My Name is Khan (2010) – Hindi

March 2, 2010
/   Hindi Reviews

பல காலம் தொட்டே, நமது நாட்டில், சில ப்ரச்னைகள் இருந்து வருகின்றன. இதுவரை இவைகளுக்குத் தீர்வு கிடைத்தபாடில்லை. இப்பிரச்னைகளைப் பற்றிப் பேசினாலே, அடிவிழும் சாத்தியக்கூறுகள் அதிகம். அவற்றில் ஒன்றுதான், முஸ்லிம்கள். இந்தியாவில் மட்டும் இல்லை – உலகத்தில் எந்த மேற்கத்திய நாடாக இருந்தாலும், அங்கு முஸ்லிம்கள் என்றாலேயே...

விண்ணைத் தாண்டி வருவாயா …

February 28, 2010
/   Romance

நான் இந்த வலைப்பூவில் ஆங்கிலத்தில் வந்துள்ள சில அருமையான காதல் படங்களுக்கு விமரிசனம் எழுதியுள்ளேன். அந்தப் படங்களைப் பார்க்கையில், மனம் முழுவதும் ஒரு அருமையான உணர்வு நிரம்பியிருக்கும். படத்தைப் பார்த்த பின்னரும் பல மணி நேரங்களுக்கு அந்த உணர்வு போகாது. படத்தின் பாடல்களே மனதில் ஓடிக்கொண்டிருக்கும். படத்தின்...

Collateral (2004) – English

February 24, 2010
/   English films

இந்தப் படத்தைப் பற்றி, நம்மில் பல பேருக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும், இங்கு எழுதப்படுவது, நம் வலைத்தளத்தில் தரமான action படம் ஒன்று இடம்பெற்றுப் பல நாட்கள் ஆகிவிட்டன. மட்டுமல்லாமல், திரைக்கதை அமைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக இப்படத்தின் பல காட்சிகள் விளங்குகின்றன. எனவே, இன்று இப்படத்தைப் பற்றிப் பார்ப்போம்....

Before Sunset (2004) – English

February 21, 2010
/   English films

நமது வாழ்வில் பத்து ஆண்டுகளுக்கு முன்: அப்பொழுது நாம் எந்தக் கவலையும் இல்லாத, வாழ்க்கையின் ஒவ்வொரு துளியையும் அள்ளிப் பருகக்கூடிய ஒரு உற்சாகமான நிலையில் இருந்திருப்போம். அந்தச் சமயத்தில், திடீரென்று ஒரு பெண்ணுடன் ஒரு முழு நாள் செலவிடக்கூடிய ஒரு சந்தர்ப்பம் அமைந்தால் எப்படி இருக்கும்? இருவரும்,...

Carandiru (2003) – Portuguese

February 18, 2010
/   world cinema

சிறைகளைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? பொதுவாகவே, சிறை என்றால் சட்டென்று ஒரு ஒதுக்கம் நமது மனதில் வருவது சகஜம். நாம் செல்லக்கூடாது என்று நினைக்கும் இடங்களில் முதலிடம் அனேகமாக சிறைக்குத் தான். குற்றவாளிகள் தமது குற்றத்துக்காக, தண்டனைகளை அனுபவிக்கும் ஒரு இடம் என்பது தான் சிறைகளைப்...

கரீப் நவாஸ் . .

February 17, 2010
/   Song Reviews

இதோ நமது ட்ரயாலஜியின் கடைசிப் பாடல். இத்தோடு பாடல்களைப் பற்றித் தொடர்ந்து எழுதுவதற்கு ஒரு கமா விட்டுவிட்டு, மறுபடி படங்களைப் பற்றிப் பார்ப்போம். அவ்வப்போது நல்ல பாடல்களைப் பற்றி எழுதுகிறேன் (யப்பாடி நிறுத்தினாண்டா சாமி). இந்தப் பாடலான ‘கரீப் நவாஸ்’ பற்றிப் பார்ப்பதற்கு முன்னால், இந்தப் பாடல்...

பியா ஹாஜி அலி . . .

February 11, 2010
/   Song Reviews

அர்ஸியா(ன்) பாடலைப் பற்றிய எனது சென்ற பதிவை, தனது வலைத்தளத்தில் வெளியிட்ட நமது சாருவிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். பல பேர் நமது தளத்தை வந்து பார்க்க அது உதவியது. மட்டுமல்லாது, அவருக்கும் அது பிடித்தது பற்றி மிகவும் மகிழ்ந்தேன். நன்றி சாரு. இதோ அந்த வரிசையில்...

