Tesis (1996) – Spanish
அலெஹாந்த்ரோ அமினாபார் (Alejandro Amenábar) பற்றி உலக சினிமா ரசிகர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். The Sea Inside என்ற அற்புதமான ஸ்பானிஷ் படத்தைக் கொடுத்தவர். ஆங்கிலத்தில் இவர் இயக்கிய The Others படமும் ஒரு நல்ல த்ரில்லர். தனது திரைவாழ்க்கையின் துவக்கத்தில் இவர் இயக்கிய முதல் முழுநீளப் படம் ஒன்றையே இன்று பார்க்கப் போகிறோம். இந்தப் படமும் ஒரு த்ரில்லரே.
Snuff படங்கள் பற்றி இனிமேல் இந்தத் தளத்தில் எந்த விளக்கமும் கொடுக்கத் தேவையில்லை என்ற அளவுக்கு அவற்றைப் பற்றி ஏற்கெனவே நிறைய எழுதியாகிவிட்டது. A Serbian Film விமர்சனத்தில். அதற்கும் முன்பு, 8MM படத்தைப் பற்றி எழுதுகையிலும் இவற்றைப் பற்றிப் பார்த்தாகிவிட்டது. இருந்தாலும், புதிய நண்பர்களுக்காக – ஸ்னஃப் படங்கள் என்பன, நீலப்படங்களில் ஒரு வகை. கலவியில் ஈடுபடும்போதோ அல்லது இறுதியிலோ உண்மையிலேயே அதில் ஈடுபடும் பெண்களை சித்ரவதை செய்து கொன்று அதையும் படம்பிடிப்பது. மிக ரகசியமாக உலகெங்கும் நடக்கும் தொழில் இது. மிக அரிதாக அங்கங்கே இப்படங்கள் எடுக்கப்படுவதாக இணையம் சொல்கிறது.
ஸ்பெய்ன் நாட்டின் தலைநகர். மாட்ரிட் பல்கலைக்கழகம். அங்ஹெலா (Ángela) திரைப்படத் தொழில்நுட்பம் படிக்கும் பெண். தனது இறுதியாண்டு ஆய்வறிக்கைக்காக, ஒலி-ஒளி வன்முறை என்ற தலைப்பைத் தேர்ந்தெடுக்கிறாள். எல்லாரும் தேர்ந்தெடுக்கும் சுலபமான தலைப்புகளாக இல்லாமல், சிக்கலான இத்தலைப்பைத் தேர்ந்தெடுக்கும் அங்ஹெலாவுக்கு, ஆய்வறிக்கையைத் தயார் செய்ய அதீத வன்முறையை பிரதிபலிக்கும் படங்கள் தேவைப்படுகின்றன. தனது கல்லூரியிலேயே அவ்வகையான படங்கள் நூலகத்தில் இருப்பது அவளுக்குத் தெரியும். ஆகவே, ஆய்வறிக்கையில் தனக்கு உதவும் ப்ரொஃபஸர் ஃபிகேராவிடம் கோரிக்கை வைக்கிறாள். அவராலும் பிற பேராசிரியர்களாலும் மட்டுமே அந்த நூலகத்துக்குச் செல்ல இயலும். பரிசீலிப்பதாக ஃபிகேரா சொல்கிறார்.
அதேசமயம், தன்னுடன் படிக்கும் சக மாணவன் செமா (Chema – செ.மா அல்ல), இப்படிப்பட்ட கொடூரமான படங்கள் பலவற்றை அவனுடன் வைத்திருப்பதும் அங்ஹெலாவுக்குத் தெரியும். ஆகவே அவனிடம் பேசுகிறாள். இயல்பிலேயே கேலியாகப் பேசும் செமா, அங்ஹெலாவை கேலிசெய்து அனுப்பிவிடுகிறான். ஆனால் அதன்பின் அவனாகவே அவளிடம் வந்து, அவனது வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான். அங்கே, அவனது வீடே ஒரு இருண்ட வதைக்கூடம் போலக் காட்சியளிப்பதை அங்ஹெலா பார்க்கிறாள். அவளை அமரவைக்கும் செமா, தன்னிடம் இருப்பதிலேயே கொடூரமான நிஜப்படம் என்று சொல்லி ஒரு வீடியோ காஸெட்டை வீஸீஆரில் போட்டு ஆன் செய்கிறான்.
