தமிழ் சினிமாவில் ‘அதிபுத்திசாலிகள்’ : எ காப்பி ஸ்டோரி
தமிழ்த்திரையுலகில் சமீபகாலமாக சில நல்ல முயற்சிகள் நடந்துவருவது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆரண்யகாண்டம் படத்தைப் பற்றித்தான் சொல்கிறேன். இப்படிச் சில படங்கள் வரும் வேளையில், ஹாலிவுட் படங்களை அப்பட்டமாகக் காப்பியடித்து சில படங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. நான் ஏற்கெனவே கமல்ஹாசன் அடித்துத் தள்ளிய காப்பிகளைப் பற்றி சில கட்டுரைகள் கருந்தேளில் எழுதி இருக்கிறேன். பொதுவாக, தமிழ்த்திரைப்பட ரசிகர்களில் கமல் அல்லது ரஜினி அல்லது வேறு யாராவது நடிகர்களுக்கு விசிறிகளாக இருப்பவர்களிடம் ஒரு கருத்து நிலவி வருகிறது. அதாகப்பட்டது: ‘காப்பியடிப்பதில் தப்பில்லை’ என்பதே அது. ஆனால், இப்படிக் கருத்து சொல்பவர்களே, தங்களது கட்டுரைகளை யாராவது வேறு பெயரில் எடுத்து எழுதினால் அப்போதும் இதையே சொல்வார்களா என்று கேட்டால், மழுப்பலான வழவழா கொழகொழா பதில்தான் வரும் என்பதில் சந்தேகமில்லை. எனது கருத்து: உரிய உரிமைகள் இல்லாமல் வேறு ஒரு படத்தைக் காப்பியடிப்பது சட்டப்படி குற்றம்.
சமீபத்தில், வேலாயுதம் ட்ரெய்லர் பார்க்க நேர்ந்தது. அதைப் பார்த்து, மறுபடி சலிப்படைந்து போனேன். ஏனெனில், Assassin ‘s Creed கேமில் இருந்து பல காட்சிகளை அப்பட்டமாக உருவியெடுத்திருந்தனர் இந்த கேமைப் பற்றிக் கருந்தேளில் சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். எனக்குப் பிடித்த கேம்களில் ஒன்று அது. ஆகவே, இம்முறை சும்மா இருக்க மனம் ஒப்பவில்லை. எனவே, இந்த கேமின் தயாரிப்பாளர்களான யூபிசாஃப்ட் நிறுவனத்தாருக்கு விரிவாக ஒரு மின்னஞ்சல், சென்ற வாரம் அனுப்பியிருக்கிறேன். அத்தோடு நிற்கப்போவதில்லை. யூபிசாப்டின் அத்தனை நிர்வாக அதிகாரிகளுக்கும் இந்த மின்னஞ்சலை அனுப்பப்போகிறேன். யூபிசாப்டுக்கு மட்டுமல்ல. வேறு பல இடங்களுக்கும் ஆதாரங்களுடன் கூடிய இந்த மின்னஞ்சல் போகப்போகிறது. என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஒருவேளை காப்பியடித்தலுக்கான தக்க தண்டனை, இந்த நபர்களுக்குக் கிடைத்தால் நல்லது. அப்படிக் கிடைக்காவிடினும், இதைப்பற்றிய awareness பரவுவது இன்னும் நல்லது.
இந்தப் பதிவுக்குக் காரணம், ஹாலிவுட் பாலா, நேற்று இதைப்போலவே I am Sam படத்திலிருந்து சுட்ட ‘தெய்வத்திருமகள்’ பற்றியும் ஹிந்திக் காப்பியைப் பற்றியும் ஐ ஆம் சாம் படத்தின் தயாரிப்பாளர்களான ந்யூலைன் சினிமாவுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருப்பதாக, அவரது கூகிள் ப்ளஸ்ஸில் சொல்லியிருந்தார். ஆகவேதான், நானும் சென்றவாரம் அனுப்பியிருக்கும் எனது மெயிலைப் பற்றிய விபரங்களைப் பகிர முடிவு செய்தேன்.
