80களின் தமிழ்ப்படங்கள் – 5 – நான் சிவப்பு மனிதனும் ரஜினியும்
பல ரஜினி துதிபாடி கட்டுரைகளைப்போல் இது அமையாது என்பதை முதலில் சொல்லிவிடுகிறேன். ரஜினி என்கிற மனிதன் எனக்கு அறிமுகமாது எப்போது? அந்தத் தாக்கம் எப்படி என்னுள் இறங்கியது என்பதை எழுதுவதே நோக்கம். ஆண்டு. 1985. இந்த எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் வரிசையில், எனது தாய்மாமாவுக்கு ஒரு இசைத்தட்டு நூலகம்...