கல்லூரி. பேராசிரியர் ஃபிகேரா, தனது மாணவி அங்ஹெலாவுக்கு உதவும் பொருட்டு நூலகத்துக்குச் செல்கிறார். அது ஒரு பெரிய கிடங்கு போல இருக்கிறது. ஆயிரக்கணக்கில் திரைப்படங்கள். அங்கே ஒரு தனி அறை, இப்படிப்பட்ட கொடூரமான படங்களுக்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அந்த அறைக்குச் செல்லும்போது நூலகத்துக்குள் யாரோ வந்துவிடவே, ஓடி ஒளிகிறார் ஃபிகேரா. அந்த இடத்தில் தர்மசங்கடமான வீடியோக்களுக்கு மத்தியில் அவரை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதே காரணம். காலடிச்சத்தம் தன்னைக் கடந்துசென்று மறைந்தபின் வெளிப்படும் ஃபிகேரா, அந்தத் தனியறைக்குள் செல்கிறார். அவரது கண் முன்னர் பல காஸெட்டுகள் இருக்கின்றன. அதில் ஏதோ ஒரு காஸெட்டை அவசர அவசரமாக உருவிக்கொண்டு, அங்கிருந்து அகல்கிறார் ஃபிகெரா. கல்லூரியின் பல திரையரங்குகளில் ஒன்றுக்குச் சென்று, பெரிய திரையின் முன் அமர்ந்து, அத்திரைப்படத்தைப் போடுகிறார்.
செமா வீட்டில் இருக்கும் அங்ஹெலா, அவனிடம் இருந்த அந்தத் திரைப்படத்தைப் பார்த்துவிட்டிருக்கிறாள். ஆனால், அவளுக்கு இன்னமும் வன்முறை கலந்த நீலப்படங்கள் தேவை என்று செமாவிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்து அகல்கிறாள். மறுநாள் கல்லூரிக்கு வரும் அங்ஹெலா, தனது பேராசிரியரைத் தேடி, திரையரங்கில் கண்டுபிடிக்கிறாள். முதல் வரிசையில் திரையைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருக்கும் ஃபிகேராவின் தோளைத் தொட்டுத் திருப்புகிறாள்.
இப்படி ஆரம்பிக்கும் இந்தப் படத்தில், சஸ்பென்ஸுக்குக் குறைவே இல்லை. படம் நெடுக வரும் செமா, அங்ஹெலாவுக்குப் புதியதாக அறிமுகமாகும் இன்னொரு மாணவன் பாஸ்கோ, கல்லூரியில் வேலை செய்யும் மற்றொரு பேராசிரியர் கேஸ்ட்ரோ, பாஸ்கோவின் முன்னாள் காதலி யோலாண்டா ஆகியவர்களே இப்படத்தின் பிற கதாபாத்திரங்கள். இந்த ஐவருக்கும் இடையே பொதிந்துள்ள ரகசியங்கள் என்னென்ன என்பதே இப்படத்தின் கதை. இந்தக் கதாபாத்திரங்களுக்கு இடையே வரும் அங்ஹெலா, அதுவரை சரியாகச் சென்றுகொண்டிருந்த ஒரு இழையை அறுத்துவிடுகிறாள். அதன்பின் நிகழும் பிரச்னைகளை அவளால் சமாளிக்க முடிந்ததா?