மரம்மத் முகத்தர் கி கர்தோ மோலா . . .

February 9, 2010
/   Song Reviews

அமெடியுஸ் பட விமர்சனத்தின் இரண்டாம் பகுதியை எழுதுவதற்கு முன்னர், இன்னொரு விஷயத்தை எழுதலாம் என்று நினைத்தேன். இதுவும் இசை சம்மந்தப்பட்ட ஒரு பதிவு தான். மோஸார்ட்டைப் பற்றி எழுதுகையில், நமது ‘மோஸார்ட் ஆஃப் மெட்ராஸ்’ பற்றிய சில எண்ணங்கள் எழும்பின. அவரது ஒரு அருமையான பாடலைக் குறித்து,...

Amadeus (1984) – English

February 8, 2010
/   English films

வுல்ஃப்கேங் அமெடியுஸ் மோஸார்ட். உலக அளவில் இன்றும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். 250 வருடங்களாகக் கேட்கப்படும் இசை இவருடைய படைப்பு. இந்த உலகம் கண்ட ஜீனியஸ்களில் ஒருவர். மிகச்சிறிய வயதில் – 35 – இறந்த ஒரு மேதை. தனது ஐந்தாவது வயதில் இருந்து இசையமைக்க ஆரம்பித்தவர்....

Papillon (1973) – English

February 6, 2010
/   English films

டூம்ப் ரைடர் : அண்டர்வேர்ல்ட் முடிந்தது. இனிமேல், அடிக்கடி பழையபடி பதிவுகளை மக்கள் எதிர்பார்க்கலாம் (அய்யய்யோ . . இனிமே அடிக்கடி எளுதி, மொக்கைய போடப் போரான் போலயே . . ). இதோ இன்றைய படம் . . சுதந்திரத்துக்கு நாம் கொடுக்கும் விலை என்ன?...

Tomb Raider: UnderWorld

February 3, 2010
/   Game Reviews

கடந்த ஒரு வாரமா எந்தப் பதிவும் போடாததுக்குக் காரணம், கண்டிப்பா வேலை இல்ல. அதுக்குக் காரணம் வேற ஒண்ணு. அதப் பத்தித் தான் இந்தப் பதிவு. கணிணியில் கேம்கள் விளையாடுவது உங்களுக்குப் பிடிக்குமா? அப்படியென்றால், இந்தப் பதிவு உங்களுக்காகத் தான். கேம்கள் பிடிக்காதவர்களும் இதைப் படிக்கலாம். ஒரு...

The Remains of the Day (1993) – English

January 27, 2010
/   English films

சமுதாயத்தில் நாம் என்றுமே நினைத்துப் பார்க்காத பகுதியைச் சேர்ந்த மனிதர்கள் உண்டு. அவர்களும் நம்மைப் போல் வாழ்வின் கடினமான பகுதிகளை ஜீரணித்து வாழ்பவர்கள் தான். இவ்வகையைச் சேர்ந்த மனிதர்களைப் பற்றிய படங்கள் அவ்வளவாக வருவதில்லை. இவர்களது வாழ்க்கையை இன்னமும் திரைத்துறை பதிவு செய்யத் துவங்கவில்லை. அப்படி ஒரு...

Spartacus (1960) – English

January 22, 2010
/   English films

ஒரு மிகப்பரந்த பள்ளத்தாக்கு. அதன் ஒருபுறத்தில், பல்லாயிரக்கணக்கான மனிதர்கள், சாதாரண உடையணிந்துகொண்டு, கையில் ஆயுதங்களுடன் நின்றுகொண்டிருக்கின்றனர். அவர்களில் பெண்களும் வயதானவர்களும்கூட அடக்கம். அனைவரின் முகத்திலும், ஒரு உறுதி தெரிகிறது. அவர்களுக்கு முன், ஒரு குதிரையில், ஸ்பார்ட்டகஸ் நின்றுகொண்டிருக்கிறான். அவர்களுக்கு எதிரில், மிகத்தொலைவில், ஒரு பெரும்படை மெதுவே அவர்களை...

