Harry Potter and the Sorcerer’s Stone

February 1, 2011
/   English films

இந்தக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்ததுமே, சில புருவங்கள் மேலெழுவதைக் காண்கிறேன். ‘என்னடா இது – ஹாரி பாட்டரா? கருந்தேளிலா?’ என்ற ரீதியில். கடந்த வாரத்தில் ஓர் நாள். வீட்டில் இருந்த போது, மிகவும் போர் அடிக்கவே, எதாவது படம் பார்க்கலாம் என்று, எனது டிவிடிக்கள் தொகுப்பை நோண்டிக்கொண்டிருந்தபோதுதான்,...

நந்தலாலா – மூலமும் நகலும்

December 2, 2010
/   Copies

பொதுவாகவே, வேற்றுமொழிப் படம் ஒன்றைத் தமிழில் உருமாற்றம் செய்யும்போது, அந்த உருமாற்றம், சகிக்க முடியாமல்தான் இருக்கும். இதனாலேயே, அந்த மூலப்படத்தின் மீது மரியாதை இன்னமும் அதிகம் ஆகும். காரணம் மிக எளிது. தமிழ்த் திரைப்படங்களின் டெம்ப்ளேட் அமைப்புக்கு உள்ளாகும்போது, எந்தப் படமுமே அதன் அசல் தன்மையை இழந்துவிடும்....

Amadeus (1984) – English

November 24, 2010
/   English films

இது, நான் ஃபெப்ருவரியில் எழுதிய பதிவு. பாகம் ஒன்றான இப்பகுதி, ஒரு மீள்பதிவு. இந்தப் பதிவிலேயே, மோஸார்ட்டின் இசை பற்றியும் அவரது வாழ்வைப் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்கள் பலவற்றை மறுநாள் எழுதப்போவதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் மறந்துவிட்டேன். நண்பர் சுப. தமிழினியன் பல பதிவுகளில் வந்து நினைவூட்டிக்கொண்டே இருந்தார்....

கோமல் கந்தார் (1961) – வங்காளம்

November 19, 2010
/   world cinema

இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர் யார்? இந்தக் கேள்விக்கு, நம்மில் பல பேர், மணிரத்னம் என்று சொல்லக்கூடும். இன்னும் சில பேர், ஷங்கர் என்று கூடக் கூறலாம் (அடப்பாவிகளா). சில பேர் சத்யஜித் ரே என்று சொல்லலாம். இன்னமும், கேத்தன் மேத்தா, நிமாய் கோஷ், அபர்ணா சென், ரிதுபர்ணோ...

முதல் மரியாதை (1985) – தமிழ்

November 15, 2010
/   Tamil cinema

தமிழ்ப் படங்களைப் பெரும்பாலும் திட்டிக்கொண்டிருக்கும் (அல்லது திட்டுவதாகப் பலரும் எண்ணிக்கொண்டிருக்கும்) என்னை, இந்தவார நட்சத்திரமாக அறிவித்திருக்கும் தமிழ்மணத்துக்கு, அவர்கள் எடுத்துள்ள இந்த முடிவைக் குறித்து என்னைத் திட்டி எழுதப்படும் பல அனானி மின்னஞ்சல்களை இனி அவர்கள் எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று ஒரு டிஸ்கியைப் போட்டுவிட்டு, , ஒரு நன்றியைத்...

Red Beard (1965) – Japanese

November 10, 2010
/   world cinema

அகிரா குரஸவா. இந்தப் பெயரை, உலக சினிமா ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியுமா? இப்பொழுது திரைப்படங்களில் உபயோகப்படுத்தப்பெறும் பல விஷயங்களுக்கு முன்னோடியாக இருந்தவர். தனது படங்களைக் காப்பியடித்த ஹாலிவுட் நிறுவனங்கள் மீது தயங்காது வழக்குகள் தொடுத்து அவற்றில் வெற்றியும் பெற்றவர். இவரது படங்களின் டிவிடிக்களைப் பார்ப்பதில்...

