பஞ்சு அருணாசலம் – சூப்பர்ஸ்டார்களின் சூப்பர்ஸ்டார்
செப்டம்பர் மாத காட்சிப்பிழையில் எழுதிய கட்டுரை இது. தமிழ்த்திரையில் பல்வேறு முக்கியமான ஆளுமைகளை நாம் கடந்துவந்திருக்கிறோம். அவர்களை இரண்டுவிதங்களில் வகைப்படுத்த முடியும். தனது ஆளுமையை அழுத்தமாகப் பதிவு செய்து, மக்களின் மனதில் இடம்பெற்றவர்கள். எம்.கே.டி, எம்.ஜி.ஆர், சிவாஜி, கண்ணதாசன், பானுமதி, ஸ்ரீதர், பீம்சிங், நாகேஷ், சந்திரபாபு, பாலசந்தர்...