4 Months, 3 weeks and 2 days (2007) – Romanian

January 20, 2010
/   world cinema

ஒரு நட்புக்காக எவ்வளவு தூரம் செல்லலாம்? இதுதான் 4 Months, 3 weeks and 2 days என்ற இப்படத்தின் டேக்லைன். எனக்குத் தெரிந்து, சாருவின் வலைத்தளத்தில் இப்படத்தைப் பற்றிப் படித்திருக்கிறேன். ருமேனியாவில், 1987ல், கடுமையான சட்டதிட்டங்கள் நிலவிய ஒரு காலத்தில், இப்படம், இரண்டு நண்பர்களான ஒடீலியா...

Jeepers Creepers (2001) – English

January 19, 2010
/   English films

இந்தமுறை, வெகு நாள் கழித்து, ஒரு பேய்ப்படம். இந்தப்படம், நம்மை பயப்பட வைத்தாலும், சற்று சிரிக்கவும் வைக்கும் அளவுக்கு ஜாலியாகச் செல்லும் ஒரு எண்டர்டெயினர். ஒரு மிகப்பழைய படத்தில் வந்த ஒரு பாடலே இந்த ஜீப்பர்ஸ் க்ரீப்பர்ஸ் என்ற பெயர். அதை எடுத்து இப்படத்தின் பெயராக வைத்துவிட்டனர்....

Hazaron khwahishen Aisi (2005) – English & Hindi

January 18, 2010
/   Hindi Reviews

எமர்ஜென்ஸி. பல இந்தியர்களின் தலையெழுத்தை மாற்றியமைத்த ஒரு நிகழ்வு. இந்தச் சமயத்தில், சில இளைஞர்களின் வாழ்வைப் பற்றிய ஒரு நெஞ்சைத்தொடும் படம் தான் இந்த ‘Hazaron khwahishen Aisi’ என்ற ஹிந்திப்படம். இந்த இளைஞர்களின் கூடவே பயணிக்கும் இப்படம், அவர்களது வாழ்வை நம் கண்முன்னே நிறுத்துகிறது. இயக்குநர்...

ஆயிரத்தில் ஒருவன் – ஒடுக்கப்பட்ட மக்களின் குமுறல் !

January 17, 2010
/   Tamil cinema

டிஸ்கி – 17/11/2010 – இந்தப் பதிவு, நான் எவ்வளவு மொக்கையாகவும் முட்டாள்தனமாகவும் ஒருகாலத்தில் எழுதியிருக்கிறேன் என்று நானே நினைவுபடுத்திக் கொள்ள உதவுகிறது ? இன்று காலையில் பார்க்க நேர்ந்த இப்படத்தைப் பற்றி, பார்த்துக்கொண்டிருக்கும்போதே சில எண்ணங்கள் தோன்றின. படம் முடிந்ததும், அவற்றைப் பற்றி எழுதிவிடலாம் என்று...

Eternal Sunshine of the Spotless Mind (2004) – English

January 16, 2010
/   English films

காதலில் இருக்கும்போது, நாம் எத்தனைமுறை சண்டையிட்டிருக்கிறோம்? எவ்வளவோ சந்தோஷங்களைத் தரும் ஒரு இனிய அனுபவமாகக் காதல் இருந்தாலும், பல முறை, கசப்பான அனுபவங்களையும் தந்திருக்கிறது அல்லவா? அப்படிப்பட்ட ஒரு நிலையில், இரு காதலர்கள் என்ன செய்கிறார்கள்; அதனால் அவர்களுக்கு என்ன நேர்கிறது என்ற ஒரு மிக எளிமையான...

Requiem for a Dream (2000) – English

January 14, 2010
/   English films

நமது வாழ்வில் எத்தனை விஷயங்களுக்கு நாம் அடிமைகளாக இருக்கிறோம்? அவை இல்லாமல் நம்மால் எதுவுமே செய்ய முடிவதில்லை. ஒரு உதாரணத்துக்கு, இந்தத் தொலைக்காட்சிக்கு நம் நாட்டுப் பெரும்பாலான பெண்கள் அடிமை. அதேபோல், போதைமருந்துகளுக்கும் பலர் அடிமை. இயையல்லாது, நமது வாழ்வில் நல்ல விஷயங்கள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்...

ஒரு முக்கிய அறிவிப்பு . .

January 13, 2010
/   Announcements

நண்பர்களே . .திடீரென www.karundhel.com செயலிழந்து விட்டதனால், www.karundhel.net டுக்கு மாறிவிட்டதாக சொல்லியிருந்தேன். ஆனால், அது தற்போது சரி செய்யப்பட்டுவிட்டது. எனவே , www.karundhel.com என்ற சுட்டியையே இனிமேல் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். தடங்கலுக்கு வருந்துகிறேன் . . ?

