June 16, 2010
/ 80s Tamil இந்தப் பதிவிலும் என்னுடைய நாஸ்டால்ஜியா தொடர்கிறது. தமிழ்ப்படங்களைப் பற்றி. அதுவும்எண்பதுகளில் வெளிவந்தவை. ஆரம்பித்தபின், என்னால் அவைகளைப் பற்றிய எண்ணங்களைநிறுத்த முடியவில்லை. அப்படி நான் ரசித்துப் பார்த்த ஒரு படத்தைப் பற்றியே இந்தப் பதிவு. டிஸ்கி – இப்பதிவினால், நான் கமல்ஹாஸனின் விசிறி என்ற எண்ணம் உருவானால், அதற்கு நான்பொறுப்பல்ல. எனக்கு, எண்பதுகளின் கமல் தான் பிடிக்கும். ரஜினி போல் மசாலாப் படங்களில்நடித்து, ரஜினி கமல் இருவருக்கும் ஒரு ஆரோக்கியமான போட்டி நிலவிய காலம் அது. மாவீரன்வெளிவந்தால், விக்ரம் அதே தீபாவளிக்கு வெளிவரும். பாண்டியன் வெளிவந்தால், தேவர் மகன்வெளிவரும். இப்படிப் பல படங்கள். அந்தக் கமல், இப்போது எங்கு தேடியும் கிடைக்கவில்லை.அதற்குப் பதில், ‘உலகநாயகன்’ என்று தன்னைத்தானே அழைக்கும் ஒரு நபர் தான் தெரிகிறார்.இப்பொழுது படங்களில் நடிக்கும் கமல், ’மின்னிய பழம்பெருமையின் மிஞ்சிய வெறும் நினைவு’ – (நன்றி – வந்தார்கள் வென்றார்கள் மதன்). ஆம். முஸ்லிம்கள் சாகவேண்டும் என்று படங்களில்வலியுறுத்தும் ஒருவரை, நடிகர் அல்ல – மனிதர் என்றுகூட என்னால் கூற முடியவில்லை. vikram . . . எண்பதுகளில் என் மனதைக் கவர்ந்த படம். விக்ரம் விசிறிகளிக்காகவே இந்தப் பதிவு. வெல். ஆண்டு 1986. கோவை. அப்ஸரா தியேட்டர். கையில் வால்த்தர் பிபிகே போன்ற ஒரு துப்பாக்கியை வைத்திருப்பதைப் போன்ற...