Inception (2010) – விமர்சனம்

July 17, 2010
/   English films

வெல்.. க்ரிஸ்டோஃபர் நோலன் பற்றிப் புதிதாகச் சொல்ல எதுவுமில்லை. அவரைப் பற்றி, ஒரு தலையணை சைஸ் புத்தகம் போடும் அளவுக்கு இண்டெர்நெட்டில் செய்திகள் கிடைக்கின்றன. சமகாலத் திரைப்பட இயக்குநர்களில், மிக முக்கியமானவராகத் தற்போது அறியப்படும் நோலன் எடுக்கும் படங்கள் அனைத்துமே, மனித மனதின் முரண்பாடுகளை முக்கிய அம்சமாகக்...

There is Something about Mary (1998) – English

July 11, 2010
/   English films

இவ்வளவு நாள், படு சீரியஸான படங்களையே பார்த்து வந்தோம். ஒரு மாறுதலுக்கு, மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு (நேக்கட் கன் சீரீஸ் பதிவுக்குப் பிறகு), ஒரு நகைச்சுவைப் படம். எனது கல்லூரி நாட்களில் பார்த்த படம் (ஸ்டார் மூவீஸ் என்று நினைக்கிறேன்). அந்தச் சமயத்திலேயே என்னை விழுந்து...

The last King of Scotland (2006) – English

July 10, 2010
/   English films

மனித வரலாற்றின் பக்கங்களில், ரத்தக்கறை படிந்த பல அத்தியாயங்கள் உண்டு. அவை, சக மனிதனை, அதிகாரம் என்ற பெயரில் கொன்று குவித்த கொடுங்கோலர்களைப் பற்றிப் பல கதைகள் சொல்லும். இவர்களது வாழ்வைப் படித்தால், மிகச்சாதாரண நிலையில் இருந்து, மக்களின் பேராதரவைப் பெறும் வரை ராணுவ ஒழுங்குடன் வாழ்ந்துவிட்டு,...

Kundun (1997) – English

July 8, 2010
/   English films

தனது நாட்டைச் சேர்ந்த அத்தனை மக்களாலும் கடவுள் என்று கருதப்படும் ஒரு நபர். அந்த மக்களின் தலைவரும் அவரே தான். அவரது நாடோ, மற்றொரு வலிய நாட்டின் கீழ் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அவரது குறிக்கோள் என்ன? தலாய் லாமா. திபெத்தின் அத்தனை மக்களாலும் கடவுளாகவே...

A Good Year ( 2006) – English

May 29, 2010
/   English films

நமது வாழ்விலேயே நமக்குப் பிடித்தமான நாட்கள் எது என்று கேட்டால், முக்காலே மூணு வீசம் பேர், குழந்தைப் பருவத்தைத் தேர்ந்தெடுக்கக்கூடும். என்னைப்போன்ற சில விதிவிலக்குகள் மட்டும், கல்லூரி (அ) காதல் என்று எதையாவது சொல்லிக்கொண்டு திரியும்கள். அதை விட்டுத் தள்ளுங்கள். சரி. இந்தக் குழந்தைப் பருவத்தின் நினைவுகள்,...

Shrek – Forever After (2010)

May 22, 2010
/   English films

உலகெங்கிலும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு திரைப்பட வரிசையின் இறுதிப்படம் – நேற்று வெளியாகியுள்ளது. இவ்வளவு வருடங்களில், ஷ்ரெக்க்கின் முதல் மூன்று படங்களை அதிவிரைவில் பார்ப்பதைத் தவறவே விட்டதில்லை என்பதால், இந்தப் படத்தையும் இன்று மாலை சென்று பார்த்துவிட்டு, இதோ இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். முதல் பாகத்தில், ஃபியோமா ட்ராகனிடம்...