Machete (2010) – English

October 25, 2010
/   English films

நான், சிறு வயதிலிருந்தே காமிக்ஸ் ரசிகன். காமிக்ஸ்களில் பல வகைகள் உண்டு. சாத்வீகமான, மிதவாத காமிக்ஸ்கள், சற்றே வன்முறை கலந்த காமிக்ஸ்கள், வன்முறை பீறித் தெறிக்கும் காமிக்ஸ்கள் இப்படிப் பல வகைகள். முதலாவது வகைக்கு, டிண்டின், ஆஸ்டெரிக்ஸ் ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம். இரண்டாவது வகைக்கு, XIII, ரிக்...

Rumor has it (2005) – English

October 21, 2010
/   English films

வாழ்க்கையில் அதிருஷ்டம் என்பது மட்டுமே வாய்க்கும் மனிதர்கள் இந்தப் பூவுலகில் வெகு சில பேர்கள் உண்டு. அவர்களைப் பார்த்துப் பொறமைப்பட்டுக்கொண்டே இருப்பதைத் தவிர நம்மால் ஏதுமே செய்ய இயலாது. சமயத்தில், இவர்கள் உடம்பு முழுவதுமே ஒரு கிங் சைஸ் மச்சமாகவே மாறிவிடுகிறதோ என்று எண்ணத்தோன்றும் அப்படிப்பட்ட பலே...

Karakter (1997) – Dutch

October 19, 2010
/   world cinema

தந்தையின் பெயர் தெரியாமல் இச்சமூகத்தில் வாழும் புதல்வர்களை, சமூகம் எப்படி எதிர்கொள்கிறது? நமது ஊராக இருந்தால், அடித்தே கொன்றுவிடுவார்கள். அதுதான் வழக்கம். எனவே, வெளிநாடுகளைப் பற்றி யோசிப்போம். நெதர்லாந்து. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்கள். தன்னைச் சுற்றியுள்ள அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கும் ட்ரெவர்ஹாவன் என்ற கோர்ட்...

Caramel (2007) – Arabic

October 13, 2010
/   world cinema

கேரமெல் என்பது…. நாமெல்லோரும் நினைக்கும் அதே கேரமெல் தான். சர்க்கரைப் பாகு. இந்தப் பாகு, சமைப்பதற்கு மட்டுமன்றி, வேறு பல உபயோகங்களையும் கொண்டது. அதில் ஒன்று தான் – இப்படத்தில் வருவது. பதமான சர்க்கரைப் பாகு, அழகு நிலையங்களில் உபயோகப்படுத்தப்படுகிறது. நோக்கம்? உடலில் உள்ள முடிகளை நீக்குவது....

Thank you for Smoking (2005) – English

October 9, 2010
/   English films

ஒரு ஜனரஞ்சகமான படம் எப்படி இருக்க வேண்டும்? பார்ப்பவர்களுக்கு அலுக்கக்கூடாது. கதையே இல்லாவிட்டாலும், சுவாரஸ்யமான திரைக்கதை இருக்க வேண்டும். பார்ப்பவர்களைப் படத்துக்குள் இழுக்க வேண்டும். அநாவசிய பில்ட் அப் காமெடிகள் கூடாது. மொத்தத்தில், படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, படத்தைப் பற்றிய சந்தோஷமான எண்ணங்கள் நமது உள்ளத்தில்...

Hazaron khwahishen Aisi (2005) – English & Hindi

September 30, 2010
/   Hindi Reviews

இது, மற்றொரு மீள்பதிவு. என்றோ ஒரு காலத்தில் நான் எழுதிய இந்த விமர்சனத்தைப் பற்றி, இப்படத்தை சமீபத்தில் பார்த்த நண்பர் கீதப்ரியன் நினைவுபடுத்த, அதன் விளைவே இந்த மீள்பதிவு. இதில், நிறைய புதிய விஷயங்களையும் சேர்த்திருக்கிறேன். எமர்ஜென்ஸி. பல இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றியமைத்த ஒரு நிகழ்வு. இந்தச்...

