Plagiarism Vs Inspiration: a practical note

August 11, 2014
/   Cinema articles

‘Immature poets imitate, mature poets steal. Bad poets deface what they take from great poets and transform it into something better, or at least different’ – T.S.Eliot ‘Good artists copy, Great artists steal’ –...

தெய்வத்திருமகள்: காப்பிரைட் வழக்கு

August 25, 2012
/   Copies

ஹாய் ஃப்ரெண்ட்ஸ். தமிழில் சில மாதங்கள் முன் வெளிவந்த தெய்வத்திருமகள் திரைப்படம், I am Sam படத்தின் காப்பி என்பது அனைவருக்குமே தெரியும். அந்தப் படம் வெளிவந்தவுடன் ஹாலிவுட் பாலா, I am Sam படத்தின் தயாரிப்பாளர்களான New Line Cinemas நிறுவனத்தினருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்...

தமிழ் சினிமா காப்பிகள் – நான்

August 18, 2012
/   Copies

இந்தப் படத்துக்கு வஜனம் தேவையில்லை. பி.கு – இந்த மாதிரி தீமில் (ஐடெண்டிடி தெஃப்ட்) எல்லாம் ஒரு தமிழ்ப்படம் ‘திடீரென்று’ வந்தாலேயே பொறி தட்டும் :-).  தட்ட வேண்டும். தகவல் அனுப்பிய நண்பர்களுக்கு நன்றி

Soul Kitchen (2009) – German & கலகலப்பு

June 25, 2012
/   Copies

உலகப்படங்களிலிருந்து நமது தமிழ்ப்படங்கள் ரகவாரியாகத் திருடப்படுவதைப் பற்றி நமது நண்பர்களுக்கு நன்றாகவே தெரியும். சிலபேர் (கே.வி. ஆனந்த் & Co) பயங்கர வெளிப்படையாக, படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு எதுவுமே தெரியாது என்ற எண்ணத்தில் ஆனந்தின் ‘அயன்’ படத்தில் டிவிடி கடையில் வந்து இயக்குநர்களின் ஜூனியர்கள் விசாரிப்பதைப்போல், ’Maria...

சிம்புவின் வாலு படமும் அமிதாப் பச்சனும்

June 7, 2012
/   Copies

நேற்று தொலைக்காட்சியில் சிம்புவின் ‘வாலு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் பார்த்தேன். அதன் இறுதியில் ஒலித்த இசையைக் கேட்டதும் ஜெர்க் ஆனேன். காரணம், அமிதாப் பச்சன் நடித்த ‘காலியா’  (Kaalia) – தமிழில் ‘கூலிக்காரன்’ என்று விஜயகாந்த் நடித்து வெளியான படம் – இப்படத்தில் சூப்பர் ஹிட் பாடலான ‘Jahan...

கிம் டாட்காமும் காப்புரிமை மீறலும்

January 31, 2012
/   Copies

ஜனவரி 20 ம் தேதி, கிம் டாட்காம் என்ற கிம் ஷ்மிட்ஸ், ந்யூஸிலாண்ட் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது வெறும் செய்திதான். ஆனால் இதன்பின்னால் இருக்கும் விஷயங்கள் அத்தனையும் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக, SOPA மற்றும் PIPA பற்றித் தெரிந்துவைத்திருக்கும் நபர்களுக்கு. காப்புரிமை மீறல் என்ற குற்றம்...

கருந்தேள் டைம்ஸ் 5 – SOPA & PIPA

January 18, 2012
/   Copies

கருந்தேள் டைம்ஸ் என்ற இந்த வகையான பதிவுகளைக் கடைசியாக எழுதி ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. காரணம் மிகவும் சிம்பிள். எனக்கு எழுத வராது. திரைப்படங்களைப் பற்றி எழுதுவதே போதும் என்று நினைத்து வந்தேன். ஆனால் இப்போது இதனை மறுபடி எழுத நினைத்தது, நண்பர் பாலகிருஷ்ணன், SOPA...

ஏழாம் அறிவும் எனது ஆங்கில blogம்!

November 1, 2011
/   Copies

நேற்று மாலை, ஏழாம் அறிவைப் பார்க்க நேரிட்டது, ஒரு துன்பியல் சம்பவம் என்றே கருதுகிறேன். புதுமைப்பித்தன் சொன்னதாக ஒரு சொலவடை உண்டு. ‘உலகின் முதல் குரங்கே, தமிழ்க்குரங்குதான்’ என்பதுதான் அது. இந்த வாக்கியத்தின் முழு அர்த்தமும், ஏழாம் அறிவைப் பார்க்கும்போது விளங்கியது. ஏழாம் அறிவைப் பற்றிய எனது...