Batman: Gotham Knight (2008) – இருளின் இளவரசன்

May 21, 2010
/   English films

பேட்மேனைப் பிடிக்காதவர்கள் நம்மில் யார்? பேட்மேன், ஆங்கில காமிக்ஸாகவும் திரைப்படமாகவும் வருவதற்கு முன்னரே (இந்தியாவில் என்று படித்துக் கொள்க), நமக்கு லயன் மற்றும் திகிலில் அறிமுகமாகி விட்டார். அவரது மெகா சாகசமான ‘பௌர்ணமி வேட்டை’ திகிலில் வந்தது எனக்கு இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. ’சிரித்துக் கொல்ல வேண்டும்’...

Fiddler on the Roof (1971) – ஒரு தந்தையின் கதை

May 19, 2010
/   English films

மிகச்சில சமயங்களில், ஹாலிவுட், உலக சினிமாக்களின் தரத்தை எட்டுவதுண்டு. அத்தகைய ஒரு படமே இந்த ‘ஃபிட்லர் ஆன் த ரூஃப்’. இது, ம்யூஸிகல் என்ற வகையைச் சேர்ந்தது. அஃதாவது, நம்ம ஊரில் வருகிறதே – படத்தின் இடையே பாடல்கள் – அந்த வகையில், ஹாலிவுட்டில் எடுக்கப்படும் படங்களே...

Being John Malkovich (1999) – English

May 7, 2010
/   English films

ஹாலிவுட்டின் திரைக்கதை வடிவத்தில், ‘சஸ்பென்ஷன் ஆஃப் டிஸ்பிலீஃப்’ (Suspension of Disbelief) என்ற ஒரு விஷயம், மிகப் பிரபலம். படத்தில் என்ன காட்டினாலும், அதனை நாம் வாயைப் பிளந்துகொண்டு பார்க்க வைப்பதே இது. நமது மூளை, படத்தில் காண்பிக்கப்படும் விஷயங்களை ஒதுக்கித் தள்ளிவிடாமல், அவற்றை முழுமையாக ஒத்துக்கொள்ளும்...

How to train your Dragon (2010) – 3D – English

April 24, 2010
/   English films

வைக்கிங்குகளைப் பற்றி நமது அபிப்பிராயம் என்ன? அவர்கள் காட்டுமிராண்டிகள்; மலையையொத்த உருவம் படைத்தவர்கள்; மூளையில்லாதவர்கள் இத்யாதி இத்யாதி. தமிழில் வைக்கிங்குகளைப் பற்றி பெரும்பாலும் இதுவரை எந்த இலக்கியமும் வரவில்லை. எனக்குத் தெரிந்து, லயன் காமிக்ஸில் வெளிவந்த ‘வைக்கிங் தீவு மர்மம்’ ஒன்றுதான் நான் இதுவரை படித்தது. அது...

Thelma & Louise (1991) – English

April 22, 2010
/   English films

ஆங்கிலப்படங்களில், திரைக்கதை ஒரு முக்கியமான அம்சம். அங்கு ஒரு படம் தொடங்கும்போது, திரைக்கதை முழுதாக எழுதப்பட்டு, அனைத்து நடிகர்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என்பது அவசியம். இந்தத் திரைக்கதையில் மன்னர்கள் அங்கு பல பேர் உண்டு. திரைக்கதை எழுதுவதற்கென்றே பிரத்யேகமாகப் பயிற்சி பெற்று, அதை மட்டுமே செய்பவர்கள் அவர்கள். அங்கு...

மனித எரிமலை

April 11, 2010
/   English films

ஆண்டு – 1975. தொலைக்காட்சியில், முகம்மது அலியும் சக் வெப்னரும் மோதும் மல்யுத்தப் போட்டி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. முகம்மது அலி, அந்த சமயத்தில், நடப்பு ஹெவிவெய்ட் சேம்பியன். சக் வெப்னரோ, வளர்ந்து வரும் ஒரு வீரர். அதுவரையில் வெப்னர் பெற்றிருந்த வெற்றிகள், அவரைப் பிரபலப்படுத்தியிருந்தன. அந்தப் போட்டி,...

