The Dark Knight Rises (2012) – English

by Karundhel Rajesh July 20, 2012   English films

அழுத்தமான கதை கிடைக்கும்வரை பேட்மேன் ஸீரீஸின் மூன்றாம் பாகத்தை நான் எடுக்கப்போவதில்லை. இதுவரை வெளிவந்த எந்த மூன்றாம் பாகத்தை மக்கள் கதைக்காக நினைவுவைத்திருக்கிறார்கள் சொல்லுங்கள்?
— Christopher Nolan.


இந்தக் கட்டுரையைப் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர், பேட்மேன் பற்றிய இந்தக் கட்டுரைகளை வரிசையாகப் படித்துமுடித்துவிடுங்கள் நண்பர்களே. 1 & 3யை எழுதியது இல்யூமினாட்டி. எழுதப்பட்ட வருடம் – 2010.

  1. Batman Begins – The Revelation
  2. Batman: Gotham Knight
  3. The Dark Knight – At War

Batman Begins & The Dark Knight படங்களுக்கு இடையே நடந்த கதைகளே இரண்டாவது கட்டுரை. பேட்மேன் பிகின்ஸில் ரா’ஸ் அல் கூலை ஒழித்த பின்னர், ஜோக்கர் பேட்மேனின் வாழ்வில் குறுக்கிடுவதற்கு முன்னர் நடந்த கதைகள் இவை. வரிசையான 6 அனிமேஷன் கதைகளாக வெளிவந்தன.

ஓகே. மூன்று கட்டுரைகளையும் படித்தாயிற்றா? இப்போது, பேட்மேனின் குணாதிசயங்களைப் பற்றிய கட்டுரைகள் இனி வரப்போவன:

  1. Killing Joke(r) – by Illuminati
  2. The Psychology of the Dark Knight – by கொழந்த

இனி, The Dark Knight Rises படத்தைப் பற்றிய கட்டுரைகள்:

  1. The Dark Knight – Bane
  2. The Dark Knight – மீண்டும் Bane
  3. The Dark Knight – Rises

இத்தனை கட்டுரைகளும் பேட்மேன் பற்றியும் அவனது வில்லன்களையும் பற்றித் தெரிந்து கொள்வதில் முக்கியமானவை. மறக்காமல் இந்த அத்தனை கட்டுரைகளையும் இதே வரிசையில் படியுங்கள்.

முழுதாகப் படித்தவர்கள், அடுத்த பகுதிக்குச் செல்லலாம்.


ஒரு சூப்பர் ஹீரோ படத்தை எப்படி எடுக்கலாம்?இரண்டு வகைகளில் அந்தப் படத்தை எடுக்கமுடியும். முதல் வகையில், ஆரம்பம் முதல் இறுதி வரை வரிசையான ஆக்‌ஷன் காட்சிகள் மட்டுமே இருக்கும். அந்த சூப்பர் ஹீரோவின் மற்ற இயல்பான குணநலன்கள், அவரது பிறருடனான உறவுகள், அந்த ஹீரோவின் ஆழ்மனதில் எழும் பயங்கள் போன்ற விஷயங்கள் அப்படங்களில் காட்டப்பட்டிருக்காது. இந்த ஆக்‌ஷன் சூப்பர்ஹீரோ வகைக்கு, சமீபத்தில் வெளியான The Avengers ஒரு சரியான உதாரணம். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் காட்சிகளை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் இது. இந்த வகைப் படங்களில், படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு ஆக்‌ஷன் காட்சிகள் பிடித்திருந்தால் படமும் கட்டாயம் பிடித்திருக்கும். படத்தின் சில தொய்வான நிமிடங்களை, இந்த ஆக்‌ஷன் காட்சிகள் மறக்கடித்துவிடும். Batman Forever, Fantastic Four, The Amazing Spider-Man, பிற ஸ்பைடர்மேன் படங்கள் ஆகியவையும் இந்தவகைப் படங்களுக்கு உதாரணம்தான்.

