Pacific Rim(2013) – 3D – English

by Karundhel Rajesh July 13, 2013   English films

கியர்மோ டெல் டோரோவின் ஹெல்பாய் இரு பாகங்கள் மற்றும் Pan’s Labyrinth பார்த்தவர்களுக்கு, இந்தப்படத்தின் மீது அவசியம் எதிர்பார்ப்பு இருக்கும். எனக்கும் அப்படியே.

ஹாலிவுட்டில் எப்போதாவது தோன்றக்கூடிய அற்புதமான இயக்குநர்களில் ஒருவர் கியர்மோ என்பதை அவரது ரசிகர்கள் மறுக்கமாட்டார்கள். நீண்ட நாட்களாகவே அவரது ’பஸிஃபிக் ரிம்’ படத்தை எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன். ஆனால், இதுவரை இந்த வருடம் நான் பார்த்த படங்களில் World War Z மட்டுமே தேறியது. Man of Steel, Iron Man 3 உட்பட பாக்கி எந்த பெரிய பட்ஜெட் படமும் சகிக்கவில்லை. ஆகவே, கியர்மோவும் ஹாலிவுட் மொக்கைகளுக்குள் நுழைந்து, நோலன் சொதப்பியதைப் போல அவரது அடையாளத்தை தொலைத்துவிட்டு நிற்கப்போகிறாரோ என்ற ஒரு சிறிய சந்தேகம் என் மனதில் இருந்தது.

ஆனால், Transformers போல ஒரு மொக்கை ரோபாட் படத்தை எடுக்காமல், பின்னி எடுத்துவிட்டார் கியர்மோ. அதுதான் மைக்கேல் பே போன்ற சராசரி கமர்ஷியல் இயக்குநருக்கும் கியர்மோ டெல் டோரோ போன்ற விஷனரிகளுக்கும் வித்தியாசம்.

கியர்மோ டெல் டோரோவின் படங்களில் எதாவது ஒரு அம்சம் சற்றே சகிக்கமுடியாமல் இருக்கும். அதாவது, வாயில் இருந்து திரவம் வடிந்தபடி நடமாடும் ஏலியன்கள், ராட்சத மிருகங்கள், இரண்டு கண்களையும் தனது இரண்டு உள்ளங்கைகளில் பதித்தபடி நடமாடும் கோரமான மனிதன் – இப்படிப்பட்ட gory உருவங்களை திரையில் நடமாட விடுவதில் கில்லர்மோவுக்கு ஆசை அதிகம். May be பீட்டர் ஜாக்ஸன் போல இவருக்கும் sick டேஸ்ட் இருக்கலாம் என்று எனக்குத் தோன்றும். ஆனால் அவை ஏனோ தானோ என்றெல்லாம் காட்டப்படாது. மிக அழகிய செட்களின் பின்னணியில், பழையகால ஐரோப்பிய ஓவியங்களைப் போன்ற நேர்த்தியுடன் காட்டப்படும். அதேபோல், தேவதைகள், பழங்கால சாத்தான்கள், கடவுள்கள் ஆகியவையும் இவரது படங்களில் அடிக்கடி தலைகாட்டும். இதுவரை கியர்மோவின் பிரதான கதாபாத்திரங்களை ஒருமுறை பார்த்தால், பாதி மனிதன் – பாதி ரத்தக்காட்டேறி (Blade II), குரங்கும் மனிதனும் கலந்த நம்மூர் ஆஞ்சநேயரைப் போன்ற ஒரு ஏலியன் (Hellboy), பூச்சி (Cronos), ராட்சத ஜந்துக்கள், பெரிய வண்டுகள் (Mimic) போன்றவையே.