The Notebook ( 2004) – English

January 12, 2010
/   English films

நமக்குப் பிடித்த ஒருவருக்காக, வாழ்வில் எத்தனை தூரம் நம்மால் செல்ல இயலும்? படம், ஒரு மருத்துவமனையில் தொடங்குகிறது. ஒரு முதியவர், வரிசையில் நின்று மருந்து வாங்கிச் செல்கிறார். ஒரு அறையில், ஒரு பாட்டி அமர்ந்திருக்கிறாள். அவளிடம் இவரை அழைத்துச் செல்லும் ஒரு நர்ஸ். இந்த முதியவர், அந்தப்...

www.karundhel.com உதயம் . . .

/   Announcements

நண்பர்களுக்கு வணக்கம் . இன்றிலிருந்து, நமது வலைப்பூ, www.karundhel.com என்று மாறிவிட்டது. இது ஒரு தொடக்கமாக இருக்கட்டும். இனிமேல், நீங்கள் இந்தச் சுட்டியை சுலபமாக நினைவு வைத்துக் கொள்ளலாம். உங்கள் ஆதரவை வழக்கம் போல் தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. . . அடுத்த பதிவு...

The Last Lear (2007) – Hindi

January 11, 2010
/   Hindi Reviews

இம்முறை, ஒரு மாறுதலுக்காக, ஒரு அருமையான ஹிந்திப் படம். இந்தப் பதிவுக்குக் கிடைக்கப்போகும் வரவேற்பை அனுசரித்து, எப்போதாவது ஒரு நல்ல ஹிந்திப்படத்தைப் பற்றி எழுதலாமா வேண்டாமா என்று முடிவு செய்வேன். ஹிந்திப்படம் என்பதைப் படித்தவுடன், நண்பர்கள் இப்பக்கத்தைக் ‘கிலோஸ்’ (நன்றி: மிஸ்டர் பாரத் ரஜினி) செய்யாமல், மேலே...

Sherlock Holmes (2009) – English

January 9, 2010
/   English films

நான் ஏற்கனவே எழுதியிருந்தபடி, அவதார் படத்தை விடவும் நான் மிகவும் எதிர்பார்த்த ஒரு படம் இந்த ஷெர்லாக் ஹோம்ஸ். இந்தியாவில் நேற்றுதான் வெளியிடப்பட்டது. இன்று காலையில் எனது தோழியுடன் ஓடிவிட்டேன். படத்தைப் பார்த்தது முதல், ஹோம்ஸைப் பற்றிய பல சிந்தனைகள். எல்லாவற்றையும் இங்கே பகிர்ந்துவிடலாம் என்று இதை...

The Ghost and the Darkness (1996) – English

January 8, 2010
/   English films

இம்முறை, கொஞ்சம் வித்தியாசமான படத்தைப் பார்க்கப்போகிறோம். இதுவரை நாம் பார்த்த படங்களில், ஒரு ஹீரோ இருப்பான்; ஒரு வில்லன் இருப்பான்; இருவரும் அடித்துக்கொள்வார்கள்; சுபம். ஆனால், இந்தப் படத்தில், இரண்டு மனிதர்கள், தங்களுக்கு முற்றிலும் வேறான இரு சக்திகளுடன் போரிடுவதே கதை. எனக்குத் தெரிந்து, இந்தக் கதையை...

3000 Miles to Graceland (2001) – English

January 7, 2010
/   English films

இம்முறை, நோ சீரியஸ் படம். இன்று நாம் பார்க்கப்போகும் படம், ஒரு பக்கா அதிரடி action படம். கதை, செண்டி என்ற எதுவும் இல்லை இதில். ஜாலியாக ஒரு action படம் பார்க்கவேண்டும் என்றால், இதைப் பார்க்கலாம். எனக்கு மிகப்பிடித்த இருவர் – காஸ்ட்னர் மற்றும் கர்ட்...

One Flew Over the Cuckoo’s Nest (1975) – English

January 5, 2010
/   English films

ஜாக் நிகல்ஸன். உலகத் திரைப்பட வரலாற்றில், தலைசிறந்த நடிகர்களுக்குள் ஒருவர். பல வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கும் இவர், ஒரு மொக்கைப் படமாக இருந்தாலும், தனது நடிப்பால் பிரமாதப்படுத்தி விடுவதில் ஜித்தர். எத்தகைய வேடத்தையும் அனுபவித்து நடிக்கக்கூடியவர். எனது ஃபேவரைட் நடிகர்களில் ஒருவர். தனது திரைவாழ்க்கையின் உச்சத்தில் இவர் இருந்தபோது...