Clash of the Titans (2010) – English

April 7, 2010
/   English films

இரண்டு கும்பல்களுக்கிடையே சண்டை வந்தால் என்ன ஆகும்? நம்ம ஊர் படமாக இருந்தால், ஹீரோவே அத்தனை பேரையும் சிங்கிள் ஆளாக அடித்துப் போட்டு விட்டு, ஜாலியாக ஹீரோயினுடன் டூயட் பாடச் சென்று, நம் காதில் பூ சுற்றுவார்கள். . அதுவே ஹாலிவுட்டாக இருந்தால், அடித்துப் போடுவதில் கொஞ்சம்...

From Dusk till Dawn (1996) – English

April 4, 2010
/   English films

இதோ . . மீ த பேக் ! எனது ‘கம்பேக்’ விமர்சனம், ஒரு ஜாலியான, சற்றே தற்குறித்தனமான ஒரு படத்தைப் பற்றி இருக்கப்போகிறது. படத்தின் இயக்குநர், ஹாலிவுட்டின் மிகச்சிறந்த க்ரியேட்டிவ் திறன் படைத்த, எனது மனதிற்கு மிகவும் பிடித்தமான, ராபர்ட் ரோட்ரிகஸ். ’ப்ராடிஜி’ எனப்படும் அசாதாரணத்...

Chinatown (1974) – English

March 11, 2010
/   English films

ஒரு வாரமாக, பிழிந்தெடுக்கும் வேலை. மட்டுமல்லாது, வேறு சில விஷயங்களும் சேர்ந்துகொள்ள, நோ பதிவு. இதோ இப்பொழுதும் இரண்டு ரிப்போர்ட்டுகளை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனாலும், நண்பர் கனவுகளின் காதலரின் பதிவைக் கண்டபோது, சட்டென்று மனதில் ஒரு படத்தைப் பற்றிய நிழலாடியது. பொதுவாகவே, ஒரு படத்தை நினைவுபடுத்த, அதில்...

Matchstick Men (2003) – English

March 4, 2010
/   English films

போன பதிவான 8மிமியை எழுதும்போதே, இந்தப் படத்தைப் பற்றி நினைத்துக் கொண்டேன். இப்படத்தைப் பற்றி எழுதாமல் இன்னமும் இருக்கிறோமே என்று. பின்னூட்டத்திலும் விஸ்வா இப்படத்தைப் பற்றிச் சொல்ல, இதோ பதிவு ரெடி. இப்படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், ‘கான் ஆர்டிஸ்ட்’ என்ற வார்த்தையைப் பற்றி நாம் அறிந்துகொள்ள...

8mm (1999) – English

March 3, 2010
/   English films

இந்த வலைப்பூ துவங்கிய நாளிலிருந்து நான் எழுதியே ஆகவேண்டும் என்று நினைத்த படங்கள் சில உண்டு. இப்படமும் அவற்றில் ஒன்று. ஆனால், ஏற்கெனவே நம் பாலா இதைப் பற்றி எழுதிவிட்டார் என்பதனால், இவ்வளவு நாள் எழுதாமலேயே இருந்தேன். நேற்று, பிரபல சாமியாரைப் பற்றி வெளிவந்த வீடியோ (முழுவதுமாக...

Collateral (2004) – English

February 24, 2010
/   English films

இந்தப் படத்தைப் பற்றி, நம்மில் பல பேருக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும், இங்கு எழுதப்படுவது, நம் வலைத்தளத்தில் தரமான action படம் ஒன்று இடம்பெற்றுப் பல நாட்கள் ஆகிவிட்டன. மட்டுமல்லாமல், திரைக்கதை அமைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக இப்படத்தின் பல காட்சிகள் விளங்குகின்றன. எனவே, இன்று இப்படத்தைப் பற்றிப் பார்ப்போம்....

Before Sunset (2004) – English

February 21, 2010
/   English films

நமது வாழ்வில் பத்து ஆண்டுகளுக்கு முன்: அப்பொழுது நாம் எந்தக் கவலையும் இல்லாத, வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அள்ளிப் பருகக்கூடிய ஒரு உற்சாகமான நிலையில் இருந்திருப்போம். அந்தச் சமயத்தில், திடீரென்று ஒரு பெண்ணுடன் ஒரு முழு நாள் செலவிடக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் எப்படி இருக்கும்? இருவரும்,...

