Sherlock Holmes 2: A Game of Shadows (2011) – English

by Karundhel Rajesh January 2, 2012   English films

Let’s begin the new year with Sherlock Holmes.

முதலில், நண்பர்கள் இந்தக் கட்டுரைகளைப் படித்துவிடுதல் நலம்.

ரைட். இப்போது, கட்டுரைக்குள் நுழையலாம்.

பாகம் ஒன்று – இரண்டு ஜீனியஸ்கள்

ஷெர்லக் ஹோம்ஸின் அதி தீவிர ரசிகர்கள்,கை ரிட்சியால் எடுக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தின் இரண்டு பாகங்களையும் பார்த்தால், சற்றே மூட் அவட் ஆக வாய்ப்புகள் உண்டு என நினைக்கிறேன். இதற்குக் காரணம், ஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை ஆர்தர் கானன் டாயல் சித்தரித்துள்ள விதமும், கை ரிட்சி அதனை முற்றிலும் எதிராகக் காண்பித்துள்ள விதமுமே. அப்படியென்ன வித்தியாசங்கள் இருக்கின்றன இவற்றில்?

முதலாவதாக, ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் கானன் டாயலால் சித்தரிக்கப்பட்டுள்ள ஹோம்ஸ் கதாபாத்திரம், ‘majestic’ என்று விளக்கப்படும் அளவு கம்பீரமான பாத்திரம். ஒரு குறிப்பிட்ட நிகழ்வின்போது, அங்கே இருக்கும் அத்தனைபேருக்கும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றே தெரியாத குழப்பம் நிலவுகையில்,ஹோம்ஸ் மட்டும் தெளிவாக சிந்தித்துக்கொண்டிருப்பார். மிகப்பெரும்பாலும், முதல் தடயத்தைக் கண்ட அந்த நிமிடத்திலேயே குற்றவாளியை ஊகித்துவிடும் திறமை உடையவர் ஹோம்ஸ். அந்தக் கணிப்பு, 99 சதவிகிதம் சரியாகவே இருக்கும் (தனது கேஸ்களில் மிகச்சில முறைகள் மட்டுமே தோல்வியைத் தழுவிய ரெகார்ட் உடையவர் ஹோம்ஸ்). அதே சமயம், தனக்குத் தெரிந்ததை வெளியே சொல்லாமல், தன கூட வேலை செய்பவர்களை பயங்கரக் குழப்பத்தில் ஆழ்த்துவது ஹோம்ஸின் வழக்கம். தனது தொழிலின் மீதும் மூளையின் மீதும் ஹோம்ஸ் கொண்டிருக்கும் கர்வத்துடன் கூடிய அசைக்கமுடியாத நம்பிக்கையே காரணம். அதே சமயம், தன்னைச் சுற்றியிருப்பவர்களின் மத்தியில் படுகம்பீரமாகத் திகழும் நபர் அவர்.அவரை யாரும் குறைந்து மதிப்பிட்டு,கேள்விகள் கேட்டுவிட முடியாது.அவரை நெருங்கும்போதே தயக்கத்துடன் -ஒருவித தாழ்வு மனப்பான்மையுடனே மற்றவர்கள் அணுகுவது வழக்கம். காரணம், பயம் அல்ல. ஒரு ஜீனியஸை மிகச்சாதாரணமாக யாரும் அணுகிப் பேசிவிட முடியாதல்லவா? அதுதான் காரணம். Holmes demands an air of respect and authority where-ever he goes.