The Fountain (2006) – English

January 4, 2010
/   English films

இதோ இந்தப் புத்தாண்டின் முதல் விமர்சனம். எனக்கு மிகவும் பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. நாம் கவனித்திருக்கிறோம்: பல இயக்குநர்கள், ஒரே வகையான படங்களை எடுப்பார்கள். அவர்களது படங்களில், ஓரிரு காட்சிகளைப் பார்த்தாலே, அப்படங்கள் எப்படி இருக்கும் என்று தெரிந்து விடும் (உதா: ரோலண்ட் எம்மரிச், ஷங்கர்)....

Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb (1964) – English

December 31, 2009
/   English films

ஸ்டான்லி குப்ரிக். இவரைப் பற்றி எதுவுமே சொல்ல வேண்டியதில்லை. இவரது படங்களே போதும் இவரைப்பற்றிச் சொல்ல. உலக சினிமா மேதைகளில் ஒருவர். அவரது திரைப்பட வாழ்க்கையின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட ஒரு மிகவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான ஒரு படமே இந்த ‘Dr. Strangelove or: How I Learned...

Ran (1985) – Japanese

December 30, 2009
/   world cinema

திரைப்பட உலகில், மக்களுக்காகப் படமெடுக்கும் இயக்குநர்கள் பல பேர் உண்டு. அதே போல், தங்களது திருப்திக்காகப் படமெடுக்கும் இயக்குநர்களும் சில பேர் உண்டு. இந்த இரண்டாம் வகையைச் சேர்ந்த இயக்குநர்களின் படங்கள், பெரும்பாலும் நம்மைச் சிந்திக்க வைக்கும். அவர்களது படங்கள், ஒரு அழகான, கலாபூர்வமான அனுபவங்களாக இருப்பவை....

Casanova (2005) – English

December 29, 2009
/   English films

இன்னிக்கி கொஞ்சம் ஜில்பான்ஸ் மேட்டர். வேறு ஒன்றுமில்லை. இதுவரை நம் வாழ்வில் எத்தனை பெண்கள் கடந்து போயிருப்பார்கள்? ஒன்று? இரண்டு? நான்கு? (அட.. பத்து பேர்ன்னுதான் வச்சிக்குவோமே). . .அத்தனை பெண்களின் மீதும் நமக்கு ஒரு ஈர்ப்பு இருந்திருக்கும். குறைந்தபட்சம் சிலநாட்களுக்காவது. நாம் ஒரு பெண்ணுடன் பழகிக்கொண்டிருக்கும்...

The Lives of Others (2006 ) – German

December 28, 2009
/   world cinema

நமது வாழ்க்கை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். எந்தச் சிக்கலும் இல்லாமல் இன்பமாக உள்ளது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நமது நண்பர்கள், மனைவி, உறவினர்கள் இப்படி எல்லாரோடும், தினம் ஒரு பார்ட்டி என்று அனுபவித்துக்கொண்டிருக்கும் வேளையில், இது அத்தனையையும் – நம் வாழ்வில் நாம் பேசும் ஒவ்வொரு...

ஷெர்லாக் ஹோம்ஸ் (எச்சரிக்கை – இது திரைப்பட விமரிசனம் அல்ல !)

December 23, 2009
/   English films

இதோ இந்த வாரம், ‘ஷெர்லாக் ஹோம்ஸ்’ வரப்போகிறது. உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், அவதாரை விட, நான் மிகவும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு படம் என்றால், அது இது தான். எனது சிறுவயதிலிருந்து, எனக்கு மிகப்பிடித்த கதாபாத்திரங்களில் ஒன்று. ஆர்தர் கானன் டாயலின் அத்தனை ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளையும் படித்திருக்கிறேன்...

Avatar (2009) – English

December 17, 2009
/   English films

திரைக்கதை – ஒரு படத்தின் உயிர்நாடி. அத்தகைய திரைக்கதை அமைப்பதில், பல ஜாம்பவான்கள் உண்டு. அவர்களது படங்கள் ஆரம்பித்தவுடன் நம்மை சர்ரென்று உள்ளிழுத்துவிடும். அந்த சுவாரசியம், கடைசிவரை தொடரும். வெற்றிகரமான திரைக்கதையமைப்பில், ‘Suspension of Disbelief ‘ என்ற அம்சம் மிகவும் முக்கியமானது. படத்தில் என்னதான் நம்பமுடியாத...

