Maya (2015) – Tamil
September 22, 2015
/ Tamil cinema
கட்டுரையில் மிகச்சில ஸ்பாய்லர்கள் இருக்கலாம். ஒரு திகில் படத்தின் வேலை என்ன? ஆடியன்ஸை அவ்வப்போது பயமுறுத்திக்கொண்டே இருக்கவேண்டும். எத்தனைக்கெத்தனை இத்தகைய த்ரில் மொமெண்ட்கள் படத்தில் இருக்கின்றனவோ, அத்தனைக்கத்தனை ஆடியன்ஸ் அந்தப் படத்தோடு ஒன்றமுடியும். ‘ஜம்ப்ஸ்’ என்று சொல்லக்கூடிய இத்தகைய திடும் தருணங்கள் மாயா திரைப்படத்தில் ஆங்காங்கே சரியாகவே...