Amadeus (1984) – English

February 8, 2010
/   English films

வுல்ஃப்கேங் அமெடியுஸ் மோஸார்ட். உலக அளவில் இன்றும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். 250 வருடங்களாகக் கேட்கப்படும் இசை இவருடைய படைப்பு. இந்த உலகம் கண்ட ஜீனியஸ்களில் ஒருவர். மிகச்சிறிய வயதில் – 35 – இறந்த ஒரு மேதை. தனது ஐந்தாவது வயதில் இருந்து இசையமைக்க ஆரம்பித்தவர்....

Papillon (1973) – English

February 6, 2010
/   English films

டூம்ப் ரைடர் : அண்டர்வேர்ல்ட் முடிந்தது. இனிமேல், அடிக்கடி பழையபடி பதிவுகளை மக்கள் எதிர்பார்க்கலாம் (அய்யய்யோ . . இனிமே அடிக்கடி எளுதி, மொக்கைய போடப் போரான் போலயே . . ). இதோ இன்றைய படம் . . சுதந்திரத்துக்கு நாம் கொடுக்கும் விலை என்ன?...

The Remains of the Day (1993) – English

January 27, 2010
/   English films

சமுதாயத்தில் நாம் என்றுமே நினைத்துப் பார்க்காத பகுதியைச் சேர்ந்த மனிதர்கள் உண்டு. அவர்களும் நம்மைப் போல் வாழ்வின் கடினமான பகுதிகளை ஜீரணித்து வாழ்பவர்கள் தான். இவ்வகையைச் சேர்ந்த மனிதர்களைப் பற்றிய படங்கள் அவ்வளவாக வருவதில்லை. இவர்களது வாழ்க்கையை இன்னமும் திரைத்துறை பதிவு செய்யத் துவங்கவில்லை. அப்படி ஒரு...

Spartacus (1960) – English

January 22, 2010
/   English films

ஒரு மிகப்பரந்த பள்ளத்தாக்கு. அதன் ஒருபுறத்தில், பல்லாயிரக்கணக்கான மனிதர்கள், சாதாரண உடையணிந்துகொண்டு, கையில் ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்களில் பெண்களும் வயதானவர்களும்கூட அடக்கம். அனைவரின் முகத்திலும், ஒரு உறுதி தெரிகிறது. அவர்களுக்கு முன், ஒரு குதிரையில், ஸ்பார்ட்டகஸ் நின்றுகொண்டிருக்கிறான். அவர்களுக்கு எதிரில், மிகத்தொலைவில், ஒரு பெரும்படை மெதுவே அவர்களை...

Jeepers Creepers (2001) – English

January 19, 2010
/   English films

இந்தமுறை, வெகு நாள் கழித்து, ஒரு பேய்ப்படம். இந்தப்படம், நம்மை பயப்பட வைத்தாலும், சற்று சிரிக்கவும் வைக்கும் அளவுக்கு ஜாலியாகச் செல்லும் ஒரு எண்டர்டெயினர். ஒரு மிகப்பழைய படத்தில் வந்த ஒரு பாடலே இந்த ஜீப்பர்ஸ் க்ரீப்பர்ஸ் என்ற பெயர். அதை எடுத்து இப்படத்தின் பெயராக வைத்துவிட்டனர்....

Eternal Sunshine of the Spotless Mind (2004) – English

January 16, 2010
/   English films

காதலில் இருக்கும்போது, நாம் எத்தனைமுறை சண்டையிட்டிருக்கிறோம்? எவ்வளவோ சந்தோஷங்களைத் தரும் ஒரு இனிய அனுபவமாகக் காதல் இருந்தாலும், பல முறை, கசப்பான அனுபவங்களையும் தந்திருக்கிறது அல்லவா? அப்படிப்பட்ட ஒரு நிலையில், இரு காதலர்கள் என்ன செய்கிறார்கள்; அதனால் அவர்களுக்கு என்ன நேர்கிறது என்ற ஒரு மிக எளிமையான...

