Bramayugam (2024) – Malayalam

February 20, 2024

ப்ரமயுகம் வெளியாகி மலையாள பாக்ஸ் ஆஃபீசை ஒரு கலக்கு கலக்கிக்கொண்டு அனைத்துப் பக்கங்களிலும் அட்டகாசமான விமர்சனங்கள் பெற்றுக்கொண்டு இருக்கிறது. படத்தை அனைவரும் கட்டாயம் திரையரங்குகளில்தான் பார்க்கவேண்டும் – இது OTT படம் இல்லை என்று படம் வந்த மறுநாள் பார்த்துவிட்டு எழுதியிருந்தேன். ப்ரமயுகம் எப்படி இத்தனை பெரிய...

OTT Platforms & Films – An analysis

September 20, 2021
/   Cinema articles

அந்திமழை மே 2021 இதழுக்காக எழுதியது. நான் சாஃப்ட்வேரில் வேலை செய்துகொண்டிருந்தபோது, பெங்களூரில், 2008ன் இறுதி மாதங்களின்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் Bigflix என்ற திட்டத்தின்கீழ், வாரம் மூன்று டிவிடிக்கள் வாடகைக்கு எடுத்துப் பார்க்கலாம். இதில் ஒரு மெம்பராக சேர்ந்து, கிட்டத்தட்ட 2011 ஜூன், ஜூலை வரை ஏராளமான...

Tamil Multistarrer films – an Analysis

September 19, 2021
/   Cinema articles

February 2021 அந்திமழை இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை. ’மாஸ்டர்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. கூடவே, இரண்டு பெரிய ஸ்டார்கள் ஒரு படத்தில் நடித்திருப்பது பற்றியும் பரவலான விவாதத்தையும் இப்படம் உருவாக்கியிருக்கிறது. விஜய் சேதுபதி ஏற்கெனவே பேட்ட, இறைவி போன்ற படங்களில் ரஜினி,...

Tenet (2020) – English – 2

May 20, 2021
/   Cinema articles

TENET படத்தின் முதல் பகுதியை இங்கே படிக்கலாம். TENET படத்தின் முக்கியமான அம்சம், இறந்தகாலத்துக்குச் செல்வது. இது எப்படி சாத்தியப்படுகிறது? நாம் சென்ற கட்டுரையில் பார்த்ததுபோல, இந்தப் படத்தில் காலப்பயணம் (Time Travel) வருவதில்லை. மாறாக, காலத்தைத் தலைகீழாக மாற்றுதலே (Time Inversion) வருகிறது. இதனால்தான் எதிர்காலத்துக்கு...

Nayattu (2021) – Malayalam

May 14, 2021
/   Cinema articles

நாயாட்டு படத்தில் வைக்கப்பட்ட கருத்துகள் பற்றி விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. படத்தில் தலித்களை வில்லன்களாக சித்தரித்து, அவர்கள் வேண்டுமென்றே எதிர்தரப்பான போலீஸைப் பழிவாங்க நினைத்து, அதை அரசியல் ஆக்கி, இறுதியில் தேர்தலில் மக்கள் மனதை மாற்றக்கூடிய சக்திகளாக ஆக்கப்பட்டு இருப்பதைப் பலரும் விமர்சிப்பதைக் காண முடிகிறது. அப்படி...

எஸ்.பி. பாலசுப்ரமணியம்: பிறமொழிப் பாடல்கள்

May 11, 2021
/   Cinema articles

சென்ற வருடம் இந்தியா டுடேயின் எஸ்.பி.பி சிறப்பிதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை. எஸ்.பி.பி பாடிய, தமிழைத் தவிர்த்த பிறமொழிப் பாடல்கள் பற்றியது. எஸ். பி. பாலசுப்ரமணியம் பாடிய முதல் பாடல் தெலுங்கு என்பது அவரது ரசிகர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதேபோல் அவர் பாடிய இரண்டாம் பாடல், கன்னடம். இதையும் எஸ்.பி....