இரண்டாம் வகை சூப்பர்ஹீரோ படங்களில், மிக இயல்பான கதை சொல்லப்பட்டிருக்கும். நம்மில் ஒருவர்தான் அந்த சூப்பர்ஹீரோ. ஆகவே நமக்கு இருக்கும் பயங்கள், கோபம், வருத்தம், சோகம் ஆகிய உணர்ச்சிகள் அந்த ஹீரோவுக்கும் உண்டு என்ற முறையில் இந்த குணங்களை மையப்படுத்தும் அழுத்தமான கதை ஒன்றை வைத்தே இப்படங்கள் எழுதப்பட்டிருக்கும். இந்த வகைப் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகள் மக்களின் மனதில் நிற்கும் அளவு, பிற இயல்பான காட்சிகளும் நிற்கும். அந்த ஹீரோவின் மேல் நமக்கு ஒருவகையில் பரிதாப உணர்வே மேலோங்கும். அதேபோல் படத்தில் வரும் வில்லனுக்கும் அதே அளவு முக்கியத்துவமும், கதையும் இருக்கும். Batman Begins, The Dark Knight ஆகிய படங்களே இந்த வகைக்கு உதாரணங்கள். ஓரளவு, முதல் Batman (1989) படத்தையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.

நோலனின் முதலிரண்டு அருமையான, அழுத்தமான பேட்மேன் படங்கள், இந்த மூன்றாவது பாகத்துக்கான எதிர்பார்ப்பை மிக அதிக அளவில் ஏற்றிவிட்டிருந்தன. அதற்கேற்றவகையில், முதல் படத்தில் இருந்து இதுவரை எந்தப் படத்திலும் நோலன் கோட்டையை விட்டதே இல்லை. கிட்டத்தட்ட The Dark Knight Rises படத்தின் அளவு எதிர்பார்ப்பு மிகுந்திருந்த Inception படத்தில், எதிர்பார்ப்பை விஞ்சிய சாதனை புரிந்திருந்தவர் அவர்.

குறிப்பாக, எனக்கு இதில் சந்தேகமே இருக்கவில்லை. முதன்முதலில் வெளிவந்த இரண்டு ட்ரெய்லர்களைப் பார்த்துவிட்டு, படத்தின் மீதான நம்பிக்கை எனக்குப் பொய்த்துவிட்டது – படம் மொக்கையாக இருக்க வாய்ப்புகள் உண்டு – என்று ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன். ஆனால் அதன்பின் வெளிவந்த இரண்டு ட்ரெய்லர்கள், படத்தைப் பற்றிய தகவல்கள் – குறிப்பாக Bane பற்றிய விபரங்கள் – ஆகியவை மறுபடியும் எனது எதிர்பார்ப்பை ஏற்றிவிட்டுவிட்டன.

ஆகவே, என்னால் முடிந்த அளவு பேட்மேன் பற்றி ஸ்டடி செய்துவிட்டு, இந்தப் படத்துக்கு இன்று காலையில் முதல் நாள் முதல் ஷோ சென்றுவிட்டேன். முதலில் சென்ற மார்த்தஹள்ளி இன்னவேட்டிவ் மல்ட்டிப்ளெக்ஸ், பத்தரை மணிக்கு சொன்னபடி ஷோவை ஆரம்பித்தனர். ஆனால் முதலில் காண்பிக்கப்பட்ட The Great Gatsby, Man of Steel மற்றும் The Campaign ட்ரௌலர்கள் பச்சையாக இருந்தன. அதாவது, மேட்ரிக்ஸ் படத்தை இன்னும் அதி தீவிர இண்டென்ஸிடியோடு பார்த்த எஃபக்ட். இதன்பின் படம் துவங்கியபோதே இந்தக் கோளாறு அதிலும் தொடர்ந்ததால், ஆடியன்ஸின் கூச்சலால் படம் நிறுத்தப்பட்டு, ஒரு மணி நேரம் கழித்து அந்த காலைக்காட்சி கேன்ஸல் செய்யப்பட்டு, பணம் திரும்பக்கொடுக்கப்பட்டது. அப்போதே மணி கிட்டத்தட்ட மதியம் பனிரண்டு.

இந்தப் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்கவேண்டும் என்பது எனது ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு உறுதிமொழிகளில் ஒன்று.

இதன்பின் அவரசமாக ஷ்ரீக்கு ஃபோன் செய்து, கருடா மாலில் உள்ள ஐநாக்ஸில் மதியம் ஒன்றேகால் மணி ஷோவுக்கு டிக்கட் எடுக்கச்சொல்லி, அதில் 330/- பிரிவில் இருந்த ஒரே ஒரு டிக்கெட்டை எனக்காகவே காத்துக்கொண்டிருந்ததுபோல் லபக்கென்று கவ்விக்கொண்டு, பிடி ஓட்டம் மார்த்தஹள்ளியிலிருந்து MG ரோடுக்கு. தியேட்டரில் நுழைந்து, அங்கே இருந்த சாண்ட்விச் மற்றும் ஆரஞ்ச் ஜூஸை விழுங்கிவிட்டு, உள்ளே சென்று அமரும்போது மணி மதியம் ஒன்று.