A Perfect World (1993) – English

September 25, 2010
/   English films

இந்தத் தளத்தைப் படித்து வரும் நண்பர்களுக்கு நன்றாகத் தெரியும் – எனக்கு மிகப்பிடித்தமான ஹாலிவுட் நடிகர், கெவின் காஸ்ட்னர் என்பது. படு கேஷுவலான நடிப்புக்குச் சொந்தக்காரர். அவரது படங்களைப் பற்றி இதுவரை மூன்று முறைகள் எழுதியாயிற்று. இன்னும் அவரைப் பற்றி எழுத வேண்டியது நிறைய இருக்கிறது. எனது...

In the mood for Love (2000) – Cantonese

August 19, 2010
/   world cinema

காதல் என்னும் உணர்வு எப்படி எழுகிறது? அது நமது மனதில் எழுகையில், நம்மால் அனைத்து சமூக நிலைகளையும் உடைத்தெறிந்துவிட்டு வெளியே வர இயலுமா? காதல், திருமணமாகாத மனிதர்களுக்கு இடையே தான் எழ வேண்டுமா? அது, எவ்வாறு நம்மைப் பாதிக்கிறது? காதலைப் பற்றி எந்த வகையிலும் அறுதியிட்டுக் கூறிவிட...

The Expendables (2010) – English

August 14, 2010
/   English films

நீங்கள், சின்னஞ்சிறு வயதில், ஹாலிவுட் அதிரடி ஆக்‌ஷன் படங்கள் பார்த்து வளர்ந்தவரா? அப்படிப் பார்க்கையில், யதேச்சையாக ரேம்போ பார்த்துவிட்டு, ஸ்டாலோனின் விசிறியாக மாறியவரா? ஒரே வீச்சில், எதிராளியின் தலையயோ கையையோ அல்லது உடலையோ கிழித்து, ரத்தம் பீறியடிக்கும் காட்சிகளைப் பார்த்தால், உங்களுக்குள் உற்சாக ஊற்று பொங்குமா? ஸ்டாலோனின்...

Hitch (2005) – English

August 13, 2010
/   English films

படு சீரியஸான படங்களை இதுவரை பார்த்து வந்தோம். There is something about Mary படத்தைப் பற்றி எழுதியபோதே, இனி அவ்வப்போது ஜாலியான படங்களைப் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி, இதோ ஒரு பட்டையைக் கிளப்பும் படுஜாலியான படம். சற்றே யோசித்துப் பார்த்தால், நம்மில்...

Dances with Wolves (1990) – English

August 12, 2010
/   English films

டிஸ்கி – இது ஒரு மீள்பதிவு. பதிவு எழுதத் துவங்கிய காலத்தில் நான் எழுதிய ஒரு பதிவு இது. எனக்கு மிகமிகப் பிடித்த ஒரு படம். இதைப் பார்ப்பதே ஒரு படு வித்தியாசமான அனுபவம். அருமையான ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் நண்பர்கள் இப்படத்தைத்...

Shutter Island (2010) – English

July 26, 2010
/   English films

டிஸ்கி 1 – இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்னர், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சில டயலாக்குகளை வாய்விட்டு உரக்கச் சொல்லிப் பார்க்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். என்னாது காந்தித்தாத்தா செத்துப்போயிட்டாரா? என்னாது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா? என்னாது பிரபுவுக்கும் குஷ்புவுக்கும் லவ்வா? ரைட். சொல்லியாயிற்றா? டிஸ்கி 2 – இந்தக்...

3 – Iron (2004 ) – South Korean

July 20, 2010
/   world cinema

கிம் கி டுக். மறுபடியும். நாம் இந்த வலைத்தளத்தில் பார்க்கும் மூன்றாவது கிம் கி டுக் படம் இது. இந்த வரிசை, இன்னமும் தொடரும். ஏன் கிம் கி டுக்? பொதுவாக, ஒரு திரைப்படம் என்றால், சும்மா ஸ்க்ரீனில் சில காட்சிகள் ஓடுவது, நாம் சில பல...