Tenet (2020) – English – 1

December 8, 2020
/   Cinema articles

Time Travel என்ற காலப்பயணத்துக்கான விதிகள் என்னென்ன? ஒவ்வொரு படத்திலும், அல்லது ஒவ்வொரு படைப்பிலும் அதை எழுதுபவர்களே அதற்கான விதிகளையும் உருவாக்குவது வழக்கம். காரணம், இதுவரை காலப்பயணம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஒவ்வொரு திரைப்படத்திலும், கதை சார்ந்து, கதையின் சுவாரஸ்யத்துக்காக ஒவ்வொரு விதி இதற்காக உருவாக்கப்படும். அப்படி க்ரிஸ்டோஃபர்...

Soorarai Pottru (2020) – Tamil

November 15, 2020
/   Tamil cinema

ஒரு ஏழை இளைஞன் ஒரு மிகப்பெரிய கனவை சுமந்துகொண்டு, ஒரு பைசா கூட இல்லாத இடத்தில் இருந்து மேலே வந்து அந்தக் கனவை நிறைவேற்றுகிறான். இந்த வகையான inspiring படங்கள் உலகெங்குமே நிறைய வந்திருக்கின்றன. தமிழில் இவை மிகக் குறைவு. ஒரு காலகட்டம் வரை தமிழில் அண்ணாமலை,...

Softwareம் கருந்தேளும்

September 6, 2020
/   Social issues

அந்திமழை செப்டம்பர் 2020 இதழ், ரெசிக்னேஷன் ஸ்பெஷல். அதில் என் வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தது பற்றி நான் எழுதிய கட்டுரை. பெங்களூரில் ஒரு பெரிய மென்பொருள் நிறுவனத்தில் Lead SQAஆக இருந்த நான், எனது வேலையை விட்டது செப்டம்பர் 1, 2015. எனது பிறந்தநாளில். அதற்குக்...

The art of Screenplay writing – சில கேள்விகளும் பதில்களும்

July 14, 2020
/   screenplay

இன்று, திரைத்துறையைச் சேர்ந்த நண்பர் Krishna Prasath, அவரது ஃபேஸ்புக்கில் திரைக்கதை எழுதுபவர்களிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். அதற்கு அவரது ஃபேஸ்புக் போஸ்ட்டில் மூன்று பாகங்களாக விரிவாகப் பதில் அளித்திருந்தேன். அவற்றையே இன்னும் விரிவாக ஒன்றுசேர்த்து எழுதினால், கட்டாயம் அனைவருக்கும் உதவலாம் என்று தோன்றியதால் இந்தப் பதிவில்...

Sports films and biopics of Hollywood

July 4, 2020
/   Cinema articles

அந்திமழை ஜூன் 2020 இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரை. இந்தியாவுக்கு வெளியே, விளையாட்டுகள் மற்றும் அவற்றை மையமாக வைத்த நிஜவாழ்க்கைத் திரைப்படங்கள் மிகவும் பிரபலம். நிஜத்தில் நடந்த சம்பவங்களைப் பற்றியும், அவைகளின் முக்கியத்துவங்களைப் பற்றியும், அவை நிகழ்த்தும் மனமாற்றங்களைப் பற்றியுமான திரைவகை இது. இவற்றிலேயே இன்னொரு பிரிவாக, கற்பனையாக...

‘வயதான’ ஹீரோக்கள்

June 24, 2020
/   Cinema articles

அந்திமழையில் மார்ச் 2020 இதழுக்காக எழுதிய கட்டுரை இது. 50களுக்குப் பின்னரும் விடாப்பிடியாக ஹீரோக்களாக நடித்தவர்கள் பற்றியும், பின்னர் என்ன ஆனது என்பதைப் பற்றியும். ************************ ஜான் ட்ரவோல்டா, ஹாலிவுட்டில் மிக இளம் வயதிலேயே சூப்பர்ஸ்டார் ஆனவர்.  தனது 23 மற்றும் 24ம் வயதுகளில் அவர் நடித்த...

ஹாலிவுட் பேய்கள்

June 16, 2020
/   Cinema articles

  அந்திமழை February 2019 இதழில் ஹாலிவுட்டின் பேய்ப்படங்கள் பற்றி எழுதியது இங்கே. ****************** தற்காலத்தில் பேய்ப்படங்கள் எடுப்பது என்பது கொஞ்சம் சவாலான விஷயம். காரணம் மௌனப்படக் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை ஆயிரக்கணக்கான பேய்ப்படங்கள் உலகெங்கும் வெளியாகிவிட்டன. அவற்றில் நாம் பார்க்காத பேயே இல்லை. பேய்பிடித்த காரில்...