படம் துவங்கியது.


படம் ஆரம்பிக்கும்போது வரும் Bane ஸீக்வென்ஸ், ஆல்ரெடி அமெரிக்காவில் பல தியேட்டர்களில் ப்ரிவ்யூவாக காட்டப்பட்டுவிட்டது. இணையத்திலும் வெகுவாக அந்தக் காட்சி உலவுகிறது.  Baneஆடியன்ஸுக்கு அறிமுகமாகிறான். தப்பிக்கிறான். அவனுடன் ஒரு மருத்துவரையும் அழைத்துக்கொண்டு. ஏன்? இதற்கு விடை, படத்தின் இரண்டாம் பாதியில் இருக்கிறது.

இதன்பின், ஹார்வி டெண்ட்டின் எட்டாவது நினைவுதினத்தைக் காண்கிறோம்.  அங்கே கமிஷனர் கோர்டன் ஹார்வியைப் பற்றிய உண்மைகளை (The Dark Knight க்ளைமேக்ஸின் சம்பவங்கள் – ஹார்விதான் டூ ஃபேஸ் என்பது) எழுதிவைத்துக்கொண்டு, அவைகளைப் பிறிதொரு சமயத்தில் படிக்கப்போவதாக சொல்லிவிட்டு, ஹார்வியைப் புகழ்வதைக் காண்கிறோம். இதனை, மேலே மாடியிலிருந்து ஒரு நிழலுருவம் கவனிக்கிறது. அது – ப்ரூஸ் வேய்ன்.

இதன்பின் நகரில் புதியதொரு பெண்ணின் அறிமுகம். ஸெலினா கேய்ல் என்னும் அவள்தான் Catwoman. இவள், ப்ரூஸ் வேய்னின் மாளிகையில் நுழைந்து, ப்ரூஸின் கைரேகைகளை சாமர்த்தியமாக நகலெடுத்து விடுகிறாள்.  ஏன்?

இதற்குப் பிறகு ஒவ்வொரு சம்பவமாக நடந்து, Bane கோதமின் தவிர்க்கமுடியாத குற்றவியல் சக்கரவர்த்தியாக உருவெடுக்கிறான். முடிந்தவரை முயன்றும், பேட்மேனால் அவனைத் தடுக்க முடிவதில்லை. காரணம், Baneன் பலம், பேட்மேனின் கற்பனைக்கெட்டாதவாறு இருக்கிறது.

இதற்கு இடையே, நகரின் போலீஸ் துறையில், மிக அடிப்படை வேலையில் இருப்பவன் ஜான் ப்ளேக். கமிஷனர் கோர்டன் பேனின் பிடியில் இருந்து தப்பிக்கையில் அவரைக் காப்பாற்றுகிறான். இதனால் டிடெக்டிவாக கோர்டனால் பதவி உயர்வு பெறுகிறான்.

கோதம் நகரில் மிராண்டா டேட் என்ற பெண், வேய்ன் எண்டர்ப்ரைஸஸ் நிறுவனத்தின் முக்கியமான பொறுப்பில் இருப்பவள். படத்தின் இரண்டாம் பாதியில் ப்ரூஸிடமிருந்து வேய்ன் எண்டர்ப்ரைஸஸ் நிறுவனத்தை இவள்தான் நடத்தப்போகிறாள்.

ப்ரூஸின் நம்பிக்கைக்குகந்த வேலையாள் ஆல்பர்ட், ப்ரூஸை விட்டுப் பிரிகிறார். ஏன்?

Baneனால் அடிபட்டு மருத்துவமனையில் இருக்கும் கமிஷனர் கோர்டனை ப்ரூஸ் சென்று பார்க்கிறார் (முகத்தை மறைத்துக்கொண்டு). அப்போது, பேட்மேன் இனி வரப்போவதில்லை என்று சொல்கிறார். ஆனால் கமிஷனரோ, இந்தப் புதிய வில்லனை பேட்மேனால் மட்டுமே சமாளிக்க முடியும் என்று சொல்லி, பேட்மேன் வந்தாகவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். ஆனால், ப்ரூஸின் உடல், பழைய திறனை இழந்துவிட்டது (பார்க்க – The Dark Knight Returns என்ற அட்டகாசமான காமிக்ஸ்) என்று மருத்துவர் சொல்கிறார்.

இதுதான் படத்தின் முதல் இருபது நிமிடங்களின் கதை.

