Why is The Dark Knight Rises Nolan’s worst yet?

by Karundhel Rajesh July 22, 2012   English films

இணையத்தில் The Dark Knight Rises படத்தைப் பற்றிய விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அது நோலனின் (இதுவரையில்) மோசமான படம் என்று நானும் நண்பர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறோம். அது மோசமான படமில்லை. இது நல்ல படம்தான் என்று பிற நண்பர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கையில், இந்தப் படம் பற்றிய எனது கருத்துகளை இன்னமும் விபரமாகப் பகிரலாம் என்று தோன்றியது. இப்படத்தைப் பற்றிய ஒரு சிறிய அனாலிஸிஸ் இது. என் அளவில். இதனால் எனது கருத்தை மற்ற நண்பர்களின் மீது நான் திணிப்பதாக எண்ணிக்கொள்ள வேண்டாம். ஒரு படைப்பு பொதுவெளியில் வைக்கப்பட்டுவிட்டால், விமர்சனங்கள் என்பது சகஜம்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஒரு படத்தைப் பாராட்டி மட்டுமேதான் எழுதவேண்டும்; பிடிக்கவில்லை என்று சொல்லிவிடக்கூடாது என்று யாரும் சொல்லிவிட முடியாது. பிடித்தால், ஏன் என்றும் பிடிக்கவில்லை என்றால் ஏன் என்றும் தெளிவாக விளக்கிவிட்டால், தீர்ந்தது பிரச்னை.

இந்தக் கட்டுரை, The Dark Knight Rises படத்தைப் பார்த்துவிட்ட நண்பர்களுக்கு மட்டுமே. இதுவரை படம் பார்க்காதவர்கள், படத்தைப் பார்த்துவிட்டு அதன்பின் இதனைப் படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். காரணம், இதில் பல spoilers இருக்கின்றன. ஆகவே சஸ்பென்ஸ் போய்விடக்கூடும்.

சரி. ஆரம்பிக்கலாம்.

நோலனைப் பற்றி நமக்கெல்லாம் தெரிந்திருக்கும் விஷயம் என்ன? எந்த ஒரு விஷயத்தால் நோலன் நம் எல்லாருடைய மனதிலும் ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார்?

திரைக்கதை.

இதுவரை நோலனின் திரைக்கதைகள் சோடை போனதில்லை. பெரும்பாலான அவரது படங்கள், அவரது சகோதரர் ஜொனாதன் நோலனாலும் க்ரிஸ்டோஃபர் நோலனாலும் சேர்ந்தே எழுதப்பட்டவைகள் என்று நமக்குத் தெரியும். இவர்கள் இருவரும், திரைக்கதை நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தவர்கள். ஒவ்வொரு படத்திலும், படம் பார்க்கும் ஆடியன்ஸை எப்படியெல்லாம் வசியப்படுத்தவேண்டும் என்ற ரகசியம் அறிந்தவர்கள். ஒரு உதாரணத்துக்கு: The Prestige படத்தை சொல்லலாம். படம் பார்க்கும் எல்லோருக்குமே ராபர்ட் ஆஞ்ஜியர் மற்றும் ஆல்ஃப்ரெட் போர்டன் ஆகியவர்களுக்கிடையே இருக்கும் விரோதம் மற்றும் ஒருவரையொருவர் வீழ்த்தத் துடிக்கும் வெறி ஆகியவை முதலிலேயே புரிந்துவிடும். இந்தக் களத்தில், இதற்கு மேல் இன்னொரு தளத்தில் இவர்களின் ஆபத்தான விளையாட்டு எழுதப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறை இவர்கள் இன்னொருவரை வீழ்த்தும்போதும் அந்த சுவாரஸ்யம் கட்டாயம் படம் பார்ப்பவர்களை தொற்றிக்கொள்ளாமல் இருக்காது. அதுதான் திரைக்கதை. அதுதான் மேஜிக். அந்த திரைக்கதை மாயாஜாலத்தை முழுதுமாகக் கற்றுத் தேர்ந்தவர்களே இந்த நோலன் சகோதரர்கள்.

