Kun Faya Kun – ரஹ்மானின் அடுத்த அற்புதம்

by Karundhel Rajesh October 10, 2011   Hindi Reviews

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு முன், எனக்குத் தெரிந்த அரைகுறை ஹிந்தியைக் கொண்டு, ரஹ்மானின் மூன்று சூஃபி பாடலைத் தமிழில் மொழிபெயர்த்திருந்தேன். அதற்குப் பின், தற்போது ரஹ்மானின் நான்காவது அருமையான சூஃபி பாடல் வெளிவந்துள்ளது. Rockstar படத்தில். பாடலின் பெயர், Kun Faya Kun. அதன் மொழிபெயர்ப்பு இதோ. படித்துவிட்டு, ஹிந்தி தெரிந்த நண்பர்கள், ஏதேனும் குறை இருந்தால் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.

பாடலைப் பார்ப்பதற்கு முன், Kun Faya Kun என்றால் என்ன என்பதைப் பற்றி மிகச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். பாடலைப் புரிந்துகொள்வதற்கு அது உதவும்.

குர் ஆனில் இந்த சொற்றொடர் வருகிறது. அல்லாஹ் அண்டவெளியை உருவாகச்சொல்லி உத்தரவிட (Kun), அது உருவானது (faya Kun). உருவானது என்பதைவிட, அல்லாஹ் கட்டளைக்குமுன் ஒளிந்திருந்த அண்டம், கட்டளைக்குப்பின் வெளிவந்தது என்பதே சரி (என்பது என் புரிதல்).

ஆகவே, Kun faya Kun என்பது ஒரு முக்கியமான சொற்றொடர்.

இப்போது, பாடல். முதலில், பாடலைக் கேட்டுவிடுங்கள். அமைதியான சூழலில், headphones அல்லது earphones உதவியுடன் தெளிந்த மனதுடன் பாடலைக் கேட்டால் உத்தமம்.

பாடலை இங்கே கேட்கலாம்.

கேட்டபின், பாடலின் முழு வீடியோவும் பார்க்கவேண்டும் என்றால், அதனைக் கீழே பார்க்கலாம்.

இனி, மொழிபெயர்ப்பு.

Ya Nizamuddin Auliya

ஓ துறவிகளின் அரசரே

Ya Nizamuddin Sal ka

வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மன்னரே

Qadam badha le

உங்களது அடியை முன்னால் எடுத்து வையுங்கள்

Hadon ko mita le

எல்லைகளைத் தாண்டி வாருங்கள்

Aaja khaalipan mein pi ka ghar tera

உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள்

Tere bin khali aaja khalipan mein

நீங்களில்லாமல் மிகவும் வெறுமையாக உள்ளது; இங்கு வந்து இந்த வெறுமையை நிரப்புங்கள்.

Rangreza Rangreza

என்னை வண்ணங்களால் நிரப்புபவரே (வாழ்க்கையை வண்ணமயமாக ஆக்கும் அல்லாவே)

Kun faaya kun . .

‘உருவாகு’ என்று உத்தரவிட்டார்; நினைத்தவண்ணமே எதுவாயினும் அது உருவானது

ab kahin pe kuch nahi bhi nahi tha Wohi tha Wohi tha Wohi tha

எங்குமே எதுவுமே இல்லாத அந்தத் தருணத்திலும், அவர் இருந்தார்; அவர் மட்டுமே எங்குமே இருக்கிறார்

Woh jo mujh me samaaya woh jo tujh me samaaya

என்னுள் எவர் இருக்கிறாரோ, அவரே உன்னுள்ளும் இருக்கிறார்

Maula wohi wohi maaya

இறைவனே அத்தனை தொடக்கங்களுக்கும் ஒரே பிறப்பிடம்.

Sadaq allahul aliyyul Azim

உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்;

Sajra savera mere tann barse,Kajra andhera teri jalti ki lau
Qatra mila jo tere darr barse, O Maulaa…

ஒவ்வொரு விடியலிலும் எதனை எனதுடல் அணிந்திருக்கிறதோ, அந்த வாழ்வின் பொறியான எனதுயிர், புகையிலிருந்து வெளிவரும் கரியைப் போல இருண்டதாயிருந்தாலும், உங்களிடமிருந்து பெருகும் புத்துயிரின் ஒரு துளிக்காகவே உயிர்வாழ்ந்திருக்கிறது எனது இறைவனே . . .

kun faaya kun . .

Sadaq Allahul Aliyyul Azim

உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்;

Sadaqa Rasoolu hun Nabiyyul Kareem

அந்த அல்லாவின் திருத்தூதரான நபியே மெய்ப்பொருள் ;

Salallah hu alayhi wasallam

அல்லாஹ்வின் ஆசிகளும் அமைதியும், நபிக்கு உரித்தாகட்டும்;

Ho mujh pe karam sarkar tera; Araj tujhe kar de mujhe mujhse hi riha

என்னை என்னிடமிருந்தே காப்பாற்றி விடுதலையளித்தால், அது உங்களது பெருந்தன்மையன்றி வேறில்லை எனது இறைவனே;

Ab mujhko bhi ho deedar mera; Ab kar de mujhe mujh se hi riha

என்னை இப்பொழுது நானே அறியவேண்டும்; தயைகூர்ந்து எனக்கு விடுதலையளியுங்கள்

Mann pe mere ye bharam Kachche mere ye karam
Leke chale hain kahaan main to jaanu hi na

எனது தவறான செய்கைகளோடும், வெறுமையான ஆன்மாவோடும் நான் எங்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை

Tu hai mujh mein samaaya kahaan leke mujhe aaya

என்னுள் நீங்களே வாழ்கிறீர்கள்; என்னை எங்கே அழைத்துவந்திருக்கிறீர்கள்?

