The Adventures of Tintin: The Secret of the Unicorn (2011) – English

November 12, 2011
/   English films

டிண்டின் காமிக்ஸைப்பற்றியும், திரைப்படம் பற்றியும் ஒரு முன்னோட்டம் – எனது இந்தக் கட்டுரையில் படிக்கலாம். நீண்டகாலம் காத்திருந்தபின், படம் நேற்று வெளியாகிவிட்டது. ஆனால், ‘Immortals‘ படமும் நேற்று வெளியானதால், முதலில் அதை இன்று காலை பார்த்துவிட்டு, மதியம் டிண்டின் பார்த்தோம். ஆக, ஒரே நாளில் இரண்டு 3D...

Immortals (2011) – English

/   English films

(இன்று காலையில், இப்படத்தை 3Dயில் பார்த்தோம். கட்டுரையை எழுதியபின், இதோ TinTin 3D படத்துக்குக் கிளம்பிக்கொண்டிருக்கிறோம்). கிரேக்க இலக்கியத்தில், Titanomachy (டைடனோமேகி) என்பது பிரபலம். இருவிதமான கடவுளர்களின் படைகளுக்கு இடையே நடந்த பெரும் யுத்தம். இந்த யுத்தம், மனிதன் படைக்கப்படுவதற்கு வெகு காலம் முன்னரே நடந்தேறிவிட்டது. ஓத்ரிஸ்...

The Adventures of TinTin

November 10, 2011
/   Comics Reviews

Rascar Capac. பெரூ நாட்டின் பண்டையகால இன்கா மக்களில் புகழ்பெற்று விளங்கிய மனிதன். இவனது பழங்கால மம்மி, ஆண்டெஸ் மலையில் புதைபொருள் ஆராய்ச்சியில் ஈடுபட்ட சில ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் ஒரு ஆராய்ச்சியாளரான ப்ரொஃபஸர் டார்ரகான் வீட்டில் வைக்கப்படுகிறது. ப்ரொஃபஸர் டார்ரகானின் வீடு. இறுக்கமான சூழ்நிலை. அவரருகில்...

The Three Musketeers (3D) : 2011 – English

October 17, 2011
/   English films

அலெக்ஸாண்டர் டூமாவின் ‘Three Musketeers’ நாவலை நான் முதன்முதலில் படித்த அனுபவம், அலாதியானது. எனது பள்ளிப் பருவத்தில், ‘பைகோ க்ளாசிக்ஸ்’ (paico classics) என்ற தமிழ் மாதாந்திர காமிக்ஸ் வெளிவந்துகொண்டிருந்தது. மிக அட்டகாசமான ஆங்கில நாவல்களைக் காமிக்ஸாக வெளியிட்டுக்கொண்டிருந்த நிறுவனம் அது. பூந்தளிரின் சகோதர நிறுவனம். அதில்தான்...

Insidious (2010) – English

October 13, 2011
/   English films

அவன் நடந்துகொண்டிருக்கிறான். எதிரில், அவனைச் சுற்றி, அவன் பின்னால், அவன் பக்கத்தில் – எங்கு பார்த்தாலும் கும்மிருட்டு. அவனது கையில், எப்போது வேண்டுமானாலும் அணைந்துவிடலாம் என்ற நிலையில் ஒரு லாந்தர் விளக்கு. “டால்டன் . . டால்டன் ….” மெதுவே, இருட்டில் யாரையோ அழைக்கிறான். பதிலில்லை. விளக்கு...

The Midnight Meat Train (2008) – English

October 3, 2011
/   English films

Clive Barker என்று ஒரு மனிதர் இருக்கிறார். இவரைப் பற்றி ஸ்டீவன் கிங், “I have seen the future of horror, his name is Clive Barker” என்று பாராட்டும் அளவு அவரையே அசர அடித்த எழுத்தாளர். Books of Blood என்று 1984ல்...