இவையெல்லாவற்றையும் மீறி, ப்ரெஸ்டீஜ் படத்தில் ஒரு மெகா சஸ்பென்ஸ் இருக்கிறது. ஓரளவு அதைப்பற்றி ஆடியன்ஸ் யூகிக்கமுடிந்தாலும், க்ளைமேக்ஸில் அது சம்மட்டி அடியாக நமது மண்டையில் இறங்கியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

இதேபோல, Inception படத்தை எடுத்துக்கொள்ளலாம். Suspension of the disbelief என்ற ஒரு வாக்கியத்தை அடிக்கடி நமது ஸிட் ஃபீல்ட் சொல்வார். அதாவது, திரையில், என்னதான் நம்பமுடியாத விஷயங்கள் காட்டப்பட்டாலும், அப்படம் ஓடிமுடியும் வரை, அவையெல்லாம் நிஜமாக நடக்க நூறு சதவிகித சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று ஆடியன்ஸை நம்பவைத்து, படத்தில் மூழ்கடித்துவிடுவது. இதிலும் நோலன் மன்னன். இன்ஸெப்ஷன் படத்தின் மூன்று தளங்கள்: அவற்றில் அதே கதாபாத்திரங்கள்: அவர்களுக்குள் நிகழும் பிரச்னைகள். ஒரு காட்சி கூட அலுக்காத படம் அது.

Memento – இப்படத்தைப் பற்றி ஒரு முழுநீள கட்டுரையே எழுதலாம்.

இவற்றையெல்லாம் நினைவு கூர்ந்தால்தான் The Dark Knight Rises படம் ஏன் நோலனின் மோசமான படமாக அமைகிறது என்பதை அலச முடியும்.

இதோ என் கருத்துகள்.

1. படத்தின் ஆரம்பத்தில் சக்திவாய்ந்த வில்லனின் அறிமுகம் என்ற விஷயம், Batman Begins படத்திலிருந்தே துவங்கி, The Dark Knight படத்தில் தொடர்ந்து, The Dark Knight Rises படத்திலும் வந்திருக்கிறது. ஆனால், இதற்கு முந்தைய இரண்டு படங்களில், அந்த வில்லன்களின் கதை நமக்குத் தெரிந்திருந்தது. ஏன் அவர்கள் வில்லனானார்கள் என்பது அவர்களின் வாய்மொழியாகவே அப்படங்கள் நெடுக விபரமாக வருகிறது (Ra’s Al Ghul ஒரு உதாரணம். ஜோக்கர் இன்னொரு உதாரணம். அதேபோல் ஹார்வி டெண்ட் – டூ ஃபேஸின் கதையையே நாம் பார்த்திருக்கிறோம்). இப்படி இந்த வில்லன்களுக்குத் தெளிவான ஒரு premise  – ஒரு களன் இருந்தது. சும்மா ஜாலியாக கோதம் நகரினுள் வந்து, வில்லனாக மாறினேன் என்று இவர்கள் யாரும் சொல்ல மாட்டார்கள். பேட்மேனுக்கு எத்தனை நியாயமான காரணங்கள் இருக்கின்றனவோ, அதே அளவு காரணங்கள் இந்த வில்லன்களுக்கும் இருந்தன.

ஆனால், The Dark Knight Rises படத்தின் பிரதான வில்லனாக நமக்கெல்லாம் காட்டப்படும் Bane ஏன் கோதம் நகருக்கு வருகிறான்? அதனை அவன் கைப்பற்றத் துடிக்கும் காரணம் என்ன? ஒரே காரணம்தான். அவனது தந்தையான Ra’s Al Ghul இறந்ததால், அவரது லட்சியத்தை Bane தொடர்கிறான். ஆனால் அதுவும் பொய் என்பது க்ளைமேக்ஸில் தெரிந்துவிடுகிறது. Ra’s Al Ghulலின் குழந்தை ஒரு பெண். அவள் பெயர் Talia Al Ghul. அவள்தான் படத்தில் வரும் மிரண்டா டேட் என்பது குழந்தைக்குக்கூட புரிந்துவிடும் அளவுதான் இப்படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, Batman காமிக்ஸ்கள் படித்தவர்களுக்கு இது தலைகீழ்ப்பாடம்.