Inception (2010) – விமர்சனம்

July 17, 2010
/   English films

வெல்.. க்ரிஸ்டோஃபர் நோலன் பற்றிப் புதிதாகச் சொல்ல எதுவுமில்லை. அவரைப் பற்றி, ஒரு தலையணை சைஸ் புத்தகம் போடும் அளவுக்கு இண்டெர்நெட்டில் செய்திகள் கிடைக்கின்றன. சமகாலத் திரைப்பட இயக்குநர்களில், மிக முக்கியமானவராகத் தற்போது அறியப்படும் நோலன் எடுக்கும் படங்கள் அனைத்துமே, மனித மனதின் முரண்பாடுகளை முக்கிய அம்சமாகக்...

மதராசபட்டினம் (2010) – விமர்சனம்

July 13, 2010
/   Copies

படத்தைப் பற்றி எழுதுமுன், ஒரு விஷயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய, ‘யாமம்’ கதையைப் படித்தவர்களெல்லாம் கையைத் தூக்குங்கள் பார்ப்போம். இந்நாவல், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த சென்னையைப் பற்றிய அருமையான நாவலாகும். இக்கதையினை இரவில் படித்தால், கண் முன் பண்டைய கால சென்னை விரிவது...

There is Something about Mary (1998) – English

July 11, 2010
/   English films

இவ்வளவு நாள், படு சீரியஸான படங்களையே பார்த்து வந்தோம். ஒரு மாறுதலுக்கு, மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு (நேக்கட் கன் சீரீஸ் பதிவுக்குப் பிறகு), ஒரு நகைச்சுவைப் படம். எனது கல்லூரி நாட்களில் பார்த்த படம் (ஸ்டார் மூவீஸ் என்று நினைக்கிறேன்). அந்தச் சமயத்திலேயே என்னை விழுந்து...

The last King of Scotland (2006) – English

July 10, 2010
/   English films

மனித வரலாற்றின் பக்கங்களில், ரத்தக்கறை படிந்த பல அத்தியாயங்கள் உண்டு. அவை, சக மனிதனை, அதிகாரம் என்ற பெயரில் கொன்று குவித்த கொடுங்கோலர்களைப் பற்றிப் பல கதைகள் சொல்லும். இவர்களது வாழ்வைப் படித்தால், மிகச்சாதாரண நிலையில் இருந்து, மக்களின் பேராதரவைப் பெறும் வரை ராணுவ ஒழுங்குடன் வாழ்ந்துவிட்டு,...

Kundun (1997) – English

July 8, 2010
/   English films

தனது நாட்டைச் சேர்ந்த அத்தனை மக்களாலும் கடவுள் என்று கருதப்படும் ஒரு நபர். அந்த மக்களின் தலைவரும் அவரே தான். அவரது நாடோ, மற்றொரு வலிய நாட்டின் கீழ் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அவரது குறிக்கோள் என்ன? தலாய் லாமா. திபெத்தின் அத்தனை மக்களாலும் கடவுளாகவே...

Turtles can fly (2004) – Kurdish

July 3, 2010
/   world cinema

இத்தனை நாட்கள் திரைப்படங்கள் குறித்து எழுதியதில், இரானியப்படங்கள் குறித்து எதுவும் எழுதவில்லை. இரானியப்படங்களில், பல அருமையான படங்கள் உண்டு என்பது நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட ஒரு படத்தைப் பற்றித்தான் இந்தப் பதிவு. அமெரிக்க, இராக் யுத்தம் நடப்பதற்குச் சில வாரங்கள் முன். இராக் – துருக்கி...

Samaritan Girl ( 2004) – South Korean

July 2, 2010
/   world cinema

மறுபடியும் கிம் கி டுக். சற்று யோசித்துப் பார்த்தால்,. கிம் கி டுக்கின் படங்களைத் தவிர்ப்பது இயலாத காரியம் என்றே தோன்றுகிறது. அவரது படங்களில் நமக்குக் கிடைக்கும் இனம்புரியாத ஒரு அனுபவத்தை விவரிப்பது கடினம். நமக்கு மிகப்பிடித்த ஒரு புத்தகத்தையோ கவிதையையோ உணவையோ மதுபானத்தையோ பாவித்து முடிக்கும்...

