Assassin's Creed 3 wallpaper

Assassin’s Creed 3 – PS3 game review

by Karundhel Rajesh January 7, 2013   Game Reviews

இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்னர் பிற Assassin ‘s Creed கேம் விமர்சனங்களை இங்கே படிக்கலாம். முதன்முறையாக இந்த கேம்களைப் பற்றி இங்கே படிக்கும் நண்பர்களுக்கு உதவியாக இருக்கும்.

1. Assassin’s Creed 1 Review
2. Assassin’s Creed 2 Review
3. Assassin’s Creed: Brotherhood Review
4. Assassin’s Creed: Revelations PS3 review[divider]

நமது தளத்தில் கேம் ரிவ்யூக்களைப் படித்துவரும் நண்பர்களுக்கு அசாஸின்’ஸ் க்ரீட் கேம்களைப் பற்றித் தெரிந்திருக்கும். புதிதாகப் படிக்கும் நண்பர்களுக்காக ஒரு சிறிய இன்ட்ரோ:

கொலையாளிகளின் குழுமம் ஒன்றைச் சேர்ந்த சில மனிதர்களின் கதையே இந்த கேம். முதல் பாகத்தில் அல்-தாய்ர் என்ற துருக்கியைச் சேர்ந்தவனே ஹீரோ. இந்தக் கதை நடப்பது இங்க்லாண்டுக்கும் முஸ்லிம் நாடுகளுக்கும் புனிதப்போர் நடந்த காலத்தில். டெம்ப்ளார்கள் என்று அழைக்கப்பட்ட குறிப்பிட்ட இயக்கத்துக்கு எதிராக எழும் கொலையாளி இவன். இவனைச் சேர்ந்தவர்கள் ‘Assassin’s Guild’ என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். இந்த கேமின் இரண்டாம் பாகமான ‘Assassin’s Creed 2’வில், ஐரோப்பாவைச் சேர்ந்த எஸியோ என்ற இளைஞன் ஹீரோ. இவனும் அதே கொலையாளிகள் இயக்கத்தைச் சேர்ந்தவன். இதற்கடுத்த ‘Assassin’s Creed: Brotherhood’ கேமில் இந்த எஸியோ தனக்காக ஒரு படையைத் திரட்டுவதைப் பற்றி இருக்கும். கடைசியாக வந்த Assassin’s Creed:Revelations கேமில், எஸியோ, தனது மூதாதையரான அல் -தாய்ர் சென்ற இடங்களுக்கெல்லாம் பயணப்பட்டு சில ரகசியங்களைக் கண்டுபிடிப்பதைப் பற்றி இருக்கும். இவைகளைப் பற்றி மேலே இருக்கும் லிங்க்களைக் க்ளிக்கி விபரமான பின்னணிகளைத் தெரிந்துகொள்க.

Assassin’s Creed 3யின் கதை

வழக்கமான அஸாஸின் கேம்களைப் போல், இந்த கேமும் டெஸ்மாண்ட் என்ற தற்காலத்தைச் சேர்ந்த இளைஞனிடம் தொடங்குகிறது. இந்த இளைஞன், அல்-தாய்ர் மற்றும் எஸியோவின் வம்சாவளியில் மிஞ்சியவன். இவனை ‘Animus’ என்ற இயந்திரத்தில் இணைத்து, இவனது மரபுவழி ஜீன்களின் மூலம், அமெரிக்காவில் வாழ்ந்துவந்த Connor என்ற இவனது மூதாதையரின் விபரங்களை அறிந்து, அவரது வாழ்க்கையில் அவர் செய்த சாகஸங்களை மறுபடி நிகழ்த்தி, அதன்மூலம் பூமியில் எங்கோ ஒளித்துவைக்கப்பட்டுள்ள ஏலியன்களின் கோயிலின் மூலம் 2012ல் நிகழப்போகும் பேரழிவில் இருந்து பூமியைக் காப்பதே டெஸ்மாண்டின் நோக்கம்.