Law Abiding Citizen (2009) – English

September 7, 2011
/   English films

It’s not about what you know. It’s about what you can prove in court – Nick Derby. காட்சி ஒன்று : “ரூபர்ட் ஆமெஸ் . . இறுதியாக எதையாவது சொல்ல விரும்புகிறீர்களா?” ஆமெஸ், பயத்தால் வெளிறிய தனது முகத்தைத் துடைக்க...

Source Code (2011) – English

August 27, 2011
/   English films

சிகாகோ நகரை நோக்கி விரைந்துகொண்டிருக்கும் ட்ரெய்ன். ஜன்னலில் தலைசாய்த்துக் கண்களை மூடிக்கொண்டிருக்கும் கால்டர் ஸ்டீவன்ஸ், திடும்மென்று கண்விழிக்கிறான். அவனுக்கு எதிரே, அடையாளம் தெரியாத ஒரு பெண். ”நீங்கள் சொன்ன யோசனையைப் பின்பற்றினேன். இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்” என்று இவனிடம் பேசத்தொடங்குகிறாள் அந்தப்பெண். அருகில் நடந்துசெல்லும் பெண்ணின் கையில்...

LOTR: The Series – 13 – Screenplay & Editing & Rohan

August 11, 2011
/   war of the ring

இதுநாள்வரை, ஃபெலோஷிப் ஆஃப் த ரிங் படத்தில் உபயோகப்படுத்தப்பட்ட அம்சங்களைப் பார்த்தோம். இப்போது, மறுபடி ஃபெலோஷிப் படத்தின் கதைக்குள் ஒரு deep dive அடிப்போம். படத்தின் திரைக்கதையை சற்றே அலசவே இந்த டீப் டைவ். அப்படியே, படத்தின் கதையிலுள்ள அதிமுக்கிய அம்சங்களைப் பார்த்துவிடலாம். திரைக்கதை படத்தின் ஒன்...

Hellboy

August 6, 2011
/   Comics Reviews

யானை பலம். எதற்கும் பயப்படாத தெனாவெட்டு. எப்போதும் கோபமாகவே இருக்கும் குணம். கையில், எதையும் பொடிப்பொடியாகும் பலம்வாய்ந்த துப்பாக்கி. ஹெல்பாய். முதன்முதலில் இப்படியொரு படம் வருவதைக் கேள்விப்பட்ட நான், அச்சமயத்தில் , இது கட்டாயம் மொக்கையாகத்தான் இருக்கும் என்று நினைத்து, படத்தைப் பார்க்கவில்லை. ஆனால், அதன்பின் சில...

Cowboys & Aliens (2011) – English

July 30, 2011
/   English films

’மரணத்தின் நிறம் பச்சை’ என்று ஒரு டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் உண்டு. அதன் ஆங்கிலப் பெயர், ‘The Green Death’. அதன் கதை? பத்தொன்பதாம் நூற்றாண்டு அரிஸோனாவில் கௌபாய்களுக்கு மத்தியில் திடீரென்று வேற்றுக்கிரக மனிதர்கள் பிரவேசிப்பதைப் பற்றியது. எனது பள்ளிநாட்களில் லயன் காமிக்ஸில் படித்திருக்கிறேன். கௌபாய்களைக் கொன்று,...

Sherlock (2010) – The TV Series

July 26, 2011
/   TV

’when you have eliminated the impossible, whatever remains, however improbable, must be the truth’. ஹோம்ஸின் மறக்க இயலா வசனம் இது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களிலும், இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப வருடங்களிலும், இங்கிலாந்தின் முடிசூடா மன்னனாக விளங்கிய ஷெர்லாக் ஹோம்ஸ், இருபத்தோராம்...

Harry Potter and the Deathly Hallows – part 2 : 3D – English (2011)

July 18, 2011
/   English films

ஹாரி பாட்டரின் கடைசி பாகத்தின் கடைசி பாகம். இந்தப் படம் மட்டுமல்ல; வேறு எந்த ஹாரி பாட்டர் படமாக இருந்தாலும், அதுவரை வந்திருக்கும் புத்தகங்களைப் படிக்காமல் பார்த்தால், ஒரு மண்ணும் புரியாது. எனக்கு அந்த அனுபவம், Harry Potter and the Half Blood Prince படத்தைத்...