Requiem for a Dream (2000) – English

January 14, 2010
/   English films

நமது வாழ்வில் எத்தனை விஷயங்களுக்கு நாம் அடிமைகளாக இருக்கிறோம்? அவை இல்லாமல் நம்மால் எதுவுமே செய்ய முடிவதில்லை. ஒரு உதாரணத்துக்கு, இந்தத் தொலைக்காட்சிக்கு நம் நாட்டுப் பெரும்பாலான பெண்கள் அடிமை. அதேபோல், போதைமருந்துகளுக்கும் பலர் அடிமை. இயையல்லாது, நமது வாழ்வில் நல்ல விஷயங்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்...

The Notebook ( 2004) – English

January 12, 2010
/   English films

நமக்குப் பிடித்த ஒருவருக்காக, வாழ்வில் எத்தனை தூரம் நம்மால் செல்ல இயலும்? படம், ஒரு மருத்துவமனையில் தொடங்குகிறது. ஒரு முதியவர், வரிசையில் நின்று மருந்து வாங்கிச் செல்கிறார். ஒரு அறையில், ஒரு பாட்டி அமர்ந்திருக்கிறாள். அவளிடம் இவரை அழைத்துச் செல்லும் ஒரு நர்ஸ். இந்த முதியவர், அந்தப்...

Sherlock Holmes (2009) – English

January 9, 2010
/   English films

நான் ஏற்கனவே எழுதியிருந்தபடி, அவதார் படத்தை விடவும் நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு படம் இந்த ஷெர்லாக் ஹோம்ஸ். இந்தியாவில் நேற்றுதான் வெளியிடப்பட்டது. இன்று காலையில் எனது தோழியுடன் ஓடிவிட்டேன். படத்தைப் பார்த்தது முதல், ஹோம்ஸைப் பற்றிய பல சிந்தனைகள். எல்லாவற்றையும் இங்கே பகிர்ந்துவிடலாம் என்று இதை...

The Ghost and the Darkness (1996) – English

January 8, 2010
/   English films

இம்முறை, கொஞ்சம் வித்தியாசமான படத்தைப் பார்க்கப்போகிறோம். இதுவரை நாம் பார்த்த படங்களில், ஒரு ஹீரோ இருப்பான்; ஒரு வில்லன் இருப்பான்; இருவரும் அடித்துக்கொள்வார்கள்; சுபம். ஆனால், இந்தப் படத்தில், இரண்டு மனிதர்கள், தங்களுக்கு முற்றிலும் வேறான இரு சக்திகளுடன் போரிடுவதே கதை. எனக்குத் தெரிந்து, இந்தக் கதையை...

3000 Miles to Graceland (2001) – English

January 7, 2010
/   English films

இம்முறை, நோ சீரியஸ் படம். இன்று நாம் பார்க்கப்போகும் படம், ஒரு பக்கா அதிரடி action படம். கதை, செண்டி என்ற எதுவும் இல்லை இதில். ஜாலியாக ஒரு action படம் பார்க்கவேண்டும் என்றால், இதைப் பார்க்கலாம். எனக்கு மிகப்பிடித்த இருவர் – காஸ்ட்னர் மற்றும் கர்ட்...

One Flew Over the Cuckoo’s Nest (1975) – English

January 5, 2010
/   English films

ஜாக் நிகல்ஸன். உலகத் திரைப்பட வரலாற்றில், தலைசிறந்த நடிகர்களுக்குள் ஒருவர். பல வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கும் இவர், ஒரு மொக்கைப் படமாக இருந்தாலும், தனது நடிப்பால் பிரமாதப்படுத்தி விடுவதில் ஜித்தர். எத்தகைய வேடத்தையும் அனுபவித்து நடிக்கக்கூடியவர். எனது ஃபேவரைட் நடிகர்களில் ஒருவர். தனது திரைவாழ்க்கையின் உச்சத்தில் இவர் இருந்தபோது...