ஆனால், கை ரிட்சியின் இத்திரைப்படங்களிலோ, ஹோம்ஸ் கதாபாத்திரம், ஒரு காமெடியனைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதுதான் படங்களின் வெற்றிக்குக் காரணம் என்று கை ரிட்சி வாதிடலாம். ஆனால், எப்படி அருள்மொழிவர்மர் காமெடியன் ஆக முடியாதோ, அப்படி ஹோம்ஸும் காமெடியன் ஆக வாய்ப்பே இல்லை என்பதே ஆர்தர் கானன் டாயலின் விசிறிகளின் கூற்று (அடியேனின் கூற்றும் தான்). அகவே, கானன் டாயலின் தீவிர விசிறிகளுக்கு, 2010ல் வெளிவந்த Sherlock என்ற தொலைக்காட்சி சீரீஸைப் பரிந்துரைக்கிறேன். அதில் வரும் ஹோம்ஸ் கதாபாத்திரமே நான் பார்த்த வரையில் முழுமையான கதாபாத்திரம்.

The Final Problem‘ என்று ஒரு ஹோம்ஸ் சிறுகதை உண்டு. கதையின்மேல் க்ளிக் செய்து படிக்கலாம். இந்தக் கதையின் ஒருசில நிகழ்வுகளை மட்டும் எடுத்துக்கொண்டு (குறிப்பாக, இதன் க்ளைமேக்ஸ்), அதை மசாலா தடவி நமக்குக் கொடுத்திருக்கிறார் கை ரிட்சி. அதுதான் இந்தப்படம்.

படத்தைப் பார்க்குமுன்னர், ஷெர்லாக்கின் பிரத்யேகத் திறமை என்ன என்று கொஞ்சம் அலசலாம். அது, படத்தைப் பார்ப்பவர்களுடைய சுவாரஸ்யத்தை மேலும் கூட்டக்கூடும்.

ஒருசிலருக்குப் பிறக்கும்போதோ அல்லது குழந்தைப்பருவத்தின் ஒரு குறிப்பிட்ட காலத்திலிருந்தோ, விசேடத் திறமைகள் பளிச்சிடத் துவங்கும். அந்தத் திறமையாலேயே அவர்கள் அதன்பின் எப்போதும் அறியப்படுவார்கள். அப்படிப்பட்ட விசேடத் திறமை கொண்டவர் ஹோம்ஸ். அந்தத் திறமையானது, வேட்டை நாய் போல அவரை எப்பொழுதும் பின்தொடர்ந்தே வந்திருக்கிறது. அந்தத் திறமையால் ஷெர்லக் தனிப்பட்டுத் தெரிந்தாலும், அதனால் அவர் அடைந்த இன்னல்கள்தான் அதிகம்.

அதுதான் அவரது கவனிப்புத் திறன்.

பொதுவாக, நாம் உட்பட உலக மாந்தர்கள் செய்வது – looking. எதையுமே பார்ப்பதோடு சரி. ஆனால், ஹோம்ஸோ, எதையும் observe செய்பவர். ஒருமுறை எதையாவது கவனித்தாலே அது அவரது மூளையில் பதிந்துவிடும். அதுமட்டுமல்லாது, அந்தப் பொருளையோ நிகழ்ச்சியையோ தொடர்புபடுத்தி, சுற்றுப்புறங்களில் நடப்பவைகளை வரிசையாக ஒரு சங்கிலி போலக் கோர்த்து, அவரது மூளை செய்திகளை அனுப்பிக்கொண்டே இருக்கும். அந்த முடிவுகளை மின்னல்வேகத்தில் அலசி, சரியானவற்றை எடுத்துக்கொள்வது ஹோம்ஸின் வழக்கம். அவரது பாஷையில் சொல்வதென்றால்:

when you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth.

இந்த அலசும் திறனை வைத்தே ஹோம்ஸின் அத்தனை கதைகளும் அமைந்திருக்கும். இப்படமும்.