Main hoon tujh mein samaaya
Tere peechhe chala aaya
Tera hi main ik saaya

உங்களிலும் நானே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்; உங்களைத் தொடர்கிறேன்; நான் உங்களது வெறும் நிழல்தானே தவிர வேறில்லை;

Tune mujhko banaya
Main tto jag ko naa bhaya
Tune gale se lagaya
Haq tu hi hai khudaya
Sach tu hi hai khudaya

நீங்களே என்னை உருவாக்கினீர்கள்; இந்த உலகில் வாழ நான் தகுதியற்றவனாக இருந்தும், என்னை அரவணைத்தீர்கள்; நீங்களே முறை தவறாதவர்; நடுநிலையாளர்; நீங்களே மெய்ப்பொருள்.

Kun fayakun . .

நீங்கள் உத்தரவிட்டதும், எதுவுமே உடனடியாக உருவாவதைப்போல், என் வாழ்வுக்கும் ஒரு குறிக்கோளையும், ஒரு இலக்கையும் உத்தரவிட்டு அருளுங்கள்.

பாடலின் முழு மொழிபெயர்ப்பு இதோ.

ஓ துறவிகளின் அரசரே;

வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மாமன்னரே;

உங்களது காலடியை முன்னால் எடுத்து வையுங்கள்

எல்லைகளைத் தாண்டி வாருங்கள்

உங்களது அன்பிற்குரியவனின் இல்லத்தில் உள்ள இந்த வெறுமையை நிரப்புங்கள்

நீங்களில்லாமல் மிகவும் வெறுமையாக உள்ளது; இங்கு வந்து இந்த வெறுமையை நிரப்புங்கள்.

என்னை வண்ணங்களால் நிரப்புபவரே (வாழ்க்கையை வண்ணமயமாக ஆக்கும் அல்லாவே)

எதையும் படைக்கவேண்டும் என்று அல்லாஹ் நினைத்தால், ‘உருவாகு’ என்று அவர் ஆணையிட்டமாத்திரத்தில், அது உருவாகிறது (‘உருவாகிவிட்டேன்’ என்று பதிலும் அளிக்கிறது).

எங்குமே எதுவுமே இல்லாத அந்தத் தருணத்திலும், அவர் இருந்தார்; அவர் மட்டுமே எங்குமே இருக்கிறார்

என்னுள் எவர் இருக்கிறாரோ, அவரே உன்னுள்ளும் இருக்கிறார்

இறைவனே அத்தனை தொடக்கங்களுக்கும் ஒரே பிறப்பிடம்.

உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்;

ஒவ்வொரு விடியலிலும் எதனை எனதுடல் அணிந்திருக்கிறதோ, அந்த வாழ்வின் பொறியான எனதுயிர், புகையிலிருந்து வெளிவரும் கரியைப் போல இருண்டதாயிருந்தாலும், உங்களிடமிருந்து பெருகும் புத்துயிரின் ஒரு துளிக்காகவே அது உயிர்வாழ்ந்திருக்கிறது எனது இறைவனே . . .

உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்;

அந்த அல்லாவின் திருத்தூதரான நபியே மெய்ப்பொருள்;

அல்லாஹ்வின் ஆசிகளும் அமைதியும், நபிக்கு உரித்தாகட்டும்;

என்னை என்னிடமிருந்தே காப்பாற்றி விடுதலையளித்தால், அது உங்களது பெருந்தன்மையன்றி வேறில்லை எனது இறைவனே;

என்னை இப்பொழுது நானே அறியவேண்டும்; தயைகூர்ந்து எனக்கு விடுதலையளியுங்கள்

எனது இருண்ட செயல்களோடும், வெறுமையான ஆன்மாவோடும் நான் எங்கு சென்றுகொண்டிருக்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை

என்னுள் நீங்களே வாழ்கிறீர்கள்; என்னை எங்கே அழைத்துவந்திருக்கிறீர்கள்?
உங்களிலும் நானே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்; உங்களைத் தொடர்கிறேன்; நான் உங்களது வெறும் நிழல்தானே தவிர வேறில்லை;
நீங்களே என்னை உருவாக்கினீர்கள்; இந்த உலகில் வாழ நான் தகுதியற்றவனாக இருந்தும், என்னை அரவணைத்தீர்கள்; நீங்களே முறை தவறாதவர்; நடுநிலையாளர்; நீங்களே மெய்ப்பொருள்.

நீங்கள் உத்தரவிட்டதும், எதுவுமே உடனடியாக உருவாவதைப்போல், என் வாழ்வுக்கும் ஒரு குறிக்கோளையும், ஒரு இலக்கையும் உத்தரவிட்டு அருளுங்கள்.