இயக்குநர் மகேந்திரன் – தமிழ்த் திரைப்படங்களின் அதிசயம்

June 13, 2020
/   Cinema articles

சென்ற ஆண்டு, இயக்குநர் மகேந்திரன் மறைவுக்குப் பிறகு மின்னம்பலம் இணைய இதழில் எழுதப்பட்ட கட்டுரை இது. நம் தளம் பிரச்னைக்குள்ளாகி, அதன்பின் மீண்டதால் முதல் கட்டுரையாக இது இருந்தால் மகிழ்ச்சி என்பதால் இங்கே கொடுக்கிறேன். *********************தங்கப்பதக்கம் திரைப்படத்துக்குக் கதை வசனம் எழுதுகிறார் இயக்குநர் மகேந்திரன். படம் பிரம்மாண்ட...

Yellowstone (Series) – Review

May 15, 2020
/   TV

காட்ஃபாதர் படத்தை அப்படியே கொண்டுவந்து தற்காலத்தில், அமெரிக்காவின் மாண்டானாவில் நடக்கும் ஒரு கதையாக மாற்றினால் எப்படி இருக்கும்? அதில் வரும் காட்ஃபாதர் டான் கார்லியோனி, அவரது மூத்த மகன் சான்னி கார்லியோனி, அவரது இரண்டாவது மகன் ஃப்ரெடோ கார்லியோனி, மூன்றாவது மகன் மைக்கேல் கார்லியோனி மற்றும் காட்ஃபாதரின்...

Psycho (2019) – Tamil

February 4, 2020
/   Cinema articles

தான் ஒரு ஆட்டெர் (உண்மையில் அவர் ஒரு flawed auteur தான்) என்று ஒருவேளை மிஷ்கின் நினைத்தால் அது அவருக்கு ஆபத்து. அவரை அது இழுத்துக் கீழே தள்ளிவிடும். மாறாக, இயல்பாகவே மிஷ்கின் இருந்துகொண்டிருந்தால் தமிழ் சினிமாவுக்கு அதைவிட நல்லது வேறு எதுவும் இல்லை. தமிழின் குறிப்பிடத்தகுந்த...

Ishq (2019) – Malayalam

May 29, 2019
/   Malayalam

Trauma எனப்படும் பிரச்னைகளை நமது வாழ்க்கையில் சில தருணங்களில் நாம் சந்திக்கக்கூடும். மனதில் ஆழமான வடுவை உண்டாக்கி, வாழ்க்கை முழுதுமே அந்த சம்பவங்களை நினைத்தாலேயே உடலும் மனமும் நடுங்கக்கூடிய பிரச்னைகள். உதாரணமாக, நடுராத்திரி வண்டியில் நாம் செல்கையில், ஒரு கும்பல் நம்மை வழிமறித்துத் தாக்கினால்? அப்படித் தாக்கும்போது,...

Brightburn (2019) – English

May 28, 2019
/   English films

  வேறு ஒரு கிரகத்தில் இருந்து வந்து பூமியில் விழுந்த ஒரு குழந்தை என்றால் அது எப்படி இருக்கும்? இதற்கு சூப்பர்மேன் சாட்சி. பெற்றோருக்கு அந்தக் குழந்தையின் சக்திகள் மெதுவாகத் தெரிய ஆரம்பிக்கும். அதை வைத்துக்கொண்டு அந்தக் குழந்தை தன் வாழ்க்கையில் மெல்ல மெல்ல தன்னையே புரிந்துகொள்ள...

John Wick 3 – Parabellum (2019) – English

May 27, 2019
/   English films

ஜான் விக் முதல் இரண்டு பாகங்கள் பற்றி இங்கே படிக்கலாம். ஜான் விக் முதல் பாகம் வந்த காலகட்டத்தில், அப்படி ஒரு தரமான, வன்முறை நிறைந்த ஆக்‌ஷன் படம் வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. கூடவே, படத்தை இயக்கியது ஹாலிவுட்டின் மிகச்சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர்கள். எனவே படம் பிரமாதமான...