Bridges of Madison County (1995) – English

December 16, 2009
/   English films

நம்மில், இதுவரை காதலிக்காதவர்கள் எத்தனை பேர்? காதல் கைகூடியிருந்தாலும் சரி, அல்லது உடைந்து சிதறியிருந்தாலும் சரி, வாழ்வில் ஒருமுறையாவது, ஒருவரையாவது நாம் காதலித்திருக்கிறோம் அல்லவா? அந்த ஒருவர், இந்தக் கணத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற எண்ணமும் நமக்குப் பலமுறை வந்திருக்கும். காதலில் மூழ்கியிருந்த நாட்களில், நாம் எவ்வளவு...

Audition (1999) – Japanese

December 14, 2009
/   world cinema

நமது சாருவின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு, சென்னை சென்று விட்டதால், போன பதிவுக்குப் பின்னூட்டங்களுக்குக் கூட பதில் அளிக்க இயலவில்லை. இன்றுதான் பதில் அளிக்க முடிந்தது. அந்த விழா, ஒரு டக்கரான விழாவாக அமைந்தது. அரங்கு நிறைந்த- அரங்கை விஞ்சிய- கூட்டம். பேசியவர்கள், மிக நேர்மையாக அவர்கள்...

Naked Gun 33 1/3: The final Insult (1994) – English

December 11, 2009
/   Comedy

நம்ம ஊரில், பயங்கரக் கஷ்டப்பட்டு ஒரு நல்ல படம் எடுக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதுவும் நன்றாக ஓடிவிட்டது. திடீரென்று, அடுத்த வருடமே, டமாலென்று ஒரு மொக்கப் படத்தை எடுத்து, இந்த நல்ல படத்தை அதில் பயங்கரமாகக் கிண்டலடித்து, அந்தப் படமும் சூப்பராக ஓடினால், எப்படி இருக்கும்? ஹாலிவுட்டில்...

Che (2008) – Spanish

December 10, 2009
/   Personalities

செ குவேரா – இந்தப் பெயரை, உள்ளது உள்ளபடி புரிந்துகொண்டது எத்தனை பேர்? உண்மையில், அவரது பெயரை டி-ஷர்ட்டுகளில் அணிந்துகொண்டு சுற்றுபவர்கள் தான் அதிகம். அவர் யார்? அவர் கூப விடுதலைக்காக என்ன செய்தார்? இக்கேள்விகளுக்கு விடை தேடினோமேயானால், இவ்வுலகில், தனது கொள்கைகளுக்காகவே வாழ்ந்து உயிர்துறந்த ஒரு...

Tombstone (1993) – English

December 8, 2009
/   English films

நமது தமிழ்த்திரைப்படங்களில், ஒரு கரு அடிக்கடி உபயோகப்படுத்தப்பட்டிருக்கும். கதநாயகன் ஒரு தாதா. அவன், ‘அடப்போங்கடா. . போய் புள்ளகுட்டிங்கள படிக்க வெய்யுங்கடா’ என்று ரிடையர் ஆகி, எங்காவது அமைதியான ஒரு ஊரில் போய், செட்டிலாக விரும்புவான். ஆனால், அந்த ஊரில், ஒரு மிகப்பெரிய பிரச்னை தலைவிரிகோலமாக ஆடிக்கொண்டிருக்கும்....

Dances with Wolves (1990) – English

December 7, 2009
/   English films

இம்முறை, சற்றே சீரியஸான ஒரு படத்தைப் பற்றிப் பார்க்கப் போகிறோம். இந்தப்படம், நம்ம ஊர் ‘மகாநதி’ போல் ஒரு பாதிப்பை அளிக்கக்கூடியது. எனவே, இந்த விமரிசனமும், கொஞ்சம் சீரியஸாகவே போகும் வாய்ப்புகள் நிறைய உண்டு. சீரியஸ் படம் பிடிக்காத நண்பர்கள், பொறுத்தருள வேண்டுகிறேன். அடுத்தது ஒரு டமால்...