வேலாயுதமும் ஏழாம் அறிவும்: ஒரே மூலத்தின் இரண்டு காப்பிகள்?

October 25, 2011
/   Copies

இந்த தீபாவளிக்கு வெளியாகும் இரண்டு பெரிய பட்ஜெட் படங்கள், வேலாயுதமும் ஏழாம் அறிவும். வேலாயுதம் படம், Assassin’s Creed விளையாட்டிலிருந்து எப்படி சுடப்பட்டது என்பதை நாம் ஏற்கெனவே விரிவாகப் பார்த்திருக்கிறோம். அது விஜய் படம். ஆகவே, வெளிப்படையாக சுடப்பட்டிருக்கிறது. வேலாயுதத்தின் ட்ரைலர் பார்த்தால், எப்படி அந்தக் கேமின்...

வேலாயுதம் திரைப்படம் மீது Ubisoft வழக்கு வருகிறது

October 17, 2011
/   Copies

வேலாயுதம் திரைப்படம், Assassin’s Creed கேமில் இருந்து அப்பட்டமாக ஈயடிச்சாங்காப்பி அடிக்கப்பட்டதைப் பற்றி ஒரு கட்டுரை சில வாரங்கள் முன்பு எழுதியிருந்தேன். அதில், யார் வேண்டுமானாலும் இந்த விஷயத்தை Ubisoft நிறுவனத்தாருக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்றும் சொல்லியிருந்தேன். நானுமே என் பங்குக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அதைப்போல்,...

தமிழ் சினிமா காப்பிகள் – முரண் படக் காப்பி கதை

October 3, 2011
/   Copies

ஹிட்ச்காக்கின் Strangers on the train படத்தின் சூடான காப்பி இதோ. ஹிட்ச்காக் உயிரோடு இருந்திருந்தால், தற்கொலை செய்துகொண்டிருப்பார். U too Cheran? சேரனை நான் நம்பினேன். ஆனால், அவரும் விதிவிலக்கல்ல என்று இப்போது தெரிந்துவிட்டது. யாருக்கும் தெரியாத உலக சினிமாக்களைக் காப்பியடிக்கும் காலம் போய், இப்போது...

தமிழ் சினிமா காப்பிகள்–மீடியா வாய்ஸ் பத்திரிகையில் எங்கள் குரல்

August 21, 2011
/   Copies

சிறிது நாட்களுக்கு முன்னர், Assassin’s Creed கேமில் இருந்து சீன்கள் உருவப்பட்டு, விஜய் நடிக்கும் ‘வேலாயுதம்’ படத்தில் வைக்கப்பட்டிருப்பது குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். ஓரிரு நாட்களுக்குப் பின்னர், ஒரு தொலைபேசி அழைப்பு. பேசியவர், தன் பெயர் புஷ்பா கனகதுரை என்றும், நடிகர் சரத்குமார் தொடங்கியிருக்கும் ‘மீடியா...

தமிழ் சினிமாவில் ‘அதிபுத்திசாலிகள்’ : எ காப்பி ஸ்டோரி

July 19, 2011
/   Copies

தமிழ்த்திரையுலகில் சமீபகாலமாக சில நல்ல முயற்சிகள் நடந்துவருவது நண்பர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆரண்யகாண்டம் படத்தைப் பற்றித்தான் சொல்கிறேன். இப்படிச் சில படங்கள் வரும் வேளையில், ஹாலிவுட் படங்களை அப்பட்டமாகக் காப்பியடித்து சில படங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. நான் ஏற்கெனவே கமல்ஹாசன் அடித்துத் தள்ளிய காப்பிகளைப் பற்றி சில கட்டுரைகள்...

நந்தலாலா – மூலமும் நகலும்

December 2, 2010
/   Copies

பொதுவாகவே, வேற்றுமொழிப் படம் ஒன்றைத் தமிழில் உருமாற்றம் செய்யும்போது, அந்த உருமாற்றம், சகிக்க முடியாமல்தான் இருக்கும். இதனாலேயே, அந்த மூலப்படத்தின் மீது மரியாதை இன்னமும் அதிகம் ஆகும். காரணம் மிக எளிது. தமிழ்த் திரைப்படங்களின் டெம்ப்ளேட் அமைப்புக்கு உள்ளாகும்போது, எந்தப் படமுமே அதன் அசல் தன்மையை இழந்துவிடும்....