LOTR: The Series – 12 – The music: Howard Shore

July 14, 2011
/   war of the ring

Lord of the Rings படத்தின் சிறந்த ப்ளஸ்களில் ஒன்று – அதன் இசை. இதுவரை வந்த ஹாலிவுட் படங்களில், மிகச்சிறந்த இசையமைப்பு கொண்டிருக்கும் படங்களில் ஒன்றாக அமைந்தது, இப்படங்களின் இசை. ஆனால், படம் வெளிவந்திருந்த சமயத்தில், இப்படங்களின் , இசையமைப்பாளர், ஜெரி கோல்ட்ஸ்மித் போலவோ, அலன்...

LOTR: The Series–11–MASSIVE

July 6, 2011
/   war of the ring

Multiple Agent Simulation System in Virtual Environment. இதுதான் MASSIVE என்ற பெயரின் விரிவாக்கம். MASSIVE என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன்னர், இந்த MASSIVE என்ற விஷயம் இல்லை எனில், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படமே இருந்திருக்க முடியாது என்பதனை நாம் புரிந்துகொள்ள...

LOTR: The Series – 9–Fellowship of the Ring

June 26, 2011
/   war of the ring

படப்பிடிப்பு துவங்கியது. இந்த முதல் பாகத்தின் கதையைச் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். மிடில் எர்த். ஸாரோன் என்ற கொடியவன், இந்த உலகைக் கைப்பற்ற விரும்பி, ஒன்பது மோதிரங்களை, ஒன்பது அரசர்களுக்குக் கொடுக்கிறான். இன்னும் சில மோதிரங்களும், எல்ஃப்களுக்கும் இன்னபிற வகையினருக்கும் கொடுக்கப்படுகின்றன. இந்த அத்தனை மோதிரங்களையும் ஒருங்கே கட்டுப்படுத்தக்கூடிய...

LOTR: The Series–8–Casting !

June 13, 2011
/   war of the ring

படத்தின் pre-production முற்றிலும் ரெடி. அடுத்துச் செய்யவேண்டியது, நடிகர்களைத் தேர்வு செய்தல். மற்ற படங்களைப் போல், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களுக்கு நடிகர்களைத் தேர்வு செய்வது, அவ்வளவு சுலபமில்லை என்பது ஜாக்ஸனுக்குத் தெரியும். ஏனெனில், இக்கதைகளை, ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கெனவே படித்திருந்தது ஒரு தவிர்க்கமுடியாத காரணம்....

LOTR: The Series – 7 – Costumes, Props & 2D

June 11, 2011
/   war of the ring

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களுக்கான ஸ்க்ரிப்ட் வொர்க் நடந்துகொண்டிருந்த அதே வேளையில், WETA வில் என்ன நடந்தது? WETA வின் ஒரு பிரிவான WETA வொர்க் ஷாப், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மற்றும் ப்ராப்பர்ட்டி வேலைகளைச் செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டது. இதன் தலைவராக, ஜாக்ஸனின் நண்பர் ரிச்சர்ட் டைலர்...

LOTR: The Series – 6 – Middle earth and the sets

June 7, 2011
/   war of the ring

லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படங்களின் படப்பிடிப்பு, அக்டோபர் 11 – 1999 ல் தொடங்கியது. இனிவரும் கட்டுரைகளில், ஒவ்வொரு பாகத்தையும் பற்றிய விரிவான தகவல்களை முடிந்தவரை பார்க்கலாம். அதற்கு முன், படப்பிடிப்புக்கு முந்தைய pre – production வேலைகளைப் பற்றிப் பார்த்துவிடலாம். லார்ட் ஆஃப் த...

LOTR: The Series – 5– Lights, Camera & Action . . .