The Fountain (2006) – English

January 4, 2010
/   English films

இதோ இந்தப் புத்தாண்டின் முதல் விமர்சனம். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. நாம் கவனித்திருக்கிறோம்: பல இயக்குநர்கள், ஒரே வகையான படங்களை எடுப்பார்கள். அவர்களது படங்களில், ஓரிரு காட்சிகளைப் பார்த்தாலே, அப்படங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து விடும் (உதா: ரோலண்ட் எம்மரிச், ஷங்கர்)....

Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb (1964) – English

December 31, 2009
/   English films

ஸ்டான்லி குப்ரிக். இவரைப் பற்றி எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. இவரது படங்களே போதும் இவரைப்பற்றிச் சொல்ல. உலக சினிமா மேதைகளில் ஒருவர். அவரது திரைப்பட வாழ்க்கையின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு மிகவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான ஒரு படமே இந்த ‘Dr. Strangelove or: How I Learned...

Casanova (2005) – English

December 29, 2009
/   English films

இன்னிக்கி கொஞ்சம் ஜில்பான்ஸ் மேட்டர். வேறு ஒன்றுமில்லை. இதுவரை நம் வாழ்வில் எத்தனை பெண்கள் கடந்து போயிருப்பார்கள்? ஒன்று? இரண்டு? நான்கு? (அட.. பத்து பேர்ன்னுதான் வச்சிக்குவோமே). . .அத்தனை பெண்களின் மீதும் நமக்கு ஒரு ஈர்ப்பு இருந்திருக்கும். குறைந்தபட்சம் சிலநாட்களுக்காவது. நாம் ஒரு பெண்ணுடன் பழகிக்கொண்டிருக்கும்...

ஷெர்லாக் ஹோம்ஸ் (எச்சரிக்கை – இது திரைப்பட விமரிசனம் அல்ல !)

December 23, 2009
/   English films

இதோ இந்த வாரம், ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ வரப்போகிறது. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், அவதாரை விட, நான் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு படம் என்றால், அது இது தான். எனது சிறுவயதிலிருந்து, எனக்கு மிகப்பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று. ஆர்தர் கானன் டாயலின் அத்தனை ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளையும் படித்திருக்கிறேன்...

Avatar (2009) – English

December 17, 2009
/   English films

திரைக்கதை – ஒரு படத்தின் உயிர்நாடி. அத்தகைய திரைக்கதை அமைப்பதில், பல ஜாம்பவான்கள் உண்டு. அவர்களது படங்கள் ஆரம்பித்தவுடன் நம்மை சர்ரென்று உள்ளிழுத்துவிடும். அந்த சுவாரசியம், கடைசிவரை தொடரும். வெற்றிகரமான திரைக்கதையமைப்பில், ‘Suspension of Disbelief ‘ என்ற அம்சம் மிகவும் முக்கியமானது. படத்தில் என்னதான் நம்பமுடியாத...

Bridges of Madison County (1995) – English

December 16, 2009
/   English films

நம்மில், இதுவரை காதலிக்காதவர்கள் எத்தனை பேர்? காதல் கைகூடியிருந்தாலும் சரி, அல்லது உடைந்து சிதறியிருந்தாலும் சரி, வாழ்வில் ஒருமுறையாவது, ஒருவரையாவது நாம் காதலித்திருக்கிறோம் அல்லவா? அந்த ஒருவர், இந்தக் கணத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற எண்ணமும் நமக்குப் பலமுறை வந்திருக்கும். காதலில் மூழ்கியிருந்த நாட்களில், நாம் எவ்வளவு...

Naked Gun 33 1/3: The final Insult (1994) – English

December 11, 2009
/   Comedy

நம்ம ஊரில், பயங்கரக் கஷ்டப்பட்டு ஒரு நல்ல படம் எடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதுவும் நன்றாக ஓடிவிட்டது. திடீரென்று, அடுத்த வருடமே, டமாலென்று ஒரு மொக்கப் படத்தை எடுத்து, இந்த நல்ல படத்தை அதில் பயங்கரமாகக் கிண்டலடித்து, அந்தப் படமும் சூப்பராக ஓடினால், எப்படி இருக்கும்? ஹாலிவுட்டில்...