ஹாலிவுட்டில் இதுபோன்ற ஜந்துகளை வைத்து படமெடுக்கும் சராசரி இயக்குநர்களுக்கும் கியர்மோ டெல் டோரோவுக்கும் இருக்கும் வித்தியாசம், டெல் டோரோவின் அற்புதமான ரசனை. அது இல்லாததால், பிற இயக்குநர்களின் படங்கள் மொக்கையாக இருக்கும் (விதிவிலக்கு – பீட்டர் ஜாக்ஸனின் ஆரம்பகால படங்கள். ஜாக்ஸனும் கியர்மோ போன்றவர்தான். ஆனால் ஜாக்ஸனால் என்ன முக்கினாலும் Pan’s Labyrinth போன்ற ஒரு அற்புதத்தை இயக்க முடியாது). 1998ல் வெளிவந்த ’காட்ஸில்லா’ படத்தை ஹாலிவுட்டின் பிரபல மொக்கை இயக்குநர் ரோலாண்ட் எம்மரிக் இயக்கியிருப்பார். அந்தப் படத்தைப் பார்த்தால் அத்தனை காமெடியாக இருக்கும். உண்மையில் ஜுராஸிக் பார்க் படத்துக்குப் பிறகு, அதைவிட பிரம்மாண்டமான படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டே அந்தப்படம் வெளிவந்தது.

அதேபோல் அதன்பிறகு வெளிவந்த ராட்சத ஜந்து படம் என்றால், அது பீட்டர் ஜாக்ஸன் இயக்கி 2005ல் வெளிவந்த ‘கிங் காங்’ படம். அது, ஏற்கெனவே 1933ல் வெளிவந்த கிங் காங் படத்தின் ரீமேக். ஜாக்ஸனின் திறமையினால் அந்தப்படம் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

இப்படிப்பட்ட நேரடி மான்ஸ்டர் படங்கள் தவிர, சில படங்களில் மிகப்பெரிய ஜந்துக்கள் ’கௌரவ வேடத்தில்’ நடிப்பதும் உண்டு. நாம் ஏற்கெனவே இங்கு பார்த்திருக்கும் ‘Clash of the Titans‘ படத்தின் க்ளைமேக்ஸில் மிகப்பெரிய ராட்சத ஜந்து ஒன்று வரும். அதன் பெயர் ‘க்ராக்கென்’. அதேபோல், அந்தப்படத்தின் இரண்டாம் பாகமான ‘Wrath of the Titans‘ படத்தின் க்ளைமேக்ஸில், க்ரோனஸ் என்ற பழங்கால கிரேக்க வில்லன் பிரம்மாண்டமான உருவத்தோடு வருவான். அதேபோல் பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் படத்தின் இரண்டாம் பாகமான ‘Dead Man’s Chest’ படத்தின் இறுதியிலும் ராட்சத ஜந்து ஒன்று வரும்.

இப்படியெல்லாம் ராட்சத ஜந்துக்களை வைத்து படங்கள் எடுப்பதில் லாபம் என்னவென்றால், உலகம் முழுக்க இருக்கும் திரைப்பட ஆடியன்ஸுக்கு இது பிடிக்கும். மொழியெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. கிங் காங் படம், அமெரிக்காவில் வசூலித்ததை விட (218 மில்லியன்), உலகெங்கும் வசூலித்த தொகையே அதிகம் (கிட்டத்தட்ட 332 மில்லியன்). ஆனால், ஒருவேளை கதை மொக்கையாக இருந்துவிட்டால், அந்தப் படம் மிகப்பெரிய ஃப்ளாப் ஆகி, போட்ட பட்ஜெட்டை எடுக்கமுடியாமல் போகும் வாய்ப்புகளும் மிக அதிகம். உதாரணமாக, கிங் காங் படத்தின் ஆரம்ப பட்ஜெட் 150 மில்லியன் தான். ஆனால் இறுதியில் 207 மில்லியனை விழுங்கியது அந்தப்படம். இதனால், 550 மில்லியன்கள் உலகமெங்கும் வசூலித்தும் அது சூப்பர்ஹிட் ஆகவில்லை. ஹிட் மட்டுமே. இன்னொரு 150 மில்லியன்கள் எக்ஸ்ட்ராவாக வசூலித்திருந்தால்தான் கைமேல் லாபம். இந்த அளவு கூட வசூலிக்காமல் படுபயங்கர ஃப்ளாப்களாக ஆன படங்களும் உண்டு.

