்பர்மேனின் பிரதான வில்லன் லெக்ஸ் லூதரைப் பற்றிய ஒரு மிகச்சிறிய க்ளூ இந்தப் படத்தில் இருக்கிறது. படத்தின் இறுதியில் சூப்பர்மேனை நோக்கி வில்லனால் வீசப்படும் பெரிய லாரியை கவனியுங்கள். அடுத்த பாகத்தில் வில்லன் லெக்ஸ் தான் என்பது இந்த க்ளூவின் அர்த்தம்.

  Comments

23 Comments

  1. You Found me 🙂

    Reply
    • Rajesh Da Scorp

      Ha ha ha ha … Good comment by the way 🙂

      Reply
  2. டிரைலர் பாத்தப்பவே நேனச்சேன்… எத்தனதடவ இந்த கதையையே திரும்பத்திரும்ப ப் பாக்கறதுன்னு… இருந்தாலும் cg நெறைய இருக்குனு சொல்லறதால அதுக்காகவாச்சும் ஒரு தடவ பாக்கணும்… இன்னொரு சந்தேகம் தேளு… fast and furious 6 படத்தப்பத்தி ஒன்னும் எழுதலையே ஏன்… அப்பறம் g.i. joe retaliation படத்தப்பத்தியும் ஒன்னும் எழுதலையே..

    Reply
    • Rajesh Da Scorp

      அந்த ரெண்டு படத்தையும் பார்க்கிறதில்லைன்னு உறுதியா இருந்துட்டேன் பாஸ் :). அதான் எழுதல.

      Reply
      • ஹம்… அது சரி…. எனக்கு கார் பைக்குன்ன ரொம்ப பிடிக்கும்…. அதுக்காகவே ff சீரீஸ் படங்கள் பிடிக்கும்.. கார் பைக் சத்தங்களைக் கேட்டலே பரவசமாயிடுவேன்… அதுவும் அந்த ff 6 படத்துல வர f1 type ramp கார், அந்த சத்தத்த கேட்டாலே சிலிர்துக்கும்… அப்பறம் g.i.joe கார்ட்டூனின் ரசிகன் நான்.. என்னதான் கார்டூன் மாதிரியே இருந்தாலும் அந்த படமும் எனக்கு பிடிக்கும்… அதனால தான் உங்கள கேட்டேன் தேளு… Transformers சீரிஸ் படங்களும் எனக்கு பிடிக்கும்…:-)

        Reply
        • Rajesh Da Scorp

          I too like the Transformers first part boss :).. ஆனா நீங்க சொன்ன மத்த படங்களை பார்க்க ஒரு இன்ட்ரஸ்ட் இன்னும் வரல. ஒருவேளை வருங்காலத்துல வரலாம். வந்ததும் அவசியம் பார்த்திடுவேன் 🙂

          Reply
  3. தல அப்ப சூப்பர்மேன் ரிடன்ஸே தேவலாமா

    Reply
  4. ராஜசுந்தரராஜன்

    படத்தின் அரசியல்தான் என்னை எரிச்சலூட்டியது. காட்சிப் பிரமாண்டங்களை ரசித்தேன் என்றுதான் சொல்லவேண்டும், ஆனால் நீங்கள் குறிப்பிட்டு இருப்பது போல நீஈஇள நீஈஇளம்.

    Reply
    • Rajesh Da Scorp

      உண்மையில் டார்க் நைட் படமும் இதுவும் கிட்டத்தட்ட ஒரே லென்த். ஆனா அந்த நீளத்தை ஜஸ்டிஃபை பண்ண ஒரு வலுவான மேட்டர் இதுல இல்லை. காட்சி பிரம்மாண்டங்களை ஏற்கெனவே Hancock, Avengers, Thor முதலிய படங்களில் காட்டிட்டாங்க என்பதால் அந்த வகையிலயும் ஏமாற்றமே மிஞ்சியது 🙁

      Reply
  5. tulsi

    Dark knight rises & this super man trailer was awesome.but movies are bored because of screenplay.but this one better than DK rises.
    Without Hans zimmer music nothing in the movie….

    Reply
    • Rajesh Da Scorp

      Yea the music is the only saving grace. About the screenplay – as long as the superman has a backstory that he is an alien, the story will never be interesting.