கிம் கி டுக் – ஸாடிஸ்டா?

June 30, 2010
/   Personalities

போன பதிவில் நான் எழுதிய ‘The Isle’ படத்தைப் பற்றிய சில கேள்விகளை எனது நண்பர்கள் ஃபேஸ்புக்கில் கேட்டிருந்தனர். அவர்களுக்கு ஒரு பதிலும் எழுத நேர்ந்தது – ஃபேஸ்புக்கில். ஆனால், முழுப்பதிலும் எழுதிய பின், அந்தப் பதிலே ஒரு பெரிய பதிவைப் போல் இருக்கவே, அதனை இங்கே...

The Isle (Seom) – 2000 – South Korean

June 24, 2010
/   world cinema

சென்ற பதிவில், பஸோலினி எடுத்த கடைசிப் படமான ’ஸாலோ’ பற்றி மிகச்சுருக்கமாகக் குறிப்பிட்டிருந்தேன். இப்படத்தைப் பற்றி யோசிக்கையில், இன்னும் சில படங்கள் நினைவு வந்தன. அவற்றில் ஒன்றே இந்த ‘ஐல்’. இப்படத்தைப் பற்றி எழுதும் முன், இன்னொரு விஷயத்தையும் பார்த்து விடலாம். கோவையில் சாய்பாபாகாலனியில், ‘ஹாலிவுட் டிவிடி...

The Gospel according to Saint Matthew (1964) – Italian

June 21, 2010
/   world cinema

ஒரு கவிஞர்; மிகச்சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவர்; கம்யூனிஸ்ட்; பழுத்த நாத்திகர்; எழுத்தாளர்… வெல்.. இவ்வளவையும் தாண்டி, மனித வாழ்வின் துயரத்தை உள்ளபடி புரிந்து கொண்ட மனிதர். ஒரு ஹோமோசெக்‌ஷுவலும் கூட. தனது ஐம்பத்து மூன்றாம் வயதில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட பஸோலினி, வாழ்வின் புதிர்களைப் புரிந்து...

A Good Year ( 2006) – English

May 29, 2010
/   English films

நமது வாழ்விலேயே நமக்குப் பிடித்தமான நாட்கள் எது என்று கேட்டால், முக்காலே மூணு வீசம் பேர், குழந்தைப் பருவத்தைத் தேர்ந்தெடுக்கக்கூடும். என்னைப்போன்ற சில விதிவிலக்குகள் மட்டும், கல்லூரி (அ) காதல் என்று எதையாவது சொல்லிக்கொண்டு திரியும்கள். அதை விட்டுத் தள்ளுங்கள். சரி. இந்தக் குழந்தைப் பருவத்தின் நினைவுகள்,...

Shrek – Forever After (2010)

May 22, 2010
/   English films

உலகெங்கிலும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு திரைப்பட வரிசையின் இறுதிப்படம் – நேற்று வெளியாகியுள்ளது. இவ்வளவு வருடங்களில், ஷ்ரெக்க்கின் முதல் மூன்று படங்களை அதிவிரைவில் பார்ப்பதைத் தவறவே விட்டதில்லை என்பதால், இந்தப் படத்தையும் இன்று மாலை சென்று பார்த்துவிட்டு, இதோ இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். முதல் பாகத்தில், ஃபியோமா ட்ராகனிடம்...

Batman: Gotham Knight (2008) – இருளின் இளவரசன்

May 21, 2010
/   English films

பேட்மேனைப் பிடிக்காதவர்கள் நம்மில் யார்? பேட்மேன், ஆங்கில காமிக்ஸாகவும் திரைப்படமாகவும் வருவதற்கு முன்னரே (இந்தியாவில் என்று படித்துக் கொள்க), நமக்கு லயன் மற்றும் திகிலில் அறிமுகமாகி விட்டார். அவரது மெகா சாகசமான ‘பௌர்ணமி வேட்டை’ திகிலில் வந்தது எனக்கு இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. ’சிரித்துக் கொல்ல வேண்டும்’...