கியர்மோ டெல் டோரோவின் ட்ராக் ரெகார்டை எடுத்துக்கொண்டால், அவரது அதிக வசூல் படமாக, ஐந்து வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த ‘ஹெல்பாய் 2’ படம் இருக்கிறது. அதன் வசூல் என்ன என்று பார்த்தால், வெறும் 160 மில்லியன் டாலர்கள். ஆனால், தற்போது வந்துள்ள ‘பஸிஃபிக் ரிம்’ படத்தின் மொத்த பட்ஜெட் – 220 மில்லியன் டாலர்கள். அவரது அதிக வசூல் படத்தையும் விட அதிக பட்ஜெட். கியர்மோவின் படங்கள் பெரும்பாலான மக்களால் புரிந்துகொள்ளப்படுவதில்லை. உலகின் சராசரி திரைப்பட ரசிகனுக்கு, அடிதடி, இயந்திரங்கள், காட்டேறிகள், ஏலியன்கள் போன்றவையெல்லாம் மிக மட்டமான தரத்தில் இருந்தாலே போதும் (உதாரணம்: Transformers, Twilight, எல்லா ரோலாண்ட் எமரிக் படங்கள் – இண்டிபெண்டன்ஸ் டேயை தவிர்த்து). இந்த ஜானர்களில் தனது உழைப்பை கொட்டி கவித்துவமாக படம் எடுக்கும் கியர்மோவின் அட்டகாசமான படங்கள் இதனால் ஃப்ளாப் ஆகின்றன.

ஒரு நாள் கடற்கரையில் நடந்துகொண்டிருக்கிறோம். அப்போது கடலைப் பார்க்கும்போது, திடீரென்று ஒரு பிரம்மாண்டமான ரோபாட்டும் ஒரு மிகப்பெரிய ஜந்துவும் சண்டையிட்டுக்கொள்வதைப் போன்ற கற்பனை நம் மனதில் தோன்றுகிறது. உடனடியாக வீட்டுக்கு வந்து அதைப்பற்றி கடகடவென்று 25 பக்கத்துக்கு ஒரு கதைச்சுருக்கம் தயார் செய்து, அதை ஸ்டுடியோவுக்கு விற்றால் எப்படி இருக்கும்? அதைத்தான் இந்தப் படத்தின் கதையையும் திரைக்கதையையும் கியர்மோ டெல் டோரோவுடன் சேர்ந்து எழுதிய ட்ராவிஸ் பீச்சம் செய்திருக்கிறார். அந்தக் கதையைப் பார்த்து கவரப்பட்ட கியர்மோ டெல் டோரோ, இதை திரைக்கதையாக மாற்ற பீச்சமுடன் அமர்ந்தார். இப்படித்தான் இந்தப் படம் உருவாக்கப்பட்டது.

படத்தை எடுக்கும்போது டெல் டோரோ இரண்டு விஷயங்களில் மிகத்தெளிவாக இருந்தார். ஒன்று – படத்தின் ஸ்டண்ட் காட்சிகளை, ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படங்களைப் போல் செயற்கையாக எடுக்கக்கூடாது. (காரணம், ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் படங்களில் சண்டைகள் எல்லாமே அழகாக அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கும்). கூடவே, இந்தப்படத்தில், வழக்கமான ஹாலிவுட் படங்களில் வருவதுபோல், யாராவது அமெரிக்க அதிபரோ அல்லது அதுபோன்ற அதிகாரியோ ஒரு ராணுவத்தையே வரிசையாக தேர்ந்தெடுத்து அனுப்புவது போல் எல்லாம் இருக்கக்கூடாது. இரண்டு- படத்தின் அழிவுகளில் பொதுமக்கள் சாவது இருக்கக்கூடாது. ‘அவெஞ்சர்ஸ்’, ‘மேன் ஆஃப் ஸ்டீல்’ போன்ற படங்களில், ஹீரோக்களின் சாகஸங்களால் பொதுமக்கள் கொத்துக்கொத்தாக சாவதைக் காணமுடியும். ஆகவே அந்தப் படங்களில் லாஜிக் இருக்கவே இருக்காது. பொதுமக்களை காப்பாற்ற வந்த ஹீரோ, எப்படி அவர்களைக் கொல்லமுடியும்? எனவே, பஸிஃபிக் ரிம் படத்தில், ராட்சத ஜந்து கடலினடியில் உருவாகும்போதே பக்கத்து பிராந்தியங்களில் இருக்கும் மக்கள் அனைவரையும் பாதுகாப்பான இடங்களில் அடைத்துவைத்துவிடுவார்கள். யாருமற்ற இடங்களில்தான் சண்டை நடக்கும். படத்தின் ஆரம்பத்தில் வரும் சண்டையில்கூட, இடையில் வரும் சிறிய படகை ரோபோ எடுத்து வேறுபக்கம் விட்டுவிட்டுத்தான் சண்டையிடும்.

