நடுநிசி நாய்கள் (2011) – அடிங்க !

February 20, 2011
/   Tamil cinema

தமிழ்ப்படங்களில், ஸ்பூஃப் என்ற வகையில் வெளிவரும் படங்கள் மிகக்குறைவு. அந்த வகையில், சென்ற வருடம் வெளிவந்த ‘தமிழ்ப்படம்’, ஒரு குறிப்பிடத்தகுந்த முயற்சி எனலாம். தமிழ்ப்படம், இதுவரை வந்த அத்தனை தமிழ்ப்படங்களையும் பகடி செய்தது. ஆங்கிலத்தில், ஒரு குறிப்பிட்ட வகைப் படங்களை மட்டும் எடுத்துக்கொண்டு (உதா – த்ரில்லர்...

நான் மகான் அல்ல – ஒரு விவாதம்

January 21, 2011
/   Tamil cinema

சில நாட்களுக்கு முன், ரஞ்சித் என்ற நண்பர், எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். சென்ற பதிவில், நான் மகான் அல்ல எனக்குப் பிடித்திருந்தது என்று நான் எழுதியதைப் பார்த்து, அவர் இயக்குநர் சுசீந்திரனுக்கு எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை எனக்கு அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தில் இருந்த கோபம்...

மன்மதன் அம்பு (2010) – விமர்சனம்

December 25, 2010
/   Tamil cinema

மன்மதன் அம்பு படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், இன்னொரு படத்தைப் பற்றிக் கொஞ்சம் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். Romance on the High Seas என்பது படத்தின் பெயர். வெளிவந்த ஆண்டு – 1946. படத்தின் கதை? கணவன், மனைவி ஆகிய இருவருமே ஒருவரையொருவர் சந்தேகப்பட்டுக்கொண்டிருக்கும் சூழல். அந்த...

நந்தலாலா – மூலமும் நகலும்

December 2, 2010
/   Copies

பொதுவாகவே, வேற்றுமொழிப் படம் ஒன்றைத் தமிழில் உருமாற்றம் செய்யும்போது, அந்த உருமாற்றம், சகிக்க முடியாமல்தான் இருக்கும். இதனாலேயே, அந்த மூலப்படத்தின் மீது மரியாதை இன்னமும் அதிகம் ஆகும். காரணம் மிக எளிது. தமிழ்த் திரைப்படங்களின் டெம்ப்ளேட் அமைப்புக்கு உள்ளாகும்போது, எந்தப் படமுமே அதன் அசல் தன்மையை இழந்துவிடும்....

நந்தலாலாவை முன்னிட்டு…

November 30, 2010
/   Copies

தமிழ்ப்படங்களிலும் சரி, இந்தியாவின் மற்ற மொழிப்படங்களிலும் சரி. ஆங்கில/ உலகப் படங்களைக் காப்பியடிப்பதோ அல்லது தழுவுவதோ தவறே அல்ல என்ற ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஜனரஞ்சகமான திரைப்பட ரசிகர்களுக்குத் தெரியாத கலைப்படங்களை இப்படிச் சுடுவது அதிகம். சுட்டுவிட்டு, இந்த இயக்குநர்கள் கொடுக்கும் நேர்காணல்களைக் கேட்டால்,...

முதல் மரியாதை (1985) – தமிழ்

November 15, 2010
/   Tamil cinema

தமிழ்ப் படங்களைப் பெரும்பாலும் திட்டிக்கொண்டிருக்கும் (அல்லது திட்டுவதாகப் பலரும் எண்ணிக்கொண்டிருக்கும்) என்னை, இந்தவார நட்சத்திரமாக அறிவித்திருக்கும் தமிழ்மணத்துக்கு, அவர்கள் எடுத்துள்ள இந்த முடிவைக் குறித்து என்னைத் திட்டி எழுதப்படும் பல அனானி மின்னஞ்சல்களை இனி அவர்கள் எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று ஒரு டிஸ்கியைப் போட்டுவிட்டு, , ஒரு நன்றியைத்...

வ – குவாட்டர் கட்டிங் – ஒரு காவியத்தின் கதை

November 5, 2010
/   Comedy

கடந்த சில நாட்களாகக் கோவையில் இருக்கிறேன். ஒரு எமர்ஜென்ஸி காரணமாக இங்கு வந்ததால், வலைத்தளத்தின் பக்கமே கால் வைக்க முடியவில்லை. நண்பர்களின் வலைப்பூக்களையும் படிக்க இயலாத சூழல். இப்பொழுது, அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டன. கீழே குறிப்பிடப்பட்டுள்ளது, எனது கனவில் வந்த ஒரு உரையாடல். இது நிஜ...