Avengers: Infinity War (2018) – English : Part 2

May 2, 2018
/   English films

For all the previous posts about the Avengers & Marvel, please check here –> Everything about Avengers from Karundhel.com இக்கட்டுரையின் முதல்பாகம்  – Avengers: Infinity War – part 1 சென்ற கட்டுரையில் இன்ஃபினிடி ஸ்டோன்கள் பற்றிப் பார்த்தோம். இனி, Infinity...

Avengers: Infinity War (2018) – English : Part 1

May 1, 2018
/   English films

அவெஞ்சர்களைப் பற்றிய அறிமுகத்துக்கு, நம் தளத்தின் பழைய கட்டுரைகளைப் படித்துப் பார்க்கலாம் —> Everything about Avengers from Karundhel.com கடந்த பத்து ஆண்டுகளாக நாம் நன்கு அறிந்த அவெஞ்சர்கள் அத்தனை பேரும் இணைந்து செயல்படும் ஒரு பிரம்மாண்டமான போர்க்களம். அந்தக் களத்தின் மையத்தில், அனைவரையும் இணைக்கும் புள்ளியாக,...

Mukkabaaz (2018) – Hindi

January 26, 2018
/   Hindi Reviews

இந்தியாவின் வட பகுதிகளிலும் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும், சாதி என்பது இன்றுமே பிரதான பங்கு வகிக்கும் ஒரு விஷயம். பெயருக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று பார்ப்பதே அங்கெல்லாம் வழக்கம். நான் பெங்களூரில் பணிபுரிந்துகொண்டிருந்தபோதுமே – அதிலும் ITயில்- என்னிடம் பேசிய வட-கிழக்கு-மேற்கு  இந்தியர்களில் மிகப்பெரும்பாலானவர்கள்...

Amitabh Bachchan – The Phenomenon

January 25, 2018
/   Cinema articles

சில வாரங்கள் முன்னர் தமிழ் ஹிந்துவில் வெளியான கட்டுரை இது. அமிதாப் பச்சன் என்ற சூப்பர்ஸ்டார், ஒரு நல்ல நடிகராகப் பரிமாணம் அடைந்தது அவர் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திக்கொண்டபின்புதான். 1992வில், ‘ஹுதா கவா’ (Khuda Gawah) படத்திற்குப் பிறகு, ‘இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை’ என்ற முடிவை அவர் மேற்கொண்டபோது அவருக்கு வயது...

The Post (2017) – English

January 24, 2018
/   English films

அமெரிக்கப் படங்களில், உண்மைச் சம்பவங்களைச் சார்ந்த அரசியல் படங்கள் ஏராளம். அவற்றைப் பற்றி ஒரு சிறிய கட்டுரையும் எழுதியிருக்கிறேன். அங்கே என்ன நல்ல விஷயம் என்றால், அரசையும் அரசியல் அமைப்பையும் எப்படி வேண்டுமானாலும் திரைப்படங்களில் விமர்சிக்கலாம். நம்மூர் போல் அல்ல. அப்படி ஒரு படம் – மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட...

Carbon (2018) – Malayalam

January 23, 2018
/   Malayalam

நம் வாழ்க்கையில், நிலையான வேலை இல்லாமல், தெளிவான மாதச் சம்பளம் இல்லாமல், அங்கே இங்கே அலைந்து திரிந்து, ஏதோ ஒரு வேலையைச் செய்து, இந்திந்த வேலையில் இந்திந்தப் பலன்கள் உள்ளன என்றெல்லாம் தானாகவே மனக்கணக்கு போட்டுக்கொண்டு திரியும் எத்தனை பேரை நாம் சந்தித்திருக்கிறோம் என்று யோசித்துப் பாருங்கள்....

The political films of Hollywood

/   Cinema articles

சில மாதங்கள் முன்னர் ‘அந்திமழை’ பத்திரிக்கைக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. ஹாலிவுட்டின் James Bond, உலகெங்கும் பிரபலம். எப்போதுமே ஜேம்ஸ்பாண்டின் படங்களில் ரஷ்யர்கள், கொரியர்கள், ஜெர்மானியர்கள் என்று பிற நாட்டவர்களே பெரும்பாலும் வில்லன்கள். அவர்களை ஒரு இங்லீஷ்காரரான பாண்ட் எப்படி முறியடிக்கிறார் என்பது சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கும். ப்ரிட்டிஷ் ஏஜெண்ட்டான...