இனியும் இந்த முயற்சிகள் தொடரும். ஒரு பலனும் கிடைக்காவிடினும் கூட. காப்பியடித்தலைப் பற்றிய awareness தமிழ்சினிமா ரசிகர்களிடையே பரவுவதே லட்சியம். என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
வேலாயுதம் காப்பி பற்றிய தகவல்கள்
வீடியோ ஆதாரம்
கமல்ஹாசனின் காப்பிகள் பற்றிய கட்டுரைகள்
கமல்ஹாசன் : நிகழ மறுத்த அற்புதமா?
கமல்ஹாஸன்: நிகழ மறுத்த அற்புதமா? புதிய தகவல்கள்
பி.கு – நண்பர் ரிவாஸ்கபூருடனான ஒரு சம்பாஷணையின்போதுதான் இந்த மின்னஞ்சலுக்கான யோசனை உதித்தது. அதற்காக அவருக்கு எனது நன்றிகள்.
நண்பா,
மிக நல்ல காரியம் செய்தீர்கள்.
மிகவும் சந்தோஷமாக உள்ளது,ந்யூலைன் சினிமா தயாரிப்பாளர் ஒரு 4.5 மில்லியன் டாலருக்கு நஷ்ட ஈட்டை கேட்டு கேஸை போடட்டும்.அடுத்தவன் ஐடியாவை திருடிவிட்டு என்னமா மாரை யும் த்தையும் தட்டிக்கிறானுங்க.
ஆரண்ய காண்டத்துக்கு இது போல பிக்கப் இல்லாதது வருத்தமே,ஏறகனவே அந்த விஜய் என்னும் இயக்குனர் டைட்டானிக்கை மதராசபட்டனம் என்று ரிப் செய்திருந்தது யாவரும் அறிவோம்,ஐயம் சாம்மை இப்போதே எல்லோரும் கன்னி முயற்சி என்று பாராட்ட கேட்கையில் முடியவில்லை.
இப்போது இந்த வேலாயுதம்,இனி ஒரு கூட்டணியாக இயங்கி படைப்பு திருட்டை ஒழிக்கவேண்டியது தான்,நல்ல கன்னி முயற்சிக்கு பாராட்டுக்கள்.
//பி.கு – நண்பர் ரிவாஸ்கபூருடனான ஒரு சம்பாஷணையின்போதுதான் இந்த மின்னஞ்சலுக்கான யோசனை உதித்தது. அதற்காக அவருக்கு எனது நன்றிகள்.//
அவருக்கு என் நன்றிகளும்
Boss kalakiteenga ponga. Indha madhiri panni evanadhu adila sunnambu thadavuna than namma alunga thirundhuvanunga !
நல்ல காரியம் பண்ணிருக்கீங்க…
ம்.. கிளப்புங்கள் … இனியாவது காப்பி அடிச்சு படத்த எடுத்துட்டு 3 வருஷம் எழுதுனேன் 30 வருஷம் எழுதுனேன்னு அடிச்சு விட மாட்டானுங்க …
murder 2 மற்றும் வாகை சூட வா இரண்டு படங்களின் போஸ்டர்களும் காபியே
நண்பரே!மீண்டும் புயலைக்கிளப்பி விட்டீர்கள்.
அந்த காலத்துலதான் டிவிடி… இணையம்… கிடையாது.
இந்தகாலத்துல எல்லா படமும் எல்லோரும் உடனே பார்க்க முடிகிறது.
அப்படி இருக்கும் போது எப்படி இப்படி துணிந்து அடிக்கிறான்கள்?????????
இந்தியாவில் காப்பி ரைட் சட்டம் கடுமையாக கிடையாது.
அமெரிக்காவில் இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 100 மில்லியன் டாலர் அபராதத்தொகை வசூலிக்கப்படும் என்று கேள்விப்பட்டேன்.
well done nanba.
Read this ppl
http://600024.com/gv-prakash-copycat-in-deiva-thirumagal/
GV Prakash Copycat in Deiva Thirumagal
நல்ல காரியம் செய்தீர்கள் நண்பரே…..
சொந்தமா யோசிக்க கூட தெரியமே என்ன படைப்பாளிங்க இவங்க எல்லாம்?