கமல்ஹாஸன்: நிகழ மறுத்த அற்புதமா? புதிய தகவல்கள் – வீடியோக்களுடன்

October 27, 2010
/   Copies

கமல் காப்பியடித்த பட்டியலை ஏற்கனவே கொடுத்திருந்தேன் அல்லவா. இப்போது, சில ஆங்கில வீடியோக்களைக் கீழே கொடுக்கிறேன். கூடவே, கமல் காப்பியடித்த படத்தின் வீடியோவையும் கொடுக்கிறேன். நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் – எந்த அளவு கமல் காப்பிகளை அடித்துத் தள்ளியிருக்கிறார் என்று. Moon Over Parador :...

எந்திரன் – எதிர்வினைகள்

October 7, 2010
/   Copies

சென்ற பதிவில் நான் எழுதிய எந்திரன் விமர்சனத்துக்கு, சில நண்பர்களிடம் இருந்து வந்துள்ள பின்னூட்டங்களுக்கு இங்கே பதில் கொடுத்துவிடலாம் என்பது எனது நோக்கம். படித்துப்பாருங்கள். நண்பர்கள் கருத்தைக் கேள்விகளாகக் கொடுத்துள்ளேன். 1. உலக சினிமா இயக்குநர்கள் போல் எந்திரன் படம் எடுத்தால், அதனைப் பார்க்க யாரும் இருக்கமாட்டார்கள்....

எந்திரன் (2010) – ஒரு துன்பியல் சம்பவம்

October 5, 2010
/   Copies

கடந்த இரண்டு ஆண்டுகளாக, எந்த ஊடகத்தின் பக்கம் திரும்பினாலும், அங்கே எந்திரனைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டுக்கொண்டிருந்தோம். தமிழ் மக்களின் நாடித்துடிப்பை எகிறவைத்துக்கொண்டிருந்தது எந்திரன் என்று சொன்னால், அது மிகையல்ல. முதலில், இப்படத்தில் கமல் நடிப்பதாக இருந்து, பின் ஷா ருக் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின் அவராலும்...

கமல்ஹாஸன் – எதிர்வினைகள்

September 11, 2010
/   Copies

கமல்ஹாசன் : நிகழ மறுத்த அற்புதமா? என்ற எனது கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக்கவும். இந்தக் கட்டுரை, கமலின் சில படங்களைப் பற்றியும் அவற்றின் ஆங்கில மூலங்களைப் பற்றியும் அலசுகிறது. சென்ற பதிவில் கமல் அடித்த ஈயடிச்சாங்காப்பிகளைப் பற்றி எழுதினாலும் எழுதினேன், அதற்குப் பதில் சொல்லவேண்டும் என்று...

கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா ?

September 5, 2010
/   Copies

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். யார் மேலும் அவதூறோ அல்லது இன்னபிறவோ சொல்லும் நோக்கம் இந்தப் பதிவுக்குக் கிடையாது. இப்பதிவு எழுதப்படும் நோக்கமே, எந்தப் படைப்புக்கும், அதற்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே விஷயம் தான். தமிழ்த்திரையுலகின் ரசிகராகத் தனது கணக்கைத் துவங்கும் ஒவ்வொரு நபரும் சில...

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 3 – காக்கிசட்டை

July 22, 2010
/   80s Tamil

ம்ம்ம்ம்… எண்பதுகளில் மட்டுமல்ல. எந்தக் காலத்திலும் – ஏன் – இப்போதுகூட – கொடிகட்டிப் பறக்கக்கூடிய ஒரு கூட்டணி…. வெல்.. சத்யராஜ் & கமல். இவர்கள் நடித்த எந்தப் படத்தை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அத்தனை படங்களிலும், நமக்கு வேண்டிய பொழுதுபோக்கு கிடைக்கும். சத்யராஜிடம் அத்தனை காட்சிகளிலும்...

மதராசபட்டினம் (2010) – விமர்சனம்

July 13, 2010
/   Copies

படத்தைப் பற்றி எழுதுமுன், ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய, ‘யாமம்’ கதையைப் படித்தவர்களெல்லாம் கையைத் தூக்குங்கள் பார்ப்போம். இந்நாவல், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த சென்னையைப் பற்றிய அருமையான நாவலாகும். இக்கதையினை இரவில் படித்தால், கண் முன் பண்டைய கால சென்னை விரிவது...

ராவணன் (2010) – விமர்சனம்

June 19, 2010
/   Tamil cinema

ஒரு ஊரில், ராமன் ராமன் என்று ஒரு இளவரசன் வாழ்ந்துவந்தான். அவனது மனைவியின் பெயர், சீதை. இந்த சீதையை, ராவணன் என்ற ஒருவன் கடத்திவிட்டான். காரணம், இந்த ராவணனின் தங்கை சூர்ப்பனகையை, ராமன் & ஃபேமிலி அவமானப்படுத்திவிட்டதுதான். எனவே, சீதை கடத்தப்படுகிறாள். அப்போது ராமன் என்ன செய்தான்?...

