பாபநாசம் & Drishyam

by Karundhel Rajesh July 7, 2015   Tamil cinema

ஒரு படத்தின் ஒரிஜினலைப் பார்த்துவிட்டு அதன் ரீமேக்கைப் பார்த்தால் அதில் சில பிரச்னைகள் வரும். ஒரிஜினலைப் பார்த்தவர்கள் ரீமேக்கை ஒத்துக்கொள்ளாமல் போகும் வாய்ப்புகள் அதிகம். உளவியல் ரீதியாக அதுதான் சாத்தியம். அதேசமயம் 95% ஒரிஜினலின் தரத்துக்கு ரீமேக் வர இயலாது என்பதும் உண்மை. நான் பாபநாசம் படத்தைத்தான் முதலில் பார்த்தேன். திருஷ்யம் படத்தை இன்று பார்த்தேன். இருந்தாலும், மேலே சொன்ன எதையும் நான் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. எடுத்துக்கொண்ட கதையை இயல்பாக எந்தப் படம் சொல்லியிருக்கிறது என்றே கவனித்தேன்.

இரண்டு படங்களையும் பார்த்தவர்களோ, இவற்றில் ஒரு படம் மட்டுமே பார்த்தவர்களோ, இரண்டையும் பார்க்காதவர்களோகூட இந்தக் கட்டுரையைப் படிக்கலாம். இந்தக் கட்டுரை, கமல்ஹாஸனையும் மோஹன்லாலையும் ஒப்பிடும் வகையிலான கட்டுரை இல்லை. இது ஜோர்ஜ்குட்டியையும் ச்சொயம்புலிங்கத்தையும் மட்டுமே ஒப்பிடுகிறது. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு என்பவர்களுக்கு இந்தக் கட்டுரையினால் பிரச்னை இருக்காது.


எந்த மொழியில் எடுத்தாலும் அதில் பெருவெற்றி அடைந்துகொண்டிருக்கிறது திருஷ்யம். வெங்கடேஷ், ரவிச்சந்திரன் ஆகியோருக்குக் கூட அவர்களின் திரைவாழ்க்கையில் பெரிய ஹிட்களில் ஒன்றாக ஆகியிருக்கிறது. பெங்காலி, ஹிந்தியில் கூட இப்படம் வெளியாகப்போகிறது. விரைவில் போஜ்புரியில் கூட வரலாம். இப்படி ஒரு கதையைக் கொண்டுள்ள திருஷ்யத்தில் கதாபாத்திரங்கள் எப்படிப்பட்டவை என்று கவனித்தால் அதற்கும் பாபநாசத்துக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. திருஷ்யத்தின் ஜோர்ஜ்குட்டியின் பர்ஸனாலிடி எப்படிப்பட்டது? ஆகிருதிக்கு ஏற்ற குணம். படத்தின் துவக்கத்தில் இருந்தே, வெளிப்படையாகப் பேசும் நபர். அதற்கேற்ற உருவம். ஜோர்ஜ்குட்டி கோபப்பட்டு சண்டைக்கு வந்தால் எதிராளியை அடித்து துவம்சம் செய்துவிடுவார் என்று கேள்விகேட்காமல் நம்பலாம். அதேசமயம் மனைவியின் மீது காதல் கொண்டவர். ஊரில் நல்ல பெயர் சம்பாதித்து வைத்திருக்கும் மனிதர். படிப்பறிவு குறைவு என்றாலும், திரைப்படங்கள் பார்த்து, அவற்றின் மூலமே பல விஷயங்கள் தெரிந்துவைத்திருப்பவர்.