இந்த இடத்தில் இன்னொன்று – Batman காமிக்ஸ் படித்தவர்களுக்கு மட்டும்தான் இப்படம் மொக்கை என்று ஒரு கருத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அது தவறு என்றே சொல்வேன். ஏனெனில், Batman என்பதே ஒரு காமிக்ஸ் கதாபாத்திரம்தான். அப்படி இருக்கையில், அந்தக் கதாபாத்திரத்தின் காமிக்ஸை என்னைப்போன்ற காமிக்ஸ் ரசிகர்கள் கட்டாயம் படித்தே இருப்பார்கள். அக்கதைகளில் வரும் கதையைத்தான் நோலன் எடுத்திருக்கிறார். அப்படியென்றால், எந்தக் காமிஸும் படிக்காமல் இப்படத்தைப் பார்த்தவர்கள் இல்லையா? இருக்கிறார்கள். ஒரு கணிசமான அளவுக்கு. அவர்களில் பலருமே எனது ஃபேஸ்புக்கிலும் ப்லாக்கிலும் இப்படம் போர் அடிக்கிறது என்றே கருத்து சொல்லியிருக்கிறார்கள்.

Bane ஏன் கோதம் நகருக்கு வருகிறான் என்பதும் காமிக்ஸில் இருக்கிறது. Vengeance of Bane என்ற காமிக்ஸ். அவன் பிறந்தது முதல் அவன் கோதம் நகருக்கு வருவது வரை அதில் இருக்கிறது. இந்தப் படத்தில் Bane கதாபாத்திரம் சப்பையாக முடிந்துபோய்விடும் காரணம் என்னவென்றால்: க்ரிஸ்டோஃபர் நோலன், இந்தக் கதைகளில் இருந்துதான் Baneஐ உபயோகித்திருக்கிறார் என்பது அவரே சொன்னது. அப்படி இருக்கையில், அந்த காமிக்ஸ் பின்னணியை முழுதாக அவர் உபயோகித்திருக்க வேண்டும். சும்மா இங்கே ஒரு பகுதி, அங்கே ஒரு பகுதி என்று பிய்த்து எடுத்தே அவர் இந்தத் திரைக்கதையை அமைத்திருக்கிறார். அதுதான் இப்படத்தின் நெகட்டிவ் பாயிண்ட்களில் தலையாயது. இதனால், The Dark Knight படத்தில் ஜோக்கர் மீது நமக்கு வந்த ஈடுபாடு இப்படத்தில் Bane மீது வரத் தவறுகிறது. இத்தனைக்கும், காமிக்ஸ்களின் படி, ஜோக்கரைவிட புத்திசாலி இந்த Bane.

அதேபோல், க்ளைமேக்ஸில் வரும் டாலியா அல் கூ’லின் உண்மை உருவம். இது ஒட்டுமொத்தமாகவே ஏதோ ஒரு சாதா படம் போலவே நோலன்களால் எழுதப்பட்டிருக்கிறது. இதில் எந்த சுவாரஸ்யமோ பிடிப்போ எனக்கு இருக்கவில்லை. மாறாக, சலிப்பே எழுந்தது. டாலியாவை பாதுகாத்தவன் Bane என்றெல்லாம் நோலன் கொடுக்கும் சால்ஜாப்பு எடுபடவில்லை.