இதற்கு முன்னரே நாம் பார்த்திருக்கும் ப்ரொஃபஸர் மோரியார்ட்டி – ஹோம்ஸின் ஆஸ்தான வில்லன் – ஹோம்ஸின் ஜீனியஸுக்கு சளைக்காத மேதமையுடையவர் – இதில் வருகிறார். அதேபோல் இக்கதையின் இன்னொரு அறிமுகம், ஹோம்ஸின் வாசகர்களுக்கு நன்கு பரிச்சயமான செபாஸ்டியன் மோரான் – உலகின் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்களில் ஒருவன். இன்னொரு குறிப்பிடத்தக்க அறிமுகம், ஹோம்ஸின் அண்ணன் மைக்ராஃப்ட். இவர்களைப் பற்றிய விபரங்கள், கட்டுரையின் இரண்டாம் பாகத்தில்.

ஆண்டு – 1891. ஹோம்ஸின் நண்பரான டாக்டர் வாட்ஸன், தனது குறிப்புகளைத் தட்டச்சு செய்வதில் கதை தொடங்குகிறது. அது ஒரு மரண அஞ்சலி. Flashback.

ஹோம்ஸ் அறிமுகம். குறிப்பிட்டதொரு கேஸைத் துப்பறிந்து வருவதாகச் சொல்கிறார் ஹோம்ஸ். சில கொலைகள், சில பெரிய வியாபார ஒப்பந்தங்கள், தீவிரவாதத் தாக்குதல்கள் ஆகியன இக்கேஸில் அடக்கம். கேஸின் ஒரு நூலைப் பிடித்து, மோரியார்ட்டி அனுப்பிய ஒரு கடிதத்தைப் படித்து, அதன்மூலம் சிம்ஸா என்ற பெண்ணைச் சந்திக்கிறார் ஹோம்ஸ். அந்தக் கடிதத்தைக் கொண்டுவருவது, முந்தைய பாகத்தில் நமக்கு அறிமுகமான பெண் – ஐரீன் அட்லர் (ஹோம்ஸை இதுவரை ஜெயித்திருக்கும் ஒரே எதிரி).ஹோம்ஸிடம் கடிதம் மாட்டிக்கொண்டதை அறிந்த மோரியார்ட்டி, ஐரீனைக் கொன்றுவிடுகிறார்.

ஸிம்ஸாவின் அண்ணன் ஒரு தீவிரவாத கும்பலில் பிரதான அங்கம் வகிப்பதை ஹோம்ஸ் கண்டுபிடிக்கிறார். அவன் இருப்பது ஃப்ரான்ஸ். இதற்கிடையில், வாட்ஸனின் திருமணம். அப்போது ஹோம்ஸை முதன்முதலில் சந்திக்கும் மோரியார்ட்டி, வாட்ஸனைக் கொல்ல இருப்பதாக ஹோம்ஸிடம் சொல்கிறார். வாட்ஸன் திருமணமாகிப் போய்விட்டதாகவும், தங்கள் இருவருக்கும் இனி சம்மந்தம் இல்லை என்றும் ஹோம்ஸ் சொல்வதை மோரியார்ட்டி பொருட்படுத்துவதில்லை.அதனால் வாட்ஸனுடன் மாறுவேடத்தில் பயணிக்கும் ஹோம்ஸ், வாட்ஸனைக் காக்கிறார்.

ஹோம்ஸும் மோரியார்ட்டியும் மறுபடி சந்திக்கிறார்கள்.இம்முறை, ஹோம்ஸ்,மோரியார்ட்டியின் கைதி (எப்படி என்று படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள்). உலகப்போர் ஒன்றைத் தொடங்க இருப்பதே மோரியார்ட்டியின் நோக்கம் என்பது ஹோம்ஸுக்குப் புரிகிறது.

ஸ்விட்ஸர்லாந்தில் நடக்க இருக்கும் உலக நாடுகளின் அமைதிப் பேச்சுவார்த்தையில், மோரியார்ட்டி, அவரது நோக்கத்தை நிறைவேற்ற இருப்பது ஹோம்ஸுக்குத் தெரிகிறது. ஆஜராகிறார் ஸ்விஸ்ஸில் ஹோம்ஸ்.