Malayalam Films – The New Wave

January 22, 2018
/   Cinema articles

ஒரு சில மாதங்கள் முன்னர் ‘அயல் சினிமா’ வின் முதல் இதழுக்காக நான் எழுதிய கட்டுரை இது. இரண்டாவது இதழில் இதன் இரண்டாம் பாகம் வெளிவந்தது. அதை ஒரே கட்டுரையாக இங்கே கொடுக்கிறேன். சமகாலத் தமிழ், மலையாளம் ஆகிய திரைப்படங்களுக்கு ஒரு சிறிய ஒற்றுமை உண்டு. இந்த...

Vikram Vedha (2017) – Tamil

July 24, 2017
/   Tamil cinema

விக்ரம் வேதா, நான் சற்றே எதிர்பார்த்துக்கொண்டிருந்த படம். ஏனெனில், ஓரம்போ எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. ‘வ குவார்ட்டர் கட்டிங்’, திரைப்படமா, ஸ்பூஃப் முயற்சியா என்ற குழப்பத்திலேயே எடுக்கப்பட்டிருந்ததால் அதை விட்டுவிடுவோம். மாதவன், விஜய் சேதுபதி என்ற ஹெவிவெய்ட்கள் இருந்ததால் படத்தை வெள்ளியன்றே பார்த்துவிட்டேன். பார்த்துவிட்டு,...

Wonder Woman 3D: English (2017)

June 3, 2017

ஹாலிவுட்டில் ஆயிரக்கணக்கில் இயக்குநர்கள் இருந்தாலும், பெண் இயக்குநர்கள் எத்தனை பேர் என்று யோசிக்க முடிகிறதா? தமிழின் அதே பிரச்னைதான் அங்கும். பெண் இயக்குநர்கள் மிகமிக சொற்பம். ஹாலிவுட்டின் ஒவ்வொரு பெண் இயக்குநருக்கும் மொத்தம் 24 ஆண் இயக்குநர்கள் இருக்கிறார்கள் என்று வேனிடி ஃபேர் எடுத்த ஒரு சர்வே...

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்

May 26, 2017
/   Cinema articles

நான் பதிவு (அல்லது பாதிவு) எழுத வந்ததில் இருந்தே இந்தக் குறியீடு என்ற வார்த்தை இணைய உலகில் நாயடி பேயடி வாங்கிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். எப்போதுமே பிற இடங்களில் என்னென்ன பின்பற்றப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் ரிவர்ஸில் திருகி, நசுக்கி, பிதுக்கியே பின்பற்றுவது தமிழ் மக்களாகிய நமது வழக்கம். உதாரணமாக, புரட்சி...

Hollywood & A few Punch Dialogues

May 16, 2017
/   Cinema articles

அந்திமழையின் மே 2017 இதழில், ஹாலிவுட் படங்களின் பஞ்ச் டயலாக்குகள் பற்றி எழுதப்பட்ட கட்டுரை இது. தமிழ்ப்படங்களில் இப்போதெல்லாம் பஞ்ச் டயலாக் என்ற ஒரு வஸ்து தவறாமல் இடம்பெறுகிறது. ரஜினியில் இருந்து நேற்று திரைப்படங்களுக்கு வந்த இளம் ஹீரோ முதல் இப்படிப்பட்ட பஞ்ச் டயலாக்குகள் தவறாமல் வைக்கப்படுகின்றன....

Mysskin & His Films – a Critique

May 15, 2017
/   Cinema articles

இலங்கையைச் சேர்ந்த தினகரன் பத்திரிக்கையின் ‘பிரதிபிம்பம்’ பக்கத்தில் மிஷ்கினைப் பற்றி விரிவாக எழுதிய இரண்டு பாகக் கட்டுரையின் முழு வடிவம் இங்கே. நான் ஏற்கெனவே எழுதிய கட்டுரைகளில் புதிய விஷயங்கள் பலவற்றைச் சேர்த்து மொத்தமாகக் கொடுத்திருக்கிறேன். மிஷ்கினைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னர் ‘Auteur‘ என்ற பதத்தைப்...