Tombstone (1993) – English

December 8, 2009
/   English films

நமது தமிழ்த்திரைப்படங்களில், ஒரு கரு அடிக்கடி உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். கதநாயகன் ஒரு தாதா. அவன், ‘அடப்போங்கடா. . போய் புள்ளகுட்டிங்கள படிக்க வெய்யுங்கடா’ என்று ரிடையர் ஆகி, எங்காவது அமைதியான ஒரு ஊரில் போய், செட்டிலாக விரும்புவான். ஆனால், அந்த ஊரில், ஒரு மிகப்பெரிய பிரச்னை தலைவிரிகோலமாக ஆடிக்கொண்டிருக்கும்....

Dances with Wolves (1990) – English

December 7, 2009
/   English films

இம்முறை, சற்றே சீரியஸான ஒரு படத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். இந்தப்படம், நம்ம ஊர் ‘மகாநதி’ போல் ஒரு பாதிப்பை அளிக்கக்கூடியது. எனவே, இந்த விமரிசனமும், கொஞ்சம் சீரியஸாகவே போகும் வாய்ப்புகள் நிறைய உண்டு. சீரியஸ் படம் பிடிக்காத நண்பர்கள், பொறுத்தருள வேண்டுகிறேன். அடுத்தது ஒரு டமால்...

The Untouchables (1987) – English

December 6, 2009
/   English films

அல் கபோன் – இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவைக் கலக்கிய ஒரு பெயர். சிகாகோவில் இருந்துகொண்டு, ஒரு மாபெரும் குற்ற சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த ஒரு தாதா. இவனது ஆளுமையில் இல்லாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, கிட்டத்தட்ட அரசாங்கத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு ஆள்....

From Hell (2001) – English

December 4, 2009
/   English films

சரித்திரத்தின் ரத்தக்கறை படிந்த பக்கங்களில் பல மர்மங்கள் அடங்கியுள்ளன. இந்த மர்மங்களின் காரணகர்த்தாக்கள், பல நூற்றாண்டுகள் சென்ற பிறகும், இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஒவ்வொருமுறை இந்தச் சம்பவங்களைப் பற்றிப் படிக்கும்போதெல்லாம், அவர்கள் உயிர்த்தெழுகின்றனர். அந்த மர்மங்களுக்குப் பின்னால் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றி, அவைகளை நிகழ்த்திய நபர்களுக்கே தெரியும். அப்படிப்பட்ட...

Crime Spree (2003) – French/ English

December 3, 2009
/   English films

திருட்டு. பலசமயம் மிகவும் சீரியஸாக முடியும் ஒரு விஷயம், மிகச்சில சமயங்களில் காமெடியாக முடிந்து விடுவதும் உண்டு. அதுவும், திருடர்கள் ‘ஸ்டேட்டு உட்டு ஸ்டேட்டு’ போய்த் திருடும்போது, சில குழப்பங்கள் நடந்து, அவர்கள் மாட்டிக் கொள்வது, எப்பொழுதாவது நடக்கும் ஒரு விஷயம். நாமே செய்தித்தாள்களில் படித்திருப்போம். சமீபத்தில்...

Drag Me to Hell (2005) – English

December 1, 2009
/   English films

சாதாரணமாகவே நமக்குத் தனியாக இருக்கும்போது ஒரு கதவு திறந்து மூடினாலே போதும். ஜன்னிதான். அதுவும், இரவு நேரம் என்றால், பக்கத்தில் ஒரு துப்பாக்கியே இருந்தாலும், பயந்து சாகும் ஒரு கேரக்டர் நான். அப்படி இருக்கும்போது, பேய்ப்படம் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்தபோதே நான் உஷாராகி இருக்க வேண்டும்....