2. எந்தப் படத்துக்கும் ஒரு பிரதான களன் இருக்கும். அதை நோக்கித்தான் கதாபாத்திரங்கள் நகரும். இப்படத்தில், அது வேய்ன் எண்டர்ப்ரைஸஸ் நிறுவனத்தின் ந்யூக்ளியர் கருவியாக இருக்கிறது. இது ஒரு படு வீக்கான plot. ந்யூக்ளியர் குண்டு – அதன் ஆபத்திலிருந்து நகரைக் காக்கும் ஹீரோ என்ற அரதப்பழைய ஃபார்முலாவை நோலனும் கையில் எடுத்துக்கொண்டுவிட்டது ஏமாற்றமே அளிக்கிறது. இதில் குண்டு வெடிக்கப்போகிறது – இதோ அதோ என்றெல்லாம் நேரத்தைக் காண்பித்து இன்னமும் நமது பொறுமையை நோலன் சோதிக்கிறார்.

3. படத்தில் வரும் Baneன் சிறை; அதில் ப்ரூஸ் வேய்ன் அகப்படுவது; பின்னர் அதிலிருந்து அவர் தப்பிப்பது என்பதெல்லாம் திரைக்கதையின் பக்கங்களை நிரப்ப மட்டுமே உபயோகிக்கப்பட்ட கிம்மிக்ஸ் போல எனக்குத் தோன்றியது. அதில் கனமே இல்லை. படம் பார்க்கும் நமக்கும் அதில் ஈடுபாடு இல்லை. எப்போதடா இந்தக் காட்சிகள் முடியும் என்றே எனக்குத் தோன்றிக்கொண்டிருந்தது. படு க்ளிஷேடான காட்சிகள் இவை.

4. படத்தின் ஒரே சுவாரஸ்யமான அம்சமாக எனக்குத் தோன்றியது – கோதமை Bane முற்றுகையிடும் காட்சிகள் மட்டுமே. அதில் ஒரு விறுவிறுப்பு இருந்தது. அதில்தான் நோலன் கொஞ்ச நேரம் தெரிந்தார். பின்னர் அதுவும் டாலியா அல் கூ’ல் அது இது என்று செம்மையாக போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது.

5. இந்தப் படம் முழுதுமே, ஒரு ரோலாண்ட் எம்மரிக் (Independence Day, 2012, Godzilla இத்யாதி) படம் போலவே எனக்குத் தோன்றியதற்கான காரணங்களே இவை. இதே நோலனின் படு லோ பட்ஜெட் படமான Memento கூட (மெமெண்டோ ரசிகர்கள் மன்னிக்க) சர்ரென்று செல்லும்போது, அவரது திரைவாழ்வின் பெரிய பட்ஜெட் படங்களில் தலையாய படமான The Dark Knight Rises, அவரது படங்களிலேயே இதுவரை படு மோசமான படமாக அமைந்ததற்கு என்ன காரணம்? யோசித்துப்பார்த்தால், இந்தப் படத்துக்கான தேவையே இல்லை என்பது இப்படம் பார்த்தபின்தான் எனக்குப் புரிந்தது. Batman Begins மற்றும் The Dark Knight படங்களை, அப்படியே ஜேம்ஸ் கேமரூனின் டெர்மினேட்டர் படங்களின் முதலிரு பாகங்களோடு ஒப்பிட்டுவிடலாம். அந்த ஸீரிஸிலும் இரண்டாம் படமே அந்தக் காலகட்டத்தின் அற்புதமாக விளங்கியது. முதல் படமும் நல்ல படம்தான் என்றாலும்கூட. அந்த ஸீரிஸின் மூன்றாவது படம் இயக்க வாய்ப்பு வந்தபோது நிர்தாட்சிண்யமாக அதனை நிராகரித்தார் கேமரூன். படம் எப்படியும் தேறாது என்பது அவருக்குத் தெரிந்திருந்ததே காரணம். அதேபோல் வேறொரு இயக்குநரை வைத்து மொக்கையான மூன்றாம் பாகம் வெளிவந்து, கேமரூனின் மரியாதையைக் காப்பாற்றியது. அவரது முடிவே சரி என்பது எல்லாருக்கும் புரிந்தது.