மோரியார்ட்டியும் ஹோம்ஸும், இறுதி முறையாக, நேருக்கு நேர் சந்திக்கிறார்கள். என்ன நடக்கிறது என்பது அனல் பறக்கும் க்ளைமேக்ஸ்.

எனக்கு அடிதடி,வெடிகுண்டு,ரத்தம் ஆகியன தெறிக்கும் க்ளைமேக்ஸ்களைவிட, இந்தப் படத்தில் வரும் க்ளைமேக்ஸ் போன்றவையே பிடிக்கும். அலட்டலில்லாத காட்சிகளில், அதிர வைக்கும் ஷாட்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. ஸீட் நுனி என்பதையும் மீறி, அத்தனை சுவாரஸ்யமாக இப்படத்தின் க்ளைமேக்ஸைக் கவனித்தேன். காரணம், ஹோம்ஸும் மோரியார்ட்டியும் இரண்டு மாபெரும் ஜீனியஸ்கள். அவர்கள் மோதிக்கொள்வது, இப்படித்தான் இருக்கவேண்டும். சும்மா துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொள்ளாமல், இருவருக்கும் பெரும் சொத்தாக இருக்கும் அபாரமான அறிவின் துணை கொண்டு இருவரும் மோதுவது அட்டகாசம்! இப்படத்தைப் பார்க்கும் நண்பர்கள், க்ளைமேக்ஸை கவனியுங்கள். கிட்டத்தட்ட இதே போன்றதொரு க்ளைமேக்ஸ், ‘Sherlock’ தொலைக்காட்சி சீரீஸின் இறுதியில் காணலாம். ஆனால், அதனைவிட இதுவே சிறந்தது.

இப்படத்தின் கதையில் ஒரு deep dive, திரைக்கதை, ஹோம்ஸ் துப்பறியும் விதம், மோரியார்ட்டி, மைக்ராஃப்ட், செபாஸ்டியன் மோரான் ஆகியவர்களின் character Bio போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்கள், இக்கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் வர இருக்கின்றன. Brace yourselves !

Sherlock Holmes 2: A Game of Shadows‘ திரைப்படத்தின் ட்ரெய்லர் இங்கே.

  Comments

14 Comments

  1. பதிவு அருமை..விரைவில் பார்த்துவிடுகிறேன்..நன்றி.

    Reply
  2. ஷெர்லக் ஹோம்ஸ் பற்றிய நாவல் படிக்கமால் அவரை படங்களில் மட்டுமே பார்த்து ரசிக்கும் என்னை பொறுத்தவரை இந்த படம் உண்மையிலேயே மிகவும் நன்றாக இருந்தது! ஆனால் முதல் பாகத்தை விட ஆக்சன் காட்சிகள் இதில் அதிகம். ஆனால் ஷெர்லாக் ஹோம்சுக்கு என்று ஒரு வடிவம் உண்டு என்பதை உங்கள் கட்டுரைகளை படித்து ஏற்கனவே புரிந்து கொண்டிருப்பதால், உங்கள் விமர்சனத்தை படித்த பின்னர்தான் படத்தின் குறைகளே தெரிகிறது! இரண்டாம் பாகத்தை எதிர் நோக்கி இருக்கிறேன்!

    Reply
  3. மிகவும் அருமையான பதிவு … வழக்கம் போல. படம் இன்னும் பார்க்கவில்லை. எப்படியும் நல்ல ப்ரிண்ட் வர சில மாதங்கள் ஆகும் என நினைக்கிறேன். பார்ப்போம்.

    நான் ஹோம்ஸின் நிறைய கதைகள் படித்ததில்லை. ஆனால் தாங்கள் கூறிய டீ.வீ ஸீரீஸை பார்க்க முயற்சிக்கிறேன்.

    //when you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth.//

    எனக்கு மிகவும் பிடித்த Quotesகளில் ஒன்று.