படத்தின் கதை எல்லாருக்கும் தெரிந்ததுதான். பஸிஃபிக் கடலின் ஆழத்தில், பூமியையும் ஒரு ஏலியன் கிரகத்தையும் இணைக்கும் வழி ஒன்று உருவாகிறது. இதன்வழியாக மெதுவாக பிரம்மாண்ட ஏலியன்கள் கடலின் அடியிலிருந்து பூமிக்கு வருகின்றன. இவைகள் வெறுமனே எந்த நோக்கமும் இல்லாமல் வந்துசெல்வதில்லை. அப்படி அவைகள் வருகைபுரிவதில் மிக முக்கியமான நோக்கம் ஒன்று உள்ளது. அது சஸ்பென்ஸ் இல்லை என்பதால் இங்கே சொல்கிறேன். இந்த ஏலியன்கள் ஏற்கெனவே பூமிக்கு வந்துள்ளன என்று படத்தில் சொல்லப்படுகிறது. அவையே டைனோஸார்கள். ஆனால் தற்காலத்தில்தான் அவை வாழத்தகுந்த விஷயங்கள் இங்கே இருக்கின்றன. தொழிற்சாலை அசுத்தங்கள், ஓஸோன் ஓட்டை, கெமிக்கல்கள் போன்றவை. எனவே அவைகள் பூமியின்மேல் படையெடுக்கின்றன. அப்படிப் படையெடுக்கும் ஜந்துக்களுக்கு ’கய்ஜு’ (Kaiju) என்று பெயர். எப்படி நம்மிடம் நாய்கள், பூனைகள் போன்ற பிராணிகள் வளர்கின்றனவோ, அப்படி இந்த கய்ஜுக்கள் ஒருவித ஏலியன்களிடம் வளர்கின்றன. இந்த கய்ஜுக்களை முதலில் அனுப்பி, அவைகள் மூலம் உலகின் மக்கள்தொகையை அழித்தபின் அந்த ஏலியன் கிரகத்தை சேர்ந்தவர்கள் பூமியை அவர்கள் வாழ உபயோகித்துக்கொள்வார்கள். இப்படிப்பல கிரகங்களை கய்ஜுக்கள் மூலம் நிர்மூலம் செய்திருக்கிறார்கள் அவர்கள்.

இப்படி வரும் கய்ஜுக்கள் அனைத்தும் ஒரே போன்ற மிருகங்கள் அல்ல. ஒவ்வொருமுறை வரும் கய்ஜுவும், அதற்கு முந்தைய கய்ஜுவை விட பலத்திலும் உருவத்திலும் பெரிது. அவைகள் ஒவ்வொருமுறையும் அவைகளின் எஜமானர்களால் அப்படி உருவாக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட கய்ஜுக்களை எதிர்க்க, உலகின் நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்து உருவாக்கிய பிரம்மாண்ட இயந்திரங்களே ’யேய்கர்கள்’ (Jaegars) எனப்படுகின்றன. ஒவ்வொரு யேய்கரையும் இயக்க இரண்டு மனிதர்கள் தேவை. அவர்களது மூளைகள் ஒன்றுசேர்ந்தால்தான் அந்த இயந்திரம் தங்குதடையில்லாமல் இயங்கும்.