இப்படித்தான் ஆரம்பிக்கிறது The Dark Knight Rises. இதுவரை படம் சர்ரென்று நகர்ந்துவிடுகிறது. ஆனால்?

இதற்கு மேல், படத்தின் கதை மிக எளிதாக யூகிக்க முடிந்துவிடுகிறது. குறிப்பாக, பேட்மேன் காமிக்ஸ்கள் படித்திருக்கும் நண்பர்களால், மிராண்டா டேட் உண்மையில் யார்? ஜான் ப்ளேக் என்ற போலீஸ்காரன் என்னவாக ஆகப்போகிறான்? போன்ற கேள்விகளுக்கு மிக மிக மிக எளிதாக பதில் சொல்லிவிட முடியும். (உண்மையில், எனது Bane பற்றிய கட்டுரையின் ஃபேஸ்புக் பின்னூட்டங்கள் ஒன்றில், ஜான் ப்ளேக் யார் என்று நான் சொல்லியிருந்தேன். யூகத்தின் அடிப்படையில். அது மிகக் கச்சிதமாக இப்படத்தில் நடக்கிறது).

அதேபோல், அதே கட்டுரையில், Baneன் பின்னணியைப் பற்றி காமிக்ஸ் கதையை விளக்கியிருந்தேன் அல்லவா? அதை நன்றாகப் படித்துவைத்துக்கொள்ளுங்கள். பேன் எப்படிப் பிறந்தான்? எங்கு வளர்ந்தான்? என்பதெல்லாம் படத்தில் காண்பிக்கப்படுகிறது. அதேபோல், அந்த காமிக்ஸ் கட்டுரையின் மிக முக்கியமான விஷயம் ஒன்று – இதுவரை வேறெந்த  வில்லன் கதாபாத்திரமும் பேட்மேனுக்கு செய்யாத ஒன்று – காமிக்ஸில் இடம்பெற்றதுபோலவே அப்படியே படத்தில் வருகிறது.

இத்தனை விஷயங்கள் இருந்தும் – மேலே நோலன் சொன்னதுபோன்ற அழுத்தமான கதை, இந்தப் படத்தில் மிஸ்ஸிங். இதனால், படத்தின் பல காட்சிகள் நமது நினைவில் தங்க மறுக்கின்றன. இரண்டாம் பாதி, சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் அதிலும் பல லேசான சம்பவங்கள் இருப்பதால், நோலனுக்கு சரக்கு தீர்ந்துவிட்டதோ என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.  படத்தில் பல loose ends இருக்கின்றன. அவற்றுக்கு விடைகள் அளிப்பதில் ஆடியன்ஸை திக்குமுக்காடச் செய்யவேண்டாமா? ஆனால் எல்லாருக்குமே தெரிந்த விஷயங்களையே நோலன் சொல்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் அலுப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

படத்தின் ஒரு பாஸிடிவ் விஷயம், ப்ரூஸ் வேய்னைப் பற்றிய பல காட்சிகள். இப்படத்தில் பேட்மேன் வரும் காட்சிகள் குறைவுதான்.

படத்தின் வில்லன் Bane பற்றி நோலன் வெகுவாகப் புகழ்ந்திருந்தார். அவன் ஒரு புத்திசாலி, மதியூகி என்று. ஆனால், அதற்கான ஒரு ஸீன் கூட படத்தில் இல்லை. அவன் ஒரு முரடன் போலவேதான் காட்டப்பட்டிருக்கிறான்.

The Dark Knight படத்தைப் பார்த்துவிட்டு இந்தப் படத்துக்கு வரும் நண்பர்கள், கோபம் அடையலாம். டார்க் நைட் படம் போன்ற இன்னொரு படம் நோலனாலேயே இனி எடுக்க முடியாது. அது ஒரு miracle. அந்த அனுபவம் இப்படத்தில் கொஞ்சம் கூட இருக்காது.

இந்தத் திரைக்கதையில் இவ்வளவு ஓட்டைகள் இருப்பதற்கு என்ன காரணம் என்று யோசித்தேன். நோலனின் திரைவாழ்வில் அவரது திரைக்கதைகள் இதுவரை அவரைக் கைவிட்டதே இல்லை. இதுதான் முதல். அவரது திரைவாழ்வில், மொக்கைப் படம் என்ற பதமே இதுவரை இருந்ததில்லை. அதிலும் இந்தப் படம் முதலாவதாக இருந்துவிடுமோ என்று தோன்றுகிறது.