    Reply
  4. பதிவு நல்லா இருந்துச்சு பாசு…! நான் நாவல் படிக்கல அதனால 1st part புடிச்சுருந்துது… இன்னும் 2nd part பாக்கல… பாத்துடுறேன்…!

    Reply
  5. @ மதுரை சரவணன் – சரிங்க

    @ லக்கி – ஹீ ஹீ. இது ரெண்டு பார்ட்டோட சரி. முடிஞ்சிரும் 🙂

    @ குமரன் – ரைட்டு

    @ கணேசன் – அது உண்மைதான். ஹோம்ஸ் பத்தி எதுவும் தெரியாம போனா, படம் நல்லா இருக்கும். ஆனா தெரிஞ்சிகிட்டு போனாலும், சில காட்சிகள் ஏமாற்றமா இருந்தாலும், அந்தக் கதைகளின் நுணுக்கங்களை மிகச்சரியா உபயோகப்படுத்தி இருப்பதை உணரலாம். அதைப்பத்தி ரெண்டாவது பார்ட்ல வரும்.

    @ ஹாலிவுட் ரசிகன் – இந்தப் படத்தை தியேட்டர்ல தாளாரமா ரசிச்சி பார்க்கலாம். டவுன்லோட் பண்ணிப் பார்க்கிறது சரியா வராது. ஹோம்ஸின் பிரம்மாண்டத்தை தியேட்டர்ல பார்த்தா தான் சரியா இருக்கும் 🙂

    @ லோகு – முடிஞ்சா சில கதைகளை படிச்சிட்டு படம் பாருங்க.

    Reply
  6. இன்னும் படிக்கல..சும்மா..அட்டெண்டன்ஸ்………….ஆனா, உலகப் போர் அது இதுன்னு மேலோட்டமா படிச்சா..காப்டன் (கப்டன்) வாடை அடிக்குதே………..

    Reply
  7. ட்ரைலர் பார்த்தப்பவே சூப்பரா இருந்தது.. படக்கதையும் நல்லா இருக்கு..பார்க்கனும்!

    Reply
  8. நண்பா,
    அருமையான ஷெர்லாக் ஹோம்ஸ் பற்றிய அறிமுகம் கிடைத்தது,இன்னுமொரு நல்ல திரைப்பட பதிவு நண்பா.

    Reply
  9. sir 7,8 chennai porathala oru nalla padam anga parkanumnu irunthen…itha parkiren…eagerly wait for next part..mudinja jan 7 kulla eluthunga…

    Reply
  10. @ கொழந்த – கப்டன் இன்னும் படிக்கல. later. Nevertheless, this is a gud movie.

    @ எஸ்.கே – சீக்கிரம் பாரும் 🙂

    @ கீதப்ரியன் – நன்றி. உங்களை இன்னிக்கி இல்லேன்னா நாளைக்கி மாலை கால் பண்ணுறேன்

    @ Elamparuthi – இன்னிக்கி நைட்டுக்குள்ள ரெண்டாம் பாகம் வந்திரும். அவசியம் சென்னைல பாருங்க. தவறவிட வேண்டாம்.

    Reply
  11. // @ ஹாலிவுட் ரசிகன் – இந்தப் படத்தை தியேட்டர்ல தாளாரமா ரசிச்சி பார்க்கலாம். டவுன்லோட் பண்ணிப் பார்க்கிறது சரியா வராது. ஹோம்ஸின் பிரம்மாண்டத்தை தியேட்டர்ல பார்த்தா தான் சரியா இருக்கும //

    நம்ம ஊர்ல தியேட்டர் இல்ல. ஒரு சின்ன சினிமா கொட்டாய் தான் இருக்கு. அதுலயும் ஏழாம் அறிவு, வேலாயுதம், சூலாயுதம்னு ஏதாவது வீணாப்போன படத்த தான் போடுவான். இல்லாட்டி தான் நாங்களும் படத்த இந்த டைம் பாத்துருப்போம்ல.

    Reply

Join the conversation