வழக்கமான அஸாஸின்’ஸ் க்ரீட் கேம்களில் இல்லாத புது விஷயமாக, டெஸ்மாண்டின் மூதாதையர் கான்னரின் தந்தையும் இந்த கேமில் இடம் பெறுகிறார். முதலில் அவரிடமிருந்து ஆரம்பிக்கும் இந்த கேம், ஐரோப்பாவில் இருந்து ஹேய்தம் கென்வே (Haytham Kenvay) என்ற டெம்ப்ளார்களைச் சேர்ந்த முக்கியஸ்தர் எப்படி அமேரிக்கா வருகிறார் என்பதில் தொடங்கி, அமெரிக்காவில் அவரது நோக்கம் என்ன என்பதை நமக்குச் சொல்லும் கேமாக இது இருக்கிறது. இந்த ஹெய்தம் என்பவர் அமெரிக்காவில் பழங்குடிகளான செவ்விந்தியர்கள் வசிக்கும் நிலத்தில் ஒளிந்திருக்கும் ஏலியன்களின் கோயில் ஒன்றைக் கண்டுபிடிக்கவே அமேரிக்கா வருகிறார். அப்போது அந்தச் செவ்விந்தியர்களில் ஒரு பெண்ணுடன் பழகி, காதலித்து, ஒரு மகனையும் கொடுத்துவிட்டு செல்கிறார். அந்த மகனின் பெயர் – கான்னர். இவனது உண்மையான செவ்விந்தியப் பெயர், ரடூன்ஹகய்டூன் என்பது.  இந்தப் பெயரை ஒவ்வொரு முறையும் உச்சரித்து மூளை குழம்பிவிடக்கூடாது என்பதற்காக கான்னர் என்ற பெயர் நமது ஹீரோவுக்கு வழங்கப்படுகிறது.  இந்த கான்னரின் செவ்விந்திய குடியிருப்பு, ஹேய்தமின் கீழிருப்பவர்களால் எரிக்கப்படுகிறது – காரணம் – அங்கே இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஏலியன்களின் கோயிலைத் தேடும் முயற்சி. தனது குடியிருப்பை எரித்து, தாயைக் கொன்றவர்களைத் தேடி , பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்கப் புரட்சியின் பின்னணியில் பாஸ்டன் மற்றும் ந்யூயார்க் நகரங்களில் நடக்கும் பலவிதமான கான்னரின் சாகசங்களே மீதிக்கதை.

அமெரிக்கப் புரட்சி என்பது, இங்க்லாண்டின் ஆதிக்கத்தை எதிர்த்து அமெரிக்காவின் பதிமூன்று மாகாணங்கள் நடத்திய போர் என்பதும், இந்தப் போரில் தலைமை வகித்தது ஜார்ஜ் வாஷிங்டன் என்பதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுதந்திரப் பிரகடனம், தாமஸ் ஜெஃப்ஃபர்ஸனால் 1776ல் எழுதப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 4ம் தேதி அப்போதைய பதிமூன்று மாகாணங்களின் கூட்டமைப்பு (காங்கிரஸ்), இந்தப் பிரகடனத்தை அமல்படுத்துவதாக அறிவித்தது. ஆகையால் அந்தத் தேதியே அமெரிக்க சுதந்திர தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதை ஏற்காத இங்க்லாண்ட், ஜார்ஜ் வாஷிங்டனின் படையின் மீது போர் தொடுத்தது. இந்தப் போர் நடந்த காலகட்டம் – 1775 – 1783. இந்தப் பின்னணியில்தான் கான்னரின் சாகசங்கள் நடைபெறுகின்றன. இந்தக் காலகட்டத்துக்கு பல வருடங்கள் முன்னர், ஜார்ஜ் வாஷிங்டன் ஒரு போர்வீரராக மட்டும் இருந்தபோது, கான்னரின் தந்தை ஹேய்தமின் சாகசங்கள் முதலிலேயே இந்த கேமில் நடைபெற்று விடுகின்றன. அமெரிக்க சுதந்திரப்போரில் பங்குபெற்ற பல கதாபாத்திரங்கள் இந்த கேமில் வருகிறார்கள் – சென்ற பாகங்களில் லியனார்டோ டாவின்சியை நாம் பார்த்ததுபோல்.

இந்த கேமை விளையாடினாலே இந்த சரித்திரம் முழுவதும் உங்களுக்கு மனப்பாடம் ஆகிவிடும் என்பது துணுக்குச் செய்தி. எனக்கு ஆகிவிட்டது.