June 2, 2011
/   war of the ring

”இந்த இரண்டு படங்களும், கண்டிப்பாக நடக்கப்போவதில்லை”. ந்யுலைன் சினிமாவின் தலைவரான ராபர்ட் ஷேய், ஜாக்ஸனிடம் இப்படிச்சொன்னவுடன், ஜாக்ஸன் தொய்ந்துபோனார். அதனால், அடுத்து அவர் கூறிய வார்த்தைகளை முதலில் ஜாக்ஸன் கவனிக்கவில்லை. “டோல்கீன் மூன்று நாவல்களையல்லவா எழுதினார்? எனவே, நீங்கள் மூன்று படங்கள் எடுப்பதைத்தான் நான் அனுமதிப்பேன்”. உயிரே...

LOTR : The Series– 4 – Miramax, ‘Turnaround’ & New Line

May 31, 2011
/   war of the ring

ஹார்வி வெய்ன்ஸ்டீன், ஒரு வருட காலம் கஷ்டப்பட்டு முயன்று, கடைசியில் ‘The Hobbit’ நாவலைப் படமாக்குதல் முடியாத காரியம் என்று தெரிந்துகொண்டு, பீட்டர் ஜாக்ஸனிடம் பேசியபோது, ஜாக்ஸன் செய்த காரியம், வெய்ன்ஸ்டீனை கடுப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. அது என்ன என்று அறிவதற்கு முன்னர், ஹாபிட்ஸின் உரிமைகளைப்...

LOTR : The Series– 3 – WETA, and how Jackson ‘chose’ the Rings

May 29, 2011
/   war of the ring

பீட்டர் ஜாக்ஸன், Heavenly Creatures என்று ஒரு படம் எடுத்திருந்ததை, சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். பொதுவாகவே, விஷுவல் எஃபக்ட்ஸில் கவனம் அதிகம் உள்ளவர் அவர். அவரது முதல் படமான Bad Taste படத்திலிருந்தே, காட்சியமைப்புகளுக்கும், மேக்-அப், தந்திரக் காட்சிகள் போன்ற ‘ஸ்பெஷல்’ விஷயங்களுக்கும் அதிகம் மெனக்கெட்டவர் ஜாக்ஸன்....

LOTR : The Series – 2 – A man named Peter Jackson

May 27, 2011
/   war of the ring

டி. ராஜேந்தர். சென்ற அத்தியாயத்தில், திரையரங்கில், தனது பதினேழாம் வயதில், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தைப் பார்த்த இளைஞனின் பெயர் ! (இப்படி இரண்டாம் அத்தியாயத்தை ஆரம்பித்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பார்த்தேன். ஒகே folks.. ரிலாக்ஸ். இனி சீரியஸாகவே இரண்டாம் அத்தியாயத்தை ஆரம்பிப்போம்...

LOTR : The Series – 1– It all began this way

May 25, 2011
/   war of the ring

திரைப்பட ரசிகனாக இருக்கும் ஒவ்வொரு மனிதனும், ரசித்துப் பார்த்திருக்கக்கூடிய படங்கள் பல. ஒவ்வொருவருக்கும் பலவிதமான விருப்பங்கள் இருக்கும். ஒருவருக்குப் பிடிக்கூடிய படம், இன்னொருவருக்குப் பிடிக்காத வாய்ப்புகள் அதிகம். இருந்தபோதிலும், உலகமக்கள் பெரும்பாலானோருக்குப் பிடித்த படங்கள் என்று ஒரு பட்டியல் இட்டால், அதில் லார்ட் ஆஃப் த ரிங்ஸ்...

Pirates of the Caribbean: On Stranger Tides (2011)–English

May 22, 2011
/   English films

ஆதோ கீர்த்தனாரம்பத்திலே . . . ஒரு இருபத்தைந்து வருடங்கள் முன்னால், டிம் பவர்ஸ் என்பவர், வேலை மெனக்கெட்டு, ஒரு நாவல் எழுதியதிலிருந்து, இந்த பைரேட்ஸ் படத்தின் கதை ஆரம்பிக்கிறது. இளமையின் நீரூற்று என்னும் ஒரு ஊற்றைத் தேடிச் செல்வதே இந்த நாவலின் கதை. அதன்பின்னர், பவர்ஸ்,...