ரஹ்மானின் கூர்த்த குரலில் பாடல் துவங்குகிறது. ஓரிரண்டு வரிகளுக்குப் பின், ரஹ்மானின் குரல், ஒரு நீண்ட ஆலாப்பை வெளிப்படுத்துகிறது. மிக மிக இனிமையான அந்த ஆலாப்பில், துயரத்தின் குரலும் கலந்திருக்கிறது. தன்னைக் கடைத்தேற்றுமாறு இறைவனிடம் இறைஞ்சும் குரல் அது. எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும், இந்தப் பாடலைக் கேட்கும்போது – குறிப்பாக ரஹ்மானின் அந்த ஆலாப்பில் – ஏதாவது ஒரு சூஃபி பெருமகனாரின் சமாதியில் சென்று, கண்களை மூடிக்கொண்டு இந்தப் பாடலைப் பாட வேண்டும் என்று தோன்றுகிறது.

அதேபோல், பாடலின் முதல் சரணம் ஆரம்பிக்கும் தருவாயில், ஜாவேத் அலியின் குரலில், ‘சதக்கல்லாஹுல்லலியுல்லஜீம்’ (உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்) என்ற நீண்ட ஆலாப். மிகவும் உருக்கம். இதுவே , இரண்டாம் சரணத்திலும் வரும்போது, ரஹ்மானின் குரல், இந்த வரியைத் தொடர்ந்து, ‘சதக்கரசூலுஹுன்நபியுல்கரீம்’ (அந்த அல்லாவின் திருத்தூதரான நபியே மெய்ப்பொருள்) என்ற வரிகளை அட்டகாசமாகப் பாடியுள்ளது. இந்த இடத்தைத் தவற விடாமல் கேளுங்கள். அந்த இடத்தின் தப்லா, பிரமாதம்! இந்த வரிகளைத் தொடர்ந்து, ‘சல்லல்லா ஹு அலைஹி வசல்லம்’ (அல்லாஹ்வின் ஆசிகளும் அமைதியும், நபிக்கு உரித்தாகட்டும்) என்ற கோரஸ் வரிகள். முதலில் அல்லாவே மெய்ப்பொருள் என்று ஒருவர் பாடுகிறார். அதனைத்தொடர்ந்து நபியுமே மெய்ப்பொருள் என்று இன்னொருவர் அப்பாடலில் சேர்ந்துகொள்கிறார். உடனே, அனைவருமாக, அல்லாஹ்வின் ஆசிகளும் அமைதியும், அப்பேர்ப்பட்ட நபிக்கு உரித்தாகட்டும் என்று வாழ்த்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன இவ்வரிகள். எவ்வளவு உண்மை!

நான் உணர்ச்சிவசமெல்லாம் படவில்லை. ஆழ்ந்து யோசித்துத்தான் சொல்கிறேன். ஏற்கெனவே, ரஹ்மானின் பிற சூஃபி பாடல்களைக் கேட்கும்போதே (‘பியா ஹாஜி அலி’, ‘கரீப் நவாஸ்’, ‘அர்ஸியான்’), இஸ்லாத்தின் மீது பெரும் மரியாதை கொண்டிருந்தேன். இப்போது, வெகு சீக்கிரமாகவே இஸ்லாத்துக்கு மதம் மாறிவிடுவேனோ என்று தோன்றுகிறது. இந்த அளவு இறைவன் என்ற ஆளுமையிடம் தன்னை முழுமையாக ஒப்புவிக்கக்கூடிய அளவு அமைந்த உருக்கமான, கேட்டதும் ஒருவித அமைதியளிக்கக்கூடிய பாடல்களை, எனக்குத் தெரிந்து வேறெந்த மதத்திலும் கேட்டதில்லை.

ரஹ்மானின் மூன்று சூஃபி பாடல்களின் மொழிபெயர்ப்புகளை இங்கே படிக்கலாம்.

  1. பியா ஹாஜி அலி
  2. கரீப் நவாஸ்
  3. அர்ஸியான்

நன்றி – http://i.imgur.com/30CQO.jpg

  Comments

34 Comments

  1. ஒண்ணுமே புரியாம இந்த பாடல்கள் எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருந்தேன்….ஆனா…….மோர்ஸ் கோட் மாதிரி ஏதோ சங்கேத வார்த்தையில புரிஞ்ச மாதிரி இருந்துச்சு……..

    இனி கொஞ்சம் அர்த்தத்தோட சேர்ந்து ரசிக்க முடியும்….

    Reply
  2. சூபி பாடல்கள், எனக்கு புரிஞ்ச வரை ஒரு மதமோ மார்க்கமோ சார்ந்ததா தெரியல……..(எனக்கு புரிஞ்ச வரை)…….

    எல்லாத்துக்கும் – சூரியன் மாதிரி – பொதுவானது.யார் வேணாலும் – இந்த மனநிலையில் இருந்தாலும் பொருந்திபோகுது..இறைவன்ட அதகுடு – இதகுடுன்னு கேக்காம – இதுவரைக்கும் அளித்த அற்புதங்களுக்கு நன்றி என்ற ரீதியிலேயே எல்லாம் இருக்கே……………. அதான் பிறபாடல்களுக்கும்(பிறமத) இதற்கும் உள்ள பெரிய – ரொம்ப பெரிய வித்தியாசமோ ????