கேமின் சிறப்பம்சங்கள்

The Beautiful Frontier

The Beautiful Frontier

இந்த கேமின் முந்தைய பதிப்புகளைப் போலவே, இந்த க ஏமும் ஒரு free roaming கேம். அதாவது, இந்த கேமில் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடமாடலாம். மொத்தம் நான்கு மிகப்பெரிய நிலப்பரப்புகள் இந்த கேமில் உள்ளன.  இதற்கு முந்தைய கேம்களில் வந்த இடங்களை விட இவை மிகப்பெரியவை. Homestead என்பது முதல் நிலப்பரப்பு. இது, ஹீரோ கான்னரின் வீடு இருக்கும் பகுதி. இந்த வீட்டைச் சுற்றிலும் பல்வேறு தொழில் சார்ந்த ஆலைகள் இருக்கின்றன. இந்த ஆலைகளில் உருவாகும் பொருட்களின் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இந்த மக்களில் பலரையும் கேம் செல்லச்செல்ல நாம் சந்திக்கிறோம். அவர்களுக்கு நேரும் பிரச்னைகளை கான்னர் முறியடிப்பதன்மூலம், கான்னரின் பண்ணையில் வந்து தங்கிக்கொண்டு ஆலைகளில் பணிபுரிய இவர்கள் ஒத்துக்கொள்கிறார்கள். இதன்மூலம் பல ஆலைகள் உருவாகின்றன.

இரண்டாவது நிலப்பரப்பு, Frontier என்று அழைக்கப்படுகிறது. அமெரிக்காவின் எல்லைப்பகுதி. இது ஒரு மிகப்பெரிய காடு. இங்குதான் செவ்விந்திய பூர்வகுடிகளின் இருப்பிடம் அமைந்துள்ளது. கான்னர் வளர்ந்தது இந்த இடத்தில்தான். செவ்விந்தியர்களின் சிறப்பம்சம் வேட்டையாடுவது என்பதால், கான்னரின் சிறுவயதிலிருந்தே அவனுக்குப் பல்வேறு வேட்டையாடும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதில் தேர்ச்சியடைந்து, விலங்குகளை வேட்டையாடி அவற்றின் தொலை உரித்தெடுக்கும் கலையில் கான்னர் வல்லவனாகிறான். இந்த எல்லைப்பகுதியில் பல வேட்டையாடும் பாசறைகள் இருக்கின்றன. ஒவ்வொரு பாசறையிலும் அந்தந்த இடத்தில் மக்களுக்கு இன்னல் விளைவிக்கும் ஒரு மிருகத்தைப் பற்றிய செய்தி கிடைக்கிறது. அந்த மிருகத்தைக் கொன்று அந்தப் பகுதி மக்களின் பிரச்னைகளை விடுவிப்பது கான்னரின் வேலை. இவையெல்லாம் இந்த கேமின் பிரதான கதையிலிருந்து விலகி, இந்தப் பகுதிக்கு கான்னர் வரும்போது செய்யக்கூடிய secondary assignments.

இந்த கேமின் சிறப்பம்சம் என்னவெனில், இந்தக் காட்டில் கான்னரால் மரங்களின் மீது தாவித்தாவி பயணிக்க முடியும் என்பதே. இது, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு பயணிக்கக்கூடிய நேரத்தை சுருக்குகிறது. கூடவே, இப்படிக் கற்பனை செய்துபாருங்கள். உங்கள்முன் ஒரு பிரம்மாண்டமான காடு இருக்கிறது. அந்தக் காட்டில் பல்வேறு மிருகங்கள் இருக்கின்றன. காட்டுக்குள் நீங்கள் நடமாடும்போது எந்நேரமும் இந்த மிருகங்கள் உங்களைத் தாக்கக்கூடும். மட்டுமல்லாமல் இரவில் நிலா வெளிச்சத்தில் காட்டுக்குள் மனம் போன போக்கில் பயணிக்கவும் உங்களால் முடிகிறது. அப்போது பின்னணியில் பல சத்தங்கள். காட்டுக்குள் ஆங்காங்கே எதிரி பிரிட்டிஷ் படைகளும் வீரர்களும் அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களையும் கொல்ல வேண்டும். காட்டில் ஆங்காங்கே மர்மங்களும் உண்டு. Sleepy Hollow படத்தில் வருவதுபோன்ற தலையில்லா குதிரைவீரன் ஒருவனைக் கண்டுபிடிப்பது இந்த மர்மங்களில் ஒன்று.