The Untouchables (1987) – English

December 6, 2009
/   English films

அல் கபோன் – இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவைக் கலக்கிய ஒரு பெயர். சிகாகோவில் இருந்துகொண்டு, ஒரு மாபெரும் குற்ற சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த ஒரு தாதா. இவனது ஆளுமையில் இல்லாத நபர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, கிட்டத்தட்ட அரசாங்கத்தையே தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு ஆள்....

Paa (2009) – Hindi

December 5, 2009
/   Hindi Reviews

எத்தனையோ தடவை கண்டபடி திட்டு வாங்கியிருந்தாலும், நமது அப்பா மேல் நமக்கு உள்ள பாசம் போகவே போகாது. என்ன ஆனாலும் அது அப்படியே தான் இருக்கும். ஒருவேளை சில நிகழ்வுகள் நடந்து, அவர் நம்மை விட்டுப் பிரிந்து இயற்கை எய்தியிருந்தாலும் கூட, அப்பா என்றால் நமக்கு ஒரு...

From Hell (2001) – English

December 4, 2009
/   English films

சரித்திரத்தின் ரத்தக்கறை படிந்த பக்கங்களில் பல மர்மங்கள் அடங்கியுள்ளன. இந்த மர்மங்களின் காரணகர்த்தாக்கள், பல நூற்றாண்டுகள் சென்ற பிறகும், இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஒவ்வொருமுறை இந்தச் சம்பவங்களைப் பற்றிப் படிக்கும்போதெல்லாம், அவர்கள் உயிர்த்தெழுகின்றனர். அந்த மர்மங்களுக்குப் பின்னால் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பற்றி, அவைகளை நிகழ்த்திய நபர்களுக்கே தெரியும். அப்படிப்பட்ட...

Crime Spree (2003) – French/ English

December 3, 2009
/   English films

திருட்டு. பலசமயம் மிகவும் சீரியஸாக முடியும் ஒரு விஷயம், மிகச்சில சமயங்களில் காமெடியாக முடிந்து விடுவதும் உண்டு. அதுவும், திருடர்கள் ‘ஸ்டேட்டு உட்டு ஸ்டேட்டு’ போய்த் திருடும்போது, சில குழப்பங்கள் நடந்து, அவர்கள் மாட்டிக் கொள்வது, எப்பொழுதாவது நடக்கும் ஒரு விஷயம். நாமே செய்தித்தாள்களில் படித்திருப்போம். சமீபத்தில்...

Pan’s Labyrinth (2006) – Spanish

December 2, 2009
/   world cinema

சிறுவயதில் நமக்குப் பிடித்தமானவைகளாக இருப்பவை ‘தேவதைக்கதைகள்’ எனப்படும் faity tales. நமது பாட்டியோ அம்மவோ கதைகளைச் சொல்லச்சொல்ல, நாம் அவற்றில் லயித்துப்போய், அதன்பின் பலநாட்கள் அந்த உலகிலேயே சஞ்சரித்துக்கொண்டு இருந்திருப்போம். இந்தக்கதைகளின் பாதிப்பு இன்னமும் நமது நெஞ்சை விட்டு அகன்றிருக்காது. அவ்வப்போது சிறு வயது நினைவுகளில் மூழ்கும்போது,...

Drag Me to Hell (2005) – English

December 1, 2009
/   English films

சாதாரணமாகவே நமக்குத் தனியாக இருக்கும்போது ஒரு கதவு திறந்து மூடினாலே போதும். ஜன்னிதான். அதுவும், இரவு நேரம் என்றால், பக்கத்தில் ஒரு துப்பாக்கியே இருந்தாலும், பயந்து சாகும் ஒரு கேரக்டர் நான். அப்படி இருக்கும்போது, பேய்ப்படம் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்தபோதே நான் உஷாராகி இருக்க வேண்டும்....

வணக்கண்ணோவ் . . . . .

November 30, 2009
/   Announcements

எல்லாருக்கும் வணக்கம். நான். . கருந்தேள் கண்ணாயிரம். அது ஒண்ணுமில்லீங்கண்ணா . .நாம ரொம்ப நாளா ஒரு இங்கிலீசு ப்ளாக்கு போட்டுகினு இருந்தோம்.ஏதோ நாலு படம் பார்த்தோமா அத பத்தி ஒரு நாலு வரி எளுதினோமான்னு. அதுல பாருங்க, எளுதிக் கிளிக்க ஆரம்பிச்சதுல இருந்தே அந்த மொளிலயே...