    Reply
  3. தல கலக்குறீங்க போங்க….. நான் இன்னும் பாடல்களை கேட்க வில்லை……. உங்கள் மொழி பெயர்ப்பு அருமை

    Reply
  4. சூஃபியிஸம், இறைவனுக்கு நன்றி செலுத்தக்கூடிய ஒருவித மார்க்கம்னுதான் நானும் படிச்சிருக்கேன். ஆனால், அதுல அல்லாஹ்வின் reference பல இடங்கள்ள வருது. நபியையும் பத்தி பேசுது. அந்த மார்க்கத்தின் பாடல், ரஹ்மானின் அறிமுகத்துக்குப்பிறகுதான் எனக்குத் தெரிய ஆரம்பிச்சது. அந்தப் பாடல்கள்ல, வரிகள் புரியலேன்னாலும் பரவால்ல. ரஹ்மானின் இசை, அவ்வளவு உருக்கமா இருக்கு. ஒவ்வொரு வரியையும் அப்புடி செதுக்கிருக்காரு. அவரோட மனசுல இருக்குற இயல்பான பக்திதான் காரணம்னு தோணுது. அல்லாஹ்விடம் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட்ட மனிதன் அவர்னு தோணுது. இன்னும் என்னென்னமோ. இந்தப் பாடல்கள்ல, திடீர்னு அவரோட ஒரு சின்ன ஆலாப்; இல்லைன்னா, குரல்ல ஒரு சின்ன நெளிவு – டக்குனு நம்ம மனசை உருக்கிருது. நான் சூஃபியிஸம் பத்தி படிக்க ஆரம்பிச்சாச்சு.Wanna go in detail in that part of life. Dunno. Let’s c.

    Reply
  5. இல்லணே…….நா சொல்ல வந்தது………தனக்குதான்ன்னு எந்த மதமும் சொந்த கொண்டாட தேவையில்லாத – முடியாத ஒரு விஷயம் என்று….எனக்குப்பட்டுச்சு………..

    universal – எல்லா மதங்களின் அல்டிமேட்டம் அதுவானதான இருக்கணும்……..

    வரிகள் – வார்த்தைகள் புரியாடியும் – ஒரு விஷேச பாஷையில எப்புடியோ எனக்கு புரிஞ்சது…….

    Reply
  6. அது உண்மைதான். எல்லா மதங்களின் ultimatum ஒண்ணுதான். ஆனால், அது எப்புடி வெளிப்படுது? கண்டிப்பா சொல்றேன். மனசை உருக்கும் இசை, ஆண்டவனை நெருங்கும் ஒரு படி என்று அத்தனை மத்தத்தவர்களும் சொல்லிருக்காங்க. நம்ம அப்பர் உட்பட. ஆனால், நம்ம மதத்தில், அது ஒருவித உயர்தட்டு மக்களோட நின்னுடுச்சு. இஸ்லாத்தில் எப்புடின்னு தெரியலை. ஆனா, இப்ப ரஹ்மான் மூலமா, மக்களை இந்தப் பாடல்கள், ஒருவித trance நிலைக்கு கொண்டு செல்லுதுன்னு feel பண்றேன். இதைக்கேட்கும்போது, எந்த மதஸ்தரா இருந்தாலும் சரி, அவங்கவங்களுக்கு, தங்களோட கடவுள் நினைவு வரும்னு நினைக்கிறேன். அதேபோல், அந்த விசேஷ பாஷை – அதுதான் முக்கியம். அதான் இசையின் மகிமை இல்லையா? Rahman has it in abundance.

    Reply
  7. Exactly……….. மத்த மத பாடல்களை விட – ஏதோ என் அறிவுக்கு தெரிந்த வரையில், நா கவனிச்ச வரையில் – இஸ்லாம் மத பாடல்களில் – ரொம்ப நெருக்கத்துல – அன்றாட நிகழ்வுகளுடன் இறைவனை தொடர்புபடுத்தி பாடுவாங்க….

    Fakir என்ற சொல்லப்படும் ஆட்கள், ரொம்ப சாதரணமா – மசூதி வாசல்களில் உக்காந்து – இந்த பாட்டுல கவனிச்சிருப்பீங்க, ஒருஆளு முழுமையா தலய உலுக்கி உலுக்கி பாடுவாரே – அதுமாதிரி பாடுறாங்கன்னு தோணுது…

    பாடல் என்பதைவிட, அவுங்க வாழ்க்கை முறையே அப்புடிதான் இருக்கும் போல……………சூபியின் – ஒரே குறிக்கோள் அன்புதான்……அதான் இறைவன்………….நானும் அதுனலயே யாரையும் வெறுக்கு கூடாது – அப்புடி இப்புடி நெனைகிறது……..பிரசவ வைராக்கியம் மாதிரி சரிவர கடைபிடிக்க முடிவதில்லை….

    http://www.youtube.com/watch?v=03qMOQFnTE8

    இதுல சொல்லுவாரு………..மழை மாதிரின்னு……..

    Reply
  8. அன்புதான் வாழ்க்கை – நடைமுறை வாழ்வில் சாத்தியமில்லை. சூஃபியா மாறி, வானமே கூரைன்னு வாழ்ந்தா மட்டுமே சாத்தியம். அன்றாட வாழ்வில், கொத்த வேணாம். ஆனா சீறவாவது செய்யணும். அப்பதான் பிழைக்க முடியும் 🙂 என்பது என் எண்ணம். இந்த பாடல்களைக் கேட்டதுமே, ஃபக்கீர் மாதிரி வாழணும்னு ஒரு செகண்டாவது தோணாம போவாது இல்லையா? அது போதும். அவன் பார்த்துப்பான் 🙂

    Reply
  9. இந்த ரீதியில போனா……நாம ரெண்டு பேரும் ஜெமோ க்ரூப்ல நொலஞ்சிடலாம்…………….