உண்மையில், நோலன், இப்படம் ஆரம்பிப்பதற்கு முன்னரே இதைப்பற்றி சொல்லியிருந்தார். கதை நன்றாக இல்லாவிடில் மூன்றாம் பாகம் எடுப்பதே தேவையில்லாத விஷயம் என்று அவர் சொல்லியிருந்தது, எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. டெர்மினேட்டர் தவறு நோலனிடம் நடக்காது என்று நம்பினேன். ஆனால், நோலனும் அவர் விட்ட அறிக்கைகளெல்லாம் டுபாக்கூர் என்று நிரூபித்த ‘அற்புதத்’ தருணம், இப்படம் பார்க்கும்போது எனக்குப் புரிந்தது.

6. ஆரம்பம் முதல் இதுதான் இந்த ஸீரீஸின் கடைசிப்படம்; கதையே இங்கு முடிந்துவிடுகிறது என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்த நோலன், இப்படத்தின் இறுதியில் கதையை மறுபடி தொடரும் போடுவதன்மூலம் இப்படத்தின் தலையாய சொதப்பலை அளித்துள்ளார். ப்ரூஸ் வேய்ன் பிழைப்பார் என்பது தற்குறிக்குக் கூட தெரிந்துவிடும். அதேபோல், ராபின், பேட்மேனின் குகைக்கு வருவதற்குக் காரணம், அவனுக்கு அந்தத் தகவல்கள் அனுப்பப்படுவதே. அனுப்பியது? ப்ரூஸ் வேய்ன் தவிர வேறு யார்? ஆக, பேட்மேன், ராபின் மற்றும் கேட்வுமன் ஆகிய கூட்டணி இப்படத்தின் இறுதியில் தயார். என்னதான் ப்ரூஸ் வேய்னின் மாளிகை விற்கப்பட்டுவிட்டாலும் கூட, லூஷியஸ் ஃபாக்ஸ் அவரது Gadgetகளுடன் தயாராகத்தான் இருக்கப்போகிறார். எப்படியும் இன்னும் பல பேட்மேன் படங்கள் வரத்தான் போகின்றன. அவற்றில் அடுத்த படத்தையும் நோலனே இயக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சுருக்கமாகச் சொல்வதென்றால், The Dark Knight Rises படத்தின் பல காட்சிகள், நோலனிடமிருந்து வர அவசியமில்லை. அது ஒரு சராசரி ஆக்‌ஷன் பட இயக்குநருக்கே உரித்தானவை. ஏனெனில் அவைகளில் எந்தப் புதுமையும் இல்லை. நோலனின் முத்திரை அடியோடு மிஸ்ஸிங்.

இவையே எனது மனதில் இப்போது தோன்றியவை. மேலும் எதாவது காரணம் இருந்தால், இந்தக் கட்டுரையிலேயே அப்டேட் செய்வேன்.

இது, எனது தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே. இப்படம் எனக்குப் பிடிக்கவில்லை. அவ்வளவே. மற்றபடி, இப்படம் பிடிக்கும் என்று சொல்லும் நண்பர்களின் கருத்தை நான் மாற்ற முயலவில்லை.

  Comments

22 Comments

  1. டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்……………..நீ பெரிய அப்பாடக்கரா…………..

    Reply
  2. என்னமோ நாங்கல்லாம் படத்த ரசிக்காத மாதிரியும், தாங்கள் மட்டுமே சினிமாவை ரசிக்க தெரிந்த மாதிரியும் அட்வைஸ் பண்ற ஆட்கள்………தயவுசெஞ்சு உங்க fanaticismத்தின் டெம்ப்ளேட் கமென்ட்கள மாத்துங்க.போர் அடிக்குது

    ———–

    ஹாலிவூட் நோலனை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கிவிட்டது….அது inceptionல கொஞ்சம் தெரிய ஆரம்பிச்சது….(Inception வெறியர்கள் போட்டு தாளிக்க வேண்டாம்)…பழைய நோலனா இருந்தா, Inception படத்துல – பாக்குறவங்களுக்கு புரியனுமே வசனம் எல்லாம் வெச்சிருக்க மாட்டார். மெமென்டோ மாதிரி compromise செய்யாம எடுத்திருப்பார்.