இதற்கு மேல் இன்னொரு பாகம் நோலனோ அல்லது வேறு யாராவதோ எடுத்தால் – The Dark Knight ஏற்படுத்தி வைத்திருக்கும் மரியாதை சுக்கு நூறாகச் சிதறிவிடும். ஆகவே இனிமேல் பேட்மேனை தொந்தரவு செய்யாமல் இருப்பதே மேல். ஆனால், இனியும் சில படங்கள் இதே வரிசையில் வரக்கூடும் என்பதையே இந்தப் படம் நமக்குச் சொல்கிறது. அப்படி வந்தால் – டெர்மினேட்டர் வரிசை போல, மம்மி வரிசை போல இந்த பேட்மேன் வரிசையும் மக்கள் எள்ளி நகையாடும் வரிசையாகிவிடும். ஆதலால் இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது.

படத்தைப் பார்க்கலாமா வேண்டாமா?

படத்தில் அவ்வப்போது பளிச்சிடும் நோலனின் முத்திரைகளுக்காக, இப்படத்தைப் பார்க்கலாம். குறிப்பாக, Baneன் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் கோதம் நகரம். அதேபோல் படத்தின் ஆரம்ப சில நிமிடங்கள். ஆனால், The Dark Knight படத்தை உங்கள் மனதில் இருந்து துடைத்து எறிந்துவிட்டு இப்படத்தைப் பார்ப்பது உத்தமம்.

பி.கு – தொடர்புடைய எனது அடுத்த கட்டுரை – Why is The Dark Knight Rises Nolan’s Worst yet? (தமிழ்தான்).

  Comments

40 Comments

  1. என்ன சார், இப்படி குண்டைத் தூக்கிப் போட்டுட்டீங்க? நீங்கெல்லாம் சேர்ந்து ஏத்திவிட்ட ஹைப்ல எல்லார்கிட்டேயும் இந்தப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும்னு பெட் கூட கட்டிட்டேன்… இப்படி ஆயிருச்சே?!

    Reply
  2. வாங்க எல்லாரும் சேர்ந்து நோலனுக்கு மொட்டை கடுதாசி அனுப்பலாம். அந்தாளைத்தான் சொல்லணும் 🙂

    Reply
  3. சித்திரத்தை உடைத்துவிட்டு இந்த படத்தை பார்ப்பது உத்தமம் என்ற உங்கள் வரிகள் என்னை மிகவும் யோசிக்க வைத்தது கருந்தேள் ! ஏனெனில் நாங்கள் அப்படி பழகவில்லை. மிகவும் சிரமமான ஒரு விஷயம். முயற்சித்து பார்க்கிறோம்! அப்புறம் படம் மொக்கையாக இருக்க வாய்ப்புண்டு என்று நீங்கள் சொன்னது என் மனதில் ஏறவே இல்லை…..நோலன் அப்படி தவறை செய்திருந்தாலும், படத்தை முழு ஈடுபாட்டோடு ரசிக்கும் மன நிலையிலதான் நான் இருக்கிறேன்……….இன்று ரிசர்வ் செய்த டிக்கெட்டில் படம் பார்க்க முடியவில்லை. அவசர வேலை காரணமாக நான் ஓடிஸா வந்துவிட்டேன்! இன்னும் இரண்டு நாளில் பார்த்துவிடுவேன். காசு வீணானது காவ்ளையில்லை. படம் பார்க்க mudiyavillaiye என்ற varuththamthaan melongi nirkiradhu. adharku kaaranam neengalthaan…….

    Reply
  4. There is nothing wrong with the movie Rajesh, it is all because of your expectations.

    The movie as the end to the series is absolutely fine.

    Reply
  5. A lone gunman dressed in riot gear burst into a movie theater in Aurora, Colo., at a midnight showing of the Batman film “The Dark Knight Rises” and methodically began shooting patrons, killing at least 12 people and injuring at least 38.

    Reply
  6. விமர்சனத்தில் இருந்து உங்களுடைய ஏமாற்றம் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது?

    உங்களுடன் சேர்ந்து ஏமாந்தது நாங்களும்தான்?

    உங்களுடைய non linear post எல்லாம் படித்து hype ஏறி போயி கிடந்தேன்?!

    மத்த review எல்லாம் ஏறக்குறைய இதையேதான் சொல்லுகின்றன? action sequence um கம்மியாம்?

    அட போங்கப்பா? ஓவரா எதிர் பார்த்த இப்படிதான்?

    so better luck next time chris nolan அப்படிங்கலாமா?

    Reply
  7. இந்த வீக் எண்டு …. 120 ரூவா டிக்கெட் பிளஸ் 20 ஓவா சர்வீஸ் சார்ஜ் …..மொத்தம் ஏழு டிக்கெட் கடவுளே …..என் நண்பர்களிடம் இருந்து என்னை காப்பாற்று …..