    இல்ல….நா ரொம்ப மேம்போக்கான கருத்துகள் – விடலைத்தனமா சொன்ன மாதிரி தோணுது……….எனக்கு வாய்ப்பு………ஜீரோ வாட்ஸ் மாதிரி மங்கி போய் தெரியுது…..

    உங்களுக்கு பளிச்சுனு பிரகாசமா எரியுது ? நீங்க ஏன் எட்டாவது தடவையா அங்க – உள்ளே நுழைய முயற்சிக்க கூடாது ??

    Reply
  10. மாற்று மதத்தினர் இவ்வளவு அழகாக இஸ்லாத்தை பற்றி கூறும் பொது நெகிழ்ச்சி அடையாமல் இருக்க முடியவில்லை. அதுவும் நண்பர் “பல” படிகள் தாண்டி நான் இஸ்லாம் மதம் மாரிவிடுவேனோ அப்படின்னு எழுதி இருப்பது இன்னும் சிறப்பு! அல்லாஹ் உங்கள்ளுக்கு அந்த ஞானம் தருவானாக.
    சூஃபி பாடல்கள் அனைத்தும் ரஹ்மான் சிறப்பானது. குறிப்பாக நீங்கள் சொல்வது போல “ஹாஜி அலி” அது அவருடைய முதல் முயற்சி. ஜோதா அக்பர் வரும் முதல் பாடலும் அப்படியே. அனால் இந்த பாடலில் அவர் முதற்சி பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
    ராக்ச்டார் ஆல்பம் நல்ல ஹிட் ஆகிவிட்டது குறிப்பகா “saadda haq “

    Reply
  11. //. இந்தப் பாடல்கள்ல, திடீர்னு அவரோட ஒரு சின்ன ஆலாப்; இல்லைன்னா, குரல்ல ஒரு சின்ன நெளிவு // இடையில் அப்படியே கிட்டாருக்குப் போய்ட்டு அப்படியே வெளிய வந்து… பாடலைக் கேக்கும் போது இது பெருசா தோணவே இல்லை. அப்படி ஒரு மனநிலை.காட்சியில அதை சொல்லியிருக்க விதம் அருமை…

    Reply
  12. ராஜேஸ், அட்டகாசம். நீங்க முந்திகிட்டிங்கன்னு சொல்றது தமிழ் சினிமாவின் க்ளிஷே போல ஆகிவிடும். அதனால் போகட்டும்…

    பாடலைப்போலவே பதிவும் அருமை..
    குறீப்பாக கிதார் இந்தப் பாடலோடு கலக்குமிடம் பிரமாதம்

    //இப்போது, வெகு சீக்கிரமாகவே இஸ்லாத்துக்கு மதம் மாறிவிடுவேனோ என்று தோன்றுகிறது//
    என்னுடைய பதிவுகளை கவனித்தீர்களேயானால் தெரியும், கிட்டதட்ட சூஃபி இசையைப்பத்தி அடிக்கடி எழுதிட்டிருக்கேன். மீ டூ..

    அப்புறம் இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காத மதம், இஸ்லாம் எனப்படித்திருக்கிறேன். ஆனால் இறைநிலைக்கு மிக நெருக்கமாக இந்தப்பாடல்களே இருக்கின்றன. இத்தனைக்கும் மொழி புரியாமலேயே…

    சமீபத்தில் இசைவிமர்சகர் ஷாஜியிடம் பேசியபோது கூட இதைத்தான் கேட்டேன்.. நாம பேசலாம்.

    Reply
  13. அட்டகாசம்… டவுன்லோடு போட்டாச்சு…. செம பதிவு தல…. ரசிகன் யா இவன்…. !!!! 🙂 🙂

    Reply
  14. சத்தியமா சொல்றேன் இந்த பாட்ட கேட்ட பிறகு அஞ்சு நிமிஷம் பேச்சே வரல… ஒரு அமைதி…ஹிந்தி தெரிஞ்சு இன்னும் முழுமையா அனுபவிசுருக்கலாம் ன்னு தோணுது…ஹிந்தி படிக்கணும் 🙁 🙁 🙁

    Reply
  15. //இப்போது, வெகு சீக்கிரமாகவே இஸ்லாத்துக்கு மதம் மாறிவிடுவேனோ என்று தோன்றுகிறது//

    ரொம்ப உணர்ச்சிவசப்படறீங்க போலருக்கே தேளு….:))

    செம பாட்டு. ஹ்வாஜா மேரே ஹ்வாஜா பாட்டுக்கப்புறம் எனக்கு பிடித்த சூஃபி இசை பாட்டு இது.ரகுமானின் மற்ற சூஃபி இசை பாடல்கள் அவ்வளவாக ஈரக்கவில்லை.

    அன்வர் படத்தில் வரும் மோலா மேரே மோலா என்ற பாட்டு கேட்றிக்கீங்களா???