ஆரம்பத்தில் வெகு வெற்றிகரமாக இருந்துவந்த யேய்கர்கள், அதன்பின் மெல்ல கய்ஜுக்களின் தாக்குதலுக்கு எதிராக இயங்க முடியாமல் போகிறது. அதற்குப்பதில் பஸிஃபிக் கடலோரமாக மாபெரும் சுவரைக் கட்ட உலக அரசாங்கம் முடிவுசெய்கிறது. ஆனால் அது பலிப்பதில்லை. எனவே, மீதம் இருக்கும் ஒருசில யேய்கர்களையும், அவற்றை இயக்கும் மிகச்சில மனிதர்களையும் வைத்துக்கொண்டு, அந்த பஸிஃபிக் கடலினடியில் இருக்கும் வாயிலை அடைக்க முடிவுசெய்யப்படுகிறது.

இதன்பின் என்ன ஆகிறது என்பதே படம்.

படத்தைப் பற்றி சொல்லவேண்டும் என்றால்: பிரம்மாண்டம் என்பதை இன்றுதான் எனது ஹாலிவுட் திரைப்பட சரித்திரத்தில் கண்டேன். இதுவரையில் திரையே கொள்ளாமல் அடி பின்னியெடுக்கும் இப்படிப்பட்ட ஸ்டண்ட் காட்சிகளை நான் கண்டதே இல்லை. கூடவே, வெறுமனே சண்டைகள் மட்டும் இல்லாமல், உறுதியான உணர்வுரீதியான கதையும் இதில் உள்ளதால், படத்தை நன்றாகவே ரசிக்க முடிகிறது. ஆனால், இந்தப் படத்தின் கதையைப் போலவே இதுவரை அட்லீஸ்ட் பத்து மான்ஸ்டர் படங்களையாவது பார்த்திருப்போம். அதாவது, மான்ஸ்டர் உருவாக்கம்–> அது மக்களை அழிப்பது–> அதை எதிர்த்து ஒரு படை உருவாவது–> அந்தப் படையில் நடக்கும் பிரச்னைகள்–> இதனிடையே அந்த மான்ஸ்டரைப் பற்றிய உண்மைகளை ஒருசிலர் கண்டுபிடிப்பது–>இறுதியில் அந்த உண்மைகளை வைத்தே அந்த மான்ஸ்டரை வெல்வது என்ற டெம்ப்ளேட். ஆனால், இப்படிப்பட்ட well known டெம்ப்ளேட்டை வைத்துக்கொண்டே சுவாரஸ்யமான படத்தைத் தர கியர்மோ டெல் டோரோ போன்ற அட்டகாசமான இயக்குநர்களால் மட்டுமே முடியும்.

படத்தில் ஸ்பெஷல் வேடத்தில் நடித்திருப்பது, ரான் பேர்ல்மேன். இதற்குமுன்னர் பல கியர்மோ படங்களில் நடித்திருப்பவர். குறிப்பாக, ஹெல்பாயாக நடித்து பட்டையைக் கிளப்பிய நபர். அவரது கதாபாத்திரத்தின் பெயர் – ஹானிபல் ச்சாவ் (Hannibal Chow). இவரை வைத்து சில ரசமான காட்சிகள் இருக்கின்றன.

படத்திற்கு இசையமைத்திருப்பவர், ரமீன் ஜவாடி (Ramin Djawadi). ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ ஸீரிஸின் டைட்டில் இசை நினைவிருக்கிறதா? அந்த அழியாத அற்புதத்துக்கு சொந்தக்காரர். அதேபோல் இதிலும் இசையில் நமது மனதைக் கவருகிறார். குறிப்பாக ரோபோக்கள் வரும் காட்சிகளில் பின்னணி இசை விளையாடுகிறது.