    என்னளவில் – செம படம்னு சொல்லணும்னா, அப்புடியே ஆக்ட்டோபஸ் மாதிரி படம் உள்ள இழுக்கனும்..அதுக்கு மத்தியில..இது அப்படி தோணல.அத்த சொல்ல கூடாதா ??

    கொஞ்ச நேரத்தில் போர் அடிக்க ஆரம்பிச்சிருச்சு. டார்க் நைட் விஷயத்தில் அது நடக்கவே இல்ல. எத்தன meticulousசான ஸ்க்ரீன்ப்ளே…….ஆரம்ப பேங்க் கொள்ளையில் இருந்து – I kill the bus driverல இருந்து, தொடர்ச்சியா ஆச்சர்யப்படுதுகிட்டே இருந்த படம். அதன் கடைசி பாகம் ன்னு ஒரு படம் வரும் போது – நிச்சயமா எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். சொம்மா, சாதாரண ஒருபடம் ன்னு நெனச்சுகினு பாக்கணும் ன்னு உதார் விடுறது எல்லாம் சுத்த பொய்.

    பேட்மன் – முதுகு உடையுறது, Knightfallல அதான் முக்கியமே. அதோட பழைய பேட்மேன் போயிடுவார். இந்த படத்துல, என்னமோ சுண்டுவிரல் உடஞ்ச ரேஞ்சுக்கு காமிச்சது – அதுவும் மூணு மாசத்தில் சரியாகுற மாதிரி காமிச்சது எல்லாம் ரொம்பவே ஓவர் (இந்த படத்துல லாஜிக் பாக்குது பாரு பன்னாட……இது ஸ்பைடர்மேன், அவேன்ஜர் என்றால் ஏன் இந்த லாஜிக் எல்லாம் பாக்க போறோம். ரொம்ப தெரிந்த காட்சியமைப்புகள்…Overrated…..அம்புட்டுதான் என் கருத்து.

    Reply
  3. I agree with all ur points except the comparison bw joker n Bane. Joker by Heath was legendary and he even outclassed nicholson in that role !! And no other villain character can come close to that. But i feel its still a better movie than most of the other superhero movies….. ! Chillax 🙂

    Reply
  4. படம் முடிஞ்சுட்டு இத தான் சொல்லிட்டு இருந்தோம்…நானும் கேஸ்ட்ராவும்.. எதோ ரோலன்ட் படம் மாதிரி இருக்குன்னு.. நான் காமிக்ஸ் எதுவும் படிச்சது இல்ல.. கேரேக்டர்ஸ் பத்தி தெரியும் அவ்ளோ தான்… எனக்கு ரொம்ப டெம்ப்ளேட் ட்டான ஒரு ஹாலிவுட் படம் பாக்கற மாறி இருந்துச்சு.. டார்க் நைட் பாத்த போது இருந்த அந்த பீல் இல்ல…. ஆனா அங்க அங்க சில சீன்ஸ் நச்சுன்னு இருந்துது.. பட் ஸ்டில், It will not save the film, as the script ll play that part instead…

    Reply
  5. ரசினி, விஜய், பிற நடிகர்களுக்கு பால் அபிஷேகம் இத்தியாதிகள் செய்யுற கூட்டத்துக்கு இணையா(இவுங்கவந்து ஆங்கில படம் பாக்குறதால ஒலக சினிமா ரசிகர்களாம்)…..ஒரு ரசிக வெறியர்கள் சிலர் இனி கமென்ட் போடுவாங்க பாருங்க. செம காமெடியா இருக்கும்.