    Reply
  8. @anaon8 – நிஜமாவே சொல்லப்போனா, படத்தின் அத்தனை ஆங்கில ரிவ்யூக்களையும் படித்துவிட்டே இந்தப் படத்துக்கு நான் போனேன். படத்துல என்ன நடக்கப்போவுது என்பது எனக்கு நல்லாவே தெரிஞ்சே இருந்தது.

    ஆனாலும் நோலன் எங்கல்லாம் கோட்டை விட்டாருன்னு என்னால சொல்ல முடியும். அதைப்பத்தி ஒரு போஸ்ட் போடலாமான்னு யோசிச்சிக்கினே இருக்கேன். உண்மைல இந்தப் படத்துக்குப் போகும்போது எனக்கு எதிர்பார்ப்பே இல்ல…. but anyway, every person has a view on the movie. Yours is a good one, whereas mine, an average one. Nothing wrong, bro

    @ seethavathar – I too read the news.. My heart goes out for the victims. Let their souls rest in peace… too bad 🙁

    @angusamy – நானுமே ஹைப் ஏறியில்ல கிடந்தேன்? ஆனா அங்கில ரிவ்யூக்கள் படிக்க ஆரம்பிச்சப்புறம் கொஞ்சம் கொஞ்சமா படத்தை புரிஞ்சிக்கினேன். கவலைய உடுங்க.. நீங்க போயி பாருங்க.. அப்பால உங்க கருத்தை சொல்லுங்க. உங்களுக்கு ஒருவேளை பிடிக்கலாம்.

    Reply
  9. @ இளம்பரிதி – ஹா ஹா ஹா 🙂

    Reply
  10. Show started at 9.40. So far so good..

    Reply
  11. Show started at 9.40. So far so good..

    Reply
  12. Show started at 9.40. So far so good..

    Reply
  13. Show started at 9.40. So far so good..

    Reply
  14. ஆங்கில review எல்லாம் நல்லத்தான் போட்டு இருக்காங்க? 86% on rotton tomato and many gave them high marks

    அனால் chris nolan எல்லாம் ரஜினி மாதிரி (உங்களுக்கு pidikumaanu theriyalai)

    ச்சும்மா ஹிட்டா கொடுத்தா பத்தாது சூப்பர் டூப்பர் மரண ஹிட்டா இருக்கனும்

    Reply
  15. I was waiting for your review from afternoon, still i will see once released in UAE. Gaja 🙁 🙁

    Reply
  16. படத்தின் திரைக்கதை ஓட்டைகளைப்பற்றி ஒரு பதிவு போடுங்கள்,

    Reply
  17. எனக்கு ஏனோ Batman Begins தான் பிடித்திருந்தது. இதை dark knightக்கு அடுத்து பார்த்ததால் கூட இருக்கலாம். dark knight போல் எதிர்பார்ப்பு இல்லாதலால் எனக்கு நன்றாக இருக்கும் போலவே…

    Reply
  18. @Ravikumar Tirpur: மாசம் 1500 ரூவா இன்டர்நெட்டுக்கு குடுத்துட்டு, நோலனோட திரைக்கதையில இருக்கற ஓட்டைய அடைக்க முடியும்னு நெனைக்கறீங்க. உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள். முடிஞ்சா நீங்க நோண்டுங்க. ஏன் தேவைல்லாம கருந்தேள நோண்டி விடரிங்க?

    Reply
  19. @ rajesh

    //@anaon8 – நிஜமாவே சொல்லப்போனா, படத்தின் அத்தனை ஆங்கில ரிவ்யூக்களையும் படித்துவிட்டே இந்தப் படத்துக்கு நான் போனேன். படத்துல என்ன நடக்கப்போவுது என்பது எனக்கு நல்லாவே தெரிஞ்சே இருந்தது.//

    அப்பறம் ஏன் சார் சினிமாக்கு போறீங்க? கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு இருந்துரலாம்ல? படத்த பாத்துட்டு என்ன வேணா எழுதுங்க. பாக்கறதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் படிச்சுட்டு, படத்தையும் பாத்துட்டு, குத்துதே கொடையுதேனு புலம்புரதுல என்ன அர்த்தம்?