இப்போது அவரை விட்டுவிட்டுப் பாபநாசத்தின் ச்சொயம்புலிங்கத்திடம் நெருங்கினால், மிகச்சிறுவயதில் இந்த ஊருக்கு வந்து, கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்துப் பல தொழில்களை செய்துகொண்டிருக்கும் மனிதர் அவர். செய்யும் வேலையில் ஜோர்ஜ்குட்டியை ஒத்த மனிதராக இருந்தாலும், இவருக்கும் ஜோர்ஜ்குட்டிக்கும் அடிப்படையில் சில வித்தியாசங்கள் உள்ளன. ஜோர்ஜ்குட்டி, உணர்ச்சிகரமான திரைப்படக் காட்சிகளைப் பார்த்து அழுதாலும், அதை வெளியே காண்பித்துக்கொள்ளாதவர். போலீஸ்காரரை சகஜமாகக் கிண்டல் செய்பவர். இப்படிப்பட்ட காட்சிகளின் மூலம், ஜோர்ஜ்குட்டி தனது உணர்ச்சிகளை அதிகமாக வெளிக்காட்டிக்கொள்ளாதவர் என்பது தெரிகிறது. அதேசமயம் அவரிடம் பிரச்னை செய்யவும் யாரும் தயாரில்லை. சவட்டிவிடுவார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் ச்சொயம்புலிங்கமோ, உள்ளுக்குள் எப்படி உணர்ச்சிகளின் கலவையாக இருக்கிறாரோ வெளியேயும் அப்படிப்பட்டவர். போலீஸ்காரரைக் கிண்டல் செய்தாலும், போலீஸ் நினைத்தால் இவரை துவம்சம் செய்துவிடமுடியும். நல்லவராகத் தெரிகிறார். வெள்ளந்தியின் உருவம். அந்த டீக்கடைக்கார பாய் எப்படியோ அதே போன்றவர்தான் ச்சொயம்புலிங்கம். யாருடனும் வெளிப்படையாக ச்சொயம்புலிங்கம் சண்டையிட்டால், இறுதியில் அடி வாங்கிச் சாயப்போகிறவர் அவராகத்தான் இருக்கும் என்பது புரிகிறது. ச்சொயம்புலிங்கம் ஜோர்ஜ்குட்டியைப் போல உணர்ச்சிகளை உள்ளே வைத்துக்கொள்ளத் தெரியாதவர். அவரது மகள்களிடம் அவர் பேசும் காட்சிகளில் அவரிடம் வெளிப்படும் வாஞ்சை இதையெல்லாம் சொல்கிறது. ஜோர்ஜ்குட்டியும் ச்சொயம்புலிங்கமும் சண்டை போட்டுக்கொண்டால் அதில் ஜோர்ஜ்குட்டிதான் ஜெயிப்பார் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.

இதுபோன்ற மிகச்சிறிய வித்தியாசங்கள் இருவரிடையேயும் உள்ளன. எந்தப் படத்திலும் இப்படிக் கதாபாத்திரங்களை வித்தியாசப்படுத்தமுடியும். ஆனால், பிரச்னை எங்கே துவங்குகிறது என்றால், இதுபோன்ற கதாபாத்திர குணாதிசயங்களை இருவரும் எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறார்கள் என்பதிலும், அந்த வெளிப்பாடுகளில் அவர்களின் குணங்களின் justification நன்றாக இருக்கிறதா என்பதிலும்தான். இந்தப் பத்தி புரியவில்லை என்றால் ஒரு உதாரணமாக, உத்தம வில்லனில் மனோரஞ்சன் என்ற நடிகன் எப்படி வெளிப்படுத்தப்பட்டான் என்று யோசித்துப் பார்க்கலாம். அவனது நடை, உடை, பாவனைகள், உடல்மொழி எல்லாவற்றுமே படத்தில் அவன் எடுக்கும் முடிவுகளுக்கும் செய்யும் வேலைகளுக்கும் இயல்பாகப் பொருந்தினதானே? உடல்மொழிக்கும், உள்ளே இருக்கும் தன்மைக்கும் ஒரு தொடர்பு எப்போதும் இருக்கும். இந்த இரண்டையும் ஒரு கதாபாத்திரம் எப்படி வெளிப்படுத்துகிறது என்பதுதான் நடிப்பு. அதிகமாகவோ குறைவாகவோ அது இருக்கும். நடிப்பு என்றாலே, இயல்பை விட்டுவிட்டு நடிப்பது என்பதுதான் அர்த்தம். அந்த நடிகர், கதாபாத்திரத்தின் தன்மையை நன்றாகப் புரிந்துகொண்டு அவற்றை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறார் என்பதுதான் இதில் முக்கியம்.

ஒரு சில காட்சிகளை இப்போது பார்க்கலாம்.