ஜாலியாக சென்று, அதிரடி அட்டகாசத்தை கண்டுகளித்துவிட்டு வருவதற்கு இப்படிப்பட்ட படங்கள் அவ்வப்போது தேவை. உங்களுக்கு அவெஞ்சர்ஸ் படத்தின் க்ளைமேக்ஸ் பிடித்ததா? அப்படியென்றால் அதைவிடவும் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப்படம் அவசியம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதோ ஒரு சில Behind the Scenes வீடியோக்கள்.

இது, பஸிஃபிக் ரிம் படத்தின் ட்ரய்லர்.

பி.கு

1. அவரது பெயர், கில்லர்மோ டெல் டோரோ அல்ல. அது கியர்மோதான்

2. படத்தில் இன்னும் சில மேட்டர்கள் இருக்கின்றன. அவைகளை பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்

3. கியர்மோ டெல் டோரோதான் உண்மையில் ‘ஹாபிட்’ படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், பயங்கர லேட்டான ப்ரொடக்‌ஷனால் கடுப்பான டெல் டோரோ வெளியே வந்துவிட்டார். அதன் திரைக்கதையில் மட்டும் கியர்மோவின் பெயர் இருக்கும்.

4. இந்தப் படத்திலும் ஒரு post- credits ஸீன் உண்டு. வழக்கப்படி இன்றும் அதை காத்திருந்து  பார்த்த ஒரே ஆள் – நான்தான். தியேட்டரில் படம் முடிந்தவுடன் கல்லடி பட்ட காக்காய்க்கூட்டம் போல எல்லாரும் எஸ்கேப்.  அதற்குத்தான் படம் வெளியாகுமுன்பே Post- credits ஸீன் இருக்கிறதா இல்லையா என்று ரிஸர்ச் செய்துவிட்டு பார்க்கப்போக வேண்டும் என்பது ?

  Comments

27 Comments

  1. படம் அருமையாக இருந்தது. Sub title போட்டது தான் கொஞ்சம் மொக்கை. சில இடங்களில் பேசுவது வேறு, Sub-title வேறு என்று இருந்தது.

    post- credits ஸீன் மிஸ் செய்துவிட்டேன். பிறகு தான் பார்க்க வேண்டும் 🙂

    Reply
    • அது ஒரு செம ஜாலியான ஸீன். இருவது செகண்ட் ஓடும் 🙂

      Reply
  2. “பத்தோட பதினொன்னுதான்யா இந்த monster robo படமும்”னு சொன்ன என் friendsட லாம் அடிச்சு பேசுனேன் படம் பட்டய கெளப்பும்னு.. Guillermo என்ன காப்பதிட்டாறு.. eagerly waiting to watch on silver screen.. 🙂

    Reply
    • ஆமா. எடுத்தது யாரு? கியர்மோல்ல 🙂

      Reply
  3. bandhu

    Nice Review. Must watch in Imax 3d.. We plan to do that

    Reply
    • Yea Boss. You gotta see it in Imax 3D. This is the only film which is worth of it in recent times.

      Reply
  4. NadodiPaiyan

    Interesting review. I will check it out in the theaters.

    Reply
  5. Typical Rajesh Review with all Cinebits and interesting Template.
    Hence This Review also fits in your standard template of Story+Bits about the Movie+Facts about the Directors..:).
    Nice Reivew will see soon in Silver Screen.

    Reply
    • Thank you Krishna. If we love something, it would show, isn’t it? 🙂

      Reply
  6. sekar

    இந்தப் படத்திலும் ஒரு post- credits ஸீன் உண்டு. வழக்கப்படி இன்றும் அதை காத்திருந்து பார்த்த ஒரே ஆள் – நான்தான்

    பின்னே நம்மை விட்டா வேற யாரு???

    நான் இன்னைக்கு பார்த்துட்டு சொல்றேன் ….

    Reply
    • //பின்னே நம்மை விட்டா வேற யாரு???// – ஹா ஹா ஹா 🙂

      Reply
  7. Ganesh Kumar

    ’யேய்கர்கள்’ (Jaegars) – நம்ம கோரக்க சித்தரோட விழுமிய எச்சங்களே…ஹி ஹி ஹி. படம் டௌன்லோட் போட்டாச்சு…post- credits ஸீனையும் பார்த்திடுவோம்.