எப்படி இருக்கும்? எனக்கு இந்தக் காட்டில் நடமாடுவது அட்டகாசமான அனுபவமாக இருந்தது.

இந்தக் காட்டுக்குள் ஆங்காங்கே மரங்களின் உச்சியில் இருக்கும் அத்தனை இறகுகளையும் கைப்பற்ற வேண்டும். இது இன்னொரு mission. காட்டுக்குள் இருக்கும் அத்தனை missionகளையும் முழுமையான 100% synchronizationனில் முடிக்க எனக்கு ஆன அவகாசம் – இரண்டு மூன்று வாரங்கள்.

மூன்றாவது நிலப்பரப்பு – பாஸ்டன் நகரம். மக்கள் நிறைந்த நகரம் இது. இங்கும் பலவிதமான புதையல்கள், மிஷன்கள், செய்யவேண்டிய கொலைகள், அரசுப்படைகளிடமிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய வேலைகள் ஆகியன இருக்கின்றன. கதையின் பிரதான போக்கிலிருந்து விலகி செய்யவேண்டிய வேலைகள் இவை. இப்படி ஒவ்வொரு மனிதனையும் காப்பாற்றுகையில் அவன் (அல்லது அவள்) கான்னரின் படையில் சேருவான். இப்படி கான்னருக்கென்றே சிறிய படை உருவாகிறது. போர்வீரர்கள் அதிக எண்ணிக்கையில் கான்னரைத் தாக்கும்போது இவர்களை உதவிக்கு அழைக்கலாம்.

நான்காவது நிலப்பரப்பு – ந்யூயார்க் நகரம். இங்கும் மேலே சொன்ன அத்தனையும் பொருந்தும்.

கான்னரின் ஆயுதங்கள் & Moves

சென்ற கேம்களைப் போலவே இதிலும் கதையின் நாயகன் கான்னருக்கு பல ஆயுதங்கள் கிடைக்கின்றன. எப்போதும் கையில் ஒளிந்திருக்கும் கூடான சிறிய கத்தியைத் தவிர, கான்னரிடம் ஒரு செவ்விந்திய வில் இருக்கிறது. கூடவே செவ்விந்திய கோடரி ஒன்றும். இதைத்தவிர பல்வேறு ஆயுதங்களை கடைகளில் கான்னரால் வாங்கமுடியும். எதிரிகளைத் தாக்குகையில் அவர்கள் கையிலிருக்கும் ஆயுதங்களைப் பிடுங்கிக்கொள்ளவும் முடியும். இந்த கேமில் புதிய மூவ் ஒன்று – ஒரே நேரத்தில் இரண்டு எதிரிகளை தாக்கிக் கொல்லும் மூவ் – எனக்குப் பிடித்தது. அதேபோல், பாஸ்டனிலும் ந்யூயார்க்கிலும் மறைந்திருக்கும் ஏழு பிரிட்டிஷ் கோட்டைகள் உண்டு. இந்தக் கோட்டைகளையும் கண்டுபிடித்து, கோட்டையின் கமாண்டரைக் கொன்று, கோட்டையை அமெரிக்கப் படைகளிடம் ஒப்புவிக்க வேண்டும். இதுவும் ஒரு சுவாரஸ்யமான மிஷன்.

இந்த ஆட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் – செடிகொடிகளுக்கு இடையே மறைந்து செல்லக்கூடிய கான்னரின் மூவ். இதனால் பல நன்மைகள் இருக்கின்றன.