ஒரு மலையாளப்படத்தைப் பார்த்துக்கொண்டு ஜார்ஜ்குட்டி உணர்ச்சிவசப்படுகிறார். இங்கே ச்சொயம்புலிங்கம் பாசமலரைப் பர்த்துக்கொண்டு கண்கலங்கிக்கொண்டிருக்கிறார். இந்த இரண்டு காட்சிகளையும் பார்த்தால், ஜோர்ஜ்குட்டியிடம் ஒருவித Wooden face இருப்பதைப் பார்க்கமுடியும்.முகத்தில் reactionஏ இல்லாமல் உணர்ச்சிவசப்படுகிறார் ஜோர்ஜ்குட்டி என்பது தெரியும். ஆனால் ச்சொயம்புலிங்கம் அப்படியா?

வீட்டின் தோட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் நிற்கிறார் ஜோர்ஜ்குட்டி. கேமரா மெதுவே மேலிருந்து கீழே இறங்குகிறது. பின்னால் நிற்கும் தனது குடும்பத்தினரைத் திரும்பிப் பார்க்கிறார். இடைவேளை. இதிலும் இதைத் தொடர்ந்த காட்சியிலும் அப்படியே ச்சொயம்புலிங்கத்தைக் கவனித்துப் பாருங்கள்.

இளைஞனின் காரைத் திறக்கிறார் ஜோர்ஜ்குட்டி. அப்போது கார் பலத்த ஒலியை எழுப்புகிறது. உடனடியாகப் பதறி காருக்குள் அமர்கிறார். கையில் கீயை வைத்துக்கொண்டு அந்த ஒலியை அணைக்க முயல்கிறார். இந்தக் காட்சியில் ச்சொயம்புலிங்கம் எப்படி ரியாக்ட் செய்கிறார் என்று கவனியுங்கள். குறிப்பாக, காருக்குள் அமர்ந்து பரபரப்படையும் நேரத்தில்.

போலீஸ் ஜார்ஜ்குட்டியின் வீட்டுக்கு வருகிறது. அப்போது அங்கே ஜீப்பில் வேகமாக வருகிறார் ஜோர்ஜ்குட்டி. உள்ளே செல்கிறார்கள். அங்கே இளைஞனின் ஃபோட்டோ காட்டப்படுகிறது. அந்த இளைஞனைத் தெரியுமா என்ற கேள்விக்கு, ‘இல்ல சார்’ என்று ஜோர்ஜ்குட்டி பதிலளிக்கிறார். இதே கேள்விக்குச் ச்சொயம்புலிங்கம் எப்படி பதிலளிக்கிறார்? அந்தக் காட்சி முழுக்க அவரது உடல்மொழியையும் நடிப்பையும் கவனித்தீர்களா? குறிப்பாக, மனைவி அவசரப்பட்டு பதிலளித்தபின்னர் அதை justify செய்வதில் யார் நன்றாக நடித்திருக்கிறார்கள்? இதில் ஜோர்ஜ்குட்டி சொல்லப்பட்ட வசனத்தை மட்டுமே ஒருவித reactionஉம் இல்லாமல் பேசுவது மிகத்தெளிவாகத் தெரிகிறது. ஆனால் ச்சொயம்பு அப்படிப் பேசவில்லை.

இந்தக் காட்சியில் ஜோர்ஜ்குட்டி எப்படிப் பேசுகிறாரோ (தலையை லேசாக சாய்த்துக்கொண்டு, ஒருவித முகபாவமும் இல்லாமல் ஒரு wooden faceஸோடு), அப்படித்தான் பல காட்சிகளிலும் பேசுகிறார். இதைத்தொடர்ந்து வரும் இண்டெராகேஷன் வீடியோவிலும் அப்படியே. ஆனால் ச்சொயம்புலிங்கம் இப்படி ஒரேவிதமாகப் பேசிச்செல்வதில்லை. அவ்வப்போது அந்த சூழலுக்கும் அவரது இயல்புக்கும் ஏற்ப அவரது உடல்மொழியும் முகபாவங்களும் குரலின் தோரணையும் மாறுவதை உணரலாம். இவையெல்லாம் சேர்ந்ததுதான் நடிப்பு. இதனால்தான் எனக்குச் ச்சொயம்புலிங்கம் பிடித்துப் போனார். க்ளைமேக்ஸில் குழி தோண்டப்படும்போது ஜோர்ஜ்குட்டியையும் ச்சொயம்புலிங்கத்தையும் ஒப்பிட்டுப்பாருங்கள்.