Fiddler on the Roof (1971) – ஒரு தந்தையின் கதை

May 19, 2010
/   English films

மிகச்சில சமயங்களில், ஹாலிவுட், உலக சினிமாக்களின் தரத்தை எட்டுவதுண்டு. அத்தகைய ஒரு படமே இந்த ‘ஃபிட்லர் ஆன் த ரூஃப்’. இது, ம்யூஸிகல் என்ற வகையைச் சேர்ந்தது. அஃதாவது, நம்ம ஊரில் வருகிறதே – படத்தின் இடையே பாடல்கள் – அந்த வகையில், ஹாலிவுட்டில் எடுக்கப்படும் படங்களே...

Being John Malkovich (1999) – English

May 7, 2010
/   English films

ஹாலிவுட்டின் திரைக்கதை வடிவத்தில், ‘சஸ்பென்ஷன் ஆஃப் டிஸ்பிலீஃப்’ (Suspension of Disbelief) என்ற ஒரு விஷயம், மிகப் பிரபலம். படத்தில் என்ன காட்டினாலும், அதனை நாம் வாயைப் பிளந்துகொண்டு பார்க்க வைப்பதே இது. நமது மூளை, படத்தில் காண்பிக்கப்படும் விஷயங்களை ஒதுக்கித் தள்ளிவிடாமல், அவற்றை முழுமையாக ஒத்துக்கொள்ளும்...

M (1931) – German

May 4, 2010
/   world cinema

தற்போதைய காலகட்டத்தில், பல மர்மப்படங்கள் வந்திருக்கின்றன. மயிர்க்கூச்செரியும் சஸ்பென்ஸ் த்ரில்லர்கள். ஆனால், இன்றைக்கு எழுபத்தொன்பது வருடங்கள் முன், ஒரு படம் உங்களுக்கு அதே ஃபீலிங்கைத் தரமுடியுமா? முடியும் என்று பறைசாற்றிக்கொண்டு, 1931ல் எடுக்கப்பட்ட ஒரு ஜெர்மானியப்படமே இந்த ‘M’. இப்படத்தின் இயக்குநர், ஃப்ரிட்ஸ் லாங். ஆஸ்ட்ரியாவைச் சேர்ந்த...

How to train your Dragon (2010) – 3D – English

April 24, 2010
/   English films

வைக்கிங்குகளைப் பற்றி நமது அபிப்பிராயம் என்ன? அவர்கள் காட்டுமிராண்டிகள்; மலையையொத்த உருவம் படைத்தவர்கள்; மூளையில்லாதவர்கள் இத்யாதி இத்யாதி. தமிழில் வைக்கிங்குகளைப் பற்றி பெரும்பாலும் இதுவரை எந்த இலக்கியமும் வரவில்லை. எனக்குத் தெரிந்து, லயன் காமிக்ஸில் வெளிவந்த ‘வைக்கிங் தீவு மர்மம்’ ஒன்றுதான் நான் இதுவரை படித்தது. அது...

Thelma & Louise (1991) – English

April 22, 2010
/   English films

ஆங்கிலப்படங்களில், திரைக்கதை ஒரு முக்கியமான அம்சம். அங்கு ஒரு படம் தொடங்கும்போது, திரைக்கதை முழுதாக எழுதப்பட்டு, அனைத்து நடிகர்களுக்கும் அளிக்கப்படவேண்டும் என்பது அவசியம். இந்தத் திரைக்கதையில் மன்னர்கள் அங்கு பல பேர் உண்டு. திரைக்கதை எழுதுவதற்கென்றே பிரத்யேகமாகப் பயிற்சி பெற்று, அதை மட்டுமே செய்பவர்கள் அவர்கள். அங்கு...