நான் இந்த முறை எப்படி இந்த கேமை ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றால், ஒவ்வொரு இடத்திலும் இருக்கும் அத்தனை மிஷன்களையும் முடித்து, அத்தனை புதையல்களையும் எடுத்து, அந்த இடத்தை சுத்தமாகத் துடைத்தெடுத்துவிட்டுத்தான் அடுத்த இடத்துக்கு செல்கிறேன். இந்த வகையில், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மிஷனிலும் 100% synchronization வந்தபின்னர்தான் அடுத்த லெவல். ஆகையால் இந்த கேமை கடந்த ஒரு மாதமாக விளையாடியும், தற்போதுதான் ஒன்பதாவது லெவலில் இருக்கிறேன். அத்தனை விஷயங்களையும் முடிக்க மேலும் ஒரு பத்து நாட்கள் ஆகலாம்.

இன்னொன்று – பாஸ்டன் நகரின் சுரங்க வழிகளைக் கண்டுபிடிப்பது. மொத்தம் பத்து வழிகள் உள்ளன. ஒவ்வொன்றையும் கஷ்டப்பட்டுதான் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். இதில் மட்டும் எனக்கு அலுப்பு தட்டியது. இருந்தாலும் கண்டுபிடித்துவிட்டேன்.

கான்னரின் கப்பல் – Aquila

 The Aquila, destroying enemy ships

The Aquila, destroying enemy ships

இந்த மூன்றாம் பாகத்தின் அட்டகாசமான பட்டையைக் கிளப்பும் சிறப்பம்சம் என்ன என்று கேட்டால் இந்தக் கப்பல்தான் அது என்றே சொல்வேன். கான்னரின் வசம் ஒரு பிரம்மாண்ட கப்பல் உண்டு. இந்தக் கப்பலை வைத்துக்கொண்டு பஸிஃபிக் பெருங்கடலில் பல சாகஸங்களை நிகழ்த்த வேண்டும். உதாரணத்துக்கு, பிரிட்டிஷ் படையினரால் தாக்கப்படும் கப்பல்களை மூழ்கடிப்பது, புதையல் இருக்கும் தீவைக் கண்டுபிடிப்பது, கடல் கொள்ளையரின் கப்பலை உடைப்பது போன்றவை. இதில் என்ன ஜாலியான அம்சம் என்றால், ப்ளேஸ்டேஷனில் ஹோம் தியேட்டரில் பெரிய டிவியில் இரவு இப்படி கப்பலை ஓட்டி எதிரிகளை சிதறடிப்பது அட்டகாசமாக இருக்கிறது. நம்மைச்சுற்றி கடல். அலைகளின் ஓசை. கப்பலின் பீரங்கிகள் வெடிப்பது. மாலுமிகளின் கூக்குரல். இத்யாதி.

அதேபோல், இந்த கேமில் பிரதான மிஷனை விட, இதன் secondary missions அட்டகாசம். அதாவது, நான் மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள். இதில் ஈடுபட்டால் நேரம் போவதே தெரியாமல் விளையாடிக்கொண்டிருக்கலாம்.

இறுதியாக, இதற்கு முந்தைய அசாஸின்’ஸ் க்ரீட் பாகங்களை விட இந்த கேமில் பல பிரமாதமான விஷயங்கள் இருக்கின்றன. அதேசமயம், மிகச்சில மிஷன்கள் சற்றே அலுப்பு தட்டக்கூடும். இது ஏனெனில் கடந்த அத்தனை பாகங்களையும் வேலையாடியவர்களுக்கு இதிலும் கிட்டத்தட்ட அதேபோன்ற சில மிஷன்கள் இருப்பது போர் அடிக்கலாம்.

Rating and final comment

My overall rating for this game would be 3.75/5.  That’s for the naval missions, and the design of the frontier, combined with the interesting secondary missions.  You do not have to care about the primary mission. These will do. இந்த கேமின் ப்ளூ ரே டிஸ்க்கின் விலை – 2463/-. நான் Flipkart மூலமாக வாங்கினேன். பைரேட் செய்யப்படாத, ஒரிஜினல் கேம் டிஸ்க்.

இதோ இங்கே க்ளிக் செய்து ஃப்ளிப்கார்ட்டில் வாங்கலாம்.