மணிரத்தினம்ல இருந்து விஜய் வரைக்கும் எல்லா பயலுகலயும் புடிச்சு உள்ள வைக்கணும்…
பாவம் விஜய் இப்போ தான் தெலுங்கு சினிமாவ தாண்டி கேம்ஸ்ல இருந்து போஸ்டர சுட அரம்பிச்ருக்காறு விட்ருங்க ,செத்த நாய் மேல எத்தன லாரி ஏறுனா என்ன?.அடுத்தவன் ஐடியா-வ சுட்டு படம் எடுத்துட்டு அதுக்கு சப்-டைட்டில் போட்டு அவன் நாட்டுலே ரிலீஸ் பண்ற விஞ்ஞானிகள் தான் தமிழ் சினிமாவின் முதல் எதிரி .அவனுக சாயம் வெளுத்ததுனா இனி வர்றவன் ஒழுங்கா படம் எடுப்பான்
Raaj,
I dont feel anything happier about your step.
but…
what concerns me about is why to create enemity with big bussiness magnets who can dare 2 do anything for their cause.
We live in India, we have learnt to close our eyes selectively ( say in roads.. or day to day life )…otherwise we may not exist here.
plz do consider it… plz dont involve yourself in these complaining sorts of aspects.
Plz dont mistake me. Its all for your cooler life… ask your dad, he might say the same thing !!!!!
ணா…எனக்கு தோனுவது இதான்…..
ஒரு உண்மையான படைப்பாளி இடமிருந்துதான் கலைத்திருட்டு போன்ற விஷயங்கள் வரும் போது – அதிர்ச்சி அடைய வாய்ப்பிருக்கு….இப்ப Scorseseயோ Herzogயோ ஏன் Aronofskyயோ இந்த மாதிரி செஞ்சா(ஒருவேள) நாம வருத்தப்படுவதில் ஞாயம் இருக்கு…..
நம்மாளுங்களுக்குதான் சினிமா வியாபாரமா ஆகிருச்சே……பின்ன என்ன………..இவுங்ககிட்ட இருந்து இவ்வளவுதான் எதிர்பார்க்கலாம் என்பது என் கருத்து………..
இத ஞாயப்படுத்தி பேசும் நம்மாளுங்கள சொல்லுங்க…..கொடும…….
I guess you may have to extend your list with Director Vijay for copying “I am Sam” for “DeivaThirumagan”..
It was almost a 80% copy of the same story..
thalaivaa, neengal oruthat than intha ulagathil nermayin sigaram, kalakkunga…
dei naathari appadiye athe dress pottu nadicha than da copy nu solanum …velayutham apade ila … i am sam sollu othukiren apadiye copy adichirukanga…..
// எனவே, இந்த கேமின் தயாரிப்பாளர்களான யூபிசாஃப்ட் நிறுவனத்தாருக்கு விரிவாக ஒரு மின்னஞ்சல், சென்ற வாரம் அனுப்பியிருக்கிறேன். //
அட்ராசக்க… யார் பூனைக்கு மணி கட்டுவது என்று காத்திருந்தோம்… நீங்கள் கட்டிவிட்டீர்கள்… ஆனா, இந்த ஹாலிவுட் இயக்குனருங்க மெயில் ஐடி கிடைக்குறது கஷ்டம் இல்லையா…
ஆஹா…
சிங்கம் மறுபடியும் களத்துல எறங்கிடுச்சேய்ய்ய்ய்ய்ய்ய்ய்……
அருமை அருமை… ஒருத்தன் சிக்கினால் போதும்.. மத்தவனெல்லாம் அடங்கிடுவான்…!!
முன்னெல்லாம் நினைப்பேன், யாராச்சும் இப்படி லெட்டர் எழுதமாட்டாங்களான்னு (நமக்கு இங்கிலிஷ் தெரியாதே)
செஞ்சுட்டீங்க… நடவடிக்கை எடுக்கணும். தலைகுனிவு வரணும்!!
Newline cinema நிறுவனத்திற்கு மின்னஞ்சல் அனுப்பிய ஹாலிவுட் பாலா அவர்களுக்கும், திருடர்களின் முகத்திரையை கிழிக்கும் தங்களைப்போன்ற பதிவர்களுக்கும் ஹாட்ஸ் ஆப்!! இனி எவன் திருடி படம் எடுத்தாலும் விடக்கூடாது.