அதேசமயத்தில் எல்லாக் காட்சிகளிலும் ஜோர்ஜ்குட்டியை விடவும் ச்சொயம்புலிங்கமே மேல் என்றும் நான் சொல்லவில்லை. இரவில் வீடு வரும் அந்த ரொமாண்டிக் காட்சியில் குறும்பு ஜோர்ஜ்குட்டியிடமே இருந்தது. இப்படியும் சில காட்சிகள் உண்டு. ஆனால் ஒட்டுமொத்தமாக இப்படங்களைப் பார்க்கையில் ச்சொயம்புலிங்கத்திடமே ஒருவிதப் பரிதவிப்பு இருந்ததை உணர முடிந்தது. ஜோர்ஜ்குட்டி ஒரு ஹீரோ. ஹீரோவால் என்ன வேண்டுமானாலும் செய்துவிடமுடியும். நினைத்ததை சாதித்துவிடமுடியும். ஆனால் ச்சொயம்புலிங்கம் தன்னிடம் இருக்கும் பிழைகளை அறிந்த ஒரு மனிதன். அந்தப் பிழைகளுக்காக மன்னிப்பு வேண்டி நிற்பவன். அந்த மன்னிப்பினால் தன் குடும்பம் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தினாலேயே தனது பிழைகளுக்கான தண்டனைகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுக்காமல் வேறுவழியின்றிப் போராடும் நிலைக்கு வந்துவிட்டவன்.

இதுதான் ஜோர்ஜ்குட்டிக்கும் ச்சொயம்புலிங்கத்துக்கும் உள்ள வேறுபாடு. இதனால்தான் ஜோர்ஜ்குட்டியைவிடவும் ச்சொயம்புலிங்கம் என் மனதுக்கு நெருக்கமான மனிதனாக இருந்தான்.

ஒரிஜினல் மலையாளப்படத்துக்கும் அதன் ரீமேக்கான தமிழ்ப்படத்துக்கும் இதுதான் வேறுபாடு. இந்த வேறுபாட்டைத் தமிழில் கச்சிதமாக உணர முடிந்தது. என்னதான் லாஜிக் சொன்னாலுமே ச்சொயம்புலிங்கம் தப்பு செய்தவன்தான். இதை இன்னும் ஆழமாக உணரவேண்டும் என்றால் Thelma & Louise படத்தைப் பார்க்கலாம். மானத்தையும் உயிரையும் காப்பாற்றிக்கொள்ள அதில் செய்யப்பட்ட கொலைதான் அப்படத்தில் நாயகிகள் இருவரையும் அலைக்கழிக்கிறது. அதேபோன்ற ஆள்தான் ச்சொயம்புலிங்கம். அந்த நாயகிகள் இருவரும் ஹீரோக்கள் அல்லர். சாதாரண மனிதர்கள். அதுவேதான் ச்சொயம்புலிங்கம்.

