War of the Ring – இரண்டாவது ஆண்டு Anniversary

by Karundhel Rajesh June 4, 2014   English films

இரண்டு வருடங்கள் முன்னர் இதே நாளில்தான் எங்கள் ‘War Of The Ring’ இலவச மின்புத்தகம் வெளியிடப்பட்டது. வெளிவந்தவுடன் சூப்பர் ஹிட் ஆனது. அதன் இரண்டாவது ஆண்டு anniversary இது. இந்த நாளில் அந்தப் புத்தகத்தை மறுபடியும் ஷேர் செய்வதில் சந்தோஷம். இதுவரை இந்தப் புத்தகத்தைக் கேள்விப்படாத நண்பர்கள் அதனைத் தரவிறக்கிப் படிக்கலாம். சுருக்கமாக: Lord Of The Rings படங்களைப் பற்றிய ஒரு முழுமையான தொகுப்பு இந்தப் புத்தகம். படங்களைப் பற்றிய அத்தனை விபரங்களும் இதில் சுவாரஸ்யமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறோம்.

இப்போது எண்ணிப் பார்த்தால் வெறித்தனமாக இரண்டு ஆண்டுகள் முன்னர் இந்தப் புத்தகத்தை வெளியிட வேலை பார்த்தது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஒருபக்கம் நான் அமர்ந்து படுவேகமாகக் கட்டுரைகளை எழுதியும் சரிசெய்துகொண்டும் இருக்க, அமெரிக்காவில் அமர்ந்துகொண்டு ஹாலிவுட் பாலா தூங்காமல் கண்டபடி புத்தகத்தை டிஸைன் செய்துகொண்டு இருப்பார். அவருக்கு டிஸைனில் உதவிசெய்ய ஒரு டீம் வேறு இருந்தது. அந்த டீமிடமும் வேலைவாங்கிக் கொண்டும் இருந்தார். அந்த டிஸைனிங் டீமில் இலங்கையைச் சேர்ந்த ஷஜீவன் ஷான் மற்றும் நமது ‘கருப்பு பெட்டி’ மோகன் பொன்ராஜ் ஆகிய இருவரும் இடம்பெற்றிருந்தனர். பூத்தகத்தின் ப்ரூஃப் ரீடிங்கில் பெரிதும் உதவிய நண்பர்கள் – சுப தமிழினியன், கார்த்திகேயன் வாசுதேவன் (கீதப்ரியன்) மற்றும் கொழந்த. இந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்ததும் கொழந்ததான். நேரம் காலம் தெரியாமல் இந்த வேலையில் ஈடுபட்டிருந்த நாட்கள் அவை. சுற்றிலும் எங்கு பார்த்தாலும் லார்ட் ஆஃப் த ரிங்ஸ்தான். கண்ணை மூடினால் அந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் கனவில் வருவதெல்லாம் சாதாரணம்.

280 பக்கங்களில் வண்ணமயமாக இப்படியொரு இலவச மின்புத்தகத்துக்கு நாங்கள் set செய்திருந்த standard இன்னும் உடைக்கப்படவில்லை. தமிழகத்தில் மட்டுமல்ல – இந்திய அளவில் கூட. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், ஹாலிவுட்டில் கூட இப்படி ஒரு இலவச முயற்சி இல்லை என்றே தோன்றுகிறது (உடனடியாக கங்கணம் கட்டிக்கொண்டு யாரேனும் நெட்டில் கண்டபடி தேடி ‘இதோ இருக்கிறது பாருடா’ என்று ஏதேனும் லிங்க் போட்டு கமெண்டில் திட்டவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது). இதோ அந்த மின்புத்தகம் உங்கள் பார்வைக்கு – மறுபடியும். கீழே உள்ள லிங்க் க்ளிக் செய்து இரண்டு வருடங்களுக்கு முந்தைய பழைய ஒரிஜினல் போஸ்ட்டைப் படிக்கலாம். புத்தகத்தைப் புதிதாகப் படிப்பவர்கள் அவசியம் அந்தப் போஸ்டிலேயே உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யலாம்.

Click and Download the Ebook – ‘War of the Rings’

அந்தப் புத்தகத்துக்காக நாங்கள் வெளியிட்ட ட்ரெயிலர்கள் இங்கே இருக்கின்றன. அவற்றையும் பாருங்கள். Njoy the reading. Cheers.

பி.கு

1. எங்கள் புத்தகத்தைப் பற்றி முதலில் தினகரன் வெள்ளிமலரில் தான் செய்தி வந்தது. அதற்குக் காரணமான திரு. சிவராமனுக்கும் இதே நாளில்தான் பிறந்தநாள். எப்படியொரு ஆச்சரியமான கோ-இன்சிடென்ஸ் !!

2. இதோ இரண்டு வருடங்களுக்கு முன்னர் வெளியான டீஸர் பதிவுகள்.

A. War of the Rings Trailer Post
B. War of the Rings Sneak Peak Post

3. தினகரன் வெள்ளிமலரிலும் அதன் பின் கல்கியிலும் (எழுதிய நண்பர் ரமணனுக்கு எங்களது நன்றிகள்) வெளிவந்த War of The Ring பற்றிய சிறப்புக் கட்டுரைகள்.

வெள்ளிமலர் கட்டுரை – 08/06/2012

கல்கி கட்டுரை – 15/07/2012

War of the Ring - Credits

  Comments

6 Comments

  1. அதுக்குள்ள காலம் கடந்து விட்டதா… இந்த புத்தகத்தினால் நான் அடைந்த பயனுக்கு என்ன நன்றி கூறினாலும் பத்தாது.

    அப்புறம்.
    அவ்வளவுதான்.

    Reply
  2. Mithra GK

    At first I don’t have much idea about this film, after starting reading your series I got impressed on the story very much, then I began collecting the film series but before that I want to read that novel fully, so I bought the Lord of the Rings Novel full set including The Hobbit after completing the novel I watched all the 3 movie at one go 🙂
    Now, I realized why you attempted to write a series on Lord of the rings. Chance less film, Excellent transition from novel to film. I greatly enjoyed watching the movie and it was happened only because of you and your way of writing the series. Kudos to your friends who helped you on designing the e-book.
    Keep up the good work!!!

    Reply
    • Thank you for the detailed comment Mithra. It’s your kind of comments which prompts us to work more and more towards quality content. It’s a good thing you read all the books first and saw the movies later. That would really help towards understanding a lot of things indeed. Cheers.

      Reply
  3. Kamalraj

    Sir, i read your blogs regularly. Your work (including LOTR & Foundations of Screenplay ) is awesome. Even professional columnist and writers will not take this kind of effort like you for writing articles. Your writing style is excellent. I(we) also want you to write books through publishing house also( we want you to earn). Your contribution towards film writing in tamil is highly laudable. Keep on writing….. All the very best.

    Reply
    • Rajesh Da Scorp

      Thanks a lot for taking time and composing this comment Kamal. Whenever we are interested towards anything, we would love to write more and more isn’t it? That’s the exact reason I love to write in my blog 🙂

      Reply

Join the conversation