அவர்கள் காப்பி அடித்து படத்தினை ஓட்டுவதைக் கூட மன்னித்துவிடலாம். ஆனால் அதற்காக ஏழு வருசம் தவம் கிடந்தேன். அப்படி இப்படின்னு சொல்லி பண்ணுகிற அலும்புதான் தாங்க முடியல…
தமிழ்சினிமாவின் தலைசிறந்த படைப்பாளிதான் என்று சொல்லிக் “கொல்”கின்றார்கள்…
நண்பரே,
தெய்வத்திருமகள் பார்த்தபின் நீங்கள் பேஸ்புக்கில் வழங்கிய ட்ரெயிலரைப் பார்த்ததும் அதிர்ச்சிதான்… இப்படி காப்பி அடித்து விட்டு கமுக்கமாக சிரித்துக் கொண்டு திரிகிறார்களே என… அடி பின்னி பெடல் எடுத்து விடுங்கள்.
தெய்வத்திருமகளில் விக்ரமின் மிமிக்ரி திறமை அபாரமாக வெளிப்பட்டு இருக்கிறது பாராட்டுக்கள் சீயான் :))
நல்ல விஷயம். அப்படியே அந்த மெயிலயும் ஒரு பதிவா போட்டிருக்கலாம். டெம்ப்ளேட்டா உதவும் இல்லையா ?.
இது குழந்தையும் தெய்வமும் படத்தை பற்றி..
1998 இல் வெளியான The Parent Trap படம் பார்த்தவுடன் தெளிவாக தெரிந்தது, அது 1965 இல் வெளிவந்த குழந்தையும் தெய்வமும் படத்தின் அப்பட்டமான காபி என்று. சரி தான், திருடர்கள் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லை என்று நினைத்துக்கொண்டேன். அப்புறம் தான் தெரிந்தது, இந்த ஆங்கிலப்படம், 1961 இல் வெளியான The Parent Trap (old version) படத்தின் ரீமேக் என்று! திருடர்கள் ரொம்ப நாளாகவே இருக்கிறார்கள்!
பின்னோக்கி அவர்கள் சொன்ன கருத்தை மறுபரிசீலனை செய்யவும்… அந்த மெயிலை பதிவாக போட்டால் அது மற்றவர்களுக்கு ஒரு டெம்ப்லேட்டாக அமையும்…
பின்னூட்டத்தில் உங்களது ஆதரவை நல்கிய அத்தனை நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நான் அனுப்பிய மெயிலை, template போன்று வைத்துக்கொள்ளலாம் என்று யோசனை கொடுத்த நண்பர்களுக்கு… கவலையே வேண்டாம். படத்தைப் பற்றி இரண்டு மூன்று வரிகள்.. காப்பிக்கு ஆதாரம் (புகைப்படங்கள், யூட்யூப் லிங்க் , விக்கிபீடியா தகவல் இத்யாதி ) ஆகியன அந்த மின்னஞ்சலில் இருந்தால் போதுமானது. இதற்கு template தேவையேயில்லை என்பது என் கருத்து. பல அமெரிக்கப் பத்திரிக்கைகளுக்கும் மின்னஞ்சல் செய்துள்ளேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம். மிக்க நன்றி நண்பர்களே .
எனது பாதுகாப்பு பற்றி அக்கறையுடன் பின்னூட்டமிட்ட நண்பர் மின்மினிக்கு (கருணாகரன்) – நண்பரே.. உங்களது அக்கறைக்கு எனது மனமார்ந்த நன்றிகள். இருந்தாலும், என்னால் எனக்குப் பிடித்த படங்களையோ அல்லது கேம்களையோ இப்படி கண்மூடித்தனமாகக் காப்பியடிப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. ஆகவே தான் இந்த முயற்சி. என்னை இவர்களால் ஒன்றும் செய்துவிட முடியாது என்பது என் கருத்து. அப்படியே எதுவாவது நடந்தாலும், I will be back ! 🙂 . . எனது தந்தை, அவரது இளம் பருவத்திலும் இதேபோன்று இருந்தவர்தான். அவரால் ஜெயிலில் தள்ளப்பட்ட திருடன்கள் பலர். ஆனால், நீங்கள் சொல்லியதுபோல், இப்ப்போது கேட்டால், இதெல்லாம் வேண்டாம் என்றுதான் சொல்லுவார். இருப்பினும், நம்மால் முடிந்ததைச் செய்வோம் நண்பரே.. மிக்க நன்றி.