பாபநாசம் படத்தின் குறைகளாக எனக்குத் தெரிந்தவை: மிக நீளமான முதல் பாதி (கிட்டத்தட்ட ஒண்ணரை மணி நேரம். இழு இழு என்று இழுத்துத்தான் கதையைத் துவங்குகிறார்கள். மிக எளிதாகக் கதையை அரை மணி நேரத்திலேயே ஆரம்பித்திருக்கலாம் என்று தோன்றியது), ச்சொயம்புலிங்கத்தின் அறிமுகத்தில் அவனும் டீக்கடைக்காரரும் பிறரும் பேசிக்கொள்ளும் நகைச்சுவை துளியும் அற்ற தட்டையான வசனங்கள் (ஆனால் இவர்கள் அதில் சிரித்துக்கொள்வார்கள்), க்ளைமேக்ஸ் காட்சியில் கமல்ஹாஸன் உடலெல்லாம் பதற நடித்த ஓவராக்டிங் ஆகியவை. குறிப்பாக இந்தக் க்ளைமேக்ஸ் எனக்குப் பிடிக்கவில்லை. அதில் ச்சொயம்புலிங்கம் சொல்லும் மிக லாஜிகலான, உண்மையான விளக்கங்கள் அனைத்தும் கமல்ஹாஸனின் மிகை நடிப்பினால் காணாமல் போய்விட்டன. ‘ஒரே ஷாட்ல நடிக்கிறீங்க; அசத்திடலாம் சார்’ என்று ஜீத்து ஜோஸஃப் சொல்லியிருக்கலாம். அல்லது கமலே அதை அப்படித்தான் செய்யவேண்டும் என்றும் சொல்லியிருக்கலாம். எது எப்படி இருந்தாலும், இந்த இறுதிக்காட்சியின் ஓவராக்டிங் படத்துக்குப் பொருந்தவில்லை. படத்தில் அதுவரை நடித்தபடியே ச்சொயம்புலிங்கம் இதிலும் செய்திருக்கலாம். கௌதமியின் குரல் முதலில் மிக அந்நியமாக இருந்தது. பின்னர் அது பழகிவிட்டது. நடிப்பில் அவரும் நன்றாகவே செய்திருந்தார். கலாபவன் மணியின் கதாபாத்திரம் தமிழில் கொஞ்சம் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. ச்சொயம்புலிங்கத்தின் இயல்பை இன்னும் நன்றாகக் காட்ட இது தேவைதான். கீதா பிரபாகராக நடித்த ஆஷா சரத், நிவேதா, எஸ்தர், பாஸ்கர், இளவரசு ஆகிய எல்லாருமே நன்றாகவே செய்திருந்தனர்.

இது அவசியம் பார்க்கப்படவேண்டிய நல்ல படம். கதைக்கு இதைவிடப் பொருத்தமான டைட்டில் இருக்கமுடியாது. இடைவேளை வரை பிரச்னையாக இருக்கும் நீளம், அதன்பின் தெரிவதில்லை. பாபநாசம், ஒரிஜினலை மிஞ்சிய ரீமேக் என்பது என் கருத்து.

பி.கு:

என்னதான் எல்லா மொழிகளிலும் பிய்த்துக்கொண்டு ஓடினாலும், திருஷ்யம் ஒரிஜினல் இல்லை. Suspect X (2008) என்ற ஜாப்னீஸ் படம்தான் ஒரிஜினல். இந்தப் படமும், The Devotion of Suspect X என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால், அந்த நாவல்தான் ஒரிஜினல். திருஷ்யம் இதிலிருந்து உருவப்பட்ட படமே. இந்த நாவலையும் படத்தையும் எடுத்துக்கொண்டு, சில சம்பவங்களை மாற்றி எடுத்ததுதான் ஜீத்து ஜோஸஃப்பின் வேலை. அவர் இதை ஒரிஜினலாக எடுக்கவில்லை என்பதை இறுதியில் நினைவில் வைத்துக்கொள்க. இந்த நாவலின் உரிமை இந்தியாவில் ஒரே ஒரு நிறுவனத்திடம்தான் உள்ளது. பாலாஜி டெலிஃபிலிம்ஸ். அதை ஹிந்தியில் அவர்கள் எடுக்க நினைத்துக்கொண்டிருக்கும்போதுதான் திருஷ்யம் படத்தின் ரீமேக் உரிமையை மலையாளத்தில் இருந்து ஹிந்திக்கு பனோரமா ஸ்டுடியோஸ் வாங்கி, ஹிந்தியில் அஜய் தேவ்கனை வைத்து எடுத்துள்ளனர். இதை பாலாஜி டெலிஃபிலிம்ஸ் எதிர்த்து வழக்குப் போடப்போவதாக அறிவித்தனர். ஒரிஜினலைப் படமாக எடுக்கும்போது, அதை வைத்து சுட்டு எடுத்த படத்தை இன்னொருவர் வாங்கி ஹிந்தியில் எடுக்கப்போவதாக அறிவித்தால்? என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

 

  Comments

13 Comments

  1. makkan

    un methavi thanaththa kamikka arambuchitta nee … climiax tamil il romba sari. kamal nadippal magana peththavangalukkum kamal meethu irakkam varum.. mohanlal payiru , pabanasam part 2 irunthaal irayum. kamal safe.