    Reply
    • மாட்டு பையன்

      நீ எழுதும் விமர்சனங்களை விடவும் ஒரு காமெடி இருக்கவே முடியாது

      Reply
  6. எனக்கும் மத்த இரண்டு படங்கள் அளவுக்கு பிடிக்கல தல. அதுவும் அவங்க படத்தோட ஆரம்பத்துலேயே அந்த நியூக்ளியர் ரியக்டர காமிச்ச உடனே தெரிஞ்சுடுச்சு இது தான் படத்தோட வில்லன் -னு 🙂

    இரண்டாவது வாட்டி படம் பாக்கும் போது சில காட்சிகளோட வீரியம் (பேட்மேனோட அறிமுக காட்சி, பேட் சிம்பள் நெருப்பா வரது, பேன் நகர கைபற்றுன பிறகு பேசுறது) அப்படியே இருந்தாலும் கிளைமேக்ஸ் காட்சி படுமொக்கையா இருந்துது. அடுத்த பேட்மேன் படம் நோலன் எடுக்க மாட்டார்-னு நம்புறேன். எடுத்தாலும் பேல் நடிப்பாரா அப்டிங்கறது சந்தேகம் தான்.

    Reply
  7. Movie avg only and especially the exercise scenes are making me to remember normal Tamil films where hero will be heavily wounded after few exercises he will get energy and go fight the villain in the climax … I expect lot of phycological play between the hero and villain , but here totally missing

    Reply
  8. படம் ரொம்ப சொதப்பல். நோலன் படம் மாதிரியே இல்ல, Roland Emmerichச்சோட படத்த பாத்த மாதிரி இருந்தது. Disappointed 🙁

    Reply
  9. i think u wasted tis month in dark night posts…..its boring change topic…..i read abt ur site in ananda vikatan its super…..

    Reply
  10. கிளைமாக்ஸ் காட்சி அப்படியே விஜயகாந்தின் வல்லரசு படத்தை நினைவுபடுத்தியது. அதில் விஜயகாந்த் பாம் இருக்கும் பஸ்சை ஓட்டிக்கொண்டு கடலில் விடுவார் இங்கே தனது விமானத்தில் தூக்கி கொண்டு பேட்மேன் கடலில் விடுகிறார்.இப்படி ஒரு பெரும் ஏமாற்றமான கிளைமாக்சை நான் எதிர்பார்க்கவே இல்லை.
    படத்திற்கு Robin Begins என்பதே பொருத்தமான டைட்டிலாக இருக்கும்.

    Reply
  11. நண்பர்களே… உங்களது கருத்தே தான் எனக்கும். அதனால்தான் இந்த விபரமான கட்டுரை. சரி. இனி இந்த Dark Knight படத்தை விட்டுவிட்டு, வேறு விபரங்களில் கவனம் செலுத்தலாம் வாருங்கள் .

    Reply
  12. படம் பார்த்து விட்டேன் நண்பரே,
    ஆனால் படம் கொஞ்சம் சுமார் தான்.
    விமர்சனம் அருமை.
    சமயம் கிடைக்கும் போது நம்ம ப்ளாக் பக்கம் வந்துட்டு போங்க நண்பரே
    http://dohatalkies.blogspot.com/2012/07/schindlers-list_1072.html

    Reply
  13. படம் நல்ல இருந்தது நண்பரே! baneஐ கொண்டு ஒரு புரட்சி ஏற்படுத்துவதே ras aul gulக்கு நோக்கமாக இருந்தது என்பதை படத்தில் சொல்லிவிட்டார்கள். என்ன,வில்லனாக உலகிற்கு தெரிபவருக்கும் ஒரு சோகம் உள்ளது என்பதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக படத்தில் காண்பித்து இருக்கலாம்.bane நோக்கம் சரியானதே! ஆனால் இந்த catwoman டக்குன்னு baneஐ batpodல் இருந்துகொண்டு சுட்டது செம்ம கடுப்பு! பேட்மேன் பிகின்ஸ் தான் சூப்பர்ரா இருந்தது. பேட்மேன் என்ற கதாபாத்திரம் உருவாகும் அதே உணர்வு கடைசியில் ராபின் உருவாகும் காட்சியில் நன்றாக இருந்தது!