    Reply
  16. பதிவுலக சச்சினே!
    இப்பதிவும்,கொழந்தயும் தாங்களும் மாறி மாறி இட்ட பின்னூட்டங்களும் தஞ்சை கோயில் சிற்பங்கள்.

    Reply
  17. // அன்புதான் வாழ்க்கை – நடைமுறை வாழ்வில் சாத்தியமில்லை. சூஃபியா மாறி, வானமே கூரைன்னு வாழ்ந்தா மட்டுமே சாத்தியம் //

    200% i agree…….

    என்னைய பொறுத்த வரைக்கும் – CAPS+BOLD+U_Line – என்னைய பொறுத்த வரைக்கும், இதுபோல சாமியாரா ஆகிறது – சூஃபியா மாறி, வானமே கூரைன்னு வாழுறது எல்லாம், ஒருவிதமான escapism என்றே நா நெனைக்கிறேன்……….

    Reply
  18. // நீங்கள் முஸ்லீமாக மாறவேண்டும் என்பது இல்லை.அதன் கோட்பாடுகளை பின்பற்றினாலே போதும் என்பது என் தாழ்மையான கருத்து.

    அதைத்தான் நான் மீன் பண்ணேன். கரெக்டா புரிஞ்சிட்டு இருக்கீங்க… சூப்பரப்பு //

    நேத்தே கேக்கணும் என்று இருந்தேன்…………..நல்ல கேள்வி….

    ஆனா……… “மாறப்போறேன்”……….அப்ப ஏற்கனவே எதுலயோ ஒரு பிடிப்பு இருக்கு போல….

    Reply
  19. //

    நாஞ்சில் பிரதாப் said:
    February 10, 2010 9:57 PM

    மோலா மேரே மோலா என்ற பாட்டுக்கூட இந்த வகையில் வரும் என நினைக்கிறேன்… கேட்டுப்பாருங்க தல… ஆர்கே ராத்தாடு குரலில் உயிரைஉலுக்கும் பாடல்… முடிந்தால் இதையும் மொழிபெயருங்கள்

    http://www.youtube.com/watch?v=PsSNR9UQ67I //

    நாஞ்சில் பிரதாப் ரெண்டு வருசமா ஒரே கேள்வியவே கேட்டுகிட்டு இருக்கார்……….அவர யாராவது தடுத்து நிறுத்துங்க………….

    // பதிவுலக சச்சினே!
    இப்பதிவும்,கொழந்தயும் தாங்களும் மாறி மாறி இட்ட பின்னூட்டங்களும் தஞ்சை கோயில் சிற்பங்கள் //

    ஹி….ஹி…சார்…… பூவுடன் சேர்ந்து கொஞ்சம் நச்சு போன நாருக்கும் பெயர் கிடைக்குது

    Reply
  20. எப்போதும் போல சிறப்பான பதிவு. ரெம்பா நாளா கேட்கனும்னு நினைச்சேன், இந்த பதிவ பார்த்ததும் தான் மறுபடியும் நினைவு வந்தது. சலாம் சென்டர்ல வாங்குன(Nov-2010) புத்தகங்களா படிச்சாச்ச?

    ~ஷா

    Reply
  21. யோவ் கொளந்த எங்கேருந்துய்யா தேடிபுடிச்சு அந்த கமண்ட்டை இங்கபோட்டீரு. எனக்கே மறந்துப்போச்சு…:))
    எங்கேலாம் சூஃபி பாட்டு பத்தி எழுதிருக்கோ அங்கேலாம் அந்த பாட்டைப்பத்தி எழுதுவேன். அந்தப்பாட்டும் சூஃபி இசைப்பாடல்தான். ஆனா அதைப்பத்தி யாரும் எழுத மாட்டேங்கறாங்க…ஒரே வழி நான் எழுதவேண்டியதான். தேவையா இது….

    Reply
  22. மிக அருமையான பதிவு நண்பரே!!!. இந்த பாடல் மனித வாழ்வின் உன்னதத்தை மிக அற்புதமாக விளக்குகிறது. அன்பே இறைவன் என்பதை இவ்வளவு எளிதில் புரியும்படி சொல்லியிருப்பது இதன் சிறப்பு. இர்ஷாத் கமில்-ன் வரிகளில் என்ன ஒரு தெளிவு. அதை அற்புதமாக செதுக்கி நமக்கு அளித்திருக்கிறார் ரஹ்மான் சார். He is simply great!

    இந்த பதிவிற்காக கருந்தேள் நண்பருக்கு என் வணக்கமும் நன்றியும்! உங்கள் சேவை தொடரட்டும்!.
    I really appreciate your efforts on translating this song for us.

    Reply
  23. @ thameez – ரஹ்மானோட ஒவ்வொரு சூஃபி பாட்டைக் கேக்கும்போதும், எனக்கு நானும் ஒரு சூஃபியா மாறிடனும்ன்னு தோணும். அதுனாலதான் மதம் மாறிடனும்ன்னு சொன்னேன் 🙂 . இவ்வளவு அழகா இறைவனைப் பத்திப் பாடுற பாடல்கள், சூஃபியிசத்துல மட்டும்தான் இருக்குன்னு நினைக்கிறேன் 🙂

    @ தமிழினியன் – absolutely . அதான் ரஹ்மானின் ஜீனியஸ். அவரோட பாடல்கள்ள, பின்னணில, ரொம்பச் சின்ன ஒரு இசைக்கோர்ப்பு டக்குனு மறையும். உத்துக் கவனிச்சாத்தான் தெரியும். அது, அந்தப் பாட்டையே ஒரு தூக்கு தூக்கிரும். நிறைய வாட்டி கவனிச்சிருக்கேன் 🙂 . நீங்களும் அதைக் கவனிச்சிருக்குறது நல்ல மேட்டர் .