Thor (2011) – English

May 20, 2011
/   English films

யோசித்துப் பாருங்கள். உறுதியான ஆகிருதி. கோபமான மனநிலை. எப்பொழுதும் தனது வீரத்தை நிரூபிக்கவேண்டும் என்றே அலையும் குணம். இதுமட்டுமல்லாமல், கையில், உலகிலேயே கொடிய, பலமான ஆயுதமான சுத்தியல். இந்த வகையில் இருக்கும் ஒரு கடவுளின் செயல்கள், எப்படி இருக்கும்? அதுதான் ‘தோர்’. தோர் திரைப்படத்தைப் பார்க்குமுன், தோரைப்...

Eat Pray Love (2010) – English

April 15, 2011
/   English films

நாம் வாழும் வாழ்க்கை அலுத்துப்போனால், என்ன செய்யலாம்? வேலையை மாற்றிப் பார்க்கலாம்; வீட்டை மாற்றிப் பார்க்கலாம்; கொஞ்ச நாள் சும்மா இருந்து பார்க்கலாம். ஆனால், வாழ்வில் அர்த்தம் வடிந்து போனதால், உலகையே சுற்றிய ஒரு பெண்மணியின் கதை, சற்றே புதிதாக இருக்கிறதல்லவா? அதுதான் ‘Eat Pray Love...

Black Swan (2010) – English

March 11, 2011
/   English films

மசாலாப் படங்களாகவே தொடர்ந்து உற்பத்தி செய்துகொண்டிருக்கும் ஹாலிவுட்டிலும், உலக சினிமாக்களின் தரத்துக்கு இணையாகப் படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்கள் உள்ளனர். பெர்னார்டோ பெர்ட்டலூச்சி, டிம் பர்ட்டன், ஸ்பீல்பெர்க், கேமரூன், கோயன் சகோதரர்கள், ஃப்ரான்ஸிஸ் ஃபோர்ட் கேப்பலா, ஜொனாதன் டெம், ப்ரயன் டி பா(ல்)மா, ரோமன் பொலான்ஸ்கி, ஃப்ராங்க்...

Drive Angry 3D (2011) – English

March 4, 2011
/   English films

நரகத்தில் இருந்து தப்பிக்கும் கதாநாயகன் – ஒரு படு விறுவிறுப்பான காமிக்ஸ் கதைக்கு சரியான கதைக்களனாக அமைந்துவிடுகிறது. எனக்குத் தெரிந்து, இதுபோன்ற ஒரு காமிக்ஸ் கதைக்குப் பொருத்தமான ஹீரோ, இரும்புக்கை நார்மன். அவரை வைத்து இப்படி ஒரு கதையை எழுதினால், பின்னியெடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்படிப்பட்ட...

The Mist (2007) – English

February 14, 2011
/   English films

ஒரு சிச்சுவேஷன். ஏதோ ஒரு படத்துக்கு, ஒருநாள் செல்கிறோம். திரையரங்கின் உள்ளே, படம் படு சுவாரஸ்யமாகச் செல்கிறது. நேரம் போவதே தெரியவில்லை. மூன்று மணி நேரம் கழித்து, வெளியே வருகிறோம். ஒரு பேரதிர்ச்சி நமக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறது. வெளியே, ஒரு ஈ கூட நமது கண்ணுக்குத் தெரியவில்லை....

All the President’s Men (1976) – English

January 2, 2011
/   English films

அரசியலில் நிகழும் ஊழல்களைப் பற்றிய உண்மைக் கதைகள், என்றுமே நம்மைக் கவர்ந்தவண்ணமே இருக்கின்றன. மக்கள், நம்பிக்கையுடன் வோட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தும் மக்கள் பிரதிநிதிகள், பதவி கிடைத்தவுடன், இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அடிக்கும் கொள்ளைகளைப் பற்றி நாம் தொடர்ந்து படித்து வந்திருக்கிறோம். அதுவும் இந்தியாவில் ,...