இந்தப் படத்தைப் பொறுத்தவரை, இதன் நீளம், இரண்டு மணி நேரங்கள். படம் எடுக்கப்பட்டது 1996ல் என்பதால், அக்காலத்திய உடைகள், டிவி, வீஸீஆர், பழைய வீடியோ கேமராக்கள் ஆகியன இப்படத்தின் பின்னணி முழுக்க வரும் விஷயங்கள். இதுதவிர, கிட்டத்தட்ட படம் முழுதுமே மாட்ரிட் கல்லூரி என்ற இடத்திலேயே நடக்கிறது. படத்தில் நிலவும் சஸ்பென்ஸ், படத்தின் பாதியிலேயே சற்றே விளக்கப்பட்டாலும், இறுதிவரை செல்லும் ஒன்றாகவே இருக்கிறது.
இந்தப் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு மின்சார ரயில் விபத்து நடக்கிறது. அது ஏன்? கதாநாயகி அங்ஹெலாவின் குணம் அதில் புலப்படுகிறது. படம் ஆரம்பித்த முதல் நிமிடமே கதை தொடங்கிவிடுவதன் அறிகுறி அது. இறுதியில் சற்றே தொய்வடைவதுபோல் இருந்தாலும், இப்படம் ஒரு தரமான த்ரில்லர் என்பதில் சந்தேகம் இல்லை.
Tesis என்ற ஸ்பானிஷ் வார்த்தைக்கு, தீஸிஸ் (ஆராய்ச்சி) என்று அர்த்தம்.
இதோ Tesis படத்தின் ட்ரெய்லர்.
பழைய ட்ரெய்லரை தூக்கிவிட்டு சப் டைட்டில் உள்ள ட்ரைலரை போட்டாயிற்று
Download stated. Will comment you after watching:)
தல கொஞ்சம் ப்ளூரேல கிடைக்குற மாதிரி படம் போடுங்க தல . பைரேட்பேல டிவிடி ரிப்பு கொஞ்சம் அலங்கோலமா இருக்கு 🙁
உங்கள் பதிவை வாசிக்கும் முன்பு படத்தை பார்த்துவிடுவோம் என்று பார்க்கத் தொடங்கினேன். 76ஆம் நிமிடத்தில் பவர் கட்டால் தடங்கல் வந்தது. பிறகு அந்த வீடியோவை 76-ஆம் நிமிடத்தில் திறக்க முடியவில்லை. இன்னொரு வீடியோவைத் திறந்து 76ஆம் நிமிடத்துக்கு மேல் ஸப்டைட்டில்ஸ் இல்லாமல் பார்த்தேன். நீங்கள் சொல்லி இருப்பது போல் கடைசிவரை த்ரில்லர்தான்.
||உலகத்தில் என்னென்னவோ நடக்கிறது. ‘அறிவார்த்தமாக அறிந்து கதைப்பதென்றால் சரி; அனுபவார்த்தமாக என்றால் ஆளை விடு’ என்றெல்லாம் தப்பிக்க முடியாது. உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் நடக்கிறது என்றால், ஒருநாள் இல்லை இன்னொரு நாள் உன்னையும் பீடிக்க வாய்ப்புண்டு. விழிப்போடு இருந்தால் தப்பிக்கலாம்||
இது எனக்குக் கிட்டிய செய்தி. நன்றி!
என் கமென்ட்ட காணோம் ??
இருந்தாலும் மறுபடியும் டைப்புகிறேன்..
விமர்சனம் படம் பார்க்க தூண்டுகிறது…..
—
அப்பறம், இதுமாதிரி snuff வகையான டெக்னிகல் சமாச்சாரங்கள் வரும் போது அதுபற்றி உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது பதிவு எழுதி இருந்தால், அதற்கும் லிங்க் கொடுக்கலாமே ?
(இந்த ஐடியா குடுத்தது பாலாதான்…ஆனா ஏன்னு புரியல)
just watched now!! Super Movie Thanks for Review!!