இன்னும் விட்டுடீங்க.
இதை விட கொடுமை Life is beautiful என்ற அருமையான திரைப்பட காட்சிகளை யூத் என்னும் *த் படத்தில் காப்பியடிதிருப்பர்.அதை பார்க்கும் போது எரிச்சல்தான் வந்தது!!
*****************************************************
இப்போ தெய்வ திருமகள்- ஐ ஆம் சாம்
சூர்ய பார்வை – Leon the professional
வாமணன்&லாடம்- Folowing
wasabi-ஜக்குபாய்
Brewsters millions-அருணாசலம்.(இதுக்கு இன்குலீசு படமே நல்லா இருக்கும்!!)
மங்காத்தா ட்ரைலர் ஜார்ஜ் க்லூனிஇன oceans 11 ஐ காப்பியடித்திருக்கிறார்(அதனால் அஜித்து தம்பி க்லூனி ஆகிட முடியுமா என்ன?ஒழுங்கா தமிழ் கத்துக்குங்க தல!!)
அப்புறம் கமல் படம் கேக்கவே வேணாம்!!
இந்த மொத்த காப்பியடித்த தமிழ் படங்களை பற்றி தனி பதிவா எதிர்பார்க்குரேன்.அப்போதான் மக்களுக்கு வெளங்கும்!!
நல்ல பதிவு நண்பரே. இந்த திருட்டு பசங்கள பத்தி நான் கூட எழுத வேண்டும் என்று நினைத்தேன். இதில் மேலும் என்ன கொடுமை என்றால் இந்த திருட்டு பசங்களுக்கு நிறைய பேர் வக்காலத்து வாங்குகிறார்கள்.
kama koduran, charu-vai pathium eluthunga Karundhel..
I’ve been reading ur blog for many years from your old blog. He might be ur friend, but he acted v.badly manner. You have to punish him. U r honest, I hope you will do that one day.
முனி-2 காஞ்சனா திரை விமர்சனம்
மக்கா.. கொஞ்சம் பொறுங்க..
இவர் கொடுத்திருக்கிற முதல் link-ல போய் பின்னூட்டங்களைப் படிங்க..
கருந்தேளோட வண்டவாளம் தண்டவாளம் ஏறீருக்கு..(Prashanth Ramakrishnan பின்னூட்டங்கள்)
இந்த பதிவுல கூட “நிகழ மறுத்த அற்புதம்” தான் எழுதினதா சொல்றார்.. இவரெல்லாம் காப்பி அடிக்கிறதப் பத்தி யார்யாருக்கோ email அனுப்புறாராமா..
முதுகத் தொடைங்க பாஸ்..
நல்ல பதிவு தல… மெயில் அணுப்பியதர்க்கு பாராட்டுக்கள் 🙂
‘தெய்வதிருமகள்’ படத்துல் அவரும் ‘பா பா பா’ பாட்டும் காப்பியே 🙁 இன்று தான் கேபிள் அண்ணா தளத்தில் பார்த்தேன். நல்லா இசை பண்ணி இருக்காங்க-னு சொல்றதுக்கு முன்னாடி பல முறை யோசிக்கணும் போல இருக்கே 🙁
நல்லா இசை பண்ணி இருக்காங்க-னு சொல்றதுக்கு முன்னாடி பல முறை யோசிக்கணும் போல இருக்கே :(////////
.
.
யாரு ஜி வி பிரகாஷ்? நல்ல இசை?ரெண்டும் Antonyms!!ஆயிரத்தில் ஒருவன் சோழர் காலத்துக்கு ராக இசையை பயபடுத்திய அதி மேதாவி!!இதுல இவுருக்கு ஏ ஆர் ரகுமான் மாமா உறவாம்!!யோவ மாமா பெற கெடுக்க நீ ஒருத்தனே போதும் போல!!