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – 2 – விக்ரம்

June 16, 2010
/   80s Tamil

இந்தப் பதிவிலும் என்னுடைய நாஸ்டால்ஜியா தொடர்கிறது. தமிழ்ப்படங்களைப் பற்றி. அதுவும்எண்பதுகளில் வெளிவந்தவை. ஆரம்பித்தபின், என்னால் அவைகளைப் பற்றிய எண்ணங்களைநிறுத்த முடியவில்லை. அப்படி நான் ரசித்துப் பார்த்த ஒரு படத்தைப் பற்றியே இந்தப் பதிவு. டிஸ்கி – இப்பதிவினால், நான் கமல்ஹாஸனின் விசிறி என்ற எண்ணம் உருவானால், அதற்கு நான்பொறுப்பல்ல. எனக்கு, எண்பதுகளின் கமல் தான் பிடிக்கும். ரஜினி போல் மசாலாப் படங்களில்நடித்து, ரஜினி கமல் இருவருக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவிய காலம் அது. மாவீரன்வெளிவந்தால், விக்ரம் அதே தீபாவளிக்கு வெளிவரும். பாண்டியன் வெளிவந்தால், தேவர் மகன்வெளிவரும். இப்படிப் பல படங்கள். அந்தக் கமல், இப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அதற்குப் பதில், ‘உலகநாயகன்’ என்று தன்னைத்தானே அழைக்கும் ஒரு நபர் தான் தெரிகிறார்.இப்பொழுது படங்களில் நடிக்கும் கமல், ’மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவு’ – (நன்றி – வந்தார்கள் வென்றார்கள் மதன்). ஆம். முஸ்லிம்கள் சாகவேண்டும் என்று படங்களில்வலியுறுத்தும் ஒருவரை, நடிகர் அல்ல – மனிதர் என்றுகூட என்னால் கூற முடியவில்லை. vikram . . . எண்பதுகளில் என் மனதைக் கவர்ந்த படம். விக்ரம் விசிறிகளிக்காகவே இந்தப் பதிவு. வெல். ஆண்டு 1986. கோவை. அப்ஸரா தியேட்டர். கையில் வால்த்தர் பிபிகே போன்ற ஒரு துப்பாக்கியை வைத்திருப்பதைப் போன்ற...

எண்பதுகளின் தமிழ்ப்படங்கள் – ஆச்சரியம்! – 1

June 10, 2010
/   80s Tamil

தமிழ்ப்படங்களைப் பற்றி இந்தத் தளத்தில் மிக அபூர்வமாகத்தான் எழுதியிருக்கிறேன். காரணம் – சலிப்பு. ’என்ன கொடும இது’ என்ற உணர்வு மேலோங்கியதே காரணம். இதற்கு சமீபத்திய உதாரணம் – சிங்கம். ஆரம்பித்த 43ம் நிமிடம் தியேட்டரை விட்டு வெளியே குடும்பத்துடன் வெளியேறினேன். எங்கள் எவருக்குமே படம் துளிக்கூட...

விண்ணைத் தாண்டி வருவாயா …

February 28, 2010
/   Romance

நான் இந்த வலைப்பூவில் ஆங்கிலத்தில் வந்துள்ள சில அருமையான காதல் படங்களுக்கு விமரிசனம் எழுதியுள்ளேன். அந்தப் படங்களைப் பார்க்கையில், மனம் முழுவதும் ஒரு அருமையான உணர்வு நிரம்பியிருக்கும். படத்தைப் பார்த்த பின்னரும் பல மணி நேரங்களுக்கு அந்த உணர்வு போகாது. படத்தின் பாடல்களே மனதில் ஓடிக்கொண்டிருக்கும். படத்தின்...

ஆயிரத்தில் ஒருவன் – ஒடுக்கப்பட்ட மக்களின் குமுறல் !

January 17, 2010
/   Tamil cinema

டிஸ்கி – 17/11/2010 – இந்தப் பதிவு, நான் எவ்வளவு மொக்கையாகவும் முட்டாள்தனமாகவும் ஒருகாலத்தில் எழுதியிருக்கிறேன் என்று நானே நினைவுபடுத்திக் கொள்ள உதவுகிறது ? இன்று காலையில் பார்க்க நேர்ந்த இப்படத்தைப் பற்றி, பார்த்துக்கொண்டிருக்கும்போதே சில எண்ணங்கள் தோன்றின. படம் முடிந்ததும், அவற்றைப் பற்றி எழுதிவிடலாம் என்று...