    @ முரளிகுமார் – உங்களின் சூஃபி பதிவுகள் படிச்சிருக்கேன். எனக்குப் புடிக்கும். கண்டிப்பா சீக்கிரம் பேசலாம் தல. //இசைக்கு முக்கியத்துவம் குடுக்காத மதம் இஸ்லாம்// – இது, முகலாயர் காலம்னு நினைக்கிறேன். அப்புறம் காலங்கள் மாறிடுச்சுன்னு தோணுது. இப்ப, இஸ்லாம் மட்டுமே இசைக்கு அந்த அளவு முக்கியத்துவம் குடுக்குதுன்னும் தோணுது.

    @ முரளி- ஹீ ஹீ . நல்ல ஹிந்தி டீச்சரிடம் சேர்ந்து ஹிந்தி படிக்கவும் 🙂

    @ நாஞ்சில் – ஹாஹ்ஹா . . அன்வர் – கேட்டுருக்கேன் . அதை அப்பவே எழுதிரனும்னு தான் நினைச்சேன். ஆனா மறந்துட்டேன். பரவால்ல. அதை நீங்களே எழுதிருங்க தல . . கண்டிப்பா நல்லாருக்கும். வீ வெயிட்டிங் 🙂

    @ mageshp – நீங்க குடுத்துருக்குற ரெண்டு லின்க்கும் அட்டகாசம் ! எனக்கு ரொம்பப் புடிச்சது. ரஹ்மானின் ‘தீன் இசை மழை’ ஆல்பம் எங்கியாவது கிடைக்குமா?

    @ உலக சினிமா ரசிகரே – வாங்க. நான் சச்சின் இல்ல தலைவரே. எனக்கு கங்குலி ரொம்பப் புடிக்கும் 🙂 ஹீ ஹீ

    @ கொழந்த – //என்னைய பொறுத்த வரைக்கும், இதுபோல சாமியாரா ஆகிறது – சூஃபியா மாறி, வானமே கூரைன்னு வாழுறது எல்லாம், ஒருவிதமான escapism என்றே நா நெனைக்கிறேன்……….// – இதுக்கு என் பதில் என்னன்னா, வாழ்க்கையின் பிரச்னைகளை சமாளிக்க மனசில்லாம தடால்னு சாமியாரா ஆனா, அது எஸ்கேப்பிசம். கட்டாயம். ஆனா, வாழ்வின் அல்டிமேட் லட்சியமா iraivanai அறியணும்னு முடிவு செஞ்சி, ஆன்மீகத்துல இறங்கினா, அது எஸ்கேப்பிசம் இல்ல. ஆன்மா – அது எங்க போவுது – என்னமா ஆகுது – இந்த மாதிரி பல விஷயங்கள் அப்ப புலப்படும்னு என் நண்பர் சொல்லிருக்காரு. அந்த ஸ்டேஜ்ல, constantine படத்துல, பூமிலயே நரகமும் தெரியுமே. அப்புடி, மனித வாழ்க்கை என்ற மாயை டக்குனு விலகி, எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் இறைவன் என்ற சக்தியோடு நாமும் முற்றிலும் கலந்திருவோம்னும் அவரு சொல்லிருக்காரு.

    @ sha – பரவால்லையே. போன வருசம் நான் வாங்குன புக்ஸ் நல்லா நினைவு வெச்சிருக்கீங்க. அதைப் படிச்சாச்சு. நபியைப் பற்றிய டிவிடியும் பார்த்தாச்சு பாஸ் 🙂

    @ லாஸ் ஏஞ்சலீஸ் செந்தில் – நீங்க எழுதிருக்குறது ரொம்ப உண்மை. ரொம்ப நாள் கழிச்சி ரஹ்மான் திரும்ப வந்திருக்காரு போல. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி நண்பரே.

    Reply
  24. // ரொம்ப நாள் கழிச்சி ரஹ்மான் திரும்ப வந்திருக்காரு போல //

    எனக்கு அப்புடி தோணல…..தொடர்ந்து experimentation நெறைய செஞ்சாரு..செஞ்சிட்டு வராரு..தனி ஆல்பங்கள்ல நெறைய செஞ்சாரு….சேகர் கபூரின் Passage மாதிரியான படங்களில் அவரது இசை வேற டைமன்சன்ல இருந்தது………ஆனா..தமிழை விட ஹிந்தி ஆட்கள் நல்லா அவரை உபயோகப்படுத்திகிறாங்க….

    சொன்ன மாதிரி opinion differs…..சில பேருக்கு புடிக்கும்..சில பேருக்கு புடிக்காது….

    Reply
  25. Its Great…

    Reply
  26. Dear rajesh,
    ஓரளவு என் அனுபவத்தில் வைதீக இஸ்லாமை காட்டிலும் சூபிசம் ஓர் அற்புதமான வாழ்வியல் முறை என நினைக்கிறேன். எழுத்தாளர் நாகூர்ரூமி யின் “சுபி – ஒரு எளிய அறிமுகம்” என்ற புத்தகம் படித்து பாருங்கள், சுபியிசம் பற்றி தமிழில் மிக அற்புதமான புத்தகம்.