இங்கே எதுவும் அசல் இல்லை [மனிதன் உட்பட]… இது போன்ற கலை திருட்டு, உலக அளவில் பரவி கிடப்பது என்பதே உண்மை. தன் குறை.. தன் குற்றம்.. என்று நம்மை நாம் திருத்தி கொண்டால் மட்டுமே புதிய படைப்புகளை கலை உலகத்திற்கு வழங்க முடியும்.
யோவ் கிறுக்கன்…. 🙂 . . போயி ஒழுங்க படிச்சிப் பாருங்க.. அதுலயே க்ளியரா எழுதிருக்கேன் ..:-) . . படிக்காம வந்து இங்க ஒளராதீங்க… நீங்க சொல்ற ஆளுக்கும் அதுலயே பதில் போட்ருக்கேன். அதையும் படிக்கல நீங்க 🙂 .. மொதல்ல உங்க மூஞ்சைத் தொடைங்க. அப்புறம் ஒளரலாம் 🙂
prashanth ramakrishnan அடிச்சதே, நான் கொடுத்துருக்குற சைட்ல இருந்து காப்பி. அதை என்னோட பதில்ல சொல்லிருக்கேன். அதைக்கூடப் படிக்காம, மக்களுக்கு அட்வைஸ் பண்ணுற உங்க மூஞ்சை கொஞ்சம் காட்டுங்களேன் கிறுக்கன் 🙂 . .
என்ன சொல்ல வறீங்க.. ”prashanth ramakrishnan அடிச்ச அதே சைட்ல இருந்துதான் நானும் அடிச்சேன்”னு சொல்ல வறீங்களா..
அந்த பதிவோட ஒரு பின்னூட்டம் விடாம படிச்ச பின்னாடிதான் இத எழுதிருக்கேன்..
எனக்குத் தேவை இங்க உணர்ச்சிவசப்பட்டு உங்கள கொண்டாடுறவங்க அதையும் படிச்சிட்டு முடிவு பன்னனும்ங்கறதுதான்..
நானும் உங்களோட பட விமர்சனங்களுக்காக உங்கள கொண்டாடுவேன்.. ஆனா இந்த மாதிரி “அதிபுத்திசாலி”த்தனத்தை என்னால ஏற்க முடியாது..
யப்பா சும்மா சும்மா கடவுள்(கமல்) இல்லை கடவுள்(கமல்) இல்லைனு பதிவு போட்டுக்கிட்டு இருந்தா டிசம்பர் 6 கடவுள் பேரை சொல்லி பத்வா அறிவிப்பதில் எந்த தயக்கமும் காட்ட மாட்டொம்.
இது எச்சரிக்கை அல்ல கட்டளை… X-(
யோவ் கிறுக்கன் 🙂 . . நான் தெளிவா எங்கிருந்து எடுத்து எழுதிருக்கேன்னு என்னோட பதிவுலயே லிங்க்கு கொடுத்தே சொல்லிருக்கேன். நான் அதை சொல்லாம, நானே எழுதுன மாதிரி பீலா உட்டா நீங்க கேக்குற கேள்வில நியாயம் இருக்கு 🙂 . . அதை விட்டுட்டு, நானே தெளிவா சொல்லிட்ட ஒரு மேட்டரை, நான் சொல்லாத மாதிரியும், நீங்க அதை கண்டுபுடிச்ச மாதிரியும் கமென்ட் போட்ருக்கீங்களே .. அதை சொன்னேன் 🙂 . . அண்ட், என்னை யாரும் கொண்டாடவே தேவையில்லை. அப்புடி கொண்டாடுற மாதிரி நான் எதையும் இதுவரை கிளிக்கவும் இல்லை 🙂 . . நான் ஒரு சாதாரண நபர் . அவ்வளவே
Super idhu polave Kikujiro, The Classic ponra padangalai copy adithavargalai matum vidalama ???
இந்த நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள். இது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் கேள்விப்பட்டால்,குறைந்தபட்சம் ஒரு தர்மசங்கடமும்,லேசான பயமும் வருவது நிச்சயம். கேட்க நாதியில்லை என்கிற தைர்யத்தில்தான் இந்த இழி செயலை செய்கிறார்கள். ஒழிக காப்பி’யர்கள்… ஆனாலும் கொஞ்சம் ஜாக்ரதையாய் இருங்கள்.