From Dusk till Dawn (1996) – English

April 4, 2010
/   English films

இதோ . . மீ த பேக் ! எனது ‘கம்பேக்’ விமர்சனம், ஒரு ஜாலியான, சற்றே தற்குறித்தனமான ஒரு படத்தைப் பற்றி இருக்கப்போகிறது. படத்தின் இயக்குநர், ஹாலிவுட்டின் மிகச்சிறந்த க்ரியேட்டிவ் திறன் படைத்த, எனது மனதிற்கு மிகவும் பிடித்தமான, ராபர்ட் ரோட்ரிகஸ். ’ப்ராடிஜி’ எனப்படும் அசாதாரணத்...

Meghe Dhaka Tara (1960)- Bengali

March 13, 2010
/   world cinema

பெண்களைப் பற்றிய நமது பொதுவான கருத்து என்ன? அவர்களை நாம் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம்? பெண்களைப் பற்றிய நமது பார்வை, சமீபத்திய காலங்களில் தான் சற்றே மாறத் தொடங்கியுள்ளது. எத்தனையோ பெண்கள் தங்களது குடும்பத்துக்காக உழைத்து உழைத்துத் தேய்ந்துபோவதை நாம் பார்க்கிறோம். சாலையில் நடந்துசெல்லும்போதே, நம்மைக் கடந்து...

Matchstick Men (2003) – English

March 4, 2010
/   English films

போன பதிவான 8மிமியை எழுதும்போதே, இந்தப் படத்தைப் பற்றி நினைத்துக் கொண்டேன். இப்படத்தைப் பற்றி எழுதாமல் இன்னமும் இருக்கிறோமே என்று. பின்னூட்டத்திலும் விஸ்வா இப்படத்தைப் பற்றிச் சொல்ல, இதோ பதிவு ரெடி. இப்படத்தைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், ‘கான் ஆர்டிஸ்ட்’ என்ற வார்த்தையைப் பற்றி நாம் அறிந்துகொள்ள...

8mm (1999) – English

March 3, 2010
/   English films

இந்த வலைப்பூ துவங்கிய நாளிலிருந்து நான் எழுதியே ஆகவேண்டும் என்று நினைத்த படங்கள் சில உண்டு. இப்படமும் அவற்றில் ஒன்று. ஆனால், ஏற்கெனவே நம் பாலா இதைப் பற்றி எழுதிவிட்டார் என்பதனால், இவ்வளவு நாள் எழுதாமலேயே இருந்தேன். நேற்று, பிரபல சாமியாரைப் பற்றி வெளிவந்த வீடியோ (முழுவதுமாக...

My Name is Khan (2010) – Hindi

March 2, 2010
/   Hindi Reviews

பல காலம் தொட்டே, நமது நாட்டில், சில ப்ரச்னைகள் இருந்து வருகின்றன. இதுவரை இவைகளுக்குத் தீர்வு கிடைத்தபாடில்லை. இப்பிரச்னைகளைப் பற்றிப் பேசினாலே, அடிவிழும் சாத்தியக்கூறுகள் அதிகம். அவற்றில் ஒன்றுதான், முஸ்லிம்கள். இந்தியாவில் மட்டும் இல்லை – உலகத்தில் எந்த மேற்கத்திய நாடாக இருந்தாலும், அங்கு முஸ்லிம்கள் என்றாலேயே...

விண்ணைத் தாண்டி வருவாயா …

February 28, 2010
/   Romance

நான் இந்த வலைப்பூவில் ஆங்கிலத்தில் வந்துள்ள சில அருமையான காதல் படங்களுக்கு விமரிசனம் எழுதியுள்ளேன். அந்தப் படங்களைப் பார்க்கையில், மனம் முழுவதும் ஒரு அருமையான உணர்வு நிரம்பியிருக்கும். படத்தைப் பார்த்த பின்னரும் பல மணி நேரங்களுக்கு அந்த உணர்வு போகாது. படத்தின் பாடல்களே மனதில் ஓடிக்கொண்டிருக்கும். படத்தின்...

Collateral (2004) – English

February 24, 2010
/   English films

இந்தப் படத்தைப் பற்றி, நம்மில் பல பேருக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும், இங்கு எழுதப்படுவது, நம் வலைத்தளத்தில் தரமான action படம் ஒன்று இடம்பெற்றுப் பல நாட்கள் ஆகிவிட்டன. மட்டுமல்லாமல், திரைக்கதை அமைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக இப்படத்தின் பல காட்சிகள் விளங்குகின்றன. எனவே, இன்று இப்படத்தைப் பற்றிப் பார்ப்போம்....