    Reply
  2. What is your thought on the movie ending given that the Boy’s parents accept defeat & do not proceed to take action given Kamal spills the beans a lot more than Mohanlal did?
    I believe the movie had to end that way because it wants to not be a showcase of brilliance like say Arya’s #Vattaram where again a body is hidden in a construction & he gets away with it, nor a #NooravadhuNaal where the murderer is caught. I believe it wanted to focus on guilt – the guilt of a god-fearing common man committing a crime for the first time and the guilt of affluent parents who have failed in their duties as responsible parents, so much so that the aggressor i.e. the mother is absolutely mum at the climax while the father who has forever been questioning the privacy/freedom given by her to their son, takes charge. Would love to hear your views

    Reply
  3. siva

    Thala correcta yendha padathoda copy nu pottu odachaaru paaru. Sema thalaiva….

    Reply
  4. Ak

    Hi

    Babanasam varuthu sonnathaala Naan திருஷ்யம் paakala,FDES paathuttu oru uruthal intha story la hero ku sathagamathan screenplay ezhuthi irukkanga,ithula hero thappikkanum nu than dir jithu already climax scene ah vechu screenplay develop panni irukkaratha oru feel. Suspect X(naa pakkala) oda thazhuvala iruntha kandippa ithu unmaithan

    Hero 2,3 thethigala Tenkasi la irukkaratha evidence create pannatha IG geetha nerila paatha mathiri sollum avvolo therinja antha amma
    1,restaurant
    2,lodge
    3,theatre
    4,meeting nadantha kovil nu
    Nera poi iruntha anga cctv footage yethavthu irukkanu check panni irukkalam.kandippa 4la yethavathu 1 la cctv cam irukkum.

    Ithu oru thriller fell thala

    Reply
    • Ak

      (Ithu oru thriller fell thala)
      Oru thriller feel tharala

      Reply
  5. Sundar

    சுயம்புலிங்கம் என்ற அருமையான தமிழ்ப்பெயரை “ச்சொயம்புலிங்கம்” என்றே முன்னூறு முறை போட்டிருக்கிறீர்கள் . மிகச் சிறந்த இந்தக் கட்டுரை, இதனாலேயே படிக்க சிரமமாய் இருக்கிறது. எந்தப் பெயர்ச்சொல்லும் தமிழில் மெய் எழுத்தில் ஆரம்பிப்பதில்லை.

    முடிந்தால் திருத்துங்கள். நன்றி.

    Reply
  6. Jana

    இது suspect X ஓட அப்பட்டமான பிரதி இல்ல ராஜேஷ் . நீங்க பார்த்திருபீங்கனு நம்புறேன் . ரெண்டுக்கும் பிளாட் ஒத்து போகுதே தவிர வேற ஒற்றுமை இல்லையே. நீங்க வேணா ஒரு அலசல் போடுங்களேன்

    Reply
  7. Jack

    I loved dhrishyam movie and i think mohan lal portrayed well than Kamal hassan. This is just my though.

    Reply
  8. நரேந்திரன்

    ஜார்ஜ் குட்டி Wooden Face, சுயம்புலிங்கம் Emotional’னு சொல்லீர்கீங்க… ஒரு Wooden Face ஆல தான் இப்படி ஒரு Critical Situation Handle பண்ணி Police கிட்ட தப்பிக்க முடியும், Emotional அ இருக்குற ஒருத்தரால இவ்வளவு அழுத்தமா இருக்க முடியுமானு தெரியல.. முக்கியமா அவர் குடும்பம் போலீஸ் கிட்ட அடி வாங்கறப்ப.. I think Mohanlal is good..

    Reply
    • Jack

      I agree with narendren

      Reply
  9. Seriously there is a problem with your attitude. Go and see the psychologists. Why do you want to portray yourself as cinema intellectual.. You better keep your mouth, hand, a** everything shut.. Watch a movie as a movie and intha nolla nottu solrethallam vendam.. periya mayir pudunginu nenappa..

    Reply
  10. ennai arinthal unakku super padamaache ajith fan sir. vara vara nirai kudam thalumbukirathey

    Reply
  11. V. Rajagopal

    என்று தணியும் இந்த ஒரிஜினல் தாகம்?
    என்று மடியும் எங்கள் காபி (Copy) மோகம்?

    Reply

Join the conversation