Baahubali 2: The Conclusion (2017) – Tamil & Telugu

April 29, 2017
/   Tamil cinema

‘ஒரு மனிதன், பொதுவாக மனிதர்களால் முடியாததையெல்லாம் செய்யும் படங்கள் அவ்வப்போது வருவதுண்டு . அவற்றை நாம் superhero படங்கள் என்று அழைப்போம். ஹாலிவுட்டில் வெளிப்படையான சூப்பர்ஹீரோக்கள் உண்டு. நம்மூரில் சூப்பர்ஹீரோ உடைகள் எதுவும் அணியாமலேயே, ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்கள் செய்வதைவிடவும் நம் ஹீரோக்கள் பத்து மடங்கு அதிகமான சாகசங்கள்...

காற்று வெளியிடை (2017)

April 13, 2017
/   Tamil cinema

மணி ரத்னத்தின் படங்களைப் பற்றி விரிவாக அனலைஸ் செய்து நான் எழுதிய கட்டுரையை முதலில் படிக்க விரும்புபவர்கள் படித்துக்கொள்ளலாம் – Mani Ratnam – The Waning Trajectory? இந்தக் கட்டுரையில் நான் எழுதியிருந்த இறுதிப் பத்தி இங்கே. ‘தனது படத்துக்காக ‘டைம்’ பத்திரிக்கையின் உலகில் சிறந்த...

Thor: Ragnarok (2017) – Sneakpeek

April 10, 2017
/   English films

இதற்கு முன்னர் நம் தளத்தில் அவெஞ்சர்கள் பற்றி எழுதிய அத்தனை விபரமான கட்டுரைகளையும் இங்கே படிக்கலாம். The Avengers – Detailed posts at karundhel.com Thor: Ragnarok படத்தின் டீஸர் ட்ரெய்லர் சற்றுமுன்னர் மார்வெல் ஸ்டூடியோஸால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் பற்றிச் சில விஷயங்கள் சொல்லவேண்டும் என்று...

மாநகரம் (2017)

April 2, 2017
/   Tamil cinema

முதலில் தாமதமான விமர்சனத்துக்கு மன்னிப்புக் கேட்டுவிடுகிறேன். இரண்டு நாட்கள் முன்னர்தான் படத்தைப் பார்க்க நேர்ந்தது. கடும் திரைக்கதை வேலைகள்தான் காரணம். திரைக்கதை என்பது எழுத்தாளனும் ஆடியன்ஸும் ஆடும் ஆட்டம். இதில் ஒவ்வொரு நகர்த்தலுக்கும் இருவருமே பரஸ்பரம் ஒருவரையொருவர் மதித்து, புரிந்துகொண்டு செயல்பட்டால்தான் ஆட்டம் பிரமாதப்படுத்தும். இல்லாவிட்டால், ஆடியன்ஸ் முட்டாள்...

Life (2017) – English

March 26, 2017
/   English films

ஒரு ஏலியன் படம் எப்படி இருக்கவேண்டும்? நம் மனதில் என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அதிலிருந்து இம்மி கூடப் பிசகாமல் எடுக்கப்பட்டிருக்கும் படம்தான் Life. ரிட்லி ஸ்காட் எடுத்த Alien (1979) படத்துக்கும் இந்தப் படத்துக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. ‘ஏலியன்’ படத்தை இப்போது எடுத்தால் எப்படி இருக்குமோ, அதுதான்...

ஆஸ்கர் விருதுகள் – 2017 – சர்ச்சையும் விருதுகளும் – தினகரன் (இலங்கை) கட்டுரை

March 14, 2017
/   English films

இந்தக் கட்டுரை, விருதுகள் வழங்கப்பட்டபின்னர் இலங்கையைச் சேர்ந்த தினகரன் பத்திரிக்கையில் எழுதியது. சில நாட்களுக்கு முன்னர் நடந்துமுடிந்த ஆஸ்கர் விருதுகளின் க்ளைமேக்ஸில், ‘லா லா லேண்ட்’ பட்டமே சிறந்த படமாக அறிவிக்கப்பட்டு, பின்னர் உடனடியாகத் தவறு நடந்துவிட்டதாகச் சொல்லப்பட்டு, ’மூன்லைட்’ படத்துக்கு அந்த விருது கொடுக்கப்பட்டதைக் கவனித்திருப்பீர்கள்....