    Reply
  14. hi rajesh,

    ananda vikatan has recommended your website last week. did you notice? congrats friend

    Reply
  15. நொலன் சார் உங்க அடுத்த படத்துல திறமைய எதிர்பார்க்கிறேன்:-)

    Reply
  16. ஏனய்யா மொக்கையான amazing spider man பற்றி ஆகா ஓகோன்னு எழுதுனீங்க…இப்போ டார்க் நைட் ரைசஸ் கசக்குதா?அமேசிங் ஸ்பைடர் மேன் போல ஒரு குப்பை படம் இனி வராது ..அது சரி உனக்கு ஸ்லம்டாக் போன்ற குப்பைகளை ரசித்தே பழக்கம் போல…ரகுமான் அடி வவுத்தில் இருந்து க்வாஜா காஜா தச்சியான்னு கத்துனா ஆகா கவாலி காவலாளின்னு கோமாளித்தனம் செய்ய வேண்டியது…ரகுமானுக்கு எதுக்கு ஆஸ்கர் கொடுத்தாங்கன்னு அவனுக்கே தெரியாது ரீடர் படத்தை விட அந்த குப்பையில் ஒரு மன்னும் இல்லை என்பதை உன் மனசாட்சி சொல்லும்..ஆஸ்கர் அரசியல் பற்றி எழுது

    Reply
  17. நேற்று தான் இந்த படத்தை IMAX இல் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் விமர்சனத்தை ஏற்கனவே படித்திருந்தும் எனது அமெரிக்க நண்பர்கள் அனைவருக்கும் படம் பிடித்திருந்த காரணத்தால் எனக்கும் பிடிக்கும் என்றே நினைத்திருந்தேன். ஆனால், படம் ஒரு சராசரி படமாக அமைந்ததில் எனக்கு வருத்தமே. IMAX இல் பார்த்த ஒரு உணர்வே இல்லை. ஏற்கனவே நான் அவேன்ஜெர்ஸ் IMAX இல் தான் பார்த்தேன். அந்த திரைப்படத்தில் இருந்த ஒரு உயிர்ப்பு இதில் இல்லை. என்னுடன் திரைப்படத்திற்கு வந்திருந்த அமெரிக்க நண்பருக்கு படம் பிடிக்க வில்லை. டார்க் நைட் மீண்டும் பார்க்கப் போகிறேன்.

    Reply
  18. நோலன் – தான் நினைத்ததை சாதித்து விட்டார் என்றே தோன்றுகிறது
    இனி யாரும் அவரிடம் சென்று “Batman – Part 4” எடுங்கள் என கேட்கப் போவதில்லை.

    “The Dark Knight” படம் முழுக்க சுவாரஸ்யம் நிறைந்த twistகள் இருந்தாலும், க்ளைமாக்சில் Batmanஐ Badmanஆக மக்கள் நினைப்பது சிறு வருத்தம்.

    “The Dark Knight Rises” இல், டிவிஸ்ட்கள் எதுவும் இல்லை எனினும், சில சென்டிமென்ட் காட்சிகளுடனும் க்ளைமாக்சில் Batmanஐப் பற்றி Gotham மக்கள் பெருமை கொள்ளும் விதமாக காட்டியது எனக்கு மன நிறைவைத் தந்தது.

    “எட்டு வருடங்களாக மன உளைச்சலுடன் போராடி வந்த பேட்மேன், இன்று மகிழ்வுடன் வாழ்கிறார்” எனும் Alfred Pennyworthதின் மனநிலை எனக்கும் வந்தது

    Reply
  19. படம் இன்று தான் பார்த்தேன், சுமார்தான்.
    எனக்கு என்னவோ Batman ரோலுக்கு Christian Bale
    பொருத்தமாக இல்லை என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.
    இவன் அதுக்கு சரிப்படமாட்டன்!
    ஆனால், Batman வரும்போது எல்லாம் theatre ல கிளாப்ஸ் அள்ளுது
    இது Batman இன் தீவிர ரசிகர் பட்டாளத்தைத்தான் காட்டுகிறது.

    Reply
    • மாட்டு பையன்

      ஆமாமா உங்களை பெட்மேனா போட்டிருந்தா படம் பிச்சிகினு போய் இருக்கும்

      Reply

Join the conversation