      Reply
  6. இந்த சூப்பர்மேன் ஜட்டி போடல(வெளில)

    Reply
    • Rajesh Da Scorp

      நல்லவேளையா அதுதான் ஆக்சுவலா படத்தின் ப்ளஸ் பாயிண்ட். செவப்பு ஜட்டி மட்டும் போட்டுட்டு சூப்பர்மேன் வந்திருந்தான்னா, அப்பால அது மிஷ்கினின் முகமூடியா இல்ல சூப்பர்மேனான்னு சந்தேகம் வந்திருக்கும்

      Reply
  7. தல , நானும் மொத நாளே பாத்துட்டேன். சூப்பர்மேனின் சிறுவயது சாகசங்கள் , வெறுப்புகள் போன்றவற்றை smallville சீரிஸில் உள்ளது போலவே எடுதுள்ளார்கள். அப்புறம் என்னை பெரிய ஏமாற்றிய விஷயம் lois அண்ட் clark ரொமான்ஸ் கொஞ்சம் கூட அழுத்தம் இல்லை. கிளார்க் தான் சூப்பர் மேன் என தெரிந்து விடுவது அதுவும் முதலிலே பெரிய ஏமாற்றம்.

    Reply
  8. smallville சீரிஸில் கொஞ்சம் ஜஸ்டிபை செய்திருப்பார்கள். முதலில் தனது நண்பர்களுக்காக தனது சக்திகளை பயன்படுத்த ஆரம்பிக்கும் கிளார்க் பின் கொஞ்சம் கொஞ்சமாக மக்களை காப்பாற்றும் சூப்பர் மேனாக உருவெடுப்பான். இதில் கிளார்க் ஃப்ரெண்ட்டாக lois கதாபாத்திரத்தையே மங்க செய்யும் chole sullivan என்ற பெண் கதாபாத்திரத்தை அறிமுகம் செய்திருப்பார்கள். இந்த கதாபாத்திரம் man of steel அடுத்த பாகத்தில் வரப்போவதாக சொல்கிறார்கள். இதற்க்காண easter egg கூட படத்தில் உள்ளதாம்.

    Reply
  9. மேலே இருப்பது க்வெண்டின் டாரண்டினோ எழுதிய வசனம். அவரது கில் பில் இரண்டாவது வால்யூமில் வரும். இதுதான் சூப்பர்மேனைப் பற்றிய உண்மை. சூப்பர்மேன் என்ற கதாபாத்திரம், பிற காமிக்ஸ் சூப்பர்ஹீரோக்களில் இருந்து மாறுபட்டது. பேட்மேன், ஸ்பைடர்மேன், Ironman எல்லாருமே உண்மையில் மனிதர்கள். அவர்களது சூப்பர்ஹீரோ அவதாரங்களே இந்தப் பெயர்கள். மனிதர்களாக இருப்பவர்கள், ஏதேனும் நிகழ்வின் காரணமாக சூப்பர்ஹீரோ ஆகிறார்கள். மாறாக, சூப்பர்மேன் என்பவன் உண்மையில் ஒரு ஏலியன். அவன் பிறக்கும்போதே சூப்பர்மேன்தான். இயல்பிலேயே அவன் ஒரு சூப்பர்ஹீரோ. அந்த இயல்பை மறைக்கவே க்ளார்க் கெண்ட் என்ற பெயரில் ரிப்போர்ட்டராக வேலை செய்கிறான்.

    Reply
  10. மோசக்காரபய

    Christopher Nolan-னுக்கு என்ன பிரச்சனை…அவருக்கு யாரும் சரியாக சம்பளம் கொடுக்கவில்லையா?
    The Dark Knight Rises-இல் சொதப்பியவர் இன்னும் எழுந்திருக்கவில்லை போல! அவருக்கு நீங்களாவது தண்ணீர் தெளித்து எழுப்பி விடுங்களேன் தல 🙂

    Reply
  11. sekar

    பேட்மேனை கட்டுரை முடிய வில்லையோ? நோலனுக்கு என்னாச்சு??

    Reply
  12. sekar

    பேட்மேனை ஒப்பிடாமல் கட்டுரை எழுத முடிய வில்லையோ? நோலனுக்கு என்னாச்சு??

    Reply
  13. praveen

    my point of view is

    old story but the way of presenting looks different…i like it.

    Reply
    • Rajesh Da Scorp

      Might be Praveen. About movies, no two people can have the same opinion 🙂

      Reply
  14. sarvaan ace

    நமது இதிகாசங்களில் கடவுள்கள் மோதும்போது (தர்மத்தை நிலை நாட்ட) மக்கள் இறப்பது இல்லையா அது மாதிரித்தான் கருந்தேள் free ah vidungha

    Reply

Join the conversation