Stephen King and the Darabont Redemption – கட்டுரை

December 18, 2010
/   English films

திரைப்பட ரசிகர்களால் என்றுமே மறக்கவியலாத ஒரு திரைப்படம் – The Shawshank Redemption. நான் உலக சினிமா பார்க்க ஆரம்பித்ததற்கு முதல் காரணி, இந்தப் படம்தான். 2000த்தில், HBO வந்த புதிதில், ஒரு நாள் நள்ளிரவில் இத்திரைப்படத்தை எதேச்சையாகப் பார்க்க ஆரம்பித்து, ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்றேன். அன்றிலிருந்து...

Rumor has it (2005) – English

October 21, 2010
/   English films

வாழ்க்கையில் அதிருஷ்டம் என்பது மட்டுமே வாய்க்கும் மனிதர்கள் இந்தப் பூவுலகில் வெகு சில பேர்கள் உண்டு. அவர்களைப் பார்த்துப் பொறமைப்பட்டுக்கொண்டே இருப்பதைத் தவிர நம்மால் ஏதுமே செய்ய இயலாது. சமயத்தில், இவர்கள் உடம்பு முழுவதுமே ஒரு கிங் சைஸ் மச்சமாகவே மாறிவிடுகிறதோ என்று எண்ணத்தோன்றும் அப்படிப்பட்ட பலே...

Thank you for Smoking (2005) – English

October 9, 2010
/   English films

ஒரு ஜனரஞ்சகமான படம் எப்படி இருக்க வேண்டும்? பார்ப்பவர்களுக்கு அலுக்கக்கூடாது. கதையே இல்லாவிட்டாலும், சுவாரஸ்யமான திரைக்கதை இருக்க வேண்டும். பார்ப்பவர்களைப் படத்துக்குள் இழுக்க வேண்டும். அநாவசிய பில்ட் அப் காமெடிகள் கூடாது. மொத்தத்தில், படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, படத்தைப் பற்றிய சந்தோஷமான எண்ணங்கள் நமது உள்ளத்தில்...

Hitch (2005) – English

August 13, 2010
/   English films

படு சீரியஸான படங்களை இதுவரை பார்த்து வந்தோம். There is something about Mary படத்தைப் பற்றி எழுதியபோதே, இனி அவ்வப்போது ஜாலியான படங்களைப் பற்றி எழுதலாம் என்று முடிவு செய்தேன். அதன்படி, இதோ ஒரு பட்டையைக் கிளப்பும் படுஜாலியான படம். சற்றே யோசித்துப் பார்த்தால், நம்மில்...

Shutter Island (2010) – English

July 26, 2010
/   English films

டிஸ்கி 1 – இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன்னர், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சில டயலாக்குகளை வாய்விட்டு உரக்கச் சொல்லிப் பார்க்குமாறு நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். என்னாது காந்தித்தாத்தா செத்துப்போயிட்டாரா? என்னாது இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சிருச்சா? என்னாது பிரபுவுக்கும் குஷ்புவுக்கும் லவ்வா? ரைட். சொல்லியாயிற்றா? டிஸ்கி 2 – இந்தக்...

Inception (2010) – விமர்சனம்

July 17, 2010
/   English films

வெல்.. க்ரிஸ்டோஃபர் நோலன் பற்றிப் புதிதாகச் சொல்ல எதுவுமில்லை. அவரைப் பற்றி, ஒரு தலையணை சைஸ் புத்தகம் போடும் அளவுக்கு இண்டெர்நெட்டில் செய்திகள் கிடைக்கின்றன. சமகாலத் திரைப்பட இயக்குநர்களில், மிக முக்கியமானவராகத் தற்போது அறியப்படும் நோலன் எடுக்கும் படங்கள் அனைத்துமே, மனித மனதின் முரண்பாடுகளை முக்கிய அம்சமாகக்...