மறுபடியும் கமெண்டு போட்ட அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. முடிந்தவரை இந்த அவார்நெஸ் எல்லா இடங்களிலும் பரப்புவோம் . . காப்பியடித்தளைப் பற்றிய அவமானம் எல்லாருக்கும் வரும் வரை பரப்பிக்கினே இருக்கலாம். மிக்க நன்றி நண்பர்களே
Enakku Thamizh thattachu theriyadu, enave mannikkavum…
I agree Tamil directors can remake other language movies, but they should not claim it as their original. If they do insist, then we can go piracy…
Thangal seyalukku nandri…
Ippadikku,
Ungalai pol oruvan…
ந்யூலைன்கிட்ட இருந்து ஏதாவது ரிப்ளை வந்திச்சா?
இதுவரை எதுவும் வரல . இனிமேலும் வரும்னு தோணல
ஏனுங்க சார்,
கமல் என்னும் குளத்தில் கல் எறிந்தீர்கள் பரவாயில்லை.
விஜய் என்னும் குட்டையில் கல்லெறிந்து என் உங்களை ஹீன படுத்துகிறீர்கள்.
இப்போ தான் எல்லா ஹாலிவூட் படங்களும் தமிழில் டமாரம் அடிக்குதே தானாக திருந்திவிட போறானுக நாம நம்ம பொழப்பை கவனிப்போம்.
You should post the message in all the social networks that is related to Newline, 20th century fox, dream works…etc. So some one will get the message to them.
Definitely. DOing that… I’ve sentit to a few magazines (US). Will post it as u said in social networks too. Will do that ..
Try something like http://www.itwofs.com for scenes and movies.
Me too wrote a post after reading this.. http://castrokarthi.blogspot.com/2011/08/blog-post_16.html.. ada evlo neram than summa ve irukaradhu..adhan onnu eluthi vechen 😀
i too sent many mails to the ubisoft team of every country. and automated reply said they are busy in E3. but none other step had happen yet. thamizhaga makkala kaappatha yaarum illaya??????
Congrats Scorpi, If you remember Hindi film Partner was a lift from Hitch and the Hollywood studio tried to sue the producers. I don’t know whether a penalty was made. But see now. They are doing offical remakes STEP MOM, THE ITALIAN JOB. Keep up the good work.
இந்த பின்னூட்டம் கருந்தேளுக்கு மட்டும்:
விஷால் நடிச்ச படம். ஹீரோ பஸ்-ல போகும்போது, ஒரு ரவுடி ஒருத்தன வெட்ட வர்றத பார்த்து, அவன் செய்யுறது தப்புன்னு தெரிஞ்சு, போற போக்குல – தெரியாம – அந்த ரவுடிய அடி பின்னி எடுப்பாரு. அதுக்கு அந்த ரவுடி (யார்னே தெரியாத ஒருத்தன் நாம செய்யுற ஒரு செயலுக்காக நம்மையே அடிக்கிறான்னா நாம அப்படி என்ன தப்பு செஞ்சோம் அப்படின்னு யோசிக்க அவனோட ஈகோ விடாது) ஹீரோவ கொன்னே தீரணும்னு இன்னும் வெறி ஏறி ஊர் ஊரா தொரத்துவாறு (கடைசில தோத்துபோவாரு).
[நான் சொல்ற மாதிரி, எப்பவும் பொறுமையா யோசிக்க சாதாரண மனிதன் ஒன்னும் தெய்வீக கடவுள் இல்ல – அப்படின்னு சொல்லுவாங்க, ஆனா அது தப்பு. ஏன்னா எந்த மனுஷனுக்கும் காலம் கடக்கும்போது தன்னோட முந்தய செயல்கள திரும்பி / திருப்பி யோசிச்சு பார்ப்பாங்க. அப்போ அவங்க செஞ்ச தவறு புரியும், மாத்திக்க முயற்சி செய்வாங்க. ஒருவேளை அவங்க EGO DRIVEN ஆளா இருந்தா மட்டும் தொடர்ந்து தப்பு செய்வாங்க. இந்த நிலை சைக்கலஜிக்கலா இயல்பான மனித மன நிலையிலிருந்து பிறழ்ந்தது].