தேளு இப்போதான் நான் தண்ணி அடிச்சுகிட்டே ‘war of lords’ படம் பாத்துட்டு இருந்தேன்…. மச்சி நீ இந்த படத்த பத்தி எழுதி இருக்கியா… ‘lord of the rings’ படத்துல அரகான் ‘character’ல nicholas cage நடிச்சு இருந்தா (He got an offer for that character, I know that by reading your article) நல்லா இருந்து இருக்காதுங்கின்ற உங்களோட ‘opinion’ சரிதான்,,, ஆனா இந்த படத்துல supera perform பண்ணி இருக்காரு… நீங்க முன்னாடியே பாத்து இருப்பீங்க… ஆனா அத பத்தி எழுதி இருகிங்கலானு தெரியல.. இருந்தா லிங்க தாங்க… இல்லாட்டி அந்த படத்த பத்தி எழுது ராசா… because i like to read your opinion.. your commentary is best among the tamil bloggers who wrote about cinema…. no offence and its not a joke…
கேரளாக்காரன் – 🙂 ஹி ஹி
@ சாகசன் – இதோட டிவிடி கிடைக்கிறதுக்கே நான் தலையால தண்ணி குடிச்சிட்டேன் நைனா… புளுரேவெல்லாம் இந்தப் படத்துக்கு நஹி.. இனிமே கொஞ்சம் புச்சா எழுத பாக்குறேன்
@ ராஜசுந்தரராஜன் – தலைவரே.. உங்க கமெண்டுக்கு மிக்க நன்றி. இது சம்மந்தமா FBல நீங்க போட்டது இன்னும் அருமை.
@ கொழந்த – உங்க கமெண்டே வரல. .தேடிப் பார்த்துட்டேன். ஆமா…பாலா இந்த ஐடியாவ உங்களுக்கு ஏன் கொடுத்தாரு? அவரு நேரா என்னாண்டயே சொல்லி இருப்பாரே? உங்க டொயிங் டொயிங் வேலைக்கு நான்தான் கிடைச்சேனா?
@ Unknown – thanx dude 🙂
@ Benoit Mandelbrot – தலைவா… பிரெஞ்சு கணித மேதையே இங்க வந்து கமென்ட் போட்டுருக்கானுன்னு நினைச்சிட்டேன் (ஒருவேளை அவருதானோ).. நன்றி தலைவா. மேலே போஸ்ட்ல பார்த்தீங்கன்னா, 8MM படத்து பேல க்ளிக் பண்ணாலே அந்த என்னோட போஸ்ட் வந்திரும். அதையும் படிச்சிப் பாருங்க. உங்க கருத்துக்கு என்னோட நன்றிகள்.
தல உங்க விமர்சனம் மிக அருமை..
உங்க 8mm விமர்சனம் படிச்சிட்டு தான் நான் உலக படங்களை பார்க்க ஆரம்பித்தேன்.
இன்று நானும் ஒரு மிக சுமாரான பதிவனாக ஆனதிற்கு உங்கள் வலைத்தளம் ஒரு மிகப்பெரிய காரணம்..
படம் பார்க்கவில்லை..தல..
ஓரிரண்டு நாட்களில் பார்த்து கருத்து சொல்கிறேன்.
மிக்க நன்றி தலைவா… நான் ஒரு சுமாரான பதிவன் ஆனதுக்கு வலையுலகில் இருந்த நல்ல பதிவர்களும் ஒரு காரணம் (ஹாலி பாலி போல) 🙂
@Rajesh : திருப்பி ஃபார்முக்கு வந்துருக்க மாதிரி தெரியுது தல ? செம்ம :))) . அல்லாரோட கமெண்டுக்கும் ரிப்ளை பண்ணிங்களே அத சொல்லுறன் 🙂
சாகசன் – ஆமா பாஸ்… இனிமே ஒருத்தரையும் விடுறதில்ல. பழையபடி எல்லாருக்கும் பதில் போட்டுற வேண்டியதுதான் 🙂
I don’t understand the significance of the first accident… can you shed some light on it?