    Reply
  27. சலாம் சகோ.கருந்தேள்…
    தவறான புரிதல் மற்றும் தவறான மொழியாக்கம்.
    “குன் ஃப யகுன்” என்றால்…
    “ஆகு எனில் ஆகிவிடும்” –இதுதான் அர்த்தம்..!

    இந்த திறன் ஏக இறைவனுக்கு மட்டுமே உண்டு..! வேறு எவருக்கும் உரித்தானதல்ல..! இந்த அற்புத ஆற்றலை ஒரு இறந்து போன மனிதனுக்கு இருக்கிறது என்றால்..? இப்படி, ஒருவர் நம்பினால் அவர் முஸ்லிம் அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள் சகோ.கருந்தேள்.

    ரஹ்மானின் இந்த பாடலை இஸ்லாமிய பாடல் என்று சொல்லவே முடியாது. மேலும்… இணைவைப்பு அதாவது ஷிர்க் என்ற நிரந்தர நரகை நோக்கி இட்டுச்செல்லும் வகையான இஸ்லாமிய அடிப்படைக்கு முற்றிலும் எதிரான பாடல்.

    இதனை முஸ்லிம்கள் புறக்கணிப்பார்கள்.

    நீங்கள் வலுக்கட்டாயமாக கொடுத்த மொழியாக்கமான…
    //Ya Nizamuddin Auliya
    ஓ துறவிகளின் அரசரே
    Ya Nizamuddin Sal ka
    வாழ்வில் நம்பிக்கையைத் தொலைத்து, பெரும்சோகத்தில் இருப்பவர்களின் துயர்துடைக்கும் மன்னரே//–என்று இறைவனை பாடுவதாக திரித்தாலும் கூட…
    //உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்;
    அந்த அல்லாவின் திருத்தூதரான நபியே மெய்ப்பொருள்;//—இதென்ன குழப்பம்..? யார் மெய்ப்பொருள்..?

    இறைவன் எங்கே இருக்கிறார்..? அர்ஷில் இருக்கிறார்..!
    என்னுள்ளும்… உங்களுக்குள்ளும்… ரஹ்மானுக்குள்ளும் இல்லை..! பாடல் ஷிர்க் மட்டுமல்ல…செமை உளறல்…!

    //சீக்கிரமாகவே இஸ்லாத்துக்கு மதம் மாறிவிடுவேனோ என்று தோன்றுகிறது//—-நல்ல விஷயம்தான்..!

    ஆனால், இதற்கு தவறான வழியை காட்டும் ரஹ்மான் பாட்டை கேட்டால் எல்லாம் முடியவே முடியாது. இறைவன் குர்ஆனில் சொல்வது என்ன… இறைத்தூதர் வாழ்க்கை நபிமொழி நூர்ல்களில் எப்படி… என்று படித்துணர வேண்டுகிறேன்.

    Reply
  28. திரு ராஜேஸ்!

    நீங்கள் இஸ்லாத்தின் மேல வைத்திருக்கும் பிடிப்பு சந்தோஷத்தைக் கொடுக்கிறது. ஆனால் நீங்கள் விரும்பும் இசையில் சில கட்டுப்பாடுகளை இஸ்லாம் வகுக்கிறது. தொடரந்து குர்ஆனை படித்து வாருங்கள். பல தெளிவுகள் கிடைக்கும்.

    உங்கள் பதிவை பார்த்து நான் போட்ட பதிவு
    http://suvanappiriyan.blogspot.com/2011/12/blog-post_04.html

    Reply
  29. superb song…and superb explanation

    Reply
  30. musadiq

    peace be upon you brother rajesh islam is a peacefull religion its not only a a religion its a life factor , life formula, quran is the holy book and the final revelation gifted to prophet mohammed (pbuh) if u had a chance please bring a quran in english version or a tamil version to read once apart from the religious mentalities hope you will received complete earthly happiness with a complete solution for human in a peacefull way … its sure

    Reply
  31. ameenullah

    முஹம்மத் ஆஷிக் citizen of world~ அவர்களே …..நீங்கள் கூறியது முற்றிலும் சரி.எனக்கு ஹிந்தி தெரியாது.கருந்தேளின் மொளிபெர்ப்பு சரியாக இருக்குமேயானால், இந்தப்பாடலில் ஷிர்க் இடம்பெறவில்லை, ஒரு இடத்தை தவிர என்று நினைக்கிறேன்.//உயர்ந்தவரான, சிறப்புவாய்ந்த அல்லாவே மெய்ப்பொருள்;
    அந்த அல்லாவின் திருத்தூதரான நபியே மெய்ப்பொருள்//
    என்ற இடத்தில் சற்று யோசிக்க வைக்கிறது. anyway people who are here really very intelligent. but they dont know much about islam, they know what the media shows only. if they study islam(not islamic books written by some random people) they will surly understand.

    Reply
  32. Fathima

    சூபிசம் என்றால் என்ன? அனைவரும் விளங்கி கொள்ளக்கூடிய விதத்தில் இலகுவாக விளக்கப்பட்டுள்ளது.

    http://www.mailofislam.com/sufism_tamil.html

    Reply

Join the conversation