ஆனா அந்த படத்துல, ரவுடி பல நாட்களாகியும் தன் செயலப்பத்தி யோசிக்காம தன்னோட ஈகோவின் கட்டளைப்படியே ஹீரோவ தொரத்துவாறு (அதுனால தான் அவரு ரவுடி / தவறான ஆள்!)
அந்த மாதிரி நீங்க தெரிஞ்சே கமல் அப்படிங்கிற திருடரு மேல போட்ட அடி, உங்களுக்கே தெரியாம “கமல் ரசிகர்கள் (அல்லது கமல் பக்தர்கள்)” அப்படிங்கிரவங்க மேலயும் சேத்து விழுந்திடுச்சு. அதுதான் – அவங்க ஹீரோவோட திருட்டுத்தனம், மாட்டிகிட்டோம்ங்கிற வெக்கம் எல்லாம் சேர்ந்து, குரோதமா மாறி உங்களை தொறத்துது.
இதுல கொடுமை என்னன்னா ஈகோவோட பாதிப்புல பின்னூட்டம் போடுறவங்க (சைக்காலஜிகல் புத்திசாலியா இருந்தா) நீங்க தெள்ளத்தெளிவா சொன்ன விஷயத்தையும் “திரிச்சு சொல்லி” திருப்பி அடிக்கிறது. அதுதான் கிள்ளிவிட்டுட்டு தூங்குற மாதிரி நடிக்கிறது!. அவங்கள எழுப்பவே முடியாது. உதாரணத்துக்கு கிறுக்கன் அவர்கள் பிரஷாந்த் ராமகிருஷ்ணனோட பின்னூட்டத்த வச்சு தெரிஞ்சே குறுக்கு சால் ஓட்டினது. அப்படிப்பட்ட “கொக்கி பின்னூட்டங்களினால” உங்களுக்கு சலிப்பு / எரிச்சல் வரும் அல்லது உங்களோட ஈகோவும் கோவமா எந்திரிக்க ஆரம்பிக்கும். முடிஞ்ச வரை அப்படிப்பட்ட கொக்கிகளில் சிக்காம இருங்க.
மத்தபடி உங்களோட மூலாதார ” நிகழ மறுத்த அற்புதம்” ரொம்ப நல்ல பதிவு. நீங்க சொன்னதில சில படங்கள் அட்டை காப்பி அல்ல, தாக்கம் மட்டுமே. இருந்தாலும் நூறு படம் எடுக்கும் இடத்தில் வெறும் பத்து படம் வந்தாலும் ஒரிஜினலா வரணும்கிரதுல மாற்று கருத்து இல்ல. ஆனா – வேறு படத்தின் தாக்கமா இருந்தாலும் தன்னோட சொந்த மூளை-ல உதிச்சதா பீத்திக்கிறது மன்னிக்க முடியாத குற்றம். கமலோ, ரஜினியோ – யார் செஞ்சாலும்.
வெகு சில நேரங்களில் – ஒரிஜினலின் தாக்கத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, தனது சொந்த திறமையினால ஒரு புதிய படம் மாதிரி படங்கள் கொடுத்ததில பாராட்டப்பட வேண்டியவர்கள், பொல்லாதவன் – வெற்றி மாறன், நந்தலாலா – மிஷ்கின், மயக்கம் என்ன – செல்வராகவன்.
பல வருசங்களுக்கு முன்னாடியே, சினிமா துறையில யாராவது இப்படி கமலோட டவுசர கலட்டி இருந்தாங்கன்னா, இப்போ இயக்குனர் விஜய், கஜினி முருகதாஸ், மாற்றான் கேவி ஆனந்த் எல்லாரும் வந்திருக்க மாட்டங்க. தமிழ் சினிமாவும் நாசமா போயிருக்காது. இதே கமலும் ரஜினியுமே அவங்களோட உண்மையான நடிப்பு திறமையினால இன்னும் உலக அளவுல ஜோலிச்சிருப்பாங்க.
Neeram film is a copycat of German film Run Lola Run 1998.
Vellai Roja is a copycat of Third Man,Madura Sampavam is a copycat of Wild thing,21am pulikesi is a copycat of The King and the Moking Bird.
“Hitman” game போஸ்டர “நிமிர்ந்து நில்” படத்துக்கு காபி அடிச்சிட்டாங்களே …