    Reply
  8. அண்ணா கேம் ஆப் த்ரோன்ஸ் படம் இல்லிங்கண்ணா நாடகங்கன்னா..

    Reply
    • Rajesh Da Scorp

      ஹா ஹா 🙂 . கரெக்ட். ஆல்ரெடி அதோட ரெண்டு ஸீஸனுக்கு நான் விமர்சனம் எழுதிருந்தாலும், போஸ்ட் போடும்போது ஏதோ நினைவுல படம்னு போட்டுட்டேன். உங்க கமெண்ட் பார்த்ததும் நைஸா போயி மாத்திட்டேன் 🙂

      Reply
  9. I watched the post credit scene bec of yr review and enjoyed it. Thanks for mentioning it Rajesh 🙂 Where s my goddamn shoe???;)

    Reply
  10. sathish

    Pacific Rim – பெயரே நல்லா இருக்கு. படத்த ரிலிஸ் பண்றவனுங்க ருத்ர நகரம்னு சம்பந்தமே இல்லாம பெயர வெச்சு அசிங்கப்படுத்தீட்டானுங்க.

    Reply
  11. tom

    nice movie .some fight scenes really need clarity.

    Reply
  12. Satheeshwaran

    //கல்லடி பட்ட காக்காய்க்கூட்டம்// Super line na… I watched it in iMAX 3D.. Worth a Watch..! As u mentioned the ‘template’ thing was disturbing a bit while watching…

    Reply
  13. Namma orula yen ippadi patta cinema varuvathu illai??????

    Reply
  14. Enock Prince

    //நடமாட விடுவதில் கில்லர்மோவுக்கு ஆசை அதிகம்// Typo?

    Reply
  15. சமீபத்தில் பார்த்த மொக்கை தலைவலி ஹாலிவுட் படங்களில் இதுவும் ஒன்று. ஐமேக்ஸ் பார்த்தோம் என்பதை தவிர வேறொன்றும் இல்லை.:(

    Reply
  16. Murugaraj

    Rajesh, FYI ; Bangalore Manasa Theater have Auro 3D Sound System this week on wards. Had a wonderful exp. yes’day.

    Reply
  17. ரொம்ப நாள் கழிச்சு திரை அரங்குல பாத்த படம் ராஜேஷ். செம்ம. ஒருவர் மேலே சொன்னது மாதிரி எனக்கு இருட்டு ஒரு குறையாவே தெரியல.

    இது மாதிரி படத்த பாக்கும் போது மூளைய கழட்டி வச்சிட்டு தான் பாக்கணும். ஆனா கத சொன்ன விதத்துல அற்புதமா இருந்தது.

    நீங்க சொன்ன முதல் பிரமாண்ட படம் என்பதை “சமீபத்தில்” வந்த படம் என்று அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். IMAX இல் பார்க்கும் போது நாமும் அடிக்கிறோம் /அடி வாங்குகிறோம் போன்ற அளவுக்கு படத்தின் உள்ளே சென்று ரசிக்க முடிந்தது. உங்கள் விமர்சனம் மற்ற படங்களைப் போல் இல்லாமல் இதற்கு நீளம் குறைவோ? ஆனால் சொல்ல வந்த விஷயத்தை பக்காவா சொல்லிடீங்க.

    அப்புறம் ஒரு விஷயம். நோலன ரொம்ப தாளிக்காதீங்க. 🙂 ஒரு படம் தான் ஹாலிவுட் மசாலா மாதிரி போய்டுச்சு. அவர் மறுபடியும் சொல்லி அடிப்பார்னு இன்னும் (அப்பாவியா!) நம்பும் கூட்டத்துல நானும் ஒருவன். அவர் “Following” படம் கண்ணுலேயே நிக்குது:)

    Reply
  18. d

    //இந்தப் படத்திலும் ஒரு post- credits ஸீன் உண்டு. //

    what is post credit seen?

    Reply
  19. எனக்கென்னவோ படம் பிடிக்கலை…

    Reply

Join the conversation