    ஒரு படத்த உங்க அளவுக்கு psycho -socio -economic ரேஞ்சுல எனக்கு பாக்க தெரியாது. ஆனா ரசிக்க தெரியும். yea i too accept that there are cliches. but கிளிஷே தான் சினிமா. ஏன் எப்ப பாத்தாலும் வெள்ளை துணியிலையே படம் காட்டரிங்கன்னு எப்போவாவது தியேட்டர்காரன் கிட்ட சண்டை போட்டுருக்கிங்களா? அதுவும் கிளிஷே தான சார்? நீங்க சொல்ற மாதிரி பேட்மேன் காமிக் படிச்சவங்களால தான் கதைய யூகிக்க முடியும். கரெக்ட். நாங்கள்லாம் இன்னும் கன்னித்தீவுல தான் இருக்கோம்.

    நீங்க சிட் பீல்ட் லாம் படிச்சுட்டு இருக்கீங்க. நான் அத ரொம்ப சிம்பிளா புரிஞ்சுகிட்டேன். ஒரு திரைக்கதை 60 -70 சீன் இருக்கட்டும். படம் ஹிட் ஆகுறதுக்கு தேவை 15 -20 சீன் தான். all these should evoke some emotions on you. Be it a smile, anger, frusturation, despair, agony or trauma. அந்த bat symbol வர்ற ஒரு சீன் போதும். நான்லாம் எந்திரிச்சு நின்னு விசில் அடிச்சேன். ஒரு ரசிகனுக்கு தேவை அதுதான்.

    And one more thing. A film is not science. If it was/is by anyway, no one could make a bad movie and there will be no breed called critics.

    Reply
  20. நடுநிலையான விமர்சனம்.

    இதுக்கு முன்னால் அதிக ஹைப் கொடுத்திருந்தும் அதை ஜஸ்டிபை செய்யாமல் நீட்டாக எழுதி இருக்கிறீர்கள்.

    நோலன் இப்படி கவுத்திட்டாரே :-(((

    Reply
  21. After watching the movie yesterday I updated my FB status “This is the worst Nolan movie. Bad story, screenplay, poor villain, Batman & Catwoman come to the right place, just in time to save good people which will put to shame even a Tamil movie hero. Joker was a menacing villain. He slowly terrorizes people and also the audience. So when he asks people to leave Gotham you know it’s possible. Here Bane directly terrorizes them without properly showing how. The superpower US is unable to do anything for 4-5 months. There was not even an infiltration by US. We sit in disbelief. The emperor is naked.”

    Reply
  22. Inspite of all negative reviews including urs, i went for the movie today n jus came back. I enjoyed the movie and didnt mind abt the flaws ! There can nvr be a perfect movie Rajesh. Even the dark knight has flaws but its jus that we didnt find that out ! Sometimes not knowing so much abt a movie will help enjoying ! Cheers 🙂

    Reply
  23. The Dark Knight விட பல மடங்கு அருமையான படம் இது.இந்த மொக்கை பதிவுக்காக உங்களுக்கு ஒரு கொட்டு!!!

    Reply
  24. wat i feel is, its the good ending rather than any other triology. Joker is the second part hero. Bruce wayne and story is the hero of final part. pls dnt suggest negative feedback for this film. i really like to see this film once again because of christopher nolan. i like the sentimental part which is better than previous nolan movie. atlast the final clip, i have stand and clap…

    Reply
  25. ரொம்ப யோசிக்காம ரொம்ப எதிர்பார்க்காம நெகடிவ் விமர்சனங்களை எல்லாம் மறந்து விட்டு இந்த படத்தை தமிழில் பார்த்தேன். நல்லா இருக்கு .

    Reply
  26. நண்பரே உங்களது ஏமாற்றத்திற்கு காரணமாக நான் நினைப்பது
    நீங்கள் படம் வெளிவருவதற்கு முன்பே பிரான்க் மில்ளீர் இன் அனைத்து காமிக்ஸ் படித்து பதிவாக இட்டு விட்டீர்கள்.
    Bane தான் வில்லன் என தெரிந்த உடனே அவனை பற்றியும் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து விட்டீர்கள்
    பின்பு நீங்கள் சென்று படம் பார்த்த போது உங்களுக்கு ஏமாற்றமாக இருந்துள்ளது.இதற்கு யாரை குற்றம் சொல்வது.
    தவறாக இருந்தால் மன்னிதுக்கொளுங்கள் நண்பரே.
    எனக்கு படம் மிகவும் பிடிதிருந்தது.

    Reply
  27. நான் பேட்மேன் வெறியன், நோலனின் பரம வெறியன் என்றெல்லாம் உணர்ச்சி வசப்படாமல், அமைதியாய், ஒரு சாதாரண ஆக்ஷன் பட இரசிகனாய் படம் பார்த்தால் நிச்சயம் பிடிக்கும்!