நந்தலாலாவை முன்னிட்டு…

November 30, 2010
/   Copies

தமிழ்ப்படங்களிலும் சரி, இந்தியாவின் மற்ற மொழிப்படங்களிலும் சரி. ஆங்கில/ உலகப் படங்களைக் காப்பியடிப்பதோ அல்லது தழுவுவதோ தவறே அல்ல என்ற ஒரு கருத்து பரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஜனரஞ்சகமான திரைப்பட ரசிகர்களுக்குத் தெரியாத கலைப்படங்களை இப்படிச் சுடுவது அதிகம். சுட்டுவிட்டு, இந்த இயக்குநர்கள் கொடுக்கும் நேர்காணல்களைக் கேட்டால்,...

கமல்ஹாஸன்: நிகழ மறுத்த அற்புதமா? புதிய தகவல்கள் – வீடியோக்களுடன்

October 27, 2010
/   Copies

கமல் காப்பியடித்த பட்டியலை ஏற்கனவே கொடுத்திருந்தேன் அல்லவா. இப்போது, சில ஆங்கில வீடியோக்களைக் கீழே கொடுக்கிறேன். கூடவே, கமல் காப்பியடித்த படத்தின் வீடியோவையும் கொடுக்கிறேன். நீங்களே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம் – எந்த அளவு கமல் காப்பிகளை அடித்துத் தள்ளியிருக்கிறார் என்று. Moon Over Parador :...

எந்திரன் – எதிர்வினைகள்

October 7, 2010
/   Copies

சென்ற பதிவில் நான் எழுதிய எந்திரன் விமர்சனத்துக்கு, சில நண்பர்களிடம் இருந்து வந்துள்ள பின்னூட்டங்களுக்கு இங்கே பதில் கொடுத்துவிடலாம் என்பது எனது நோக்கம். படித்துப்பாருங்கள். நண்பர்கள் கருத்தைக் கேள்விகளாகக் கொடுத்துள்ளேன். 1. உலக சினிமா இயக்குநர்கள் போல் எந்திரன் படம் எடுத்தால், அதனைப் பார்க்க யாரும் இருக்கமாட்டார்கள்....

எந்திரன் (2010) – ஒரு துன்பியல் சம்பவம்

October 5, 2010
/   Copies

கடந்த இரண்டு ஆண்டுகளாக, எந்த ஊடகத்தின் பக்கம் திரும்பினாலும், அங்கே எந்திரனைப் பற்றிய செய்திகளைக் கேள்விப்பட்டுக்கொண்டிருந்தோம். தமிழ் மக்களின் நாடித்துடிப்பை எகிறவைத்துக்கொண்டிருந்தது எந்திரன் என்று சொன்னால், அது மிகையல்ல. முதலில், இப்படத்தில் கமல் நடிப்பதாக இருந்து, பின் ஷா ருக் கான் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பின் அவராலும்...

கமல்ஹாஸன் – எதிர்வினைகள்

September 11, 2010
/   Copies

கமல்ஹாசன் : நிகழ மறுத்த அற்புதமா? என்ற எனது கட்டுரையைப் படிக்க இங்கே க்ளிக்கவும். இந்தக் கட்டுரை, கமலின் சில படங்களைப் பற்றியும் அவற்றின் ஆங்கில மூலங்களைப் பற்றியும் அலசுகிறது. சென்ற பதிவில் கமல் அடித்த ஈயடிச்சாங்காப்பிகளைப் பற்றி எழுதினாலும் எழுதினேன், அதற்குப் பதில் சொல்லவேண்டும் என்று...

கமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா ?

September 5, 2010
/   Copies

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். யார் மேலும் அவதூறோ அல்லது இன்னபிறவோ சொல்லும் நோக்கம் இந்தப் பதிவுக்குக் கிடையாது. இப்பதிவு எழுதப்படும் நோக்கமே, எந்தப் படைப்புக்கும், அதற்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்ற ஒரே விஷயம் தான். தமிழ்த்திரையுலகின் ரசிகராகத் தனது கணக்கைத் துவங்கும் ஒவ்வொரு நபரும் சில...

மதராசபட்டினம் (2010) – விமர்சனம்

July 13, 2010
/   Copies

படத்தைப் பற்றி எழுதுமுன், ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய, ‘யாமம்’ கதையைப் படித்தவர்களெல்லாம் கையைத் தூக்குங்கள் பார்ப்போம். இந்நாவல், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த சென்னையைப் பற்றிய அருமையான நாவலாகும். இக்கதையினை இரவில் படித்தால், கண் முன் பண்டைய கால சென்னை விரிவது...