The trailer of Assassin’s Creed 3

  Comments

13 Comments

  1. Largo winch

    I am waiting to play AC 3 but before that now I am playing FarCry 3 ( superb game ) … Nice review

    Reply
    • Rajesh Da Scorp

      My next target is Farcry 3 boss. I’m gonna get it soon

      Reply
  2. uae ல் இந்த கேமிற்கான பெரிய விளம்பர பேனர்களை கண்டிருக்கின்றேன். ஆனால் பெரிதாக சுவாரசியம் வந்ததில்லை. உங்களின் இப்பதிவினை பார்க்கின்ற போது சுவாரசியமாகின்றது. ஆனால் ராஜேஸ் எனக்கொரு சந்தேகம் இந்த கேமிற்கு போர்ட்டபிள் கஜெட்களை விட தொலைக்காட்சியில் பொருத்தி விளையாடும் Game Console கள்தான் சரியாக இருக்கும் என எண்ணுகின்றேன். அப்படியா? நாட்டில் இருக்கும் போது – Strong Hold என்றொரு கேம் விளையாடிய ஞாபகம் உண்டு. அது ஒரு மாதிரியான அடிக்ஸனை தர, மெதுவாக அதிலிருந்து விலகிவிட்டேன். Strong Hold பற்றியும் உங்களுக்கு தெரிந்திருக்கும் அதன் Update ஏதாவது இருந்தால் தாருங்களேன்.

    நன்றி

    Reply
    • Rajesh Da Scorp

      சர்ஹூன் – அவசியம் இது பெரிய திரையில் (அல்லது அட்லீஸ்ட் கணினியில்) விளையாடவேண்டிய கேம்தான். சின்ன போர்ட்டபிள் கேட்ஜெட்ஸ் இதுக்கெல்லாம் ஒத்துவராது. StrongHold பத்தி கேள்விப்பட்டிருக்கேன் பாஸ். ஆனா நான் Age of Empires விசிறி. அந்தப் பக்கம் ஒதுங்கிட்டேன். விரைவில் முடிஞ்சா அதைப்பத்தி எழுதப் பார்க்கிறேன். நன்றி

      Reply
      • deva

        பாஸ் அசாசின்ஸ் கிரிட் 4,5,6&7 பத்தி எப்ப எழுதப் போறிங்க(விளையாட)

        Reply
  3. i havent completed the game fully yet..but these are my observations so far..the first thing i liked is the game being set in american revolution period..its very nice..havent played any game that has so much details about the colonial america..any one who is fond of the american history will love it….especially the environment,infrastructure looked nice..design wise the game was ok..but wen it comes to game play..i am very much disappointed..the story is very slow and why does all the tutorial takes so much time? also the side missions were tedious…i think rajesh would have killed a great deal of time to finish the game 100% as every mission has side objectives to complete each sync..hated it..and yea the ship thing was nice..it had the best characters and nice game play..wish it cud ve been more in game..content wise the game is good but still creed 2 was better than this..game play is big let down..and finally the sound..its does not appeal much like the creed 2 did..

    Reply
    • Rajesh Da Scorp

      Yes Karthi – it took a lot of my time to complete with 100% sync. But I loved it. As I said, the main story is boring. So, I concentrated on the secondary missions (like finding the forts, completing all the frontier challenges, Naval missions etc..) which were tedious but I wanted to complete them. . About Creed 2, I think that’s coz that was the second game in that series. Assassin’s Creed 1 was okay, but they improvised it in the second version. After that since two more games have been released, it’s natural for us to feel this game is tedious. THat’s also the reason for the primary mission to be boring.

      Thank you for the comment and the short review. I liked it 🙂

      Reply
      • m stuck at the 12 th seq chasing the lee guy..the problem comes wen i get on the burning boat.. i can see him hiding and wen i jump across the fire to tht direction to follow him close i get killed.. tried it many time and cudnt figure out ..not sure if its a glitch in the my version of game..still tryin..bout to complete 100 % sync but this seq takes me no close..

        Reply
        • You should not jump across the burning wooden blockade. Instead, you should slip under it while running, and then turn right and jump on the wall. From then on, it becomes easier.

          Reply
          • thank you !i avoided the fire damage by sliding and gott past thru…the last seq was most confusing in the whole game as i was getting the side objective failed pop up repeatedly wen i get on the burning boat..all good now.. i achieved 100 % sync…

    • Rajesh Da Scorp

      I have replied in your mail boss 🙂

      Reply

Join the conversation