    Reply
  28. அவனுங்கல விடுங்க பாஸ்
    வீராசாமி பெண் சிங்கம் உளியின் ஓசை கூட சூப்பர் படம்னு சொலுவாங்க ,,,,

    Reply
  29. viduthali karadi ,ivan arasiyale pesugiraan manna.karundhel ityle work panrathula ungaluku enna kadupu pulavarey.

    Reply
  30. Fanaticism is a belief or behavior involving uncritical zeal, particularly for an extreme religious or political cause or in some cases sports, or with an obsessive enthusiasm for a pastime or hobby (நான்றி: விக்கி)

    Reply
  31. @கொழந்த
    தனக்கு தானே ஹாலிவுட் கோலிவுட் டீக வுட் என பட்டம் சூட்டி கொள்வதற்கு விக்கி இன்னா மாமு சொல்லுது??
    *
    சேகர்
    எனக்கு இவர் மீது கோபம இல்லை 🙂
    ஏதோ ரோஜர் எபர்ட் ரேஞ்சுக்கு தங்களை தாங்களே(இவர் மட்டுமல்ல ப்ளாகர் உலகில் பலர் அப்படி கிளம்பியுள்ளனர்) பில்ட் செய்ய முயல்வதைதான் கண்டிக்கிறேன்
    @ தகாரா
    ஹா ஹா ஹா

    Reply
  32. // ஏதோ ரோஜர் எபர்ட் ரேஞ்சுக்கு தங்களை தாங்களே(இவர் மட்டுமல்ல ப்ளாகர் உலகில் பலர் அப்படி கிளம்பியுள்ளனர்) பில்ட் செய்ய முயல்வதைதான் கண்டிக்கிறேன் //

    ?????? Roger Ebert தான் உங்களுக்கு தெரிஞ்ச பெரிய “க்ரிட்டிக்” க்கா மாமு……….ஐயோ….பாவம். மணிரத்னம் தான் இந்தியாவின் சிறந்த டைரக்டர் ன்னு சுத்திக்கினு இருக்குற கோஷ்டி போல நீங்க……அவரோட பல வஸ்தாதுகள் இருக்காங்க. சொம்மா ஒண்ணியும் தெர்யாம சு.சாமி கணக்கா நாட்ட திருத்துற வேலய வுட்டுட்டு வேற வேலய பாருங்க..சின்னபுள்ளதனமா எபர்ட் – நோலன் ன்னு ஜல்லி அடிக்க வேண்டாம்…

    Reply
  33. ///தனக்கு தானே ஹாலிவுட் கோலிவுட் டீக வுட் என பட்டம் சூட்டி கொள்வதற்கு விக்கி இன்னா மாமு சொல்லுது??/////

    விடுதலை கரடி ன்னு பேரு வச்சுக்க என்ன சொல்லுதோ அதையே தான் சொல்லுது…யார பத்தியும் ஒன்னும் தெரியாம சைக்கோ தனமா கமெண்ட் போடுரதுக்குனே ஒரு கோஷ்ட்டி சுத்திட்டு இருக்கு……..

    Reply
  34. நண்பர்களே… நோலனின் தாக்கம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் அழுத்தமாகப் பதிந்திருப்பதையே இந்தக் கட்டுரையின் பின்னூட்டங்கள் காட்டுகின்றன. எனக்கு இந்தப் படத்தில் குறைகளாகத் தெரிந்தவற்றை தனியாகவே ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறேன். அதில் இருக்கும் விஷயங்கள், இக்கட்டுரை பற்றி என்னுடன் கோபத்துடன் விவாதித்தவர்களுக்கான புரிந்துணர்வுடன் கூடிய பதிலாக இருக்கும் என்று நம்புகிறேன். அப்படியும் சமாதானம் ஆகவில்லை என்றால் என்னுடைய Facebookல் கருத்து தெரிவியுங்கள். அங்கே பேசலாம். நன்றி

    Reply
  35. படம் பார்த்து விட்டேன் நண்பரே,
    ஆனால் படம் கொஞ்சம் சுமார் தான்.
    விமர்சனம் அருமை.
    சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே
    http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

    Reply
  36. total waste of time…….watching tis movie…… its nt a nolan movie…..

    Reply
  37. Accust Here

    இதுக்கு முன்னாடி காமிக்ஸ் பத்தி ஒன்னும் தெரியதனால எனக்கு ரொம்ப புடிச்சுஇருந்தது

    Reply

Join the conversation