ஆஸ்கர் விருதுகள் – 2017 – பரிந்துரைகள் பற்றிய குமுதம் கட்டுரை

March 13, 2017
/   English films

குமுதத்தில், சில வாரங்களுக்கு முன்னர் ஆஸ்கர் விருதுகள் பரிந்துரைக்கப்பட்டபோது எழுதிய கட்டுரை இது. விருதுகள் அளிக்கப்படுவதற்கு முன்னால். விருதுகள் அளித்ததற்குப் பின் இலங்கையைச் சேர்ந்த தினகரன் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையை நாளை வெளியிடுகிறேன். ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருதுகளின் நாமிநேஷன்களில் ஏதேனும் பிரச்னைக்குரிய அம்சம் இல்லாமல் இருக்காது....

John Wick: Chapter Two (2017) – English

March 12, 2017
/   English films

ஜான் விக் படத்தின் முதல் பாகம் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. படத்தை இயக்கியவர்கள் ஹாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் சாட் ஸ்டாஹெல்ஸ்கியும் டேவிட் லெய்ட்ச்சும் (Chad Stahelski & David Leitch). திரைக்கதை எழுதியவர் டெரெக் கோல்ஸ்டாட் (Derek Kolstad). முதல் பாகம்தான் அவரது முதல்...

Kong: Skull Island-3D (2017) – English

March 11, 2017
/   English films

காங்: ஸ்கல் ஐலாண்ட் படம், வார்னர் ப்ரதர்ஸ்/லெஜண்டரி பிக்சர்ஸ் வழங்கும் ஒரு மான்ஸ்டர் படம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், வழக்கமான மான்ஸ்டர் படங்களைப் போல் அல்லாமல், இப்படம் உலகெங்கும் நல்ல விமர்சனங்களைக் குவித்துக்கொண்டிருக்கிறது என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கக்கூடும். உண்மையில் ஜுராஸிக் வேர்ல்ட் படத்தோடு இதனை...

Sex Comedies and Tamil Films

January 2, 2017
/   Cinema articles

அந்திமழையின் டிசம்பர் 2016 இதழில் வெளியான கட்டுரை இது ஹாலிவுட்டில் செக்ஸ் காமெடிகள் என்று ஒரு பதம் உண்டு. பெயரைக் கேட்டதும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு ஓடிவிடாதீர்கள். செக்ஸ் காமெடி என்பது உலகெங்கும் பிரபலமான ஒரு வகைதான். நாடகங்கள், திரைப்படங்கள், புதினங்கள் என்று இந்த வகையைச் சேர்ந்த படைப்புகள்...

Arrival (2016) – English

November 27, 2016
/   English films

அரைவல் ஒரு ஏலியன் படம். அதன் டைட்டிலிலேயே சொல்லியிருப்பதுபோல், they arrive one fine day. ஏன் வந்தார்கள்? வந்ததால் என்ன நேர்கிறது? ஆகிய கேள்விகளுக்கான பதிலை விவாதிக்கும் படம்தான் அரைவல். ஆனால் படத்தைப் பார்க்குமுன்னர், இது ஒரு சிறுகதையை வைத்து எழுதப்பட்டுள்ளது என்பது ஒருசிலருக்குத் தெரிந்திருக்கலாம்....

Achcham Yenbadhu Madamaiyada (2016) – Tamil

November 26, 2016
/   Tamil cinema

இரண்டு வாரங்கள் முன்னரே பார்த்துவிட்ட படம். இப்போதுதான் எழுத முடிந்தது. வேலை. Spoiler Alert. Please read at your discretion. காட்ஃபாதரின் ஒரு குறிப்பிட்ட தருணத்தால் இன்ஸ்பையர் செய்யப்பட்ட படம் என்ற டிஸ்க்ளெய்மருடன் அச்சம் என்பது மடமையடா துவங்குகிறது. என்ன தருணம் அது? மைக்கேல் கார்லியோனி,...