The last King of Scotland (2006) – English

July 10, 2010
/   English films

மனித வரலாற்றின் பக்கங்களில், ரத்தக்கறை படிந்த பல அத்தியாயங்கள் உண்டு. அவை, சக மனிதனை, அதிகாரம் என்ற பெயரில் கொன்று குவித்த கொடுங்கோலர்களைப் பற்றிப் பல கதைகள் சொல்லும். இவர்களது வாழ்வைப் படித்தால், மிகச்சாதாரண நிலையில் இருந்து, மக்களின் பேராதரவைப் பெறும் வரை ராணுவ ஒழுங்குடன் வாழ்ந்துவிட்டு,...

Kundun (1997) – English

July 8, 2010
/   English films

தனது நாட்டைச் சேர்ந்த அத்தனை மக்களாலும் கடவுள் என்று கருதப்படும் ஒரு நபர். அந்த மக்களின் தலைவரும் அவரே தான். அவரது நாடோ, மற்றொரு வலிய நாட்டின் கீழ் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. இந்தச் சூழ்நிலையில், அவரது குறிக்கோள் என்ன? தலாய் லாமா. திபெத்தின் அத்தனை மக்களாலும் கடவுளாகவே...

Shrek – Forever After (2010)

May 22, 2010
/   English films

உலகெங்கிலும் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கும் ஒரு திரைப்பட வரிசையின் இறுதிப்படம் – நேற்று வெளியாகியுள்ளது. இவ்வளவு வருடங்களில், ஷ்ரெக்க்கின் முதல் மூன்று படங்களை அதிவிரைவில் பார்ப்பதைத் தவறவே விட்டதில்லை என்பதால், இந்தப் படத்தையும் இன்று மாலை சென்று பார்த்துவிட்டு, இதோ இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். முதல் பாகத்தில், ஃபியோமா ட்ராகனிடம்...

Fiddler on the Roof (1971) – ஒரு தந்தையின் கதை

May 19, 2010
/   English films

மிகச்சில சமயங்களில், ஹாலிவுட், உலக சினிமாக்களின் தரத்தை எட்டுவதுண்டு. அத்தகைய ஒரு படமே இந்த ‘ஃபிட்லர் ஆன் த ரூஃப்’. இது, ம்யூஸிகல் என்ற வகையைச் சேர்ந்தது. அஃதாவது, நம்ம ஊரில் வருகிறதே – படத்தின் இடையே பாடல்கள் – அந்த வகையில், ஹாலிவுட்டில் எடுக்கப்படும் படங்களே...

How to train your Dragon (2010) – 3D – English

April 24, 2010
/   English films

வைக்கிங்குகளைப் பற்றி நமது அபிப்பிராயம் என்ன? அவர்கள் காட்டுமிராண்டிகள்; மலையையொத்த உருவம் படைத்தவர்கள்; மூளையில்லாதவர்கள் இத்யாதி இத்யாதி. தமிழில் வைக்கிங்குகளைப் பற்றி பெரும்பாலும் இதுவரை எந்த இலக்கியமும் வரவில்லை. எனக்குத் தெரிந்து, லயன் காமிக்ஸில் வெளிவந்த ‘வைக்கிங் தீவு மர்மம்’ ஒன்றுதான் நான் இதுவரை படித்தது. அது...

Collateral (2004) – English

February 24, 2010
/   English films

இந்தப் படத்தைப் பற்றி, நம்மில் பல பேருக்குத் தெரிந்திருக்கும். இருந்தாலும், இங்கு எழுதப்படுவது, நம் வலைத்தளத்தில் தரமான action படம் ஒன்று இடம்பெற்றுப் பல நாட்கள் ஆகிவிட்டன. மட்டுமல்லாமல், திரைக்கதை அமைப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக இப்படத்தின் பல காட்சிகள் விளங்குகின்றன. எனவே, இன்று இப்படத்தைப் பற்றிப் பார்ப்போம்....