Before Sunset (2004) – English

February 21, 2010
/   English films

நமது வாழ்வில் பத்து ஆண்டுகளுக்கு முன்: அப்பொழுது நாம் எந்தக் கவலையும் இல்லாத, வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அள்ளிப் பருகக்கூடிய ஒரு உற்சாகமான நிலையில் இருந்திருப்போம். அந்தச் சமயத்தில், திடீரென்று ஒரு பெண்ணுடன் ஒரு முழு நாள் செலவிடக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் எப்படி இருக்கும்? இருவரும்,...

Carandiru (2003) – Portuguese

February 18, 2010
/   world cinema

சிறைகளைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? பொதுவாகவே, சிறை என்றால் சட்டென்று ஒரு ஒதுக்கம் நமது மனதில் வருவது சகஜம். நாம் செல்லக்கூடாது என்று நினைக்கும் இடங்களில் முதலிடம் அனேகமாக சிறைக்குத் தான். குற்றவாளிகள் தமது குற்றத்துக்காக, தண்டனைகளை அனுபவிக்கும் ஒரு இடம் என்பது தான் சிறைகளைப்...

Amadeus (1984) – English

February 8, 2010
/   English films

வுல்ஃப்கேங் அமெடியுஸ் மோஸார்ட். உலக அளவில் இன்றும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். 250 வருடங்களாகக் கேட்கப்படும் இசை இவருடைய படைப்பு. இந்த உலகம் கண்ட ஜீனியஸ்களில் ஒருவர். மிகச்சிறிய வயதில் – 35 – இறந்த ஒரு மேதை. தனது ஐந்தாவது வயதில் இருந்து இசையமைக்க ஆரம்பித்தவர்....

The Remains of the Day (1993) – English

January 27, 2010
/   English films

சமுதாயத்தில் நாம் என்றுமே நினைத்துப் பார்க்காத பகுதியைச் சேர்ந்த மனிதர்கள் உண்டு. அவர்களும் நம்மைப் போல் வாழ்வின் கடினமான பகுதிகளை ஜீரணித்து வாழ்பவர்கள் தான். இவ்வகையைச் சேர்ந்த மனிதர்களைப் பற்றிய படங்கள் அவ்வளவாக வருவதில்லை. இவர்களது வாழ்க்கையை இன்னமும் திரைத்துறை பதிவு செய்யத் துவங்கவில்லை. அப்படி ஒரு...

Spartacus (1960) – English

January 22, 2010
/   English films

ஒரு மிகப்பரந்த பள்ளத்தாக்கு. அதன் ஒருபுறத்தில், பல்லாயிரக்கணக்கான மனிதர்கள், சாதாரண உடையணிந்துகொண்டு, கையில் ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்களில் பெண்களும் வயதானவர்களும்கூட அடக்கம். அனைவரின் முகத்திலும், ஒரு உறுதி தெரிகிறது. அவர்களுக்கு முன், ஒரு குதிரையில், ஸ்பார்ட்டகஸ் நின்றுகொண்டிருக்கிறான். அவர்களுக்கு எதிரில், மிகத்தொலைவில், ஒரு பெரும்படை மெதுவே அவர்களை...

4 Months, 3 weeks and 2 days (2007) – Romanian

January 20, 2010
/   world cinema

ஒரு நட்புக்காக எவ்வளவு தூரம் செல்லலாம்? இதுதான் 4 Months, 3 weeks and 2 days என்ற இப்படத்தின் டேக்லைன். எனக்குத் தெரிந்து, சாருவின் வலைத்தளத்தில் இப்படத்தைப் பற்றிப் படித்திருக்கிறேன். ருமேனியாவில், 1987ல், கடுமையான சட்டதிட்டங்கள் நிலவிய ஒரு காலத்தில், இப்படம், இரண்டு நண்பர்களான ஒடீலியா...