இங்கு(ம்) நல்ல படங்கள் விற்கப்படும்

November 16, 2016
/   Cinema articles

தமிழ் இந்துவின் 2016 தீபாவளி மலரில், ‘மசாலாவைத் தாண்டிய சில முயற்சிகள்’ என்ற பெயரில் எழுதப்பட்ட சிறப்புக் கட்டுரை இது. ஹாலிவுட் படங்கள் என்றாலே பலருக்கும் அர்நால்ட் ஷ்வார்ட்ஸெனிக்கர், சில்வஸ்டர் ஸ்டாலோன், வின் டீஸல், ஜேஸன் ஸ்டதாம், அவெஞ்சர்கள் வகையிலான சூப்பர்ஹீரோ படங்கள், அனிமேஷன் படங்கள், ட்ரான்ஸ்ஃபார்மர்...

Doctor Strange (2016) – English

November 7, 2016
/   English films

முன்குறிப்பு –  இதற்கு முன்னர் எழுதியிருக்கும் மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸ் பற்றிய கட்டுரைகளை இங்கே படிக்கலாம். இந்த வருடம் வந்திருக்கும் மார்வெலின் இரண்டாவது படம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச். முதல் படம், Captain America – Civil war. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படம் பார்த்தாலே உங்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தின்...

Kaashmora (2016) – Tamil

November 3, 2016
/   Tamil cinema

காஷ்மோரா ஒரு ஃபேண்டஸி. தமிழில் ஃபேண்டஸிக்கள் குறைவு. பலத்த விளம்பரங்களுக்கு இடையே வெளிவந்திருக்கும் காஷ்மோரா எப்படி இருக்கிறது? கார்த்தியின் காஷ்மோரா கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது. அவர் துவக்கத்திலேயே எப்படிப்பட்டவர் என்பதைத் தெளிவாகக் காண்பித்துள்ளதால் படம் முழுக்க அவரோடு நாம் பயணிக்க முடிகிறது. அவர் பேசும் வசனங்களில் இருக்கும்...

iru mugan (2016) – Tamil

October 20, 2016
/   Cinema articles

அக்டோபர் 2016 காட்சிப்பிழையில் எழுதிய கட்டுரை இங்கே. தமிழில் ‘மசாலா’ என்ற வகையினுள் இடம்பெறும் படங்கள் பற்றி ஏற்கெனவே காட்சிப்பிழையில் விரிவாக எழுதியிருக்கிறேன். இவற்றில் பெரும்பாலான படங்கள், தமிழில் மசாலாப்படங்களில் இன்னின்ன அம்சங்கள் இருந்தே ஆகவேண்டும் என்று பட்டியல் போடப்பட்டு (அல்லது ஏற்கெனவே பல படங்களில் உபயோகிக்கப்பட்ட...

திரைப்படங்களைப் பேசும் புத்தகங்கள்

October 19, 2016
/   Book Reviews

செப்டம்பர் 2016- திரைப்படங்கள் & புத்தகங்கள் சிறப்பிதழ்-படச்சுருளுக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. திரைத்துறையில் கால்பதிக்கவேண்டும் என்று யாரேனும் நினைத்தாலும் சரி, அல்லது திரைத்துறை பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும்/திரை ஆளுமைகளின் படைப்புகளின் வாயிலாக அவர்களைப் புரிந்துகொண்டு, அவர்கள் சொல்லிய அரசியலைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றாலும் சரி, உடனடியாக நமக்கு உதவுபவை புத்தகங்களே....

ஜாக்கி நம் தோழன்

October 12, 2016
/   Cinema articles

அந்திமழையில் ஜூலையில் வெளிவந்த கட்டுரை இது. அந்திமழை வலைத்தளத்திலும் இந்தக் கட்டுரையை இங்கே படிக்கலாம். இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் ஜாக்கி சானுக்கு இருக்கும் பிரம்மாண்ட ரசிகர் பட்டாளம், வேறு எந்த வெளிநாட்டு நடிகருக்கும் இருந்ததில்லை என்பதை அவசியம் அடித்துச் சொல்லலாம். ப்ரூஸ் லீ படங்களை ரசிப்பவர்கள் வேறு;...